தற்போது சரக்கு சேவைவரியின் கீழ் செயல்படுத்தப்படும் மின்வழி பட்டியலானது (E Way Bill (EWB)) போக்குவரத்துத் துறையின் Vahan System எனும் அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த வாகன் சிஸ்டம் என்பது இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களின் டிஜிட்டல் தரவுகளின் அடிப்படையில் நாடு தழுவிய அளவிலான தேடலிற்கான அனுமதியை வழங்குகிறது.மின் வழி பட்டியல் தயாரிக்கும்போது உள்ளிடப்பட்ட வண்டி எண் இப்போது புதிய வாகன் சிஸ்டதரவுகளின் தளத்தின் மூலம் சரிபார்க்கப்படுகின்றது. அதாவது மின்வழிபட்டியல் தயார்செய்வதற்காக வண்டிஎண்ணை உள்ளீடு செய்தவுடன், எச்சரிக்கை செய்தியொன்று திரையில் பிரதிபலிக்கும், பின்னர், வாகன் தரவுத்தள அமைப்பில் அவ்வண்டியின் விவரங்கள் கிடைக்கவில்லை என்றால், மின்வழி பட்டியலை உருவாக்க இந்த தளமானது அனுமதிக்காது. அதனால் அதற்குமுன் போக்குவரத்தாளர்கள் தங்களுடைய வண்டியின் விவரங்களை https://vahan.nic.in/nrservices/faces/user/searchstatus.xhtml எனும் இணையதளத்தில் உள்ளீடு செய்து தங்களுடைய வண்டியின் எண் உள்ளதாவென இந்த வாகன் அமைப்பில் சரிபார்த்திடுக என பரிந்துரைக்கப் படுகின்றது
வாகன் அமைப்பில் இந்த வண்டியின் எண் இல்லை என்றால். மின் வழி பட்டியலைத் தயாரிப்பவருக்கு வாகன் தரவுத்தளத்தில் குறிப்பிட்ட வண்டி எண் கிடைக்காதது குறித்து ‘எச்சரிக்கை செய்தி’ யொன்று கிடைக்கும்.
ஒரு வேளை, EWB எனசுருக்கமாக அழைக்கப்பெறும் மின் வழி பட்டியலில் உள்ளிடப்பட்ட வண்டி எண் வாகன் தரவுத்தளத்தில் கிடைக்கவில்லை என்றால், உடனடியாக போக்குவரத்தாளர்கள் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) வண்டியின் பதிவை சரிபார்த்து புதுப்பிக்க வேண்டும்., அவ்வாறு புதுப்பிக்கவில்லை யெனில் , இந்த வண்டியின் எண்ணைகொண்டு மின்வழிபட்டியல் உருவாக்க அனுமதிக்கப்படாது
ஒரு வேளை, மின்வழிபட்டியில் உள்ளிடப்பட்ட வண்டியின் எண் பதிவு செய்யப்பட்டு, கணினி இன்னும் ‘எச்சரிக்கை செய்தியை’ காண்பித்து கொண்டிருந்து எனில் உடன் சம்பந்தப்பட்ட RTO வை அணுக பரிந்துரைக்கப்படுகிறது. வாகன் அமைப்பில் வண்டியின் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டதும், வழக்கம்போன்ற மின்வழிபட்டியினை தயார்செய்து கொள்ளலாம் அவ்வாறு புதுப்பித்தல்செய்வதற்காக. போக்குவரத்தாளர் அசல் RC , பிற ஆவணங்களுடன் RTO வைப் சந்தித்து தங்களுடைய இந்த குறையை சரிசெய்திடுமாறு கோரி விவரங்களை வாகன் தரவுத்தளத்தில் புதுப்பிக்க வேண்டும்.
வாகன எண் தற்காலிக பதிவுடன் இருந்து விவரங்கள் சரிபார்க்கப்படாவிட்டால், பயனாளர்கள் உடன் TR இல் துவங்கிடும் தற்காலிக வண்டி எண்ணை தங்களுடைய மின்வழிப்டடியில் உள்ளிட வேண்டும்.
விவரங்கள் வாகன் தரவுதளத்தில் கிடைக்கின்றன, ஆனால் மின்வழிபட்டியல் தளத்தில் கிடைக்கவில்லை: என்றால்,உடன் வாகன் அமைப்பில் இருக்கும் வண்டி எண்ணானது மின்வழிபட்டியல் தளத்தில் கிடைக்கவில்லை: எனும் குறையை தீர்வுசெய்திடுமாறு கோரி தொடர்புடைய துறையில் மனு ஒன்றினை சமர்ப்பித்திடுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக