ஞாயிறு, 12 ஜூலை, 2020

நேர்மையின் பரிசு.


ஒரு பால்காரன் நேர்மையற்ற வழிமுறையின் மூலம் மிகவும் செல்வந்தரானார். எவ்வாறு எனில் தனது சொந்த கிராமத்திலிருந்து வாடிக்கையாளர்கள் வசிக்கும் நகரத்தை அடைய அவர் தினமும் ஒரு ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. அந்த ஆற்றை கடக்கும்போது போதுமானஅளவு ஆற்று தண்ணீரை தாராளமாக பாலுடன் கலக்கி விற்று நல்ல இலாபம் அடைந்தால்மிகவும் பெரியசெல்வந்தரானார் அவர் தனது மகனின் திருமணத்திற்காக இதுவரையில் பாலைவிற்று சேமித்து வைத்திருந்தத் தொகையைச் சேகரித்து அதில் குறிப்பிட்ட தொகையை மட்டும் வீட்டில் பத்திரமாக வைத்துவிட்டு மிகுதி. இவ்வாறு சேகரிக்கப்பட்ட பெரிய தொகையுடன் அருகிலிருந்த நகரத்திற்கு சென்றார் அந்த நகரில் அவர் பணக்காரர்கள் அணியும் உடைகள் பளபளப்பான தங்க ஆபரணங்கள் ஆகியவற்றைஏராளமான அளவில் வாங்கிகொண்டு அதே ஆற்றினை கடந்து தன்னுடைய கிராமத்திற்கு திரும்பினார். மகனின் திருமணத்திற்கான விலையுயர்ந்த பொருட்களை வீட்டிற்கு கொண்டுசெல்வதால் அந்த ஆற்றினை கடப்பதற்காக ஒரு வாடகை படகை அமர்த்தி அதில் பயனம் செய்தார் ஆனால் ஆற்றைக் கடக்கும்போது அந்த படகு கவிழ்ந்தது அதனால் அவர் நகரத்தில் திருணமத்திற்காக கொள்முதல் அனைத்து விலையுயர்ந்த பொருட்களும் ஆற்றின் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டன. அந்த பால் காரர் மட்டும் எப்படியோ நீச்சலடித்து ஆற்றின் கரையேறி அதிக மனவேதனையுடனும் துக்கத்துடனும் அடுத்து என்ன செய்வது என திகைத்து அந்த ஆற்ங்கரையிலேயே பேசாமல் அமர்ந்துவிட்டார் . அப்போது ஆற்றில் இருந்து , “அதிகம் வருத்தபடாதே பால்காரரே நீங்கள் உங்களுடைய வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதன் மூலம் சம்பாதித்த சட்டவிரோதமான இலாபத்தை மட்டுமே தற்போது இழந்துவிட்டீர்கள். ஏமாற்றாத பணம் உங்களுடைய வீட்டில் பத்திரமாக இரு்க்கின்றது அதனை கொண்டு சிக்கனமாக உங்களுடைய மகனின் திருமணத்தை நடத்திடுக “ என ஒரு குரல் கேட்டது ஆம் உண்மைதான் : நேர்மையான நடவடிக்கைகள் எப்போதும் மிக உயர்ந்தவை அதன் வாயிலாக சம்பாதித்த பணம் இழக்கபடாமல் பத்திரமாக இருக்கும் ஆனால் . தவறான முறைகளால் சம்பாதித்த பணம் ஒருபோதும் நிலைத்திருக்காது.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...