சனி, 4 ஜூலை, 2020

எந்தவொரு பிரச்சினையையும் வித்தியாசமாக தீர்வுசெய்தல்


ஒரு கிராமத்தில் வயதானவர் ஒருவர் தனது மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். அவ்வயதானவர் காலமான பிறகு. அவருடைய வழக்கறிஞர் ஒருவர் அந்த வயதானவருடைய மூன்று மகன்களிடம் வந்து அந்த வயதானவர் தனது விருப்பப்படி எழுதி பதிவுசெய்திருந்த உயிலின்படி அவருடைய வீடுகள், வயல்கள் , இதர சொத்துகள் ஆகிய அனைத்தயும் பிரித்துக் கொடுத்தார். அந்த உயலின்மிகுதியாக அவருடைய குடும்பத்தில் 17 பசுமாடுகளை வளர்த்துவந்ததில் அந்த வயதானவரின். விரும்பியவாறு எழுதி பதிவுசெய்திருந்த உயிலின்படி, "மூத்த மகன் 17 பசுமாடுகளில் பாதி (1/2) பெற வேண்டும். இரண்டாவதான நடு மகனுக்கு 17 பசுமாடுகளில் மூன்றில் ஒரு பங்கு (1/3 ) பெறவேண்டும் ,மூன்றாவதான இளைய மகனுக்கு 17 பசுமாடுகளில் ஒன்பதில் ஒருபாகம் (1/9) கொடுக்கப்பட வேண்டும். " எனக் குறிப்பிட்டிருந்ததால் அதனை நீங்களே உங்களுக்குள் தகராறு இல்லாமல் பிரித்துகொள்க என கூறிஉயிலின் நகலில் அம்மூவரிடமும் கையெழுத்து வாங்கி கொண்டு சென்றுவிட்டார் குடும்பத்தில் பொதுவாக இதுவரை வளர்த்து வந்த இந்த 17 பசுமாடுகளை தங்களுடைய தந்தையின் உயிலின் படி எவ்வாறு பிரித்துகொள்வது என அந்த சகோதரரர்கள் மூவரும் திகைத்து உட்கார்ந்துவிட்டனர் . அவர்களால் அனைத்து சொத்துக்களையும் பிரிக்க முடிந்தது, ஆனால் அவர்களுக்கிடையில் 17 மாடுகளை மட்டும் பாகம் பிரிக்க முடியவில்லை. அந்த 17 மாடுகளை மட்டும் தங்களுக்குள் பாகம் பிரிக்க முடியாததால், தங்களுடைய தந்தையின் விருப்பப்படி உயிலில் குறிப்பிடப்பட்ட வாறு. அக்கிராமத்தில் இருந்த வயதான நல்ல நேர்மையான புத்திசாலியான மனிதர் ஒருவரிடம் சென்று தங்களுடைய பிரிச்சினையை தீர்வுசெய்திடுமாறு மூன்று சகோதரர்களும் கோரலாம் எனமுடிவுசெய்தனர், அவர் ஊருக்கு வெளியே வசித்து வந்தார் .அதனால் மூன்று சகோதரர்களும் அந்த பாகம்பிரிக்கமுடியாத மாடுகள் அனைத்தையும் கும்பலாக புத்திசாலியான நேர்மையான பெரியவருடைய வீட்டிற்கு ஓட்டிசென்று தங்களுடைய குறைகளைகூறி தங்களுடைய கையோடு எடுத்தசென்றிருந்த தங்களுடைய தந்தையாரின் உயிலின் நகலையும் அவரிடம் கொடுத்தனர் மேலும் தங்களுடைய தந்தையின் விருப்பத்தைப் பற்றி அவரிடம் கூறி அதன்படி பிரச்சினை எதுவும் இல்லாமல் அந்த 17 மாடுகளை தங்களுக்கு பிரித்து அளிக்குமாறு கோரினார்கள். அந்த புத்திசாலியான வயதானமனிதர் மிகவும் கவனமாகவும் பொறுமையுடனும் அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டார். மேலும்அந்த உயிலையும் நன்கு படித்தறிந்து கொண்டு தன்னுடைய வீட்டிடலிருந்த சொந்த பசு மாடு ஒன்றினை சகோதரர்கள் மூவரும் கொண்டுவந்த பசுமாடுகளுடன் சேர்த்து தற்போது மொத்தம்எத்தனை பசுமாடுகள் இருக்கின்றன என கணக்கிடுமாறு கூறினார் உடன் சகோதரர்கள் மூவரும் மிககவணமாக பசுமாடுகளை கணக்கிட்டபோது இப்போது மொத்த பசுக்களின் எண்ணிக்கை 18 ஆக இருக்கின்றன என கூறினர்.மிகவும் சரி என ஆமோதித்த அந்த புத்திசாலியான வயதானமனிதர் அந்த சகோதர்ரகளுடைய தந்தையின் உயிலை திறந்து படித்து அதில் கூறிய விவரங்களை கூறுமாறு சகோதர்ரகளில் ஒருவனிடம் கோரினார் , பின்னர் அதற்கேற்ப பசுக்களை பிரித் திட முடிவெடுத்தார் அதாவது முதலில் 18 பசுக்களில் பாதி (1/2) பாகமான 9 பசுக்களை மூத்த மகனுக்கு கொடுத்தார் .இரண்டாவதாக 18 பசுக்களில் மூன்றில் ஒரு பங்கு (1/3) பாகமான 6 பசுக்களை இரண்டாவது நடு மகனுக்கு கொடுத்தார் மூன்றாவதாாக 18 பசுக்ககளில் ஒன்பதில் ஒரு பங்கு (1/9)பாகமான 2 பசுக்கள் மூன்றாவதாக இளைய மகனுக்கு கொடுத்தார் இப்போது அவர்களுடைய உயிலின்படி பிரித்து கொடுத்த மொத்த பசுக்களின் (9 + 6 + 2 = 17)ஆகின்றது என கணக்கிட்டார் நான்காவதாக இந்த பசுக்களுடன் ஒன்றுசேர்த்த தன்னுடைய ஒரு பசுவை புத்திசாலியான வயதானமனிதர் தன்னிடம் வைத்து கொண்டு சகோதர்களின் தந்தையின்உயிலின்படி பசுக்களை பிரித்து கொடுத்தவாறு அவற்றை அவரவர்கள் கொண்டுசெல்லுமாறு அம்மூன்று சகோதர்களிடமும் அறிவுரை அனுப்பிவைத்தார் ஆம் நம்மால் ஒரு சில நேரங்களில் எந்தவொரு பிரச்சினைக்கும் உரிய தீர்வினை கண்டுபிடிப்பது என்பது கடினமாக இருந்தாலும். ஒரு நபர் ஒரு பிரிச்சினையின் . பொதுவான நிலையைக் கண்டுபிடிக்க முடிந்தால் அந்த பிரச்சினயை அவரால் எளிதாக தீர்வுசெய்திட முடியும். மேலும் எந்தொரு பிரச்சினைக்கும்உரிய தீர்வை அடைய, முதல் படி அந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு இருக்கிறது என்று நம்புவதாகும்.ஆயினும் அந்த பிரச்சினைக்கு உரிய ஒரு தீர்வு இல்லை என்று நாம் கருதினால்.அந்த தீர்வினை நம்மால் கண்டிப்பாக அடையவே முடியாது.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...