சனி, 20 ஜூன், 2020

களிமண் பந்துகளும் அவற்றில் மறைக்கப்பட்ட புதையலும்


ஒரு நாள் நபரொருவர் கடலோரத்திலிருந்த குகைகளில் ஏதேனும் பொருட்கள் இருக்கின்றதாஅல்லது புதையல் ஏதேனும் கிடைக்குமாவென ஆய்வுசெய்து கொண்டிருந்தார். ஒரு குகையில் மட்டும் உடைக்கமுடியாத கடினமான களிமண் பந்துகள் ஒரு பையிலிருப்பதை அவர் கண்டுபிடித்தார். யாரோ களிமண்ணை உருட்டி பந்துகளை போன்று செய்தபின் அவற்றை உடைக்கமுடியாத அளவிற்கு வெயிலில் காய வைத்து கெட்டிபடுத்தி பையில் ஒன்றாக சேர்த்து இந்த குகையில் வைத்து விட்டு சென்று விட்டதாகத் தெரிகிறது என தமக்குள் எண்ணினார் . நாம் புதையல் எதாவது கிடைக்கும் அதனை கொண்டு பெரிய பணக்காரணாக ஆகலாம் என்ற ஆவலோடு இந்த குகைக்குள் வந்து ஆய்வு செய்தால் நமக்கு எதுவுமே கிடைக்காமல் சதி செய்து விட்டனரே கடைசியில் வெறும் களிமண்ணாலான இந்த பந்துகள் மட்டும் தான் நமக்கு கிடைத்தன சே என்ற வெறுப்புடன் அவர் குகையிலிருந்து அந்த பையை மட்டும் வெளியே எடுத்துகொண்டுவந்தார். மேலும் அவர் கடற்கரையில் உலாவும்போது, ஒன்றும் இல்லாத களிமண் பந்துகளை வீட்டிற்கு எடுத்து கொண்டு சென்று என்னசெய்வது என்ற மனச்சோர்வினால் அவற்றை ஒவ்வொன்றாக கடலுக்குள் வீசி எறிந்து கொண்டேவந்தார். இந்நிலையில் களிமண்ணாலான இந்த பந்துகளில் என்னதான் இருக்கின்றது பார்த்திடுவோமே என சிறு ஆர்வத்துடன் ஒரு களிமண் பந்தை மட்டும் மிககடிணமாக முயன்று உடைத்து பார்த்தபோது அதில் அழகான, விலைமதிப்பற்ற வைரகல் ஒன்று இருப்பதை கண்டதும் அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது ஆஹா பரவாயில்லையே நமக்கு புதையல் கிடைத்துவிட்டதே என மகிழ்ந்தார் மேலும் இதனால் உற்சாகமடைந்த அம்மனிதன் கடலில் எறியாமல் மிகுதி கைவசம் இருந்த ஒன்றிரண்டு களிமண்பந்துகளை உடைத்து பார்த்தபோதும் அவைகளிலும் விலைமதிப்பற்ற வைரகற்கள் இருப்பதை கண்டார் அடடா பையிலிருந்த ஏராளமான களிமண் பந்துகளிலும் மறைத்து வைக்கப்பட்ட கோடிக்கணக்கான மதிப்புகொண்ட வைரகற்கள் இருந்திருக்குமே அவைகள் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாமல் போய்விட்டது என்ற பழமொழிக்கு ஏற்ப இவ்வளவு பணம் சம்பாதிப்பதற்கான ஒரு பொன்னான வாய்ப்பை இழந்துவிடுவதற்காக. அவ்வாறான களிமண் பந்துகளை மறைத்து வைத்திருந்த புதையலுடன் , நாமே கடலில் விட்டெறிந்துவிட்டோமே என மிகமனவருத்தத்துடன் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்றுவி்ட்டார் அந்த மனிதன் களிமண் பந்துகளுக்குள் இருக்கும் உண்மையான புதையல் வெளியில் தெரியாததால் அதனை தவறாக கணித்து இழந்ததைபோன்று இந்த புவியில் வாழும் நாமும் நமக்கு கிடைக்கின்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிதோற்றத்தை மட்டும் கண்டுமயங்கி தயங்கி அவற்றிலிருந்து அரும்பெரும் செல்வம் எதுவும் கிடைக்காது என தவறாக கணக்கிட்டு அவ்வாறான வாய்ப்புகளை நாமே தவறவிடுகின்றோம் ஆயினும் அவைகளை இழந்தபின்னரே அவற்றிற்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள உண்மையான புதையலைக் கண்டுபிடிக்க எங்களுக்கு நேரம் இல்லையே நாங்கள் என்னசெய்வது என நமக்கான அருமையான வாய்ப்பினை நாமே இழக்க காரணமாகிவிடுகின்றோம் என்பதே மிக எதார்த்தமான உண்மை நிலவரமாகும் இந்த புவியில் வாழ்கின்ற நாம் எல்லோரும் தனித்துவமானவர் கள் . நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு புதையல் இருக்கிறது. அந்தந்த நபர் பார்க்கும் விதத்தில் மட்டுமே அந்த புதையலை காணமுடியும் கண்டுபிடித்திடமுடியும் , களிமண் பந்தை புத்திசாலித்தனமாக உடைத்து பார்த்திடும்போது மட்டுமே அதற்குள் இருக்கின்ற வைரகற்கள் பிரகாசிக்கத் துவங்குவதை போன்று நமக்குள் மறைக்கப்பட்ட வைர கற்களை அவை களிமண்போன்று மறைக்கப்பட்டிருப்பதால் விட்டுவிடாமல் முயன்றால் அந்த அதிர்ஷ்டத்தை நாம் இழக்காமல் நாம் வெற்றி பெறுவோம்என்பது திண்ணம் .

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...