சனி, 31 டிசம்பர், 2022

பாம்பும் மரம் அறுக்கும் வாளும் - கோபத்தினால் ஏற்படும் விளைவுகள்

 ஒரு நாள்இரவில் ஒரு தச்சரின் மரப்பட்டறைக்குள் பாம்பு ஒன்று நுழைந்தது. அப்போது இரவுநேரமானதால் அந்த மரப்பட்டறையானது இருள்சூழ்ந்து இருந்தது. அந்த பாம்பு  மரப்பட்டறைக்குள் ஊர்ந்து நகர்ந்தசென்றுகொண்டிருந்த போது ஏதோ ஒன்று அதன் மீது உராய்ந்ததால் அந்த பாம்பின் உடலில் லேசான காயம் ஏற்பட்டது. அந்த காயத்தினால் ஏற்பட்ட உடல் வலியால்  ஆத்திரமடைந்த பாம்பு தனது தலையை தூக்கி படம் எடுத்து ஆடியவாாறு சீறிக்கொண்டு தன்னுடைய உடலில் உராய்ந்து காயம் ஏற்படுத்திய பொருளை கடிக்க முயன்றது . இந்த முயற்சியில் அந்த பாம்பின் வாயிலும்  முகத்திலும் மேலும் காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் தனக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல், எதிரி  தன்னைத் தாக்க முயல்கின்றார் எனதவறாக நினைத்து கொண்டு, அந்த பாம்பானது அதிக கோபத்துடன் கடுமையாக சீறிக்கொண்டு தன்னுடைய முழு பலத்துடன் தன்னுடைய எதிரியை மூச்சுத் திணறச் செய்வது போன்று தன்னுடைய நீண்ட உடலால் அதைச் சுற்றி வளைக்க முடிவு செய்து அவ்வாறே செய்தது. ஆனால் மறுநாள் காலையில், அந்த தச்சர் தனது மரப்பட்டறைக்குள் நுழைந்தபோது, கூர்மையான மரம் அறுக்கும் வாளில் பாம்பு ஒன்று சுற்றப்பட்டு இறந்து கிடந்ததைக் கண்டார்.
கற்றல் சில நேரங்களில், நாம் கோபத்தில் எந்தவொரு செயலிற்கும் பதில் செயல்செய்திடுமாறு நடந்து கொள்கிறோம், அதாவது நம்மை காயப்படுத்து பவர்களை தீங்கிழைப்ப வர்களை  பதிலுக்கு பதில் காயப்படுத்த நினைக்கிறோம், ஆனால் அதன்மூலம் நம்மை அறியாமல் நமக்கு நாமே காயப்படுத்திக் கொள்கிறோம். எனவே, அவ்வாறான சூழல்களில் அத்தகைய நபர்களையும் சூழ்நிலையையும் புறக்கணிப்பது நல்லது, ஏனென்றால் அவர்களுக்கு எதிர்வினையாற்றுவதாக எண்ணிக்கொண்டு நாம் நமக்கான மீளமுடியாத பேரழிவுகளையும் விளைவுகளையும் ஏற்படுத்தும் சூழலில் மாட்டிகொள்கின்றோம்

சனி, 24 டிசம்பர், 2022

கொல்லனும் இரும்பு சங்கிலியும்

 முன்புஒருகாலத்தில், ரோம் நகரில் ஒரு கொல்லன் வாழ்ந்துவந்தார், அவர் தனது ஒப்பற்ற திறமைகளால் உலகம் முழுவதும் பிரபலமானார். அவர் தன்னுடைய உலைகளத்துடன்கூடிய பட்டறையில் எந்தவொரு பொருள் செய்தாலும், அதை யாராலும் உடைக்க முடியாத தாக இருந்தது. எனவே, அந்த கொல்லனின் பட்டறையில் செய்யப்பட்ட பொருட்கள் உலகம் முழுவதும் மதிக்கப்பட்டு, தொலைதூர சந்தையில்கூட விற்கப்பட்டன. ஒரு முறை, எதிரியால் ரோம்நகரின்மீது தாக்குதல் செய்யப்பட்டு அந்த போரில் தோற்றது. அதனால் ரோமில் இருந்த பல முக்கிய நபர்கள் பிடிபட்டனர். மொத்தத்தில் ரோமில் புகழ்பெற்ற  முப்பது நபர்கள் பிடிபட்டனர், அவர்களில் அந்த கொல்லனும் ஒருநபர்ஆவார். அவர்கள்அனைவரும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப் பட்டு அருகிலிருந்த மலையின்உச்சியிலிருந்து கீழே தரைக்கு உருட்டி விடுவதற்கு மலையின் உச்சிக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட அவர்கள் அனைவரும் மலையின் உச்சிக்கு கொண்டுவந்தபோது, அந்த சங்கிலியால் கட்டப்பட்டவர்களில் இருபத்திஒன்பது பேர்களும் தங்களுடைய உயிர் உடன்போகப்போகின்றது என அழுது கொண்டிருந்தனர், அழாத ஒரே நபர் அந்த கொல்லன் மட்டுமேயாகும். அதனால்  அவர்களில் ஒருவர் கொல்லனிடம், “நீமட்டும்எப்படி அமைதியாக இருக்கிறாய்? விரைவில் இங்கிருந்து நம்மை கீழே மரம் அடர்ந்து வளர்ந்துள்ள காட்டிற்குள் உருட்டிவிடப் போகின்றனர், இந்த மலையடியிலுள்ள காட்டில் வாழும் வன விலங்குகளால் நம்முடைய உடல்கடித்து தின்னப்படும்.“ என கூறியதற்குக் கொல்லன் , “கவலைப்படாதே நண்பா, நான் ஒரு கொல்லன், என் வாழ்நாள் முழுவதும் நான் ஏராளமான  சங்கிலிகளையும் கைவிலங்குகளையும் உருவாக்கி யிருக்கிறேன். அதனால் அவற்றைத் எவ்வாறு திறப்பது என எனக்குத் தெரியும், நீங்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். நாம் உருட்டிவிடப்பட்டவுடன், நான் முதலில் என்னை பினைத்த சங்கிலியை அவிழ்த்து விடுவேன், பின்னர் நான் உங்கள் அனைவரின் சங்கிலியையும் அவிழ்க்க உதவுவேன், பயப்பட வேண்டாம்.“ எனக்கூறினார். அதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் தைரியம் அடைந்து  நம்பிக்கையுடன் இருந்தனர் .அதன்பிறகு அவர்கள் அனைவரும் மலையின் உச்சியிலிருந்து உருட்டிவிடப்பட்டனர். அதனைதொடர்ந்த அவர்களஎல்லாரும் கடுமையாக முயற்சி செய்து மெதுவாக நகர்ந்து ஊர்ந்து  எப்படியோ கொல்லனின் அருகில் வந்தசேர்ந்தனர். அவர்கள் அனைவரும் கொல்லனின் அருகில்வந்து சேர்ந்ததபோது,  அங்கு கொல்லனும் தாங்கள் முன்பு அழுதுகொண்டிருந்ததேபோன்றே தனியாக அழுதுகொண்டிருப் பதைக் கண்டனர். அவர்களில் ஒருவர் , ""ஏன் என்ன செய்தி?  நீங்கள் எங்களுக்கு எல்லாம் தைரியமும் நம்பிக்கையும் அளித்தீர்கள் அதனால் நாங்கள் அனைவரும் நிம்மதியாக இருந்தோம் ஆனால் இப்போது  நீங்கள் மட்டும் ஏன் அழுகின்றீர்கள்? , இப்போது என்ன நடந்தது?"  என வினவியபோது கொல்லன், "நான் , ஏன் அழுகிறேன் என்றால் நான் இப்போது நம்மை பினைத்த இந்த சங்கிலிகளை உன்னிப்பாகப் பார்த்தபோது, அவற்றில் எனது முத்திரை இருப்பைதப் பார்த்தேன், இந்த சங்கிலிகள் நான் செய்தவை.. வேறுயாராவது செய்திருந்தால், அவ்வாறான சங்கிலிகளை என்னால்  உடைத்திருக்கமுடியும், ஆனால் நான் செய்த இந்த சங்கிலியை என்னால் கூட உடைக்க முடியாது. இப்போது, இங்கிருந்து நாம் தப்பிப்பது சாத்தியமில்லை. காட்டு விலங்குகளால் நாமனைவரும சாவது உறுதி"  எனக்கூறினார்

சனி, 17 டிசம்பர், 2022

மற்றவர்களை ஏமாற்றிடும் இனிப்புக் கடை உரிமையாளரின் புகார்!!

 ஒரு இனிப்புக் கடைக்காரர் தன்னுடைய கடைக்கு தேவையான வெண்ணெயை ஒரு விவசாயியிடம்  வாங்குவது வழக்கமாகும்,அவ்வாறுஒரு நாள் அந்த விவசாயியிடம் ஒரு கிலோ வெண்ணெய் வாங்கியபோது அந்தஇனிப்புக் கடைக்காரர்,  “ விவசாயி கொடுத்துவருகின்ற வெண்ணெயின் எடையை  ஒருநாள்கூட சரிபார்த்ததே இல்லை, அதனால் இன்று சரிபார்த்திடுவோம் ” என நினைத்தார். எனவே அவர் அளவுகோலின் ஒரு பக்கத்தில் வெண்ணெயையும் மறுபுறம் 1 கிலோ எடைக்கல்லையும் வைத்து சரிபார்த்தபோது அன்று  வாங்கிய வெண்ணெயானது 1கிலோவிற்கும் குறைவாக இருப்பதைக் கண்டார். அதனால் அந்த இனிப்புக்கடைகாரர் அதிக கோபமடைந்து அந்த நகரத்தின் நகரமன்றத் தலைவரிடம் சென்று அந்தவிவசாயி தன்னை ஏமாற்றியது குறித்து புகார் கூறினார்.அதனை தொடர்ந்து அந்த நகரமன்றத்தலைவர் இனிப்புக்கடைக்காரர் விவசாயி ஆகிய இருவரையும் நேரடி விசாரணைக்கு அழைத்தார்.அந்த விசாரணையின்போது "நீங்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கும் குறைவான வெண்ணெய் கொடுத்து இனிப்பு கடைக்காரரை ஏமாற்றுவது சரியா" என  நகரமன்றத் தலைவர் வினவினார். அதற்கு விவசாயி, "ஆனால்.. இது 1  கிலோ வெண்ணெய்தான் ஐயா" என்றார். உடன்  கோபமடைந்த நகரமன்றத் தலைவர், "ஆனால் இனிப்புக் கடைக்காரர் அதனை சரிபார்த்தபோது, அதன் எடை 1 கிலோவிற்கும் குறை வாகவே இருக்கின்றதே." என மேலும் வினவினார். அதனால் அந்த விவசாயி அதிக குழப்பத்துடன், "ஐயா, பொருட்களை எடையிட்டு கணக்கிடு வதற்கென தனியாக என்னிடம்  எடைகற்கள் எதுவும் இல்லை ஐயா."  என பதில் கூறினார் ,அதனை தொடர்ந்து நகரமன்றத் தலைவர் "அவ்வாறாயின் நீங்கள் விற்பனை செய்திடும் வெண்ணெயை எவ்வாறு எடையிட்டு கொடுத்து வருகின்றீர்கள்? அதனை1 கிலோ என்று எவ்வாறுச் சொல்வது?" என மீண்டும் வினவியதற்கு அவ்விவசாயி, "ஐயா, இன்று நான் அவரிடமிருந்து 1 கிலோ இனிப்பு வாங்கினேன்.  அந்த இனிப்புப் பொட்டலத்தை எடுத்து வெண்ணெயை எடையிடுவதற்கு தராசின் மறுபக்கத்தில் வைத்து எடையிட்டு கொடுத்தேன். இதேபோன்று  நான் வாரத்திற்கு ஒருமுறை இவரிடம் ஒரு கிலோ இனிப்பு வாங்குவேன் அதனை அந்த வாரமுழுவதிற்கும் வைத்துகொண்டு வெண்ணெயை எடையிட்டு வழங்குவது வழக்கமாகும் " என பதில் கூறினார் இந்த பதிலைக் கேட்டு இனிப்புக்கடைக்காரர் திகைத்துப் போனார், இப்போது தனது  ஏமாற்றும் பணி அம்பலமாகிவிட்டதால் வெட்கமடைந்தார்.
கற்றல். இந்த இனிப்பு விற்பவரைப் போல நமக்கும் வாழ்க்கையில் நாம் கொடுப்பதுதான் கிடைக்கும். நாம் மற்றவர்களுக்கு என்ன கொடுக்கிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும், ஏனென்றால் வாழ்க்கையில் நாம்  விதைப்பதையே நாம் அறுவடை செய்திடுவோம் ...

ஞாயிறு, 11 டிசம்பர், 2022

யாரோஒருவர்முதுகில் கேலிசெய்திடும்தாளை ஒட்டுவது

 கல்லூரியில் பயிலும் மாணவர்களில் ஒரு மாணவன் ஒருமுறை தங்களுடைய வகுப்பில் பயிலும், மற்றொரு மாணவனை  குறும்பு செய்து விளையாட நினைத்தான். அதற்காக அம்மாணவன் எழுதும் ஒரு தாளினை எடுத்து அதில்     -  நான் ஒரு முட்டாள்  - என எழுதிய, பின்னர்  அந்த தாளினை தான் குறும்பு செய்து விளையாட விரும்பும் வகுப்பு தோழரின் முதுகில் ஒட்டினார்,  அந்த தாள் அம்மாணவரின் முதுகில் ஒட்டப்பட்டதால் அதுகுறித்து அந்த மாணவனுக்கு எதுவும் தெரியாது அதனால் அம்மாணவன் அதனை கவனிக்காமல்.தன்னுடைய பணியை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் மாணவனின் முதுகில்- நான் ஒரு முட்டாள்  -  எனும் தாள் ஒட்டப்பட்டதைப் பார்த்த மற்றொரு மாணவனிடம் அந்த தாளை ஒட்டிய மாணவன், இந்த மாணவனை கேலி செய்வதற்காகத்தான் நான் இதை ஒட்டினே் இது குறி்த்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதனை தொடர்ந்து அந்தநாள் முழுவதும் கல்லூரியில் மாணவர்கள் அனைவரும் அந்த கல்லூரி மாணவரின் முதுகில் ஒட்டுப்பட்டிருந்த  - நான் ஒரு முட்டாள்  - என ஒட்டப்பட்ட தாளினை பார்த்து அந்த மாணவனின் முதுகுக்கு பின் கிண்டலும் கேலியும் செய்துசிரித்து கொண்டிருந்தனர். அன்றைய நாளின் கடைசி நேர வகுப்பிற்கு கணித விரிவுரையாளர்  வந்துசேர்ந்தார், கணித விரிவுரையாளர் வந்தவுடன் முந்தையநாளில் நடத்தப்பட்ட கணித பாடத்திற்கான கணக்கு ஒன்றினை சுவரிலிருந்த கரும்பலகையில் எழுதி இந்த கணக்கினை யாரால் தீர்வுசெய்ய முடியும் என அந்த வகுப்பு மாணவர்களை பார்த்து கேட்டுக் கொண்டார். அந்த கணக்கு மிகக்கடினமாக இருந்ததால், அவ்வகுப்பில் இருந்த கல்லூரி மாணவர்களுள் முதுகில் -  நான் ஒரு முட்டாள்-   எனும் தாள் ஒட்டப்பட்ட மாணவனை தவிர வேறுஎந்த மாணவரும் அந்த கணக்கினை தீர்வுசெய்திட முடியும் என தங்களுடைய கைகளை உயர்த்தவில்லை. விரிவுரையாளர் அந்த மாணவரை மட்டும் அழைத்து கரும்பலகையில் அந்தகணக்கிற்கான வழிமுறையை எழுதி தீர்வுசெய்து விடை காணுமாறு அழைத்தார். உடன் அம்மாணவன்  அந்த கணக்கிற்கான தீர்வுகாண கரும்பலகையை முன்னோக்கிச் சென்றுபோது, அந்த மாணவனது முதுகுக்குப் பின்னால் அனைத்து மாணவர்களும் கிண்டலும் கேலியும் செய்து சிரித்து கொண்டிருந்தனர். அதை அந்த வகுப்பு விரிவுரையாளர் கவனித்தார். வகுப்பு மாணவர்களின் கிண்டலும் கேலிக்கும்  மத்தியில், அம்மாணவர் அந்தகணக்கிற்கான வழிமுறையை கரும்பலகையில் மிகஎளிதாக எழுதி தீர்வுசெய்துவிட்டு திரும்பிச் செல்லவிருந்தார். அப்போது விரிவுரையாளர் அவரைத் தடுத்துநிறுத்தி அவரைப் பாராட்டி முதுகில் தட்டிகொடுத்த பின் அம்மாணவரின் முதுகில் ஒட்டியிருந்த- நான் ஒரு முட்டாள்-   எனும் தாளினையும் பிய்த்து அகற்றினார். தொடர்ந்த விரிவுரையாளர் அந்த தாளினை அந்த கல்லூரி மாணவரிடம் கொடுத்து - இந்த தாள் உங்கள் முதுகில் ஒட்டியிருந்தது. - நான் ஒரு முட்டாள்-   என தன்னுடைய முதுகில் ஒட்டியிருந்த தாளினை கண்டு அந்தக் கல்லூரி மாணவர் மிகவும் வெட்கப்பட்டார். பின்னர் விரிவுரையாளர் மற்ற வகுப்பு மாணவர்களை அழைத்து, “மாணவர்களே இன்று உங்களுக்கு மிக முக்கியமான கருத்து ஒன்றினை கூறவிழைகிறேன்... இந்த தாளை பற்றி இம்மாணவருக்கு விவரம் தெரிந்திருந்தால் இந்த கணக்கினை தீர்வுசெய்திட இவர் முன்வந்திருக்க மாட்டார்.அல்லவா அதே போன்று உங்கள் வாழ்நாள் முழுவதும், உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்க, மற்றவர்கள் உங்கள் முதுகிற்கு பின்னால் பல்வேறு மோசமான செய்திகளை பரப்பிடுவார்கள்.  வாழ்க்கையில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், மக்கள் உங்களுக்குக் கொடுக்கும் இந்த பட்டப்பெயர்களைப் புறக்கணித்து, நீங்கள்  கற்றுக்கொள்வதற்கும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், உங்களை மேம்படுத்திகொள்வதற்கும் கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திகொள்ளுங்கள்." என அறிவுரை கூறினார்
என்ன வாசகரே மற்றவர்கள் புறங்கூறுவதை புறக்கணித்து  உங்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான வாய்ப்பினை பயன்படுத்தி கொள்வீர்களா

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

பெண்ணின் கோபமும் அதற்கான மருத்துவமும்

 ஒரு கிராமத்தில் வாழ்ந்துவரும் ஒரு பெண் தனக்குவருகின்ற கோபத்தால் எல்லாக் கட்டுப்பாட்டையும் இழந்து வாயில் வந்தவாறு திட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தார் இதனால் அதிக பிரச்சினையாகி விடுவதும் வழக்கமான செயலாக இருந்துவந்தது   ஒரு நாள் தனக்கு கோபம் வருவது தனக்கு அடிக்கடி  பெரும் பிரச்சனையாகி வருவதையும்  வருத்தத்தில் மனம் எரிவதை போன்றும் உணர்ந்தார். மேலும் அப்பெண்ணுக்கு கோபம் வரும்போது  தான் நிராதரவாக இருப்பதாகவும்உணர்ந்தார் . ஒரு நாள்  மகாத்மா கிராமத்திற்கு வந்தார். அந்தப் பெண் அவரைச் சந்தித்து தன் கோபத்தை போக்க வழி கேட்க முடிவு செய்தாள். அதனால் அவள் மகாத்மாவைச் நேரில் சந்தித்து அவரிடம், "ஐயா, எனக்கு வரும் கோபத்தால் எனக்கு அடிக்கடி பிரச்சினையாகிவிடுகின்றது, என் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை, கோபத்தில், நான் அடிக்கடி மற்றவர்களைத் தவறாகப் பேசிவிடு கின்றேன், பின்னர் நான் வருந்துகிறேன். என் கோபத்தால், என் குடும்ப உறுப்பினர்கள் கூட என்னிடம் பேச பயப்படுகின்றனர. நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன்.நான் கோபப்படுவதை நிறுத்த உதவும் மருந்து ஏதேனும் இருந்தால் எனக்குக் கொடுங்கள்." எனக்கோரினார் உடன்மகாத்மா உள்ளே சென்று ஒரு பாட்டிலை கொண்டுவந்தார். அதை அவளிடம் கொடுத்து, "இனிமேல் உனக்கு கோபம் வரும்போதெல்லாம் இந்த மருந்தை சிறிதளவு குடித்துவிழுங்காமல் அப்படியே வாயில் வைத்து கொண்டு சிறிதுநேரம் அமைதியாக உட்கார்ந்திரு. இந்த மருந்து உனக்கு உதவும்" என்றார். மருந்து கிடைத்தவுடன் அந்த பெண் மகிழ்ந்தாள். அவருக்கு நன்றிகூறிவிட்டு தன் வீட்டிற்கு திரும்பினாள். அன்று முதல் கோபம் வரும்போதெல்லாம் மகாத்மா கொடுத்த அந்த பாட்டிலிலிருந்த சிறிதளவு மருந்து குடித்திடுவாள் ஆனால்அந்த மருந்தை விழுங்காமல் வாயில் வைத்துகொண்டு சிறிதுநேரம் அமைதியாக உட்கார்ந்து இருந்துவிட்டு மற்ற பணிகளை செய்திடுவாள் அதனால் அவளுக்கு மெல்ல மெல்ல கோபம் குறைய ஆரம்பித்தது. 15 நாட்களில், அந்தமருந்துமுழுவதும் காலியாகி விட்டது அதனால் , அவள் மீண்டும் மகாத்மாவிடம் நேரில் சென்று அடைந்து, "ஐயா நீங்கள் எனக்கு ஒரு அற்புதமான மருந்தைக் கொடுத்தீர்கள், நான் அதைக் குடித்தவுடன் என் கோபம் எல்லாம் மறைந்துவிடுகின்றது, இப்போது அந்த மருந்து காலியாகிவிட்டது, தயவுசெய்து மேலும் அந்த மருந்தை எனக்கு ஒன்றிற்கு மேற்பட்ட பாட்டில்களில் அதிகமாகக் கொடுத்தால் மிகப்பயனுள்ளதாக இருக்கும். " எனக்கோரினாள்  உடன் மகாத்மா சிரித்துக்கொண்டே, "மகளே, அந்த பாட்டிலில் மருந்து இல்லை. அதில் வெறும் தண்ணீர்தான் .." என்றார். இதை கேட்ட அந்த பெண் ஆச்சரியமடைந்து, "ஆனால்.." என்றாள். மகாத்மா , "நீ கோபமடைந்தவுடன் , அந்தப் பாட்டிலிலிரு்நது சிறிது தண்ணீரை குடித்து அதனை உள்ளேவிழுங்காமல் சிறிதுநேரம் அப்படியே வைத்திருந்தாய்,   வாயில் தண்ணீர் இருப்பதால் எதையும் உன்னால் பேச முடியவில்லை. உன்னுடைய கோபத்திலிருந்து விடுபட இதுவே ஒரே வழி. உனக்கு கோபம் வரும்போதெல்லாம் இதேபோன்று சிறிது தண்ணீர்குடித்து அந்த தண்ணீரை உள்ளேவிழுங்காமல் வாயில் வைத்து கொண்டு சிறிதுநேரம் அமைதியாக இருந்திடுக, ." என விளக்கமளித்து அறிவுரைகூறினார்
  கற்றல். கோபத்தால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரே வழி கோபமாக இருக்கும் போது அமைதியாக இருப்பதுதான்.



ஞாயிறு, 27 நவம்பர், 2022

பெண்ணின் புகாரும் விமானபணிப்பெண்ணின் பதிலும்

  ஒரு அழகான பெண் புறப்பட தயாராக இருந்த ஒரு விமானத்திற்குள் நுழைந்து தனது இருக்கையைத் தேடி சுற்றிப் பார்த்தாள். கைகள் இல்லாத ஒரு நபருக்கு அருகில் அவள் இருக்கை இருப்பதைக் கண்டாள். அந்த ஊனமுற்றவரின் அருகில் உட்காரஅந்த பெண் தயங்கினாள். அவள் விமானபணிப்பெண்ணை அருகில் அழைத்து, “இந்த இருக்கையில் நான் வசதியாக உட்கார்ந்து என்னால்  பயணிக்க முடியாது” என்றாள். உடன் விமானபணிப்பெண் “ஏன்“, என வினவியபோது,அந்தப் பெண் , “ஏனெனில் என்னுடைய பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவருக்கு இரண்டு கைகளும் இல்லை, அத்தகையவர்களின் அருகில் நான் அமர்ந்து பயணிக்க முடியாது“. என பதிலளித்தார். மேலும் தொடர்ந்து,  தனது இருக்கையை வேறு இடத்திற்கு மாற்றித்தருமாறு விமான பணிப்பெண்ணிடம் கோரிக்கை விடுத்தார். நன்கு படித்த  கண்ணியமான ஒரு பெண்ணிடம் இருந்து இவ்வாறான கோரிக்கையக் கேட்டு விமான பணிப்பெண் திகைத்துப் போனார். இருந்தபோதிலும் பயனாளரின் கோரிக்கையை ஏற்கவேண்டியது விமான சேவை நிறுவனத்தின் அடிப்படை கடமையல்லவா அதனால் அந்த விமான பணிப்பெண் வேறு காலி இருக்கைகள் ஏதேனும்இருக்கின்றதா என தேடி பார்த்தார் ஆனால் காலி இருக்கை எதுவும் கிடைக்கவில்லை. அதனால் விமான பணிப்பெண்  அந்த பெண்பயனியிடம், “அம்மா, இந்த சாதாரண வகுப்பு இருக்கையில் காலி இருக்கை எதுவும்இல்லை, ஆனால் இந்தவிமானத்தில் பயனம் மேற்கொள்ளும்  பயணிகளின் வசதியைக் கவனிப்பது எங்கள் பொறுப்பு. அதனால் இந்த பிரச்சினையை தீர்வுசெய்வதற்காக நான் விமான ஓட்டியிடம் சென்று அடுத்து என்னசெய்யவேண்டும் என கேட்டுவருகிறேன். அதுவரை நீங்கள்பொறுமையாக இருங்கள்.." எனக்கூறிவிட்டு விமானபணிப்பெண் விமான ஓட்டியை சந்திக்க கிளம்பிசென்றாள். சிறிது நேரம் கழித்து, அப்பணிப்பெண் மீண்டும் வந்து அந்த பெண்பயனியிடம் வந்து, “அம்மா! உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மிகவும் வருந்துகிறேன். இந்த முழு விமானத்திலும், ஒரு இருக்கை மட்டுமே காலியாக உள்ளது, ஆனால் அது முதல் வகுப்பில் உள்ளது. நான் எங்கள் விமான குழுவின் தலைவரிடம் பேசினேன், எங்கள் நிறுவனத்தின் வரலாற்றில் முதல்முறையாக , சாதாரண வகுப்பு  இருக்கையில் பயனம் செய்திடும் ஒருவரை முதல் வகுப்பில் பயணிக்க அனுமதிக்கலாம் எனும் ஒரு அசாதாரண முடிவை எடுத்தோம்." என கூறியதும் அந்த அழகான பெண் மிகவும் மகிழ்ச்சியுடன் “மிக்க மகிழ்ச்சி இப்போதே நான் அந்த இருக்கைக்கு செல்கின்றேன்" என தனது எதிர்வினையை வெளிப்படுத்தி சொல்ல முயற்சிக்குமுன்.அந்த விமானபணிப்பெண் “மன்னிக்கவும் அம்மா சிறிது பொறுங்கள் நான்  முழுவதையும் கூறி முடிக்கவில்லை" எனக் கூறிக்கொண்டே இரண்டு கைகளையும் இழந்த ஊனமுற்ற நபரை நோக்கி  அவரிடம் பணிவுடன், “ஐயா, உங்களால் முதல் வகுப்பில் பயனம் செய்ய முடியுமா..? ஏனென்றால், ஒரு முரட்டுத்தனமான பயணியுடன் பயணம் செய்து நீங்கள் தொந்தரவு அடைவதை நாங்கள் விரும்பவில்லை". என கேட்டுக்கொண்டார் இந்தசெய்தியைக் கேட்ட மற்ற பயணிகள் அனைவரும் கைதட்டி இந்த முடிவை வரவேற்றனர். இப்போது அந்த அழகிய பெண் தன்னுடைய தலைகுனிந்து கொண்டாள்  அவமானத்தால் தன்னுடைய தலையை உயர்த்த முடியவில்லை. அப்போது ஊனமுற்றவர் எழுந்து, “நான் ஒரு முன்னாள் இராணுவ வீரன், இராணுவ நடவடிக்கையின் போது வெடிகுண்டு வெடித்ததில் எனது இரு கைகளையும் இழந்தேன். முதலில், இந்தப் பெண்ணின் சொற்களைக் கேட்டபோது, நான் மனம் உடைந்து போனேன், அப்போது  — இப்படிப்பட்டவர்களின் பாதுகாப்பிற்காக நான் என் உயிரைப் பணயம் வைத்தேன், என் கைகளை இழந்தேன்..!! என மிகவருத்தப்ட்டேன் ஆனால், இந்த விமான ஊழியர்களின் முடிவை கோட்டபோது, என்னுடையநாட்டிற்கும் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காகவும் நான் என் கைகளை இழந்தது சரிதான் என்று என்னை நினைத்து பெருமைப்படுகிறேன்".. என்று கூறிவிட்டு, முதல் வகுப்பில் பயனம் செய்திடச் சென்றார், அந்த அழகான பெண் மிகவும் அவமானத்தில் தலைகுனிந்தபடி தனது இருக்கையில்  அமர்ந்தாள்.

திங்கள், 21 நவம்பர், 2022

வங்கி மேலாளருடன் புத்திசாலி மூதாட்டியின் பந்தயம்!

 

ஒருமுறை ஒரு வயதான பெண்மணி நகரத்தின் மிகப்பெரிய வங்கிக்கு வந்து, தான் வங்கியில் கொஞ்சம் பணம் வைப்பீடு செய்ய விரும்புவதாகக் கூறினார். அவ்வங்கியின் ஊழியர்கள் எவ்வளவு தொகை என்று கேட்டபோது, வயதான பெண்மணி சுமார் 10 இலட்சம் ரூபாயைவைப்பீடு செய்ய விரும்புவதாக பதிலளித்தார், ஆனால் தனது பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன் வங்கி மேலாளரைச் சந்திக்க விரும்புவதாக கூறினார். உடன் அந்த வங்கியின் மேலாளர் அந்த வயதான பெண்மணியின் அருகில் வந்து அவரை தன்னுடைய அறைக்கு அழைத்து சென்று உட்காரவைத்து அவது சந்தேகத்தினை தீர்வு செய்ய தான் தயாராகஇருப்பதாக கூறினார். பிறகு பேசிக் கொண்டிருக்கும் போது. "ரூபாய்10 இலட்சம் என்பது மிகப்பெரிய தொகை ஆயிற்றே . நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என வங்கி மேலாளர் வினவினார் உடன் வயதான பெண்மணி , "தனிப்பட்ட வகையில் சிறப்பான தொழில் எதுவும் இல்லை, நான்ஒரு பந்தயம் கட்டினேன் அந்த பந்தயத்தில் வெற்றிபெற்றுவிட்டேன் அதற்கானத் வெற்றித்தொகைதான் இந்த பத்து இலட்ச ரூபாயகும்." என விளக்கமளித்தவுடன் .வியந்து போன வங்கி மேலாளர், "பந்தயம் கட்டி இவ்வளவு தொகை சம்பாதித்தீர்களா!! மிகவும் ஆச்சரியம" என வியந்து கூறினார். அதற்கு அந்த மூதாட்டி, "அதெல்லாம் பெரிய செயல் ன்றுமில்ல.. இப்போதக் கூட, ந்த வங்கியின் மேலாளரான ங்களின் தலையில் விக் வைத்திருக்கின்ீர்கள என்று நான் ஐந்து இலட்ச ரூபாய்க்கு பந்தயம் கட்டுவேன்" என்றாள். மேலாளர் சிரித்துக்கொண்டே, "இல்லை.அம்மா. நான் இன்னும் இளமையாக இருக்கிறேன், விக் எதுவம் அணியவில்லை." என பதில் கூறினார் தொடர்ந்து மேலாளர் மூதாட்டியிடம், "நேற்று வழக்குரைஞருடன் எதற்கு பந்தயம் கட்டினீர்கள்?" என வினவினார் அதற்கு அந்த மூதாட்டி, "ஒன்றுமில்லை. அவர் பந்தயத்தில் தோற்றார். நேற்று, நான் நாளை காலை 10 மணிக்கு நம்முடைய நகரத்தின் மிகப்பெரிய வங்கியின் மேலாளரின் தலைமுடியைப் பிடித்து இழுத்துவிடுவேன். என அவருடன் 5 லட்சம் ரூபாய் பந்தயம் கட்டினேன், அவ்வாறு இழுத்துவிட்டால் எனக்கு அந்த பந்தய தொகை 5 லட்சம் ரூபாய அவர் தந்துவிடவேண்டும் இல்லையெனில் நான் அவருக்கு 5 லட்சம் ரூபாய் தந்துவிடவேண்டும் என பந்தயம் கட்டினேன் எனஅந்த மூதாட்டி கூறினார் தொடர்ந்து அந்தமூதாட்டி, "வ்வாறு ஏன் பந்தயம் கட்டக்கூடாது? இப்போது கூட உங்களிடம் நான் ஒரு பந்தயம் கட்டுகின்றேன் உங்களுடைய தலைமுடி விக்தான் அதை நான் என்னுடைய கையால்பிடித்தி இழுப்பேன் கையோடு வந்துவிட்டால் அது விக்ஆகும் நான் ரூபாய்ஐந்து இலட்சம் கொடுத்துவிடுகின்றேன் கையோடு வராவிட்டால் நீஙகள் எனக்கு ரூபாய் ஐந்து இலட்சம் கொடுத்துவிடவேண்டும் " எனக்கூறினாள் .அந்த வயதான பெண்மணிக்கு பைத்தியம் பிடித்திருப்பதாகவும், நான் விக் அணிவதில்லை என்று தெரிந்ததால், அவள் தனக்கு ஐந்த லட்ச ரூபாய் தரவேண்டியிருக்கும் என மனதிற்குள் எண்ணிக்கொண்டுதான் பந்தயம் கட்டத் தயாராக இருப்பதாகவும் மேலாளர் உறுதி கூறினார். நான் விக் அணிவதில்லை என்று அந்த மூதாட்டியிடம் கூறியும், இன்னும் அவள் நம்பமால் பந்தயம் கட்ட விரும்புகிறாள், பிறகு ஏன் அவ்வாறான சூழ்நிலை நான் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது.. அது எளிதான பணமாக எனக்கு வந்து சேர்ந்துவிடுமே. ரூபாய்ஐந்து லட்சம் பந்தயத்திற்கு வங்கி மேலாளர் ஒப்புக்கொண்டார். வயதான பெண்மணி, "ரூபாய் ஐந்து லட்சம் என்பது பெரியத்தொகை என்பதால், நாளைக் காலை சரியாக 10 மணிக்கு என் வழக்குரைஞருடன் வருவேன், பந்தய முடிவு அவர் முன் முடிவு செய்யப்படும்" என்றாள். வங்கி மேலாளர், "நிச்சயம்" என்று பதிலளித்தார். வயதான பெண்மணி அந்த வங்கியின் மேலாளரின் அறையைவிட்ட வெளியேறினார். வங்கி மேலாளரால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. ஐந்த இலட்ச ரூபாயையும் அந்த மூதாட்டியையும் நினைத்துக் கொண்டே இருந்தார். அடுத்த நாள் காலை மிகச்சரியாக 10 மணிக்கு மூதாட்டி தன் வழக்கறிஞருடன் மேலாளரின் அறையை அடைந்து மேலாளரிடம், "நீங்கள் தயாரா?" என வினவினார் உடன் மேலாளர் , "கண்டிப்பாக.." என பதிலளித்தார் வயதான பெண்மணி, "ன்னுடைய வழக்கறிஞரும் இங்கு இருப்பதால், தொகை பெரியது. எனவே நீங்கள் விக் அணியவில்லை என்பதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன். உங்கள் தலை முடிகளை நானே இழுத்து பார்க்கிறேன்." எனக்கூறினார். உடன் அந்த வங்கி மேலாளர் ஒரு கணம் யோசித்துவிட்டு, “கண்டிப்பா.. ரூபாய்ஐந்தஇலட்சத்துக்கு அப்புறம்வேறு என்ன செய்வது ” என்று பதிலளித்தார். அந்த மூதாட்டி வங்கியின் மேலாளரின் அருகில் வந்து அவருடைய தலைமுடியைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தாள் பெண்மணி... அதே சமயம் மூதாட்டியுடன் வந்த வக்கீல் அறையின் சுவரில் தலையை இடித்துகொள்ள ஆரம்பித்தார். இதைப் பார்த்த வங்கியின் மேலாளர் மூதாட்டியிடம், “வழக்கறிஞருக்கு என்ன நடந்தது?” என்று கேட்டார். வயதான பெண்மணி , "ஒன்றுமில்லை, அவர் தனது பந்தயத்தில் தோல்வியடைந்தார், நேற்று நான் அவருடன் பந்தயம் கட்டினேன், இன்று காலை 10 மணிக்கு இந்த நகரத்தின் மிகப்பெரிய வங்கியின் மேலாளரின் முடியைப் பிடித்து இழுப்பேன் அவ்வாறு இழுத்துவிட்டால் எனக்கு 5 லட்சம் ரூபாய் தரவேண்டும் என பந்தயம் கட்டினேன் அதன்படி நான் செய்துவிட்டேன் அதனால் அவர் எனக்கு ரூபாய் ஐந்து இலட்சம் தரவேண்டும் அதேபோன்று நீங்களும் தோற்றுவிட்டீரகள் எனக்கு ரூபாய் ஐந்து இலட்சம் தரவேண்டும் ஆக மொத்தம் ரூபாய் பத்துஇலட்சம் தொகையை என்னுடைய பெயரில் உங்கள் வங்கியில் வைப்பீடாக ஆக்கிவிடுங்கள்", என்றார் அந்த மூதாட்டி .


ஞாயிறு, 13 நவம்பர், 2022

ஒரு பணக்காரர் வழங்கும் இலவச உணவு சேவை

 

வடஇந்தியாவில் பணக்காரர் ஒருவர் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கினார்.அவரிடத்தில் ஏழைகளுக்கு தொண்டு செய்யும் உணர்வு மிகவும் குறைவாக இருந்தது, ஆனாலும் தன்னை தாராள மனப்பான்மை கொண்டவர் எனவும் இரக்க குணம் கொண்டவர என்றும் சமூகம் பாராட்ட வேண்டும் என்பதற்காக அவர் ஏழைகளுக்கு உதவுவதற்கு முன்வந்தார். அவர்ணவு பொருட்களின் மொத்த வியாபாரம் செய்து வந்தார். தனால் தன்னுடைய வியாபார நடவடிக்கையின் போது மாதக் கடைசியில், விற்காமல் வீணாக போன தரமற்ற உணவுப்பொருட்களை, தரமம் செய்வது என்ற பெயரில், கோதுமையை கோதுமை மாவாக தயாரித்து சப்பாத்தி செய்ய, இலவச உணவு வழங்கிடும் இடத்திற்கு அனுப்பி விடுவார். அந்த பணக்காரர் வழங்கும் உணவு சேவையில் பெரும்பாலும் வீணாக போன தரமற்ற கோதுமையிலிருந்து தயார்செய்த மாவினால் செய்யப்பட்ட சப்பாத்திகள் பசியுடன் இருக்கின்ற ஏழைமக்களுக்குக் கிடைத்தன. இவ்வாறான சூழலில் பணக்காரருடைய மகனுக்கு திருமணம் நடந்தது.பணக்காரரின் புதிய மருமகள் பணக்காரரின் வீட்டிற்கு வந்து சேர்ந்தா். அவள் மிகவும் கண்ணியமாகவும், அக்கறையுடனும் அனைவரையும் அரவணைத்து செல்லும் குணத்துடனும் இருந்தாள் .பணக்காரரின் வீட்டிற்கு வந்தவுடன் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்குகின்ற இடத்திற்கு வீணாக போகும் தரமற்ற கோதுமை அனுப்பப்படுவதை பற்றி அறிந்ததும், ஏழைகளுககு தரமம் என்ற பெயரில் தரமற்ற கோதுமையைக் கொடுப்பது தவறு என்று அவள் மிகவும் வருந்தினாள். அதனால் ஏழைகளின் பசியை போக்குவதற்கு தரமான கோதுமை அனுப்புவதை உறுதிசெய்திட விரும்பினாள் .பணக்காரனின் வீட்டில் பல்வேறு பணிகளையும் செய்வதற்கு நிறைய வேலைக்காரர்கள் இருந்தார்கள், ஆனால் புதிய மருமகள் தங்களுடைய வீட்டில் உணவு தயாரிக்கும் பொறுப்பை தானே ஏற்க முடிவு செய்தார். அதனால் முதல் நாளே, ஏழைகளுக்கும் இலவச உணவு வழங்கும் இடத்தில் பயன்படுத்தப்பட்ட அதே கோதுமை மாவைப் பயன்படுத்தி சப்பாத்தி செய்தார் பணக்காரரின் மருமகள். காலை உணவினை சாப்பிட அந்த பணக்காரர் அமர்ந்ததும், அவது தட்டில் ஏழைகளுக்கு வழங்கும் தரமற்ற கோதுமை மாவினால் தயார செய்த அதேபோன்ற சப்பாத்தியை பரிமாறினாள். தரமற்ற கோதுமை மாவினால் தயார்செய்த சப்பாத்தியைப் உண்பதற்காக வாயில் வைத்து தின்றபோது நன்றாக இல்லாததை கண்டு அதனை கீழேதுப்பிவிட்டு , ‘நம்முடைய வீட்டில் சப்பாத்தி செய்ய நல்ல கோதுமை மாவுதானே இருக்கும்.. அப்புறம் எதுக்கு இப்படி தரமற்ற மாவில் சப்பாத்தி செய்தீர்கள. என வினவினார் அதற்கு மருமகள், “மாமா, இது நீங்கள் ஏழைகளுக்கு இலவச உணவுவழங்குவதற்காக அனுப்பு கின்ற கோதுமை மாவில் செய்தது .” எனக்கூறினார் உடன் பணக்காரர் குழப்பமடைந்து, “எனக்கு ஒன்றும் புரியவில்லையே..” என்றாள். அதற்கு மருமகள், “மாமா! முற்காலத்தில் நாம் என்ன செய்தோமோ, அதையே இப்போது அடைவோம் அல்லவா, அதேபோன்று நாம் இப்போது எதைச் செய்கிறோமோ, அதுவே நம்முடைய வருங்காலத்திலும் கிடைக்கும். அதனால் நம்முடைய இலவச உணவு வழங்கும் இடத்தில், இந்த தரமற்ற கோதுமை மாவில் செய்யப்பட்ட சப்பாத்தி ஏழைகளுக்கு வழங்கப்படுகிறது. நீங்கள் இவ்விடத்தை விட்டுச் செல்லும் போது இந்த மாவில் செய்த சப்பாத்தியை மட்டுமே உண்டு வாழ வேண்டும். அதனால்தான், இனிமேல் இதை நீங்கள உண்ணும் பழக்கம் ஏற்பட்டால், பிற்காலத்தில் துன்பம் குறையும் என்று நினைத்தேன்.“ என சமாதானம் கூறினாள். உடன்வடஇந்திய பணக்காரர் தன் தவறை உணர்ந்தார். மருமகளிடம் மன்னிப்பு கேட்டு தரமற்ற கோதுமை மாவை அன்றே தூக்கி எறிந்தார். அப்போதிருந்து, ஏழைக்கும் பசியுடன் வருகின்ற பொதுமக்களுக்கும் தரமுடைய புதிய கோதுமைமாவில் செய்யப்பட்ட சப்பாத்தியைப் பெறத் தொடங்கினர்.

கற்றல்: உதவி செய்யும்போது மக்கள் என்னைப் பாராட்ட வேண்டும், கைதட்ட வேண்டும் என்ற எண்ணம் வரக்கூடாது. மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையுடன்  செய்ய வேண்டும். ஒரு கையால் உதவிசெய்திடும்போது இன்னொரு கைக்குக்கூட தெரியாத அளவுக்கு ரகசியமாக இருக்க வேண்டும் எனக் கூறுவது உண்டு.


பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...