சனி, 18 ஜூலை, 2020

ஆடுமேய்த்திடும் சிறுவனும் ஓநாயும்


ஆடுமேய்த்திடும் சிறுவன் ஒருவன் கிராமத்தின் ஒவ்வொருவருடைய வீடுகளிருந்தும் ஆடுகளை ஒன்று சேர்த்து அந்த கிராமத்திற்கு அருகிலிருந்த ஒரு பெரிய காட்டிற்கு கொண்டு சென்று மேய்த்து கொண்டு வருவது வழக்கமான செயலாகும் . தினமும் ஒவ்வொருவருடைய வீடுகளிருந்தும் ஆடுகளை ஒன்று சேர்த்து அந்த கிராமத்திற்கு அருகிலிருந்த ஒரு பெரிய காட்டிற்கு கொண்டு சென்று மேய்த்து கொண்டு வருகின்ற இதேபணியை செய்வதால் விரைவில் அந்த ஆடுமேய்த்திடும் சிறுவனுக்கு காட்டில் ஆடுகளை கொண்டுசென்று மேய்த்திடும் வாழ்க்கையானது மிகவும் சலிப்பாக இருப்பதை கண்டான். இவ்வாறான பணியின்போது அந்த ஆடுகளுடன் அரட்டை அடிப்பது அல்லது ஆட்டிற்கான புல்லாங்குழலை இசைப்பது ஆகிய இரண்டில் ஒன்று மட்டுமேஅவனுடைய வாழ்க்கையில் சிறிது உற்சாக மூட்டுவதாக இருந்தது வேறு எந்தவொரு செயலும் அவனுடைய அன்றாட வாழ்க்கையை மகிழ்ச்சியூட்டுவதாக இல்லை அதனால்ஒரு நாள் தன்னுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேறு என்ன செய்யலாம் என அந்த ஆடுமேய்த்திடும் சிறுவன் ஆலோசித்து கொண்டே செம்மறி ஆடுகளையும் அமைதியான காட்டையும் பார்த்துக் கொண்டிருந்த போது, ஓநாய் ஒன்று இங்கு வந்தால் என்னவாகும் தான் என்ன செய்யவேண்டும் என்று அந்த சிறுவனின் சிந்தனை திசைமாறு சென்றுகொண்டிருந்தபோது, . அவ்வாறு ஓநாய் ஏதேனும் வந்தால் அது ஆட்டுமந்தையைத் தாக்கத்துவங்கிடும் அவ்வாறான இக்கட்டான நிலையில் தங்களை உதவிக்கு அழைக்கும்படி யும் , அவ்வாறு உதவி கோரியவுடன் கிராமவாசிகள் அனைவரும் அங்குவந்து அந்தஓநாயை விரட்டிடுவார்கள் என அவ்வாடுகளின் சொந்தகாரர்கள் தன்னிடம் கூறியிருந்தை அச்சிறுவன் நினைவுகூர்ந்தான். எனவே இப்போது, உண்மையில் ஓநாய் எதையும் காணவில்லை என்றாலும், அச்சிறுவன் உரத்த குரலில் “ஓநாய்! ஓநாய்!" என கூச்சலிட்டவாறு கிராமத்தை நோக்கி ஓடினான், அந்த சிறுவன் எதிர்பார்த்தபடி, அந்த சிறுவனின் “ஓநாய்! ஓநாய்!" என கூச்சலிட்டதைக் கேட்ட கிராமவாசிகள் அனைவரும் தாங்கள் செய்து கொண்டிருந்த பணியை அப்படியே விட்டுவி்ட்டு, அந்த ஓநாய் தங்களுடைய ஆடுகளை அடித்து தின்றிடாமல் காத்திடுமாறு விரட்டியடிப்பதற்காக மிகவும் வேகமாக அந்த காட்டில் ஆடுமேயும் பகுதிக்கு ஓடிவந்து சேர்ந்தனர் . ஆனால் அவர்கள் அங்கு சென்றுசேர்ந்தபோது ஓநாய்எதுவுமில்லாமல் அந்த ஆடு மேய்த்திடும் சிறுவன் தந்திரமாக விளையாடி தங்களை ஏமாற்றியதை எண்ணி அனைவரும் திடுக்கிட்டு நின்றுவிட்டனர் இவ்வாறு அனைவரும் ஓநாய்எதுவும் இல்லாமல் திடுக்கிட்டநிற்பதை கண்டு அந்த சிறுவன் சிரிப்பதையும் கண்டனர் . ஒரு சில நாட்களுக்குப் பிறகு ஆடுமேய்த்திடும் சிறுவன் மீண்டும், “ஓநாய்! ஓநாய்!" என கூச்சலிட்டதைக் கேட்ட கிராமவாசிகள்அனைவரும் தாங்கள் செய்து கொண்டிருந்த பணியை மீண்டும் அப்படியே விட்டுவி்ட்டு, அந்த ஓநாய் தங்களுடைய ஆடுகளை அடித்து தின்றிடாமல் காத்திடுமாறு விரட்டியடிப்ப தற்காக மிகவும் வேகமாக அந்த காட்டின் ஆடுமேயும் பகுதிக்கு ஓடிவந்து சேர்ந்தனர் . ஆனால் அவர்கள் அங்கு சென்றுசேர்ந்தபோது ஓநாய் எதுவுமில்லாமல் அந்த ஆடு மேய்த்திடும் சிறுவன் தந்திரமாக விளையாடி மீண்டும் தங்களை ஏமாற்றியதை எண்ணி அனைவரும் திடுக்கிட்டு நின்றுவிட்டனர் இவ்வாறு அனைவரும் ஓநாய்எதுவும் இல்லாமல் திடுக்கிட்ட நிற்பதை கண்டு அந்த சிறுவன் மீண்டும் சிரிப்பதையும் கண்டனர் . இவ்வாறான நிலையில் ஒரு நாள் மாலை சூரியன் காடுகளின் பின்னால் மறைந்துகொண்டிருந்தபோது, மேய்ச்சல் முடிந்து ஆடுகள் அனைத்தும் காட்டிலிருந்து கிராமத்தை நோக்கி திரும்பி ஊர்ந்து கொண்டிருந்த போது, உண்மையில் ஓநாய் ஒன்று வந்து ஆடுகளின் மீது பாய்ந்து அடித்து தின்ன துவங்கியது. அதனை கண்டவுடன் ஆடுமேய்த்திடும் சிறுவன் உண்மையில் அதிக பயத்துடன் “ஓநாய்! ஓநாய்!" என கத்தி உதவி கோரினான் ஆனால் கிராமவாசிகள்இந்த சிறுவனின் கூக்குரலைக் கேட்டாலும், முன்பு இரண்டுமுறை தங்களை அந்த சிறுவன் ஓநாய் எதுவும் வராமலேயே வந்ததைப் போன்று தங்களை உதவிக்கு அழைத்து ஏமாற்றியதை போன்று இப்போதும் அந்த சிறுவன் ஏமாற்றுவதாக . "அவன் மீண்டும் நம்மை முட்டாளாக்க முடியாது," என்று எண்ணி யாரும் அந்த ஆடுமேய்த்திடும் சிறுவனுடைய உதவிக்கு ஓடிவந்து சேரவில்லை . அதனால் அந்த ஓநாய் ஆனது ஆடுகளில் பலவற்றை அடித்து கொன்று தின்ற, பின்னர் காட்டுக்குள் சென்றுசேர்ந்தது. அறிவுரை: நாம் தொடர்ந்து பொய்யை பேசிகொண்டே இருந்தால் ஒருநாள் உண்மையை பேசினாலும் யாரும் நம்மை நம்ப மாட்டார்கள். அதனால் எப்போதும் உண்மையை பேசுக.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...