ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

எதையும் வாக்குறுதி அளிப்பதற்கு முன்பு நன்கு சிந்தித்து வாக்குறுதி அளித்திடுக

முற்காலத்தில் கவிஞர் ஒருவர் ஒரு நாள் தங்களுடைய நாட்டு அரசனிடம் தனது கவிதைகளை பாடி ஏதாவது பரிசுபொருட்கள் பெற்று தன்னுடைய வறுமையை போக்கலாம் என அந்நாட்டு அரசஅவைக்கு சென்றார். அரசஅவையில் மன்னனைபற்றி இந்தகவிஞர் பாடிய கவிதைகளால் மன்னர் மிகவும் மகிழ்ச்சியுற்றார். அரசன்: கவிஞரே நான் உங்களுடைய கவிதைகளால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதனால் பரிசுபொருட்களாக நீங்கள் எதை வேண்டுமானாலும் கேளுங்கள் நான் வழங்க தயாராக இருக்கின்றேன் . கவிஞர்: என்னுடைய வறுமையை போக்கவந்த அரசே, எனக்கு அதிகமாக வேறுஒன்றும் தேவையில்லை அடுத்த 64 நாட்களுக்கு மட்டும் நான் கோருகின்றவாறுஅரிசிகளை வழங்கினால் போதும் அரசே. அரசன்: (மிகவும் குழப்பத்துடன்) கவிஞரே நீங்கள் விரும்பிய அளவிற்கு தங்கத்தையும் நிலத்தையும் உங்களுக்கு நான் கொடுக்கத் தயாராக இருக்கிறேன், ஆனால் நீங்கள் விலை மலிவான வெறும் அரிசிகள் மட்டும் போதும் என்று கேட்கிறீர்ளே? கவிஞர்: ஆம் அரசே. இன்று எனக்கு ஒரு அரிசி கொடுங்கள். நாளை எனக்கு 2 அரிசிகளை கொடுங்கள் . நாளை மறுநாள் எனக்கு 4 அரிசிகளை கொடுங்கள். இவ்வாறு தினமும் முந்தைய நாள் கொடுத்ததை போன்று இரண்டு மடங்கு அரிசிகளின் எண்ணிக்கையை கூட்டி கொடுத்தால் போதும்அரசே. இது போன்று அடுத்த 64 நாட்களுக்கு நான் தொடர்ந்து வருவேன் 64 நாட்களுக்கும் எனக்கு முந்தைய நாள் கொடுத்ததை போன்று இரண்டு மடங்கு அரிசிகளை தாங்கள் வழங்கினால் போதும் அரசே . அரசன்: (சத்தமாக சிரிக்கிறார்) நீங்கள் மிகவும் வேடிக்கையானவர். உங்களுக்கு அரிசிகளை 64 நாட்களுக்கு கொடுக்குமாறு கோருகிறீர்கள், அதுவும் இன்று ஒரு அரிசி மட்டுமே. அதனால் உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாக நான் உறுதியளிக்கிறேன். அத்தகைய வேடிக்கையான விருப்பத்தை அரசஅவையின் முன்பு அரசன் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். அந்த அரசன் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் உறுதியான கொள்கைகளை உடையவர். அவர் எப்போதும் தனது வாக்குறுதிகளை கடந்த காலங்களில் தவறாது நிறைவேற்றியிருந்தார். எனவே ஏழை கவிஞர் அன்றைய தினம் ஒரு அரிசியுடன் துவங்கி தினமும் அந்த கவிஞர் கோரியாவாறு அரிசிகள் பின்வருமாறு வழங்கப்பட்டுவந்தன. நாள் 0: 1 அரிசி நாள் 1: 2 அரிசிகள் நாள் 2: 4 அரிசிகள் நாள் 3: 8 அரிசிகள் நாள் 4: 16 அரிசிகள் நாள் 5: 32 அரிசிகள் நாள் 6: 64 அரிசிகள் நாள் 7: 128 அரிசிகள் நாள் 8: 256 அரிசிகள் நாள் 9: 512 அரிசிகள் நாள் 10: 1024 அரிசிகள் .நாள் 32: 4,294,967,296 அரிசிகள் .நாள் 64: 18,446,744,073,709,551,616 அரிசிகள் சொற்களில் குறிப்பிடவேண்டுமெனில் 64ஆவது நாளில் கொடுக்கப்படவேண்டிய அரிசிகளின் மொத்த எண்ணிக்கை ◦ “பதினெட்டு குவிண்டிலியன், நானூற்று நாற்பத்தி ஆறு குவாட்ரில்லியன், எழு நூற்று நாற்பத்து நான்கு டிரில்லியன், எழுபத்து மூன்று பில்லியன், எழு நூற்று ஒன்பது மில்லியன், ஐநூற்று ஐம்பத்தொராயிரம், அறுநூற்று பதினாறு” [1] அரிசிகள். அதாவது 1 அரிசியின் எடை = 0.03 கிராம் என கணக்கில் கொண்டு 64ஆவது நாளில் கொடுக்கப்பட வேண்டிய அரிசிகளின் எடையை டன்களாக மாற்ற முயற்சித்தால் தோராயமாக 553 402 322 211 டன் கள் அளவிற்கு அரிசிகள் வழங்கப்படவேண்டும் என்று தெரியவருகிறது அதாவது அரிசிகளின் எடை சொற்களில் “ஐநூற்று ஐம்பத்து மூன்று பில்லியன் நானூற்று இரண்டு மில்லியன் முந்நூற்று இருபத்தி இரண்டாயிரத்து இருநூற்று பதினொரு” டன் கள் என தெரியவருகின்றது இந்த அரிசிகளின் எடை . கிலோ கூட இல்லை டன்களாகும் என்பதை கவணத்தில் கொள்க . தற்போதைய நிலையில் ஒப்பிடும்போது: ◦ “தற்போது உலகளாவிய ஆண்டு ஒன்றிற்கு அரிசி உற்பத்தியானது 700 மில்லியன் டன் கள் மட்டுமேயாகும்” மன்னர் தனது நாடு முழுவதையும் விற்றாலும் நாளுக்கு நாள் தான் வாக்குறுதி கொடுத்தவாறு 64 நாட்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை. அதனால் அரசர் கவிஞரிடம் உறுதியளித்தவாறு தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றமுடியவில்லை அதற்காக தன்னை மன்னித்துவிடுமாறு இறைஞினார் . கவிஞர் அரசரை மன்னித்து “நீங்கள் எதையும் வாக்குறுதி அளிப்பதற்கு முன்பு அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமா வென நன்கு சிந்தியுங்கள். ஒரு சில செயல்கள் முதலில் தவறானவையாகவும் மிகவும் வேடிக்கையானவையாகவும் தோன்றும், ஆனால் அவை உண்மையில் சரியானவை, நம்முடைய கற்பனைக்கு அப்பாற்பட்டவை ” என அறிவுறை கூறினார் . என்னவாசகரே நீங்களும் இதைபோன்ற கற்பணைக்கு அப்பாலான வாக்குறுதிகளை கொடுத்து அதனை நிறைவேற்றமுடியாமல் அல்லாடுமாறு சிக்கலில் மாட்டிகொள்ளாதீர்கள்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...