வியாழன், 25 ஜூன், 2020

இந்தியாவில் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்காக IEC எனும் குறியீடு பதிவு செய்வதற்கான நடைமுறை


இந்தியாவில் எந்தவொரு நிறுவனமும் ஏற்றுமதி அல்லது இறக்குமதி வணிகத்தைத் துவங்குவதற்கு முன் IEC எனும் குறியீட்டினை பெறுவதற்காக கண்டிப்பாக பதிவு செய்திடவேண்டும் ஏனெனில் பொருட்களை ஏற்றுமதி செய்ய அல்லது இறக்குமதி செய்ய இது அவசிய தேவையாகும் இந்த தனித்துவமான பத்து இலக்கங்களைகொண்ட IEC. குறியீட்டு எண்ணை இந்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநர் அவர்களால் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப் படுகின்றது இந்த IEC பதிவு செய்து கொள்வதால் கிடைக்கும் பயன்கள் பின்வருமாறு: 1. இந்தியாவில் எந்தவொரு நிறுவனமும் ஒரு ஏற்றுமதியாளராக அல்லது இறக்குமதியாளராக ஆவதற்கான முதன்மை சான்றாக இது விளங்குகின்றது . 2. சுங்கத்துறை, வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் (DGFT) , ஏற்றுமதி ஊக்குவிப்பு குழு போன்றவற்றிலிருந்து பொருட்களை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்வது தொடர்பாக பல்வேறு சலுகைகளைப் பெற இந்த சான்று உதவுகின்றது. 3. இந்தியாவிலிருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் அல்லது இந்தியாவிற்குள் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் இது ஒருமுதன்மை உரிமமாக பயன்படுகின்றது. 4. இந்த IEC பதிவு எண் வாயிலாக பொருட்களை கொண்டு செல்வதற்கான அனுமதியை சுங்கத்துறை அதிகாரிகளிடமிருந்து பெறுவதை எளிதாக்கு கின்றது. 5. இந்த IEC பதிவு எண் ஆனது சட்டவிரோதமான பொருட்களின் ஏற்றுமதியை அறவே தடுக்கின்றது . 6. தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் அல்லது இறக்குமதி செய்வதற்கும் இந்தIEC பதிவு எண்தேவையில்லை. 7. இந்த IEC இற்காக பதிவுசெய்து IEC பதிவு எண் பெற்ற பிறகு ஒவ்வொரு வருடமும் வருடாந்திர புதுப்பித்தல் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. 8. அவ்வாறே இவ்வாறு பதிவு பெற்ற பிறகு ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர அல்லது அரையாண்டு அல்லது காலாண்டு அறிக்கை சமர்ப்பித்திட வேண்டும் என்ற நடைமுறைஎதுமில்லை. வருமானவரிபதிவுஎண் அடிப்படையிலான இந்த IECபதிவு சான்றிதழ் ஆனது நேரடியாக இணையத்தின் வாயிலாக ( STPஎனும் பயன்முறையில்) பின்வரும் ஆறு படிமுறைகளை பின்பற்றினால் இணையத்தில் தானாகவே உருவாக்கப்பட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு கிடைக்கின்றது, படிமுறை1.முதலில் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகத்தின் (DGFT) https://dgft.govt.in/ எனும் இணையதளபக்கத்திற்குசெல்க படிமுறை2. பின்னர்அந்த திரையில்Services=>IEC=> OnlineIECApplication=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக படிமுறை3 அதன்பின்னர் விரியும் திரையில் நம்முடைய வருமான வரி பதிவு எண்ணில் உள்ளவாறு நம்முடைய பெயர் ,பிறந்ததேதி அல்லது நிறுவனத்தின் பெயர் பதிவுசெய்த தேதி , வருமானவரி பதிவுஎண்(PAN) ஆகிய விவரங்களை மிகச்சரியாக உள்ளீடு செய்திடுக படிமுறை4 பின்னர் நம்முடைய கைபேசி எண் ,மின்னஞ்சல் முகவரி ஆகியவைகளை மிகச்சரியாக உள்ளீடுசெய்து கொண்டு Submit=>Create Login ID => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக ( இவைகளின் வாயிலாக OTPஎனும் ஒருமுறைமட்டுமான கடவுச்சொல் பெறுவதற்காக) படிமுறை5 படிமுறை 4 இல்கூறிய வாறு பதிவுசெய்த கைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு வருகின்ற OTPஎனும் ஒரு முறைமட்டுமான கடவுச்சொல் வாயிலாகஇந்த தளத்திற்குள் உள்நுழைவு (Login)செய்திடுக தொடர்ந்து தோன்றிடும் IEC Master Form எனும் திரையில் விண்ணப்பதாரரின் பெயர் ,இருப்பிடமுகவரி, வங்கியின் பெயரும் கணக்கு எண்ணும், நிறுவனத்திற்கு கிளைஅலுவலகங்கள் ஏதேனும் இருந்தால் அவைகளுடைய விவரங்கள், நிறுவனத்தின் தலைவர் அல்லது செயல்படும் முதன்மை கூட்டாளியின் பெயர்,பொறுப்பான்மையிரின் பெயர், தனிநபர் எனில் பொறுப்பாளரின் பெயர் போன்ற IEC பதிவு எண் பெறுவதற்கு தேவையான அனைத்து விவரங்களையும் மிகச்சரியாக உள்ளீடு செய்து கொள்க மேலும் புதியதாக பதிவுசெய்திடுவோர்கள் தம்முடைய வங்கி எண் அல்லது காசோலை , இருப்பிட முகவரிக்கான சான்றிற்காக வாடகை ஒப்பந்தம் அல்லது விற்பணை பத்திரம் அல்லது குத்தகை பத்திரம் மின்சார கட்டணபட்டியல் அல்லது தொலைபேசி கட்டணபட்டியல் அல்லது கைபேசி கட்டணபட்டியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று , நிறுவனம் பதிவு பெற்ற சான்று அல்லது கூட்டாண்மை பத்திரம் ஆகியவற்றின் நகல்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பித்திடுக ஏற்கனவே IEC பதிவு எண் பெற்றவர்கள் எனில் IEC பதிவு விவரங்களில் ஏதேனும் மாறுதல் இருந்தால் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் இவ்வாறான விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளீடுசெய்து தேவையான அனைத்து நகல்களையும் பதிவேற்றம் செய்து சமர்ப்பித்தபின்னர் அனுமதிக்கப்பட்ட வங்கியின்மூலம் இணையத்தின் வாயிலாக பதிவு கட்டணம் ரூ.500/- அல்லது புதுப்பித்தல் கட்டணம் 200/-செலுத்திடுக இறுதியாக Submitஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் நாம் மேலே கூறியவாறான விவரங்கள் அனைத்தும் மிகச்சரியாக இருந்தால் உடன் நமக்கான IECபதிவு சான்றிதழ் ஆனது தானாகவே உருவாகி விடும் அதனை பதிவிறக்கம் செய்து அச்சிட்டு கொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...