வியாழன், 4 ஜூன், 2020

புதிய 2020 ஆண்டில்சசேவ (GST) கீழ் செய்யப்பட்ட முக்கிய மாறுதல்கள்


மத்திய மறைமுகவரி மற்றும் சுங்கவரி வாரியத்தின் சுற்றறிக்கை எண் 75/2019 நாள்26.12.2019 இன் படி 1.01.01.2020 முதல் நமக்கு பொருளை அனுப்பியவர் அல்லது சேவையை வழங்கியோர் GSTR-1 எனும் படிவத்தினை சமர்ப்பிக்க தவறியிருந்தால் பொருள் அல்லது சேவை வழங்கிய பட்டியல் அல்லது வரவுகுறிப்பு தொகையில் 10 சதவிகிதம் மட்டும் ITC எனும் உள்ளீட்டு வரிவரவை எடுத்து கொள்ள முடியும் இதற்குமுன்பு20 சதவிகிதம் மட்டும் ITC அனுமதிக்கப்பட்டது 2. பொருளை அல்லது சேவையை பெறாமலேயே அல்லது இல்லாத கற்பனையான நபரிடமிருந்து பொருளை அல்லது சேவையை பெற்றதாக fraudulently அடிப்படையில் உருவாக்கப்பட்ட பட்டியலின் தொகையானது மின்னனு வரவு பேரேட்டில் வரவு வைக்கப்பட்டதொகையை திரும்ப பெறுவதற்கு அல்லது வரிசெலுத்துவதில் சரிசெய்வதை தொடர்புடைய பகுதி சசேவ(GST) ஆணையருக்கு தடுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது 3.தொடர்ந்துஇரண்டு மாதங்களில் காலாண்டுகளில் GSTR-1 படிவத்தை சமர்ப்பிக்க தவறியிருந்தால் அந்நிறுவனத்தினரால் தங்களுடைய நிறுவனத்திற்காக E-way Bill எனும் மின்னனுவழிபட்டியலை இணையத்தின் வாயிலாக 11, 1. 2020முதல் உருவாக்கமுடியாது 4.01.04.2020 முதல் ஆண்டு விற்பணை வருமானம் 100 கோடிக்குமேல் உள்ள நிறுவனங்கள் B2B அடிப்படையில் விற்பனைசெய்யப்படும் பொருளிற்கு கண்டிப்பாக E-way Bill எனும் மின்னனுவழிபட்டியலை இணையத்தின் வாயிலாக உருவாக்கி கொண்டுசெல்லும் பொருளுடன் கொண்டு செல்ல வேண்டும் 5. மத்திய மறைமுகவரி மற்றும் சுங்கவரி வாரியத்தின் சுற்றறிக்கை எண் 72/2019 நாள்13.12.2019 இன் படி ஆண்டு விற்பணை வருமானம் 100 கோடிக்குமேல் உள்ள நிறுவனங்கள் B2C அடிப்படையில் விற்பனைசெய்யப்படும் பொருளிற்காக உருவாக்கப்படும் விற்பணை பட்டியலில் QR Code என சுருக்கமாக அழைக்கப்பெறும் விரைவு பதில் குறியீட்டுடன் (Quick Response Code) மட்டுமே 01.04.2020 முதல் விற்பணை பட்டியலில் இடம்பெறவேண்டும் 6.01.04.2020 முதல் தானியங்கியாக சசேவ(GST) நடைமுறையில் அறிக்கைகள் உருவாகிடவும்சசேவ(GST) நடைமுறையை எளிமைபடுத்திடவும் மத்திய மறைமுகவரி மற்றும் சுங்கவரி வாரியமானது GST FORM ANX- 1, GST FORM ANX- 2 ஆகிய இருபடிவங்களை அறிமுகப்படுத்தியுள்ளது 7. நிறுவனங்கள் சசேவ (GST) துறையில் தங்களுடைய குறைகளை களைய கோரும் அனைத்து கடித போக்குவரத்துகளிலும் இணையத்தின் வாயிலாக உருவாக்கப்படும் DIN என சுருக்கமாக அழைக்கப்படும்ஆவணசுட்டிஎண் (Document Identification Number) மட்டுமேகுறிப்பிட வேண்டும் 8 மேலும் TRAN-1 & TRAN-2ஆகிய படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 31.03 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...