சனி, 22 ஆகஸ்ட், 2020

வேர்களை வலுவாக வைத்திடுக

 

முன்னொரு காலத்தில், இரண்டுநபர்கள் அருகருகே இருவீடுகளில் வசித்து வந்தனர். அவர்களில் ஒருவர் ஓய்வுபெற்ற ஆசிரியராவார், இன்னொருவர் தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் கொண்ட காப்பீட்டு முகவராவார். அவர்கள் இருவரும் தங்களுடைய வீட்டு தோட்டத்தில் பல்வேறு வகையான காய்கறிகள் பழங்களை தருகின்ற செடிகளையும் மரங்களையும் நட்டு வளர்த்துவந்ந்தனர். ஓய்வுபெற்ற ஆசிரியர் தனது வீட்டு தோட்டத்தி லிருந்த தாவரங்களுக்கு சிறிய அளவு தண்ணீரைமட்டுமே ஊற்றி தோட்டத்தை பராமரித்து வந்தார், எப்போதும் அவைகளின்மீது முழு கவனம் செலுத்தவில்லை, அதே நேரத்தில் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள மற்ற அயலவரான காப்பீட்டு முகவர் தனது வீட்டுத் தோட்டத்திலிருந்த தாவரங்களுக்கு ஏராளமான அளவில் தண்ணீரைஊற்றி அவற்றை நன்றாக கவனித்து வந்தார்.
ஓய்வு பெற்ற ஆசிரியரின் வீட்டுத்தோட்டத்திலிருந்த தாவரங்கள் எளிமையாக இருந்தன, ஆனால் மிகவலுவாகவும் அழகாகவும் இருந்தன. காப்பீட்டு முகவரின் வீட்டுத் தோட்டத்திலிருந்த தாவரங்கள் மிகவும் உயரமாகவும் பசுமையாகவும் ஆனால் வலுவற்றதாக இருந்தன. ஒரு நாள், இரவு அதிக காற்றுடன் கூடிய புயல் வீசியது மேலும்அதன் காரணமாக பலத்த மழையும் பெய்தது. அதற்கு அடுத்த நாள் காலை, அவ்விருவரும் வீட்டைவிட்டு வெளியே வந்து புயல்காற்றுடன் கூடிய மழையால் தங்களுடைய வீட்டுதோட்டத்திற்கு ஏற்பட்ட சேதத்தை ஆய்வு செய்தனர். காப்பீட்டு முகவராக இருந்த பக்கத்து வீட்டுக்காரருடைய தோட்டத்தில் மரம் செடி கொடி ஆகிய அனைத்தும் முந்தையநாளின் புயல்காற்றினாலும் அதிக மழையினாலும் வேரோடு, சாய்ந்து முற்றிலும் அழிக்கப்பட்டதைக் கண்டார். ஆனால், ஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டுத்தோட்டத்தின் தாவரங்கள் எதுவும் சேதமடையவில்லை, உறுதியாக அழகாக நின்று கொண்டிருந்தன.
சேதமடையாத ஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டுத்தோட்டத்தின் தாவரங்களை கண்டு காப்பீட்டு முகவர் மிகவும் ஆச்சரியப்பட்டார், அவர் ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் சென்று , “நாமிருவரும் ஒரே மாதிரியாக வீட்டுத்தோட்டத்தில் மரம் செடி கொடிகளை நட்டுவைத்து ஒன்றாக வளர்த்துவந்தோம், ஆனால் உங்களைவிட நான் அதிகமாக தண்ணீர் விட்டு தாவரங்களை நன்றாக பராமரிப்பு செய்து கவனித்துவந்தேன், . ஆயினும், என் னுடைய வீட்டுத்தோட்டத்து தாவரங்கள் அனைத்தும் நேற்று வீசிய புயல் காற்றிலும் பொழிந்த மழையிலும் வேரோடு தரையில் வீழ்ந்து அழிந்து விட்டன, அதே நேரத்தில் உங்களுடை தோட்டத்தில் அவ்வாறாகாமல் அனைத்தும் நன்றாக அப்படியே இருக்கின்றன. அது எப்படி சாத்தியம்?" என சந்தேகம் கேட்டார்.
ஓய்வுபெற்ற ஆசிரியர் புன்னகைத்து, “நீங்கள் உங்களுடையவீட்டு தோட்டத்து தாவரங்களுக்கு அதிக கவனத்தை செலுத்தி தண்ணீரை அதிகமாக வழங்கி தங்களுக்கு தேவையான தண்ணீரை எளிதாக தாங்களே உழைத்து பெறவேண்டிய தேவை யில்லாதவாறு சோம்பேறியாக்கிவிட்டீர்கள் தங்களுக்கு தேவையான நீரைவிட அதிகமாக கிடைத்ததால் அவை தங்களுடைய வேர்கள் தரையில் அதிக ஆழமாக செல்லாமல் .வைத்து கொண்டு தளதளவென மிகவும் பசுமையாக உயரமாக வளருவதில் மட்டும் கவணம் செலுத்தின அதனால் அவை நேற்று அடித்த புயல்காற்றில் வேரோடு சாய்ந்து விட்டன ஆனால் நான் என்னுடைய தோட்டத்திலிருந்து தாவரங்களுக்கு போதுமானஅளவைவிட சிறிது குறைத்து தண்ணீரை பாய்ச்சினேன் அதனால் அவை தங்களுக்கு தேவையான மிகுதி நீரை வேறு எங்காவது கிடைக்குமா என தங்களுடைய வேரை தரையில் மிக ஆழமாக செலுத்தி அவற்றின் நிலையை வலிமையாக்கி கடுமையாக முயற்சி செய்து போதுமான நீரை பெற்று திறனுடன்வளர்ந்து வந்தன அதனால்தான் என்னுடைய வீட்டு தோட்டத்திலிருந்த தாவரங்கள் பிழைத்தன ”.என பதில் கூறினார்
நீதி: நம்முடைய குழந்தைகள் இந்த கதைையில் கூறியவாறான வீட்டுதோட்டத்து தாவரங்களைப் போன்றவர்கள் பெற்றோரை சார்ந்துஇருப்பார்கள் . அவர்களுக்கு தேவையான எல்லாமே வழங்கப்பட்டால்,தங்களுக்கு தேவையான பொருட்களை சம்பாதிப்பதற்கான கடின உழைப்பை அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் தங்களுக்குத்தேவையான பொருட்களை தாங்களே கடுமையாக உழைத்து பெறுவதற்கு முயற்சிக்க மாட்டார்கள். ஒருசில நேரங்களில் அவற்றைக் கொடுப்பதற்குப் பதிலாக அவைகளை பெறுவதற்காக கற்றுக்கொள்ளுமாறு அவர்களுக்கு வழிகாட்டுவது நல்லது. எப்படி முயற்சி செய்து பெறுவது என்று அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திடுக,

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...