திங்கள், 15 ஜூன், 2020

நிறுவனங்களின் விவகாரங்கள் துறை அமைச்சகத்திலிருந்து (MCA) வெளியிடபட்டுள்ள அனைத்துதளர்வுஅறிவிப்புகளின் சுருக்கம்


தற்போதைய COVID-19 இன் நிகழ்வுகளின்போது நிறுவனங்களின் விவகாரங்கள் துறை அமைச்சகத்திலிருந்து (MCA) வெளியிடபட்டுள்ள அனைத்துதளர்வுஅறிவிப்புகளின் சுருக்கம் 1. புதிய நிறுவனங்களின் தொடக்கத் திட்டம்(CFSS): நிறுவனங்களும் அல்லது LLPs என சுருக்கமாக அழைக்கபெறும் வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமங்களும் தற்போதைய COVID-19 இன் நிகழ்வுகளினால் எந்தவொரு விவரஅறிக்கைகள், அறிக்கைகள், ஆவணங்கள் போன்றவற்றை MCA இணையதளத்தில் கால தாமதமாக சமர்ப்பிக்கும்போது அதற்கான தாமத/ கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு 2020 ஏப்ரல் 1 முதல் 2020 செப்டம்பர் 30 வரை தடை விதிக்கப்படுகின்றது. . Moratorium எனும் சமர்ப்பிக்கும் காலத்தை ஒத்திபோடுவதால் ஏற்படும் நன்மையானது அவ்வாறு சமர்ப்பிப்பதற்கான தேதிக்குபதிலாக காலதாமதமாக இந்த காலகட்டத்தில் சமர்ப்பிக்கவிருக்கும் படிவங்கள், விவரஅறிக்கைகள் மட்டுமல்லாமல், இந்த காலத்திற்கு முன்பே சமர்ப்பிக்க தவறியுள்ளவர்களுக்கும் கிடைக்கும். மேலும் இந்த தளர்வின் பயன் ஏற்கனவேகாலதாமதமாகசமர்ப்பித்த நிறுவனங்களுக்கும் கிடைக்கும் இது இணக்கச் சுமையை மட்டுமல்ல, நிதிச் சுமையைகுறைக்கவும் வழிவகுக்கும் 2. இரண்டு இயக்குநர்களின்குழுக் கூட்டங்களுக்கு இடையில் இடைவெளியை நீட்டித்தல்: நிறுவனங்களின் சட்டம் 2013 இன் படி, எந்தவொரு நிறுவனமும் ஒவ்வொரு ஆண்டும் இயக்குநர்களின் குழுக் கூட்டங்கள் குறைந்தபட்சம் நான்காவது(4) நடத்த வேண்டும், அவ்வாறு நடத்தபெறும் தொடர்ச்சியான எந்தஇரண்டு இயக்கு நர்களின் குழுக்கூட்டங்களுக்கு இடையில் அதிகபட்சம் 120 நாட்கள் இடைவெளிக்குமிகாமல் நடத்திட வேண்டும் என்று குறிப்பிடும் கால இடைவெளியை மேலும் 60 நாட்கள் நீட்டித்துள்ளது, அதாவது இதன் மூலம் தொடர்ச்சியான இரண்டு இயக்குநர்களின் குழுக் கூட்டங்களுக்கு இடையிலான இடைவெளி வரம்பை அதிகபட்சமாக 120 நாட்கள் என்பதற்கு பதிலாக 60 நாட்கள் நீட்டித்து 180 நாட்களாக உயர்த்தியுள்ளது. இந்த ஒரு முறை தளர்வானது அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு அதாவது செப்டம்பர் 30, 2020 வரை கிடைக்கிறது. இதன் விளைவாகசமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக COVID 19 தொற்றுநோய்களின் போது குழு கூட்டங்களை நடத்துவதற்கான தேவையை குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 3. கானொளிகாட்சிமாநாடு அல்லது பிற பேச்சொலிகாட்சி வழிமுறைகள் மூலம் EGM என சுருக்கமாக அழைக்கபெறும் வழக்கமற்ற அசாதாரான பொதுப்பேரவைகூட்டம் நடத்துதல் : கானொளிகாட்சிமாநாடு எனும் வசதியின் மூலம் ஆண்டு பொதுப்பேரவைக் கூட்டங்களை நடத்தும் முறையை நிறுவனங்களின் விவகாரங்களின்துறை அமைச்சகமானது(MCA) தெளிவுபடுத்தியுள்ளது. இச்சுற்றறிக்கையில் பொதுப்பேரவையில்( GM) தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான செயல்கள், அவை “அவசர நடவடிக்கை (urgent nature)”. மட்டும் இந்த சுற்றறிக்கைபொருந்தும் மேலும்இது அனைத்து வகை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இது அனைத்து வகையான அசாதாரண பொதுக் கூட்டத்துடனும், வருடாந்திர பொதுக் கூட்டத்துடனும் தொடர்புடையது. இந்த சுற்றறிக்கையின்படி, நிறுவனம் சாதாரண வணிக நடவடிக்கை களுக்கான தீர்மானத்தை மட்டும் நிறைவேற்ற முடியாது. அதனோடு இந்த சாதாரண வணிகநட வடிக்கை களைப் பற்றி விவாதிக்க முடியாது, மேலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 60 நாட்களுக்குள் MGT-14 எனும் படிவத்தை சமர்ப்பிக்கவேண்டும், அந்த படிவத்துடன் சுற்றறிக்கையும் விதிகளும் மிகச்சரியாக பின்பற்றப்பட்டுள்ளன என்ற அறிவிப்பினையும்சேர்த்து குறிப்பிடவேண்டும். 4. சுதந்திர இயக்குநர்களின் குழுக்கூட்டங்கள்: நிறுவனங்களின் சட்டம் 2013 இன் அட்டவணை IVஇல்,எந்தவொரு நிறுவனத்திலும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் சுதந்திர இயக்குநர்களின் (independent directors (ID)) குழுக்கூட்டத்தினை ஒன்றாவது மற்ற சுதந்திரமற்ற இயக்குநர்கள் நிருவாக உறுப்பினர்கள் ஆகியோர்களின் வருகை இல்லாமல் நடத்த வேண்டும் என்று கட்டளையிடுகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் அவ்வாறான சுதந்திர இயக்குநர்களின் குழுக் (ID) கூட்டம் ஒன்றாவது கண்டிப்பாக நடத்தவேண்டும் அவ்வாறான குழுக்கூட்டத்தில் (i) சுதந்திரமற்ற இயக்குநர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இயக்குநர்கள் குழுவின் செயல்திறனை மதிப்பாய்வு செய்தல்; (ii) நிர்வாகஇயக்குநர்கள் நிர்வாகமற்ற இயக்குநர்கள் ஆகியேர்களின் கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொண்டு தலைவரின் செயல்திறனை மதிப்பாய்வு செய்தல்; (iii) நிர்வாகத்திற்கும் இயக்குநர்கள் குழுவிற்கும் இடையிலான தரம், அளவு தகவல்களின் காலத்தை மதிப்பிடுதல், ஆகிய பணிகளை செயற்படுத்திடவேண்டும் பொதுவாக அத்தகைய சுதந்திர இயக்குநர்களின் கூட்டங்களை நிதியாண்டின் இறுதியில் நடத்துவது வழக்கம். தற்போதைய COVID 19 தொற்றுநோய்களின் போது சமூக இடைவெளி பின்பற்றவேண்டியுள்ளதால் இந்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட சமூக இடைவெளிகள்,சுதந்திர இயக்குநர்களின்(ID) குழுகூட்டத்தினை பின்பற்றி நடத்த முடியாது 31 மார்ச் 2020 க்கு முன்னர் இதுபோன்ற கூட்டங்களை உண்மையாக நடத்த வேண்டும். இந்த சூழ்நிலைகளில், MCA ஆனது நிறுவனங்கள் அவ்வாறு குறைந்தபட்சம் நிதியாண்டு ஒன்றிற்கு ஒரு சுதந்திர இயக்குநர்களின்(ID) குழுக் கூட்டத்தையாவது நடத்த முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளது 2019-20 நிதியாண்டு,MCA இதை சட்டப்பூர்வ இணக்கமாக பார்க்காது விதிகள். அவ்வாறு இருப்பினும், MCAஆனது இந்த தளர்வின் அடிப்படையில் , கூட்டத்தை நடத்த வேண்டாம் என்றும் அதற்குபதிலாக சுதந்திர இயக்குநர்களின் (ID)குழுக்கள் தங்களுடைய கருத்துக்களை கைபேசி, மின்னஞ்சல் அல்லது வேறு எந்த தகவல்தொடர்பு முறையினாலும் தங்களுக்குள்பகிரந்து கொள்ளுமாறு செய்யலாம்என்றும் அதுவும் வழக்கம்போன்ற சுதந்திர இயக்குநர்களின் (ID)குழுக்கூட்டம் நடத்தியது போன்று பொருந்தும் என ஊக்குவித்துள்ளது . இந்த கானொளிமாநாடு சந்திப்பு வசதி அல்லது பிற பேச்சொலி காட்சி வழிமுறைகள் மூலம் சுதந்திர இயக்குநர்களின் குழுக் (ID) கூட்டத்தை நடத்தி . அதில் சுதந்திர இயக்குநர்களின் குழுக் (ID) களின் கூட்ட அழைப்பு அல்லது மின்னஞ்சல்கள் மூலம் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறுள் அனுமதித்துள்ளது 5. தணிக்கையாளர் அறிக்கை: நிறுவனங்களின் (தணிக்கையாளர் அறிக்கை) ஆணை, 2020 (CARO 2020)இன்படி நிறுவனங்களின் சட்டரீதியான தணிக்கைகளின் புதிய வடிவத்தை 2020 பிப்ரவரி 25 அன்று MCAஆனது அறிவித்துள்ளது. ,அதன்படி நிறுவனங்களின் (தணிக்கையாளர் அறிக்கை) ஆணை 2016. CARO ஏப்ரல் 1, 2019 அன்று அல்லது அதற்குப் பிறகு தொடங்கும் அனைத்து சட்டரீதியான தணிக்கைகளுக்கும் (2020) பொருந்தும்என்றும் இது 2019-20 நிதியாண்டுடன் தொடர்புடையது. என்றும் மேலும் CARO 2020 இல் முந்தைய ஆணைக்கு பதிலாக 2020-21 நிதியாண்டுக்கு MCA இப்போது ஒத்திவைத்துள்ளது. 6. வைப்புத்தொகை விதிகள்: வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வதன் மூலம் கடன் வாங்கும் அதிகாரங்களைப் பயன்படுத்துவது இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு மிகவும் பொதுவானதாகும் , இது நிறுவனங்கள் (வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வது) விதிகள், 2014 இன் கீழ் இணங்குவதற்கு உட்பட்டது. வைப்புத்தொகைகளை நிலுவையில் வைத்துள்ள ஒரு நிறுவனம்அடுத்த நிதியாண்டில் முதிர்ச்சியடையும் அதன் வைப்புத்தொகையின் குறைந்தபட்சம் 20%வைப்புதொகையை தனியாக ஒதுக்கி வைத்திருக்க வேண்டும் , ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 30 அல்லது அதற்கு முன்னதாக ஒரு தனியானநிதியை வைப்புத் திருப்பிச் செலுத்துவதற்கு ஏதுவாக வைத்திருக்கவேண்டும் அதாவது 2020-21 நிதியாண்டில் . முதிர்ச்சி யடைந்த வைப்புத்தொகைகளுக்கு, அவ்வைப்புத் தொகைகளை திருப்பிச் செலுத்தும் கையிருப்பு வைப்பு தொகையாக செலுத்துவதற்கான தேதியை MCAஆனது 2020 ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது. 7. புதியதாக வணிகத்தைத் தொடங்குவதற்கான அறிவிப்பு: புதியதாகபதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள், தங்களுடைய புதிய வணிகத்தைத் தொடங்குவதற்கான அறிவிப்பை அவை தங்களுடைய வணிக நடவடிக்கைகளை துவங்கிய 6 மாதங்களுக்குள் அதற்கானஅறிவிப்பை (படிவம் 20-A) சமர்ப்பிக்க வேண்டும் . இருப்பினும், புதிதாக பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் தற்போதைய COVID 19 தொற்றுநோய்களின் போது எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு, MCA அத்தகைய அறிவிப்பிற்கான காலக்கெடுவை துவங்கிய தேதியிலிருந்து 6 மாதங்களிலிருந்து 1 ஆண்டா க நீட்டித்துள்ளது. 8. இயக்குநரின் குடியிருப்பு நிலை: நிறுவனங்களின் சட்டம் 2013 இன் கீழ், ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 182 நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் இயக்குநர் ஒருவராவது இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது . பல்வேறு நாடுகளில் (இந்தியா உட்பட) COVID 19 தொற்றுநோய்களின் போது விதித்துள்ள நீடித்த பயணத் தடை காரணமாக, 2019-20 நிதியாண்டில் இந்தியாவில் குறைந்தபட்சம் 182 நாட்கள் தங்குவதற்கு 'இந்திய குடிமகனாகவாழும்' இயக்குநர்களால் இணங்க முடியாமல் போகலாம். இத்தகைய சிரமங்களை உணர்ந்து, 2019-20 நிதியாண்டிற்கான இணக்கமற்றதான செயலில் குறைந்தபட்ச இந்தியாவில் தங்கியிருப்பதை பூர்த்தி செய்யாதது.குறித்து MCA நடவடிக்கை எதுவும் எடுக்காது 9. மார்ச் 31, 2021 அன்று முதிர்ச்சியடைந்த கடன்பத்திரங்கள்: நிறுவனங்கள் (பங்கு மூலதனம் மற்றும் கடன் பத்திரங்கள்), 2014 இன் விதி 18 (7) இன் படி, அனைத்து நிறுவனங்களும் (அனைத்து இந்திய நிதி நிறுவனங்கள் வங்கி நிறுவனங்கள் ஆகியவை தவிர) குறிப்பிட்ட ஒரு தொகையை முதலீடு செய்யவோ அல்லது கையிருப்பு வைத்திருக்கவோ வேண்டும் ஆண்டின் முதிர்ச்சியடைந்த கடன்பத்திரங்களின் தொகையில் 15% க்கும் குறையாமல், அடுத்த ஆண்டு மார்ச் 31 அன்று முடிவடையும்போது. அத்தகைய தொகை முதலீடுகளின் அல்லது வைப்புகளின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறைகளைப் பயன்படுத்தி முதலீடு செய்துகொள்ளலாம், (அ) எந்தவொரு நாட்டுடைமையாக்கப்ட்ட வங்கியிலும் வைப்புத்தொகையாக , எந்தவொரு கட்டணமும் அல்லது உரிமையும் இல்லாமல்; (ஆ) மத்திய அரசு அல்லது எந்த மாநில அரசின் கணக்கிடப்படாத பத்திரங்களில் வைத்திருக்கலாம் . அத்தகைய வைப்பீடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 30 அல்லது அதற்கு முன்னர் முதலீடுகள் / வைப்புக்களாக செய்யப்பட வேண்டும் மற்றும் மார்ச்சு31 இல் முதிர்ச்சியடைந்த கடன்பத்திரங்களின் மதிப்பில் 15% க்கும் குறைவாக இருக்கக்கூடாது மேலும், அத்தகைய தொகைகள் முதிர்ச்சியடைந்த கடன் பத்திரங்களை மீட்பதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்த முடியாது. மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் 2020 2021. நிதியாண்டில் முதிர்ச்சியடைந்த கடன் பத்திரங்கள் தொடர்பான இந்த வைப்பு மற்றும் முதலீட்டு இணக்கத்தின் கடைசி தேதியை MCA ஆனது ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது 10. COVID-19 க்கான சமூக பொறுப்புணர்வு நிதிகளின் செலவு: பொருள் எண். (viii) நிறுவனங்கள் தங்களுடைய சமூக பொறுப்புணர்வு கடமைகளை நிறைவேற்றுவதில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை களை விவரிக்கும் நிறுவனங்களின் சட்டம் 2013 இன் அட்டவணை VII இன், இடைநிலை சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் நிவாரணத்திற்காக CG அமைத்த எந்தவொரு நிதிக்கும் சமூக பொறுப்புணர்வு செலவு பங்களிப்பை வழங்க அனுமதிக்கிறது. . அதன்படி, PM CARES நிதிக்கு வழங்கப்படும் எந்தவொரு பங்களிப்பும் நிறுவனங்களின் சட்டம் 2013 இன்நிறுவனங்களின் கீழ் சமூக பொறுப்புணர்வு செலவாக தகுதி பெறும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. முதல்வர் நிவாரணம் அல்லது மாநில நிவாரண நிதிக்கான பங்களிப்பு சமூக பொறுப்புணர்வு பொருந்தாது. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பங்களிப்பு சமூக பொறுப்புணர்வுக்கு தகுதி பெறும். COVID-19 தொடர்பான செயல்பாடுகளுக்கான நிதி செலவு CSR இற்கு பொருந்தாது. ஊரடங்கு காலத்தில் சம்பளம் / ஊதியம் வழங்குவது என்பது சமூக பொறுப்புணர்வு செலவு என ஏற்றுக்கொள்ளக்கூடிய தகுதி பெறாது. ஊரடங்கு காலத்தில் சாதாரண தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் சமூக பொறுப்புணர்வு செலவாக கணக்கிடப்படாது. தற்காலிக / சாதாரண தொழிலாளர்களுக்கு பூரிப்பூதியம் செலுத்துதல் சமூக பொறுப்புணர்வு செலவாக தகுதி பெறும் இது இயக்குநர்களின் குழுவில் வெளிப்படையான அறிவிப்பு செய்வதன் வாயிலாக வும் சட்டரீதியான கணக்காய்வாளரால் முறையாக சான்றளிக்கப்படுவதன் மூலமுமஒரு முறை மட்டும் விதிவிலக்கு அனுமதிக்கப்படுகின்றது 11. DIR-3KYC எனும் படிவத்தை கட்டணமில்லாமல்சமர்ப்பித்தல்: DIR-3KYC / DIR-3KYC WEB ஆகிய படிவங்களை சமர்ப்பிக்காததால் DIN எனும் இயக்குநர்களின் பதிவுஎண் வைத்திருப்பவர்கள் தங்களுடைய பதிவுஎண்கள்(DIN) செயல்படாதவை ('Deactivated') எனக் குறிக்கப்பட்டன மேலும் செயலில் இணக்கமல்லாத ( 'ACTIVE non- compliant') எனக் குறிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் செயல்படும் மின்படிவத்தை(ACTIVE eform ) மீண்டும் சமர்ப்பித்து இணக்கமாக இருக்க ஊக்குவிக்கப்படுகிறது , ஏனெனில் 1 ஏப்ரல் முதல் செப்டம்பர் 30 வரை சமர்ப்பிப்பு கட்டணம் முறையே ரூபாய் 5000/10000 இல்லாமல். DIR-3KYC / DIR-3KYC WEB / ACTIVE படிவங்களை சமர்ப்பித்தல் செய்திடலாம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...