சனி, 16 ஜனவரி, 2021

நாம் ஒருமணிநேரத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கின்றோம் ?

 – ஒரு அர்த்தமுள்ள கேள்விக்கான பதிலுடன் கூடிய கதை,
 தற்போதைய இயந்திரமயமான வாழ்க்கை வாழும்   ஒருவர் தனது அன்றைய பணி முடிந்து  தாமதமாக, சோர்வாக  வீட்டிற்கு வந்து சேர்ந்தார் அப்போது அவருடைய .  5 வயது மகன் அவர்களுடைய வீட்டின் வாசலில் அவருக்காக காத்திருப்பதைக் கண்டார் 
அவருடைய மகன் : “அப்பா! நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?”  என கோரியபோது அவர்: " மகனே! தாராளமாக கேள்வி கேட்கலாம் அந்த கேள்வி என்ன?” என  பதிலளித்தார். தொடர்ந்து அவருடைய மகன்: “அப்பா! நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கின்றீர்கள்?” என கேள்வி எழுப்பியபோது தந்தை: “இது உனக்கு தேவையில்லாதது. ஏன் அவ்வாறு கேட்கின்றாய்? ” என அவர் மிக கோபமாக எரிந்து விழுந்தார். இருந்தபோதிலும் அவருடைய மகன் அமைதியாக: “நான்  தெரிந்து கொள்ள விரும்புகின்றேன். அப்பா! தயவுசெய்து சொல்லுங்கள், நீங்கள் ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கின்றீர்கள்? ”என மீண்டும் வினவியபோது தந்தையானவர்: "நான் ஒரு மணி நேரத்திற்கு ரூ .100/- சம்பாதிக்கிறேன்."என பதிலளித்தார்  அதனை தொடர்ந்து அவருடைய மகன்: “அவ்வாறாயின்  அப்பா! எனக்கு  ரூ .50/- மட்டும் கடன் தருவீர்களா?” என கோரியபோது தந்தை அதிக கோபமடைந்தார், “ விளையாடுவதற்கான பொம்மை அல்லது வேறு சில முட்டாள்தனமான பொருட்கள் ஏதேனும்  வாங்குவதற்கு உனக்கு பணம் தேவை அதனால்  என்னிடம் கடன் வாங்கவிரும்புகின்றாய்  உனக்கு என்னவேண்டுமோ என்னிடம் நேரடியாக கேள்!  அதனை  உனக்கு நானே நேரடியாக வாங்கி தருகின்றேன்  அதனால்,தேவையில்லாத செயலில் நீ தலையிடாதே. இரவுசாப்பாடு சாப்பிட்டு விட்டிருந்தால் பேசாமல் நேராக படுத்து தூங்கசெல்." என உத்திரவிட்டார் . அதனால் அந்தச் சிறுவன்  வேறுஏதும் பேசாமல் தனது அறைக்குச் சென்று கதவினை மூடி அமைதியாக படுத்துவிட்டான் . சிறிது நேரம் கழித்தவுடன் அந்த மனிதன் அமைதி அடைந்தார்:, “அந்தசிறுவன் உண்மையில் இவ்வாறு அடிக்கடி பணம் கேட்பது வழக்கமில்லை. இருந்த போதிலும் இன்று அவ்வாறு பணம் கேட்கின்றான் என்றால் அவனுக்கு உண்மையிலேயே ஏதேனும் விளையாட்டு பொருட்கள் உடனடியாக  வாங்குவதற்கு அந்த ரூ .50/-  தேவைப்பட்டிருக்கலாம், அதனால்  அவ்வாறு கேட்டிருக்கலாம் அல்லவா! " என யோசிக்க ஆரம்பித்தார் அதனால் அந்த மனிதன் சிறுவனின் அறையின்  கதவை திறந்து உள்ளே சென்றார் . ” மகனே!  தூங்குகின்றாயா? ” என தன்னுடைய மகனிடம்  கேட்டார். "இல்லை அப்பா!, " என்று சிறுவன் பதிலளித்தான். "மகனே! முன்பு நான் உன்னிடம் மிகவும் கோபமாக திட்டிவிட்டேன். நீ கேட்ட ரூ .50/- இந்தா வாங்கிகொள். ” என கூறியவாறு தன்னுடைய மகனிடம் ரூ .50/- ஐ கொடுத்தார் உடன் அந்த சிறுவன் சிரித்தபடி படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து “ நன்றி அப்பா!” என கூறியவாறு அந்த பணத்தினை வாங்கி கொண்டான். . பின்னர், தனது தலையணைக்கு அடியில் வைத்திருந்த பணத்தையும்  வெளியே எடுத்தான்.பின்னர் அந்தச் சிறுவன் மெதுவாக  பணத்தை  மொத்தம் எவ்வளவு உள்ளது என கணக்கிட்டான், அதன் பின்னர் தன் தந்தையைப் பார்த்தபோது. பையனிடம் ஏற்கனவே பணம் இருப்பதைக் கண்ட மனிதன், மீண்டும் கோபத்துடன் "உன்னிடம் ஏற்கனவே பணம்  இருந்தால் மேலும் ஏன் அதிக பணம் உனக்கு வேண்டும்?" என  முணுமுணுத்தார். "ஏனென்றால் அந்த பணம் எனக்கு போதுமானதாக இல்லை, அப்பா!,அதனால்தான் நான் உங்களிடம் ரூ .50/- ஐ  கடனாக எனக்கு தருமாறு கோரினேன் இப்போது என்னிடம் ரூ .100/-.உள்ளது  உங்களுடைய  நேரத்தின் ஒரு மணிநேரத்தை நான் வாங்கலாமா? அப்பா! நாளைய  உங்களுடைய பணியை ஒருமணிநேரத்திற்குமுன்னரே முடித்து வீட்டிற்கு சீக்கரம் வந்து சேருங்கள். அந்த ஒருமணி நேரத்தில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தினை நான் இன்றே உங்களுக்கு தருகின்றேன். நாளை  நான் உங்களுடன் அந்த ஒருமணிநேரம் இரவு உணவை சாப்பிட்டுகொண்டே  மகிழ்ச்சியுடன் இருக்க விரும்புகிறேன். " எனகோரிக்கை வைத்ததும் அத்தந்தைக்கு  “அடடா! தினமும் நம்முடைய பிள்ளையுடன் சிறிதுநேரம் கூட அமர்ந்து இல்லாமல் எப்போதும் வேலை வேலை என இயந்தரமயமான இந்த சூழலில் வாழ்ந்து  கொண்டிருக் கின்றேனே!”  என்ற உண்மை அவருடைய நெஞ்சில் சுருக்கென  முள்குத்தியதை போன்று இருந்தது  . அவர் தனது சிறிய மகனைச் தனது கைகளால் சேர்த்து அனைத்துகொண்டு,  மன்னிப்பு கோரினார்.
 வாழ்க்கையில்  எப்போதும் வேலை வேலை  என மிகவும் கடினமாக உழைத்து வாழும் நம் அனைவருக்கும் ஒரு நினைவூட்டல். நமக்கு உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்தவர்களுடன், சிறிது நேரம் செலவிடாமல் நேரத்தை நழுவ விடாதீர்கள்…
 

சனி, 2 ஜனவரி, 2021

ஒரு வயதான மனிதனும் அவரது மகனும்

 
தற்போதைய கிராமத்தில் வாழமுடியாத சூழலில் ஒரு இளைஞன் பிழைப்பினை தேடி நகரத்தினை நோக்கி செல்வதற்காக அழைத்தான் அப்போத தன்னுடைய தந்தையையும் தன்னுடன் நகரத்திற்கு அழைத்தபோது தான் பிறந்து வளர்ந்த இந்த கிராமத்தை விட்டு தன்னால் வரமுடியாது என மறுத்து தனியாக தான் இருப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அவ்விளைஞன் பிழைப்பதற்காக நகரத்தை நோக்கி பயனபட்டான் அதனால் அம்முதியவர் அவருடைய கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். அதன்பின்னர் அந்த வருடத்தில்அக்கிராமத்தில் நல்ல மழைபொழிந்தது அதனை தொடர்ந்து அவர் தனது நிலத்தில் மக்காச்சோளம் அல்லது குச்சிவல்லி கிழங்கு பயிரிட விரும்பினார், ஆனால் அதற்காக அவர் மிகவும் கடினமாக உழைக்கவேண்டியிருந்தது மேலும் நிலத்தினை உழுதிடுவதற்காக போதுமான பணமும் கைவசம் இல்லை பிழைப்பினை தேடி நகரத்திற்கு சென்ற அந்த இளைஞனை தீவிரவாதி என சந்தேகபட்டு சிறையில் அடைத்துவிட்டனர் அதனால். அவருக்கு உதவி செய்த அவரது ஒரே மகன் சிறையில் இருந்ததால், அவ்விளைஞனை வெளியே கொண்டுவருவதற்காக போதுமான பணவசதி இல்லாததால் ஒரு வழக்கறிஞரை நியமிக்க முடியவில்லை. அதனால் அவ்வயதானவர் தனது மகனுக்கு தனது நிலைமையைக் குறிப்பிட்டு பின்வருமாறு ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தர்:
அன்புள்ள மகனே,
நான் மிகவும் மோசமானநிலையில் இருப்பதாக உணர்கின்றேன், ஏனெனில் இந்த ஆண்டு நமது கிராமத்தில் நல்ல மழைபொழிந்துள்ளது ஆயினும் நமது நிலத்தில் மக்காச்சோளம் அல்லது குச்சிவல்லி கிழங்கு பயிரிடுவதற்கு போதுமான நிதிவசதி இல்லாததால் அவ்வாறு செய்ய முடியாது என்று தெரிகிறது. உன்னுடைய தாயார் எப்போதும் மழைபொழிந்துவிட்டது நம்முடைய நிலத்தில் பயிர்செய்திடுமாறு புலம்பிகொண்டே இருக்கின்றார் அவ்வாறு என்னால் செய்யஇயலாத நிலையில் நான் அதனை நான் வெறுக்கிறேன். எனெனில் எனக்கு வயதாகிவிட்டதால் நிலத்தில் என்னால் கடின உழைப்பை ஈடுபடமுடியவில்லை. நீ இங்கே இருந்திருந்தால், ஏதாவது செய்துகொண்டிருப்பாய்அதனால் எங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் முடிந்துவிடும். ஆனால் நீ சிறையில் இருப்பதால் எதுவும் செய்யமுடியாமல், தவிக்கின்றோம் என்னசெய்வது என்று தடுமாறி இருக்கின்றோம் .
அன்பு, அப்பா
அதன்பின்னர் அந்த வயதானவருக்கு ஒரு தந்தி வந்தது அதில்பின்வருமாறு செய்தி இருந்தது,
 அப்பா, நிலத்தினை நீங்கள் உழுவதை பற்றி கவலைப்பட வேண்டாம்! அங்குதான் நான் ஏராளமான அளவில் துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் புதைத்து வைத்திருக்கின்றேன் !! ’
அதனை தொடர்ந்து மறுநாள் அதிகாலையிலேயே அவருடைய நிலத்தில் , அருகிலிருந்த நகரத்தின் ஏராளமானஅளவிலான FBI முகவர்களும் காவல்துறை அலுவலர்களும் அவருடைய நிலத்தில் துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் கண்டுபிடிப்பதற்காக முழு தோட்டத்தையும் தோண்டிபுரட்டி பார்த்து ஏதும் கிடைக்கததால் . குழப்ப்ததுடன் சென்றுவிட்டனர்,
பின்னர் அவ்வயதானவர் தனது மகனுக்கு அவருடைய நிலத்தில் என்ன நடந்தது என்று மற்றொரு கடிதத்தினை எழுதி, அடுத்து தான் என்ன செய்வது என்று கேட்டார்.
அதனைதொடொர்ந்து அவரது மகன் : ‘நீங்கள் நம்முடைய நிலத்திற்கு சென்று நீங்கள் விரும்பியவாறுமக்காச்சோளம் அல்லது குச்சிவல்லி கிழங்கு பயிரிடுக அப்பா. இங்கிருந்து உங்களுக்காக நான் செய்யக்கூடியது இதுதான். ’
எனக்குறிப்பிட்டார்

நீதி: நாம் உலகில் எங்கிருந்தாலும் பரவாயில்லை, நாம் மனப்பூர்வமாக ஏதாவது செய்ய முடிவு செய்திருந்தால், நாம் எங்கு இருக்கிறீர்கள் அல்லது நம்மிடம் உதவிகோரும் நபர் எங்கே இருக்கிறார் என்பது முக்கியமன்று அவ்வுதவியை நாம் செய்யலாம்..

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

தவறுகளிலிருந்து கற்றல்

 

தாமஸ் எடிசன் எனும் அறிவியல் அறிஞர் மின்சாரத்தில் ஒளிரும் விளக்கை கண்டுபிடிப்பதற்காக இரண்டாயிரம் வெவ்வேறு பொருட்களில் முயற்சித்து கொண்டிருந்தார். எதுவும் திருப்திகரமாக ஒளிதரும் மின்விளக்காக அமையவில்லை அதனால் அவருடன் அந்த ஆய்வகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த, அவரது உதவியாளர் , “ஐயா இரண்டாயிரம் முறை முயன்றும் நம்முடைய பணிகள் அனைத்தும் வீணாக போய்விட்டது நமக்கு இதுவரையில் ஒன்றும் சரியாக அமைய வில்லை, மின்சாரத்தை பயன்படுத்தி மின்சாரத்தில் மிகச்சரியாக ஒளிரும் மின்விளக்கை நம்மால் கண்டுபிடித்திட முடியுமா என்று உறுதியாக தெரியவில்லை. ” என மிக மனம் வெறுத்து கூறினான் அதனை தொடர்ந்து எடிசன் மிகவும் நம்பிக்கையுடன் , “ஓ, அப்படியா தம்பி நாம் வெகுதூரம் வந்துவிட்டோம், போன்றிருக்கின்றதே பரவாயில்லை ஒரு நல்ல ஒளி விளக்கை உருவாக்க நம்மால் பயன்படுத்த முடியாத இரண்டாயிரம் தவறுகள் இருப்பதை நாம் அறிவோம் அவைகளிலிருந்த நாம் நிறைய கற்றுக்கொண்டுள்ளோம்.அதே தவறினை மீண்டும் செய்யாது முயற்சிசெய்தால் நாம் கண்டிப்பாக வெற்றிபெறுவோம்” என நம்பிக்கை ஏற்படுத்தினார் : ஆம் நம்முடைய தவறுகளிலிருந்தும் அதனை வெற்றியாக்குவதற்கு நாம் கற்றுக்கொள்ளமுடியும்.

சனி, 5 டிசம்பர், 2020

அமெரிக்க சுற்றுலாபயனியும் தமிழக மீனவர்ஒருவரும் - வாழ்க்கை பாடம்

 
ஒரு அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் தமிழ்நாட்டின் கடற்கரையோர சிறியதொரு மீனவ கிராமத்தின் அருகில் உல்லாச சுற்றுலா படகில் நின்று பயனம் செய்து கொண்டிருந்த போது மீனவர் ஒருவரின் சிறிய மீன்பிடி படகு அந்த உல்லாச சுற்றுலாபடகிற்கு அருகே வந்துவிட்டது. அச்சிறிய படகில் அம்மீனவர் பிடித்து கொண்டுவந்த மீன்கள் குவியலாக இருந்தன. அமெரிக்கர் அம்மீன்கள் தரம் குறித்தும் ஏராளமானஅளவில்மீன்களை அம்மீனவர் பிடித்துகொண்டுவருவதை குறித்தும் அம்மீனவரைப் பாராட்டினார். "இம்மீன்களைப் பிடிக்க எவ்வளவு நேரம் ஆனது?" என அமெரிக்கர் அம்மீனவரிடம் வினவினார். "இப்போதுதான் கடலிற்குள் சென்றேன் ஐயா!மிககுறைந்த நேரத்தில் இந்த மீன்களை பிடித்துகொண்டு திரும்பிவருகின்றேன் ஐயா!" என அம்மீனவர் மிகவும் பணிவுடன் பதிலளித்தார். "அதுசரி இவை உங்களுக்கு போதுமா? நீங்கள் ஏன் அதிக நேரம் கடலிற்குள் இருந்து மிகஅதிக மீன்களைப் பிடிக்கக்கூடாது?"என அமெரிக்கர் அம்மீனவரிடம் வினவியபோது மீனவர் "இது எனது குடும்பத்தின் தேவைகளை ஆதரிக்க போதுமானது ஐயா!" என்று கூறினார்.. தொடர்ந்து அந்த அமெரிக்கர் அம்மீனவரிடம் "ஆனால் உங்களுடைய மீதமுள்ள நேரத்தை நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என சந்தேகம் எழுப்பியபோது மீனவர் , “நான் தினமும் கடலிற்குள் சென்று மிககுறைந்த நேரம் மட்டும் , கொஞ்சம் மீன் பிடித்தபிறகு,மிகுதிநேரத்தில் என் குழந்தைகளுடன் விளையாடுகிறேன், என் மனைவி யுடனும் பிள்ளைகளுடன் ஒன்றாக சேர்ந்து உணவு அருந்துகின்றேன், ஒவ்வொரு நாள் மாலையும் கிராமத்தில் உலா வருகிறேன், சக உறவினர்களுடனும் நண்பர்களுடனும சேர்ந்து ஏதேனும் இசையை வாசிகின்றேன். என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொருநாளின் முழுநாளும் ஏதாவது பணி இருந்துகொண்டே யிருக்கின்றதுஐயா! ” என விவரமாக கூறினார்: அதனை தொடர்ந்து அமெரிக்கன் அமமீனவரை கேலி செய்தார்: “நான் ஒரு ஹார்வர்ட் பல்கலைகழக எம்பிஏ, மீன்பிடித்து விற்பணை செய்திடும் உங்களுடைய மீன்வியாபாரத்தில் நீங்கள் முன்னேறுவதற்கு என்னால் உதவ முடியும். நீங்கள் மீன்பிடிக்க தற்போத செலவிடும் நேரத்தை விட அதிக நேரம் செலவிட வேண்டும், அதனால் அதிகஅளவு மீன்களை பிடிக்கலாம் அதனால் அதிக வருமானம் ஈட்டமுடியும் அவ்வாறான அதிக வருமானத்தினால் நீங்கள் ஒரு பெரிய படகு வாங்கலாம், தொடர்ந்து அப்பெரிய படகிலிருந்து கிடைக்கும் வருமானத்துடன், அதிக எண்ணிக்கையில் மீன்பிடி படகுகளை வாங்கலாம்.அதனால் அதிக அளவு மீன்களை பிடித்து அதிக வருமானத்தினை ஈட்டலாம் இறுதியில் நீங்கள் மீன்பிடி படகுகளுடன் கூடிய பெரிய கப்பலை வாங்கி மீன்பிடித்து கொண்டுவருவதற்காக பயன்படுத்தலாம். அதனை தொடர்ந்து நீங்கள் பிடித்த மீன்களை ஒரு இடைத்தரகருக்கு விற்பதற்கு பதிலாக, நீங்களே நேரடியாக நுகர்வோருக்கு விற்பதற்கான கட்டமைப்பினை உருவாக்கி மீன்விற்பணை முழுவதும் உங்கள் கட்டுபாட்டில் கொண்டுவரலாம் மேலும், இறுதியில் உங்களுடைய மீன்களை பதப்படுத்திடும் உங்களுடைய சொந்த தொழிற்-சாலையை உருவாக்கலாம். அதன் மூலம் மீன்பதப்படுத்திடும் தயாரிப்பு, செயலாக்கம் , விநியோகம் ஆகிய அனைத்தையும் நீங்கள் ஒருவரே கட்டுப்படுத்திடமுடியும். அதனால் இந்த சிறிய கடலோர மீன்பிடி கிராமத்தை விட்டு வெளியேறி சென்னை மும்பை போன்ற மிகப்பெரிய நகரங்களுக்கு நீங்கள் குடிபெயர்ந்த பின்னர் இறுதியில் உங்களுடைய மீன்வியாபாரத்தினை இந்தியா முழுவதும் விரிவடைந்துவரும் மிகப்பெரிய நிறுவனமாக உங்களுடைய நிறுவனத்தை நடத்துவீர்கள். ” என தன்னுடைய மீன் வியாபாரத்தினை மேம்படுத்திடும் கருத்துகளை மிக நீண்ட சொற்பொழிவுடன் விவரித்தார் அச்சொற்பொழிவின் இறுதியில் அம்மீனவர் : "ஆனால், ஐயா!, இவ்வாறு வளர்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?" என சந்தேகம் எழுப்பினார் அதற்கு அமெரிக்கர் : "சுமார் 15முதல் 20 ஆண்டுகள் ஆகும் ."என க்கூறினார் "சரிதான் ஐயா! ஆனால், அதன்பின்னர் என்ன செய்யவேண்டும்? என அம்மீனவர் மீண்டும் கேள்வி எழுப்பியபோது அமெரிக்கர் சிரித்துக் கொண்டே : “அதுவே சிறந்த நேரம் அனைத்தும் மிகச்சரியாக இருக்கும்போது, ​​நீங்கள் உங்களுடைய நிறுவனத்தில் - பொது சலுகையை அறிவிப்பீர்கள், மேலும் உங்கள் நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்களுக்கு விற்று மிகவும் பணக்காரராகி விடுவீர்கள். ”எனக்கூறினார் “அதன்பிறகு ? ” என அம்மீனவர் தொடர்ந்து சந்தேகம் எழுப்பியபோது அமெரிக்கர் மிகமெதுவாக : “அதன்பிறகு நீங்கள் உங்களுடைய வியாபாரத்திலிருந்து ஓய்வு பெறுவீர்கள். ஒரு சிறிய கடலோர மீன்பிடி கிராமத்திற்குச் செல்வீர்கள், அங்கு நீங்கள் தாமதமாக தூங்கலாம், கொஞ்சம் மீன் பிடிக்கலாம், மிகுதிநேரத்தில் உங்களுடைய குழந்தைகளுடன் விளையாடிடலாம், உங்களுடைய மனைவி யுடனும் பிள்ளைகளுடன் ஒன்றாக சேர்ந்து உணவு அருந்தலாம், ஒவ்வொரு நாள் மாலையும் கிராமத்தில் உலா வரலாம், சக உறவினர்களுடனும் நண்பர்களுடனும சேர்ந்து ஏதேனும் இசையை வாசிக்கலாம் ” என பதில் கூறியபோது ”அதைத்தான் ஐயா! இப்போது நான் செய்து கொண்டிருக்கின்றேன்” என்றார் அந்த மீனவர் இறுதியாக.

சனி, 28 நவம்பர், 2020

புத்திசாலி தனமான திருடன்

 முன்பு ஒருகாலத்தின் அன்பு என்பவன் மிகவும் புத்திசாலியானதிருடனாக இருந்துவந்தான் .ஆயினும் அன்பு எப்போதும் பணக்காரர்களிடமிருந்து பொருட்களையும் பணத்தையும் திருடி வயதானவர்களுக்கும்,நோய்வாய் பட்டவர் களுக்கும் ஏழைஎளியவர்களுக்கும் அதாவது உதவி தேவைப்படுவர்கள் அனைவருக்கும் அவற்றை பிரித்து பகிரந்து வழங்குவது அன்பினுடைய வழக்கமான செயலாகும். இவ்வாறான திருடிய பொருட்களை ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்து அளிக்கின்ற அன்பினுடைய செயலை மற்ற திருடர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளமறுத்தனர் அதனால் அவர்கள் அனைவரும் நம்முடைய பிழைப்பை இந்த அன்பு கெடுத்துவிடுவான் அதனாஆல் அன்பு எங்காவது திருடிடும்போது காட்டிகொடுத்தல் அல்லது திருடவே முடியாத இடத்தில் திருடுமாறு செய்து இந்த திருட்டு தொழிலிலிருந்து அன்பை விரட்டிவிடவேண்டும் என ஒருமனதாக முடிவுசெய்தனர் .அதற்காக ஒரு நாள் அவர்கள் அன்பு என்ற திருடனிடம் அந்நாட்டு அரசன் போட்டிருக்கின்ற உடையை தங்களால் திருடி கொண்டுவரமுடியும் என்றும் அன்பினால் அவ்வாறு அரசன் அணிந்து கொண்டிருக்கின்ற உடையை திருடிகொண்டுவரமுடியுமா எனவும் அவ்வாறு அரசன் அணிந்து கொண்டிருக்கின்ற உடையை திருடிகொண்டுந்தால் அன்பினை தங்களுடைய கூட்டத்தின் தலைவனாக ஏற்றுக்கொள்வோம் எனும் புதிய போட்டிஒன்றிற்கு அழைத்தனர் .அந்த போட்டியை அன்பு ஏற்றுகொண்டான் அதற்கான ஆயத்த பணிகளை செய்தபின்னர் இறுதியாக, அரசனுடைய அரண்மனைக்கு சென்றான் . அப்போது அரசன் தன்னுடைய படுக்கையில் படுத்து தூங்கி கொண்டுஇருப்பதை கண்டவுடன் தன்கைவசம் நிறைய கட்டெறும்புகளை பாதுகாத்து வைத்திருந்த கண்ணாடி புட்டியின் மூடியை திறந்து விட்டான். உடன் அடைபட்டிருந்த கட்டெறும்புகள் சுதந்திரமாக வெளியேறி அரசனின் உடல்முழுவதும் கடிக்கஆரம்பித்தன.ஏராளமான கட்டெறும்புகள் அரசனின் உடல்முழுவதும் கடிக்கஆரம்பித்ததால் வலிதாளாமல் அரசன் விழித்தெழுந்து கத்தி கூப்பாடு போடஆரம்பித்தான் உடன் அரண்மனையில் பணிபுரியும் பணியாளர்கள் விரைவாக அரசனின் படுக்கை அறைக்கு ஓடிவந்து அரசனுடை உடலை கடித்து கொண்டிருந்த கட்டெறும்புகளை துடைத்து எறியத்துவங்கினர் இந்நிலையில் அன்பு எனும் திருடன் அரசனுடைய பணியாளரில் ஒருவனைன்போன்று அரசனின் உடையை கழற்றுவதற்கு உதவிசெய்து அதனை அரண்மனையுில் வேறு அறையில் வைப்பதற்கு எடுத்து செல்வதை போல நாடகமாடி அவைகளை எடுத்து கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறி மற்ற திருடர்களிடம் கொண்டுசென்று அரசன் அணிந்திருந்த உடைகளைதான்திருடி வந்ததை காண்பித்தான். அதனை தொடர்ந்து திருடர்கள் போட்டியின் விதியின்படி மறுபேச்சு எதுவும் பேசாமல் அன்பினை தங்களுடைய கூட்டத்தின் தலைவனாக ஏற்றுக்கொண்டனர் .
எப்போதும் புத்திசாலித்தனமாக இருந்திடுக

சனி, 14 நவம்பர், 2020

நிர்வாகத்திற்கு அவர்களின் பணியாளர்கள் அனைவருடைய அடையாளமும் தெரியுமா?

ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உற்பத்தி சரியாக நடைபெறுகின்றதா தொழிலாளர்கள் அனைவரும் விழிப்புடன் பணிபுரிகின்றனரா என ஆய்வு செய்வதற்காக தங்களுடைய தொழிற்சாலைக்குள் பார்வை யிட்டு கொண்டே சென்றபோது, ஒரு இளைஞன் மட்டும், பணி எதுவும் செய்யாமல் சுவரில் சாய்ந்து நின்று கொண்டு வெட்டியாக பொழுது போக்குவதைக் கவனித்தார் . உடன் அந்த இளைஞனை அருகில் அழைத்து , "நீங்கள் மாதம் ஒன்றிற்கு எவ்வளவு சம்பாதிக்கின்றீர்கள்?" என நிருவாக இயக்குநர் வினவினார் . அந்நிறுவனத்தின் நிருவாக இயக்குநர் தன்னிடம் இது போன்ற தனிப்பட்ட கேள்வி கேட்கப்பட்டதில் அந்த இளைஞன் மிகவும் ஆச்சரியப்பட்டான், இருந்தபோதிலும் , "ஐயா! நான் ஒரு மாதத்திற்கு ரூ.20000.00 சம்பாதிக்கிறேன், ஐயா! என்னிடம் ஏன் அவ்வாறு கேட்கின்றீர்கள்? ஐயா !" என அந்த இளைஞன் பதிலுக்கு அவரிடம் வினவினான். உடன் நிருவாக இயக்குநர் பதிலேதும் சொல்லாமல், தனது பணப்பையிலிருந்து ரூ.60000.00 பணத்தை எடுத்து எண்ணிக்கை செய்து அந்த இளைஞனிடம் கொடுத்து, "இங்கே தொழிற்சாலையில் பணி செய்வதற்காக மட்டுமே தொழிலாளர்களுக்கு சம்பளம் தருகிறேன், வெட்டியாக பணிஎதுவும் செய்திடாமல் பொழுது போக்குவதற்காக அல்ல! இதோ உங்களுடைய 3 மாத சம்பளம், வாங்கி கொண்டு இப்போதே நீங்கள் இந்த தொழிற்சாலையில் விட்டு வெளியில் செல்லலாம் நாளைமுதல் நீங்கள் இங்கு பணிசெய்வதற்காக திரும்பி வர வேண்டாம் ".என க்கூறி அந்த இளைஞனை விரட்டினார் அதனை தொடர்ந்து அந்த இளைஞனும் தொழிற்சாலையிலிருந்து விரைவாக வெளியேறிச் சென்றான். பின்னர் அந்த தொழிற்சாலையின் நிருவாக இயக்குநர் அருகில் நின்றுகொண்டிருந்த ஒருசில பணியாளர்களிடம் , "இதே செயல் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் உங்கள் அனைவருக்கும் பொருந்தும்".என்று மிகவும் கோபத்துடன் கூறினார் அதன் பின்னர் அங்குஇருந்த தொழிலாளர்களில் ஒருவரை அழைத்து, "நான் இப்போது பணியை விட்டு வெளியேற்றிய இளைஞன் யார்?" என வினவினார் அதற்கு அந்த தொழிலாளியிடமிருந்து - "அந்த இளைஞன் தேநீர் இடைவேளையில் தொழிலாளர் அனைவருக்கும் தேநீர் வழங்கிடுபவன், ஐயா!" எனும் ஒரு அற்புதமான பதில் வந்தது.


சனி, 7 நவம்பர், 2020

ஒரு போர்வீரனின் கதை


வியட்நாம் நாட்டுடனான போரில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பி வந்த கொண்டிருந்த ஒரு போர்வீரன் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து தனது பெற்றோரை தொலைபேசியில் அழைத்தார். “அம்மா! அப்பா!, நான் இப்போது வியட்நாம் நாட்டுடனான போர்முடிந்து நமது வீட்டிற்கு திரும்பிவந்து கொண்டிருக்கின்றேன், ஆனாலும் உங்களிடம் ஒரு கோரிக்கை ஒன்று உள்ளது. அதை நிறைவேற்றுவீர்களா ?." என தன்னுடைய பெற்றோரிடம் கோரியபோது,அவனது பெற்றோர்கள் “மகனே! நன்றாக இருக்கின்றாயா உன்னுடைய கோரிக்கையை கூறு நாங்கள் கண்டிப்பாக நிறைவேற்றிடுவோம்." என உறுதி அளித்தார்கள் . அதனை தொடர்ந்து “ அதாவது , என்னுடன் சக போர்வீரர் நண்பர் ஒருவரை நம்முடைய வீட்டிற்கு அழைத்து வர விரும்புகின்றேன். " என அந்த போர்வீரன் கூறினான். உடன் அந்த போர்வீரனுடைய பெற்றோர்கள்,“மகனே ! கண்டிப்பாக நாங்கள் அவரை சந்திக்க விரும்புகிறோம்" என பதிலளித்தனர். தொடர்ந்து “ஆனாலும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று இருக்கிறது,” என்று அவர்களுடைய மகன் கூறியபோது ,“அந்த செய்தி என்னவென்று கூறு மகனே !" என மிகஆவலுடன் பதிலளித்தனர். “நடந்துமுடிந்த வியட்நாம் போரில் நண்பர் மிகவும் மோசமாக காயமடைந்து ஒரு காலையும் ஒரு கையையும் இழந்து விட்டார் .அதனால் நம்மை போன்று அவரால் நன்றாக நடக்கவும் வாழவும் முடியாது. அவர் வேறு எங்கும் செல்லவிரும்பவில்லை, அதனால் அவர் நம்முடன் வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ”எனக்கூறினார். அதனை தொடர்ந்து “அவருடைய இந்த நிலையை கண்டு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்மகனே! இருந்தபோதிலும், அவர் வேறு எங்காவது அனாதைகள் இல்லத்தில் வாழலாம் அல்லவா! ” என அந்த போர்வீரனின் பெற்றோர்கள் பதில் கூறியபோது அவர்களுடைய மகன் "இல்லை!இல்லை! அவர் நம்முடன் நம்முடைய வீட்டில் மட்டுமே வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."என பிடிவாதமாக கூறியபோது “மகனே!, நீ என்ன கேட்கின்றாய் என்று உனக்குத் தெரியாது. அத்தகைய ஊனமுற்ற ஒருவர் நம்முடன் இருக்க அனுமதித்தால் அவர் நமக்கு பயங்கர சுமையாக இருப்பார்.நாம் வாழ்வதற்கு நம்முடைய சொந்த வாழ்க்கை இருக்கிறது, இதுபோன்று தேவையில்லாத சுமைஒன்றை தூக்கிகொண்டு செல்லுமாறான நிலைக்கு அனுமதிக்க முடியாது. நீ மட்டும் நம்முடைய வீட்டிற்கு வந்து சேர் உன்னுடைய நன்பரை மறந்துவிடு. உன்னுடைய நண்பர் தான் சுயமாக வாழ அவரே ஏதாவது ஒரு வழியைக் கண்டு பிடிப்பார். ” என மறுத்து பேசினர் .அதனை தொடர்ந்து அவர்களுடைய மகன் தொலைபேசியை பாதியில் வைத்துவிட்டான். அவர்களுடைய மகனிடமிருந்து வேறு எந்த தகவலும் அந்த போர்வீரனின் பெற்றோர்களுக்கு கிடைக்கவில்லை. இருப்பினும், ஒருசில நாட்களுக்குப் பிறகு, அந்த போர்வீரனின் பெற்றோர்களுக்கு சான் பிரான்சிஸ்கோ போலீசாரிடமிருந்து அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பின்போது அவர்களது மகன் ஒரு கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டான் என்ற தகவல் அவர்களிடம் கூறப்பட்டது. இது ஒரு தற்கொலை என்று போலீசார் நம்பினர். அந்த பெற்றோர்கள் சான் பிரான்சிஸ்கோவிற்கு மிகவும் மனவருத்ததுடன் விரைந்து சென்றனர் அங்கு அவர்களுடைய மகனின் உடலை அடையாளம் காண அந்நகர சவக்கிடங்கிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அந்நகர சவக்கிடங்கில் தங்களுடைய மகனை அடையாளம் கண்டுகொண்டனர், ஆனால் அவர்களின் மகனுக்கு ஒரு கையும் ஒரு காலும் மட்டுமே இருந்தன. என்ற அவர்கள் அறியாத ஒன்றையும் கண்டுபிடித்தனர், அதனை தொடர்ந்து அதிக மனவருத்தத்துடன் “ஐயய்யோ! தன்னுடைய உடல் குறையை மறைத்து உடல் குறைபாடுடை தன்னுடைய நண்பனசேர்ந்து வாழ அனுமதிகோட்டதை மறுத்துவிட்டோமே!" என அந்த போர்வீரனின் பெற்றோர்கள் அழுது புரண்டனர் .

நீதி : இந்த கதையில் வரும் பெற்றோர்களை போன்றே நம்மில் பலரும் வாழ்ந்துவருகின்றோம். அதாவது உடல் குறையில்லாத சகமனிதர்களிடம் நாம் அன்புசெலுத்தவிழைவோம் , ஆனால் உடல் குறையுடன் நமக்கு சிரமத்தை ஏற்படுத்தும் அல்லது நமக்கு சங்கடத்தை உருவாக்கும் நபர்களை நாம் ஒருபோதும் அன்பு செலுத்த விரும்புவதில்லை. அதாவது உடல்குறையுள்ளவர் களிடமிருந்து நாம் விலகி இருப்போம். அதாவாது இவ்வாறானவர்கள் நமக்கு சுமையாக இருப்பார்கள் என நினைத்து அவர்களிடமிருந்து ஒதுங்கி வாழவிரும்புவோம்ஆனாலும் அவ்வாறானவர்களிடம் அன்பு செலுத்தவும் சகமனிதர்கள் போன்று அரவணைத்து செல்லவும் வேண்டும்.



பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...