சனி, 6 ஜூன், 2020

தக்காளி விற்பணையாளர்


அமெரிக்க நாட்டில் பணிவாய்ப்பு எதுவும் இல்லாத இளைஞன் ஒருவன் மிகப் பெரிய நிறுவனத்தில் ‘அலுவலக உதவியாளர்’ பதவிக்கு விண்ணப்பித்தார். அந்நிறுவனத்தின் முதலாளி அந்த இளைஞரை நேர்காணல் செய்தார், அந்நேர்காணலின்போது முதலாளி அந்த இளைஞரிடம் தங்களுடைய அலுவலகத்தின் தரையை சுத்தம் செய்யுமாறு கோரினார் உடன் அந்த இளைஞரும் அந்நிறுவனத்தின் முதலாளியின் உத்திரவிற்கு இணங்க அந்த அலுவலகத்தின்தரையை பெருக்கி தண்ணீரால் கழுவி சுத்தமாக்கினார் . அதனை தொடர்ந்து"உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை மட்டும் கொடுத்துவிட்டு செல்லுங்கள் அலுவலக உதவியாளர்பணிக்கு உங்களை தேர்வுசெய்த விவரத்தினையும் பணியில் எந்த தேதிக்குள் பணியில் சேரவேண்டும் என்ற உத்திரவினையும் நான் உங்களுக்கு அனுப்புகிறேன்." என அந்த முதலாளி கூறினார் உடன் அந்தஇளைஞர், “ஐயா என்னிடம் கணினியும் இல்லை, தனியாக எனக்கு மின்னஞ்சல் முகவரியும் இல்லை” என்று பதில் கூறியதும் அந்த நிறுவனத்தின் முதலாளி "மன்னிக்கவும், மின்னஞ்சல் முகவரி இல்லையென்றால், உங்களுக்கு இந்நிறுவனத்தில் வேலை இல்லை" என்று கூறி அந்த இளைஞரை வெளியில்அனுப்பிவிட்டார். அதனால் அந்த இளைஞன் இந்த பணியும் கிடைக்கவில்லையே என மிகச்சோர்வுடன் நம்பிக்கை யெதுவுமின்றி அந்த அலுவலகத்தைவிட்டு வெளியேறினார். பணிவாய்ப்பு எதுவும் கிடைக்காத அந்த இளைஞர் வாழ்வதற்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார் , தற்போதைய நிலையில் அவருடைய சட்டைப் பையில் 10 அமெரிக்க டாலர் மட்டுமே உள்ளது. அந்த இளைஞர் அருகிலிருந்தஅந்த நகரத்தின் முதன்மைசந்தைக்கு செல்ல முடிவு செய்தார், அந்த சந்தையில் கையிலுள்ள பணத்திற்கு ஏற்ப 10 கிலோ எடைகொண்ட தக்காளி கூடை ஒன்றினை வாங்கினார், பின்னர் அந்த தக்காளி கூடையை எடுத்து கொண்டு ஒவ்வொரு வீடாக கொண்டுசென்று விற்றார். இரண்டு மணி நேரத்திற்குள், அந்த ஒருகூடை தக்காளியையும் விற்று தனது மூலதனத்தை இரட்டிப்பாக்கி தன்னுடைய வாழ்க்கையின்முதல் வெற்றியை பெற்றார். அவர் மீண்டும் தன்னுடைய கையிலிருந்த பணத்தினைகொண்டு தக்காளிகூடைகளை வாங்கி முந்தையமாதிரி ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்ற விற்றார் இவ்வாறு ஒரேநாளில் மூன்று முறை இவ்வாறான வியாபார நடவடிக்கையை மீண்டும் மீண்டும் செய்து 60 அமெரிக்க டாலர்களுடன் அன்று மாலை அந்த இளைஞர் தன்னுடைய வீடு திரும்பினார். இந்த வழியில் பயனித்தால்தான் உயிர்வாழ முடியும் என்பதை உணர்ந்த அந்தஇளைஞர்,இதே வியாபாரி பணியை செய்வதற்காக தினமும் அதிகாலையில் செல்ல ஆரம்பித்தார், வியாபார பணிமுடிந்த ஒவ்வொரு நாளும் தாமதமாக வீடு திரும்பினார். இதனால், அவருடைய முதலீடு தினமும் இரட்டிப்பாக அல்லது மூன்று மடங்காக அதிகரித்தது. சிறிது காலத்திற்கு பிறகு தலையில் பொருட்களை சுமந்து சென்று விற்பணை செய்வதற்கு பதிலாக , அந்த இளைஞர் ஒரு இருசக்கர வண்டியொன்று வாங்கி விற்பணையை தொடர்ந்தார், பின்னர் நான்கு சக்கர சுமையுந்து வண்டி வாங்கி பொருட்களை கொண்டு சென்று விற்பணை செய்துவந்தார்,அதன் பின்னர் தான் ஒருவன்மட்டும் அவ்வாறான விற்பணைசெய்துமுடிக்க முடியாது என தனக்கு கீழ் பல்வேறு இளைஞர்களை பணிநியமனம்செய்தும் ஏராளமான அளவில் நான்கு சக்கர வாகணங்களை வாங்கியும் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சென்று விற்பணை செய்துவரும் பணியை விரிவாக்கம் செய்து தனது வியாபாரத்தினை பெருக்கி கொண்டே வந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த இளைஞரின் நிறுவனம் மிகப்பெரிய உணவு பொருட்களில் சில்லறை விற்பனையாளர்களில் ஒன்றாக வளர்ந்து பீடுநடைபோட்டது. அவர் தனது குடும்பம் எதிர்காலத்தில் பாதுகாப்பாக இருப்பதற்காக தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு ஆயுள் காப்பீடு செய்ய முடிவு செய்தார். அதற்காக ஒரு காப்பீட்டு தரகரை அழைத்து ஒரு பாதுகாப்புத் திட்டத்தைத் துவங்குவது குறித்து விவாதித்தார் . அந்த உரையாடல் முடிவில் காப்பீட்டு, தரகர் அவரிடம் அவருடைய மின்னஞ்சல் முகவரியைக் கோரினார். "எனக்கு மின்னஞ்சல்முகவரி எதுவும் இல்லை." என்று அந்த இளைஞர் பதிலளித்தார்: அதனை தொடர்ந்து, “ஐயா உங்களிடம் மின்னஞ்சல் முகவரி இல்லாமல், இவ்வாறான பெரிய நிறுவனத்தினை எவ்வாறு வெற்றிகரமாக உருவாக்கமுடிந்தது. உங்களிடம் மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் நீங்கள் வாழ்க்கையில் எங்கோ உயரத்திற்கு சென்றிருக்கு முடியும் என்று கற்பணை செய்து பாருங்கள் ஐயா ” என காப்பீட்டு தரகர் ஆர்வத்துடன் பதிலளித்தார் அந்த இளைஞர் சிறிது நேரம் யோசித்து, “கற்பணையெல்லாம் வேண்டாம் நான் மின்னஞ்சல் முகவரிமட்டும் வைத்திருந்தால் ஒரு நிறுவனத்தில் சாதாரண அலுவலக உதவியாளர் பணியை தற்போது செய்து கொண்டிருப்பேன் அவ்வளவுதான் நீங்கள் போகலாம் !” என்று பதிலளித்தார். இன்று நீங்கள் செய்த முயற்சிக்கு வெற்றி எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை சோர்வடைய வேண்டாம். சிறந்த வாய்ப்புகள் எப்போதும் நமக்காக காத்திருக்கின்றன. அவைகளுள் ஒன்றினை நீங்கள் மிகச்சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை வாழ கற்றுகொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...