செவ்வாய், 2 ஜூன், 2020

மின்னனு வழிபட்டியல் உருவாக்கிடும்போது ஏற்படும் பிரச்சினைகளை ஒரேயொரு சொடுக்குதலில் தீர்வுபெறமுடியும்


சசேவஇல்(GST) புதியதாக அறிமுகபடுத்தப்பட்ட மின்னனுவழிபட்டியலை(E-Way Bill) ரூ. Rs. 50,000/-.இற்குமேல் பொருட்களை கொண்டுசெல்லும்போது அவ்வாறு பொருட்களை கொண்டுசெல்வோர் கண்டிப்பாக அதற்கான மின்னனு வழி பட்டியலையும் உடன் கொண்டு செல்ல வேண்டும். 2018-19 நிதியாண்டில் ரூ 55.78 கோடி மதிப்பிற்கான மின்னனுவழிபட்டியல்கள் இல்லாமல் அல்லது தவறாக உருவாக்கப்பட்டு கொண்டு செல்லபட்டன ஏறத்தாழ5% வாகணங்கள் அதாவது 2.75 கோடி வாகணங்கள் சரியான மின்னனு வழிபட்டியலை உடன் கொண்டுவரததால் அல்லது தப்பும் தவறுமான மின்னனு வழிபட்டியலை உடன் கொண்டு சென்றதால் தண்டிக்கப்பட்டன இவ்வாறான நிகழ்விற்கு குறைந்தபட்சம் ரூ. 10,000 அபராத தொகையும் உடன் கொண்டுசெல்லும் அந்த குறிப்பிட்ட பொருளும் வாகணமும் அந்த தொகைசெலுத்தும்வரை நிறுத்தம்செய்து வைத்திடுகின்ற நடைமுறை தற்போது உள்ளது இந்த மின்னனு வழிபட்டியலை உருவாக்கிடும் போது இந்த பட்டியலிற்கான வரிசை எண் , இந்த பொருளை கொண்டுசெல்கின்ற வாகண அடையாள எண் , பொருளின் பெயர் ,விலை போன்ற பல்வேறு விவரங்களை உள்ளீடு செய்து உருவாக்கிடும்போது உள்ளிடுகின்ற விவரங்களில் மனித தவறுகள் ஏற்படஏதுவாகின்றன மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பல்வேறு காரணங்களினால் அந்த பொருளை கொண்டுசெல்ல தவறிவிடுகின்றன அதனால் அவ்வாறு கொண்டு செல்லபபடும் பொருட்களுக்கான மின்னனு வழிபட்டியலானவை காலக்கெடு தவறிய மின்னனு வழிபட்டியலாக அமைந்துவிடுகின்றன மேலும் இவ்வாறான மின்னனு வழிபட்டியலிற்கான JSON கோப்புகளை கையாளதவறிடுகின்றன அதுமட்டுமல்லாது இந்த மின்னனு வழிபட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் GSTR 1 அறிக்கையுடன் ஒப்பிட தவறிடுகின்றன என்பன போன்ற பல்வேறு காரணங்கள் இந்த மின்னனு வழிபட்டியலில் உருவாக்கிடும்போது சந்திக்க வேண்டியுள்ளது அதன்வாயிலாக நம்முடைய வியாபார நடவடிக்கைகள் பாதிக்கின்றன இவைகளை தீர்வு செய்வதற்காக குறைந்த செலவில் GSTHero எனும் புதிய பயன்பாடானது கைகொடுக்க தயாராக இருக்கின்றது இது தற்போது நிறுவனங்கள் மின்னனு வழிபட்டியலை உருவாக்கிடுவதற்காக பயன்படுத்திவரும் ERP ஐ விட்டு வெளியேறாமல் அல்லது மாற்றிடாமல் அதனோடு ஒருங்கிணைந்து வழக்கம் போன்று மின்னனுவழிபட்டியலை உருவாக்கிட உதவுகின்றது. மிகமுக்கியமாக இது நம்முடைய ERP ஐ உடன் ஒருங்கிணைந்து செயல்படதுவங்கியவுடன் E-way bill உருவாக்கிடும் இணையதளத்துடன் தானாகவே ஒருங்கிணைந்து செயல்பட தயாராகிவிடுகின்றதுமேலும் மின்னனு வழிபட்டியல் தயார் செய்வதற்காகவென தனியாக நம்முடைய ERP ஆல் தயார்செய்த விற்பணைபட்டியலின் தகவல்களிலிருந்து நகலெடுத்து ஒட்டிடவேண்டிய தேவையை இது அறவே நீக்கி தானாகவே அந்த தகவலை மின்வழிபட்டியலை தயார்செய்திட எடுத்து கொள்கின்றது ஒவ்வொருமுறையும் நாம் E-way bill உருவாக்கிடும் இணைய தளத்திற்கு சென்று நமக்கான மின்னனுவழிபட்டியலை தயார்செய்திடுவதற்கு பதிலாக இந்த GSTHeroஆனது தானாகவே நம்முடைய விற்பணைபட்டியல் தயார்செய்த ERP ஐயும் E-way bill உருவாக்கிடும் இணையதளத்தையும் ஒருங்கிணைத்து புதிய மின்வழிபட்டியலை உருவாக்கிடு கின்றது தொடர்ச்சியாக அடுத்தடுத்த மின்வழிபட்டியல் எண்ணை நிகழ்நிலைபடுத்தி அடுத்த பட்டியலை தாயர்செய்திட தயாராக இருக்கின்றது அதைவிட ஒன்றுக்குமேற்பட்ட மின்வழிபட்டியலை மொத்தமாக(Bulk) உருவாக்கிடவும் உதவுகின்றது குறிப்பிட்ட மின்வழிபட்டியல் குறிப்பிட்டகால முடிவடைகின்றது அதனை புதுப்பித்தல் செய்திடவா என நினைவூட்டல் செயலையும்செய்திடுகின்றது மின்வழிபட்டியல் உருவாக்கிடும் நிகழ்வு நேரத்தில் உருவாகிடும் ஏதேனும் பிழையை அவ்வப்போது சரிசெய்திடுகின்றது போலியான விற்பணை பட்டியல் எண்ணை கொண்டு மின்வழிபட்டிலை உருவாக்குவிடுவதை சுட்டிகாட்டி அதனை தவிரத்திடுகின்றது Json கோப்புகளை கையாளுவதற்காகவென தனியாக நாம்எதுவும் நடவடிக்கை எடுத்திடாமலேயே இது தானாகவே அந்த பணியையும் செயல்படுத்திடுகின்றது மேலும் விற்பணைபட்டியல் மின்வழிபட்டியல் ஆகியவற்றை GSTR 1. அறிக்கையுடன் ஒப்பிட்டு சரிபார்த்திடுகின்றது மேலேகூறிய வசதி வாய்ப்புகளினால் மின்வழிபட்டியல் கையாளும் போது ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் இந்த GSTHero ஐ கொண்டு தீர்வுசெய்து கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...