வெள்ளி, 12 ஜூன், 2020

தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தில் கானொளி காட்சி மாநாடு நடவடிக்கையின் வாயிலாக பொதுப்பேரவை கூட்டம் நடத்துதல்


தற்போதைய COVID-19 எனும் நச்சுயிரின் அச்சுறுத்தல் காரணமாக நிறுவனங்களின் பங்குதாரர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, நிறுவனங்களின் விவகாரங்கள் துறை அமைச்சகமானது (MCA) 2020 மே 5 ஆம் தேதி கானொளிகாட்சி மாநாடு (VC) அல்லது பிற பேச்சொலி காட்சி வழிமுறைகள் (OAVM). வாயிலாக வருடாந்திர பொதுப்பேரவை கூட்டம் நடத்த அனுமதிப்பதற்காக சுற்றறிக்கை (எண் 20/2020) ஒன்றினை வெளியிட்டுள்ளது. நிறுமங்களின் சட்டம், 2013 ஆனதுஇவ்வாறான VCஇன் மூலம் நிறுவனங்கள் தங்களுடைய வருடாந்திர பொதுப்பேரவைக் கூட்டத்தை நடத்துவதற்கான விதிகளில் அனுமதி எதுவும் வழங்கவில்லை. எனவே, COVID-19 எனும் நச்சுயிரின் பாதிப்பின் காரணமாக எந்தவொரு நிறுவனமும் அவ்வாறான ஆண்டு பொதுப்பேரவை கூட்டத்தை நடத்த முடியாவிட்டால்,அவ்வாறான நிறுவனங்கள் இந்த சுற்றறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட பின்வரும்நடைமுறைகளைப் பின்பற்றி VC / OAVM பயன்முறை மூலம் ஆண்டு பொதுப்பேரவை கூட்டத்தை நடத்த முடியும். நிறுமங்களின் சட்டத்தின் 108 வது பிரிவின் கீழ் மின்-வாக்களிக்கும் வசதியை வழங்க வேண்டிய நிறுவனங்கள், மின்-வாக்களிக்கும் வசதிகளை வழங்கத் தேவையில்லாத நிறுவனங்கள் ஆகிய இரண்டு வகை நிறுவனங்களுக்கும் தங்களுடைய ஆண்டு பொதுப்பேரவை கூட்டங்களை நடத்தும் நடைமுறைகளானவை இரண்டுவகையிலான தனித்தனி நடைமுறைகளாக உள்ளன. இந்த கட்டுரையில், மின்-வாக்களிப்பு வசதிகளை வழங்கத் தேவையில்லாத நிறுவனங்கள் மட்டும் புதிய VC / OAVM பயன்முறை மூலம் கூட்டத்தை நடத்துவதற்கான விதிகளின் விவரங்கள் கூறப்படுகின்றன. அனைத்து தனியார் நிறுவனங்களும் அத்தகைய வசதிகளை வழங்கத் தேவையில்லை. சட்டவிதிமுறைகள்(Provisions): 2020 மே 5 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண் 20/2020 பொருந்தக்கூடிய பொதுப்பேரவைகூட்டம்: 2020 காலண்டர் ஆண்டில் நடத்தபெறவேண்டிய ஆண்டு பொதுப்பேரவைகூட்டத்திற்கு( AGM)மட்டும் இந்த புதிய வழிமுறைகளின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு: ஆண்டு பொதுப்பேரவை கூட்டம் நடத்துவதற்கான நிபந்தனைகள் நிறுவனமானது அதனுடைய உறுப்பினர் பதிவேட்டில் பதிவுசெய்திருக்கும், உறுப்பினர்களுள் தங்களுடைய பங்குத்தொகைஅனைத்தையும் செலுத்திய கூட்டத்தில் வாக்களிக்கும் உரிமையை பெற்றுள்ள நிறுவனத்தின் பங்கு மூலதனத்தில் 75% க்கும் குறையாத மொத்த உறுப்பினர்களில் குறைந்தது பாதி உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரிகளை இதற்காக பயன்டுத்திக் கொள்ளும். மேலும் நிறுவனமானது அனைத்து பங்குதாரர்களின் மின்னஞ்சல் முகவரிகளையும் பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுத்திடவேண்டும் அவ்வாண்டு பொதுப்பேரவை கூட்டங்களில், சாதாரண வணிக நடவடிக்கைகள் மட்டும் பரிசீலிக்கப்படும் மேலும் இயக்குநர்களின் குழுவால் தவிர்க்க முடியாததாகக் கருதப்படும் சிறப்பு வணிகநடவடிக்கைகளின் பரிமாற்றங்களை மட்டும் இப்பேரவைகூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துகொள்ளலாம் மின்னனுவழங்குதல் சேவைகளி ன்(Electronic Clearing Services )அல்லது வேறு வழிகளின் மூலம் உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பங்குஈவுத்தொகையைப் பெறுவதற்கான ஆணையை வழங்குவதற்கு நிறுவனங்கள் போதுமான ஏற்பாடுகளைச் செய்திடவேண்டும். ஆண்டு பொதுப்பேரவை கூட்டத்தின் நடவடிக்கைகளை பதிவுசெய்தலும் கூட்டநடத்துவதற்கான காலமும் ஆண்டு பொதுப்பேரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்அனைத்தும் அதற்கான பதிவேடுகளில் கண்டிப்பாக பதிவு செய்யப்பட்டு பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட வேண்டும். பொதுப்பேரவை கூட்டத்தினை நடத்துகின்ற காலமானது அந்த பொதுப்பேரவை கூட்டத்தில் அனைத்து பங்குதாரர்களும் கலந்து கொள்வதற்கு வசதியாக இருக்க வேண்டும் ஆண்டு பொதுப்பேரவைகூட்டநடத்துவதற்கான வரம்பு ஆண்டு பொதுப்பேரவை கூட்டத்தில் குறைந்தது 500 உறுப்பினர்களோஅல்லது மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் சமமான அளவு உறுப்பினர்களோ இவற்றில் எது குறைவோ ( தனியார் நிறுவனங்களுக்கு அதிகபட்சம் 200 உறுப்பினர்கள் ஆகும்) முதலில் வருபவர்கள் மட்டும் முதலில் அனுமதிக்கப் படுவார்கள் எனும் வரிசை முன்னுரிமையின் அடிப்படையில் பங்கேற்க அனுமதிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். இந்த முதலில் வருபவர்கள் முதலில் அனுமதித்தல் என்ற வரிசை முன்னுரிமை அடிப்படையானது மொத்த உறுப்பினர்களின் பங்குதொகையில் 2% க்கும் அதிகமாக வைத்துள்ள பங்குதாரர்கள் ,நிறுவனத்தினை முதன்முதலில் நிறுவனத்தின் செயலை துவக்குபவர்கள்(promoters), நிறுவன முதலீட்டாளர்கள், இயக்குநர்கள்,முதன்மை நிருவாக அலுவலர்கள்( KMP), தணிக்கையாளர்கள் ஆகியோர்களுக்கு பொருந்தாது, மேலும் உறுப்பினர்களால் தனக்கு பதிலாக வேறொருவரைகூட்டத்தில் கலந்து கொள்வதற்கான பதிலாள் ( proxy) நியமனம் அனுமதிக்கப்படாது ஆண்டு பொதுப்பேரவைகூட்டத்தின் தலைவர் நியமனம் குறித்து நிறுவனத்தின் விதிகள் எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை எனில் கூட்டத்தில் கலந்துகொள்ளும் எந்தவொரு நபரும் தலைவராக நியமிக்கப்படுவார்.ஆண்டு பொதுப்பேரவை கூட்டத்தில் 50 க்கும் குறைவான உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தால், நிறுவனத்தின் விதிகள் வேறுவிதமாக பரிந்துரைக்கப்படவில்லையெனில்,நிறுமங்களின் சட்டத்தின் 104 வது பிரிவின்படி கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் தங்களுடைய கைகளைஉயர்த்துதல் அல்லது கருத்துக் கணிப்பு ஆகிய நடைமுறை மூலம் தலைவர் நியமிக்கப்படுவார். மற்ற எல்லா நிகழ்வுகளிலும், தலைவர் ஒரு கருத்துக் கணிப்பால் மட்டும் நியமிக்கப்படுவார் ஆண்டு பொதுப்பேரவை கூட்டத்திற்கு குறைந்த பட்ச உறுப்பினர்கள் கலந்து கொள்வது தவிரஇதர கட்டாய வருகை: ஆண்டு பொதுப்பேரவை கூட்டத்தில்குறைந்தபட்சம் ஒரு சுதந்திரமான இயக்குநராவது (நிறுவனத்தில்நியமனம் செய்யப்பட்டிருந்தால்) கலந்து கொள்ளவேண்டும் நிறுவனத்தின் தணிக்கையாளர் அல்லது ஒரு தணிக்கையாளராக இருக்க தகுதியுடையஅவரது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி,கலந்து கொள்ளவேண்டும் ஆண்டு பொதுப்பேரவை கூட்டத்திற்கான அழைப்புஅறிவிப்பு ஆண்டு பொதுப்பேரவை கூட்டத்திற்கான அழைப்புஅறிவிப்பு சுற்றறிக்கையில் வழங்கப்பட்ட வரச்சட்டமானது எவ்வாறு பயன்பாட்டிற்குக் கிடைக்கும் என்பதையும், பொதுப்பேரவை கூட்டத்தினை எவ்வாறு அணுகுவது மற்றும் பங்கேற்பது என்பது பற்றிய தெளிவான வழிமுறைகளைக் கொண்டிருப் பதையும் அறிவிப்பு வெளிப்படுத்தவேண்டு ம். கூட்டத்திற்கான அழைப்பு அறிவிப்பானது நிறுவனத்தின் அனுமதிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை வழங்குவதன் மூலம், எந்தவொரு தீர்மானத்தின் மீதும் பொதுப்பேரவை கூட்டத்தின் போது ஒரு வாக்கெடுப்பு எடுக்கப்படும்போது உறுப்பினர்கள் தங்களுடைய வாக்குகளை தெரிவிக்க முடியும். மேலும் கூட்டத்திற்கு முன்பாக அல்லது இதற்கானதொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் உதவி தேவைப்படும் பங்குதாரர்களுக்கான உதவி எண்(தொழில்நுட்ப வழங்குநர் அல்லது வேறுநபர்) அறிவிப்பில் கொண்டிருக்க வேண்டும். ஆண்டு பொதுப்பேரவை கூட்டத்தில் வாக்களிப்பு: கூட்டத்தில் 50 க்கும் குறைவான உறுப்பினர்கள் கலந்து கொண்டால், எந்தவொரு உறுப்பினரும் வாக்கெடுப்புக்கான கோரிக்கை எதையும் முன்வைக்கப்படாவிட்டால், கைகளை உயர்த்துவதன்வாயிலாக வாக்களிப்பது குறித்து தலைவர் முடிவு செய்யலாம்.ஒரு வாக்கெடுப்பு கோரப்பட்டால், உறுப்பினர்கள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி வாயிலாக மின்னஞ்சல்களை அனுப்புவதன் மூலம் மட்டுமே தீர்மானத்தில் வாக்களிக்க வேண்டும், அவை கூட்டஅறிவிப்பில் விநியோகிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்பப்பட்டு நிறுவனத்தில் பதிவு செய்யப்படவேண்டும். பொதுப்பேரவைகூட்ட அறிக்கையின் தேவை இந்த பொறிமுறையின்படி நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் பொதுப்பேரவை கூட்டம் நடந்த 60 நாட்களுக்குள் நிறுவன பதிவாளரிடம் (ROC) சமர்ப்பிக்கப்படவேண்டும், அதில் சட்டத்தின் பிற விதிமுறைகளும் விதிகளும் முறையாக இணக்கமாக செயல்டுத்துப்பட்டுள்ளன என்பதை உறுதிபடுத்திட வேண்டும் இதர செயல்கள்: பொதுப்பேரவைக் கூட்டங்கள் தொடர்பான வெளியீடுகளுடன் தொடர்புடைய , வெளியீடு செய்தல், உறுப்பினர்களால் ஆய்வு செய்வது தொடர்பான ஆவணங்கள் போன்றவை சட்டத்தில் வழங்கப்பட்டவை , நிறுவனத்தின் AOAஎனும் விதிமுறைகள் ஆகியஅனைத்து இணக்கங்களும் மின்னணு முறை மூலம் செய்யப்படுகின்றன என்பதை நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும். இந்த பயன்முறையின் வாயிலாக கூட்டத்தில் கலந்து கொண்ட பங்குதாரர்கள் பொதுப்பேரவை கூட்டத்திற்கான குறைந்தபட்சம் கலந்துகொண்டவர்களாக கருதப்படுவார்கள் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த ,சுற்றறிக்கையில் வழங்கப்பட்ட கட்டமைப்பிற்கு ஏற்ப தங்களுடைய ஆண்டு பொதுப்பேரவை கூட்டம் ( AGM) நடத்த முடியாத நிறுவனங்கள், நிறுமங்களின் சட்டத்தின் 96 வது பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட பதிவாளருக்கு ஆண்டு பொதுப்பேரவை கூட்டம் (AGM) தள்ளிவைப்பதற்கான விண்ணப்பத்தை சமர்த்திடுமாறு அறிவுறுத்தப்படுகின்றன. ஆண்டு பொதுப்பேரவைகூட்டம் நடத்திடும்போதான நடைமுறை சவால் இந்த சுற்றறிக்கையின் படி நிறுவனங்களின் பதிவாளரிடம்(RoC) சமர்ப்பிக்கபடவேண்டிய தீர்மானங்கள் மின்-படிவம் MGT -14 அல்லது GNL -1 அல்லது GNL -2 இல் சமர்ப்பிக்கப்பட வேண்டுமா அல்லது வேறு எந்த படிவத்தில் தெரிவிக்கப்பட வேண்டும் என எந்தவித பரிந்துரையும் செய்யப்படவில்லை. . பொதுவாக படிவம்எண் MGT -14 இல் சமர்ப்பித்தல் சிறந்த தேர்வாக இருக்கலாம், ஏனெனில் இந்த படிவம் பல்வேறு தீர்மானங்களை சமர்ப்பித்திட பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், தற்போது இந்த சுற்றறிக்கையில் இது குறித்து குறிப்பிட்ட அறிவுறுத்தல்கள் எதுவும் இல்லை இந்த சுற்றறிக்கையில் பதிலாள் இவ்வாறான கூட்டத்தில் கலந்துகொள்வதைகட்டுப்படுத்துகிறது. ஆயினஉம் தொலைதூர இடங்களில் இருக்கும் மின்னணு பயன்முறையை அணுக முடியாத பங்குதாரர்கள், இவ்வாறான கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான அவர்களின் உரிமைகள் தடைசெய்யப்படுகின்றன. 50 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தால் ஒரு வாக்கெடுப்பு மூலம் கூட்டம் நடத்தப்பட வேண்டும். எனும் வாக்களிக்கும் முறை இந்த சுற்றறிக்கை முக்கியமானதாகும் . , முடிவுரை: நாட்டில் நிலவும் COVID-19 தொற்றுநோயின் தற்போதைய சூழ்நிலைகளின் பின்னணியில், MCAஆனது நிறுவனங்களின் வருடாந்திரபொதுப்பேரவைகூட்டத்தை நடத்த நிறுவனத்திற்கு தளர்வு அளித்துள்ளது மின்னணு முறையில் சந்திப்பு. VC அல்லது OAVM பயன்முறை மூலம் உறுப்பினர்களை சந்திப்பதற்கு அனுமதிக்க எந்தவொரு குறிப்பிட்ட ஏற்பாடுகளையும் சட்டம் வழங்காததால் இந்த தளர்வு ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை மின்னனு இந்தியா எனும் கருத்தமைவை ஊக்குவிப்பதற்கான வழியைக் கொடுக்கும், மேலும் தொற்றுநோயால் ஏற்படும் கடுமையான இடையூறுகளுக்கு முகங்கொடுத்து ஒருசில அவசர முடிவுகளை எடுக்கவேண்டிய நிறுவனங்களுக்கு இந்த சுற்றறிக்கை உதவக்கூடும். இந்த தற்காலிக நடவடிக்கை வரவிருக்கும் காலங்களில் மெய்நிகர் பொதுக் கூட்டங்களுக்கான கதவைத் திறக்கலாம்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...