திங்கள், 1 ஜூன், 2020

இந்தியாவில் ஒவ்வொரு வியாபார நிறுவனமும் தெரிந்து கொள்ளவேண்டிய அடிப்படையான தகவல்கள்


துவக்கநிறுவனமாக (Startup Enterprises)வியாபார உலகில் குதிக்க தயாராக இருப்பவரா அல்லது ஏற்கனவே ஒரு வியாபார நிறுவனத்தினை வெற்றிகரமாக நடத்துபவரா ஆம் எனில் பின்வருமாறான சட்டப்படியான அனைத்தும் பதிவுசெய்துவிட்டதை உறுதி செய்துகொள்க. இந்தியாவில் உள்ள அவ்வாறான ஒவ்வொரு வியாபார நிறுவனமும் தெரிந்து கொள்ளவேண்டிய அடிப்படையான சட்டப்படியாக பதிவுசெய்தல்விவரங்கள் பின்வருமாறு 1. வியாபார நடவடிக்கைகளை துவங்க விரும்பும் எந்தவொரு நிறுவனமும் வருமானவரித்துரையில் பதிவுசெய்து PAN எனும் வருமானவரிபதிவுஎண் பெறவேண்டும் அவ்வாறே தாம் வழங்கிடும் தொகை குறிப்பிட்ட வரம்பிற்குமேல் செல்லும்போது அதற்கான வருமான வரியை பிடித்தம்செய்து வழங்குவதற்காக வருமானவரித்துரையில் பதிவுசெய்துTAN எனும் மற்றொரு பதிவுஎண் பெறவேண்டும் அதைவிட தற்போது பரிமாற்றதொகையானது ரூ. 50,000/-இக்குமேல் எனில் கண்டிப்பாக ஆதார் எண் கண்டிப்பாக இருக்கவேண்டும் 2. வியாபாரசெய்திடும் நிறுவனங்கள் வியாபார நடவடிக்கைகளுக்காக பத்து பணியாளர்களைவிட கூடுதலாக பயன்படுத்தி கொள்வதாக இருந்தால் வர்த்தக உரிமமும்(Trade License ) கடைகளும் நிறுவனங்களுக்கும் ஆன உரிமமும்(Shops and Establishment License) தொழிலாளர் ஆணையரிடம் பதிவுசெய்து பெறவேண்டும் 3.விற்பணைவருமானம் ரூ. 20 இலட்சத்திற்கு மேல் உயரும்போது கண்டிப்பாக புதிய சசேவவின்படி (GSTIN) பதிவுசெய்து அதற்கான பதிவெண் பெறவேண்டும் 4.நம்முடைய வியாபார நிறுவனம் துவக்கநிறுவனமாக வரையறுக்கப் பட்ட கூட்டாண்மை நிறுவனமா கூட்டாண்மை நிறுவனமா தனிநபர் நிறுமமா ,தனியார் நிறுமமா ,பொதுநிறுமமா என அதனதன் துறைஅமைச்சகத்தில் பதிவுசெய்து கொள்ளவேண்டும் 5. நாம் துவங்கவிருக்கும் வியாபார நிறுவனத்தில் 20 பணியாளர்களைவிட கூடுதலாக பயன்படுத்தி கொள்வதாக இருந்தால் மாதாந்திர சம்பளத்தொகை ரூ. 15000 மிகாமல் இருந்தாலும் பணியாளர்களின் பொது வருங்கால வைப்புநிதி (EPF) நிறுவனத்தில் பதிவுசெய்து கொள்ளவேண்டும் 6. நாம் துவங்கவிருக்கும் வியாபார நிறுவனத்தில் 20 பணியாளர்களைவிட கூடுதலாக பயன்படுத்தி கொள்வதாக இருந்தால் மாதாந்திர சம்பளத்தொகை ரூ 21,000 மிகாமல் இருந்தாலும் பணியாளர்களின் மாநில காப்பீடு (ESI) நிறுவனத்தில் பதிவுசெய்துகொள்ளவேண்டும் அல்லது அந்நிறுவனத்திலிருந்து விலக்கு சான்றிதழ் பெற்றிடவேண்டும் 7.இந்த வியாபார நிறுவனம்செயல்படபோகும் உள்ளூராட்சியில்( நகராட்சி , பேரூராட்சி) தொழிலக வரி இதர தண்ணீர்வரி போன்றவைகளுக்காக உள்ளூராட்சி அலுவலகத்தில் பதிவுசெய்திடவேண்டும் 8.நம்முடைய நிறுவனத்தில் ஒரு சில பணிகளை அதாவது 10 பணியாளர்களைவிட கூடுதலாக வெளியாட்களை ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்தி பயன்பெறுவிழைவோம் அதற்காக ஒப்பந்த பணியாளர்சட்டத்தின்கீழ் தொழிலாளர் ஆணையரிடம் பதிவுசெய்து கொள்ள வேண்டும் 9.நம்முடைய வியாபார நிறுவனம் சுற்றுசூழல் பாதிப்புஎதுவும் ஏற்படுத்தாதுஅல்லது குறிப்பிட்ட வரையறைக்குள் வியாபார நடவடிக்கைகள் அமையும் என சுற்றுசூழல் கட்டுபாட்டு குழுவில் பதிவுசெய்து நம்முடைய நிறுவனத்தை நிறுவுவதற்கும்Consent for Establish (CFE ) செயல்படுத்திடுவதற்கும்Consent to Operate (CTO) ஒப்புதல் சான்றிதழ் பெறவேண்டும் 10.நம்முடைய வியாபாரத்திற்கு என தனியாக பொருட்களை கொண்டுவரவும் பணியாளர்கள் பயன்படுத்திகொள்வதற்காகவும் நான்கு சக்கரவாகணங்களை கொள்முதல் செய்திடுவோம்அதனை நம்முடைய நிறுவனத்தின்பெயரில் பதிவுசெய்துஅது சாலையில் செல்வதற்கு பொருத்தமானதுஎன பதிவுசான்று பெறவேண்டும

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...