வெள்ளி, 5 ஜூன், 2020

இந்தியாவில் Startupஎனும் திட்டத்தின்கீழ் நிறுவனங்கள் துவங்கப்படு வதற்கான தகுதியும் வரி விலக்குகளும்


இந்தியாவில் Startup எனும் செயல்திட்டத்தின் படி, ஒரு Startup நிறுவனத்தினை துவங்குவதற்கான தகுதி பெறுவதற்கு பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்திட வேண்டும்: 1.இந்தியாவில்உயிரி தொழில்நுட்ப துவக்க நிறுவனங்கள் எனில் துவங்கப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்குள் இருக்கவேண்டும். மற்றவையெனில் துவங்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 7 வருடங்களுக்குள் இருக்கவேண்டும், 2.முந்தைய நிதி ஆண்டுகளில் வருடாந்திர வருவாய் ரூ .25 கோடிக்கு மிகாமல் இருக்கவேண்டும். 3.Startup எனும் செயல்திட்டத்தின் படிதுவங்கிடும் நிறுவனமானது தொழில்நுட்பம் அல்லது அறிவுசார் சொத்துக்களால் இயக்கப்படும் புதிய தயாரிப்புகள், செயல்முறைகள் அல்லது சேவைகளில் புதுமை, மேம்பாடு, வணிகமயமாக்கல் ஆகியவற்றை அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாக இருக்கவேண்டும் 4.இந்நிறுவனம் ஏற்கனவே இருக்கும் ஒரு வணிகநிறுவனத்தை பிரிப்பதன் மூலமோ அல்லது புனரமைப்பதன் மூலமோ உருவாக்கப்பட்டதாக இருக்கக் கூடாது. 5.இது போன்ற நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட இடை-நிலை அமைச்சக வாரியத்திடமிருந்து சான்றிதழைப் பெற வேண்டும். 6.Startup எனும் செயல்திட்டத்தின் படிதுவங்கிடும் நிறுவனமானது ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் அல்லது பதிவு செய்யப்பட்ட கூட்டாண்மை நிறுவனம் அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுவனம் ஆகியவற்றின் ஏதேனும் ஒன்றின்கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலே கூறிய நிபந்தனைகளின்படி தகுதி வாய்ந்தStartup எனும் செயல்திட்டத்தின் படிதுவங்கிடும் நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்படும் வரி விலக்குகள் பின்வருமாறு 1.ஏப்ரல் 1, 2016 க்குப் பிறகு Startupநிறுவனமாக பதிவு செய்யப் பட்ட அல்லது துவங்கப்பட்ட Startupநிறுவனமானது, எந்தவொரு நிதியாண்டிலும் வருடாந்திர வருவாய் ரூ .25 கோடியைத் தாண்டாது இருந்தால், தொகுப்பான ஏழு வருடங்களில் மூன்று வருட காலத்திற்கு 100% வரிச்சலுகை பெற தகுதியுடையதாகும். 2. நீண்ட கால மூலதன இலாபத்தொகை அல்லது அதன் ஒரு பகுதியை மத்திய அரசு அறிவித்த நிதியில் முதலீடு செய்தால், தகுதியான Startup நிறுவனங்களுக்கு வருமான வரிச் சட்டத்தில் 54 EEகீழ் நீண்ட கால மூலதன இலாபத்திற்கான வரிவிலக்கு அனுமதிக்கப்படுகின்றது. அதாவது சொத்து பரிமாற்ற நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்குள். நீண்ட கால முதலீடாக 3 வருட காலத்திற்கு குறிப்பிட்ட நிதியில் அதிகபட்ச தொகை ரூ .50 லட்சம் வரை முதலீடு செய்யப்படவேண்டும். இவ்வாறான முதலீட்டு தொகையை 3 ஆண்டுகளுக்கு முன்பு திரும்பப் பெறப்பட்டால், தொகை திரும்பப் பெறப்பட்ட ஆண்டிலிருந்து வரிவிலக்கு ரத்து செய்யப்படும். 3.தகுதிவாய்ந்த Startupநிறுவனத்தினுடைய நியாயமான சந்தை மதிப்புக்கு மேல் உள்ள முதலீடுகளுக்கு அரசாங்கம் வரிவிலக்கு அளிக்கின்றது. இத்தகைய முதலீடுகளில் இந்திய குடியுரிமை ஏஞ்சல் முதலீட்டாளர்கள், குடும்பம் அல்லது துணிகர மூலதன நிதிகளாக பதிவு செய்யப்படாதசெய்த முதலீடுகள் ஆகியவை அடங்கும். மேலும், நியாயமான சந்தை மதிப்புக்கு மேல் இன்குபேட்டர்கள் செய்யும் முதலீடுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. 4மீச்சிறு, சிறு , நடுத்தர நிறுவனச் சட்டம், 2006 இன் கீழ் வரையறுக்கப் பட்டுள்ளபடி சிறு அல்லது நடுத்தர நிறுவனங்களில் நீண்ட கால மூலதன இலாபங்கள் முதலீடு செய்யப்பட்டால், அதாவது 54GB இன்கீழ் குடியிருப்பு சொத்து ஒன்றின் விற்பனை மீதான நீண்டகால மூலதன இலாபங்களுக்கான தொகையை தகுதியான start-ups நிறுவனங்களின் 50% அல்லது அதற்கு மேற்பட்ட பங்குகள்வரை முதலீடு செய்தால் வரிவிலக்கு அனுமதிக்கப்படுகின்றது., , , அத்தகைய பங்குகள் 5ஆண்டிற்குள் விற்கப்படவோ அல்லது மாற்றவோ கூடாது 5.ஆண்டின் கடைசி நாளில் வாக்களிக்கும் சக்தியைக் கொண்ட பங்குதாரரின் உரிமையில் மாற்றம் ஏற்பட்டால் அதன்வாயிலாக ஏற்படும் இழப்புகளையும் மூலதன இலாபங்களையும் முன்னோக்கி கொண்டு சென்று சரிசெய்து(Set Off Carry forworded) கொள்ள அனுமதிக்கப்படுகின்றது. இதற்காக தகுதிவாய்ந்த start-ups நிறுவனங்களில் 51 சதவீத வாக்களிக்கும் உரிமைகள் மாறாமல் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...