செவ்வாய், 28 ஜூலை, 2020

நம்முடைய வருமான வரி அறிக்கையை சமர்ப்பிக்கும் போது தவிர்க்க வேண்டிய நம்மை அறியாமல் நம்முடைய அறியாமையினால்செய்திடும் தவறுகள்


பெரும்பாலும் வரி செலுத்துவோர் தங்களுடைய வருமான வரிஅறிக்கைகளை சமர்ப்பிக்கும் போது தங்களை அறியாமலேயே தங்களுடைய அறியாமையினால் ஒருசில தவறுகளை செய்கிறார்கள், அவ்வாறான தவறுகள் தாங்கள் செலுத்தவேண்டிய வரிகளைத் தவிர்ப்பதற்கான நோக்கத்துடன் அன்று ஆயினும், வெறுமனே தங்களுடைய அறியாமையால். செய்யப்படும் இத்தவறுகளால் இவர்கள் குற்றமற்றவர்கள் என்றாலும் இந்த தவறுகள் விலை உயர்ந்தவை என நிரூபித்து அதற்கான அபராத தொகைஅல்லது தண்டத்தொகை அவர்கள்மீது விதிக்கபடலாம் மேலும் இதுகுறித்து நேரடியாக வருமானவரி அலுவலகத்திற்கு வந்து அதற்கான விளக்கத்தை அளிக்குமாறு வருமான வரித் துறையிலிருந்து அறிவிப்புகள்கிடைக்கப்பெறலாம். நம்முடைய வருமானவரி அறிக்கையை சமர்ப்பிக்கும் போது தவிர்க்க வேண்டிய அவ்வாறான நம்முடைய அறியாமையினால் செய்திடும் தவறுகள் பின்வருமாறு: - 1. வருமானவரி அறிக்கையின்படி நம்முடைய வருமானவிவரத்தை சரியான நேரத்தில் சமர்ப்பிக்காதது அல்லது வருமானவரி அறிக்கையையே சமர்ப்பிக்காதது வரி செலுத்துவோர் பலரின் வருமான வரி செலுத்த வேண்டிய பொறுப்பானது வருமானவரிவரந்பைவிடகுறைவாக இருக்கும்ஆனால் அவர்களின் மொத்த வருமானம் வரிவரம்பிற்கு மேல் இருக்கும்போது தங்களின் வருமானவரி அறிக்கையை சமர்ப்பிக்காது விட்டுவிடுவார்கள், .எ.கா., திரு. அ.என்பவரின்வருமானம். ரூ. 3,50,000 வருமானவரிசட்டம் VIA இன் கீழ் கழிவுகள் ரூ. 1,50,000 / -. இதன்படி இவருக்கு வரி செலுத்தவேண்டிய பொறுப்பு இல்லை, ஆனால் அவரது மொத்த மொத்த வருமானம் வரம்பைவிட அதிகமாக உள்ளது. இந்நிலையில்இவர் தான் வருமானவரி செலுத்தவேண்டிய பொருப்பு இல்லையென தன்னுடைய வருமானவரி படிவத்தை சமர்ப்பிக்கவேண்டும் வருமானவரி அறிக்கை சமர்ப்பிப்பதிலிருந்து விலக்கு என்பது தனிநபர் / இந்து கூட்டுகுடும்ப வரி செலுத்துவோரின் மொத்த வருமானம் அடிப்படை விலக்கு வரம்பை மீறாதநிலைவரைமட்டுமே. எனவே, இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வருமானவரி அறிக்கை சமர்ப்பிக்காதது பிரிவு 271 எஃப் கீழ் ரூ.5000/ -. அபராதம் விதிக்கப்படும் இதேபோல், எந்தவொரு காரணத்தினாலும் வருமானவரி அறிக்கையை தாமதமாக சமர்ப்பித்தால் அதற்கான தாமதமாக கட்டணம் ரூ. 10,000 / -. செலுத்தநேரிடும் மேலும், நடப்பாண்டிற்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், இவ்வாறு தாமதமாக வருமானவரி அறிக்கையை சமர்ப்பிப்பதால் அடுத்த ஆண்டிற்கு அந்த இழபிபினை கொண்டுசென்று சரி செய்துகொள்ள முடியாது. 2. வரிவிலக்கு வருமானம் அல்லது வரி இல்லாத வருமானத்தை வெளிப்படுத்தாதது அத்தகைய வருமானம் எந்தவொரு வரிப் பொறுப்பையும் ஈர்க்கவில்லை என்றாலும், அத்தகைய வருமானத்தினை வருமானவரி அறிக்கையில் தெரிவிக்கப்பட வேண்டும். வருமான வரி அறிக்கையை சமர்ப்பிக்கும் போது பொது வருங்கால வைப்புநிதியிலிருந்து பெறும் வட்டி, வரி இல்லாத பரிசுகள், வரிவிலக்குஅளிக்கப்பட்ட நீண்ட கால மூலதன ஆதாயங்கள் போன்ற வருமானம் தெரிவிக்கப்பட வேண்டும். 3. வட்டி வருமானத்தை வெளிப்படுத்தாதது வரி செலுத்துவோர் பலர் தங்களுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து அல்லது நிலையான வைப்புகளிலிருந்து சம்பாதித்த வட்டியை தங்களுடைய வருமானவரி கணக்கிடுவதில் காண்பிக்க மாட்டார்கள். சேமிப்புக் கணக்கிலிருந்து கிடைக்கும் வட்டி ரூ. 10,000 / - இற்கு மேல் இருக்கும்போது வரி விதிக்கப்படுகிறது. ஆயினும் சேமிப்பு கணக்கு வட்டிக்கு பிரிவு 80TTA இன் கீழ் ரூ.10,000 / - வரி விலக்குஅனுமதிக்கப்படுகிறது. நிலையான வைப்புகளில் ஈட்டப்படும் வட்டி முற்றிலும் வரி விதிக்கப்படும். எனவே வருமான வரி அறிக்கையை சமர்ப்பிக்கும் போது அத்தகைய வருமானம் முழுமையாக கணக்கிடப்பட வேண்டும். 4. வணிகம் / தொழிலில் இருந்து வருமானங்களை கணக்கிடும்போது தனிப்பட்ட செலவினங்களுக்கான விலக்குகளை கோருதல் இது வரி செலுத்துவோர் செய்யும் மிகவும் பொதுவான தவறாகும். பெரும்பாலும், வணிகம் /தொழிலில் தனிப்பட்ட இயற்கையான செலவுகள் இலாப நட்டக் கணக்கில் பற்று வைக்கப்படு கின்றன, தொடர்ந்து வணிகம் / தொழிலில் இருந்து வருமானத்தைக் கணக்கிடும்போது அவை மீண்டும் சேர்க்கப்பட்டு வருமானமாக கணக்கிடபடுவதில்லை. எடுத்துக்காட்டாக, வரி செலுத்துவோர் பலர் தனிப்பட்ட மற்றும் வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் மகிழுந்தின் தேய்மானத்தை முழுமையாகக் குறைத்துவிடுகின்றனர்அல்லது தனிப்பட்ட பயணச்செலவை வியாபாரத்திற்கு பயன்படுத்திய பயனச்செலவாக காண்பிக்கின்றனர். இத்தகைய தவறுகளை தவிர்க்க வேண்டும். 5. பிள்ளைகளின் வருமானத்தை கருத்தில் கொள்ளாதது பலர் தங்களுடைய பிள்ளைகளின் பெயரில் முதலீடு செய்கிறார்கள். அத்தகைய முதலீடுகளிலிருந்து கிடைக்கும் வருமானம் பெற்றோரின் வருமானத்தில் இணைத்து கணக்கிடப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வரி செலுத்துவோர் (பெற்றோர்கள்) அத்தகைய தங்களுடைய பிள்ளைகளின் வருமானத்தை தங்களுடைய வருமானத்துடன் சேர்த்து கணக்கிடாமல் விட்டுவிடுகிறார்கள். இத்தகைய நடைமுறை தவிர்க்கப்பட வேண்டும் வருமானவரி அறிக்கை சமர்ப்பிப்பது ஒரு சிக்கலான நடைமுறை மேலும் வருமானவரி துறைஅறிவிப்புகளைப் பெறுவதைத் தவிர்க்க கவனமாக செயல்படுமாறு அறிவிக்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...