செவ்வாய், 9 ஜூன், 2020

FSSAI இன் கீழ் உணவகதொழிலை பதிவுசெய்தல்


FSSAI என்பது இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தை( Food Safety and Standards Authority of India) குறிக்கின்றது, இது இந்தியாவில் உணவு வணிகத்தை கண்காணிக்கவும் நிருவகிக்கவும் ஆன பொறுப்பினை வகிக்கும் ஒரு ஆணையமாகும். இந்தியாவில் அனைவராலும் நுகரப்படுகின்ற உணவினை கையாளுகின்ற உணவகமானது முக்கியமான வளர்ந்து வரும் தொழிலாகும், நம்மனைவரின் உடல் ஆரோக்கியமானது இந்த உணவினை பொறுத்தேஅமைகின்றது, அதனால்தான் இந்தியாவில் உணவகத் தொழிலை கட்டுபடுத்தி ஒழுங்குபடுத்துவதற்காக தற்போது FSSAI எனும் கட்டுப்பாட்டாளரை நிறுவுகை செய்யப்பட்டுள்ளது இந்தியாவில் உணவு வணிக இயக்குபவர்களை (FBO) பதிவுசெய்து உரிமம் வழங்குவதற்கான பொறுப்பினை இது வகிக்கின்றது மேலும் இந்தியாவில் உணவு வணிகத்தை நடத்துவதற்கான விதி முறைகளையும் ஒழுங்குமுறைகளையும் வரையறுக்கின்றது.அதன் முக்கியமான வசதி வாய்ப்புகளை பின்வருமாறு FSSAI இல் பதிவுசெய்திடுவது அனைத்து உணவு வணிக உரிமையாளர்களுக்கும் மிகவும் முக்கியமானதும் கட்டாயமானதுமான செயலாகும். உணவுப் பொருட்களின் உற்பத்தி, பதப்படுத்துதல், சேமிப்பு விநியோகம் விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு உணவு வணிக இயக்குபரும் கட்டாயமாக FSSAI பதிவு அல்லது உரிமத்தைப் பெற வேண்டும். இந்தபதிவானது 14 இலக்க பதிவு அல்லது உரிம எண் கொண்டதாகும், இது வணிகநிறுவனங்களால் தயாரிக்கப்படும் அனைத்து உணவுப் பொதிகளிலும் அச்சிடப்படுகிறது. FSSAI பதிவு அல்லது உரிமமானது பொதுவாக வணிகத்தின் அளவையும் வளாகஇடத்தையும் அடிப்படையாகக் கொண்டதாகும். FSSAI இல் பதிவானது : அ) மத்திய உரிமம் ஆ) மாநில உரிமம் இ) அடிப்படை பதிவு ஆகிய வகைகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் வருகின்றது. அ) FSSAI அடிப்படை பதிவினை அல்லது உரிமத்தினை பெறுவதற்கான படிமுறைகள் படிவம் A இன் கீழ் FSSAI இல் பதிவுசெய்திடுமாறு கோரி ஒரு விண்ணப்பத்தை உணவு மற்றும் பாதுகாப்புத் துறைக்கு சமர்ப்பிப்பதன் மூலம் FSSAI இல் பதிவு அல்லது உரிமம் பெறலாம். அவ்வாறு படிவம் A இன் கீழ் FSSAI இல் பதிவுசெய்வதற்காக சமர்ப்பிக்கபடும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படலாம் அல்லது விண்ணப்பத்த நாளிலிருந்து 7 நாட்களுக்குள் உணவு மற்றும் பாதுகாப்புத் துறையால் நிராகரிக்கப்படலாம், அவ்வாறு நிராகரிக்கபடும்போது அதற்கான காரணத்தினை விண்ணப்பதாரருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட வேண்டும். படிவம் A இன் கீழ் FSSAI இல் பதிவுசெய்திடுமாறு கோரி சமர்ப்பித்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப் பட்டால், விண்ணப்பதாரரின் புகைப்படத்துடன் உணவு மற்றும் பாதுகாப்புத் துறையால் அதற்கான பதிவு எண் ணுடன் பதிவுஅல்லது உரிமச் சான்றிதழ் வழங்கப்படும். உணவு வணிகம் நடைபெறும் இடத்தில் எந்தநேரத்திலும் பதிவுஅல்லது உரிமச் சான்றிதழை மிக முக்கியமாக கோரும்போது காண்பிப்பதற்கு ஏதுவாகFBO ஆனவர் அதனை தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த FSSAI இல் பதிவுஅல்லது உரிமம் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள்பின்வருமாறு அவ்வாறான படிவம் A இன் கீழான விண்ணப்பமானது எந்தவொரு பகுதியும் விடுபட்டுவிடாமல் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு கையொப்பமிடப்பட வேண்டும் FBO இனுடைய புகைப்படமும் அடையாள ஆதாரமும் அதில் இணைக்க்படவேஂண்டும் வணிகத்தை செயல்படுத்திடும் வளாகங்களை வைத்திருப்பதற்கான சான்று (எ.கா. வாடகை ஒப்பந்தம், உரிமையாளர் ஆவணங்கள் போன்றவை) நிறுவனத்தின் விதிகளுக்கான ஆவணங்கள் / கூட்டாண்மை நிறுவனத்தின் பத்திரம் / நிறுவனத்தின் பதிவு சான்றிதழ் போன்றவை. நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்ற அல்லது கையாளப்பட வேண்டிய உணவுப் பொருட்களின் பட்டியல் உணவு பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு திட்டம் ஆ) மாநில உரிமம் மற்றும் மத்திய உரிமத்தைப் பெறுவதற்கான படிமுறைகள் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பமானது எந்தவொரு பகுதியும் விடுபட்டுவிடாமல் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு கையொப்பமிடப்பட வேண்டும் ஒருவர் கையாளவிரும்பும் உணவுப் பொருட்கள் ஒன்றின் பெயரை குறிப்பிட்டும் அதற்கான அறிவிப்பு ம் இருக்கவேண்டும் . அந்த விண்ணப்பத்துடன் துறைசார் கட்டணம் செலுத்திடவேண்டும் அதன்பின்னர் உணவு ஆய்வாளர்களில் ஒருவர் உணவு வணிக இடம் அல்லது உற்பத்தி செயல்முறைக்கு ஆய்வு நோக்கத்திற்காக வருவார் FSSAI துறையானது இதற்கான ஆவணங்களையும் வணிக இடத்தினையும் பார்வையிட்டு அனைத்து விசாரணைகளையும் பரிசோதனைகளையும் செய்தவுடன், FSSAI உரிமம் வழங்கப்படும். அதனைதொடர்ந்து FSSAI இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட அல்லது உரிமம் பெற்ற எந்தவொரு நபரும் FSS சட்டம், 2006 இன் கீழ் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கடைபிடிக்க வேண்டும். உணவு பாதுகாப்பு அதிகாரி பொதுவாக உணவு வணிக இயக்குபவரின் வசதியை ஆய்வு செய்து ஒரு சரிபார்ப்பு பட்டியலைப் பயன்படுத்தி ஒழுங்குமுறைக்கு இணங்குவதற்கான அளவை அடையாளம் காட்டுகிறார்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...