இந்திய அரசாங்கத்தின் முன்முயற்சிகளை எளிதாக்குவதன் ஒரு பகுதியாக, 2020 பிப்ரவரி 6
ஆம் தேதி, நிறுவனங்கள்(ஒருங்கிணைப்பு) திருத்த விதிகள், 2020 ஐ வெளியிடுவதன்
மூலம், நிறுவனங்கள் (ஒருங்கிணைப்பு) விதிகள், 2014 ஐ மத்திய அரசு திருத்தியுள்ளது.
அனைத்து புதிய நிறுவன ஒருங்கிணைப்பிற்கும் பொருந்துகின்ற. இந்த விதியானது 15
பிப்ரவரி, 2020 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த விதிகளைச் செயல்படுத்த MCA ஆனது
புதிய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு படிவம் ‘SPICe +’ ஐ வெளியிடவிருக்கின்றது. இது
ஒரு ஒருங்கிணைந்த இணைய படிவமாக இருக்கும், இது , நிறுவனத்தின் பெயரை முன்பதிவு
செய்வதற்கு ‘பகுதி A’ , பதிவு தொடர்பான சேவைகளுக்கு ‘பகுதி B’. ஆகிய இரண்டு
பகுதிகளைக் கொண்டிருக்கும் இந்த புதிய “SPICe +” எனும் படிவத்தின் “பகுதி A”
இப்போது புதிய நிறுவனத்திற்கான பெயரை முன்பதிவு செய்வதற்கு மட்டுமே
பயன்படுத்தப்படும் என்பதையும், பெயரை முன்பதிவு செய்வதற்காக தற்போது நடைமுறையில்
பயன்படுத்தி கொண்டுவருகின்ற “RUN” எனும் சேவையை தற்போது செயலில்உள்ள
நிறுவனங்களுக்கான பெயரை ஒதுக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதையும்
கவனத்தில் கொள்ள வேண்டும். (அதாவது ஏற்கனவே ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட நிறுவனங்கள்
இந்த “RUN” எனும் சேவையினை பெயர் மாற்றத்திற்காகமட்டும் பயன்படுத்திகொள்ளேவேண்டும்,
ஆனால் புதிய “SPICe +” எனும் படிவத்தின் “பகுதி A” ஆனது புதியதாக துவங்கிடும்
நிறுவனத்திற்கு மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்). தற்போதுநடைமுறையிலுள்ள
விதியினை புதியதாக விதி 9 ஐ கீழே உள்ள விதியுடன் மாற்றுவதன் மூலம் இதற்காக
தேவையானவாறு திருத்தத்தை மத்திய அரசு செய்துள்ளது: "விதி 9. பெயர் முன்பதிவு அல்லது
பெயர் மாற்றம்செய்தல்- இணைய சேவையின் மூலம் ஒரு நிறுவனத்தின் பெயரினை
ஒதுக்கீடுசெய்திடகோரி முன்பதிவு செய்வதற்கான விண்ணப்பம் ஒன்றினை www.mca.gov.in
எனும் இணைய சேவையைப் பயன்படுத்தி இதில் கிடைக்கும் SPICe + (மின்னணு முறையில்
நிறுவனத்தை இணைப்பதற்கான எளிய விவரம்: INC-32) எனும் படிவத்துடன்
சமர்ப்பிக்கவேண்டும், மேலும் நிறுவனங்கள் (பதிவு அலுவலகங்கள் மற்றும் கட்டணங்கள்)
விதிகள், 2014 இல் அனுமதிக்கப்பட்ட போதுமான கட்டணத்துடன் இணைய சேவையான RUN ( தனித்த
பெயரை ஒதுக்கிடுதல்) எனும் சேவையை பயன்படுத்துவதன் மூலம் பெயரை மாற்றுவதற்காக,
அத்தகையஇணைய படிவத்தில் காணும் ஏதேனும் குறைபாடுகளை பதினைந்து நாட்களுக்குள்
சரிசெய்து மீண்டும் சமர்ப்பிக்க அனுமதித்த பின்னர் அவை மத்திய பதிவு மைய
பதிவாளரால்அங்கீகரிக்கப்படலாம் அல்லது நிராகரிக்கப்படலாம், , இந்தபுதிய படிவத்தினை
பயன்படுத்தி கொள்ளும் நடைமுறையானது பிப்ரவரி 15, 2O2O முதல் நடைமுறைக்கு வருகின்றது
படிவத்தின் இரண்டாம் பகுதிக்கு பங்குதாரர்கள் தங்களுடைய கவனத்தை நாடலாம்.
படிவத்தின் "பகுதி B", புதிய நிறுவனங்கள் "EPFO பதிவு", "ESIC பதிவு", "தொழில்முறை
வரி பதிவு (மகாராஷ்டிராமாநிலத்திற்கு)", "வங்கிக் கணக்கைத் துவங்குதல்"
ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்க வேண்டிய செயல்கள் இப்போது கட்டாயமாக்கப் பட்டுள்ளன. .
இந்த படிவத்தின் பகுதி B இன்மூலம் வழங்கப்படும் சேவைகளின் பட்டியல் அவற்றின்
பொருந்தக்கூடிய தன்மை ஆகியவை கீழே அட்டவணைப் படுத்தப் பட்டுள்ளன:
சுருக்கமாககூறுவதெனில், புதிய நிறுவனங்கள் அனைத்து பதிவுகளையும் ஒரே இடத்தில்
பெறுவதற்கு ஏதுவாக SPICe + எனும் புதியபடிவம் வெளியீடு செய்ததன் வயிலாக
மாற்றியமைத்த துள்ள அரசாங்கத்தின் நடவடிக்கையானது வரவேற்கதக்க செயலாகும்,
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான...
-
ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும்...
-
அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக