திங்கள், 7 நவம்பர், 2022

ஏன் மீண்டும் முயற்சிக்க வேண்டும்?

 

  தோல்வி பற்றிய ஆசிரியர்அறிவுரைராமு என்பவர் மிகுந்த ஆர்வத்துடன் புதியதாக ஒரு தொழிலைத் துவங்கினார், ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு, அவரது வணிகம் வீழ்ச்சியடைந்தது. அதன் பின் சிறிது நாட்கள் கடந்தும் ராமு வேறு தொழில் எதுவும் துவங்கவில்லை.  

 அவரது நிலைமையை அறிந்த அவரது ஆசிரியர் அவரை தங்களுடைய வீட்டிற்கு அழைத்தார். ஆசிரியர் ராமுவை வரவேற்று, இருரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்தபின் தற்போதைய நிலவரம் கூறித்து விவாதித்தனர். அப்போது ஆசிரியர், “நீ ஏன் வேறு தொழில் எதாவது செய்யக் கூடாது?” என்று கேட்டார். அதற்கு ராமு, “யா நான் ஏற்கனவே புதியதாக ஒரு தொழில் தொடங்கினேன். நான் அந்த தொழிலிறகாக மிகவும் கடினமாக உழைத்தேன், அந்த தொழிலிற்ாக எனது உடமைகளை அனைத்தையும் இழந்தேன். நான் நாள்முழுக்க ஓய்வெடுக்காமல் 24மணிநேரமும் வாரம் முழுவதும் வாரவிடுப்பெதுவும் எடுக்காமல் 7 நாட்களும் என்னுடைய புதிய தொழிலிற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டேன், ஆனால் அந்த வணிகம் தோல்வியடைந்து விட்டது", எனக்கூறினார்.  

  உடன் ஆசிரியர், "ஆனால் அதுதான் வாழ்க்கையின் உண்மையான களநிலவரமாகும், சில நேரங்களில் நாம் செய்திடும் தொழிலில் வெற்றி கிடைக்கும், வேறு சில நேரங்களில் தோல்விதான் கிடைக்கும் , தொழிலில் வெற்றியும் தோல்வியும் இயற்கையாக நடப்பதுதான் அதனால் நாம் துவங்கிடும் தொழிலை நிறுத்திவிடவேண்டும் என்று அர்த்தமல்ல" என்று ஆறுதல் கூற முயன்றார்.

   உடன் இராமு "வெற்றியை உறுதி செய்ய முடியாத போது, அந்த தொழிலை செய்து என்ன பயன்.", சற்று எரிச்சலுடன் பதில் கேள்வி கேட்டார்

   தொடர்ந்து ஆசிரியர் ராமுவை தன்னுடைய வீட்டுதோட்டத்தின் ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று, செத்துபோன தக்காளிச் செடியை காண்பித், “இதைப் பார்..” என்றார்

    ராமு குழம்பிப்போய், “தக்காளிசெடிகளெல்லாம் செத்து போய்விட்ட, வைகளினால் பயனேதுமில்லை. வற்றை ஏன் என்னிடம் காண்பிக்கின்றீ்ர்கள்?” என மிகவும் எரிச்சலுடன் கூறினார் 

   அதற்கு ஆசிரியர், “நான் வைகளுக்கான விதையை விதைத்தேன், போதுமான தண்ணீர் பாய்ச்சினேன், உரமிட்டேன், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தேன். நான் மிகவும் கவனமுடன் பார்த்து வந்தேன் ஆனாலும்வை இறந்துவிட்ட.” ஆசிரியர் சற்றுநேரம் நிறுத்தியபின், "நம்முடைய கடமை பணி செய்வது ஒன்றே.. நீ எவ்வளவு முயற்சி செய்து அயராது பாடுபட்டாலும், இறுதியில் என்ன நடக்கும் என்பதை உன்னால் தீர்மானிக்க முடியாது, ன்னுடைய கையில் உள்ள நீசெய்திடும் பணியை மட்டுமே உன்னால் கட்டுப்படுத்த முடியும், மீதமுள்ளசெயல்கள் மற்றவர்களால் நடக்கும் என விட்டுவிடுக " எனக்கூறினார்

  .உடன் ராமு, “ஆனால் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை என்றால், எதையும் முயற்சி செய்து என்ன பயன்?” என சந்தேகம் எழுப்பினார். தொடர்ந்து ஆசிரியர் , “அவ்வாறு நினைத்துக்கொண்டு பலர் வாழ்க்கையில் பெரிதாக எதையும் செய்ய முயல்வதில்லை..”எனக்கூறினார்.

  உடன் இராமுஅப்படி நினைப்பதில் என்ன தவறு. இவ்வளவு கடின உழைப்பு, இவ்வளவு பணம், இவ்வளவு நேரம் செலவழித்த பிறகும், வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை எனில், இவ்வளவு செய்து என்ன பயன்..” என்று சொல்லிவிட்டு ராமு தங்களுடைய வீட்டிற்கு கிளம்பதயாராக இருந்தார்.

  உடன ஆசிரியர் இராமு புறப்படுவதை தடுத்து நிறுத்தி, “நீ கிளம்புமுன், உனக்கு இன்னொரு செயலை காண்பிக்க விழைகின்றேன்..” என்று கூறியவாறு . ராமுவை அருகிலிருந்த வேறொரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று காண்பித்தார்

  அங்கே பெரிய சிவப்பு தக்காளி பழங்கள் கொத்தாக காய்த்து கிடந்தன. உடன் இராமு, " வற்றை ஏன் என்னிடம் காண்பிக்கின்றீர்கள்?" என மீண்டும் எரிச்சலுடன் வினவியபோது ஆசிரியர், "நீ பார்க்கும் இந்த தோட்டத்தில் முந்தைய தோட்டத்தில் நன்கு பாடுபட்டும் இறந்துபோய்விட்டதே எனவேறு செடிகளை வளர்க்காமல் . நான் நிறுத்தவில்லை, அந்த தோட்டத்தில் இறந்த செடிகளைப் பார்த்தேன், பின்னர் வேறு புதியவிதைகளை வாங்கி நான் மீண்டும் இந்த தோட்டத்தில் புதிய விதைகளை விதைத்து அவற்றைப் பராமரித்தேன். அவை இந்த தோட்டத்தில் வளர்ந்த. ப்போது இந்த தோட்டத்தில் நன்கு காய்த்து தொங்குகின்றன

   தேபோன்று, நீ தோல்வி ஏற்பட்டது என துவண்டுவிடாமல் தொடர்ந்து வேறு சரியான செயல்களைச் செய்தால், ன்னுடைய வெற்றிக்கான வாய்ப்புகள் பெரிதும் அதிகரிக்கும். ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான ஒரு படி என முடிவுசெய்து தொடர்ந்து முயன்றால் தொழிலில் வெற்றி பெறமுடியும் .ஆனால் ஒன்று அல்லது இரண்டு தோல்விகளால் துவண்டு தொழில் எதையும் செய்வதில்லை என முடிவெடுத்தால், வாழ்க்கை பயனத்தில் க்கு எந்த வெற்றியும் கிடைக்காது."என மிகநீண்ட விளக்கமளித்தார் 

  ராம இப்போது வெற்றிக்கான இரகசியத்தை தன்னுடைய ஆசிரியரிடமிருந்து தெரிந்து கொணடார், அவர் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டார், மேலும் அவர் வேறொரு புதிய தொழிலை துவங்கிடும் உத்வேகத்துடன் வெளியேறினார்.

கற்றல். ராமுவைப் போன்றே, பலரும் தாங்கள் முயற்சி செய்யாமல் இருப்பதற்கு தங்கள் தோல்வியை ஒரு காரணமாகக் காண்பிக்கிறார்கள். நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பது உண்மைதான். ஆனால், தொடர்ந்து வெற்றி பெற முயற்சிப்பவர்களுக்கு இன்று இல்லாவிட்டாலும் நாளை வெற்றி கிடைக்கும் என்பதுதான் உண்மையான களநிலவரமாகும்..அவ்வாசிரியர் அறிவுரை கூறுவது போன்று - ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான ஒரு படி என்பதை நினைவில் கொள்க.


ஞாயிறு, 6 நவம்பர், 2022

விழிப்(புடன்)பாய் இரு-- வங்கி பயன்பாட்டின் போதான.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

 2.முறைகேடான(Vishing) அழைப்புகள்

செயல் முறை

வஞ்சகர்கள் தொலைபேசி அழைப்பு / சமூக ஊடகங்கள் மூலம் வங்கியாளர்கள் / நிறுவன நிர்வாகிகள் / காப்பீட்டு முகவர்கள் / அரசு அதிகாரிகள் போன்ற தோற்றத்தில் வாடிக்கையாளர்களை அழைக்கி றார்கள் அல்லது அணுகுகிறார்கள். நம்பிக்கையைப் பெற, ஏமாற்றுக் காரர்கள் வாடிக்கையாளரின் சரியானபெயர் அல்லது பிறந்த தேதி போன்ற சில வாடிக்கையாளர் விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

சில சந்தர்ப்பங்களில், அனுமதியில்லாத நிதி நடவடிக்கைகளை தடுத்துநிறத்திடவேண்டி ,அவைகளுக்கு அபராதங்களை நிறுத்தி வைத்தல், கவர்ச்சிகரமான தள்ளுபடிகிடைத்தல் போன்றவற்றை அவசரமாக/ உடனடியாக செய்யவேண்டியுள்ளதால் கடவுச்சொற்கள் / OTP / PIN / அட்டை சரிபார்ப்பு மதிப்பு (Card Verification Value (CVV)) போன்ற ரகசிய விவரங்களைப் உடனடியாக பகிர்ந்திடுமாறு ஏமாற்றுபவர்கள் வாடிக்கையாளர்களை நெருக்குதல்ந்து / ஏமாற்றி.. வைகளை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற பின்னர்மோசடியாகப் பயன்படுத்தி கொள்கின்றனர்.


தற்காப்பு நடவடிக்கைகள்

வங்கி அதிகாரிகள் / நிதி நிறுவனங்கள் / இந்திய சேமநல வங்கி / எந்தவொரு உண்மையான நிறுவனமும் பயனர் பெயர் / கடவுச்சொல் / அட்டை விவரங்கள் / CVV / OTP போன்ற ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு வாடிக்கையாளர்களிடம் எப்போதும் கோருவதில்லை.

இந்த ரகசிய விவரங்களை யாருடனும், உங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களுடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.




ஞாயிறு, 30 அக்டோபர், 2022

விழிப்(புடன்)பாய் இரு-- வங்கி பயன்பாட்டின் போதான.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

1.1.மோசடியான(Phishing) இணைப்புகள்

செயல் முறை

மோசடி செய்பவர்கள் மூன்றாம் தரப்பு மோசடி(Phishing) இணையதளத்தை உருவாக்குகிறார்கள், இது ஏற்கனவே உள்ள உண்மையான இணையதளத்தைப் போன்றே தோற்றமளிக்கிறது - இவை வங்கியின் இணையதளம் அல்லது மின்-வணிக இணையதளம் அல்லது தேடுபொறி போன்றவைகளாகும்.

இந்த இணையதளங்களுக்கான இணைப்புகள் குறுந்தகவல் சேவை (Short Message Service (SMS)) / சமூக ஊடகங்கள் / மின்னஞ்சல் / உடனடி செய்தியாளர் போன்றவற்றின் மூலம் மோசடி செய்பவர்களால் பரப்பப்படுகின்றன

. ➢ பல வாடிக்கையாளர்கள் விரிவான ஒரேசீரானவளஇடங்காட்டியை (Uniform Resource Locator (URL)) சரிபார்க்காமல் இணைப்பை சொடுக்குதல் செய்து, தனிப்பட்ட அடையாள எண் (Personal Identification Number (PIN)), ஒரு முறை மட்டுமானகடவுச்சொல் (One Time Password (OTP)), கடவுச்சொல் (Password) போன்ற பயனாளர்உள்ளிடுகின்ற பாதுகாப்பான சான்றுகள . மோசடி செய்பவர்களால் கைப்பற்றப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன

தற்காப்பு நடவடிக்கைகள்

அறியப்படாத / சரிபார்க்கப்படாத இணைப்புகளை சொடுக்குதல் செய்திடாதீர்கள் எதிர்காலத்தில் தவறுதலாக அவற்றை அணுகுவதைத் தவிர்க்க, தெரியாத அனுப்புநர் அனுப்பிய குறுந்தகவல (SMS) / மின்னஞ்சலை உடனடியாக நீக்கிடுக.

வங்கி / மின்-வணிகம் / தேடுபொறி இணையதளத்திற்கான இணைப்புகளை வழங்கும் குழுவிலிருந்து விலகிடுக அத்தகைய மின்னஞ்சல்களை நீக்கும் முன் அனுப்புநரின் மின்னஞ்சல் சுட்டியைத் தடுத்திடு.

எப்போதும் வங்கியின் / சேவை வழங்குநரின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு மட்டும் செல். குறிப்பாக நிதிச் சான்றுகளை உள்ளிட வேண்டிய இணையதள விவரங்களைக் கவனமாகச் சரிபார்த்திடு. பாதுகாப்பிற்காசான்றிதழ்களை உள்ளிடுவதற்கு முன் இணையதளத்தில் பாதுகாப்பான அடையாளத்தை (பூட்டு சின்னத்துடன் கூடிய https) உள்ளதா எனச் சரிபார்த்திடு.

எழுத்துப் பிழைகளுக்கு மின்னஞ்சல்களில் பெறப்பட்ட இணையதள முகவரிகளையும்(URL) களப்பெயர்களையும் சரிபார்த்திடு. சந்தேகம் இருந்தால் உடனடியாக அதுகுறித்து தகவல்தெரிவித்திடு

 

1.2..முறைகேடான(Vishing) அழைப்புகள்

செயல் முறை

வஞ்சகர்கள் தொலைபேசி அழைப்பு / சமூக ஊடகங்கள் மூலம் வங்கியாளர்கள் / நிறுவன நிர்வாகிகள் / காப்பீட்டு முகவர்கள் / அரசு அதிகாரிகள் போன்ற தோற்றத்தில் வாடிக்கையாளர்களை அழைக்கி றார்கள் அல்லது அணுகுகிறார்கள். நம்பிக்கையைப் பெற, ஏமாற்றுக் காரர்கள் வாடிக்கையாளரின் சரியானபெயர் அல்லது பிறந்த தேதி போன்ற சில வாடிக்கையாளர் விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

சில சந்தர்ப்பங்களில், அனுமதியில்லாத நிதி நடவடிக்கைகளை தடுத்துநிறத்திடவேண்டி ,அவைகளுக்கு அபராதங்களை நிறுத்தி வைத்தல், கவர்ச்சிகரமான தள்ளுபடிகிடைத்தல் போன்றவற்றை அவசரமாக/ உடனடியாக செய்யவேண்டியுள்ளதால் கடவுச்சொற்கள் / OTP / PIN / அட்டை சரிபார்ப்பு மதிப்பு (Card Verification Value (CVV)) போன்ற ரகசிய விவரங்களைப் உடனடியாக பகிர்ந்திடுமாறு ஏமாற்றுபவர்கள் வாடிக்கையாளர்களை நெருக்குதல்ந்து / ஏமாற்றி.. வைகளை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற பின்னர்மோசடியாகப் பயன்படுத்தி கொள்கின்றனர்.


தற்காப்பு நடவடிக்கைகள்

வங்கி அதிகாரிகள் / நிதி நிறுவனங்கள் / இந்திய சேமநல வங்கி / எந்தவொரு உண்மையான நிறுவனமும் பயனர் பெயர் / கடவுச்சொல் / அட்டை விவரங்கள் / CVV / OTP போன்ற ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு வாடிக்கையாளர்களிடம் எப்போதும் கோருவதில்லை.

இந்த ரகசிய விவரங்களை யாருடனும், உங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களுடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.


 


சனி, 22 அக்டோபர், 2022

நம்முடைய மதிப்பை அறிந்து கொள்க - மகனுக்கு தந்தையின் பரிசு

ஒரு ஐரோப்பிய நாட்டில் தொழிலதிபர் ஒருவர் தங்களுடைய மகன் கால்லூரி படிப்பினை முடித்தவுடன் தன்னுடைய காரின் சாவியை மகனிடம் கொடுத்து , “மகனே, நீ நல்ல மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்கிறாய். உன்னுடைய பட்டப்படிப்பினை  முடித்ததற்கான எனது பரிசு இது. உங்கள் தாத்தா  நான் பட்டப்படிப்பு சரியாக முடித்ததற்காக எனக்கு இந்த காரை  பரிசாக கொடுத்தார். இப்போது  நீ நன்றாக பட்டபடிப்பு முடித்ததற்காக உனக்கு நான் இந்த காரை பரிசாக கொடுக்கின்றேன் நீ இதை நன்றாக வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." எனக்கூறினார் 

 உடன் அவருடைய மகன், “ஆனாலும். ஐயா அது மிகவும் பழையதாக இருக்கின்றதே...” என சந்தேகம் எழுப்பினார். 

 தந்தை தனது மகனிடம், “மகனே, இது பழையதுதான் என்று எனக்குத் தெரியும், ஆனால் இந்த காரைப் பற்றி நீ எதையும் முடிவு செய்வதற்கு முன்பு. நீ இந்தக் காரை பழைய பொருட்களை வாங்குபவரிடம் எடுத்துச் சென்று, அவரிடம் இதை விற்க விரும்புவதாகவும, அதற்கு அவர் எவ்வளவு கொடுக்கத் தயாராக இருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டு வா." எனக்கோரினார் 

 உடன் அவருடைய மகன் பழையபொருட்களை வாங்குபவரின் கடைக்குச் சென்று சிறிது நேரம் கழித்து திரும்பிவந்து தன்னுடைய தந்தையிடம், "ஐயா இது பழையது என்பதால் அதற்கு 90 டாலர் மட்டுமே தருவதாககூறினார்" என்றார்

. தொடர்ந்து தந்தை , " சரிமகனே இப்போது, அருகில் உள்ள பழைய காரை சரிசெய்து விற்பவரிடம்  காட்டி, இந்த காருக்கு எவ்வளவுவிலை கொடுக்கத் தயாராக இருக்கிறார் என கேட்டு வா." என்றார் .உடன்மகன் அவ்வாறான பணிமனை ஒன்றிற்கு சென்று சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து தன் தந்தையிடம், "ஐயா இந்த காருக்கு அவர் 500 டாலர் கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்" என்றார். தந்தை மீண்டும், "சரி மகனே இப்போது, பழைய கலைப்பொருட்கள் சேகரிப்பாளரிடம்  சென்று, இந்த காரின் மதிப்பு என்ன என்று தெரிந்துகொண்டுவா." என்றார் 

உடன் மகன் பழைய கலைபொருட்கள் சேகரிப்பாளரிடம் சென்று திரும்பி வந்து தன் தந்தையிடம், "ஐயா கலைப்பொருட்கள் சேகரிப்பாளர் இந்த காருக்கு 7000 டாலர் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக கூறினார்.." என்றார். 

அதனை தொடர்ந்த தந்தை சிரித்துக்கொண்டே, "மகனே இதிலிருந்து உனக்கு ஏதாவது புரிகிறதா?" எனக்கேள்வி எழுப்பினார்  தனக்கு தந்தை என்ன கூறவருகின்றார் என தெரியாமல் மகன் குழப்பமான பார்வையுடன் தந்தையைப் பார்த்தார். 

 அதனால் தந்தை , "சரியான இடமே உன்னை சரியாக மதிக்கிறது என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.  ஒரு நிறுவனத்தில் நீ சரியான மரியாதை பெறவில்லை என்றால், கோபப்பட வேண்டாம், ஏனென்றால் நீ சரியான இடத்தில் இல்லை என்று பொருளாகும். ஏனென்றால் உன்னை பற்றி சரியாக அறிந்தவர்கள் எப்போதும் உன் மதிப்பை அறிவார்கள், அதனால் உன்னைப் பாராட்டுவார்கள். உனக்கு நல்ல மதிப்பு வழங்கிடுவார்கள்  எனவே, உன்னை மதிக்காத இடத்தில் நீ ஒருபோதும் இருக்காதே. " என தன்னுடைய மகனுக்கு ஒரு நீண்ட அறிவுரையை வழங்கினார் அந்த தொழிலதிபர்.
கற்றல். : சரியான இடத்தில்  மட்டுமே உங்களின் சரியான மதிப்பை அறிவார்கள்.
 

சனி, 8 அக்டோபர், 2022

ஒன்றுமில்லாத உணர்வு

 நாம் ஒரு குழந்தையாக இந்த உலகத்தை வித்தியாசமாக காண்கின்கின்றோம். நமக்கு இந்த உலகில் உள்ள எல்லாம் மிகவும் வண்ணமயமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் தோன்றுகின்றது. நமக்குப் பிடித்த பொம்மை, மிட்டாய் போன்றவற்றைப் பார்த்து உற்சாகம் அடைகிறோம். இவ்வுலகில் வாழும் யாரும் நாம் குழந்தையாக இருப்பதால் நம்மிடம் அதிகம் எதிர்பார்ப்பதில்லை, நம்மை பற்றி  மதிப்பிடப் படாமலேயே நமக்கான அன்பையும் அக்கறையையும் பெறுகிறோம். புதிய செய்திகளை மிகத் தீவிரமாக கற்றுக்கொள்கிறோம். அதாவது விதைக்கப்பட்ட ஒரு விதையானது  சிறிய ஒரு செடியாக முளைத்து மரமாக வளரும், அவ்வாறான வளர்ந்து வரும் மரமானது இப்போது காற்று, வெப்பம், புயல், வறட்சி போன்ற பல மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதேபோன்று நாமும் குழந்தையாக இவ்வுலகில் தோன்றியபின் மனிதர்களாக வளரும் போது பல்வேறு சூழ்நிலை மாற்றங்களை சந்திக்க வேண்டியுள்ளது. அதனால் எந்தவொரு தனிநபரின் எதிர்கால வளர்ச்சியையும் எவ்வாறு இருக்கும் என்பதை நியாயமான துல்லியத்துடன் கண்டிப்பாக கணிக்க முடியாது. நாம் வளர வளர நமக்கான எதிர்பார்ப்புகளும் அதிகரித்து கொண்டேவருகிறது. நம்மை பற்றிய மதிப்பீட்டினை கண்டு ஏற்படுகின்ற  பயம், தோல்விகளைப் பற்றிய பயம், நமக்குபோதுமான திறன் இல்லை என்ற பயம்  நமக்கென  ஒன்றுமேயில்லை எனும் பயம் ஆகிய உணர்வுகள்நம்மை எப்போதும் பயந்துகொண்டே கோழையாக  வாழுமாறு செய்துவிடுகின்றது. அதாவது நாம் குழந்தையாக இருந்தபோது நமக்கு வானவில் போல இருந்த உலகம் படிப்படியாக மறைந்து போகிறது. இப்போது நாம் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளோம், ஒரு காலத்தில் நாம் நேசித்த செய்திகள் அனைத்தும் நமக்கு எதிராக இருப்பதாக நாம்  உணர்கின்றோம். ஏனெனி நாம் நம்முடைய வாழ்க்கை எனும் ஒரு நிலையான போர்களத்தில் நாம் எப்போதும் வாழ்ந்து கொண்டு  இருப்பதாக எண்ணுகின்றோம். அதனால் வளர்ந்து கொண்டிருக்கின்ற நம்முடைய வாழ்க்கையை  இன்னும் கடினமாக்குகின்றோம்  மேலும் நம்முடைய திறன்களை மற்றவர்களுக்கு நிரூபிக்க முயற்சிக்கிறோம். அதனால் நாம் அதற்கான செய்திகளைப் பின் தொடர்ந்து ஓடிக்கொண்டே யிருக் கின்றோம், தோல்வியடையும் போது ஒரு காலத்தில் இவ்வுலகில் ஒளிமயமாக இருந்த அனைத்தும் நமக்கு வெற்றிருளாக ஒன்றுமேயில்லாததாகத் தெரிகிறது. அதனை தொடர்ந்து நாம் ஒன்றுமில்லாத உணர்வை நமக்குள்ள வளர்த்து கொண்டு, ஒவ்வொரு நாளும் நம்முடைய திறன்களை கேள்விக்குள்ளாக்குகிறோம். நாம் தோல்வியுற்றவுடன், ஒவ்வொருவரும் தங்களுடைய தீர்ப்பு செய்திகளுடனும்  கருத்துகளின் பெட்டியுடனும் தோல்வி என்ற தலைப்பை நமக்கு வழங்க தயாராக உள்ளனர்.
 நம்முடைய  குழந்தைப் பருவம் என்பது நம்முடைய  வாழ்க்கையின் உள்ளடக்க அட்டவணை மட்டுமே நம்முடைய தோல்விகளுக்குப் பிறகுதான் உண்மையான புத்தகம் தொடங்குகிறது என்பதை அறிந்துகொள்ளதவறிவிடுகின்றோம். இவ்வாறான நம்முடைய வாழ்க்கையின் கசப்பான கட்டமானது நம்மீது நமக்கு நம்பிக்கை இருந்தால் மட்டுமே இனிமையான முடிவுகளைத் தருகின்றது.  ஒரு கட்டத்தில் நம்முடைய வாழ்க்கை அர்த்தமே இல்லாதது அல்லது நோக்கமே இல்லாதது போன்று தோன்றுவது நம்மனைவருக்கும்  பொதுவானதாகும். இருப்பினும், சில நேரங்களில்  மகிழ்ச்சியையும் வலியையும் உணருவதில்லை. எதுவும் நம்மை மிகவும் உற்சாகப்படுத்துவதில்லை. அதனை தொடர்ந்து நமக்கு தூக்கமின்மை, எடை இழப்பு , எப்போதும் சோர்வாக உணருதல் போன்ற பல உடல் பிரச்சனைகளையும் இது கொண்டு வரலாம். நம்முடன் தொடர்பை இழப்பது . நம்மைப் பற்றிய நுண்ணறிவு இல்லாத வாழ்க்கையின் மிக மோசமான கட்டமாகும் நம்மை முற்றிலும் காலியாக உணர வழிவகுக்ககூடும்.நாம் எந்த வகையான நபர் அல்லது நாம் யாராக உயர விரும்புகின்றோம் என்பதில் நமக்கு தெளிவு இல்லாமல் இருக்கலாம் என்று அர்த்தமாகும். சில நேரங்களில் இது நமது மோசமான கடந்த கால அனுபவங்களால் ஏற்படுகிறது. நீண்ட காலமாக நம்முடன் இருக்கும் உணர்ச்சிகளை நாம் வெளிப்படையாகப் பேசாமலோ அல்லது ஆராயாமலோ இருக்கும்போது. அது வேதனையாக உணர்ந்தாலும்,நமக்கு வருத்தத்தை ஏற்படுத்திய கடந்தகால நிகழ்வுகளைப் பற்றி பேசுவது நமக்கு வெற்றிக்கான வழியை செயல்படுத்த நமக்கு உதவக்கூடும். மனிதர்களின் வாழ்க்கைக்கு உணர்ச்சிபூர்வமான நெருக்கம், ஆதரவு அவர்களின் பிரச்சனையை சுறுசுறுப்பாகக் கேட்பவர்கள் தேவையாகும். தோல்விகள்நமக்கு ஒன்றுமில்லாத உணர்வை அல்லது நாம் எழுந்து நிற்கும் தைரியத்தை கொண்டு வரும் நம்முடைய சொந்த மேம்பாட்டு  திறன்களில் பணியாற்றுவது நிச்சயமாகநம்மை நாமே சிறந்த பதிப்பாக மாற்றையமைக்ககூடும். அதனால் தனியாக  அமர்ந்து  நம்மை பற்றி ஆராய முயற்சித்திடுக.  அன்புக்குரியவர்களுடன் இணைந்திருந்திடுக  உணர்ந்ததைப் பேசுக.





ஞாயிறு, 2 அக்டோபர், 2022

கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையே இடைவிடாத போராட்டம்

 "நேற்று என்பது கடந்த காலம், நாளை என்பது எதிர்காலம் ஆனால் இன்றுதான் நமக்கான பரிசுஆகும். அதனால்தான் இது நிகழ்காலம் என்று அழைக்கப்படுகிறது. மேற்கோள்கள் அல்லது ஊக்கமளிக்கும் கட்டுரைகள் ஆகியவற்றை படிப்பது மட்டும் போதாது. அதனால் உருவாகின்ற மாற்றத்தை நமக்குள் கொண்டு வருவதும் நம் மனநிலை மாறுவதும் இதற்கான ஒரே வழியாகும்" என்ற மேற்கோளை நாம் அனைவரும் கண்டிப்பாக கேள்விப்பட்டிப்போம். நம்முடைய வாழ்க்கையானது .ஒவ்வொரு மனிதனுக்கும் பொதுவான ஒன்றாக உள்ளது, ஆயினும்  நமக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையாக அமையவேண்டும் என்பதே நம்மனைவருடைய விருப்பமாக உள்ளது. அதனால் நாமனைவரும்  கவலையற்ற அல்லது குறைவான கவலையுடன், மன அழுத்தம்இல்லாத , மகிழ்ச்சியுடனான வாழ்க்கை விரும்புகிறோம். ஆனால் பிரச்சனை என்னவென்றால், நாமனைவரும் மிகவும் விரும்புகின்ற மகிழ்ச்சியானது மிகக்குறைவாகவே கிடைக்கிறது. .ஏனெனில்  நிகழ்காலத்தை விட கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் நாம் அதிக கவனம் செலுத்துவதே இதற்குப் பின்னால் உள்ள ஒரே காரணமாகும்.எனினும் நிகழ்காலத்தினை விட்டுவிட்டு கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் இணைத்து குழப்பிகொண்டிருக்கின்ற இளைஞர்கள் கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்திற்கு அமைதியின்றி தங்கள் எண்ணங்களை நகர்த்துகிறார்கள். நம் முடைய  எண்ணங்கள் கடந்த காலத்திலிருந்து தொடர்ச்சியாக நம்மைப் பின்தொடர்கின்றன, இது மிகவும் மகிழ்ச்சியான தருணமாகவோ அல்லது சோகமான அதிர்ச்சியாகவோ இருக்கலாம். அவை நிகழ்காலத்தில் நமக்கு அதிக மனவருத்தத்தை அளிக்கின்றன.அதனால் நம்மில் பெரும்பாலானோர்  எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து நம்முடைய நிகழ்காலத்தின் நேரத்தைக் கொன்றுவிடுகின்றோம், அது நம்மைவிட்டு  எங்கும் செல்லாதுஇருந்துகொண்டு நம்முடைய  எந்த பணியையும் செய்யவிடாமல் தடுத்து நிறுத்துகின்றது. ஆயினும் நம்முடைய எதிர்காலமானது நிகழ்காலத்தில் நாம் செய்யும் செயல்களை மட்டுமே சார்ந்துள்ளது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் அதில் கவனம் செலுத்தத் தவறுகிறோம்.
ஒரு நாளின் முடிவில், நாம் பணிகளைமுடித்து படுக்கையில் ஓய்வெடுக்கும்போது, நம்முடைய மனம் இன்னும் அந்த எண்ணங்களைத் தூண்டுகிறது. ஒரு கவர்ச்சியான தோற்றத்துடன் தொடங்கி வலியையும் துக்கத்தையும் கொடுப்பதில் முடிவடையும் ஒரு திரைப்படம் போன்று நினைவு காட்சி  மனதில் ஓடிக்கொண்டேயிருக்கிறது. நமது கடந்த காலம் நமக்கு மதிப்புமிக்க அனுபவங்களையும் படிப்பினைகளையும் தருகிறது. மனிதர்களைப் பற்றிய ஒரு சிறந்த செய்தி என்னவென்றால், நாம் நம்முடன் பேசுகிறோம், வெவ்வேறு வழிமுறைகளை வழங்குகின்ற அவ்வாறான நமது உள்மனதின் குரல் அரிதாகவே நிற்கிறது . நேர்மறையான நோக்கமுள்ள வாழ்க்கையுடன் நம்மைச் சுற்றிசெயல்படுவதன் மூலம் அதை அழகாகக் கட்டுப்படுத்தலாம். உறங்கச் செல்வதற்கு முன் கடைசியாக எப்பொழுது கடந்த காலத்தின் துக்கமோ அல்லது எதிர்காலத்தைப் பற்றிய கவலையோ இல்லாமல் நிம்மதியாக இருந்தோம் என்பது கூட நமக்கு நினைவிருக்கிறதா? ஒருவேளை இந்த அவசர உலகில், நாமெல்லோரும் நம்மைச் சுற்றியுள்ள செய்திகளைப் பாராட்டுவதற்கு  மறந்து விட்டோம். தற்போது நம்மிடம் என்னென்ன வளங்கள் உள்ளன என்பதைக் கவனிக்க கூட நமக்கு நேரம் இல்லை. அந்த வளங்களை சேகரிப்பதில் மட்டுமே நாம் மிகவும்சுறுசுறுப்பாக இருக்கிறோம் ஆனால் அவற்றை அனுபவிக்க நேரமில்லாமல் நாம் வாழ்ந்துவருகின்றோம்
 மனிதனின் வாழும் கலை என்பது நிகழ்காலத்தில் வாழ்வது. வாழ்க்கையில் எல்லாமே காலாவதி தேதியுடன் வருகிறது, அது உறவாக இருந்தாலும், செய்தியாக இருந்தாலும் அல்லது நாமாக இருந்தாலும் சரி. நேர்மறையான , ஆதரவான நபர்களுடன் நம்மைச் சுற்றி இருப்பது  நம்முடைய  மகிழ்ச்சியின் அளவை அதிகரிக்கச்செய்யும். கடந்த கால அல்லது எதிர்கால நிகழ்வுகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக நிகழ்காலத்தில் நாம் சரியாகசெயல்படுவதில் அதிக கவனம் செலுத்த இது நம்மை அனுமதிக்கின்றது. நாம் நிகழ்காலத்தில் கவனம் செலுத்த விரும்பினால், முன்பு செய்திகள் எப்படி இருந்தன என்பதை  விட்டுவிட்டு, அவற்றை மாற்ற முடியாது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது, சில சமயங்களில் வாழ்க்கை நாம் விரும்புவதை விட வித்தியாசமாக இருக்கும். ஏற்றுக்கொள்வது மட்டுமே நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத செய்திகளை விட்டுவிட உதவும். நம்மிடம் இல்லாத செய்திகளில் கவனம் செலுத்துவதை விட தற்போது நாம் பாராட்டக்கூடிய செய்திகளை மட்டும் கவணத்தில் கொள்வது என்பது  சிறந்த தொருவழிமுறையாகும். நாம் அனைவரும் தவறுகள் செய்துள்ளோம், தவறான தேர்வுகள் செய்துள்ளோம், நிராகரிக்கப்பட்டோம், சாதகமாகப் பயன்படுத்தினோம், கறைபடியாத நிறைவற்ற கடந்த காலம் யாருக்கும் இல்லை.
கடந்த காலத்தை மனதில் கொண்டு எதிர்காலத்தை நோக்கி ஓடுவது நம்மை எங்கும் கொண்டு செல்லாது. நிகழ்காலத்தின் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்வது  நமக்கு அதிக தன்னம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தரும். அதை இன்றே முயன்றிடுக

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...