செவ்வாய், 7 ஜூலை, 2020

சிறு வணிக உரிமையாளர்களுக்கு MSME கடன்கள் ஏன் சிறந்த தேர்வாக இருக்கின்றன?


உலகளவில் செயல்படும் சிறு வணிக உரிமையாளர்களின் எண்ணிக்கையில் சீனா முதலிடத்தையும் இந்தியா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன, இந்தியாவில் MSME களைப் பற்றி MSME கள் ஏற்றுமதியில் 40% மற்றும் மொத்த வேலைவாய்ப்பில் 70% பங்களிப்பு செய்கின்றன, இந்தியா சிறு வணிக உரிமையாளர்களின் இரண்டாவது பெரிய வீடாக அமைகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 2019 அறிக்கையின்படி, இந்தியாவில் 63.38 மில்லியன் எம்எஸ்எம்இ அலகுகள் உள்ளன நாடு முழுவதும் 111 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. MSME களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்களிப்பு 28% ஆகும், இது விவசாயத் துறைக்கு அடுத்ததாக உள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, உற்பத்தித் துறையின் பங்கு தற்போது 16% இலிருந்து 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 25% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த இந்த MSME களில் 75% ஆந்திரா, பீகார், குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட முதல் 10 மாநிலங்களால் பங்களிக்கப்படுகின்றது. . இவ்வாறான சிறு வணிக உரிமையாளர்களில் பெரும்பாலானோர் தாங்கள் தொடங்க விரும்பும் வணிகத்தில் முதலீடு செய்வதற்காகவோ அல்லது இருக்கும் வணிகத்தை விரிவுபடுத்துவதற்காகவோ வரையறுக்கப்பட்ட நிதியைமட்டுமே கொண்டுள்ளனர். மேலும், ஒவ்வொரு சிறு வணிக உரிமையாளரும் துவக்கத்தில் தாங்கள் விரும்பும் ஒரு புதிய நிறுவனத்தைத் துவங்குவதற்காக தங்களுடய கடினமான உழைப்பில் சம்பாதித்த அவனுடைய / அவளுடைய பணத்தை முதலீடு செய்ய விரும்புவதில்லை. இவ்வாறான நிலையில் அவர்களைப் பொறுத்தவரை, இந்த புதிய MSME கடன்கள் மிகவும் பொருத்தமானவை, ஏனெனில் இந்த கடன்களின் பல வசதிகளும் தன்மைகளும் வழக்கமான வணிகக் கடன்களிலிருந்து இவை வேறுபடுகின்றன. எம்.எஸ்.எம்.இ கடன்களானவை சிறு வணிக உரிமையாளர்கள், தொடக்கநிலை நிறுவனங்கள், பெண்தொழில் முனைவோர் மீச்சிறு சிறு நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு மட்டுமே பொருந்தக் கூடியவை,களாகும் அவை மிககுறைந்த வட்டி விகிதத்தில் எளிதாக திருப்பிச் செலுத்தும் விருப்பங்களுடன் வழங்கப்படுகின்றன. சிறு வணிக உரிமையாளர்களை பாதிக்கும் காரணிகள் சிறு வணிக உரிமையாளர்கள்அனைவரும் பணவீக்கம், செயல்படும் இடத்திற்கு அதிக வாடகை, விலையுயர்ந்த மூலப்பொருட்கள், மாறுபடும் அரசாங்கக் கொள்கைகள் என்பன போன்ற இவ்வணிக நிறுவனங்களின் வளர்ச்சியை பாதிக்கக்கூடிய பல்வேறு வெளிப்புற சவால்களைச் சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இவ்வாறானவைகளில் ஒரு சில காரணிகளை சிறு வணிக உரிமையாளர்களால் மாற்றவோ தவிர்க்கவோ முடியாது, ஆனால்வணிக விரிவாக்கம், உபகரணங்களையும் இயந்திரங்களையும் வாங்குவது அல்லது மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வது என்பன போன்ற பணம் தொடர்பான அனைத்து காரணிகளையும் சமாளிக்கமுடியாமல் தத்தளிக்கும் நிலையில் இவைகளை சமாளித்திடும் நோக்கங்களுக்காக MSME கடன்களை தேர்வு செய்வது மிகந்த பயனளிக்கும் ஒருவழிமுறையாகும். சிறு வணிக உரிமையாளர்களுக்கான அரசு கடன் திட்டங்கள் ஒரு தேநீர் விற்பனையாளர் கூட இந்த எம்.எஸ்.எம்.இ கடனுக்காக விண்ணப்பிக்கலாம், அதில் ஒரு விற்பனையாளருக்கான ஆரம்ப முதலீடு ரூ. 10,000மிகாமல்இருக்கவேண்டும். ஏராளமான வங்கி சாரா நிதி நிறுவனங்களும் ( Non-banking Financial Companies (NBFCs)), மீச்சிறு நிதி நிறுவனங்களும் (Micro Finance Institutions (MFIs)) அரசு நிறுவனங்களும் சிறு வணிக உரிமையாளர்களுக்கு கடன் மதிப்பெண் (credit score) அல்லது ITRஐ சரிபார்க்காமலேயே எம்.எஸ்.எம்.இ கடன்களை வழங்கதயாராக உள்ளன. பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) இன் கீழ் வழங்கப்படும் மீச்சிறுநிறுவன மேம்படுத்துதல் மறுநிதிமுகமை (Micro Units Development and Refinance Agency (MUDRA)) கடன் திட்டத்தின் படி வழங்கப்படும் கடனானது அரசாங்க கடன் திட்டத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகும், இதில் எந்தவொரு நபரும் புதியதாக தொழில் தொடங்குவதற்கான கடன் தொகையை ரூ. 50,000 முதல் ரூ. 10 லட்சம் வரை மிககுறைந்த வட்டி விகிதத்திலும் திருப்பிச் செலுத்தும் காலம் அதிகபட்சம் 60 மாதங்கள் வரையிலும் அனுமதித்து கடன்வழங்கப்படுகின்றது. இந்திய அரசு அனுமதித்துள்ள எம்.எஸ்.எம்.இ திட்டங்கள் பின்வருமாறு வங்கி கடன் வசதி திட்டம்,மீச்சிறு சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை (CGTMSE),59 நிமிடங்களில் தொடக்க நிறுவனங்களுக்கான MSME வணிக கடன்கள்,பிரதான் மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP),பிரதான் மந்திரி ரோஸ்கர் யோஜனா (PMRY) எம்.எஸ்.எம்.இ க்களுக்கானSIDBமேக் இன் இந்தியா மென்மைகடன் நிதி (SMILE) ஸ்டாண்ட்-அப் இந்தியா,தொடக்கநிலை (Start-up )வணிக கடன்கள் ,ஆகியவைகளாகும் மீச்சிறு நடுத்தர நிறுவனங்களின் (MSME) கடன்களின் வசதிவாய்ப்புகள் இவை குறுகிய கால கடன்கள் என்றும் அழைக்கப்படுவதால், இவை அவசர பணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் நம்முடைய வணிகத்தின் பணப்புழக்கத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன. பெறக்கூடிய எம்எஸ்எம்இ கடன் தொகை குறைந்தது ரூ. 6000மும் அதிகபட்சம் ரூ.2 கோடி யும்வணிக தேவைகளைப் பொறுத்து அதற்கு மேற்பட்டும்இருக்கலாம் . அவ்வாறே திருப்பிச் செலுத்தும் காலம் குறைந்தபட்ச 12 மாதங்கள் முதல் அதிகபட்சம் 60 மாதங்கள் வரையிலும் இருக்கலாம்., கட்டணங்களும்அபராத கட்டணங்களும் ஒவ்வொரு நிதி நிறுவனத்திற்கு ஏற்ப மாறுபட்டவைகளாகும். எந்தவொரு ஆவணத்திலும் கையொப்பமிடுவதற்கு முன்பு நாம் அனைத்து கடன் விவரங்களையும் கவனமாகவும் முழுமையாகவும் படிக்க வேண்டும். இந்த கடன்ஆனது ஒரு துனை பிணையம் எதுவும் இல்லாத ( collateral free) கடன் என்பதையும் நினைவில் கொள்க, அதில் நாம் எந்தவொரு காப்புத்தொகையயும் கடன் வழங்குபவரிடம் டெபாசிட் ஆக செலுத்த வேண்டியதில்லை. MSME கடனுக்கு விண்ணப்பிக்க தகுதி விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது குறைந்தபட்சம் 18 வயதும் கடன் முதிர்வு நேரத்தில் அதிகபட்சம் 65 வயதாகவும் இருக்கவேண்டும் .வணிக இருப்பு இருக்கும்(Business existence) விற்பணை நடவடிக்கைகளின் மீதானகுறைந்தபட்ச வருவாய் ஆகியவை அந்தந்த நிதி நிறுவனங்களால் தீர்மானிக்கப்படும்.வர்த்தகம், சேவைகள் உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே MSME கடன்கள் வழங்கப்படுகின்றன சிறு வணிக உரிமையாளர்களைத் தவிர, தனிநபர்கள், சுயதொழில் வல்லுநர்கள், சுயதொழில் புரியாத தொழில் வல்லுநர்கள், தனியார் மற்றும் பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள், தனிநிபர் உரிமையாளர், கூட்டாண்மைநிறுவனங்கள், பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை , வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், அறக்கட்டளைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் போன்றவை இந்தஎம்.எஸ்.எம்.இ கடன்களை பெறமுடியும் . முடிவு: சிறு வணிக உரிமையாளர்களுக்கு எம்.எஸ்.எம்.இ கடன் சிறந்த கடன் விருப்பமாகும், ஏனெனில் இது அவர்களின் வணிகத் தேவைகளை சரியாக பூர்த்தி செய்கிறது. நீண்டகால சுமை மற்றும் தொந்தரவைத் தவிர்க்க, சிறு வணிக உரிமையாளர்கள் தங்களது அவசர பணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறுகிய கால கடன்களைத் தேர்வுசெய்து கடன் தொகையை விரைவில் திருப்பிச் செலுத்தலாம். எம்.எஸ்.எம்.இ கடனைப் பெறுவதற்கு, சிறு வணிக உரிமையாளர்கள் விரும்பிய NBFC, MFI ஐ அல்லது அரசு கடன் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை நேரடியாக பார்வையிடலாம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலமும், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களுடன் தேவையான ஆவணங்களை இணைப்பதன் மூலமும் இணையத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். நிதி சந்தையில் கிடைக்கும் பல்வேறு கடன் விருப்பங்களிலிருந்து சரிபார்த்து ஒப்பிடலாம் தேவைகளுக்கும்விருப்பத்திற்கும் ஏற்ற சிறந்த கடன் ஒப்பந்தத்தை தேர்வு செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...