சனி, 27 ஜூன், 2020

சுயமதிப்பீடு


சிறுவன் ஒருவன் ஒரு கடையிலிருந்த தொலைபேசியில் ஏதோவொரு தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேச தயாரானான். உடன் அந்த கடை உரிமையாளர் அந்த தொலைபேசி உரையாடலைக் கவனிக்கதுவங்கினார்: சிறுவன்: “அம்மா, உங்களுடைய வீட்டின் முற்றத்திலுள்ள புல்தரையின் புல்லை வெட்டும் பணியை எனக்குத் தர முடியுமா? வீட்டுரிமையாளர்பெண்: (தொலைபேசி இணைப்பின் மறுமுனையில்) “எங்களுடைய வீட்டின்முற்றத்திலுள்ள புல்தரையின் புல்லை ஏற்கனவே ஒருவர் வெட்டிகொண்டிருக்கிறார்.” சிறுவன்: "அம்மா, இப்போது உங்கள் புல்தரையை வெட்டும் நபரை விட எனக்கு பாதி கூலி கொடுத்தால் போதும் நான் அதே பணியை மிகவிரைவாக செய்து முடிப்பேன்." வீட்டுரிமையாளர்பெண்: தற்போது எங்களுடைய வீட்டின் முற்றத்து புல்தரையின் புல்லை வெட்டுகிற நபர் நான் மிகவும் திருப்தி அடையுமாறு பணிசெய்கின்றார் அதனால் நான் அந்த பணியை வேறுயாருக்கும் மாற்றி தரவிரும்புவில்லை. சிறுவன்: “அம்மா, நான் அந்த புல்லை வெட்டும் பணியுடன் உங்களுடைய வீட்டின் தரையையும் மாடி படிக்கட்டுகளையும் கூட அதே கூலிக்கு பெருக்கி துடைத்து தருவேன். வீட்டுரிமையாளர்பெண்: தேவையில்லை,எங்களுடைய வீட்டில் ஏற்கனவே பணிசெய்திடும் நபரே அவ்வாறான பணிகள் அனைத்தையும் செய்து முடித்துவிடுகின்றார் நீவேறு யார்வீட்டிற்காவது சென்று உனக்கான பணியை தேடலாம் மிக்க நன்றி . முகத்தில் புன்னகையுடன், தொலைபேசியை சரியாக வைத்து கிளம்ப தயாரானான் அந்த சிறுவன் . இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அந்த கடை உரிமையாளர், சிறுவனை பார்த்து கடை உரிமையாளர்: “தம்பி… உன்னுடைய அணுகுமுறையை நான் விரும்புகிறேன்; மேலும் அந்த நேர்மறையான உணர்வையும் நான் மதிக்கின்றேன், அதனால் நான் என்னுடைய கடையில் உனக்கு ஒரு பணி வழங்க விரும்புகிறேன். " சிறுவன்: “ மிகவும் நன்றி ஐயா எனக்கு பணிஎதுவும் தேவையில்லை ,ஜயா கடை உரிமையாளர்: ஆனால் நீ உண்மையிலேயே ஒருவரிடம் உனக்கு ஒரு பணிவேண்டும் என மிகவும் கெஞ்சிக் கொண்டிருந்தாயே. பையன்: அதெல்லாம் ஒன்றுமில்லை ஐயா, நான் ஏற்கனவே செய்துகொண்டிருக்கும் பணியில் எனது செயல்திறனை சுயமதிப்பீடுசெய்துக்கொண்டிருந்தேன். நான் பேசிக் கொண்டிருந்த அந்த பெண்மணியின் வீட்டில்தான் நான் தற்போது பணி செய்துகொண்டிருகின்றேன்! ”

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...