செவ்வாய், 9 ஜூன், 2020

FSSAI இன் கீழ் உணவகதொழிலை பதிவுசெய்தல்


FSSAI என்பது இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தை( Food Safety and Standards Authority of India) குறிக்கின்றது, இது இந்தியாவில் உணவு வணிகத்தை கண்காணிக்கவும் நிருவகிக்கவும் ஆன பொறுப்பினை வகிக்கும் ஒரு ஆணையமாகும். இந்தியாவில் அனைவராலும் நுகரப்படுகின்ற உணவினை கையாளுகின்ற உணவகமானது முக்கியமான வளர்ந்து வரும் தொழிலாகும், நம்மனைவரின் உடல் ஆரோக்கியமானது இந்த உணவினை பொறுத்தேஅமைகின்றது, அதனால்தான் இந்தியாவில் உணவகத் தொழிலை கட்டுபடுத்தி ஒழுங்குபடுத்துவதற்காக தற்போது FSSAI எனும் கட்டுப்பாட்டாளரை நிறுவுகை செய்யப்பட்டுள்ளது இந்தியாவில் உணவு வணிக இயக்குபவர்களை (FBO) பதிவுசெய்து உரிமம் வழங்குவதற்கான பொறுப்பினை இது வகிக்கின்றது மேலும் இந்தியாவில் உணவு வணிகத்தை நடத்துவதற்கான விதி முறைகளையும் ஒழுங்குமுறைகளையும் வரையறுக்கின்றது.அதன் முக்கியமான வசதி வாய்ப்புகளை பின்வருமாறு FSSAI இல் பதிவுசெய்திடுவது அனைத்து உணவு வணிக உரிமையாளர்களுக்கும் மிகவும் முக்கியமானதும் கட்டாயமானதுமான செயலாகும். உணவுப் பொருட்களின் உற்பத்தி, பதப்படுத்துதல், சேமிப்பு விநியோகம் விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு உணவு வணிக இயக்குபரும் கட்டாயமாக FSSAI பதிவு அல்லது உரிமத்தைப் பெற வேண்டும். இந்தபதிவானது 14 இலக்க பதிவு அல்லது உரிம எண் கொண்டதாகும், இது வணிகநிறுவனங்களால் தயாரிக்கப்படும் அனைத்து உணவுப் பொதிகளிலும் அச்சிடப்படுகிறது. FSSAI பதிவு அல்லது உரிமமானது பொதுவாக வணிகத்தின் அளவையும் வளாகஇடத்தையும் அடிப்படையாகக் கொண்டதாகும். FSSAI இல் பதிவானது : அ) மத்திய உரிமம் ஆ) மாநில உரிமம் இ) அடிப்படை பதிவு ஆகிய வகைகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் வருகின்றது. அ) FSSAI அடிப்படை பதிவினை அல்லது உரிமத்தினை பெறுவதற்கான படிமுறைகள் படிவம் A இன் கீழ் FSSAI இல் பதிவுசெய்திடுமாறு கோரி ஒரு விண்ணப்பத்தை உணவு மற்றும் பாதுகாப்புத் துறைக்கு சமர்ப்பிப்பதன் மூலம் FSSAI இல் பதிவு அல்லது உரிமம் பெறலாம். அவ்வாறு படிவம் A இன் கீழ் FSSAI இல் பதிவுசெய்வதற்காக சமர்ப்பிக்கபடும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படலாம் அல்லது விண்ணப்பத்த நாளிலிருந்து 7 நாட்களுக்குள் உணவு மற்றும் பாதுகாப்புத் துறையால் நிராகரிக்கப்படலாம், அவ்வாறு நிராகரிக்கபடும்போது அதற்கான காரணத்தினை விண்ணப்பதாரருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட வேண்டும். படிவம் A இன் கீழ் FSSAI இல் பதிவுசெய்திடுமாறு கோரி சமர்ப்பித்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப் பட்டால், விண்ணப்பதாரரின் புகைப்படத்துடன் உணவு மற்றும் பாதுகாப்புத் துறையால் அதற்கான பதிவு எண் ணுடன் பதிவுஅல்லது உரிமச் சான்றிதழ் வழங்கப்படும். உணவு வணிகம் நடைபெறும் இடத்தில் எந்தநேரத்திலும் பதிவுஅல்லது உரிமச் சான்றிதழை மிக முக்கியமாக கோரும்போது காண்பிப்பதற்கு ஏதுவாகFBO ஆனவர் அதனை தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த FSSAI இல் பதிவுஅல்லது உரிமம் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள்பின்வருமாறு அவ்வாறான படிவம் A இன் கீழான விண்ணப்பமானது எந்தவொரு பகுதியும் விடுபட்டுவிடாமல் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு கையொப்பமிடப்பட வேண்டும் FBO இனுடைய புகைப்படமும் அடையாள ஆதாரமும் அதில் இணைக்க்படவேஂண்டும் வணிகத்தை செயல்படுத்திடும் வளாகங்களை வைத்திருப்பதற்கான சான்று (எ.கா. வாடகை ஒப்பந்தம், உரிமையாளர் ஆவணங்கள் போன்றவை) நிறுவனத்தின் விதிகளுக்கான ஆவணங்கள் / கூட்டாண்மை நிறுவனத்தின் பத்திரம் / நிறுவனத்தின் பதிவு சான்றிதழ் போன்றவை. நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்ற அல்லது கையாளப்பட வேண்டிய உணவுப் பொருட்களின் பட்டியல் உணவு பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு திட்டம் ஆ) மாநில உரிமம் மற்றும் மத்திய உரிமத்தைப் பெறுவதற்கான படிமுறைகள் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பமானது எந்தவொரு பகுதியும் விடுபட்டுவிடாமல் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு கையொப்பமிடப்பட வேண்டும் ஒருவர் கையாளவிரும்பும் உணவுப் பொருட்கள் ஒன்றின் பெயரை குறிப்பிட்டும் அதற்கான அறிவிப்பு ம் இருக்கவேண்டும் . அந்த விண்ணப்பத்துடன் துறைசார் கட்டணம் செலுத்திடவேண்டும் அதன்பின்னர் உணவு ஆய்வாளர்களில் ஒருவர் உணவு வணிக இடம் அல்லது உற்பத்தி செயல்முறைக்கு ஆய்வு நோக்கத்திற்காக வருவார் FSSAI துறையானது இதற்கான ஆவணங்களையும் வணிக இடத்தினையும் பார்வையிட்டு அனைத்து விசாரணைகளையும் பரிசோதனைகளையும் செய்தவுடன், FSSAI உரிமம் வழங்கப்படும். அதனைதொடர்ந்து FSSAI இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட அல்லது உரிமம் பெற்ற எந்தவொரு நபரும் FSS சட்டம், 2006 இன் கீழ் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கடைபிடிக்க வேண்டும். உணவு பாதுகாப்பு அதிகாரி பொதுவாக உணவு வணிக இயக்குபவரின் வசதியை ஆய்வு செய்து ஒரு சரிபார்ப்பு பட்டியலைப் பயன்படுத்தி ஒழுங்குமுறைக்கு இணங்குவதற்கான அளவை அடையாளம் காட்டுகிறார்.

சனி, 6 ஜூன், 2020

தக்காளி விற்பணையாளர்


அமெரிக்க நாட்டில் பணிவாய்ப்பு எதுவும் இல்லாத இளைஞன் ஒருவன் மிகப் பெரிய நிறுவனத்தில் ‘அலுவலக உதவியாளர்’ பதவிக்கு விண்ணப்பித்தார். அந்நிறுவனத்தின் முதலாளி அந்த இளைஞரை நேர்காணல் செய்தார், அந்நேர்காணலின்போது முதலாளி அந்த இளைஞரிடம் தங்களுடைய அலுவலகத்தின் தரையை சுத்தம் செய்யுமாறு கோரினார் உடன் அந்த இளைஞரும் அந்நிறுவனத்தின் முதலாளியின் உத்திரவிற்கு இணங்க அந்த அலுவலகத்தின்தரையை பெருக்கி தண்ணீரால் கழுவி சுத்தமாக்கினார் . அதனை தொடர்ந்து"உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை மட்டும் கொடுத்துவிட்டு செல்லுங்கள் அலுவலக உதவியாளர்பணிக்கு உங்களை தேர்வுசெய்த விவரத்தினையும் பணியில் எந்த தேதிக்குள் பணியில் சேரவேண்டும் என்ற உத்திரவினையும் நான் உங்களுக்கு அனுப்புகிறேன்." என அந்த முதலாளி கூறினார் உடன் அந்தஇளைஞர், “ஐயா என்னிடம் கணினியும் இல்லை, தனியாக எனக்கு மின்னஞ்சல் முகவரியும் இல்லை” என்று பதில் கூறியதும் அந்த நிறுவனத்தின் முதலாளி "மன்னிக்கவும், மின்னஞ்சல் முகவரி இல்லையென்றால், உங்களுக்கு இந்நிறுவனத்தில் வேலை இல்லை" என்று கூறி அந்த இளைஞரை வெளியில்அனுப்பிவிட்டார். அதனால் அந்த இளைஞன் இந்த பணியும் கிடைக்கவில்லையே என மிகச்சோர்வுடன் நம்பிக்கை யெதுவுமின்றி அந்த அலுவலகத்தைவிட்டு வெளியேறினார். பணிவாய்ப்பு எதுவும் கிடைக்காத அந்த இளைஞர் வாழ்வதற்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார் , தற்போதைய நிலையில் அவருடைய சட்டைப் பையில் 10 அமெரிக்க டாலர் மட்டுமே உள்ளது. அந்த இளைஞர் அருகிலிருந்தஅந்த நகரத்தின் முதன்மைசந்தைக்கு செல்ல முடிவு செய்தார், அந்த சந்தையில் கையிலுள்ள பணத்திற்கு ஏற்ப 10 கிலோ எடைகொண்ட தக்காளி கூடை ஒன்றினை வாங்கினார், பின்னர் அந்த தக்காளி கூடையை எடுத்து கொண்டு ஒவ்வொரு வீடாக கொண்டுசென்று விற்றார். இரண்டு மணி நேரத்திற்குள், அந்த ஒருகூடை தக்காளியையும் விற்று தனது மூலதனத்தை இரட்டிப்பாக்கி தன்னுடைய வாழ்க்கையின்முதல் வெற்றியை பெற்றார். அவர் மீண்டும் தன்னுடைய கையிலிருந்த பணத்தினைகொண்டு தக்காளிகூடைகளை வாங்கி முந்தையமாதிரி ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்ற விற்றார் இவ்வாறு ஒரேநாளில் மூன்று முறை இவ்வாறான வியாபார நடவடிக்கையை மீண்டும் மீண்டும் செய்து 60 அமெரிக்க டாலர்களுடன் அன்று மாலை அந்த இளைஞர் தன்னுடைய வீடு திரும்பினார். இந்த வழியில் பயனித்தால்தான் உயிர்வாழ முடியும் என்பதை உணர்ந்த அந்தஇளைஞர்,இதே வியாபாரி பணியை செய்வதற்காக தினமும் அதிகாலையில் செல்ல ஆரம்பித்தார், வியாபார பணிமுடிந்த ஒவ்வொரு நாளும் தாமதமாக வீடு திரும்பினார். இதனால், அவருடைய முதலீடு தினமும் இரட்டிப்பாக அல்லது மூன்று மடங்காக அதிகரித்தது. சிறிது காலத்திற்கு பிறகு தலையில் பொருட்களை சுமந்து சென்று விற்பணை செய்வதற்கு பதிலாக , அந்த இளைஞர் ஒரு இருசக்கர வண்டியொன்று வாங்கி விற்பணையை தொடர்ந்தார், பின்னர் நான்கு சக்கர சுமையுந்து வண்டி வாங்கி பொருட்களை கொண்டு சென்று விற்பணை செய்துவந்தார்,அதன் பின்னர் தான் ஒருவன்மட்டும் அவ்வாறான விற்பணைசெய்துமுடிக்க முடியாது என தனக்கு கீழ் பல்வேறு இளைஞர்களை பணிநியமனம்செய்தும் ஏராளமான அளவில் நான்கு சக்கர வாகணங்களை வாங்கியும் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சென்று விற்பணை செய்துவரும் பணியை விரிவாக்கம் செய்து தனது வியாபாரத்தினை பெருக்கி கொண்டே வந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த இளைஞரின் நிறுவனம் மிகப்பெரிய உணவு பொருட்களில் சில்லறை விற்பனையாளர்களில் ஒன்றாக வளர்ந்து பீடுநடைபோட்டது. அவர் தனது குடும்பம் எதிர்காலத்தில் பாதுகாப்பாக இருப்பதற்காக தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு ஆயுள் காப்பீடு செய்ய முடிவு செய்தார். அதற்காக ஒரு காப்பீட்டு தரகரை அழைத்து ஒரு பாதுகாப்புத் திட்டத்தைத் துவங்குவது குறித்து விவாதித்தார் . அந்த உரையாடல் முடிவில் காப்பீட்டு, தரகர் அவரிடம் அவருடைய மின்னஞ்சல் முகவரியைக் கோரினார். "எனக்கு மின்னஞ்சல்முகவரி எதுவும் இல்லை." என்று அந்த இளைஞர் பதிலளித்தார்: அதனை தொடர்ந்து, “ஐயா உங்களிடம் மின்னஞ்சல் முகவரி இல்லாமல், இவ்வாறான பெரிய நிறுவனத்தினை எவ்வாறு வெற்றிகரமாக உருவாக்கமுடிந்தது. உங்களிடம் மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் நீங்கள் வாழ்க்கையில் எங்கோ உயரத்திற்கு சென்றிருக்கு முடியும் என்று கற்பணை செய்து பாருங்கள் ஐயா ” என காப்பீட்டு தரகர் ஆர்வத்துடன் பதிலளித்தார் அந்த இளைஞர் சிறிது நேரம் யோசித்து, “கற்பணையெல்லாம் வேண்டாம் நான் மின்னஞ்சல் முகவரிமட்டும் வைத்திருந்தால் ஒரு நிறுவனத்தில் சாதாரண அலுவலக உதவியாளர் பணியை தற்போது செய்து கொண்டிருப்பேன் அவ்வளவுதான் நீங்கள் போகலாம் !” என்று பதிலளித்தார். இன்று நீங்கள் செய்த முயற்சிக்கு வெற்றி எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை சோர்வடைய வேண்டாம். சிறந்த வாய்ப்புகள் எப்போதும் நமக்காக காத்திருக்கின்றன. அவைகளுள் ஒன்றினை நீங்கள் மிகச்சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை வாழ கற்றுகொள்க

வெள்ளி, 5 ஜூன், 2020

இந்தியாவில் Startupஎனும் திட்டத்தின்கீழ் நிறுவனங்கள் துவங்கப்படு வதற்கான தகுதியும் வரி விலக்குகளும்


இந்தியாவில் Startup எனும் செயல்திட்டத்தின் படி, ஒரு Startup நிறுவனத்தினை துவங்குவதற்கான தகுதி பெறுவதற்கு பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்திட வேண்டும்: 1.இந்தியாவில்உயிரி தொழில்நுட்ப துவக்க நிறுவனங்கள் எனில் துவங்கப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்குள் இருக்கவேண்டும். மற்றவையெனில் துவங்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 7 வருடங்களுக்குள் இருக்கவேண்டும், 2.முந்தைய நிதி ஆண்டுகளில் வருடாந்திர வருவாய் ரூ .25 கோடிக்கு மிகாமல் இருக்கவேண்டும். 3.Startup எனும் செயல்திட்டத்தின் படிதுவங்கிடும் நிறுவனமானது தொழில்நுட்பம் அல்லது அறிவுசார் சொத்துக்களால் இயக்கப்படும் புதிய தயாரிப்புகள், செயல்முறைகள் அல்லது சேவைகளில் புதுமை, மேம்பாடு, வணிகமயமாக்கல் ஆகியவற்றை அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாக இருக்கவேண்டும் 4.இந்நிறுவனம் ஏற்கனவே இருக்கும் ஒரு வணிகநிறுவனத்தை பிரிப்பதன் மூலமோ அல்லது புனரமைப்பதன் மூலமோ உருவாக்கப்பட்டதாக இருக்கக் கூடாது. 5.இது போன்ற நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட இடை-நிலை அமைச்சக வாரியத்திடமிருந்து சான்றிதழைப் பெற வேண்டும். 6.Startup எனும் செயல்திட்டத்தின் படிதுவங்கிடும் நிறுவனமானது ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் அல்லது பதிவு செய்யப்பட்ட கூட்டாண்மை நிறுவனம் அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுவனம் ஆகியவற்றின் ஏதேனும் ஒன்றின்கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலே கூறிய நிபந்தனைகளின்படி தகுதி வாய்ந்தStartup எனும் செயல்திட்டத்தின் படிதுவங்கிடும் நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்படும் வரி விலக்குகள் பின்வருமாறு 1.ஏப்ரல் 1, 2016 க்குப் பிறகு Startupநிறுவனமாக பதிவு செய்யப் பட்ட அல்லது துவங்கப்பட்ட Startupநிறுவனமானது, எந்தவொரு நிதியாண்டிலும் வருடாந்திர வருவாய் ரூ .25 கோடியைத் தாண்டாது இருந்தால், தொகுப்பான ஏழு வருடங்களில் மூன்று வருட காலத்திற்கு 100% வரிச்சலுகை பெற தகுதியுடையதாகும். 2. நீண்ட கால மூலதன இலாபத்தொகை அல்லது அதன் ஒரு பகுதியை மத்திய அரசு அறிவித்த நிதியில் முதலீடு செய்தால், தகுதியான Startup நிறுவனங்களுக்கு வருமான வரிச் சட்டத்தில் 54 EEகீழ் நீண்ட கால மூலதன இலாபத்திற்கான வரிவிலக்கு அனுமதிக்கப்படுகின்றது. அதாவது சொத்து பரிமாற்ற நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்குள். நீண்ட கால முதலீடாக 3 வருட காலத்திற்கு குறிப்பிட்ட நிதியில் அதிகபட்ச தொகை ரூ .50 லட்சம் வரை முதலீடு செய்யப்படவேண்டும். இவ்வாறான முதலீட்டு தொகையை 3 ஆண்டுகளுக்கு முன்பு திரும்பப் பெறப்பட்டால், தொகை திரும்பப் பெறப்பட்ட ஆண்டிலிருந்து வரிவிலக்கு ரத்து செய்யப்படும். 3.தகுதிவாய்ந்த Startupநிறுவனத்தினுடைய நியாயமான சந்தை மதிப்புக்கு மேல் உள்ள முதலீடுகளுக்கு அரசாங்கம் வரிவிலக்கு அளிக்கின்றது. இத்தகைய முதலீடுகளில் இந்திய குடியுரிமை ஏஞ்சல் முதலீட்டாளர்கள், குடும்பம் அல்லது துணிகர மூலதன நிதிகளாக பதிவு செய்யப்படாதசெய்த முதலீடுகள் ஆகியவை அடங்கும். மேலும், நியாயமான சந்தை மதிப்புக்கு மேல் இன்குபேட்டர்கள் செய்யும் முதலீடுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. 4மீச்சிறு, சிறு , நடுத்தர நிறுவனச் சட்டம், 2006 இன் கீழ் வரையறுக்கப் பட்டுள்ளபடி சிறு அல்லது நடுத்தர நிறுவனங்களில் நீண்ட கால மூலதன இலாபங்கள் முதலீடு செய்யப்பட்டால், அதாவது 54GB இன்கீழ் குடியிருப்பு சொத்து ஒன்றின் விற்பனை மீதான நீண்டகால மூலதன இலாபங்களுக்கான தொகையை தகுதியான start-ups நிறுவனங்களின் 50% அல்லது அதற்கு மேற்பட்ட பங்குகள்வரை முதலீடு செய்தால் வரிவிலக்கு அனுமதிக்கப்படுகின்றது., , , அத்தகைய பங்குகள் 5ஆண்டிற்குள் விற்கப்படவோ அல்லது மாற்றவோ கூடாது 5.ஆண்டின் கடைசி நாளில் வாக்களிக்கும் சக்தியைக் கொண்ட பங்குதாரரின் உரிமையில் மாற்றம் ஏற்பட்டால் அதன்வாயிலாக ஏற்படும் இழப்புகளையும் மூலதன இலாபங்களையும் முன்னோக்கி கொண்டு சென்று சரிசெய்து(Set Off Carry forworded) கொள்ள அனுமதிக்கப்படுகின்றது. இதற்காக தகுதிவாய்ந்த start-ups நிறுவனங்களில் 51 சதவீத வாக்களிக்கும் உரிமைகள் மாறாமல் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

வியாழன், 4 ஜூன், 2020

புதிய 2020 ஆண்டில்சசேவ (GST) கீழ் செய்யப்பட்ட முக்கிய மாறுதல்கள்


மத்திய மறைமுகவரி மற்றும் சுங்கவரி வாரியத்தின் சுற்றறிக்கை எண் 75/2019 நாள்26.12.2019 இன் படி 1.01.01.2020 முதல் நமக்கு பொருளை அனுப்பியவர் அல்லது சேவையை வழங்கியோர் GSTR-1 எனும் படிவத்தினை சமர்ப்பிக்க தவறியிருந்தால் பொருள் அல்லது சேவை வழங்கிய பட்டியல் அல்லது வரவுகுறிப்பு தொகையில் 10 சதவிகிதம் மட்டும் ITC எனும் உள்ளீட்டு வரிவரவை எடுத்து கொள்ள முடியும் இதற்குமுன்பு20 சதவிகிதம் மட்டும் ITC அனுமதிக்கப்பட்டது 2. பொருளை அல்லது சேவையை பெறாமலேயே அல்லது இல்லாத கற்பனையான நபரிடமிருந்து பொருளை அல்லது சேவையை பெற்றதாக fraudulently அடிப்படையில் உருவாக்கப்பட்ட பட்டியலின் தொகையானது மின்னனு வரவு பேரேட்டில் வரவு வைக்கப்பட்டதொகையை திரும்ப பெறுவதற்கு அல்லது வரிசெலுத்துவதில் சரிசெய்வதை தொடர்புடைய பகுதி சசேவ(GST) ஆணையருக்கு தடுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது 3.தொடர்ந்துஇரண்டு மாதங்களில் காலாண்டுகளில் GSTR-1 படிவத்தை சமர்ப்பிக்க தவறியிருந்தால் அந்நிறுவனத்தினரால் தங்களுடைய நிறுவனத்திற்காக E-way Bill எனும் மின்னனுவழிபட்டியலை இணையத்தின் வாயிலாக 11, 1. 2020முதல் உருவாக்கமுடியாது 4.01.04.2020 முதல் ஆண்டு விற்பணை வருமானம் 100 கோடிக்குமேல் உள்ள நிறுவனங்கள் B2B அடிப்படையில் விற்பனைசெய்யப்படும் பொருளிற்கு கண்டிப்பாக E-way Bill எனும் மின்னனுவழிபட்டியலை இணையத்தின் வாயிலாக உருவாக்கி கொண்டுசெல்லும் பொருளுடன் கொண்டு செல்ல வேண்டும் 5. மத்திய மறைமுகவரி மற்றும் சுங்கவரி வாரியத்தின் சுற்றறிக்கை எண் 72/2019 நாள்13.12.2019 இன் படி ஆண்டு விற்பணை வருமானம் 100 கோடிக்குமேல் உள்ள நிறுவனங்கள் B2C அடிப்படையில் விற்பனைசெய்யப்படும் பொருளிற்காக உருவாக்கப்படும் விற்பணை பட்டியலில் QR Code என சுருக்கமாக அழைக்கப்பெறும் விரைவு பதில் குறியீட்டுடன் (Quick Response Code) மட்டுமே 01.04.2020 முதல் விற்பணை பட்டியலில் இடம்பெறவேண்டும் 6.01.04.2020 முதல் தானியங்கியாக சசேவ(GST) நடைமுறையில் அறிக்கைகள் உருவாகிடவும்சசேவ(GST) நடைமுறையை எளிமைபடுத்திடவும் மத்திய மறைமுகவரி மற்றும் சுங்கவரி வாரியமானது GST FORM ANX- 1, GST FORM ANX- 2 ஆகிய இருபடிவங்களை அறிமுகப்படுத்தியுள்ளது 7. நிறுவனங்கள் சசேவ (GST) துறையில் தங்களுடைய குறைகளை களைய கோரும் அனைத்து கடித போக்குவரத்துகளிலும் இணையத்தின் வாயிலாக உருவாக்கப்படும் DIN என சுருக்கமாக அழைக்கப்படும்ஆவணசுட்டிஎண் (Document Identification Number) மட்டுமேகுறிப்பிட வேண்டும் 8 மேலும் TRAN-1 & TRAN-2ஆகிய படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 31.03 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

புதன், 3 ஜூன், 2020

மீச்சிறு சிறு நடுத்தர நிறுவனங்களை(MSME)பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய அடிப்படை செய்திகள்


இந்தியாவில் பொதுவாக மிககுறைந்த முதலீட்டில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களை மீச்சிறு, சிறு ,நடுத்தர நிறுவனங்கள் (Micro small and medium Enterprise) என்றும் இவைகளை சுருக்கமாகMSME எனவும் அழைக்கப்பெறும். இவைகளை கட்டுபடுத்திடுவதற்காக கொண்டுவரப்பெற்ற மீச்சிறு சிறு நடுத்தர நிறுவனங்களின் மேம்படுத்துதல் (MSMED) சட்டம் 2006 ஆனது இவைகளை உற்பத்தி நிறுவனங்கள் என்றும் சேவைநிறுவனங்கள்என்றும் இரண்டாக வகைப்படுத்திடு கின்றது அதாவது தொழிலகங்கள் மேம்படுத்துதல் ஒழுங்குபடுத்துதல் சட்டம் 1951 இன் முதல் அட்டவணையில் குறிப்பிடப்பட்ட எந்தவொரு பொருளையும் உற்பத்தி செய்திடும் அல்லது உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அல்லது ஒரு தனித்துவமான பெயரைக் கொண்ட இறுதி தயாரிப்பு பொருளாக மதிப்பு கூட்டும் செயல்பாட்டில் ஈடுபடும் எந்தவொரு தொழிற்துறையும் உற்பத்தி நிறுவனம் என வரையறுக்கப்படுகின்றது. சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் சேவைத்துறை நிறுவனங்கள் என வரையறுக்கப்படுகின்றது மேலும் மேலேகூறியவாறு உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுடைய முதலீடுகளின் இயந்திர தளவாடங்களின்மொத்தமதிப்பு ரூ.இருத்தைந்து இலட்சத்திற்கு மிகாமல்இருப்பவை மீச்சிறு உற்பத்தி நிறுவனங்கள்என்றும் இயந்திர தளவாடங்களின்மொத்தமதிப்பு ரூ.இருத்தைந்து இலட்சத்திற்கு மேல் ஆனால் ரூ.ஐந்து கோடிக்குமிகாமல் இருப்பவை சிறு உற்பத்தி நிறுவனங்கள் என்றும் இயந்திர தளவாடங்களின்மொத்தமதிப்பு ரூ.ரூ.ஐந்து கோடிக்குமேல் ஆனால் ரூ. பத்துகோடி க்குமிகாமல் இருப்பவை நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள்என்றும் இந்த சட்டம் வரையறுக்கின்றது அவ்வாறே சேவைத்துறையில் ஈடுபடும் நிறுவனங்கள் பயன்படுத்திடும் கருவிகளின் முதலீடுகள் ரூ. பத்துஇலட்சத்திற்குமிகாமல் இருப்பவை மீச்சிறு சேவைத்துறை நிறுவனங்கள் என்றும் பயன்படுத்திடும் கருவிகளின் முதலீடுகள் ரூ. பத்துஇலட்சத்திற்குமேல் ஆனால் ரூ.இரண்டுகோடிக்கு மிகாமல் இருப்பவை சிறு சேவைத்துறை நிறுவனங்கள்என்றும் பயன்படுத்திடும் கருவிகளின் முதலீடுகள் ரூ.இரண்டுகோடிக்கு மேல் ஆனால் ரூ. ஐந்து கோடிக்கு மிகாமல் இருப்பவை நடுத்தர சேவைத்துறை நிறுவனங்கள்என்றும் இந்த சட்டம் வரையறுக்கின்றது மேற்கன்டவாறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள எந்தவொரு மீச்சிறு, சிறு ,நடுத்தர நிறுவனமும் தொழிலகங்கள் மேம்படுத்துதல் ஒழுங்குபடுத்துதல் சட்டம் 1951 இன்படி பதிவுசெய்து கொள்ளவேண்டும் இந்திய அரசால் அறிமுகபடுத்தப்பட்ட கடன் உத்தரவாத அறக்கட்டளை நிதி திட்டம் (The Credit Guarantee Trust Fund Scheme),இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (Small Industries Development Bank Of India) ,மீச்சிறு சிறுநடுத்தர நிறுவனங்களின் துறை அமைச்சகத்தால் அறிமுகபடுத்தப்பட்டு நடைமுறையில் உல்ள கடன்உத்திரவாத திட்டம் ஆகியவற்றின் கீழ் இவ்வாறு பதிவுசெய்திடும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான கடன்வசதிகளை பெறமுடியும் மேலும் MSME ஆக பதிவுபெற்ற இந்நிறுவனங்கள் ISO சான்றிதழ் பெறுவதற்காக செலவிட்ட தொகைகைய இந்திய அரசிடமிருந்து திரும்ப பெற்றுகொள்ளமுடியும் அதுமட்டுமல்லாது MSME ஆக பதிவுபெற்ற இந்நிறுவனங்கள் தாங்கள் பயன்படுத்திடும் மின்சாரத்திற்கு கட்டண சலுகைகளை பெறமுடியும் அதனோடு இவ்வாறான நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை சேவைகளை பெறும் நிறுவனங்கள் அதற்கான தொகையை 15 நாட்களுக்குள் வழங்கவேண்டும் தவறினால் அதிகபட்சம் 45 நாட்களுக்குமேல் தவறிடும்போது ஏற்றுகொண்ட மாதாந்திர வட்டிக்குமேல் இந்திய ரிசர்வங்கி அறிவித்த வட்டிசதவிகிதத்திற்குமேல் மூன்றுமடங்கு கூட்டுவட்டியுடன் வழங்க தவறிய தொகையை வசூலிக்கமுடியும் மேலும் இந்திய அரசின் தொழிலதுறைஊக்கவிப்புமானியதொகையை பெறமுடியும் அதுமட்டுமல்லாது இந்நிறுவனங்கள் தங்களுடைய நடைமுறைமூலதனத்திற்காக வாங்கும் கடன் தொகையில் கூடுதலாக 1%சதவிகித தொகை கடனாக பெறமுடியும் அதைவிட தங்களுடைய நிறுவனத்தின் காப்புரிமையை பதிவுசெய்வதற்கான கட்டணத்தில் 50% காப்புரிமை பதிவுக்கான கட்டணத்தொகை மானியத்தொகையாக கிடைக்கும் இறுதியாக வருமான வரிசெலுத்துவதிலிருந்து குறிப்பிட்ட ஆண்டுவரை விலக்கு கிடைக்கின்றது

செவ்வாய், 2 ஜூன், 2020

மின்னனு வழிபட்டியல் உருவாக்கிடும்போது ஏற்படும் பிரச்சினைகளை ஒரேயொரு சொடுக்குதலில் தீர்வுபெறமுடியும்


சசேவஇல்(GST) புதியதாக அறிமுகபடுத்தப்பட்ட மின்னனுவழிபட்டியலை(E-Way Bill) ரூ. Rs. 50,000/-.இற்குமேல் பொருட்களை கொண்டுசெல்லும்போது அவ்வாறு பொருட்களை கொண்டுசெல்வோர் கண்டிப்பாக அதற்கான மின்னனு வழி பட்டியலையும் உடன் கொண்டு செல்ல வேண்டும். 2018-19 நிதியாண்டில் ரூ 55.78 கோடி மதிப்பிற்கான மின்னனுவழிபட்டியல்கள் இல்லாமல் அல்லது தவறாக உருவாக்கப்பட்டு கொண்டு செல்லபட்டன ஏறத்தாழ5% வாகணங்கள் அதாவது 2.75 கோடி வாகணங்கள் சரியான மின்னனு வழிபட்டியலை உடன் கொண்டுவரததால் அல்லது தப்பும் தவறுமான மின்னனு வழிபட்டியலை உடன் கொண்டு சென்றதால் தண்டிக்கப்பட்டன இவ்வாறான நிகழ்விற்கு குறைந்தபட்சம் ரூ. 10,000 அபராத தொகையும் உடன் கொண்டுசெல்லும் அந்த குறிப்பிட்ட பொருளும் வாகணமும் அந்த தொகைசெலுத்தும்வரை நிறுத்தம்செய்து வைத்திடுகின்ற நடைமுறை தற்போது உள்ளது இந்த மின்னனு வழிபட்டியலை உருவாக்கிடும் போது இந்த பட்டியலிற்கான வரிசை எண் , இந்த பொருளை கொண்டுசெல்கின்ற வாகண அடையாள எண் , பொருளின் பெயர் ,விலை போன்ற பல்வேறு விவரங்களை உள்ளீடு செய்து உருவாக்கிடும்போது உள்ளிடுகின்ற விவரங்களில் மனித தவறுகள் ஏற்படஏதுவாகின்றன மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பல்வேறு காரணங்களினால் அந்த பொருளை கொண்டுசெல்ல தவறிவிடுகின்றன அதனால் அவ்வாறு கொண்டு செல்லபபடும் பொருட்களுக்கான மின்னனு வழிபட்டியலானவை காலக்கெடு தவறிய மின்னனு வழிபட்டியலாக அமைந்துவிடுகின்றன மேலும் இவ்வாறான மின்னனு வழிபட்டியலிற்கான JSON கோப்புகளை கையாளதவறிடுகின்றன அதுமட்டுமல்லாது இந்த மின்னனு வழிபட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் GSTR 1 அறிக்கையுடன் ஒப்பிட தவறிடுகின்றன என்பன போன்ற பல்வேறு காரணங்கள் இந்த மின்னனு வழிபட்டியலில் உருவாக்கிடும்போது சந்திக்க வேண்டியுள்ளது அதன்வாயிலாக நம்முடைய வியாபார நடவடிக்கைகள் பாதிக்கின்றன இவைகளை தீர்வு செய்வதற்காக குறைந்த செலவில் GSTHero எனும் புதிய பயன்பாடானது கைகொடுக்க தயாராக இருக்கின்றது இது தற்போது நிறுவனங்கள் மின்னனு வழிபட்டியலை உருவாக்கிடுவதற்காக பயன்படுத்திவரும் ERP ஐ விட்டு வெளியேறாமல் அல்லது மாற்றிடாமல் அதனோடு ஒருங்கிணைந்து வழக்கம் போன்று மின்னனுவழிபட்டியலை உருவாக்கிட உதவுகின்றது. மிகமுக்கியமாக இது நம்முடைய ERP ஐ உடன் ஒருங்கிணைந்து செயல்படதுவங்கியவுடன் E-way bill உருவாக்கிடும் இணையதளத்துடன் தானாகவே ஒருங்கிணைந்து செயல்பட தயாராகிவிடுகின்றதுமேலும் மின்னனு வழிபட்டியல் தயார் செய்வதற்காகவென தனியாக நம்முடைய ERP ஆல் தயார்செய்த விற்பணைபட்டியலின் தகவல்களிலிருந்து நகலெடுத்து ஒட்டிடவேண்டிய தேவையை இது அறவே நீக்கி தானாகவே அந்த தகவலை மின்வழிபட்டியலை தயார்செய்திட எடுத்து கொள்கின்றது ஒவ்வொருமுறையும் நாம் E-way bill உருவாக்கிடும் இணைய தளத்திற்கு சென்று நமக்கான மின்னனுவழிபட்டியலை தயார்செய்திடுவதற்கு பதிலாக இந்த GSTHeroஆனது தானாகவே நம்முடைய விற்பணைபட்டியல் தயார்செய்த ERP ஐயும் E-way bill உருவாக்கிடும் இணையதளத்தையும் ஒருங்கிணைத்து புதிய மின்வழிபட்டியலை உருவாக்கிடு கின்றது தொடர்ச்சியாக அடுத்தடுத்த மின்வழிபட்டியல் எண்ணை நிகழ்நிலைபடுத்தி அடுத்த பட்டியலை தாயர்செய்திட தயாராக இருக்கின்றது அதைவிட ஒன்றுக்குமேற்பட்ட மின்வழிபட்டியலை மொத்தமாக(Bulk) உருவாக்கிடவும் உதவுகின்றது குறிப்பிட்ட மின்வழிபட்டியல் குறிப்பிட்டகால முடிவடைகின்றது அதனை புதுப்பித்தல் செய்திடவா என நினைவூட்டல் செயலையும்செய்திடுகின்றது மின்வழிபட்டியல் உருவாக்கிடும் நிகழ்வு நேரத்தில் உருவாகிடும் ஏதேனும் பிழையை அவ்வப்போது சரிசெய்திடுகின்றது போலியான விற்பணை பட்டியல் எண்ணை கொண்டு மின்வழிபட்டிலை உருவாக்குவிடுவதை சுட்டிகாட்டி அதனை தவிரத்திடுகின்றது Json கோப்புகளை கையாளுவதற்காகவென தனியாக நாம்எதுவும் நடவடிக்கை எடுத்திடாமலேயே இது தானாகவே அந்த பணியையும் செயல்படுத்திடுகின்றது மேலும் விற்பணைபட்டியல் மின்வழிபட்டியல் ஆகியவற்றை GSTR 1. அறிக்கையுடன் ஒப்பிட்டு சரிபார்த்திடுகின்றது மேலேகூறிய வசதி வாய்ப்புகளினால் மின்வழிபட்டியல் கையாளும் போது ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் இந்த GSTHero ஐ கொண்டு தீர்வுசெய்து கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது

திங்கள், 1 ஜூன், 2020

இந்தியாவில் ஒவ்வொரு வியாபார நிறுவனமும் தெரிந்து கொள்ளவேண்டிய அடிப்படையான தகவல்கள்


துவக்கநிறுவனமாக (Startup Enterprises)வியாபார உலகில் குதிக்க தயாராக இருப்பவரா அல்லது ஏற்கனவே ஒரு வியாபார நிறுவனத்தினை வெற்றிகரமாக நடத்துபவரா ஆம் எனில் பின்வருமாறான சட்டப்படியான அனைத்தும் பதிவுசெய்துவிட்டதை உறுதி செய்துகொள்க. இந்தியாவில் உள்ள அவ்வாறான ஒவ்வொரு வியாபார நிறுவனமும் தெரிந்து கொள்ளவேண்டிய அடிப்படையான சட்டப்படியாக பதிவுசெய்தல்விவரங்கள் பின்வருமாறு 1. வியாபார நடவடிக்கைகளை துவங்க விரும்பும் எந்தவொரு நிறுவனமும் வருமானவரித்துரையில் பதிவுசெய்து PAN எனும் வருமானவரிபதிவுஎண் பெறவேண்டும் அவ்வாறே தாம் வழங்கிடும் தொகை குறிப்பிட்ட வரம்பிற்குமேல் செல்லும்போது அதற்கான வருமான வரியை பிடித்தம்செய்து வழங்குவதற்காக வருமானவரித்துரையில் பதிவுசெய்துTAN எனும் மற்றொரு பதிவுஎண் பெறவேண்டும் அதைவிட தற்போது பரிமாற்றதொகையானது ரூ. 50,000/-இக்குமேல் எனில் கண்டிப்பாக ஆதார் எண் கண்டிப்பாக இருக்கவேண்டும் 2. வியாபாரசெய்திடும் நிறுவனங்கள் வியாபார நடவடிக்கைகளுக்காக பத்து பணியாளர்களைவிட கூடுதலாக பயன்படுத்தி கொள்வதாக இருந்தால் வர்த்தக உரிமமும்(Trade License ) கடைகளும் நிறுவனங்களுக்கும் ஆன உரிமமும்(Shops and Establishment License) தொழிலாளர் ஆணையரிடம் பதிவுசெய்து பெறவேண்டும் 3.விற்பணைவருமானம் ரூ. 20 இலட்சத்திற்கு மேல் உயரும்போது கண்டிப்பாக புதிய சசேவவின்படி (GSTIN) பதிவுசெய்து அதற்கான பதிவெண் பெறவேண்டும் 4.நம்முடைய வியாபார நிறுவனம் துவக்கநிறுவனமாக வரையறுக்கப் பட்ட கூட்டாண்மை நிறுவனமா கூட்டாண்மை நிறுவனமா தனிநபர் நிறுமமா ,தனியார் நிறுமமா ,பொதுநிறுமமா என அதனதன் துறைஅமைச்சகத்தில் பதிவுசெய்து கொள்ளவேண்டும் 5. நாம் துவங்கவிருக்கும் வியாபார நிறுவனத்தில் 20 பணியாளர்களைவிட கூடுதலாக பயன்படுத்தி கொள்வதாக இருந்தால் மாதாந்திர சம்பளத்தொகை ரூ. 15000 மிகாமல் இருந்தாலும் பணியாளர்களின் பொது வருங்கால வைப்புநிதி (EPF) நிறுவனத்தில் பதிவுசெய்து கொள்ளவேண்டும் 6. நாம் துவங்கவிருக்கும் வியாபார நிறுவனத்தில் 20 பணியாளர்களைவிட கூடுதலாக பயன்படுத்தி கொள்வதாக இருந்தால் மாதாந்திர சம்பளத்தொகை ரூ 21,000 மிகாமல் இருந்தாலும் பணியாளர்களின் மாநில காப்பீடு (ESI) நிறுவனத்தில் பதிவுசெய்துகொள்ளவேண்டும் அல்லது அந்நிறுவனத்திலிருந்து விலக்கு சான்றிதழ் பெற்றிடவேண்டும் 7.இந்த வியாபார நிறுவனம்செயல்படபோகும் உள்ளூராட்சியில்( நகராட்சி , பேரூராட்சி) தொழிலக வரி இதர தண்ணீர்வரி போன்றவைகளுக்காக உள்ளூராட்சி அலுவலகத்தில் பதிவுசெய்திடவேண்டும் 8.நம்முடைய நிறுவனத்தில் ஒரு சில பணிகளை அதாவது 10 பணியாளர்களைவிட கூடுதலாக வெளியாட்களை ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்தி பயன்பெறுவிழைவோம் அதற்காக ஒப்பந்த பணியாளர்சட்டத்தின்கீழ் தொழிலாளர் ஆணையரிடம் பதிவுசெய்து கொள்ள வேண்டும் 9.நம்முடைய வியாபார நிறுவனம் சுற்றுசூழல் பாதிப்புஎதுவும் ஏற்படுத்தாதுஅல்லது குறிப்பிட்ட வரையறைக்குள் வியாபார நடவடிக்கைகள் அமையும் என சுற்றுசூழல் கட்டுபாட்டு குழுவில் பதிவுசெய்து நம்முடைய நிறுவனத்தை நிறுவுவதற்கும்Consent for Establish (CFE ) செயல்படுத்திடுவதற்கும்Consent to Operate (CTO) ஒப்புதல் சான்றிதழ் பெறவேண்டும் 10.நம்முடைய வியாபாரத்திற்கு என தனியாக பொருட்களை கொண்டுவரவும் பணியாளர்கள் பயன்படுத்திகொள்வதற்காகவும் நான்கு சக்கரவாகணங்களை கொள்முதல் செய்திடுவோம்அதனை நம்முடைய நிறுவனத்தின்பெயரில் பதிவுசெய்துஅது சாலையில் செல்வதற்கு பொருத்தமானதுஎன பதிவுசான்று பெறவேண்டும

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...