செவ்வாய், 21 ஜூலை, 2020

எந்தவொரு நிறுவனத்திலும் கூடுதல் இயக்குனர்களையும் முக்கிய நிர்வாக பணியாளர்களையும் நியமிப்பதற்கான செயல்முறை


கூடுதல் இயக்குனர் (பிரிவு 161 மற்றும் அத்தியாயம் XI இன் படி நிறுவனங்கள் (இயக்குநர்களின் நியமனம் மற்றும் தகுதிகள்) விதிகள், 2014] கூடுதல் இயக்குநர் என்பவர் இயக்குநர் குழுவால் எந்த நேரத்திலும் நியமிக்கப்படக்கூடியவர், அவர் அடுத்த ஆண்டு பொதுப்பேரவைக் கூட்டம் நடைபெறும் நாள் வரை அல்லது வருடாந்திர பொதுப்பேரவைக் கூட்டம் நடத்தப்பட வேண்டிய கடைசி நாள்வரை, இவற்றுள் எது முந்தையதோ அந்த நாள்வரையில் கூடுதல் இயக்குநராக இருப்பார். இவ்வாறான கூடுதல் இயக்குநரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் பின்வருமாறு- 1. கூடுதல் இயக்குநரை நியமிப்பதற்கான இயக்குநர்குழுத் தீர்மானம் ஒன்றினை இயக்குநர் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றவேண்டும் 2. படிவம் DIR 2 இன் வாயிலாக தொடர்புடைய நபரின் ஒப்புதல் கடிதம் பெறவேண்டும் 3. தொடர்புடைய நபர் பிற நிறுவனங்களில் ஆர்வம் காட்டுபவராக இருந்தால் MBP 1 , DIR 8 ஆகிய இரு படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்திடவேண்டும் 4. ஆதார் அட்டை வருமானவரி அட்டை ஆகிய இரண்டையும் சுய சான்றளிக்கப்பட்டு விருப்ப இணைப்பாக இணைத்திடவேண்டும் 5. DIR 12 எனும் படிவத்தினை மேலே கூறிய ஆவணங்களுடன் நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பித்திடவேண்டும் எந்தவொரு நிறுவனமும்,தங்களுடைய இயக்குநர் குழுவில் எந்தவொரு இயக்குநரையும் நியமித்த முப்பது நாட்களுக்குள், நிறுவனங்கள் (பதிவு அலுவலகங்கள் மற்றும் கட்டணங்கள்) விதிகள், 2014 இல் வழங்கப்பட்ட கட்டணத்துடன், படிவம் DIR-12 இல் பதிவாளரிடம் தொடர்புடைய நபரின் ஒப்புதல் படிவும்DIR 2 இணைத்து சமர்ப்பித்திட வேண்டும். முக்கிய நிர்வாக பணியாளர்களின் நியமனம் (பிரிவு 196, 203 மற்றும் அத்தியாயம் XIII இன் படி நிறுவனங்கள் (நிர்வாக பணியாளர்களின் நியமனம் மற்றும் ஊதியம்) விதிகள், 2014] முக்கிய நிர்வாக பணியாளர் என்றால் யார் நிறுவனங்களின் சட்டம் பிரிவு 2 (50) இன் படி, "முக்கிய நிர்வாக பணியாளர்கள்", என்பவர் ஒரு நிறுவனம் தொடர்பாக, (i) தலைமை நிர்வாக அதிகாரி அல்லது நிர்வாக இயக்குநர் அல்லது மேலாளர்; (ii) நிறுவனத்தின் செயலாளர்; (iii) முழுநேர இயக்குனர்; (iv) தலைமை நிதி அதிகாரி அத்தியாயம் XIII இன் பிரிவு 203 மற்றும் விதி 8 இன் படி நிறுவனங்கள் (நிர்வாக பணியாளர்களின் நியமனம் மற்றும் ஊதியம்) விதிகள், 2014 இன்படி பட்டியலிடப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும் பத்து கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் செலுத்தப் பட்ட பங்கு மூலதனத்தைக் கொண்ட ஒவ்வொரு பொது நிறுவனமும் முழுநேர முக்கிய நிர்வாக பணியாளர்களை கொண்டிருக்கவேண்டும். எனவே தனியார் நிறுவனங்கள் முக்கிய நிர்வாக பணியாளர்களை நியமிக்க தேவையில்லை என்று முடிவு செய்யலாம். ஆனால் இதற்கு விதிவிலக்கு உள்ளது XIII அத்தியாயத்தின் விதி 8A இன் படி (நிர்வாக பணியாளர்களின் நியமனம் மற்றும் ஊதியம்) விதிகள், 2014 பத்து கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் செலுத்தப் பட்ட பங்கு மூலதனத்தைக் கொண்ட ஒவ்வொரு தனியார் நிறுவனத்திற்கும் முழுநேர நிறுவன செயலாளர் கண்டிப்பாக இருக்க வேண்டும் முக்கிய நிர்வாக பணியாளர்களை நியமிக்கும் நடைமுறை 1 ஊதியம் உள்ளிட்ட நியமனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைக் கொண்ட தீர்மாணத்தினை இயக்குநர்களின் குழுக்கூட்டத்தில் நிறைவேற்றவேண்டும். 2. MBP-1 , DIR 8 ஆகிய இரண்டு படிவங்களையும் மிகச்சரியாக பூர்த்தி செய்து பெறவேண்டும் 3. DIR 12 எனும் படிவத்தினை மேலே கூறிய ஆவணங்களுடன் நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பித்திடவேண்டும் 4. சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றிடுக (நிர்வாக இயக்குனர், முழுநேர இயக்குநர் அல்லது மேலாளரை நியமித்தல் தொடர்பாக) 4. MGT-14 எனும் படிவத்தினை நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பித்திடவேண்டும்(பொது நிறுவனமாக இருந்தால் மட்டும்) 5. MR 1 எனும் படிவத்தினை நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பித்திடவேண்டும்பொது நிறுவனமாக இருந்தால் மட்டும்) கவனிக்க வேண்டிய முக்கிய செய்திகள் 1. ஒரு முழுநேர முக்கிய நிர்வாக பணியாளர்கள் ஒரே நேரத்தில் அதன் துணை நிறுவனத்தை தவிர ஒரு நிறுவனத்திற்கு மேல் பணியில் இருக்க முடியாது: 2. முழுநேர முக்கிய நிர்வாக பணியாளர்கள் பணிவிலகளினால் உருவாகும் காலிபணியிடமானது அத்தகைய காலியிடம் உருவாகி ஆறு மாத காலத்திற்குள் இயக்குநர்களின் குழுக் கூட்டத்தால் நிரப்பப்படும், . 3. எந்தவொரு நிறுவனமும் ஒரே நேரத்தில் ஒரு நிர்வாக இயக்குனரையும் மேலாளரையும் (நிருவாகியை) நியமிக்கவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது. 4. எந்தவொரு நிறுவனமும் ஒரு நபரை அதன் நிருவாக இயக்குனராக, முழுநேர இயக்குனராக அல்லது மேலாளராக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரேசமயத்திற்கு நியமிக்கவோ அல்லது மீண்டும் நியமிக்கவோ கூடாது:

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...