வியாழன், 6 ஆகஸ்ட், 2020

சிறு வணிகநிறுவனங்களுக்கானசிறிய நடுத்தர நிறுவனங்களின் துவக்கநிலை பொதுவெளியீடு(SME IPO)

 

கடந்த சில ஆண்டுகளாக, சிறு நடுத்தர நிறுவனங்கள் (Small and Medium Enterprises (SMEs) ) இந்திய பொருளாதாரத்தின் மிகவும் பிரமிப்பூட்டும் அளவில் வளர்ந்து வருகின்றன.பெரிய அளவிலான தனியார் பொது த்துறை நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், இ்ந்த SME க்கள் மிகக் குறைந்த முதலீட்டைக் கொண்டுள்ளன, ஆனால் அவை இந்திய நாட்டுமக்களுக்கு வழங்குகின்ற வேலை வாய்ப்புகளானவை பெரிய நிறுவனங்களை விட நான்கு மடங்கு அதிகமாகும் , இதனால், SME க்கள் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகமுக்கிய பங்களிப்பாளராக விளங்குகின்றன. இவை வட்டார அளவிலான வளர்ச்சியை சமநிலைப்படுத்துவதற்கும், சமமான பொருளாதார வளர்ச்சியுடன் வருமான சமத்துவமின்மையைக் சரிசெய்து கொண்டுவருவதற்கும் பேருதவியாக அமைந்துள்ளன.அதாவது SME க்கள், நம்முடைய நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கின்றன, ஏனெனில் அவை பொதுமக்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான முக்கியஆதாரமாகவிளங்குகின்றன. வேலைவாய்ப்புகளை வழங்குவதைத் தவிர, SME க்கள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக கிராமப்பகுதியில் இவை செழித்து வளரும்போது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்கின்றன, அதனால் இவை கிராமப்புற பொருளாதார மேம்பாட்டிற்கும் நாட்டின் பின்தங்கிய பகுதிகளின் பொருளாதார மேம்பாட்டிற்கும் பேருதவியாய் திகழ்கின்றன. இந்த SME களானவை பெரிய தொழில்நிறுவனங்களுக்கு , துணை அலகுகளாக, தோள்கொடுத்து அவைகளின் தடையறா இயக்கத்திற்கும் வளர்ச்சிக்கும்பேராதரவை வழங்குவதன் வாயிலாக நமது நாட்டின் பொருளாதாரா வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கினறன. வெற்றிகரமான SME களின் சிறந்த சமநிலை என்னவென்றால், அவை புதிய முயற்சிகளைத் தொடங்க மக்களை ஊக்குவிக்கின்றன, மேலும் புதுமையான ஆலோசனைகளைப் பற்றி சிந்திக்க, போட்டித் தன்மையை மேம்படுத்துகின்றன எல்லாவற்றிற்குமேலாக இவை பொருளாதாரத்தை மிகச்சிறப்பாக வழிநடத்தி செல்லுகின்றன. SME களின் வளர்ச்சிகளுக்கான தடைகள் சிறு வணிகநிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளரச்சிக்கு பேரார்வங்களைக் கொண்டிருக்கின்றன, ஆனால் அவற்றின் செயல்முறையில் பல்வேறுவகையிலான இடையூறுகளையும் சிக்கல்களையும் எதிர்கொள்கின்றன, எல்லாவற்றிற்கும் மேலாக முதன்மையாக மிகப்பெரியஇடையூறாக இருப்பது அவைகளின் தடையற்றஇயக்கத்திற்கு போதுமான அளவிற்கு நிதி உதவியைப் பெறுவதாகும். எந்தவொரு முதலீட்டாளரையும் சமாதானப்படுத்துவதும், அவர்களின் கனவை யதார்த்தமாக மாற்றுவதும் கிட்டத்தட்ட சாத்தியமற்ற செயலாகும், எனவே, முதலீட்டிற்கான கணிசமான தொகையினை மூலதனக் கடன்களாகப் பெறுவது சாத்தியமற்றதாக அமைகின்றது. இவ்வாறான சூழலில் நிதி நிறுவனங்கள் துவக்கநிலைநிறுவனங்கள் , தனிநபர் நிறுவனங்கள் ஆகிய SMEகள் தங்களுக்குத்தேவையான மூலதன நிதியை அணுகுவது சந்தேகத்திற்கு இடமின்றி அவைகளின் விரும்பிய வளர்ச்சியில் மிகப்பெரிய தடையாக இருந்துவருகின்றன. எந்தவொரு வணிகநிறுவனத்திற்கும் ‘அவ்வணிகத்தின் உயிர்நாடி’ என்பது அவைநன்றாக செயல்படுவதற்கு தேவையான நிதிவசதிபெறுவதாகும் மிகச்சரியாகக் கூறவேண்டுமெனில் இந்நிதிவசதியானது எப்போதுமே SME க்களுக்கு குறுகிய காலவிநியோகத்தில் மட்டுமேஉ ள்ளது, அதனால் அவைகளின் விரிவாக்கத்தையும் வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்துவதற்கு தேவையான நிதிவசதியைஉடனுக்குடன் பெறமுடியாத நிலையானது SME களை மேலும் வளர்ச்சிபெறமுடியாமல்தேக்கநிலையை அடையச்செய்கின்றன. தற்போது நமது நாட்டில் கிட்டத்தட்ட 55 மில்லியன் SME க்கள் செயல்பட்டு வருகின்றன, மேலும் இவை 60 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக அமைந்திருப்பதால், இவை மிகப்பெரிய வேலைவாய்ப்பு வழங்குநராக இருப்பதில் ஆச்சரியமில்லை. SME களின் பங்களிப்பை அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நன்கு அறிந்திருக்கிறது. , அவைகளுக்கு இணக்கமான செயல்களையும் நிதி உதவிகளையும் பெறுகின்ற நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கு ஏதுவாகவும் அரசானது செயல்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக SME IPO எனும் திட்டத்தின் வாயிலாக தங்களுக்கு தேவையான நிதியை பொதுமக்களிடமிருந்து திரட்டிகொள்வதற்கான வசதியை துவக்கியுள்ளது இந்தியாவில் SME களின் மகத்தான பங்கு உணரப்பட்டு அவற்றின் பரந்த அளவிலானவளர்ச்சியினை புரிந்துகொண்டு, அர்ப்பணிப்பு உணர்வுடன் SME IPO எனும் திட்டத்தினை நடைமுறைபடுத்திடுவதற்காக இந்திய அரசால்NSE , BSE ஆகிய தளங்கள் நிறுவப்பட்டுள்ளன. குறிப்பு SME IPO என்பது சிறுநடுத்தர நிறுவனங்களில் (Small and Medium Enterprises (SMEs) ) பொது மக்களின் துவக்கநிலை முதலீட்டிற்கான வாய்ப்பு (Initial Public Offer) எனும் திட்டத்தின் படி பரவலாக பொதுமக்களும் இந்த SMEகளில் தங்களுடைய முதலீட்டினை இடுவதற்கான வாய்ப்பினை வழங்குவதாகும் இந்த பங்குபரிமாற்றதளங்கள் SMEகளுக்கு SME IPO புதிய பட்டியல் வெளியிடும் வாய்ப்பை வழங்குகின்றன, இதனால் SMEகளும் பொதுமக்களிடமிருந்து ஏராளமான அளவில் நிதிதிரட்டுவதற்கான வாய்ப்புகளை பெறுகின்றன.SMEகளின் ஒட்டுமொத்த முயற்சிகளுக்கு தேவையான மூலதனத்தை எளிதில் அணுகுவதற்கான சிறந்த வழியாக இருப்பது SME IPO பட்டியலிடும் வழிமுறைக்கு செல்வதாகும். அவ்வாறான SME IPOவை வெளியிடுவதற்கான தகுதிகள் பின்வருமாறு 

 

SME IPO இல் புதியதாக பட்டியலிடுவதற்காக விண்ணப்பிப்பதற்கு முன் வேறு சில முக்கியமான காரணிகளை கருத்தில் கொள்ளப்பட வேண்டும். 1. தொழில்துறை நிதி புனரமைப்பு வாரியத்தின் ((BIFR)) அல்லது தற்போதைய IBCஎனும் நிறுவன நொடிப்புதீர்வு வாரியத்தின் நடவடிக்கையி ன் கீழ் நிறுவனம் இருக்கக்கூடாது. 2. நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக எந்தவொரு மனுவும் இருக்கக்கூடாது. 3. SME IPO பட்டியலிடுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்த நாளிலிருந்து முந்தைய ஒரு வருடத்தில் நிறுவனத்தினை உருவாக்கியவர்களில்(Promoters) எந்த மாற்றமும் இருக்கக்கூடாது. SME IPO பட்டியலிடுவதற்கான நடைமுறை SME க்களுக்கான IPO செயல்முறையை முதன்மைப்படுத்துவதுஎன்பது ஒப்பீட்டளவில் எளிதானது நிறுவனம் இவ்வெளியீட்டிற்காக ஒரு முன்னணி மேலாளரை நியமிக்கும் நாளிலிருந்து கிட்டத்தட்ட 5-6 மாதங்கள் ஆகும். வணிக வங்கியாளரை நியமித்தல், மூலதன கட்டமைப்பு, அதற்குரிய விடாமுயற்சி , IPO-க்கு முந்தையசெயல்முறை, வங்கியாளர்கள், பதிவாளர், சந்தை தயாரிப்பாளர்கள், RTA போன்றவர்களை நியமித்தல், வெளியீட்டு ஆவணம் தயாரித்தல் (DRHP), பங்குசந்தையில் DRHP ஆவணத்தை சமர்ப்பி்த்தல் , பங்கு பரிமாற்ற சந்தையிலிருந்தும் நிறுவனங்களின் பதிவாளரிடமிருந்தும்(RoC) ஒப்புதல்பெறுதல், வெளியிடும் பங்குகளுக்கான விலை நிர்ணயம் செய்தல், பொது வெளியீட்டைத் திறத்தல், வெளியீடுசெய்தல் பங்குகளை ஒதுக்கீடுசெய்தல், பட்டியலிடுதல் , வர்த்தகம் செய்தல் ஆகியவை SME IPO பட்டியலிடுவதற்கான பொதுவான நடைமுறைகளாகும் SME IPO வெளியிடுவதால் கிடைக்கும் நன்மைகள் 1. சமபங்குவெளியீட்டின் வாயிலாக முதலீட்டு தொகையை SMEகளில் உள்ளீடு செய்வதன் மூலம் அவைகளின் மூலதனத்தை பொதுமக்கள் அணுகுவதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. 2. இவ்வாறான வெளியீடானது பொதுமக்களிடம் SME களின் கவுரவத்தையும் நம்பகத்தன்மையையும் வளர்ப்பதோடுமட்டுமல்லாமல், நிறுவனத்தின் நிகர மதிப்பையும் மேம்படுத்துகிறது. 3. நிறுவனத்தின் நிகர மதிப்பு உயர்வுஅடைவதால் அந்நிறுவனத்தை விரிவுபடுத்தவும், மேம்படுத்தி பன்முகப்படுத்தவும், முடிகின்றது. 4. முன்னுரிமை பங்குகள் வெளியீடு, உரிமைபங்குகள் வெளியீடுகள், தகுதிவாய்ந்த நிறுவன முதலீடு (QIP) பிற சர்வதேச நிதி திரட்டும் கருவிகள் என்பன போன்ற பல்வேறு மூலங்களிலிருந்து SME க்கள் போதுமான மூலதனத்தை திரட்ட முடியும். 5. இவ்வெளியீடானது பொதுமக்களின் கைகளுக்கு செல்வதன் மூலம், நிறுவனம் பங்குதாரர்களுக்கு தேவையான பணப்புழக்கத்தை வழங்குகின்றது. இவ்வெளியீடானது பொதுமக்களின் கைகளுக்கு சென்றபின் SME களின் வளர்ச்சி விகிதமானது மிகவும் ஊக்கமளிக்கின்றது, எனவே, இதனை தொடர்ந்து மேலும் தொடக்கநிலை(STRATUP) நிறுவனங்களும் சிறு வணிகநிறுவனங்களும் இதேபோன்று பொதுமக்களுக்காக பட்டியலிடுவதற்காக தயாராகி வருகின்றன. SME IPO பட்டியல் வளர்ந்து வரும் நிறுவனங்கள் சமபங்குகளின் மூலம் மூலதனத்தை திரட்டக்கூடிய ஒரு வழியைத் உருவாக்குகின்றதுது, இதனால் சேகரிக்கப்பட்ட நிதியும் நிறுவனத்தின் தேவையைப் போலவே முழு சுதந்திரத்துடன் அதைப் பயன்படுத்துவதற்கான வசதியையும் அளிக்கின்றது. வெற்றிகரமான IPO பட்டியலிடும் செயலானது முதலீட்டாளர்கள், முதலாளிகள் பணியாளர்கள் ஆகிய அனைத்து தரப்பினர்களுக்கும் பேரளவு நன்மைகளைத் வழங்குகின்றது

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...