ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

தோல்வி என்பது வெற்றிபெறுவதற்கான மருந்தாகும்

 நாம் அனைவரும் பத்தாம் வகுப்பு வரை கண்டிப்பாக கணிதம் படித்திருப்போம். அந்த கணித பாடத்தில் முக்கோணவியலின் சிக்கலையும் அல்லது ஒரு கோளத்திற்கான கணஅளவையும். நம்முடைய முதல் முயற்சியிலேயே  தீர்வு செய்து விட்டோமா? அந்த நேரத்தில் அது மிகவும் கடினமாக இருந்தது, ஆனால் ஒரு நிரலாளர் போன்று அனைத்து கேள்வி களுக்கான விடையை கண்டுபிடுத்திட முதல் முயற்சியில் தோல்வியடைந்த பிறகு பலமுறை முயன்று இறுதியில் வெற்றியடைந்தோம் அல்லவா.

 சிறுவயதில் Mario அல்லது அதுபோன்ற வேறு விளையாட்டை விளையாடியிருப்போம்.அதில்  முதல் முறை வெல்ல முடிய வில்லை அல்லவா? இதேபோன்று. ஆயிரக்கணக்கான  கேள்விகளுக்கு பலமுறை முயன்று தீர்வு காண்கிறோம், ஆனாலும் நம்மால் இன்னும் நிறுவனங்களின் இருப்புநிலைக் குறிப்பைப் பொருத்தமாக சரிசெய்ய முடிய வில்லையே. கேள்விக்கான விடைகாணும் போது, விளையாட்டுகளை விளையாடும் போது,ஓட்டப் பந்தயத்தில் ஓடும்போது, படத்திற்கான கோடு வரையும்போது நாம் தோல்வியை அடைகின்றோம். தோல்வியின் கசப்பை நாமனைவரும் அனுபவித்திருக்கின்றோம்.
"தோல்வி" என்றால் என்ன?  
 இந்த தோல்வி எனும் சொல்லிற்கு பல விளக்கங்கள் உள்ளன.நம்முடைய பார்வை, பணி, இலக்கு, குறிக்கோள்கள் ஆகிய எதுவாகவும் இருந்தாலும் நம்முடைய  இலக்குகளையும் தொலை நோக்குப் பார்வையையும் அடைவ தற்கான மனப்பக்குவத்தை நாம் பெற்றிருந்தால்,தயங்கிடாமல் நம்முடைய இலக்கினை அடைவதற்கேற்ப செயல்படுவதே இந்த தோல்வி என்பதற்கான மிகசுருக்கமான விளக்கமாகும் . வெற்றியும் தோல்வியும் நம் வாழ்வின் இரண்டு முக்கிய பகுதிகள். தோல்விகளை புறக்கணித்து வெற்றி பெறுவதற்கான வழியை நாம் எப்போதும் தேடிக்கொண்டே யிருக்கின்றோம். நம்முடைய விருப்பங்களும் நாம் தேடுவதும் வெவ்வேறாக இருக்கும்போது மிகவும் வலிக்கிறது.  இருளின் சிறிய வட்டத்தில் உள்ள கரும்புள்ளியே நம்முடைய முடிவாகத் தோன்றுகிறது.

  ஒரு பூ வாடுவது போன்று நம்முடைய புன்னகை தொலைந்து போகிறது.  தவறான எண்ணங்களின் சூறாவளி நம் மனதில் சுழல்கிறது. நம்மைத் தவிர அனைத்தும் நகர்வது போன்று தெரிகிறது, ஆனால் அதைத்தானே நாம் தேடுகிறோம்? நமது பயணம் எது வரை நீடிக்கும்? இருண்ட பகுதியில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க வேண்டும் என விரும்புவது அவ்வளவுதானா? இதற்கான பதில் "இல்லை."என்பதாகும்.  முந்தைய முயற்சிகளில் தோல்வியுற்ற பிறகு,  மரியா விளையாட்டில் வெற்றிடைந்தபோது பந்தயத்தில் ஓடிவெற்றிக் கோட்டை தொடும்போது அல்லது ஓவியம் வரைந்துமுடித்தபோது கேள்விக்கான விடையை எவ்வாறு தீர்வு செய்தோம்  ஏற்கனவே நாம் அடைந்த தோல்வியே அடுத்தமுயற்சி நம்மைவெற்றியடைய வைக்கிறது. தோல்வி என்பது நாம் தேடும் புள்ளியை அடையாமல் இருப்பதைக் குறிக்கிறது, ஆனால் நாம் மிக நெருக்கமாகவோ அல்லது புள்ளியிலிருந்து வெகு தொலைவிலோ இருக்கலாம் . ஆக, தோல்வி என்பது நாம் இருக்கும் இடத்திற்கும் நாம் தேடும் இடத்திற்கும் உள்ள தூரமாகும்.  மிகவும் சரியான பாடங்களை இந்த தோல்விகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டும், . நமது தவறுகள்,  உத்திகள்   ஆகியவை இலக்கை நோக்கிச் செயல்படச்செய்கின்றன, வெற்றிகோட்டினை அடைவதற்கான தூரத்தை உருவாக்கு கின்றன. எவ்வாறாயினும், தோல்வியானது அந்த  உத்திகளை  தவறுகளை மாற்ற அனுமதிக்கிறது,  நம்முடைய இலக்காக இருக்குகின்ற அந்த புள்ளியை நோக்கி நகரச்செய்கின்றது.
தோல்வி ஒரு மருந்தாக செயல்படுகிறது. எவ்வாறு?

   ஏமாற்றத்தினால், திருப்தி யடையாமல் இருக்கின்ற சோம்பல். எனும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு,  தோல்வி என்பது ஒரு மருத்துவ சிகிச்சையாக செயல்படுகிறது, ஏனெனில் உடலில் மருந்து நச்சுயிர்களை அழிக்கிறது,  நம் உடலில் உள்ள திசுக்கள் வேலை செய்யும் முறையை மாற்றுகிறது. அதனோடு உடலில் பற்றாக்குறை பொருட்களை மாற்றி முழுமையாக ஆக்குகிறது அதேபோன்றுதோல்வியானது நம்முடைய செயலற்ற தன்மையை அழித்து, நம்முடைய உத்திகளையும் கவனத்தையும் மாற்றி, வெற்றியைப் பெறுவதற்கான பயணத்தின் உத்தியை மாற்றுகிறது. இவை அனைத்திலும் மனதின் பார்வைகள் நேர்மறையாக இருப்பதற்காக.  நேர்மறையாக சிந்திந்திடுக. எதிர்மறையான அம்சங்களைக் காட்டிலும் தோல்வியின் நேர் மறையான அம்சங்களை மட்டும் காண்க. சில சமயங்களில் நமது உத்திகள் உச்சத்தில் இருக்கும்,இலக்கை அடைய கடுமையாக உழைத்து அந்த வெற்றி யைப் பெறத் தவறிவிடுகின்றன. இது கிட்டத்தட்ட நம் அனைவருக்கும் நடக் கின்றது. பெரிய செயல்களுக்கு அதிகநேரம் எடுக்கும் என்பதை நினைவில் கொள்க, எனவே நாம் சரியான நேரத்திற்கு காத்திருக்க வேண்டும், அதற்கேற்ப நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும், மேலும் நம்பிக்கை, பொறுமை விடாமுயற்சி ஆகியவற்றை கொண்டிருந்தால். காலம் கணிந்தவுடன் உடனடியாக வெற்றி நம்மைத்தேடி வந்துசேரும்.

சனி, 17 செப்டம்பர், 2022

சகோதரர்களிடையே சொத்து தகராறு

 தங்களுடைய தந்தையின் சொத்தையும் நிலத்தையும் பிரிப்பதில்  இரு மகன்களுக்கு இடையே தகராறு ஆகிவிட்டது, மிகமுக்கியமாக தாங்கள் வாழும் ஒரு வீட்டைப் பற்றிய தகராறு மிகப்பெரியதாக இருந்தது.
இந்த சொத்துகளை பிரி்ப்பதில் எழுந்த தகராறின் தொடரச்சியாக ஒரு நாள் அண்ணன் தம்பி ஆகிய இருவரும் எந்த நேரத்திலும் ஒருவரை ஒருவர் கொன்றுவிடத் தயார் என சண்டை போட்டுக் கொண்டார்கள். இந்நிலையில் அவர்களுடைய தந்தை தம்முடைய மகன்களைப் பார்த்து சத்தமிட்டு சிரித்தார்.
 தங்களுடைய தந்தை இவ்வாறு சிரிப்பதைக் கண்டு அண்ணன் தம்பிகள் இருவரும் சண்டையை நிறுத்திவிட்டு அவரிடம் அவ்வாறு  சிரித்ததற்குக் காரணத்தை வினவினர்.
உடன் அவர்களுடைய தந்தை, “ஒரு சிறிய வீ்ட்டிற்காகவும் நிலத்திறகாகவும் நீங்கள் இருவரும் இவ்வளவு சண்டை போடுகின்றீர்கள். முதலில் இருவரும் இந்த சண்டையை நிறுத்திவிட்டு என்னுடன் வாருங்கள், நான் உங்களுக்கு ஒரு விலைமதிப்பற்ற புதையலைக் காட்டுகிறேன்.
ஆனால் ஒரு நிபந்தனை , நீங்கள் தொடர்ந்து சண்டையிட்டால், நான் உங்கள் இருவரையும் புதையல் இருக்குமிடத்திறகு அழைத்துச் செல்ல மாட்டேன்,” எனக்கூறினார்
  “நாங்கள் நிபந்தனை மீறினால் உடன் திரும்பி விடுவோம்.என்ன நடந்தாலும் நாங்கள் இருவரும் சண்டை போட மாட்டோம், உங்களுடனேயே பயணம் செய்வோம்,” என்றுகூறி மகன்கள் இருவரும் புதையலை கண்டடைவதற்காக ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
அதன்பிறகு வீட்டை விட்டு வெளியேறி புதையல் இருக்குமிடத்திற்கு செல்வதற்காக, மகன்கள் இருவரும் தந்தையுடன் ஒரு பேருந்தில் ஏறி பயனம் செய்தனர். சுமார் பத்து மணி நேரம் பயணம் செய்து ஒரு கிராமத்தை அடைந்தனர்.
 அக்கிராமத்தில் எல்லாப் பக்கங்களிலிருந்தும் வெறிச்சோடியிருந்த மிகப் பெரிய மாளிகைக்கு தந்தை தன்னுடைய மகன்கள் இருவரையும் அழைத்துச் சென்றார். அவர்கள் மிகப்பழையதான மாளிகைக்குள் நுழைந்தபோது, அந்த மாளிகையில் பல இடங்களில் புறாக்கள் கூடு கட்டியிருப்பதைக் கண்ட தந்தை, அழஆரம்பித்தார்.
 உடன், "அப்பா! என்ன நடந்தது? ஏன் நீங்கள் அழுகின்றீர்கள்?" என மகன்கள் இருவரும் தந்தையிடம் காரணம் கோரினர்
தந்தை அழுதுகொண்டே, “பி்ள்ளைகளே இந்த மாளிகையை கவனமாகப் பாருங்கள், நீங்கள் இருவரும் இங்கு கழித்த குழந்தைப் பருவத்தை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களுக்கு ஞாபகம் இருக்காது ஆனால் நீங்கள் சிறுவயதில் இருந்த போது நான் இந்த மாளிகைக்காக என் அண்ணனுடன் நிறைய சண்டையிட்டேன்  சண்டையில் நான்வென்றேன், இந்த மாளிகையை பெற்றேன் ஆனால் என் சகோதரனை என்றென்றும் இழந்தேன், ஏனென்றால் அவர் என்னுடன் உறவை துண்டித்து கொண்டு பிழைப்பை தேடி. தொலைதூர நாட்டிற்கு சென்றுவிட்டார்.
பின்னர் காலம் மாறியது, ஒரு நாள் நாமும் இந்த மாளிகையை விட்டு வெளியேற வேண்டியிருந்தது " நடந்ததை கூறினார்.
மகன்கள் இருவரும் மிககவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது தந்தை கேட்டார், “பிள்ளைகளே, நாம் இங்கு வருவதற்காக பயனம் செய்த பேருந்தில் எந்த இருக்கையில் அமர்ந்திருந்தோம் என்று சொல்லுங்கள்? அந்த இருக்கை என்றைக்கும் நமதாக இருக்குமா?" என வினவினார்
உடன் மகன்கள் இருவரும் சேர்ந்து, “எப்படி எப்போதும் அந்த பேருந்து இருக்கை நமக்கு சொந்தமாக இருக்க முடியும்? பேருந்தின் பயணம் தொடர்கிறது, நாம் கீழிறங்கியவுடன் வேறு சிலர் அந்த இருக்கையில் உட்காருவார்கள், நாம் பயனம் செய்த சிறிது நேரம் மட்டுமே நாம் உட்கார்ந்து பயனித்த இருக்கை நமக்கு எவ்வாறு சொந்தமாக முடியும் "என மிகநன்றாக விவரித்தனர்
  தொடர்ந்து தந்தை சிரித்துவிட்டு , “இதைத்தான் நான் உங்களுக்கு விளக்க முயன்றேன். சிறிது காலம் மட்டுமே உங்களுக்கு சொந்தமாக இருக்கபோகும். அந்த சொத்துகளுக்காக நீங்கள் தகராறு செய்தீர்களே. அவை உங்களுக்கு முன் அதன் உரிமையாளர் வேறொருவராக இருந்தார், சிறிது காலம் நீங்கள் இருக்கிறீர்கள், அதன் பிறகு வேறொருவர் அதன் உரிமையாளராக இருப்பார். என் அருமை பிள்ளைகளே, இந்த குறுகிய கால உரிமையாளர்களாக ஆவதற்காக ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டிருக் கின்றீர்களே நீங்கள் இருவரும்ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்!
விலைமதிப்பற்ற உறவுகளை தியாகம் செய்யாதீர்கள். வாழ்க்கையில் பண ஆசைகள் வந்தால், அந்த நேரத்தில் புறாக்கள் கூடு கட்டிய இந்த மாளிகையின் நிலையை நினைவில் கொள்ளுங்கள்,
ஒவ்வொரு நாளும் பயணிக்கும் பேருந்தின் இருக்கையை நினைவில் கொள்ளுங்கள். சிறிது நேரம் பயனம் செய்வதற்கான அந்த இருக்கைக்காக உங்கள் உறவை பலி கொடுக்காதீர்கள்..” என மிக நீண்ட விளக்கமளித்தார்
இரண்டு மகன்களும் தந்தையின் சொற்களின் அர்த்தத்தை புரிந்துகொண்டு  இனி தாங்கள் சொத்துகளுக்காகவும் நிலத்திற்காகவும் தகராறு எதுவும் செய்யமாட்டோம் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து வாழ்வதாக கூறி   தந்தையிடம் அழுது கொண்டே மன்னிப்பு கோரினர்.

கற்றல் : நம்மிடம் எந்தச் செல்வம் இருந்தாலும், அது சிறிது காலத்திற்கு மட்டுமே நமக்கானது... சிறிது காலத்திற்குப் பிறகு உரிமையாளர் மாறுகிறார்.. அதனால் செல்வங்களின் உரிமையாளர் விவகாரத்தில் விலைமதிப்பற்ற உறவை இழக்காதீர்கள்.

சனி, 10 செப்டம்பர், 2022

கோபக்காரணின் செயலும் புத்தரின் போதனையும்

 பயணத்தின் போது புத்தர் ஒரு கிராமத்தை அடைந்தார். அங்கு அவரது சொற்பொழிவைக் கேட்க ஏராளமான அளவிலான மக்கள்  கூடினர். புத்தர் தன்னுடைய சொற்பொழிவில்,  "கோபம் என்பது நெருப்பு, அது மற்றவர்களை எரிப்பது மட்டுமல்லாமல், தன்னையும் எரித்து சாம்பலாக்கும். எனவே கோபத்தைத் துறந்து மன்னித்திடுக" என சகிப்புத்தன்மை  மன்னிப்பு ஆகியன பற்றி பொதுமக்களுக்கு அறிவுரை கூறிகொண்டிருந்தார்.
புத்தரின் சொற்பொழிவை கேட்க கூடியிருந்து பொதுமக்களில் அதிக கோபக்கார நபர் ஒருவரும் அமர்ந்து அந்த சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தார். புத்தரின் இந்த சொற்களைக் கேட்டவுடன் கோபமாக அந்த  நபர் எழுந்து கரகரப்பான குரலில், “இப்படிப்பட்ட கபட பிச்சைக்காரனை நான் இதுவரையில் பார்த்ததே இல்லை. உன்னுடைய சுயநலத்திற்காக இந்த கிராமத்தில் தவறான செய்திகளை பரப்புகின்றாய். உனக்கு வெட்கமாக இல்லையா” என வினவினார்
புத்தர் இவ்வாறான சொற்களை கேட்டு ஒன்றும் பதிலளிக்காமல் முன்பு போலவே அமைதியாக இருந்தார். இதைப் பார்த்த அந்த கோபக்கார நபருக்கு கோபம் மிகவும் அதிகமாகி, புத்தரின் முகத்தில் “தூ”  எனஎச்சில் துப்பிவிட்டுச் சென்றுவிட்டார்,  புத்தர் அமைதியாக தனது சொற்பொழிவை முடித்து கொண்டு தன்னுடைய சீடர்களுடன் மற்றொரு கிராமத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
தன்னுடைய வீட்டிற்கு வந்த பிறகு, கோபமடைந்த அந்த நபர் புத்தரைப் பற்றி நீண்ட நேரம் நினைத்துக் கொண்டிருந்தார். கோபம் தணியத் தொடங்கியதும், புத்தரிடம் சொன்னதையும் செய்ததையும் நினைத்து வருந்தத் தொடங்கினார்
அதனால் உடனடியாக புத்தரை நேரில் சந்தித்திடஅவர் சொற்பொழிவு செய்து கொண்டிருந்த பகுதிக்கு விரைவாக சென்றார். ஆனால் அங்கு சென்றபோது புத்தர் அடுத்த கிராமத்திற்கு சென்றுவிட்ட செய்தி கிடைத்தது. அதனால் புத்தரை நேரில் சந்திக்க இயலாமல் தன்னுடைய வீட்டிற்கே திரும்புவந்து இரவு முழுவதும்  தன்னைத்தானே திட்டிக் கொண்டே இருந்தார். அடுத்த நாள், காலை புத்தரைத் தேடி பக்கத்து கிராமத்திற்குச் சென்றார்
அங்கு புத்தர் அந்த கிராம மக்களுக்கு சொற்பொழிவு செய்து கொண்டிருப்பதைக் கண்டார்., புத்தரிடம் சென்று, அழுதுகொண்டே அவரது கால்களைப் பிடித்து, அவரிடம் மன்னிப்பு கேட்கத் தொடங்கினார்
புத்தர் வியப்புடன் அந்த நபரைப் பார்த்து, ‘ ஐயா முதலில் நீங்கள் எழுந்திருங்கள் ,‘யார் நீங்கள்? ஏன் என்னிடம் மன்னிப்பு கோருகின்றீர்கள்? ." என வினவினார்
அதற்கு அந்த மனிதன், “உங்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லையா? | நான் நேற்று உங்களிடம் மிககோபமாக பேசி நடந்து கொண்டவன். நான் செய்தது தவறு. | உங்களிடம் மன்னிப்பு கோர வந்தேன்". எனக்கூறினார்
புத்தர் நிதானமாக, “அண்ணா, நேற்று நீங்கள் பேசிக்கொண்டிருந்தது கடந்தகாலம்  | நேற்றைய அனைத்து சம்பவங்களும் செயல்களும் நம்மை விட்டு சென்றுவிட்டன. இப்போது நாம் இருப்பது நிகழ்காலம் .
நீங்கள் ஏன் நேற்றைய நிகழ்விலேயே நின்று கொண்டிருக்கின்றீர்கள்?  இப்போது அந்த செய்திகளையும் செயல்களையும் அங்கேயே விட்டுவிட்டு நிகழ்காலத்தில் வந்து நல்ல செயல்களைச் செய்து உங்கள் நிகழ்காலத்தை மேம்படுத்துங்கள். கடந்த காலத்தை நினைவுகூருவதன் மூலம் உங்கள் நிகழ்காலத்தை ஏன் அழிக்க வேண்டும்." என அறிவுரைக்கூறினார்
புத்தரின் அந்த சொற்களைக் கேட்டதும் அந்த மனிதனின் கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது. அந்தநபர் புத்தரை வணங்கி, “இனிமேல் நான் கோபத்தைத் துறந்து அன்பையும் கருணையையும் என் வாழ்க்கையில் இணைத்துக்கொள்வேன்,என்னுடைய வாழ்க்கையை சிறப்பாக ஆக்குவேன், ” என உறுதி கூறினார்.
 கற்றல் : நாம்  வாழ்க்கையில் செய்த தவறுகளை நம்முடைய மனதில் வைத்துக்கொண்டு, அந்த குற்றச் சுமையை வாழ்க்கை முழுவதும் சுமந்துகொண்டு, வருத்தத்தின் நெருப்பில் எரிந்துகொண்டே இருக்கிறோம். ஏற்கனவே ஏற்பட்ட பிழையை சரிசெய்ய முடியாது.
எனவே, அதை மீண்டும் மீண்டும் செய்யக்கூடாது என்ற உறுதியுடன் நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். கடந்து போனவற்றின் மீது நமக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. நிகழ்காலம் நமது கட்டுப்பாட்டில் உள்ளது.
நல்ல செயல்களைச் செய்வதன் மூலம்  நிகழ்காலத்தை ஏன் சிறப்பாக மாற்றக்கூடாது.

திங்கள், 5 செப்டம்பர், 2022

காய்கறி விற்பனையாளருக்கு உதவுதல்

ஒரு சிறுவன் தன்னுடைய தாய் தினமும் வழக்கமாக தங்களுடைய வீட்டின் வாயிலிற்கு  வருகின்ற காய்கறி விற்பணை செய்திடும் பெண்ணிடம் காய்கறிகள் வாங்குவதைப் பார்த்துக் கொண்டிருப்பான் ,
 ஒரு குறிப்பிட்ட நாள், அந்த காய்கறி விற்கும் பெண் கீரை கட்டுகளை கூடையில் கொண்டு வந்து அவர்களுடைய வீட்டின் வாயிலில் இறக்கி வைத்தார், அந்த கீரைக்கட்டுகளின் விலை என்ன வென்று அந்த சிறவனின் தாய் வினவியபோது கீரை கட்டு ஒன்றின் விலை 6 ரூபாய் எனக்கூறினார். உடன் சிறுவனின்  தாய் அ்நத விலையில் பாதிவிலைதான் தரமுடியும் என பேரம்பேசுவதை அந்த சிறுவன் கண்டான். மேலும் சிறுவனின் தாய் தான் கோரிய விலையில் கீரைகட்டுகளை கொடுப்பதாக இருந்தால் 4 கட்டுகளை வாங்கி கொள்வதாக கூறினார்.
சிறிது நேரம் இருவரும் கீரைகட்டின் விலையைப் பற்றி விவாதித்தனர்.கடைசியாக காய்கறி விற்பனையாளர் அந்த சிறுவனின் தாய் கோரும் விலையில் விற்க முடியாது என்று பணிவுடன் மறுத்துவிட்டார், ஏனெனில் அதை வாங்குவதற்கான செலவைக் கூட  ஈடுசெய்ய முடியாது எனக்கூறி. கீரைக் கூடையை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
அந்த காய்கறி விற்பணை செய்யும் பெண் சிலஅடிகள் நடந்த பிறகு,  திரும்பி வந்து அந்த சிறுவனின் தாயிடம், “கீரைகட்டு ஒன்று 4.50 ரூபாய் என்ற விலையில் தருகிறேன்” என்றாள்.
சிறுவனின் தாய் அந்த விலையை ஏற்க மறுப்பதாக தன் தலையை ஆட்டினார். இதை பார்த்த காய்கறி விற்பணைசெய்திடும் பெண்  திரும்பிநடந்து சென்றார்.
சிறிது நேரம் கழித்து, அந்த காய்கறி விற்கும் பெண் மீண்டும் திரும்பி வந்தார், கடைசியாக அந்த சிறுவனின் தாய் கூறிய விலைக்கே 4 கட்டுகீரைகளை  தருவதாக ஒப்புக்கொண்டு கீரைக்கூடையை தரையில் இறக்கி வைத்தார்.  சிறுவனின் தாய்  கூடையிலிருந்த கீரைகட்டுகளில்  ஒவ்வொரு கட்டாக எடுத்து சரிபார்த்து,  4 கீரைகட்டுகளைத் திருப்தியாக தேர்ந்தெடுத்தார்.
காய்கறி விற்பவருக்கு தேவையான  பணமும்  கொடுத்தார். காய்கறி விற்பனையாளர் சிறுவனின் தாய் கொடுத்த பணத்தை எண்ணிக்கூட பார்க்காமல் தன்னுடைய சுருக்குபையில் வைத்துக்கொண்டு கிளம்புவதற்காக எழுந்தார். உடன் சிறுவனின் தாய் அந்த காய்கறி விற்பவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு, காலையில் உணவு சாப்பிட்டாயா என்று கேட்டார், அதனை தொடர்ந்து காய்கறி விற்பவர், "இன்றைய சம்பாத்தியத்தில், வீட்டிற்குச் செல்லும் வழியில் கொஞ்சம் அரிசி வாங்கி கொண்டு சென்ற கஞ்சி காய்ச்சிதான் சாப்பிடவேண்டும்" என்று பதிலளித்தார். இதைக் கேட்ட சிறுவனின் தாய் அந்த காய்கறி விற்பணை செய்திடும் பெண்ணை உட்காரச் சொல்லிவிட்டு, அவசரமாக உள்ளே சென்று தேவையான உணவும் தண்ணீரும்  கொண்டுவந்து கொடுத்து அந்த உணவினை உண்டு செல்லுமாறு கோரினார்.
காய்கறி விற்பனையாளர் நன்றியுடன்  சிறுவனின் தாய் கொண்டுவந்து கொடுத்த உணவினை உண்டு தண்ணீர் குடித்தார். மேலும் சிறுவனின் தாய் அந்த காய்கறி விற்பணை செய்திடும் பெண்ணிற்கு  தேநீர்  தயார் செய்து  கொடுத்தார் காய்கறி விற்பணை செய்திடும் பெண் அந்த தேநீரைக் குடித்துவிட்டு, சிறுவனின் தாயாருக்கு நன்றி  கூறினார் பின்னர்  எழுந்து, தலையில் கீரைகட்டுகளின் கூடையை தூக்கி வைத்து கொண்டு,  நடக்கஆரம்பித்தார், சிறுவன் இதையெல்லாம் பார்த்துக் குழப்பமடைந்தான். அவன் தன்னுடைய தாயிடம் சென்று , " அம்மா முன்பு இரக்கமில்லாமல் ஒரு ரூபாய்க்கு கூட கூடுதலாக தரமுடியாது என  விலையை குறைத்து கீரைகட்டுகளை வாங்கினாய் , ஆனால் இப்போது அந்த கீரை விற்பணை செய்திடும் பெண்ணிற்கு  உணவை வழங்கினாயே.. ஏன் ?" என வினவினான்
அதற்கு அந்த சிறுவனின் தாய் சிரித்துக்கொண்டே , “என் அன்பான குழந்தையே, நான் கீரைகட்டுகளை வாங்கும் போது, வாங்குபவருக்கும் விற்பவருக்கும் இடையே ஒரு வர்த்தகம் இருந்தது அதனால் கீரைகட்டின் விலையை குறைத்து வாங்கினேன், ஆனால் அந்த காய்கறி விற்ற பெண் உடல்நிலை சரியில்லாததால்  நான் உணவும் தேநீரும் வழங்கினேன்.
ஏனெனில் வர்த்தகத்தில் இரக்கம் இல்லை, இரக்கத்தில் ஒருபோதும் வர்த்தகம் இருக்காது”. என நீண்ட விளக்கமளித்தார்

சனி, 27 ஆகஸ்ட், 2022

பணியாளரின் தோற்றத்துடன் அவரின் செயலைஒப்பிடமுடியாது

 முன்னொரு காலத்தில்  ஒருஅரசனுக்கு உதவியாளர் ஒருவர் தேவைப் பட்டார். , அதனால் அவரது அமைச்சர்  தகுதியான  ஒருநபரை தேடிபிடித்து அவ்வரசனின் உதவியாளராக பணியமர்த்தினார்.  அதனை தொடர்ந்து அந்த நபர் அரசனின்  உதவியாளராக பணி செய்யத் தொடங்கினார், பின்னர் அவ்வரசன் அமைச்சரிடம் , "இந்த உதவியாளரின் பணி நன்றாக இருந்தாலும் அந்த நபருடைய தோற்றம் நன்றாக இல்லையே." என குறைகூறினார்.
அமைச்சர் அரசனின் சொற்களை விசித்திரமாக உணர்ந்தார், ஆனால் அமைதியாக இருந்தார். அது ஒரு கோடைக்காலம், அரசன் தன் உதவியாளரிடம் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வருமாறு கோரினார். அப்போது அமைச்சரும் அரசனுடன் இருந்தார். அந்தஉதவியாளர்  அரசனின் அரண்மனைக்குள்  சென்று  தங்கப் பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துகொண்டு திரும்பி வந்தது அரசனிடம் கொடுத்தார் . அரசன் அந்த தங்கபாத்திரத்தின் தண்ணீரைக் குடித்தபோது,சிறிது சூடாக இருந்தது. அதனால் அவ்வரசன்  உடனே வாயிலிருந்த  தண்ணீரைத் கீழே தரையில் துப்பிவிட்டு, “இப்படிப்பட்ட வெந்நீரை.. அதுவும் இந்த வெயிலில் குடிப்பதற்கு கொண்டுவருகின்றாயே நீயெல்லாம் ஒரு உதவியாளரா” எனத்திட்டினார்.
உடனிருந்த அமைச்சர் அந்த உதவியாளரிடம் , ஒரு மண் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வருமாறு உத்திரிவிட்டார், உடன் அந்த உதவியாளரும் மண்பாத்திரத்தில் தண்ணீரை அரசனுக்கு கொண்டுவந்த கொடுத்தவுடன் அந்த மண் பாத்திரத்தின்  தண்ணீரை குடித்த அரசன் மிக திருப்தி அடைந்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர், “அரசே, அவர் முன்பு தங்கப் பாத்திரத்தில் தண்ணீரை கொண்டுவந்தார் அந்த பாத்திரம் மிக விலைமதிப்பற்றதாகவும் அழகாகவும் இருந்தது, ஆனால் அதிலிருந்த தண்ணீருக்கு குளிர்ச்சியை அளிக்கும் தன்மை அந்த பாத்திரத்திற்கு இல்லாததாக  இருந்தது, அதன்பிறகு அடுத்தமுறை, அதே உதவியாளர் எளிமையான ஒரு மண் பாத்திரத்தில் தண்ணீரை கொண்டுவந்தார் அதில் கொண்டுந்த தண்ணீர் கோடைகாலத்திற்கு பொருத்தமான குளிர்ந்த தண்ணீராக இருந்தது.
எனவே, ஒரு நபரின் நற்பண்புகளை மட்டுமே நாம் கவனிக்க வேண்டும், அவருடைய தோற்றத்தில் மட்டும் கவனம் செலுத்துவது தவறு" என மிக நீண்ட விளக்கமளித்தார் .உடன் அமைச்சரின் சொற்களுக்கான பொருள் என்ன என்பதை அரசர் உணர்ந்தார், அன்றிலிருந்து மன்னரின் அணுகுமுறை  மாறியது:
கற்றல்
பலர் வெளியில் அழகாக இருந்தாலும் செயலில் மோசமாக இருப்பார்கள். வெளியில்  அழகாக இல்லாதவர்கள் இருந்தாலும், அவர்களின் உணர்வுகளின் தூய்மை செயல்களில் இருக்கும், அவர்களின் ஆளுமை காந்தமாகமற்றவர்களை கவர்ந்திழுக்கின்றது. அழகான தோற்றத்தையும் நல்ல செயலையும் ஒப்பீடு செய்யமுடியாது.
ஒரு மனிதன் நல்லொழுக்கங்களால் மட்டுமே முழுமை பெறுகிறான், அவனுடைய தோற்றத்தால் அன்று. ஒருமனிதனின் செயலின் அழகு மனதின் தூய்மையிலிருந்து வெளிப்படுகிறது, ஏனெனில் அழகு என்பது ஒருவரின் தோற்றத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல, அவரின் செயலும் சேர்ந்ததேயாகும் .

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

பணமதிப்பு நீக்கம், சசேவரி, முழுஅடைப்பு ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் சிறு வணிகங்கள் எவ்வாறு சிதைத்தன?

   இந்தியாவின் கடந்த ஐந்தாண்டுகளின் களநிலவரங்களானவை   சிறு  வணிக நிறுவனங்களுக்கும் முறைசாரா தொழிலாளர்களுக்கு மான 100 மீட்டர் தொடர் ஓட்டபந்தயங்களாக  நமக்குத் தோன்றுகின்றன. பணமதிப்பு நீக்கம், அல்லது சரக்கு சேவை வரி அல்லது முழுஅடைப்பு என எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் பொதுமக்கள்  இந்தியாவின் "உன்னதமான இலக்கினை"  அடைவதற்காக, தங்களுடைய வாழ்க்கை எனும் ஓட்டப் பந்தயத்தில் குறுக்கிடுகின்ற தடைகளையும் தற்காலிக இன்னல்களையும், சகித்துக்கொள்வார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
 ஆயினும் சிலநேரங்களில்  “அச்சே தின்”, “டிஜிட்டல் இந்தியா”, “கருப்புப் பணத்தின் மீதான சர்ஜிக்கல் ஸ்டிரைக்( surgical strike)”, “ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ. 15-லட்சம்”, “மேக் இன் இந்தியா”, “ஆத்ம நிர்பார் பாரத்”, “ஐந்து டிரில்லியன் பொருளாதாரம்” - என ஒவ்வொரு முறையும் பந்தயத்தில் பொதுமக்கள் எனும் ஓடுகின்ற குதிரைக்கு முன்புறம் காட்டுகின்ற  கேரட்டானது மாறிகொண்டே இருக்கின்றது. ஊடக செய்தி அறைகளில் சொற்பொழிவு, வணிகசின்னங்கள் , அதிக கூச்சல்கள் ஆகிய சரியான கலவையுடன் இவை ஒவ்வொன்றும் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டு வந்தன, இதுவே நம்மை வாழ்வில் குறுக்கிடுகின்ற குறுகிய தடைகளுடனும், குறுகிய நினைவுகளுடனும் வாழும் மக்களாக மாற்றியுள்ளன.
 இவ்வாறாக தயாரிக்கப்பட்ட மகிழ்ச்சியான தோற்றமுடைய காட்சியானது, பெரிய அபாயகரமான படத்தை மறைக்கின்ற ஒரு புகைபோன்ற திரையாகப் பயன்படுத்தப்படுகிறது - இது  "சப்கா சாத் சப்கா விகாஸ்" என்ற முழக்கத்துடன் கொடிகட்டிப் பறந்த ஒரு இனத்தின் முடிவடையபோகின்ற ஒரு மாரத்தான் ஓட்டப் பந்தயமாகும், ஆனால் பல ஆண்டுகளாக இந்த பந்தயத்தில் கலந்துகொள்கின்ற சிறு தொழில் முனைவோர்களையும், முறைசாரா துறைகளையும் பெரிய  நிறுவனத்திற்கு ஆதரவாக அழிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுவருகின்றது.
பணமதிப்பிழப்புஎனும்முதல் அலை:   சிறு  வணிகங்களின் பாதைகளில் குறுக்கே எழுப்பப்பட்ட  தடைகளில் ஒன்று பணமதிப்பு நீக்கமாகும். ஐந்தாண்டுகளுக்கு முன், ஒரே இரவில் பயன்பாட்டில்இருந்த ரூ.500 , ரூ.1,000 ஆகிய பணத்தாள்கள் தடைசெய்யப்படுகின்றன எனும் அறிவிப்பானது இந்தியாவின் 86% பணபரிமாற்றத்தினை செல்லாததாக ஆக்கியது. அதாவது நவம்பர் 7, 2016 அன்று இரவு 8 மணிக்கு வெளியான  பயன்பாட்டில்இருந்த ரூ.500 , ரூ.1,000 ஆகிய பணத்தாள்கள் தடைசெய்யப்படுகின்றன எனும் ஆச்சரியமான அறிவிப்பு, நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல் பொதுமக்களின் வாழ்க்கையையும் அழித்து கேள்விக்குறியாக்குவதற்கான முதல் அடியாக அமைந்தது.
 இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கான நடைமுறைபைப் பற்றி எதுவும் அந்த அறிவிப்பின்போது கூறவில்லை, ஆனால் பொதுமக்களின் தனிப்பட்ட இன்னல்களைத் தாண்டி நம்முடைய நாட்டின் பொருளாதாரம் உயர வேண்டும் என்றும், கருப்புப் பணம், பயங்கரவாதம், ரொக்கபணத்தின் தீமை ஆகியவற்றிலிருந்து நாட்டை விடுவிப்பதற்காக வெறும் 50 நாட்களுக்கு மட்டும் பொதுமக்கள் இந்தவலியைத் தாங்கிகொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுவதாகஅந்த அறிவிப்புகோரியது. ஆயினும் கறுப்புப் பணத்தின் மீதான துணிச்சலான "சர்ஜிக்கல் ஸ்டிரைக்" என்றும்  பணம் இருக்குமிடத்தை அறிவதற்கான சில்லுகள் கொண்ட புதிய ரூ. 2,000 நோட்டுகளின் வெளியீடு என்றும்  பலகட்டுக்கதைகள் எப்போதும் விசுவாசமுள்ள ஊடகங்களுக்கு  போதுமானதாக இருந்தன. மேலும் இது குறித்து கேள்வி கேட்ட எவரும் இந்தியாின் "உன்னத இலக்கினை" அடைவதற்கான பாதையில் குறுக்கிடுகின்ற தேச விரோதியாக முத்திரை குத்தப்பட்டனர்.
  கறுப்புப் பணத்தின் மீதான "சர்ஜிக்கல் ஸ்டிரைக்" என்ற கேலிக்கூத்துக்குப் பின்புலத்தில், கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருப்பது, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை,  சிட்டி அறக்கட்டளை, ஃபோர்டு அறக்கட்டளை, மாஸ்டர்கார்டு, ஓமிடியார்வலைபின்னல் விஸாஇன்க் ஆகிய உலகளாவியஅமெரிக்க முகவர்களின்  நிதியளிப்பின் வாயிலான ஒப்பந்தத்தின் மூலம் ரொக்கபணத்தை விட மின்னனு பரிமாற்றமே சிறந்தது எனபெரும் மூலதனத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட ரொக்கப் பணபரிமாற்றத்தின் மீதான உலகளாவியப் போர் ஆகும். இதுபணமதிப்பு நீக்கத்திற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு இந்திய அரசுடன் இணைந்த ஏற்படுத்தப்பட்டகூட்டணிஆகும்.
 "இந்தியாவின் 70% க்கும் அதிகமான தொழிலாளர்களை பணிக்கு பயன்படுத்திகொண்டாலும், முறைசாரா துறையில் பணிபுரிபவர்களை அத்துக்கூலிகளாக அவர்களுடைய  வாழ்க்கையையே சாத்தியமற்ற தாக்குவதுதான் இந்த பணமில்லா நடவடிக்கைகளுக்கான அடிப்படை நோக்கமாகும்" என்பதே இதற்கான விளக்கம் என டோனி ஜோசப் கூறுகின்றார் ,.
  மேலும் பணமில்லாப் பொருளாதாரத்தை ஆதரிப்பவர்கள் முறைசாரா துறையினை கொண்ட  இந்தியா போன்ற அதிகமக்கள்தொகை கொண்டஒரு நாட்டிற்கு இதுபோன்ற கட்டாய பணமில்லா மின்னனு மயமாக்கலால்  மிகப்பெரிய அளவில் பணி இழப்பு, நிச்சயமற்ற தன்மை ஆகியவையே ஏற்படக்கூடிய விளைவாகும் என்றும் இவர் நம்மிடம்  எச்சரிக்கிறார். உண்மையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பிறகு  இந்தியாவில் நாம் காண்கின்றவிளைவுகள்  இதுதான்.
 ரொக்கபண நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்ட  அமைப்பு சாரா துறைக்கு, பணமதிப்பு நீக்கம் என்பது அதனுடைய ஆணிவேரையே வெட்டி விடுவதற்கு சமமாக இருந்தது. நடைமுறை மூலதனத்தின் பற்றாக் குறையால்,  சிறு தொழில் நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரிந்த பனியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலையில் இருந்தன, அதனால் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரிவதற்காக குடிபெயர்ந்த சிறு நகரங்களையும் பெருநகரங்களையும் கைவிட்டு தங்களுடைய சொந்தகிராமங்களுக்கே திரும்பிசென்றனர்.
  2016 டிசம்பரில், 95% புலம்பெயர்ந்தோர் தங்கள் முதலாளிகளிடம் சம்பளம் கொடுக்க பணம் இல்லாததால் வீடு திரும்பியதாகபீகாரின் நிதியமைச்சர்  கூறினார். டிசம்பர் 2016இன் போதான ஒருஆய்வில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முதல் 50 நாட்களில்  40 வயது முதல் 55 வயது வரையிலும் உள்ளவர்களில் 40% பணிஇழப்புகளும், 22 முதல் 30 வயது வரையிலும் உள்ளவர்களில் 32% பணி இழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. அவ்வாண்டின் இறுதியில், சிறிய நிறுவனங்கள், எளிதில் பாதிக்கப்படக்கூடியவை என்பது தெளிவாகத் தெரிந்தது. அதாவது, சிறிய அளவிலான வணிகநிறுவனங்கள், சிறுவணிகர்கள் , குறுந்தொழில்கள் ஆகியவை 60% பணியாளர் இழப்பைக் கண்டன மேலும் இவை தங்களுடைய வருவாயில் 47% சரிவைச் சந்தித்தன, அதே நேரத்தில் பெரிய அளவிலான தொழில்கள் 2% வேலை இழப்பையும் 3% வருவாய் சரிவை மட்டுமே சந்தித்தன.
சசேவ எனும் அடிப்படை கட்டமைப்பிலான அடி: அதற்கடுத்துதாக சரக்கு  சேவை வரி என்ற பெயரில், புதியதாக மற்றொரு தடையை பாதையில் எழுப்பிய போது, அமைப்புசாரா துறையினர் பந்தயத்தில் மீண்டும் தங்களுடைய காலை வைக்க முடியாத நிலை உருவானது. அது மீண்டும் பொருளா தாரத்தை பின்னோக்கித் தள்ளியது. அப்போது மீண்டும், இவ்வாறான பாதிப்புகள் குறுகிய காலத்திற்குமட்டுமே இருக்கும் என்று கூறப்பட்டது. மேலும் இது நீண்ட காலநோக்கில் நாட்டை புதிய உயரத் திற்கு கொண்டு செல்லும் என்றும் கூறப்பட்டது இந்த  காரணத்திற் காக இதனை நடைமுறைப் படுத்துவதை பொதுமக்கள் ஏற்று கொள்வது நல்லது என மீண்டும் ஒரு முறை கேட்டுக்கொள்ளப்பட்டது. முந்தைய பணமதிப்பு நீக்கத்தின் போதான  அலையின் அதிர்ச்சியை  விட, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் , சிறு தொழில் முனைவோர்களுக்கும் சரக்கு , சேவை வரி எனும்   கட்டமைப்பு ரீதியிலான அடியானது  உண்மையில் மிகப்பெரியாகதாக இருந்தது. மேலும் இந்த சசேவ ஆனது   பொருளாதார கட்டமைப்பில் ஈடுபாடுடையசிறிய ஓட்டப்பந்தய வீரர்களின் உயிர் வாழ்விற்கு எதிராக முற்றிலும் திசைதிருப்பப்பட்டது அதுமட்டுமல்லாது சந்தைப் பங்கைப் பொறுத்தவரை பெரிய நிறுவனங்கள் அமைப்பு சாராதா சிறுநிறுவனங்களின் பங்கினை அபகரித்து கொள்வதற்கும் பெரிய ஒழுங்கமைக்கப் பட்ட சில்லறை வர்த்தக வணிகச்சின்னங்களின் பாதையை அகலமாக அதிகரித்து  கொள்வதற்கும் உதவியது. பல்வேறு பொருளாதார வல்லுனர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளபடி, பொதுமக்கள் அருகிலுள்ள சிறுதொழில்கள் அல்லது உள்ளூர் சேவை வழங்குநர்கள், அகியோர்களை பெரும்பாலும் இணைக்கமாக சார்ந்துள்ளதை இல்லாமல் ஆக்கிவிட்டது, ஏனெனில் இதன் மூலம் மட்டுமே போட்டிக்கான விலையை நிர்ணையிக்க முடியும். பெரிய ஒட்டபந்தய வீரர்களுடன் உத்தியோகபூர்வ விகிதங்களுக்கு அவர்களை உட்படுத்துவதும் இணக்கச் செலவினை அதிகபடுத்துவதும் அடிப்படையில் அவர்களில் பெரும்பாலானவர்களை பந்தயத்திலிருந்தே வெளியேற்றுவதாக ஆக்கிவிட்டது. அதுதான் இந்த சசேவின் வாயிலாக நடைபெற்ற துல்லியமானதாக்குதலாகும்
 ப்ரெஸ்டீஜ் குழுமத்தின் செயல் தலைவர் , இந்திய அரசு புதிய சசேவ நடைமுறைபடுத்தியதிற்கு நன்றி என்றும் இதன்மூலம் ஒழுங்கமைக்கப் படாத நிறுவனங்களுடனான போட்டி குறைகிறது.என்றும்  மூன்று அல்லது நான்கு ஒழுங்கமைக்கப்பட்ட வீரர்கள் மட்டுமே  களத்தில் உள்ளனர். மிகுதியாக உள்ளவர்களால் இந்த பந்தயத்தைத் தொடர முடியவில்லை.  என்றும் அதனால்தான்  சசேவ(GST), என்பது ஓட்டபந்தய தளத்தினை சூடாக்குகின்ற வரி (Ground Scorching Tax ) எனஅழைக்கலாம் என்றும்  கூறுவதைக் காணலாம்- ஒரு பேட்டியில் “இது தள மட்டத்தில் பொருளாதாரத்தினை அதிக சேதமடையச் செய்கிறது" என பொருளாதார நிபுணரும் எழுத்தாளருமான அருண் குமார்  கூறினார்.
முழுஅடைப்புஎனும் அபாயகரமான வீழ்ச்சி:  டிரான்ஸ்யூனியன் சிபில், சிட்பிஆகியவற்றின் அறிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டின் இறுதியில், ரூ.10 லட்சம் முதல் ரூ.10 கோடி வரையிலான வருமானங்களைக் கொண்ட  சிறு ,குறு, நடுத்தர நிறுவனங்கள், ஏறத்தாழ பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முந்தைய நிலைக்கு மீண்டுவிட்டன, ஆனால் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான வருமானங்களை கொண்டவை இன்னும்  எழுந்திருக்க முடியாமல் படுக்கையிலேயே நோயாளிகளாக இருந்தன  
தொடர்ந்து 2020 ஆம் ஆண்டில் முழுஅடைப்பு என மற்றொரு தடையை ஏற்படுத்தியபோது, அமைப்புசாரா துறையானது அதிலிருந்து மீண்டு எழுவதற்காக மிகவும்  தீவிரமாக முயன்றன. இந்த முறை அவர்களை வீழ்த்திய கொடிய தடை கோவிட்-19 எனும் தீநுன்மிக்கான வேறொரு தடையாகும் - . மனித வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படாத மிகக் கடுமையான அரசால் விதிக்கப்பட்ட கோவிட்-19 இற்கான முழுஅடைப்பு ஆனது, வெறும் 4 மணி நேர கால அவகாசத் துடன், நாட்டை அசையாத நிலைக்குக் கொண்டு வந்து, அமைதியாக இருக்குமாறுஅறிவிக்கப்பட்டது.
  தீநுன்மிக்கு எதிரான இந்தபோரில் நாடு வலுவாக முன்னேறுவதற்கு ஒரு சில வாரங்களுக்கு சகிப்புத்தன்மையின் பாடலைப்  பிரச்சாரமாக பாடுவதற்கு அரசுஇயந்திரம் மீண்டும் கட்டவிழ்த் துவிடப்பட்டது,  நாம் இரண்டாவது அலை போரின் தோல்வியிலிருந்து மீண்டுஎழமுயற்ச்சி நேரத்தில். முழுஅடைப்பு எனும் மூன்றாவது அலையானது இந்திய பொருளாதாரத்தை முற்றிலுமாக சீர்குலைத்தது, அதாவது ஏற்கனவே பணமதிப்பிழப்பு , சசேவஆகியஇரண்டின் அடிகளால் முடங்கிய அமைப்புசாரா துறையால் இந்த மூன்றாவது அலையின்போது குற்றுயிராக வீழ்வதற்காக மீண்டும் அதிக விலை கொடுக்கப்பட்டது. இதன் விளைவு குறிப்பாக தொழிலாளர்களாக பணிபுரிகின்ற பெண்களுக்கு எதிரானதாகும். ஒரு ஆய்வின்படி, 19% பெண்கள் மட்டுமே தொடர்ந்து பணியில் இருந்தனர், 47% பேர்கள் 2020 இறுதி வரை பணிக்குத் திரும்பவேயில்லை. அவர்களில், வீட்டுப் பணியாளர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரபூர்வ தரவுகளில் கண்ணுக்குத் தெரியாதது என்றாலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பெண்கள் தங்களுடைய சிறுசேமிப்பை எவ்வாறு இழந்தார்கள் என்பதும், குடும்ப வன்முறையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பதும் பரவலாகஅறி்துகொள்ளலாம்
 பாதிக்கப்பட்டஅமைப்புசாரா தொழிலாளர்கள்   அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பானது மற்ற ஒன்பது தொழில் சங்கங்களுடன் இணைந்து 42,000க்கும் மேற்பட்ட சுயதொழில் செய்பவர்களிடமும், குறுந்தொழில் முனைவோர்களிடமும் நடத்திய ஆய்வில், அவர்களின் தொழில்கள் மூன்றில் ஒரு பகுதி ஏறக்குறைய மூடப்படும் தருவாயில் இருப்பதைக் கண்டறிந்தனர்.  இவற்றில் 70% க்கும் அதிகமானவைகளில் தங்களின் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
  2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நடத்தப்பட்ட 400 நிறுவனங்களின் விரிவான ஆய்வில், குறுந்தொழில் நிறுவனங்கள் ஆண்டு விற்பனை வருமானத்தில் 20% இழந்ததாகவும், நடுத்தர பெரிய நிறுவனங்கள் சுமார் 11% மட்டுமே விற்பனைவருமானம் இழந்ததாகவும் கண்டறியப்பட்டது. சிறு தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களில் 37% மட்டுமே தொடர்ந்து வைத்திருக்க முடியும் என்று ஆய்வு மதிப்பிட்டுள்ளது, அதே நேரத்தில் பெரிய நிறுவனங்களின் எண்ணிக்கை 57% ஆகும். இந்த தகவல் இரண்டாவது அலை  கரைக்கு வந்து சேருவதற்கு முந்தையதாகும்
    எடுத்துக்காட்டாக இரும்பினை பயன்படுத்தி சிறுதொழில் செய்திடு பவரின் கணக்கு வேறுமாதிரியாக இருந்தது. , தொற்றுநோய் பாதிப்பானது ஏற்கனவே இயக்கத்தில் இருந்த தொழிலினை முடக்குவதாக அமைந்து விட்டது. "பெரும்பாலான மக்கள் அமேசானில் இருந்து துருப்பிடிக்காத பொருட்களை வாங்குகிறார்கள், மேலும் இந்த தொற்றுநோய் சிறுதொழில் செய்பவரின் சேவை தற்போது தேவையே யில்லாமல் ஆக்கிவிட்டது" என்றநிலை உருவாகிவிட்டது.
  தேசிய சிறுதொழில் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சக்திமான் கோஷ் ஒரு பேட்டியில், நாடு தழுவிய முழுஅடைப்பின் போது பழங்கள், காய்கறிகள், மளிகைப் பொருட்களை விற்கும் வியாபாரிகளில் 10% மட்டுமே செயல்பட முடிந்தது எனக் கூறினார். 80%க்கும் அதிகமான வியாபாரிகள் தங்கள்  கடைகளைதற்காலிகக் கூட திறக்க முடியவில்லை. அதைவிட  தங்கள் அன்றாட வருமானத்தை  கொண்டு வாய்க்கும் கைக்குமாக  ஏறக்குறைய  60% நடைபாதை வியாபாரிகள் தங்களுடைய வாழ்க்கையை  நடத்தி வந்தனர், இந்த முழுஅடைப்பு அவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தி யது. தொற்றுநோயைக் கையாளுவதற்கு இதுபோன்ற கடுமையான முழு அடைப்பு சரியான வழியா என்பது குறித்து கடுமையான விவாதததிற்கு வித்திட்டது, மேலும் இரண்டாவது அலையின் பயங்கர பாதிப்புகளால் பொதுமக்களின் வாழ்க்கையே பாதிக்கப்பட்டது. ஆனால் ஒன்று நிச்சயம்,  ஏற்கனவே தத்தளித்துக்கொண்டிருக்கும் சிறிய பந்தய வீரர்களான, வியாபாரிகள் , பயண சேவை வழங்குநர்கள் மீது  மின்னனு மயமாக்கலானது சில்லறை விற்பனையின் அடித்தளத்தை அசைத்து வீழ்த்துவதை மேலும் உறுதிப்படுத்தியது.
  எடுத்துக்காட்டாக,  2020 இல் புதிய பயனாளர்களில், 64% பேர் முதல் முறையாக இணையத்தின் நேரடி மளிகைக் கடைகளைஅனுகுபவர்களாக இருந்ததாகவும், 20% பேர் மின்-வணிககங்களுடனான  முதல் இடைமுகம் என்றும் ஆய்வு கூறுகின்றது. முழுமுடக்கத்திற்குப் பிறகு 50% புதிய பயனாளர்களாகியதைப் பற்றி Flipkart எனும் பெருநிறுவனம் பெருமிதம் கொள்வதாக கூறுகிறது, மேலும் அவர்களில் பெரும்பாலானோர் இதுவரை தட்டிக்கழிக்கப்படாத  மூன்றாவது அடுக்கு நகரங்களில் இருந்து வந்தவர்கள், முழுமுடக்கம் இணையத்தின் நேரடி சில்லறை வணிகத்திற்கான ஒரு நெகிழ்வு புள்ளியாக தனித்து நிற்கிறது.
   ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், பணமதிப்பு நீக்கம்அல்லது சசேவ அல்லது முழுமுடக்கம் ஆகியவை உண்மையில் குறுகிய ஓட்டப் பந்தயங்களின் தடைகள் அல்ல - ஆனால் அவை ஒரு தொடர்ச்சியான  - ஐந்தாண்டு கால மாரத்தான் ஓட்டபந்தய பாதைகளில் ஏற்படுத்தபட்ட தடைகளாகும்- இவை முறைசாரா தொழிலாளர்களின் பெரும்பகுதியைப் பயன்படுத்துகின்ற சிறு வணிகங்களுக்கு ஒரு மரணப் பொறியாக மாறியுள்ளன. அவை ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளை வாங்கிவிட்டன அல்லது அவற்றின் சந்தைப் பங்கு பெருவணிகத்தால் அபகரிக்கப்ட்டு சீராக அழிக்கப்பட்டுவிட்டது. கோவிட் எனும் தொற்றுநோய் ஆண்டான 2020 ஆனது  இந்தியாவில் விவசாயிகளை விட சிறு வணிகர்கள் அதிக தற்கொலைகளைக் கண்டுள்ளது என சமீபத்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு தற்கொலை முடிவு எடுத்தவர்களில் பெரும்பாலும் விற்பனையாளர்கள் (36%) , வர்த்தகர்கள் (37%) உள்ளனர். வெறுப்பு, மதவெறி , கவணமாக மறைக்கப்பட்ட வாக்குறுதிகள் ஆகியவை இந்த அப்பட்டமான உண்மைகளிலிருந்து நம்மைத் திசைதிருப்ப வைத்திருக்கிறது அல்லது ஒரு தவறான பெருமைக்காக நம்மை உற்சாகப்படுத்துகிறது.
  அடுத்த என்னஅறிவிப்பு வருமோ நம்முடைய நடைமுறை வாழ்க்கை என்ன ஆகுமோ என அரைகுறையாக உயிர் ஒட்டிகொண்டு காலந்தள்ளு கின்ற சிறு நிறுவனங்கள் அமைப்புசாரா நிறுவனங்கள் ஆகியன தங்களுடைய காலத்தை கழித்து கொண்டிருக்கின்ற  இந்த மரணப் பந்தயத்தை  எவ்வளவு காலத்திற்குள் முடிவுக்குக் கொண்டு வரமுடியும்? என்பதுதான் நம்முன் உள்ள மிகப்பெரிய கேள்விக்குறியாகும்

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

RBI இன் எண்ணிம நாணயத்தினை பற்றிய கட்டுக்கதைகளும் &உண்மையும்

 2022-23 மத்திய பட்ஜெட்டின் ஒரு பகுதியாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் முன்வைத்த அனைத்து திட்டங்களிலும்,எண்ணிம நாணயத்தினை (Digital Currency(DC)) அறிமுகப்படுத்துவது என்பது குறித்த அறிவிப்பு கிட்டத்தட்ட அனைத்து இந்தியர்களின் வாழ்க்கையையும் தொடும் திறன் கொண்டது. எண்ணிம நாணயம் பற்றி நீண்ட காலமாக ஊகங்கள் இருந்தபோதிலும், அதன் வரையறை பற்றி இதுவரையில் யாருக்கும் தெரியாமலேயே இருந்துவந்தது. நிதியமைச்சர் தனது உரையில், எண்ணிம நாணயம் அல்லது மத்திய வங்கியின் எண்ணிம நாணயம் (CBDC),ஆனது மறையாக்க நாணயம் (bitcoin) , பிற பிரபலமான மறையாக்க நாணயம் ஆகியவைகளுக்குப் பின்புலத்தில் உள்ள எண்ணிம கட்டமைப்பிற்கு இணையான சமீபத்திய தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டது என்று மேலும் தெளிவுபடுத்தியுள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சமர்ப்பிக்கும்போது, இந்திய மத்திய வங்கி (RBI ) தனது எண்ணிம நாணயத்தை விரைவில் வெளியிடும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மத்திய வங்கியின் எண்ணிம நாணயத்தினை (CBDC), RBI இன் எண்ணிம நாணயமாக 2023 இல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. "மத்திய வங்கியின் எண்ணிம நாணயத்தின் அறிமுகமானது எண்ணிம பொருளாதா ரத்திற்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும். எண்ணிம நாணயம் மிகவும் திறமையான , மலிவான நாணயத்திற்கு வழிவகுக்கின்ற. மேலாண்மை அமைப்பாகும்" என்று சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறினார். மறையாக்க நாணயம் எண்ணிம நாணயம் ஆகிய இரண்டும் ஒன்றா அல்லது வெவ்வேறா என்றும் .அவை  வெவ்வேறு எனில்; அவ்விரண்டிற்கும் இடையிலான  வேறுபாடு என்ன? ;அவை நமக்கு தேவையா? என்பன போன்று  பலர் குழப்ப மடைகின்றனர். மேலும் அதைச் பற்றிய கட்டுக்கதைகளும் நம்மிடைய ஏராளமாக வலம் வருகின்றன அதைபற்றிய உண்மைகள் என்ன? அவற்றை சுருக்கமாக இங்கு விவாதிப்போம்.
மத்திய வங்கியின் எண்ணிம நாணயம் (CBDC) என்றால் என்ன?
மத்திய வங்கியின் எண்ணிம நாணயம் (CBDC) என்பது இந்திய அரசின் மத்திய வங்கியால் வழங்கப்படுகின்ற சட்டப்பூர்வ நாணயத்தின் எண்ணிம வடிவமாகும். இது ஃபியட் நாணயத்திற்குச் சமமானது இதனை நம்முடைய வழக்கமான பணப்பரிமாற்றத்தினை போன்றே ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளலாம் ஆனால் தொட்டுணரக்கூடிய வடிவத்தில் அன்று அதற்குபதிலாக  மின்னணு வடிவத்தில். ஒரு இறையாண்மைமிக்க நாணயமானது ஒருநாட்டின் மத்திய வங்கியின் இருப்புநிலைக் குறிப்பில் ஒரு பொறுப்பாக (புழக்கத்தில் உள்ள நாணயம்) தோன்றும். மேலும் இந்த CBDC நாணயங்களை தொட்டுணரக்கூடிய பணமாக மாற்றுவது சாத்தியமாக இருக்க வேண்டும்.
 மின்னணு நாணயத்தின் பயன்பாட்டை பிரபலப்படுத்துதல் மறையாக்க நாணயங்கள் போன்ற தனியார் எண்ணிம சொத்துக்கள் தோன்றுவதைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக உலகெங்கிலும் உள்ள நாடுகளின் மத்திய வங்கிகள் எண்ணிம நாணயங்களை ஊக்குவிக்கின்றன.
DeFi அல்லது பரவலாக்கப்பட்ட நிதி அனுமதிசீட்டுகளான பிற மறையாக்க நாணயங்களைப் போலல்லாமல், மற்ற எல்லா ஃபியட் நாணயங்களையும் போன்றே CBDC களும் மத்திய வங்கியின் கையிருப்புக்களால் ஆதரிக்கப்படும். எண்ணிம நாணயம் என்பது இந்திய அரசின் மத்திய வங்கியின் (RBI) ஆதரவுடன் ஒரு நணயத்தின் எண்ணிம பிரதிநிதித்துவமாக இருக்கும்.
CBDC , Crypto ஆகிய இரு நாணயங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு


மத்திய வங்கியின் எண்ணிம நாணயம் (CBDC)

.மறையாக்க(Crypto) நாணயம்

தொடர்பு இல்லாத பரிமாற்றங்களில் பயன்படுத்தப்படுகின்ற ஃபியட் நாணயத்தின் மின்னணு வடிவமே எண்ணிம நாணயமாகும் .

.Crypto நாணயம் என்பது மறையாக்கத்தால் பாதுகாக்கப்படுகின்ற மதிப்பின் சேமிப்பாகும்.

ஒரு மத்திய அமைப்பு எண்ணிம நாணயத்தை (இந்தியாவிற்கான RBI) மேற்பார்வை செய்கிறது.

.Crypto நாணயம் கட்டுப்பாடற்றது பரவலாக்கப்பட்டது.

உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எண்ணிம நாணயங்களின் மதிப்பு நிலையானது.

.மறையாக்கநாணயங்களின் மதிப்பு மிகவும் மாறக்கூடிய, மேலும் பொதுவாக இவைஇன்னும் மத்திய வங்கிகளின் எண்ணிம நாணயங்களால் அங்கீகரிக்கப் படவில்லை.

அனுப்புபவர், பெறுபவர் மத்திய வங்கி ஆகியமூன்று நபர்களுக்கு மட்டுமே எண்ணிம நாணய பரிமாற்ற விவரங்கள் தெரியும்.

பரவலாக்கப்பட்ட பேரேட்டில், மறையாக்கநாணய பரிமாற்றங்கள் அனைவருக்கும் தெரியுமாறு பகிரங்கமாக அறிவிக்கப்படுகின்றன.

எண்ணிம பணப்பைகள், வங்கி பயன்பாடுகள், கடனட்டைகள் பற்றட்டைகளைப் பாதுகாக்க வலுவான கடவுச்சொற்கள் தேவை.

மறைகுறியாக்கம் ஆனது மறையாக்க நாணயங்களைப் பாதுகாக்கிறது.


 நம்முடைய சொந்த CBDC ஐ உருவாக்குவதன்மூலம், மற்றஎந்தவொரு தனியார் மெய்நிகர் நாணயங்களும்(Veirtual Currency(VC)) வழங்கக்கூடிய பயன்பாடுகளை பொதுமக்களுக்கு வழங்க முடியும்  அந்த அளவிற்கு நாணயத்திற்கான பொது வாய்ப்பினை தக்க வைத்துக் கொள்ளலாம். இதன் வாயிலாக மெய்நிகர் நாணயங்களின் (VC)சில  அசாதாரண நிலையிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க முடியும்
CBDC இன் அவசிய தேவை(need) என்ன?
 CBDC கள் மீதான ஆர்வம் இப்போது உலகளாவிய அளவில் உள்ளது என்றாலும், மிகச் சில நாடுகள் மட்டுமே தங்களுடைய  CBDC ஐ தொடங்குவதற்கான முன்னோடியான நிலையை எட்டியுள்ளன. மத்திய வங்கிகளின் 2021 ஆண்டின்BIS கணக்கெடுப்பில், 86% ஆனவர் CBDC இக்கான சாத்தியக்கூறுகளை தீவிரமாக ஆய்வுசெய்துவருகின்றனர், 60% பேர் தொழில்நுட்பத்தைப் பரிசோதித்து வருகின்றனர், 14% பேர் முன்னோடித் திட்டங்களைப் பயன்படுத்திவருகின்றனர் என்று தெரியவருகின்றது.
ஏன் இந்த திடீர் ஆர்வம்?
பின்வரும் காரணங்களுக்காக CBDC ஏற்றுக்கொள்ளப்படுகின்றது:-
(i) காகித நாணயத்தின் பயன்பாடு குறைந்து வருவதை எதிர்கொள்ளும் மத்திய வங்கிகள், நாணயத்தின் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மின்னணு வடிவத்தை பிரபலப்படுத்த முயல்கின்றன;
(ii) வெளியீட்டை மிகவும் திறம்படச் செய்ய விரும்பும் குறிப்பிடத்தக்க  ரொக்கப் பயன்பாட்டைக் கொண்ட அதிகார வரம்புகளை தக்கவைத்துக்கொள்ள விரும்புகின்றன;
(iii) தனியார் மெய்நிகர் நாணயங்களின் அதிகரித்து வரும் பயன்பாட்டில் வெளிப்படும் எண்ணிம நாணயங்களுக்கான பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய மத்திய வங்கிகள் முயல்கின்றன.
   CBDC ஆனது மற்ற எண்ணிம கட்டண முறைகளை விட சில தெளிவான நன்மைகளைக் கொண்டுள்ளன - CBDC ஐப் பயன்படுத்தி பணம் செலுத்துவது இறுதியானது, இதனால் நிதி அமைப்பில் தீர்வு அபாயத்தைக் குறைக்கிறது.
   வங்கி நிலுவைகளுக்குப் பதிலாக CBDC பரிமாற்றங்கள் செய்யப்படும் ஒரு UPI அமைப்பை கற்பனை செய்து பார்த்திடுக, பணத்தை ஒப்படைப்பது போன்ற - வங்கிகளுக்கு இடையேயான தீர்வுக்கான தேவை மறைந்துவிடும். CBDCஇன், கட்டண முறைகளின் நிகழ்நேர  செலவு குறைந்த உலகமயமாக்கலையும் சாத்தியமாக்கக்கூடும். ஒரு இந்திய இறக்குமதியாளர் தனது அமெரிக்க ஏற்றுமதியாளருக்கு நிகழ்நேர அடிப்படையில் எண்ணிம டாலர்களில் இடைத்தரகர் தேவையில்லாமல் பணம் செலுத்துவது சிந்திக்கத்தக்கது. இந்த பரிமாற்றம் இறுதியானது, இது ரொக்கமாக டாலர்களை ஒப்படைப்பது போன்று இருக்கும், மேலும் அமெரிக்க ஒன்றியவங்கி அமைப்பு இந்த தீர்விற்காக திறந்திருக்க வேண்டிய அவசியமில்லை. நாணய தீர்வுகளில் நேர மண்டல வேறுபாடு இனி முக்கியமில்லை - '(Settlement)' ஆபத்து இருக்காது.
இந்தியாவில் CBDC தேவையா?
 எண்ணிம வழங்குதலின்(Payment)  கண்டுபிடிப்புகளில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது. அதன் கட்டண முறைகள் எப்போதும் எந்தநேரத்திலும் (24X7) கிடைக்கின்றன, சில்லறை விற்பணையாளர், மொத்தவிற்பணையாளர்  ஆகிய வாடிக்கையாளர்களுக்கு எளிதாகக் கிடைக்கும், அவை பெரும்பாலும் நிகழ்நேரத்தில் உள்ளன, பரிமாற்றங்களுக்கான செலவு உலகிலேயே மிகக் குறைவாக இருக்கலாம், பயனாளர்கள் பரிமாற்றம் செய்வதற்கான வாய்ப்புகளின் ஈர்க்கக்கூடிய பட்டியலைக் கொண்டுள்ளனர் , எண்ணிம கொடுப்பனவுகள் வளர்ந்துவருகின்றன. ஈர்க்கக்கூடிய CAGR ஆனது 55% (கடந்த ஐந்து ஆண்டுகளில்). ஒரு ரொக்க பணபரிமாற்றத்திற்கு அனுமதிக்கும் UPI போன்ற மற்றொரு கட்டண முறையைக் கண்டுபிடிப்பது கடினம்.
குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரை, மத்திய வங்கியின் CBDC இன் மற்றொரு நன்மை என்னவென்றால், CBDC அறிமுகத்தின் மூலம் பணப் பயன்பாடு குறைக்கப்பட்டால், இந்தியாவின் உயர் நாணயமும் GDP விகிதமும் குறைக்கப்படலாம். UPI மூலம் எண்ணிம வழங்குதல்களில்(Payment)  இந்தியா பெரும் முன்னேற்றம் கண்டாலும், பணத்தின் குறிப்பிடத்தக்க இடமாற்றம் இன்னும் ஒரு சவாலாக உள்ளது.
 டிசம்பர் 2018 , ஜனவரி 2019 க்கு இடையில் ஆறு நகரங்களில் உள்ள தனிநபர்களின் சில்லறைப் பணம் செலுத்தும் பழக்கம் குறித்து இந்திய மத்திய வங்கி நடத்திய ஒரு முன்னோடி கணக்கெடுப்பு, ஏப்ரல், 2021 இல் வெளியிடப் பட்டமத்திய வங்கியின் அறிவிக்கையில் ரொக்க பண வாய்ப்பின் வழி முறையில் பணம் செலுத்துவதைக் குறிக்கிறது.  வழக்கமான செலவு களுக்கு பணம் பெறுவதற்காக. சிறிய மதிப்புள்ள பரிமாற்றங்களுக்கு (₹500 வரையிலான தொகையுடன்) ரொக்கம் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.
பணத்திற்கான வாய்ப்பு எண்ணிம முறையில் பணம் செலுத்துவதற்கான அசௌகரியத்தை பிரதிபலிக்கும் அளவிற்கு, CBDC அத்தகைய பணப் பயன்பாட்டை மாற்ற வாய்ப்பில்லை.ஆனால்,பெயர் குறிப்பிடாமல் அனாம தேயமாக இருப்பதற்கான பணத்திற்கான வாய்ப்பாகும், உதாரணமாக, பெயர் தெரியாதது உறுதிசெய்யப்படும் வரை, CBDCஐ ஏற்றுக்கொள்வதற்குத் திருப்பிவிடலாம்.
புதிய CBDC யின் ஒரு பகுதியாக இந்த அம்சத்தை அச்சுறுத்தாத வகையில் நிவர்த்தி செய்வது, பணத்தால் இயக்கப்படும் மீச்சிறு-பொருளாதாரங்களில் வெகுஜன தத்தெடுப்பை ஊக்குவிக்கும், இது மொத்த நாணயத்திற்கான ஒட்டுமொத்த தேவையை குறைக்கும். இது கணிசமான, நேர்மறையாக தொட்டுணரக்கூடிய நாணயத்தை அச்சிடுதல், கொண்டு செல்லுதல், சேமித்தல் , விநியோகத்தல் ஆகிய பணிகளை செய்வதற்கான பெரும் செலவினங்களை தவிர்க்கலாம், இந்த CBDC யை பிரதான நீரோட்டத்தில் ஏற்றுக்கொள்வது இந்தியாவை எண்ணிம அதிகாரம் பெற்ற நாடாக மாற்றுவதற்கும், தொட்டணரக் கூடிய ரொக்க பணமில்லா பொருளாதாரத்தை அடைவதற்கான அரசின் பார்வையை அடைவதற்கும் ஒரு மாபெரும்செயலின் முதல்படியாகும். . இது ஒரு பயன் பாட்டினை மாற்றுபவராக இருக்கலாம், வங்கி , பணம் செலுத்தும் சூழல் அமைப்பில் மேலும் விரைவான மாற்றங்களைக் கொண்டுவரும்.

1.CBDC ஐ பற்றிய கட்டுக்கதைகள்  தவறான கருத்துகளை நீக்குதல் CBDC ஒரு புதிய கருத்தமைவா?
 கடந்த காலத்தில், பின்லாந்துநாட்டில் இதற்காக Avant எனும் அட்டையை அறிமுகப்படுத்திய 1990 களில் மத்திய வங்கியின் எண்ணிம நாணயம் (சில்லறை வடிவத்தில்) இருந்தது. இருப்பினும், மத்திய வங்கியின் சில்லறை இட்டுவைப்புகள் நீக்கம் செய்யப்பட்டன, இதனால் மத்திய வங்கியானது மற்ற நிதி அமைப்புகளுடன் போட்டியிடாது. மேலும் Avant எனும் அட்டை பயனாளர்களின் வலைபின்னல்கள் மிகவும் சிறியதாக இருந்ததால் தோல்வி யடைந்தது. எனவே, புதியதான CBDC அவ்வாறானது அன்று, ஆனால் அது இப்போது நவீன எண்ணிம வலைபின்னல்களில் தம்மை விரைவாக நிலைநிறுத்திக் கொள்ள முடியும், அதனை வாங்கு பவர்களும் விற்பவர்களும் சிரமமின்றி அதனை அணுக முடியும்.
2.பிரபலமான மறையாக்கநாணயத்திற்கு(Cryptocurrency), CBDCஆனது மாற்றா?
இல்லை, இந்தியாவில் எண்ணிம நாணயத்தைப் பயன்படுத்துவதற்கான வழக்கங்கள் ஏராளமாக உள்ளன. உணவு மானியங்கள் போன்ற குறிப்பிட்ட மானியங்களை வழங்குவது மிகவும் எளிமையானது. அரசாங்கம் CBDC மூலம் மானியத்தை பயனாளிக்கு எளிதாக மாற்றலாம், குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே குடிமை பொருட்கள் வாங்குவதற்காக மாற்றப்பட்ட CBDCயை வாடகை செலுத்த பயன்படுத்த முடியாது. பணம் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்று நமக்குத் தெரியாத வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணப் பரிமாற்றம் செய்வதை விட இது சிறந்தது.
மானியங்கள் மட்டுமல்ல. பொருளாதாரத்தில் தூண்டுதல்களை உருவாக்க CBDC ஐ பயன்படுத்தி கொள்ளலாம். அரசாங்கம் பொருளாதாரத்தின் ஒரு பகுதியை உயர்த்த முடிவு செய்கிறது என்று வைத்துக்கொள்க அதாவது பயணப்படியை. பயணம் செய்தால் மட்டுமே பயன்படுத்த அரசுபணியாளர் அனைவருக்கும் பயணபடிக்கான CBDC ஐ அரசாங்கம் வழங்க முடியும். நிச்சயமாக, நம்மிடம் விடுமுறை போக்குவரத்து படி (LTA) உள்ளது, ஆனால் இது அதன் சொந்த சிக்கலான செயலாக்க வழிமுறைகளுடன் வருகிறது. IRTC அல்லது சில பயனஏற்பாட்டாளர்களுடன் உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய எண்ணிம எடுக்கப்பட்ட பயன்பாடுகளின் மாற்றுபவராக இருக்கலாம்.
3.ஒரே CBDCஐ அனைத்து நாடுகளும் பொதுவாகப் பயன்படுத்த முடியுமா
இதுவரையில் அனைவருக்கும் பொருந்தக்கூடிய CBDC தீர்வு எதுவும் இல்லை. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு ரூபாய் நோட்டுகள் இருப்பதைப் போலவே, வெவ்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப தங்களுடைய சொந்த CBDCஐ வடிவமைக்க முடியும்.
எடுத்துக்காட்டாக, ஜப்பான் அடிக்கடி நிலநடுக்கங்கள் , மின்வெட்டுக களைக் கணக்கிடுவதற்கு குறிப்பிட்ட இணையஇணைப்பில்லாத தேவைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும், அதே நேரத்தில் ஆப்பிரிக்க மத்திய வங்கிகள் சமூகத்தின் வங்கிகிளையல்லாது பகுதிகளுக்கும் எண்ணிம கட்டணத்தை உறுதி செய்ய வேண்டும்.
4.அனைவருக்கும் மத்திய வங்கிகளில் வங்கிக் கணக்குகள் இருக்கும்!
கணக்கு அடிப்படையிலானது முதல் அனுமதிசீட்டு அடிப்படையிலான கருத்தமைவுகள் வரை பல்வேறு வகையான CBDC உள்ளன, மேலும் சில்லறை வர்த்தகத்தில் மத்திய வங்கிகள் ஈடுபடும் அளவு மாறுபடும். பெரும்பாலான நாடுகளில், மத்திய வங்கிகளின் ஈடுபாடு குறைவாகவே இருக்கும். வணிக வங்கிகள் நுகர்வோருடன் ஏற்கனவே உறவுகளைக் கொண்டிருப்பதால், அவை CBDCயை விநியோகிக்க சிறந்த வீரர்களாக திகழுக்கூடும்; CBDCஐப் பயன்படுத்து வதற்கு நீட்டிக்கப்படக்கூடிய ஏற்கனவே உள்ள பயன்பாடுகளை வழங்குகின்றன, மேலும்  வாடிக்கையாளரை அறிவது (KYC) செயல்முறைகளை எவ்வாறு நிர்வகிப்பது என  தெரிந்துகொள்ளலாம்.
5.CBDC என்பது எண்ணிம கட்டணத்தின் மற்றொரு வடிவம்!
 தற்போதுள்ள எண்ணிம கட்டண செயல்திட்டங்களுக்கு சந்தாகட்டணம்/ அல்லது வங்கிக் கணக்கு அல்லது கடனட்டை தேவை, அல்லது அவை அதற்காக கட்டணங்களை விதிக்கின்றன. மேலும், அனைத்து வணிகர்களும் ஒவ்வொரு வகையான எண்ணிம சேவை வழங்குநராலும் பணம் செலுத்துவதை ஏற்க மாட்டார்கள். இதற்கு நேர்மாறாக, CBDC என்பது மத்திய வங்கியால் ஆதரிக்கப்படும் ரொக்க பணத்தின் அதே செயல்பாடுகளைக் கொண்ட அதிகாரப்பூர்வ சட்டப்பூர்வ நாணயமாக இருக்கும். எந்தவொரு வணிகரும் அல்லது நபரும் அதை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும், இதுவே உண்மையான ஒன்றோடொன்று இணைந்து இயங்கக்கூடிய முதல் எண்ணிம முறையாக இருக்கும். இது பொருட்கள் , சேவைகளை மதிப்பிடுவதற்கான கணக்கின் யூனிட்டாக செயல்படுகிறது, மேலும் இது ஒரு மதிப்பின் சேமிப்பகமாகும், இதனை பின்னர் சேமிக்கவும், மீட்டெடுக்கவும் , பரிமாறிக்கொள்ளவும் முடியும்.
6.CBDC இல் பணம் செலுத்த மக்களுக்கு இணைய இணைப்பு தேவை!
CBDC சட்டப்பூர்வ நாணயமாக இருப்பதால், எந்த நேரத்திலும் பணம் செலுத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் - வலைபின்னல் அல்லது இணைய இணைப்பு அல்லது மின்சாரம் இல்லாத பகுதிகளில் கூட - எ.கா., மின் தடை ஏற்படும் போது. RBI & NPCI விரைவில் UPI ,பிற இணைய முறைகளுக்கு USSD மூலம் எண்ணிம வழங்குதல்களை  எல்லா இடங்களிலும், எந்த நேரத்திலும் செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்த, தொடர்ச்சியான இணைப்பில்லாத வழங்குதல்களை  செயல்படுத்துகிறது.
7.ஒவ்வொரு CBDCஐ கட்டணத்தையும் கண்காணிக்க முடியும்!
இன்று, எண்ணிம கொடுப்பனவுகள் எப்போதும் பணம் செலுத்தும் சேவை வழங்குநர், வணிகர் அல்லது இவ்விருவர்களுக்கும் தனிப்பட்ட தரவை வெளிப்படுத்துவதை உள்ளடக்கியது. ஒரு CBDC ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை முழு அநாமதேயத்தை அனுமதிக்க வேண்டும் - பணத்தைப் போலவே. பணமோசடி அல்லது வரி ஏய்ப்பைத் தடுக்க, மத்திய வங்கியின் தேவையான சட்டப்பூர்வ , சட்டப்பூர்வ இணக்கத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில், CBDCயின் தனியுரிமை, வெளிப்படைத்தன்மையை உண்மையிலேயே சமநிலைப்படுத்தும் சாத்தியம் CBDC இன் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கும்.
8.CBDC எப்போதும் Blockchain தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது!
சங்கிலிதொகுப்பு( Blockchain) என்பது ஒரு சிறந்த தொழில்நுட்பமாகும், இது சில பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு நன்றாக செயல்படுகிறது. இருப்பினும், ஒரு CBDC நம்பகமான நிறுவனத்தால் வழங்கப்படுவதால், சங்கிலிதொகுப்பு அதன் செயல்பாட்டிற்கு அவசியமில்லை. CBDCக்கான பல வடிவமைப்பு அளவுகோல்களை சங்கிலிதொகுப்பின், விநியோகிக்கப்பட்ட பேரேட்டு தொழில்நுட்பம் (DLT) பூர்த்தி செய்ய முடியும் என்றாலும், பாதுகாப்பான தொடர்ச்சியான இணையமில்லா கொடுப்பனவுகள், தனியுரிமை, வெளிப்படைத் தன்மையை உண்மையாக சமநிலைப்படுத்துவதற்கான சாத்தியம்  மிக உயர்ந்த பின்னடைவை உறுதி செய்தல் போன்றவற்றை அடைவதில் சிரமங்கள் இருக்கும். CBDC சசூழலில் எந்த ஒரு தோல்வி புள்ளியும் இல்லை.
  இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வங்கி தனது சங்கிலிதொகுப்பு அடிப்படையிலான மத்திய வங்கி எண்ணிம நாணயமான (CBDC) எண்ணிம நாணயத்தினை மார்ச் 2023க்கு முன் தொடங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார். இருப்பினும், இந்திய மத்திய வங்கியின் (RBI) செயல் இயக்குநர், T இரபி சங்கர், மத்திய வங்கி, அனைத்து தொழில்நுட்பங்களுக்கும் திறந்திருக்கிறது என்று தெளிவுபடுத்தியுள்ளர்.
முடிவுரை
இந்தியாவில் CBDC செயல்படுத்தப்படுவதற்கு, பல்வேறு அளவுருக்களில் சில திருப்புமுனை முன்முயற்சிகள் முக்கியமாக இருக்கின்றன - கிராமப்புறங்களில் சிறந்த எண்ணிம நிதி கல்வியறிவுக்கான திட்டமிடல், குறைந்த வங்கிகளி்ன் கிளைகள், வலுவான தொழில்நுட்ப உள்கட்டமைப்பைப் பயன்படுத்துதல், வலுவான சட்டக் கட்டமைப்பு , கலாச்சார தடைகளை நீக்குதல். இந்தியாவில் இந்த தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக ஏற்றுக்கொள்வது, ஒரு வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குவதைப் பொறுத்தது, இது தொழில்நுட்பத்தை நிர்வகிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், CBDC களை ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியமான தடைகளையும் தீவிரமாக நிவர்த்தி செய்யும். எண்ணிம நாணய உள்கட்டமைப்புக்கு குறிப்பிடத்தக்க முதலீடுகள் தேவைப்படுகின்றன  அதன் செயலாக்கமானது துவக்கநிலையிலான தடுமாற்றங்கள் இல்லாமல் இருக்காது. எண்ணிம நாணயம் செலுத்துதல் , நாணயங்களைச் சுற்றியுள்ள இணையக் குற்றங்களின் அச்சுறுத்தல், தத்தெடுப்பை இயக்குவதற்கு உயர் தரமான பயனாளர் அனுபவத்தை உறுதி செய்யும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதைத் தவிர, அதிநவீன இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று கோருகிறது. இம்முயற்சியின் வெற்றியை உறுதி செய்வதற்காக,அனைவரின் பங்கேற்பையும் அர்ப்பணிப்பையும் உறுதி செய்வது மிகவும் அவசியமாகும்.

 

 

 

 

 

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...