ஒரு நாள், வேலைக்காரன் ஒருவன் பேரரசர் அக்பரின் படுக்கையறையை சுத்தம் செய்துகொண்டிருக்கும் போது, அவ்வேலைக்காரன் கையிலிருந்து ஒரு குவளை விழுந்து உடைந்துவிட்டது. அது அக்பருக்கு மிகவும் பிடித்தமான குவளையாகும் என்பதால் வேலைக்காரன் பயந்து போனான். அவ்வேலைக்காரன் உடைந்த குவளையின் எல்லா துண்டுகளையும் சேகரித்து இரகசியமாக வெளியில் கொண்டுசென்று எறிந்துவிட்டுவந்தான். அப்போது அக்பர் தன்னுடைய படுக்கையறைக்கு வந்துசேர்ந்தார் அப்போது, அவ்வறையில் தனக்குப் பிடித்தமான குவளை காணவில்லை என தெரிந்துகொண்டார் . உடன் அக்பர் அவ்வேலைக்காரனை அழைத்து அதைப் பற்றி கேட்டார் .அதனைதொடர்ந்து பயத்தால் வேலைக்காரன் , "நான் அந்த குவளையை சரியாக சுத்தம் செய்வதற்காக என் வீட்டிற்கு எடுத்துச் சென்றேன்" என பொய் சொல்லிவிட்டான். அதனால் அக்பர் அந்த அவ்வேலைக்காரணிடம் அவனுடைய வீட்டிற்கு சென்று அந்த குவளையை உடனடியாக தனது படுக்கைஅறைக்கு எடுத்துக்கொண்டு வரும்படி கட்டளையிட்டார். அவ்வாறு அக்பர் உத்தரவு இட்டதும், தன்னால் உண்மையை மறைக்க முடியாது என தெரிந்து கொண்ட, அவ்வேலைக் காரன் நடந்த அனைத்தையும் அக்பரிடம் கூறி, கைகூப்பி மன்னிப்பு கேட்க ஆரம்பித்தான். தன்னிடம் அவ்வாறு பொய் சொன்ன வேலைக்காரன் மீது அக்பர் அதிக கோபமடைந்தார். அதனால் உடனே அவ்வேலைக்காரனுக்கு மரண தண்டனை விதித்தார். அதனால் மேலும் பயந்து போன அவ்வேலைக் காரன் கைகளிரண்டையை கட்டிக்கொண்டு அக்பரிடம் தன்னை மன்னித்து விடும்படி மன்றாடி கேட்டுக்கொண்டே இருந்தான் ஆனால் அக்பர் அவனுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. அடுத்த நாள், அக்பர் தனது அரசவையில் இந்த செய்தியை ஒரு விவாதப் பொருளாக ஆக்கி, "உங்களில் யாராவது பொய் சொன்னீர்களா?" என பொதுவவாக வினவினார் அரசவையிலிருந்த அனைத்து உறுப்பினர்களும் ஒரே குரலில் தாங்கள் வாழ்நாளில் யாரும் பொய்கூறியதே இல்லையென மறுத்துவிட்டனர். அதனால் அக்பர் முதலில் நேரடியாக பீர்பாலிடம் அதைய கேட்டபோது, பீர்பால் "அரசே, எல்லோரும் சில நேரங்களில் ஏதாவது ஒரு பொய் கண்டிப்பாக கூறிடுவார்கள். அதன்படி நானும் பொய்கூறியிருக்கிறேன். ஆயினும் அந்த பொய்யானது யாருக்கும் தீங்கு செய்யாதது எனில் பொய் சொல்வதில் எந்தத் தீங்கும் இல்லை என்று நினைக்கிறேன்." என பதிலளித்தார், இதைக் கேட்டு மிகவும் கோபமடைந்த அக்பர் பீர்பாலை அரசவையிலிருந்து உடனடியாக வெளியேறிடுமாறு உத்திரவிட்டார். அக்பரின் உத்திரவின் படி பீர்பாலும் அரசவையிலிருந்து வெளியேறினார், ஆனால் வேலைக்காரனின் மரண தண்டனை குறித்து அவர் கவலைப் பட்டார். எனவே, வேலைக்காரணைக் காப்பாற்றுவதற்கான வழியை யோசிக்க ஆரம்பித்தார். அவவாறு ஆலோசித்தப் பிறகு, அவர் ஒரு பொற்கொல்லர் கடைக்குச் சென்று, தங்கத்தால் நெல் (அரிசியாக அரைக்கப்படாத நெல்) செய்யச் சொன்னார். மறுநாள் காலை பொற்கொல்லரும் பீர்பாலுக்கு அவர்கோரியவாறு தங்கத்தால் செய்யப்பட்ட நெல்லைக் கொடுத்தார். அந்த தங்க நெல்லை எடுத்துக்கொண்டு பீர்பால் அக்பரின் அரசவைக்குச் சென்றார். அரசவையிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகும் கூட பீர்பால் அரசவைக்குள் வருவதற்கான துணிச்சலைக் கண்டு அக்பர் அதிக கோபமடைந்தார். இருந்தபோதிலிரும் பீர்பால் அக்பரிடம் தங்க நெல்லைக் காட்டி, , "அரசே, நான் உங்களிடம் ஒரு முக்கியமான செய்தியொன்றை சொல்ல விரும்புகின்றேன், அதனால்தான் நான் இன்று அரசவைக்குள் உங்களுடைய உத்திரவை மீறி இங்கு வந்தேன். நேற்று மாலை, வீட்டிற்குச் செல்லும் போது, நான் ஒரு துறவியைச் சந்தித்தேன். அவர் இந்த தங்க நெல்லை என்னிடம் கொடுத்து, இதை ஏதாவது விளை நிலத்தில் விதைக்குமாறும் . இதை விதைத்தால் அந்த வயலில் பொன்நெல்லாக விளையும். என்றும் அறிவுரைவழங்கினார் நான் ஒரு வளமான நிலத்தைக் கண்டுபிடித்திருக்கின்றேன். அந்த வயலில் இதனை விதைக்க எல்லா அரசவை உறுபபினர்களும் நீங்களும் வரவேண்டும் என நான் வேண்டி கேட்டுகொள்கிறேன் இந்த தங்க நெல்லை அவ்வயலில் விதைத்தால் தங்கநெல்லாக விளையும் எனஅத்துறவி சொன்னது உண்மையா இல்லையா என்பதை சரி பார்க்கலாம். ” என மிகநீண்ட விளக்கமளித்தார் அக்பரும்ஒப்புக்கொண்டார், அடுத்த நாள் காலைபத்துமணிக்கு அனைத்து அரசவைஉறுப்பினர்களையும் அந்த விளைநிலத்திற்குவந்துசேருமாறு கட்டளையிட்டார். அடுத்த நாள், அனைவரும் வயலிற்கு வந்துசேர்ந்ததும், அக்பர் பீர்பாலிடம் அந்த தங்க நெல்லை வயலில் விதைக்கச் சொன்னார். ஆனால் பீர்பால் மறுத்து, "அரசே இந்ததங்கநெல்லை என்னிடம் கொடுக்கும்போது, பொய் சொல்லாத ஒருவர் விதைத்தால்தான் தங்கநெல்லாக விளையும் என்று துறவி எனக்கு அறிவுறுத்தினார். அதனால் என்னால் இதை விதைக்க முடியாது. தயவுசெய்து இதை விதைப்பதற்கு அரசவையில் பொய்சொல்லாத ஒருவருக்கு உத்தரவிடுங்கள்.." எனக்கோரினார் உடன் தன்னுடைய அரசவை உறுப்பினர்களில் பொய்சொல்லாத ஒருவர் வயலில் அந்த தங்கநெல்லை விதைக்குமாறு கோரினார், யாரும் முன்வரவில்லை. எல்லோரும் ஏதாவது ஒரு முறை பொய் சொல்லியிருப்பார்கள் என்பதை அக்பர் புரிந்து கொண்டார். யாரும் முன்வராத போது, பீர்பால் அந்த தங்கநெல்லை அக்பரின் கைகளில் கொடுத்து, "இங்கு யாரும் பொய்சொல்லாதவர்கள் யாருமேயே இல்லை . அதனால் நீங்கள்தான் இதை விதைக்க வேண்டும்.." என்றார். ஆனால் அக்பர் கூட அந்த தங்கநெல்லை வயலில் விதைப்பதற்கு தயங்கி, "நானும் சின்ன வயசுல பொய் சொல்லிஇருக்கின்றேன். அதனால் என்னாலும் இதை விதைக்கமுடியாது" என்றார். இதைக் கேட்ட பீர்பால் சிரித்துக்கொண்டே, "பொற்கொல்லனிடம் இருந்துதான் இந்த தங்க நெல் எனக்கு கிடைத்தது. உலகில் உள்ளவர்கள் சிலநேரங்களில் பொய் சொல்கிறார்கள் என்பதை உங்களுக்குப் புரிய வைப்பதே எனது நோக்கம். யாருக்கும் தீங்கு செய்யாத பொய் பொய்யன்று" என்றார்.
செவ்வாய், 6 ஜூன், 2023
ஞாயிறு, 28 மே, 2023
வெற்று காகிதம் - முதிய துறவியும் புகழ்பெற்றஅறிஞரும்
ஒருமுறை, நான்கு வேதங்களிலும் நன்கு தேர்ச்சி பெற்ற ஒரு புகழ்பெற்ற அறிஞர் ஒரு வயதான துறவியிடம் சென்று, "நான் வாழ்க்கையின் உண்மைதன்மையை அறிய விரும்புகிறேன், தயவுசெய்து எனக்கு வழிகாட்டுங்கள்" என்று கோரினார்.
உடன் அந்த வயதான துறவி , "நீங்கள் யார்?" என கேட்டபோது
அறிஞர், "என்னை உங்களுக்குத் தெரியாதா? நான் புனித நூல்கள் போன்ற பலவற்றையும் நன்கு கற்றறிந்தவன் அதனால் இந்த நகரத்தில் எனக்குப் பெரும் புகழ் உண்டு நான் பல வேதங்களை கற்றிருந்தாலும் இன்னும் வாழ்க்கையின் உண்மைதன்மையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த உண்மைதன்மையைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் நான் உங்களிடம் வந்தேன்." என அவர் கூறினார்
முதிய துறவி , "அப்படியா மிக்கநல்லது நீங்கள் உங்களுக்குத் தெரிந்ததை எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொண்டு வருகிறீர்களா, ஏனென்றால் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவற்றினை திரும்பவும் நான் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. உங்களுக்குத் தெரியாத செய்திகளை மட்டுமே நாம் விவாதித்தால் நான் கற்றுக்கொடுத்தால் மட்டுமே அது உங்களுக்கு நல்லது." என அறிவுரைக்கூறினார்
அதனை தொடர்ந்து அவ்வறிஞர் உடன் தன்னுடைய இருப்பிடத்திறகு திரும்பி வந்து தனக்கு தெரிந்தவற்றை தான் கற்றுக்கொண்டவற்றை எழுதத் தொடங்கினார். அவற்றை முழுமையாக எழுதும்போது மூன்று வருடங்கள் கழிந்தன அவ்வளவு அறிவு அவருக்கு இருந்தது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவ்வறிஞர் ஆயிரக்கணக்கான பக்கங்கள் நிரப்பப்பட்ட பெரியபையுடன் அம்முதிய துறவியை காண திரும்பவும்சென்றார்.
அவ்வளவு அதிக பக்கங்களின் குவியலைகண்டஅம்முதிய துறவி, "இந்த வயதில் என்னால் இவ்வளவையும் படிக்க முடியாது. இதை இன்னும் சுருக்கிஎழுதிகொண்டுவாருங்கள்" என்றார்.
அவ்வறிஞர் திரும்பி சென்று முன்னர் எழுதியவைகளை சுருக்கமாக எழுதத் தொடங்கினார். அதற்கு மூன்று மாதங்கள் பிடித்தன.
மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவ்வறிஞர் மீண்டும் அம்முதியதுறவியிடம் சென்றார். இம்முறை அவ்வறிஞரிடம் மிகக் குறைவான பக்கங்களே இருந்தன, ஆனால் அவையும் நூறு பக்கங்களின்அளவு இருந்தன.
அவ்வயதான துறவி, "இதுவும் அதிகமாகும். என்னுடைய உடல் பலவீனமாகிவிட்டது. கண்கள் பலவீனமாகிவிட்டன, இவ்வளவு படிக்கக்கூட முடியாது. இவைகளின் சுருக்கமான சாராம்சத்தை மட்டும் என்னிடம் கொண்டு வாருங்கள்." எனக்கூறினார்
அவ்வறிஞர் திரும்பிச் சென்று ஏழு நாட்களுக்குப் பிறகு சில பக்கங்களாகத் தனது அறிவின் சாராம்சத்தை எழுதி கொண்டுவந்தார்.
அவ்வயதான துறவி அதைக் கண்டு, "உங்களுக்குத் தெரியும் எனக்குமிக வயதாகிவிட்டது, அதிகம் படிக்கமுடியாது. அதை இன்னும் சுருக்கமாகச் சொல்லுங்கள்" என்றார்.
அதைக் கேட்ட அவ்வறிஞருக்கு, அம்முதியதுறவி என்ன சொல்ல முயல்கின்றார் என்பது புரிந்தது, எனவே அவ்வறிஞர் உடனடியாக வேறொரு அறைக்குச் சென்று ஒரு வெற்றுக் காகிதத்தைக் கொண்டு வந்தார்.
அதைப் பார்த்து முதிய துறவி சிரித்துகொண்டே, "இந்த வெற்றுக் காகிதம் என்றால் நான் வெறுமையாக இருக்கிறேன், முற்றிலும் காலியாக இருக்கிறேன் என்று அர்த்தமாகும்.. இப்போது நீங்கள் புதிய செய்திகளை கருத்துகளை தெரிந்துகொள்ளவும், கற்றுக்கொள்ளவும் தகுதி பெற்றுள்ளீர்கள், ஏனென்றால் இப்போது உங்களுக்கு எதுவும் தெரியாது என்ற அடிப்படையை நீங்கள் புரிந்து கொண்டீர்கள்." என அறிவுரை கூறி தன்னுடைய கருத்துகளை கூறத்துவங்கினார்
சனி, 20 மே, 2023
அரசனின் ஆணையும் அமைச்சரின் ஆலோசனையும் -
முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் ஒருமுறை, குறிப்பிட்ட ஒரு நபரின் முகத்தை காலையில் முதன்முதலாக பார்ப்பதால் ஏற்படுகின்ற ஆபத்து ,மோசமானஅன்றைய நிலை ஆகியவற்றினால் மிகப் பிரபலமானார் .அதனால் அவ்வூர் பொதுமக்கள் அனைவரும் காலையில் அக்குறிப்பிட்ட நபரை முதன்முதலில் காண்பதற்கே அஞ்சினர் அதனை தொடர்ந்த அவ்வூர் மக்கள் அனைவரும் சேர்ந்து அவரைப் பற்றி அந்நாட்டு அரசரிடம் புகார் செய்தனர்.
ஆயினும் இந்த செய்தியை அந்நாட்டு அரசன் நம்பவில்லை, எனவே அரசன் அதை தானே சரிபார்க்க முடிவு செய்தார். அதனால் ஒரு நாள், அரசன் அந்த நபரை தனது அரண்மனைக்கு அழைத்து, அவருக்கு தன்னுடைய அரண்மலையில் ஒருநாள் இரவு தங்க இடம் கொடுத்தார்.
அடுத்த நாள் காலையில் எழுந்தவுடன் தான் செய்யவேண்டியபணியை துவங்குவதற்கு முன் அரசன் அந்த நபரைச் சந்திக்க முடிவு செய்து அரசன் அக்குறிப்பிட்ட நபரின் முகத்தினை முதன்முதலில்ப் பார்த்தார். தொடர்ந்து அவ்வரசன் தன்னுடைய வழக்கமான பணிகளை செய்யத்துவங்கினார்
தற்செயலாக, அன்று கால அட்டவணையின் படி அரசன் தன்னுடைய பல்வேறு பணிகளை உடனடியாக முடிக்கவேண்டியிருந்ததால் அதிகவேலைபளு காரணமாக, அரசனால் அந்த நாள் முழுவதும் சாப்பிட நேரம் கிடைக்கவில்லை. எனவே, அந்த மனிதனின் முகம் உண்மையில் மோசமானது என்ற முடிவுக்கு மன்னர் வந்தார்.
எனவே, அரசன் அன்றை யநாள்முடிவில் அந்த மனிதனுக்கு மரண தண்டனை விதித்தார்.
மறுநாள் அந்நாட்டி்ன் அமைச்சர் ஒருவர் அரசனின் இந்த உத்தரவைப் பற்றி கேள்விப்பட்டு உடனடியாக மன்னரிடம் சென்று, "இந்த நிரபராதிக்கு ஏன் மரண தண்டனை விதிக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு மன்னன், "அமைச்சரே, நான் நேற்று . காலையில் என்னுடைய வழக்கமான அனைத்து பணிகளையும் துவங்குவதற்கு முன்இவரின் முகத்தைப் பார்த்ததனால், ஒரு நாள் முழுவதும் உணவு உண்ணக்கூட முடியவில்லை" என்றார்.
அதற்கு அமைச்சர், "அரசே! அந்த மனிதனின் முகத்தைநீங்கள் முதன் முதலாகப் பார்த்தீர்கள், அதனால் ஒரு நாள் முழுவதும் உங்களாால் உணவு உண்ணமுடியவில்லை, ஆனால் அந்த மனிதனைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். நேற்று காலையில் அந்த நபர் முதன் முதலில் பார்த்தது உங்கள் முகத்தைத்தான், அதனால் அவர் இன்று மரண தண்டனையைப் பெற்றார். இப்போது யாருடைய முகத்தை காண்பது மோசமானது ஆபத்தானது என நீங்களே முடிவு செய்யுங்கள். ." என க்கூறினார்
அமைச்சரின் இந்த விளக்கத்தைக் கேட்ட அரசன், இவ்வாறு சிந்தித்துப் பார்க்காததால் திடுக்கிட்டார்.
தொடர்ந்து அமைச்சர், "அரசே! எந்த ஒரு நபரின் முகத்தினையும் முதன்முதலாக பார்ப்பதும் மேசமானதும் ஆபத்தானதும் இல்லை, நாம் பார்க்கும் அல்லது நினைக்கும் விதம்தான் அவ்வாறாக இருக்கின்றது. அதனால் தயவு செய்து அவரை விடுவித்து விடுங்கள்" என்ற கோரிக்கைய வைத்தார்.
அரசன் அமைச்சர்ரி கூறிய செய்தியை புரிந்துகொண்டு உடன் அந்த நபருக்கு விதித்த மரணதண்டனையிலிருந்து அவரைவிடுவித்தார்
ஞாயிறு, 14 மே, 2023
அரசனுக்கு துறவி சலுகை - சிந்தனையில் மாற்றம்
முன்னொரு காலத்தில்ஒரு அரசன் ஒரு நாட்டினை ஆட்சி செய்தான், அவனுடைய அரசாட்சியின்போது நாட்டில் பணத்திற்கும் உணவுப் பொருட்களுக்கும் பஞ்சமில்லை. அவருடைய ஆட்சியின் கீழ் அவரது நாட்டு குடிமக்கள் மிகமகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
அவ்வாறான சூழலில் குறிப்பிட்ட ஒரு வருடத்தில், அவருடைய நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. பயிர்கள் கருகியகாய்ந்து போனதால், போதுமான மகசூல் கிடைக்கததால் விவசாயிகள் வரி செலுத்த முடியவில்லை. இதனால், வருவாய் குறைந்து, கருவூலம் காலியாகத் துவங்கியது.
இதைப் பார்த்த மன்னன் கவலையடைந்தான், மேலும் தன் குடிமக்களுக்கு பஞ்ச அல்லது வறட்சி நிவாரனம் எவ்வாறு வழங்குவது, அரசாங்கச் செலவுகளை எவ்வாறு கையாளுவது என அவ்வரசன் எப்போதும் யோசித்துக் கொண்டிருந்தார்.
வறட்சிமுடிந்த அந்நாட்டின் நிலைமை வழக்கமான சாதாரண நிலைக்கு மாறிவிட்டது, ஆனால் அவ்வரசன் கவலைப்படுவதை நிறுத்தவில்லை. மீண்டும் இதேபோன்ற பஞ்சம் ஏற்பட்டால், தனது நாட்டினை எவவாறு நிருவகிப்பது எனவர் எப்போதும் கவலைப்பட்டு கொண்டே இருந்தார். அண்டை நாடுகளுடனான போருக்கான பயம், மந்திரிகளின் சதி என பல கவலைகள் அவரது பசி, தாகம், மறந்த உறக்கமற்ற இரவுகளாகப் அவருக்கு ஆகிவிட்டது. அவர் தனது தற்போது நிலையைக் கண்டு மிக வருத்தமடைந்தார்.
ஒரு நாள் துறவி ஒருவர்அவரது அரசவைக்கு வந்தார், அரசன் தனது தற்போதைய பிரச்சினையை அத்துறவியிடம் கூறி, அந்த பிரச்சினையை தீர்வுசெய்வதற்கான தகுந்த ஆலோசனை கேட்டார்.
துறவி , "அரசனே இந்த அரசாட்சியே உன்னுடைய அனைத்து கவலைகளக்கும் அடிப்படைகாரணமாகும் அதனால் . இந்த அரசாட்சியை உன்னுடைய மகனுக்குக் கொடுப்பதன் மூலம் நீ கவலைதுமின்றி மிக மகிழ்ச்சியுடனஅ வாழமுடியும். .."எனக்கூறினார்
உடன் அவ்வரசன், "ஆனால் ஐயா என் மகனுக்கு ஐந்து வயதுதான் ஆகிறது அவனால் எவ்வாறு அரசாளமுடியும்.." என்றார்.
துறவியானவார், "சரிஅரசனே அவ்வாறாயின்,உன்னுடைய நாட்டின் அரிசாட்சியை என்னிடம் ஒப்படைக்கலாம், உன்னுடைய மன வருத்தத் தையும் கவலைகளையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்." எனக்கூறினார்
அம்மன்னன் உடனே சம்மதித்து தன்னுடைய நாட்டின அரசாட்சியை அத்துறவியிடம் ஒப்படைத்தார்
. இப்போது, துறவி அவ்வரசனிடம், " மிகவும் நன்று இப்போது நீ உயிர்வாழ்வதற்கான வருமானத்திற்கு என்ன செய்வீர்கள்? எவ்வாறு சம்பாதிப்பீர்கள்?"என வினவினார்.
அரசன், "அதனால் என்ன ஐயா நான் இப்போது ஏதாவது வியாபாரம் செய்து பிழைத்து கொள்ளலாம் என திட்டமிடுகின்றேன் ஐயா." என பதில் கூறினார்
உடன் அத்துறவி "மிகவும் நன்று ஆனால் அந்த வியாபாரத்திற்கு போதுமான பணத்தினை உன்னால் எவ்வாறு ஏற்பாடு செய்யமுடியும்? ஏனெனில் இப்போது அரசாட்சி என்னுடையது என்பதால் கருவூலப் பணத்தின் மீது எனக்கு உரிமை உள்ளது. அதை உன்னுடைய வியாபரத்திற்கு கண்டிப்பாக பயன்படுத்த முடியாது", என்றார் துறவி.
அதனை தொடர்ந்து அரசன் "அவ்வாறாயின் எனக்கு ஏதேனும் ஒரு வேலை கிடைக்குமா என தேடவேண்டும.",என பதிலளித்தார்.
உடன் அத்துறவி "மிகவும்நல்லது. ஆனால் நீ வேலையைச் செய்ய வேண்டும் என்றால், வேறு எங்கும் தேடிசெல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த அரசவையிலேயே நீ வேலை செய்யலாம்", எனபதிலளித்தார் .
அவ்வரசன் மிகவும் ஆர்வமாக, "நான் இந்த அரசவையில் என்ன வேலை செயயவேணடும்?" என்று கேட்டார்.
அதற்கு அத்துறவி சிரித்துக்கொண்டே, "நான் ஒரு துறவி, நான் என் குடிசையில் மட்டுமே தங்குவேன், அரண்மனையில் தங்கி, என் சார்பாக இந்த அரசாட்சியை நீயே நடத்து" என்றார்.
அவ்வரசன் ஏற்றுக்கொண்டு அத்துறவியிடம் வேலை செய்ய ஒப்புக்கொண்டார். அரசன தனது வேலையின் ஒரு பகுதியாக அரசு நிர்வாகத்தை கையாளத் தொடங்கினார். துறவி தன் குடிசைக்குச் சென்றுவிட்டார்
சில நாட்களுக்குப் பிறகு, துறவி மீண்டும் அரசவைக்கு வந்து அரசரைச் சந்தித்து, "இப்போது உங்களுக்கு பசிக்கிறதா , உங்கள் தூக்கம் எவ்வாறு இருக்கிறது?" என்று கேட்டார்.
உடன் அவ்வரசன் "ஐயா நான் இப்போது நிறைய சாப்பிட்டு நன்றாக தூங்குகிறேன்.ஆயினும் முன்பும் நான் இதே வேலையைத்தான் செய்தேன், ஆனால் அப்போது என்னால் சரியாக சாப்பிடவோ தூங்கவோ முடியவில்லை, ஆனால் இப்போது என்னால் அனைத்து செய்ய முடிகின்றது. இந்த மாற்றம் எவ்வாறு ஏற்பட்டது? இது என் புரிதலுக்கு அப்பாற்பட்டது. ", என தூவியியம் சந்தேகம் எழுப்பினார்.
உடன் துறவி சிரித்துக் கொண்டே, “முன்பெல்லாம் நீங்கள் இந்த அரசாட்சி பணியை எனும் உங்கள் மனதில் எப்போதும் பெரியசுமையாக கருதி சுமந்து கொண்டிருந்தீர்கள்
. ஆனால் அரசாட்சியை என்னிடம் ஒப்படைத்த பிறகு, அதை உங்கள் கடமையாகக் கருதி எல்லா வேலைகளையும் செய்கிறீர்கள்.
கற்றல்:வாழ்க்கையில் எந்த வேலையைச் செய்தாலும், அதை கடமையாகக் கருதி, அதைச் சுமையாகக் கருதாமல் செய்தால் நம்முடைய கவலையிலிருந்து விலகி இருக்க முடியும்.
ஞாயிறு, 7 மே, 2023
சிறிய ஒரே கல்லிற்கு வெவ்வேறு இடங்களின் வெவ்வேறுமதிப்பு
ஒரு நாள் மகன்ஒருவன் தன் தந்தையிடம் சென்று, "அப்பா, உயிரின் மதிப்பு என்ன?"
அப்பா சிரித்துக்கொண்டே சொன்னார், "உண்மையில் உன் உயிரின் மதிப்பைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், நான் சொல்வதைச் செய்ய வேண்டும். மகன் ஒப்புக்கொண்டான்
தந்தை ஒரு கல்லை வாங்கி மகனிடம் கொடுத்து, “மகனே, இதை எடு
சாலையோரத்தில் மார்க்கெட்டுக்கு கல், பிறகு சில இடத்தில் உட்கார வேண்டும். யாராவது அதன் விலையைக் கேட்டால், போடுங்கள்
உங்கள் இரண்டு விரல்களை மேலே. நீங்கள் அதை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்."
அந்தக் கல்லைப் பார்த்த மகன் ஏன் இவ்வளவு எளிமையான கல்லை வாங்குவார்கள் என்று நினைத்தான். அப்போதும் அவன் தந்தை சொன்னபடி சந்தைப்பேட்டைக்குச் சென்று அங்கேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தபோது, ஒரு வயதான பெண் அவனிடம் வந்து, "இந்தக் கல்லின் விலை என்ன?"
பையன் எதுவும் பேசவில்லை, அப்பா சொன்னது போல் இரண்டு விரல்களை உயர்த்தினான். அதைப் பார்த்த அந்த பெண், "சரி.. இந்த கல்லை 200 ரூபாய்க்கு வாங்க ரெடி" என்றாள்.
சிறுவன் தன் தந்தையின் அறிவுறுத்தலின்படி அந்தக் கல்லை விற்கவில்லை, திரும்பி வந்தான். 200 ரூபாய்க்கு வாங்க அந்த பெண் தயாராக இருப்பதாக அவர் மகிழ்ச்சியுடன் தந்தையிடம் கூறினார்.
இப்போது அவனுடைய தந்தை, "இந்த முறை நீங்கள் அருங்காட்சியகத்திற்குச் செல்லுங்கள். அங்கேயும் இந்தக் கல்லின் விலையை யாராவது உங்களிடம் கேட்டால், முன்பு போல் இரண்டு விரலை உயர்த்துங்கள்" என்றார்.
சிறுவன் கல்லுடன் அருங்காட்சியகத்திற்குச் சென்றான். அங்கே ஒருவன் அந்தக் கல்லைப் பார்த்து, “என்ன விலை?” என்று கேட்டான்.
பையன் மறுபடி எதுவும் பேசாமல் "சரி. 20 ஆயிரம். வாங்குறேன்" என்று இரண்டு விரலை மட்டும் போட்டான். , மனிதன் பதிலளித்தான்.
கல்லுக்கு இவ்வளவு மதிப்பு இருக்கும் என்பதை அறிந்த சிறுவன் ஆச்சரியமடைந்தான். மீண்டும் அந்த கல்லை விற்க மறுத்துவிட்டு வீட்டுக்கு வந்தார். தந்தையிடம் எல்லாவற்றையும் சொன்னான்.
இப்போது, இந்த அப்பா சொன்னார், "இப்போது நீங்கள் இந்தக் கல்லை ஒரு விலையுயர்ந்த கல் கடைக்கு எடுத்துச் செல்லுங்கள், அங்கேயும் யாராவது உங்களிடம் அதன் விலையைக் கேட்டால் இரண்டு விரல்களை உயர்த்துங்கள்."
சிறுவன் கல் கடைக்குச் சென்று, கல் கடைக்காரரைப் பார்த்ததும், "இந்தக் கல் உங்களிடம் எப்படி இருக்கிறது. இது மிகவும் அரிதானது, நான் இந்தக் கல்லை வாங்க விரும்புகிறேன். சொல்லுங்கள், நீங்கள் என்ன விலைக்கு விற்கிறீர்கள்?" பையன் எதுவும் பேசாமல் இரண்டு விரல்களை உயர்த்தினான்.
நாயகன் மகிழ்ச்சியுடன், "நிச்சயமாக. 2 லட்சத்திற்கு வாங்குகிறேன்" என்று பதிலளித்தார்.
பையன் மீண்டும் ஆச்சரியப்பட்டான். அவர் மீண்டும் கல்லை விற்காமல் வீட்டிற்கு வந்தார்.
வீட்டை அடைந்ததும் தன் தந்தையிடம், "அப்பா, இந்தக் கல்லுக்கு ஒருவர் 2 லட்சம் கொடுக்கத் தயாராக இருக்கிறார், சிலர் 200 ரூபாய்க்கு மட்டும், மற்றவர் 20 ஆயிரம் கொடுக்கத் தயாராக இருக்கிறார். எப்படி இவ்வளவு வித்தியாசம்?"
தந்தை விளக்கினார், "மகனே, உன் உயிரின் மதிப்பை உனக்குச் சொல்லச் சொன்னாய். இதுவே உன் பதில்.
இந்த கல்லின் இடத்தில் உங்கள் வாழ்க்கையை வைத்து, உங்கள் வாழ்க்கையின் மதிப்பை மதிப்பிடுங்கள். இந்த கல்லின் விலை வெவ்வேறு இடங்களில் வித்தியாசமாக இருந்தது. வாழ்க்கையிலும் அப்படித்தான்.
உங்கள் வாழ்க்கையின் மதிப்பு நீங்கள் உங்களை எங்கு வைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது."
சனி, 29 ஏப்ரல், 2023
.நான்கு பெண்களும் அவர்களின் மகன்களின் குணங்களும்.
முன்பெல்லாம் தற்போது போன்று குழாய் வழியாக பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் வழங்கப்படுவதில்லை . பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய கிராமத்தில் உள்ள பொதுக் கிணற்றில் வாளி கயிறு ஆகியவற்றைஎடுத்துவந்து தத்தமது தேவைக்கேற்ப தண்ணீரை கினற்றிலிருந்து இறைத்து பாத்திரங்களில் வீட்டிற்கு எடுத்துசெல்வது வழக்கமாகும் ஒருநாள் அவ்வூரில் இருந்த நான்கு பெண்கள் அவ்வாறு பொதுக் கிணற்றில் தண்ணீர் இறைத்து பாத்திரங்களில் தண்ணீரை நிரப்பிக் கொண்டிருக்கும் போதே ஒருவருக்கொருவர் தங்களுக்குள் விவாதிக்க ஆரம்பித்தனர்.
அவ்வாறான விவாதத்தின்போது அந்நான்கு பெண்களும் தங்களுடைய மகன்களின் குணநலன்களைப் பற்றிவிவாதிக்க ஆரம்பித்தார்கள்.
முதல் பெண்மணி, "என் மகன் புல்லாங்குழல் வாசிக்கிறான். அவன் தன்னுடைய புல்லாங்குழலின் இசையைக் கேட்பவர்கள் மயங்கும் அளவுக்கு நன்றாக வாசிக்கிறான். இவ்வளவு திறமையான மகனைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்." என்றார்
இரண்டாவது பெண், "என் மகன் சிறந்த மல்யுத்த வீரன். இந்த கிராமத்தில் மட்டுமல்ல, தொலைதூர கிராமங்களிலும் பிரபலமானவன். ஒவ்வொரு குடும்பத்திலும் அவ்வாறு ஒரு மகன் கிடைப்பது மிகவும்நல்லது." என்றார்
அப்போது மூன்றாவது பெண் , "என் மகன் மிகபுத்திசாலி இந்த கிராமத்தில் அவனை விட வேறுயாரும் புத்திசாலியே இல்லை. ஏராளமானவர்கள் தங்களுடைய பிரச்சனைகளை அவனிடம் கூறி அதற்கான தீர்வினையும் , அவனுடைய ஆலோசனையையும் பெற்று மனமகிழ்ச்சியுடன் செல்கிறார்கள், நான் அத்தகைய மகனைப் பெற்றதற்கு மிகவும மிகழ்ச்சியடைகிறேன்." என்றார்
நான்காவது பெண் இம்மூவரின் பேச்சையும் கேட்டாள் ஆனால் அவள் எதுவும் பேசவில்லை.
இதைப் பார்த்த மற்ற மூன்று பெண்களும் அவளிடம், "நீயும் உன்னுடைய மகனை பற்றி ஏதாவது கூறேன்.. உன்னுடைய மகனின் திறன் என்ன? எங்களிடம் சொல்லேன்." என விடாப்பிடியாக வற்புறுத்தினார்கள்
நான்காவது பெண், "நான் என்ன சொல்ல முடியும். என் மகனுக்கு உங்கள் மகன்களைப் போன்ற எந்த குணங்களும் இல்லை." எனக்கூறினார் அந்த நான்காவது பெண் தன்னுடைய மகனை பற்றி அவ்வாறு சொல்வதைக் கேட்டு, மூன்று பெண்களும் தங்கள் மகன்களைப் பற்றி மிகவும்பெருமிதம் கொண்டனர்.
அவ்வாறு பேசிக் கொண்டே அனைவரும் தங்களுடைய பாத்திரங்களில் தண்ணீரை நிரப்பினர். அவர்கள் தங்கள் வீட்டிற்குச் செல்ல தத்தமது பாத்திரங்களைத் தூக்கி இடுப்பில் வைக்கத் தொடங்கினர்.
அதே நேரத்தில், முதல் பெண்ணின் மகன் அந்தவழியாக புல்லாங்குழல் ஊதிக்கொண்டு சென்று கொண்டிருந்தான். அதனால் அவனது தாயால் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தினை தூக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதைக் கண்டான். இருந்தாலும் தன்னுடைய தாய்க்கு உதவி செய்யாமல் தொடர்ந்த புல்லாங்குழல் ஊதிக்கொண்டு சென்று கொண்டே யிருந்தான்
இரண்டாவது பெண் மகன் தூரத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். இரண்டாவது பெண் கிணற்றிலிருந்து பத்திரத்தை தூக்கியவுடன், அவள் கால் நழுவி கினற்றிற்குள் விழுப்போனால் அதனால். நேராக நிற்பதற்கு தடுமாறினாள். அவளுடைய மகன் இதைப் பார்த்தான், ஆனால் தன்னுடைய தாயினை காப்பதற்கா கதாயின் அருகில் வரவில்லை, ஆயினும் அவனுடைய பயிற்சியைத் தொடர்ந்தான்.
அப்போது, மூன்றாவது பெண் மகனும் வீட்டில் இருந்து வெளியே வந்தான். அவனைப் பார்த்த அவனுடைய தாய், "மகனே! நான் பாத்திரத்தை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் இந்தக் கயிற்றை மட்டும் எடுத்து என்னுடைய தோளில் போட்டுவிடு " என்றாள். ஆனால் அவளுடைய மகன் அவளது கோரிக்கைக்கு பதில் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டான்.
அப்போது நான்காவது பெண்ணின் மகனும் அந்த இடத்தை கடந்து சென்று கொண்டிருந்தான். அம்மாவின் இடுப்பில் ஒரு பாத்திரமும் தலையில் ஒரு பாத்திரமும் மற்றொருகையில் வாளியும் கயிறும் இருப்பதைப் பார்த்தவன் தன்னுடைய தாயின் அருகில் சென்று அவள் தலையில் இருந்த பாத்திரத்தினை எடுத்து தன் தலையில் வைத்துக்கொண்டு அம்மாவுடன் சேர்ந்த நடக்க ஆரம்பித்தான்.
கிணற்றுக்கு அருகில் அமர்ந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்த ஒரு மூதாட்டி, “இங்கே உங்கள் நாள்வரில் நல்ல இரக்கமனமுள்ள மகன் மட்டுமே சிறந்தவனாக நான் பார்க்கிறேன்.. தன்னுடைய தாய் இடர்படும் நேரத்தில் தன்னுடைய தாய்க்காக சேவை செய்யும் மகனை விட சிறந்த மகன் யார் இருக்க முடியும். .." என்றார்
ஞாயிறு, 23 ஏப்ரல், 2023
கஞ்சன் -வெள்ளிக் கிண்ணம் - பொருளின் மதிப்பு!
முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில் மிகவும் கஞ்சனத்துடன் கூடிய முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் எந்த பொருட்களைப் பயன்படுத்துவதிலும் மிகவும் கஞ்சத்தனமாக இருந்துவந்தார்.
அவர் மிகவும் விலையுயர்ந்த வெள்ளித்தட்டு ஒன்றினை வைத்திருந்தார், அது அவருடைய மிகவும் மதிப்புமிக்க உடைமையாக இருந்தது. அதனால் அதனை தன்னுடைய வீட்டிலுள்ள மிகவலுவான பெட்டிஒன்றில் வைத்து பூட்டி மிக பத்திரமாக பாதுகாப்பது அவருடைய வழக்கமான பணியாகும். சரியான சந்தர்ப்பம் வந்தால் மட்டுமே அந்த வெள்ளித்தட்டினை எடுத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.
ஒரு நாள் அவருடைய வீட்டிற்கு துறவி ஒருவர்வந்தார்.
தன்னுடைய வீட்டிற்கு வந்த துறவிக்கு உணவு பரிமாறும் போது ஏன் தன்னுடைய வீட்டிலுள்ள வெள்ளித்தட்டில் உணவு பரிமாறக்கூடாது என ஒரு கணம் அந்த முதியவர் நினைத்தார்.
ஆனால் அடுத்த நொடியே , "வெள்ளித்தட்டு மிகவும் மதிப்பு வாய்ந்தது. கிராமம் கிராமமாக அலைந்து திரியும் ஒரு ஏழை துறவிக்கு இதை நான் ஏன் பயன்படுத்த வேண்டும்.! நம் நாட்டு அரசர் என் வீட்டிற்கு வந்தால், அவருக்கு இந்த வெள்ளி தட்டில் உணவு பரிமாறலாம். ." என உடன் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டார்
அதனால் அன்று ஏழைத்துறவிக்கு உணவுபரிமாறுவதற்காக முதியவர் அந்தவெள்ளித்தட்டினை வெளியே எடுக்கவே யில்லை.
சில நாட்களுக்குப் பிறகு, அந்த நாட்டு அமைச்சர் அவரது வீட்டிற்கு வந்தார். அமைச்சருக்கு உணவு பரிமாறும்போதும் முதியவர் அந்த வெள்ளிதட்டினை எடுத்து உணவு பரிமாறலம் என நினைத்தார், ஆனால் அடுத்த நிமிடமே, "அவர் நம் நாட்டு மன்னரின் அவையில் இவர் ஒரு சாதாரண அமைச்சர்தானே இவருக்கு வெள்ளித்தட்டில் உணவு பரிமாறுவது சரியாகுமா! நம் நாட்டு அரசர் என் வீட்டிற்கு வந்தால், அவருக்கு இந்த வெள்ளி தட்டில் உணவு பரிமாறலாம். ." என தன் எண்ணத்தினை மாற்றிக்கொண்டார்
உண்மையில் சில நாட்களுக்குப் பிறகு, அந்த நாட்டு அரசனே அந்த முதியவரின் வீட்டிற்கு வந்தார், ஆனால் அதற்கு சற்று முன்புதான் அந்த அரசன் அண்டைநாட்டு அரசனுடன் போரிட்டு அதில் தோல்வியுற்றதால் தன்னுடைய நாட்டில் சிலபகுதிகளை இழந்திருந்தார்.
அம்முதியவர் தன்னுடைய நாட்டு அரசனு்ககு உணவு பரிமாறும் போது, இப்போது அந்த வெள்ளித்தட்டில் நம்முடைய நாட்டு அரசனுக்கு உணவினை பரிமாறலாமே என்று நினைத்தார், உடன், "! ஆனால் நம்முடைய நாட்டு அரசன் அருகிலுள்ள நாட்டு அரசனுடன் போரிட்டு அந்த போரில் தோல்வியுற்ற நம்முடைய நாட்டில் சில பகுதிகளை பறிகொடுத்துவிட்டார் போரில் வெற்றிபெறுகின்ற அரசன் மட்டுமே அந்த வெள்ளித்தட்டில் சாப்பிட வேண்டும். எனவே அதை வெளியே எடுக்கக்கூடாது"என தன்னுடைய எண்ணத்தினை உடன் மாற்றிக்கொண்டார்
இதனால் அவரது வெள்ளி தட்டுமட்டும் இதுவரையில் பயன்படுத்தப் படாமலேயே இருந்துவந்தது. ஒரு நாள் அம்முதியவரும் இறந்து போனார்.
அவர் இறந்த பிறகு, அவரது மகன் வெள்ளித்தட்டினை பாதுகாப்பாக வைத்து பூட்டி வைத்திருந்த அந்த பெட்டியை பெட்டியைத் திறந்து பார்த்தான் அதிக நாள் பயன்படுத்தாமல் இருந்ததால் அந்த வெள்ளித்தட்டு ஒரே கருப்பாகமங்கி பார்க்கவே சகிக்காமல் இருந்தது.
அதனால் அந்த வெள்ளித்தட்டினை தன் மனைவியிடம் காட்டி, "இதை என்ன செய்யலாம் எதற்காக பயன்படுத்தலாம்?" என வினவியபோது
அவன் மனைவி கிண்ணத்தைப் பார்த்து, “எவ்வளவு அழுக்காக இருக்கின்றது.. அதனால், நம் வீட்டு நாய்க்கு உணவளிக்க பயன்படுத்தலாம்” என்றாள்.அன்று முதல் அந்த வெள்ளித்தட்டில் அவ்வீட்டின் செல்ல நாய் சாப்பிட ஆரம்பித்தது.
அம்முதியவர் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு தகுதிவாய்ந்த நபருக்கு உணவு பரிமாற பூட்டிவைத்திருந்த வெள்ளித்தட்டுஅந்த நோக்கத்திற்காக ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை, இறுதியில் அதன் மதிப்பை இழந்து சாதாரண வழக்கமான பொருளாகிவிட்டது
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
மண்பானை செய்திடும் ஒரு குயவன் தான் கொண்டுசென்ற பானைகளை யெல்லாம் விற்றுவிட்டு சந்தையிலிருந்து திரும்பிவந்து கொண்டிருக்கும் போது, வழியில் கண்...
-
ஒரு நிறுமத்தின் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபடும் , ஊழியர்கள் நிறுவனத்தை நன்றாக வழிநடத்தி செல்லும் இயக்குநர்கள...
-
பல ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியமும் நீண்ட வரலாறும் கொண்ட நாடு நமது இந்திய நாடு. அறிவியல் தொழிற் நுட்பம் பண்டைய இந்தியாவில், ஏனைய உலக கலாசாரப் ப...