திங்கள், 3 ஆகஸ்ட், 2020

புதியவர்கள் ஒரு சட்டத்தைப் படித்தால் புரிந்துகொள்வதற்கான சட்டம் பற்றிய அடிப்படைகள்

சட்டம் பயிலும் விரும்பும் எவரும் எதிர்வருங்காலத்தில் வெற்றிகரமான தொழில்முறைசட்ட நிபுணராக பயனிக்க பல்வேறு வகையான சட்டங்கள் (வரிவிதிப்பு சட்டங்கள், வியாபார சட்டங்கள், வணிக சட்டங்கள், தொழிலாளர் சட்டங்கள், பாதுகாப்பு சட்டங்கள், பொருளாதார சட்டங்கள் என்பன போன்றவை) பற்றிய நல்ல அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இதற்காக தற்போது சந்தையில் ஏராளமான சட்ட குறிப்பு புத்தகங்கள் கிடைக்கன்றன, அவை சட்டத்தைஓரளவிற்கு புரிந்துகொள்ள உதவுகின்றன.
பொதுவாக பொதுமக்கள் செயல்படும் சூழல் ,சமுதாயத்தினுடைய தேவைகள்ஆகியவற்றின் அடிப்படையிலேயே சட்டங்கள் அனைத்தும் உருவாக்கப் படுகின்றன. நாம் வாழும் மனித சமுதாயம் ஒருபோதும் நிலையானதாக இல்லாததால், நமது சட்டங்களும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கின்றன . நம்முடைய வாடிக்கையாளர்களை நாம் கையாளும் போது பயன்படுத்தி கொள்கின்ற இன்று நாம் பயன்படுத்தி கொண்டுவரும் சட்டங்களும் விதிகளும் எப்போதும் நிலையாக அப்படியே இருக்கும் என்பது ஒருபோதும் உறுதியாகத் தெரியவில்லை. அதனால் தற்போது நாம் பயன்படுத்திகொள்வதற்காக கிடைக்கும் புத்தகங்கள் எதுவும் நமக்கு பிற்காலத்தில் உதவாது, அந்நிலையில் நாம் முதன்முதலில் நிறைவேற்றபட்ட உண்மையான சட்டங்களுக்கு திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும். இருப்பினும், ஒரு வெற்றுச் சட்டங்களின்(Bare Acts) சட்ட மொழியில் படிப்பது என்பது நம்முடைய அலமாரியில் உள்ள வேறு ஏதேனுமொரு புத்தகத்தைப் படிப்பதைப் போன்றதன்று. இதற்கு சட்டத்தின் மொழி பற்றிய சிறப்பான புரிதலும் சரியான விளக்கமும் நமக்கு தேவையாகும். அத்தகைய சூழ்நிலையில், வெற்றுச் சட்டங்களைக் குறிப்பிடாமல், அவற்றைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெற முயற்சிக்காமல், அந்த குறிப்பு புத்தகங்களின் உதவியுடன் தற்போதைய சட்டங்களைப் படித்து புரிந்துகொள்வதன் மூலம் இதற்காக நடத்தபெறும் தேர்வுகளில் மட்டும் வெற்றி பெறுவது சரியன்று
அதனால் சட்டத்தை படிக்கவிரும்பும் ஒவ்வொருவரும் எந்தவொரு சட்டத்தையும் படிக்கும்போது மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக இங்கு ஒரு சில விவரங்களைக் கண்டுபிடித்து தொகுத்து வழங்க முயற்சிக்கப்படுகின்றது. இருப்பினும்,இந்த பட்டியல் முழுமையானது அன்று என்ற செய்தியை மனதில் கொண்டு தொடர்ந்து செல்க.
1. பொதுவாக இந்தியாவில் நாம் பயன்படுத்தி கொண்டுவருகின்ற அனைத்து சட்டங்களும் இந்திய நாடாளுமன்றத்திலோ அல்லது மாநிலங்களின் எந்தவொரு மாநில சட்டமன்றத்திலோ நிறை வேற்றப் பட்டவைகளாகும். ஒரு நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் குறித்த பல்வேறு விதிகளும் ஒழுங்குமுறைகளும் உள்ளன. இருப்பினும், ஒவ்வொரு பிரச்சினையிலும் சட்டத்தை உருவாக்க வும் நிறைவேற்றிடவும் ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் (மத்திய அல்லது மாநில) அதிகாரம் இல்லை. அதாவது இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் சட்டமியற்றிடும் அதிகாரங்கள் (மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் நாட்டில் எழும் பிரச்சினைகள் குறித்து சட்டங்களை உருவாக்க அதிகாரம் பெற்றவைகளாகும் ) அவ்வாறான சட்டம் இயற்றிடும் அதிகாரங்கள் 1.இந்திய ஒன்றியத்தின் பட்டியல் , 2 இந்திய ஒன்றியம் ,மாநிலங்கள் ஆகிய இரண்டிற்குமான பட்டியல் , 3.மாநிலங்களின் பட்டியல் என்றவாறு மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன:
.
2. ஒரு சில சட்டங்களின் பெயருக்கு முன்பு 'Central ' என்ற சொல் முன்னொட்டாக ஏன் வருகின்றது என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் (இது குறித்த விவரங்களை அறிந்து கொண்டுள்ளோம்). அல்லது நம்மில் எத்தனை பேருக்கு இது மாநில சட்டம் அன்று நாடளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மத்திய சட்டமாகும் அதனால் இந்த 'Central ' என்ற சொல் முன்னொட்டாக வந்துள்ளது என தெரிந்து கொண்டிருக்கின்றோம். அதெல்லாம் சரி, சுங்க சட்டம், 1962 (Customs Act, 1962 )பற்றி நமக்கு என்ன தெரியும்? இதுவும் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மத்தியச் சட்டம்தான், ஆயினும் இதில் 'Central' என்ற முன்னொட்டு சொல் இல்லையே. அதனால் இது மத்திய அரசுச்கு சொந்தமானது அன்று என தவறாக எண்ணக்கூடாது நிச்சயமாக அது ஒரு முழுமையற்ற பதிலாகும் .இந்நிலையில் 'Central' என்ற முன்னொட்டு சொல் எப்போதும் மத்தியஅரசின் சட்டங்களுடன் முன்னொட்டாக இருக்கும். ஆனால் அவ்வாறான 'Central' என்ற முன்னொட்டு சொல் அனைத்து மத்திய அரசின் சட்டங்களிலும் இல்லையே ஆயினும் அவற்றை மத்திய அரசு நடைமுறைபடுத்தி வருகின்றதே எனும் சந்தேகம் நம்மனைவருக்கும் எழும் நிற்க . பொதுவாக மத்தியஅரசு மாநிலஅரசுகள் ஆகிய இரு அரசாங்கங்களுக்கும் சட்டங்களை உருவாக்குவதற்கான அல்லது இயற்றுவதற்கான அதிகாரங்களை பெற்றுனள்ளன இருந்தபோதிலும் இந்தியா முழுவதற்குமான பிரச்சினைகள் குறித்த சட்டங்களை மாநில சட்டத்திலிருந்து வேறுபடுத்தி காண்பிப்பதற்காக மத்திய அரசால் 'Central என்ற சொல் முன்னொட்டாக சேர்க்கப்படுகின்றன.( Central Goods And Service Tax Act(CGST),என்பது மத்திய அரசிற்கு உரியது Integrated Goods And Service Tax Act(IGST) என்பது மாநிலங்களுக்கு இடையேயான சட்டமாகும் State Goods And Service Tax Act(SGST)என்பது மாநில அரசுகளுக்கு உரியது) . ஆயினும் மத்திய அரசால் கொண்டுவரப்படும் வேறுசில சட்டங்களில் 'Central' என்ற சொல்கொண்டிருக்கவில்லையே, ஏனெனில் மைய அரசிற்கு உரிய உரிமையின் அடிப்படையில் அயலுறவு ,பொருட்களை அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தல் அயல்நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்தல் போன்றவை தொடர்பான சட்டத்தை உருவாக்க எந்த மாநில அரசாங்கங்களுக்கும் அதிகாரம் வழங்கப் படவில்லை. அவ்வாறே வருமானவரி வசூலித்தல் தொடர்பான வருமான வரிச் சட்டம், 1961 இல்'Central' என்ற சொல் இல்லை என்பதை நினைவில் கொள்க. ஆயினும் வேளாண்மை வருமானம் குறித்த சட்டத்தை உருவாக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருந்தாலும், விவசாய வருமான வரிவிதிப்பை நிர்வகிக்கும் எந்தவொரு சட்டத்தையும் இன்றுவரை எந்த மாநிலமும் வடிவமைக்கவில்லை.என்ற செய்தியை மனதில் கொள்க
3. நாம் எப்போதாவது எந்தவொரு புதிய சட்டத்தை பார்த்ததாலும், அதில் No _ of Year _). போன்ற சொற்களைக் பார்த்திருப்போம். எ.கா. நிறுவனங்களின் சட்டம், 2013 (No. 18 of 2013). இது உண்மையில் எதைக் குறிக்கிறது என்று எப்போதாவது யோசித்தோமா? எந்த ஆண்டில் குறிப்பிட்ட சட்டம் நிறைவேற்றப் பட்ட து என்றும் எத்தனையாவது சட்டமாக நிறைவேற்றபட்டது என்றும் இது குறிக்கிறது. கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டில்,இதில் பிறையடைப்பில் உள்ள, 2013 என்பது2013 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது எண் 18 என்பது அது18 வது சட்டமாக நிறைவேற்றபட்டதாக கூறுகிறது.

4. யாராவது நம்மிடம் வந்து வருமான வரிச் சட்டம், 1961 இன் நோக்கம் என்ன? என்ற ஒரு அடிப்படை கேள்வியைக் கேட்டால், தொழில் ரீதியாக அதற்கு நாம் எவ்வாறு பதிலளிக்க முடியும்? ஒவ்வொரு சட்டத்திற்கும் ஒரு முன்னுரை( preamble) உள்ளது, அது அந்த சட்டத்தின் நோக்கங்களை குறிக்கின்றது. அதாவது எந்தவொரு சட்டத்திலும் பிரிவு -1 க்கு மேல்பகுதியான, அந்த சட்டத்தின் முதல் பக்கத்தில் அந்த சட்டம் இயற்றப்படுவதற்கான நோக்கத்தைத் தேடினால் கண்டிப்பாக கிடைக்கும். எ.கா. வருமான வரிச் சட்டத்தின் குறிக்கோள்களாக அந்த சட்டத்தின் முதல்பக்கத்தின் முன்னுரையின் (preamble )படி, வருமான வரி மற்றும் முதன்மை வரி தொடர்பான சட்டத்தை ஒருங்கிணைத்து திருத்தம் செய்திடுதல் எனக் குறிப்பிடப் பட்டிருக்கும்

5. ஒவ்வொரு சட்டமும் பகுதிகளாகவும் பிரிவுகளாகவும் இடையிடையே பிரிக்கப்பட்டுள்ளது. மேலும், இது துணைப்பிரிவுகள், உட்பிரிவுகள், துணை உட்பிரிவுகள்ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆனால், "Section - 40(1)" என்பது குறித்து விவரமாக கூறுக என யாரவது நம்மிடம் கோரினால், நாம் எவ்வாறு அதனை பார்த்து அதனுடைய விவரங்கள்குறித்து விவரிக்க முடியும்? அதாவது பிரிவு 40 இன் துணைப்பிரிவு 1 அல்லது பிரிவு 40 இன் இனம் (Clause) 1? இவற்றுள் எது சரி, சட்டத்தில் கொடுக்கப்பட்ட பிரிவைப் பார்க்காமல் பேசுவது நடைமுறையில் சாத்தியமற்றது. ஏனெனில், பிரிவுக்குப் பிறகு ஏதேனும் அடிப்படைக் கோடு( Base Lline) கொடுக்கப்பட்டிருந்தால், அது ஒரு இனம் (Clause),ஆகும் இல்லையெனில் அது துணைப்பிரிவாகும். இதனை புரிந்து கொள்வதற்காக வருமான வரிச் சட்டத்தின் விரிவான எடுத்துக்காட்டு ஒன்றினை இப்போது காண்போம்: வருமான வரிச் சட்டத்தின் 24 வது பிரிவைப் பார்வையிட்டால், அது பின்வருமாறு கூறுகிறது:
பிரிவு 24. "Income from house Property" என்ற தலைப்பில் வசூலிக்கக்கூடிய வருமானம் பின்வரும் விலக்குகளைச் செய்தபின் கணக்கிடப்படும், அதாவது: -
(a) A sum equal to எனத்துவங்கிடும் இதனுடைய உட்பிரிவு (a) , பிரிவு (24) ஆகிய இரண்டிற்கும் இடையில் ஒரு அடிப்படைக் கோடு உள்ளது. எனவே இது பிரிவு 24 இன் இனம் (Clause), (a) ஆக படிக்கப்படும். இருப்பினும், இதே சட்டத்தின் பிரிவு 23 ஐப் பார்வையிட்டால், 23. (1) for the purposes of section 22 எனகுறிப்பிடப்பட்டுள்ளது இங்கு துனைப்பிரிவு (1) பிரிவு (23) ஆகியஇரண்டிற்கும் இடையில் அவ்வாறான அடிப்படைக் கோடு எதுவும் இல்லாததை காணலாம். எனவே, இது பிரிவு 23 இன் துணைப்பிரிவு (1) ஆக படிக்கப்படும்.

6. இப்போதெல்லாம் சட்டமியற்றுபவர்கள் ஒரு சில நேரங்களில் "a, b, c ..." ஆகியவற்றை உட்பிரிவுகளாகவும் வேறு சில நேரங்களில் "1, 2, 3 .." ஆகியவற்றை உட்பிரிவுகளாகவும் பயன்படுத்து கின்றனர்? அவ்வாறாயின் சட்டமியற்றுபவர்கள் தம்முடைய விருப்பப்படி ஒருசில சட்ட பிரிவுகளுக்கு பிரிவு 40 (a ),40 (b ), 40 (c ) ... என்றவாறும் வேறுசில சில சட்ட பிரிவுகளுக்கு பிரிவு 22(1), 22(2), 22(3 ) ... என்றவாறு அவரவர்களுடைய விருப்பத்தின் பேரில் உருவாக்கமுடியுமா? நிச்சயமாக இல்லை. உண்மையில் சட்டத்தின் பிரிவில் 26 அல்லது அதற்கும் குறைவான உட்பிரிவுகளை மட்டுமே சேர்க்கப்பட வேண்டும் என்ற நிலையில், "a, b, c,..." என்பவற்றை உட்பிரிவுகளாகயும் ஒரு சட்டத்தின் உட்பிரிவுகளானவை அதற்கும் அதிகமாக இருந்தால் "1, 2, 3,..." என்பவற்றை உட்பிரிவுகளாக வும் பயன்படுத்தி கொள்கின்றனர்

7. ஒருசில சட்டப்பிரிவுகளில் (40A (2), 47A) என்றவாறு குழப்பமான பிரிவுகளை கொண்டிருந்தால் அதென்ன அவைகளில் ஆங்கில பெரியஎழுத்து A என்பதை சட்டத்தின் பிரிவுஎன்களுடன் சேர்த்து கொடுத்து விடுகின்றனர் என்று மனம் ஒரே சோர்வாக இருக்கிறதா? கவலையேப்படாதீர்கள் இந்த ஆங்கில பெரிய எழுத்து A ஆனது பொதுவாக குறிப்பிட்ட சட்டப்பிரிவில் செய்யப்பட்ட திருத்தத்தை குறிக்கிறது.

8. உள்ளடக்கிய வரையறைகள் ஒவ்வொரு சட்டத்தின் ஒரு பகுதியாகும். புனைகதையாக கருதுகின்ற உள்ளடக்கத்தை உருவாக்கப் பயன்படும் "Include" என்ற சொல் ஒரு வரையறையின் நோக்கத்தை அதன் பொது அர்த்தத்திற்கு அப்பால் நீட்டிக்கிறது. ஒரு சாதாரண மனிதனின் மொழியில், "Include" என்ற சொல்லுடன் துவங்கும் ஒரு வரையறை இருந்தால், இதன் பொருள் பொதுவாக அந்த சொல்லின் அர்த்தம் என பொதுவாகக் கருதப்படுவதைத் தவிர, அதற்கு பின்வருவனவும் அதனுடன் உள்ளடங்கியதாகக் கருதப்படும் .

9. ஒவ்வொரு சட்டத்திற்கும் பொருந்தக்கூடிய ஒரு சட்டப்பிரிவுகளில் அவற்றை திருப்தி செய்வதற்காக பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. அத்தகைய நிலைமைகளில் பொதுவாக "AND" அல்லது "OR" உடன் அந்த நிபந்தனைகள் பிரிக்கப்படுகின்றன. அவ்வாறு பிரிப்பதில் இவ்விரண்டும் என்ன வித்தியாசத்தை உருவாக்குகின்றன? ஒரு சட்டப்பிரிவில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிபந்தனைகளுக்கு இடையில் "AND" இருந்தால், அவை அனைத்தும் திருப்தி அடைந்தால் மட்டுமே குறிப்பிட்ட சட்டப்பிரிவு செயலில் இருக்கும் .வேறொரு சட்டப்பிரிவின் நிபந்தனைகளுக்கு இடையில் "OR" என்ற சொல் இருந்தால், அவற்றில் ஏதேனும் ஒரு நிபந்தனையை மட்டும் திருப்தி செய்தால் போதுமானதாகும் என குறிக்கின்றது .

10. சட்டம் என ஒன்று இருந்தால் அந்த சட்டத்திற்கு எப்போதும் விதிவிலக்குஎன்ற ஒன்றும் கண்டிப்பாக இருக்கும்; அவ்வாறான சட்டத்தின் விதிவிலக்குள் கூட. பல்வேறாக இருக்கும். அவை Proviso's என்பதன் உதவியுடன் சட்டப்பிரிவுகளுக்கிடையில் வழங்கப்படுகின்றன. "Provided that" என்று துவங்குபவை அந்த சட்டப்பிரிவின் அவ்வாறான விதிவிலக்குகளாகும் என்பதை நினைவில் கொள்க

11. வழக்குச் சட்டங்கள் (Case Laws ) என்பவை எப்போதும் எந்தவொரு சட்டத்தின் ஒரு பகுதியாகும். எனவே, அவற்றின் சரியான மேற்கோளைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும் எடுத்துக் காட்டாக Union of India Versus Delhi Cloth and General Mills Co. Ltd. 1977 (1) E.L.T. (J 199) (S.C.)
- இதில், Union of India என்பவர் ஒரு மேல்முறையீட்டாளர் (அல்லது வாதியாவார்)
- அதாவது இந்த வழக்கினை தாக்கல் செய்த வர் ஆவார்.
- Delhi Cloth and General Mills Co. Ltd. என்பவர் அவ்வழக்கின்ஒரு பிரதிவாதி (அல்லது பதிலளிப்பவர்)
- 1977 என்பது இந்த வழக்கின் தீர்ப்பு வெளியிடபட்ட ஆண்டு ஆகும்.
- (1) என்பது தீர்ப்பு வெளியிடப்பட்ட பத்திரிகையின் தொகுப்பு எண் ஆகும்.
- E.L.T.. அந்த தீர்ப்பினை வெளியிட்ட வெளியீட்டாளர் அல்லது பத்திரிகையாகும்.
- (J 199) என்பது. அந்த தீர்ப்பு வெளியிடப்பட்ட இதழின் பக்க எண் ஆகும்.
- (S.C.)என்பது அந்த தீர்ப்பு எந்த நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது எனக்குறிப்பிடும் நீதிமன்றத்தின் பெயராகும் .

12. தடைசெய்யப்படாத இனம்(Clause ) - இவை கொடுக்கப்பட்ட நிபந்தனைகளின் திருப்தி குறித்த ஒரு சில விதிகளை( provisions) இரத்து செய்யும் அதிகபட்ச ஆளுமை கொண்ட இனங்களாகும்( clauses) . இவை பொதுவாக பின்வரும் வழியில் உள்ளடக்கங்களாக உள்ளன; "Notwithstanding anything contained in". என்றவாறும். அதுமட்டுமல்லாமல் "Subjects to the provisions of." என்றவாறான உள்ளடக்கங்களாககூட இருக்கலாம்

வேறு ஒருசில பொதுவானவைகள்
1. வருமான வரிச் சட்டத்தில், "Income from House Property" என்ற பெயரில் ஒரு தலைப்பு இருப்பதும், "Property consisting of any building or land". என்று பொறுப்பு ஏற்பு செய்திடும் விதிகள் பிரிவு 22 இல் இருப்பதும் ஒரே குழப்பமாக இருக்கின்றதல்லவா? ஆயினும், தலைப்பிற்கும் அதனுடைய விதிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டால், நிச்சயமாக பிந்தையதே மேலோங்கும் என்ற தகவலை மட்டும்தெரிந்து கொள்க .
2. நம்முடைய வருமான வரிப் பொறுப்பைக் குறைக்க மூன்று வழிகள் உள்ளன:
அ) வரி திட்டமிடல் - சட்டத்தால் வழங்கப்பட்ட நன்மைகளைப் பயன்படுத்தி முற்றிலும் சட்டபூர்வமாக குறைப்பது.
b) வரி தவிர்ப்பு - சட்டத்தில் உள்ள ஓட்டைகளை தவறாகப் பயன்படுத்துதல். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, வரி தவிர்ப்பு சட்டவிரோதமானது அன்று. இருப்பினும், எந்தவொரு பொறுப்புள்ள குடிமகனும் அதைப் பயன்படுத்தக்கூடாது.
c) வரி ஏய்ப்பு - அதை மறைப்பதற்காக தவறான தகவல்களை வழங்குவதற்காக. சட்டவிரோத நடைமுறையை பயன்படுத்துதல்.
3. பொதுவாக சட்டத்தில் உள்ள தவறுகளை ஓட்டைகள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றை சரிசெய்வது " சட்டத்தின் ஓட்டைகளை அடைத்தல் ( Plugging the Loophole)" என்று அழைக்கப்படுகிறது.
  இதுவரை நாம் கண்டுவந்த சட்டத்தை விளக்கம் செய்வது என்பது சட்டத்தை கற்றல்தொடர்பான ஒரு தொடர்ச்சியான மற்றும் முடிவில்லாத செயலாகும் .

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...