சனி, 25 ஜூலை, 2020
ஒரே கேள்விக்கு இருவேறுபட்ட பதில்கள்
முன்னாளில் வயதானவர்ஒருவர் ஒரு நகருக்குள் உள்நுழைவுசெய்திடும் வாயிலில் அமர்ந்திருந்தார். அப்போது குதிரைமீதுஅமர்ந்து சவாரி செய்துகொண்டு ஒரு மனிதன் அந்த நகரின் வாயிலுக்கு வந்து சேர்ந்தார், நகரின் நுழைவுவாயிலில் அந்த வயதான மனிதன் அமர்ந்திருந்ததை பார்த்ததும் அவரிடம் அந்த நகரமக்களை பற்றி விசாரித்து அறிந்து கொள்ளலாம் என தான் பயனம் செய்த குதிரையை அங்கே நிறுத்தி. அம்முதியவரிடம், "ஐயா ! இந்த ஊரின் மக்கள் எப்படிப்பட்டவர்கள்?"என கேட்டார் உடன் வயதனான முதியவர் " ஏன் கேட்கிறீர்கள்?" என அவரிடமே திருப்பி,பதில் கேள்வியை கேட்டார் அதற்கு குதிரையில் சவாரி செய்துவந்தவர் , "ஐயா !நான் இதுவரை வாழ்ந்து வந்த நகர மக்கள் மிகவும் அநாகரீக மானவர்கள், நான் அவர்களின் செயல்களினாளால் மிகவும்வருத்தப்பட்டேன், அவர்களுடன் ஒன்றாக கலந்து வாழமுடியாமல் மகவும் கலக்கமடைந்தேன். எனவே, நான் அந்த நகரத்தை விட்டே வெளியேற வேண்டி யிருந்தது, இப்போது நான் வேறு ஏதாவது ஒரு புதிய நகரில் வசிக்க விரும்புகிறேன். அதனால்தான் நான் உங்களிடம் இந்த நகரத்தில் வாழும் மக்களைப் பற்றி கேட்கிறேன் . " என பதிலளித்தார் அதனை தொடர்ந்து அம்முதியவர் , "தம்பி, அப்படியானால் நீங்கள் வேறு ஏதாவது நல்ல நகரத்தை நோக்கி செல்வது நல்லது. இந்த ஊரின் மக்கள் அதைவிட இன்னும் மோசமானவர்கள், மிகவும் துன்மார்க்கர்கள், அநாகரீக மானவர்கள். இங்கே நீங்கள் வாழமுயன்றால் முந்தைய நகரத்தினை விட அதிக சிக்கலில் மாட்டிகொள்வீர்கள், நீங்கள் வேறு எதாவது நகரத்திற்கு சென்று வாழ முயற்சிசெய்து பாருங்கள்" என்று அறிவுரை கூறி திருப்பி அனுப்பிவைத்தார்.அதனை கேள்விபட்டதும் குதிரையில் சவாரிசெய்து வந்தவர் அப்படியே திரும்பி வேறு நகரத்தை நோக்கி நகர்ந்தார். அதற்குப் பிறகு வேறொரு நபர் இன்னொரு குதிரையில் சவாரிசெய்து அதே நகரின் நுழைவு வாயிலிற்கு வந்துசேர்ந்தார். இரண்டாவது குதிரையில் சவாரிசெய்து வந்த மனிதன் அங்கு மிங்கும் சுற்றிப் பார்த்து கொண்டே வந்தார், பின்னர் அந்த வயதான கிழவனின் அருகில் வந்து நின்று, "இந்த நகரமக்கள் எவ்வாறு இருக்கிறார்கள்?" என்ற வினவினார் அம்முதியவர் , "நீங்கள் இதுவரை வாழ்ந்து விட்டு வருகின்ற நகர மக்கள் எவ்வாறு இருந்தார்கள்?" என அவரிடமே பதில் கேள்வி கேட்டார் .இரண்டாவது குதிரையில் சவாரிசெய்துவந்த மனிதன் , "நான் இதுவரையில் வாழ்ந்துவந்த நகர மக்கள் மிகவும் அன்பானவர்களாகவும் நட்பாகவும் இருந்தார்கள். எல்லோரும் ஒருவரையொருவர் நன்றாக கவனித்துக் கொண்டார்கள், உதவி தேவைப்படும் சமயங்களில் ஒருவருக்கொருவர் நன்கு உதவி செய்து கொண்டார்கள். நான் அந்த நகரத்தை விட்டு வெளியேறவே விரும்பவில்லை, ஆனால் ஒரு சில காரணங்களால் நான் அந்த ஊரை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. இப்போது நான் வாழ்வதற்கான ஒரு புதியதொரு நகரத்தைத் தேடுகிறேன் ."என பதிலிறுத்தார் .அதனைதொடர்ந்து அம்முதியவர் , "நீங்கள் இந்த நகரத்திற்குள் வரவேற்கப்படுகிறீர்கள். உங்களுடய நகர மக்களைவிட இந்த நகர மக்கள் மிகவும் அன்பானவர்களாக இருப்பதை நீங்களே காண்பீர்கள்! வாருங்கள் !இந்த நிகரத்திலேயே நிரந்தரமாக வாழலாம்" என மகிழ்ச்சியுடன் முகமன் கூறி அந்த இரண்டாவது குதிரையில் சவாரிசெய்துவந்த மனிதனை வரவேற்றார். அம்முதியவருக்கு அருகே உட்கார்ந்திருந்த ஒரு மனிதன், இவ்வாறு இதே நகரத்தினை பற்றி இரண்டு வகையான பதில்களையும் கேட்டுகொண்டிருந்தான், அதனால்மிகவும் ஆச்சரியமாக அம்மனிதன் அந்த வயதான முதியவரிடம், "ஐயா! நீங்கள் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திவிட்டீர்கள்! இந்த நகரவாசிகள் மோசமானவர்களாகவும், துன்மார்க்கர்களாகவும் இருக்கின்றார்கள், அதனால் இந்த நகரத்திற்குள் செல்லவேண்டாம் வேறு நகரத்திற்கு செல்க! எனநீங்கள் முதலாவது குதிரையில் சவாரிசெய்து வந்தவரிடம் அறிவுரை கூறி திருப்பி அனுப்பிவிட்டீர்கள், ஆனால் இரண்டாவதாக குதிரையில் சவாரிசெய்து வந்தவரிடம் மட்டும் இந்த நகரத்தில் வாழ்பவர்கள் மிகவும் நல்லவர்கள் வல்லவர்கள் அதனால் அவர் மேலும் வேறு எங்கும் செல்ல வேண்டிய தில்லை இங்கேயே வாழலாம் என்று நீங்கள் அவரிடம் சிபாரிசு செய்கிறீர்கள் . ஏன் அவ்வாறு ஒரே நகரத்தினை பற்றி இருவேறு விதமாக பதில் கூறி அவ்விருவரையும் வெவ்வேறு வகையில் வழிநடத்தினார்கள்? " என சந்தேகம் கேட்டான். அம்முதியவர், " தம்பி எல்லா இடங்களிலும் மக்கள் ஒரேமாதிரியாகத்தான வாழ்கின்றார்கள் அவர்களுடன் நாம் நடந்து கொள்ளும் வழிமுறையில்தான் அவர்களும் நம்மிடம் நடந்து கொள்வார்கள் அதனால் அவர்களுடன் நாம் எப்படி வாழ்கின்றோம் என்பதுதான் முக்கியம்."என பதிலளித்தார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான...
-
ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும்...
-
அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக