சனி, 29 ஆகஸ்ட், 2020

தேவையுள்ள அரசனும் ஒரு முனிவரும்


முன்னொரு காலத்தில் மிகவும் புகழ்பெற்ற  மன்னர் ஒருவர் அரசாளும் நாட்டினுடைய நகரத்தில் ஒரு முனிவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவ்வாறு  அம்முனிவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, தரையில் ஒரு நாணயத்தை கண்டு அதை எடுத்தார்.  தற்போதைய தனது எளிய வாழ்க்கையில் மிகவும் திருப்தியாக வாழ்வதால் அம்முனிவருக்கு அந்த நாணயத்தைப் பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்படவில்லை. எனவே, அதை தேவைப்படும் வேறுயாருக்காவது நன்கொடையாக வழங்க அவர் திட்டமிட்டார். அதனால் அந்த நாணயம்தேவைப்படுவர் யாராவது இருக்கின்றார்களா என அவர் நாள் முழுவதும் அந்த நகரத்தின் தெருக்களில் தேடி கொண்டிருந்தார், ஆனால் அப்படி யாரையும் அவர் காணவில்லை. இறுதியாக, அவர் பயனிகள் தங்குவதற்கான சத்திரத்தை அடைந்து அன்றிரவு அங்கேயே கழித்தார்.
அடுத்த நாள் காலையில், அவர் தனது அன்றாட நடவடிக்கைகளுக்காக காலையில் எழுந்து வெளியில் செல்லும்போது, அந்த நகரத்தின் அரசன் அடுத்தநாட்டுடன்போரிடுவதற்காக தயாராகி தன்னுடைய படையுடன் போருக்கு செல்வதை கண்டு சாலை ஓரமாக படைகள் செல்வதற்காக வழிவிட்டு ஒதுங்கி நின்று பார்த்து கொண்டிருந்தார். சாலையோரம் முனிவர் நிற்பதைக் கண்ட மன்னன், தன் படையை சிறிதுநேரம் நிறுத்தும்படி கட்டளையிட்டான். பின்னர் மன்னன் முனிவரிடம் வந்து, “வணக்கம் ஐயா!, பக்கத்து நாட்டுடன் போரிட்டு  வென்று என்னுடைய நாட்டினை விரிவுபடுத்துவதற்காக படையுடன் செல்கிறேன். எனவே போரில் வெற்றிபெற  ஆசீர்வதியுங்கள் ”. என வணங்கியவாறு கூறினான்
 முனிவர்சிறிது நேரம்  யோசித்த பிறகு, அரசனிடம் நேற்று அந்நகரில் தான் கண்டெடுத்த   நாணயத்தை கொடுத்தார்!  நான் இந்த நாட்டிற்கே அரசன் என்னிடம் கேவலம் ஒரேயொரு நாணயத்தை கொடுப்பதா என அந்த அரசன் மிகவும்  கோபமடைந்தார்,  இருந்தாலும் கோபத்தை அடக்கிகொண்டு ! அந்த நாட்டு அரசன் மிக  ஆர்வத்துடன் அந்த  முனிவரிடம், “நீங்கள்  எனக்கு இந்த ஒரு நாணயத்தை வழங்குவதன் பொருள் என்னஐயா?” என்று கேட்டார்.
அரசன் கேட்ட சந்தேகத்திற்கு  முனிவர் , “அரசனே! நேற்று உன்னுடைய நாட்டின்  தெருக்களில் உலாவும்போது இந்த நாணயத்தை  கண்டேன். எனக்கு அந்த நாணயம் தேவையில்லை. எனவே, நான் அதை ஏதாவதொரு ஏழைக்கு நன்கொடையாக அளிக்கலாம்  என்று முடிவு செய்தேன். அதனால் நேற்று காலைமுதல் மாலை வரை அவ்வாறான ஏழை யாராவது இருக்கின்றார்களா அவர்களுக்கு இந்த நாணயத்தை வழங்கலாம் என தேடினேன், ஆனால் அப்படி யாரும் இல்லை. உன்னுடைய நாட்டில் வாழும் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.  மேலும் மக்கள் அனைவரும் தங்களிடம் இருப்பதில் மிகவும் திருப்தியுடன் வாழ்வதாக தோன்றியது. எனவே இந்த நாணயத்தின் தேவையுள்ளவர்கள் யாரையும் நான் காணவில்லை. ஆனால் இன்று, இந்த நாட்டின் அரசன்மட்டும், திருப்தியில்லாமல் இன்னும் அதிகமாகப் பெற விரும்புகிறார், அரசன்மட்டும் ஏற்கனவே தன்னிடம் உள்ளவற்றில் திருப்தி அடையவில்லை, அதனால் இந்த நாணயம் இந்த அரசனக்குமட்டும் கண்டிப்பாகத் தேவை என்று உணர்ந்தேன். அதனால் உங்களிடம் வழங்கினேன் ” என நீண்ட விளக்கமளித்தார்
மன்னர் தனது தவறை உணர்ந்து பக்கத்து நாட்டுடன் போரிட்டு தன்னுடைய நாட்டினை விரிவாக்கம் செய்திடவேண்டும் என திட்டமிட்ட போரை கைவிட்டார்.
நீதி: நம்மிடம் இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்க நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். , நாம் அனைவரும் ஏற்கனவே வைத்திருப்பதை விட அதிகமாகவோ அல்லது சிறப்பாகவோ வேண்டுமென விரும்புகிறோம், ஆனால் நம்மிடம் ஏற்கனவே இருப்பதை அனுபவிப்பதற்கான வாய்ப்பை வீணாக்கி கொண்டிருக்கின்றோம். நம்மிடம் இல்லாததை வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள், நம்மிடம் இருப்பதை விட அதிகமாக வைத்திருப்பவர்கள் ஒருசிலர் இருப்பார்கள். அதனால் நம்மை மற்றவர்களுடன் எப்போதும் ஒப்பிட வேண்டாம், இருப்பதை கொண்டு மகிழ்ச்சியாக இருந்திடுக,

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...