செவ்வாய், 30 ஏப்ரல், 2013

நம்கீழ் பணிபுரியும் பணியாளர்கள்எந்தவகையை சேர்ந்தவர்கள்


ஒருவர் புதிய நவீன அரிசிஆலை ஒன்றை நிறுவலாம் என முயற்சித்தபோது அவர் திட்டமிட்டபடி வங்கிகள் கடன்வழங்க தயங்கியதால் கையிலிருந்த முதலீட்டை மட்டும் கொண்டு சாதாரண அரிசி ஆலையாக நிறுவினார் அந்த புதிய அரிசி ஆலையை இயக்குவதற்காக பணியாளர்களை நியமனம் செய்யவிழைந்தார்

முதல்நாள் பணிபுரிய வந்த அன்பு என்ற பணியாளரிடம் தரையில் இருக்கும் நெல்மூட்டைகளை மேலே மாடிக்கு கொண்டு சென்று சேர்த்திடுமாறு உத்திரவிட்டார் உடன் அந்த அன்பு என்ற பணியாளரும் மிக்கடினமாக முயன்று நெல்மூட்டைகளை மேலே மாடிக்கு கொண்டு சென்று சேர்த்தார்

மறுநாள் பணிபுரிய வந்த ஆராவமுது என்ற பணியாளரிடம் தரையில் இருக்கும் நெல்மூட்டைகளை மேலே மாடிக்கு கொண்டு சென்று சேர்த்திடுமாறு உத்திரவிட்டார் உடன் அந்த ஆராவமுது என்ற பணியாளரும் மிக்கடினமாக முயன்று நெல்மூட்டைகளை மேலே மாடிக்கு கொண்டு சென்று சேர்த்தார் அதனோடு மற்றோரு இளவரசன் என்ற பணியாளரும் அதே பணியை செய்வதற்கு தடுமாறி கொண்டிருந்த்தை கண்ணுற்று இளவரசனுடைய பங்கு நெல்மூட்டைகளை மேலே மாடிக்கு கொண்டு சென்று சேர்த்திட உதவிசெய்தார்

மூன்றாம் நாள் பணிபுரிய வந்த அறிவு என்ற பணியாளரிடம் தரையில் இருக்கும் நெல்மூட்டைகளை மேலே மாடிக்கு கொண்டு சென்று சேர்த்திடுமாறு உத்திரவிட்டார் உடன் அந்த அறிவு என்ற பணியாளரும் முந்தைய அன்பு, ஆராவமுது ஆகிய இருவரும் என்னென்ன சிரமங்களை அடைந்தனர் என குறிப்புபெழுதி அதனை எவ்வாறு சுலபமாக்குவது என அறிந்து அதனையும் குறிப்பெழுதி பணியை முடித்து அந்த குறிப்பையும் கொண்டு சென்று முதலாளியிடம் சமர்ப்பித்தார்

நான்காம் நாள் பணிபுரிய வந்த உலகநாதன் என்ற பணியாளரிடம் தரையில் இருக்கும் நெல்மூட்டைகளை மேலே மாடிக்கு கொண்டு சென்று சேர்த்திடுமாறு உத்திரவிட்டார் உடன் அந்த உலகநாதன் என்ற பணியாளரும் முந்தைய அன்பு, ஆராவமுது, அறிவு ஆகிய மூவரும் என்னென்ன சிரமங்களை அடைந்தனர் அந்த சிரமங்களை தவிர்த்து சுலபமாக்க அறிவு என்ன வழிமுறையை பின்பற்றினார் என அறிவுனுடைய குறிப்பினை படித்தறிந்த மேலும் சுலபமாக்கிடும் பொருட்டு கையில் தயாராக இருக்கும் பொருட்களை கொண்டு நெல்மூட்டைகளை மேலே சுலபமாக கொண்டு சேர்ப்பதற்கான இயந்திர அமைப்பான மின்தூக்கி(Elevator) என்ற அமைப்பை நிறுவி அதன்மூலம் நிரந்தரமாக நெல்மூட்டைகளை மேலே சுலபமாக கொண்டு சேர்ப்பதற்கான வழிமுறையை அமைத்து தனக்கிட்ட பணியையும் முடித்தார் இந்த செய்தியை தன்னுடைய முதலாளியிடம் சென்று அறிவித்தார்

இந்த ஐந்து பணியாளர்களில் நாம் எந்த வகையை சேர்ந்தவர் என இந்த நிகழ்வுகளிலிருந்து நாம் பணிபுரியும் தன்மையை வைத்து முடிவுசெய்து கொள்க அவ்வாறே நம்கீழ் பணிபுரியும் பணியாளர்கள்எந்தவகையை சேர்ந்தவர்கள் என்றும் முடிவுசெய்து அதற்கேற்ற பணியை அவரவர்களுக்கு வழங்கி நம்முடைய தொழிலகம் சுணக்கமின்றி செயல்பட முயன்றிடுக

திங்கள், 29 ஏப்ரல், 2013

இருநபர்களிடையே ஏற்படும் கருத்துவேறுபாடுகளை களைவதற்கான ஆலோசனைகள்


வீட்டில்,நன்பர்கள் குழுவில்,சமூகத்தில்,பணிபுரியும் தொழிலகத்தில், அலுவலகத்தில் என எவ்விடத்திலும் இருக்கும் இருநபர்களுக்கிடையே பிணக்கு அல்லது கருத்தொற்றுமை ஏற்படாத நிலையில் அதனை அப்படியே விட்டுவிட்டால் பிளவுஅதிகமாகி ஒருவருக்கொருவர் எதிரியாகக்கூட மாறிவிட வாய்ப்பு ஏராளமாக உள்ளன அதனை தவிர்த்து எப்படியாவது அப்பிணக்கை தீர்வுசெய்து கருத்தொற்றுமை ஏற்பட வழிவகுக்கவேண்டும்

1 வயதில் இளையோர்மிக்ச்சரியாகவும் வயதில் மூத்தோர் தவறாகவும் செயல்பட வாயப்புஉள்ளது அந்நிலையில் இளையோர் முத்தோர்களுக்கு அவர்களின் அனுபவம் முதன்மைநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த ஒருநிகழ்வை மட்டும் விட்டிட்டு வேறுநிகழ்வுகளுக்கான அனுபவ பட்டறிவை வயதில் மூத்தவர்களிடம் பெறுவதற்கான வழியை கண்டு செயல்படுக

2 ஒருவர் செயலை தவறாக செய்து விட்டார் என தவறு நமக்கு தெரியவரும் போது பலர் இருக்கும்போது அத்தவறை சுட்டிகாட்டுவதற்கு பதிலாக தவறாக செய்தவர் தனியாக இருக்கும் போதுமட்டும் அத்தவறினை சுட்டிகாட்டி சரிசெய்யமுயன்றிடுக

3 இருவர்களின் கருத்துவேறுபாடு ஏற்படும்போது யாராவது ஒருவரின் கருத்தினை மற்றொருவர் ஏற்றுகொள்ளும் மன பக்குவம் வரவேண்டும் இல்லையெனில் மூன்றாவது நபரின் கருத்தினை ஏற்று இருவரும் சமாதானமாக செல்ல முயன்றிடுக

4 இருவர்களின் கருத்துவேறுபாடுஏற்படும் போது இருவர்களின் கருத்துகளிலும் உள்ள சாதக பாதகங்களை பட்டியலிட்டு இருவர்களின் சாதகம் அதிகமாக இருப்பதை மனதில் கொண்டு மற்றவர் விட்டுகொடுத்து ஏற்கும் நிலையை உருவாக்கிடுக

5 எதிரில் இருப்பவரின் நிலையில் நாம் இருந்தால் நாம் என்ன செய்திருப்போம் என நம்முடைய நிலையை சீர்தூக்கி பார்த்து அதற்கேற்றவாறு நடந்துகொள்க 6 மற்றவர்களின் கருத்தை திறந்தமனத்துடன் ஏற்று கொள்ளும் மனநிலைக்கு மாறிடுக

சனி, 27 ஏப்ரல், 2013

தூயஅன்பிற்கு இணையேதுமில்லை


ஒரு ஊரில் இரு சகோதரர்கள் தங்களுடைய பெற்றோர்களை இழந்தாலும் தங்களின் முன்னோர் தமக்காக விட்டுசென்ற நிலத்தில் ஒற்றுமையுடன் பாடுபட்டு தங்களுக்கென தனித்தனி வீட்டினை கட்டிகொண்டு நல்ல நிலைமையில் வசதியுடன் வாழ்ந்துவந்தனர்.

இந்நிலையில் இவர்களின் உழைப்பையும் நல்ல வசதியான வாழ்க்கையும் கண்டு பெண்வீட்டார்கள் நான் நீ என போட்டிபோட்டுகொண்டு வந்தனர்

இருந்தாலும் பெரியவனுக்குமட்டும் திருமணம் ஆனதால் தம்முடைய உடைமைகளை சமமாக பங்கிட்டுகொண்டு தனிக்குடித்தனமாக பிள்ளைகள் மனைவிஎன வாழ்ந்துவந்தான் இளையவன் ஏதோ காரணத்தால் திருமணம் ஆகவில்லை இருந்தாலும் தனியாக மற்றொருவீட்டில் வாழ்ந்தவந்தான்

. இந்நிலையில் இளையவன் அண்ணனுக்கு திருமணம் ஆனதால் மனைவி பிள்ளைகள் என பெரிய குடும்பமாக உள்ளனர் அதனால் அவர்களின் தேவை அதிகமாக இருக்கும் நாம் தனியொருவனாக வாழ்ந்து வருவதால் நம்முடைய தேவை குறைவாகத்தான் இருக்கும் இருந்தாலும் இருவரும் சமமாக பங்கிட்டு கொண்டுள்ளது அநியாயமாகும் அதனால் என்னுடைய பங்கில் என்ஒருவனுடைய தேவைபோக மிகுதியை அண்ணனுக்கு வழங்கிவிடுவோம் என முடிவுசெய்து தன்னுடைய நிலத்தில் விளைந்து வீட்டில் சேமித்து வைத்துள்ள தானியங்களை தன்னுடைய அண்ணனுடைய வீட்டிற்கு அவருடைய தானியத்தை சேமித்துவைக்கும் குதிருக்குள் யாருக்கும் தெரியாமல் தினமும் இரவில் கொண்டுசென்று சேர்த்துவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தான் இளையவன்

இவ்வாறே பெரியவனும் நான் பரவாயில்லை திருமணம் ஆகி மனைவி பிள்ளைகள் என குடும்பமாகிவிட்டேன் பிற்காலத்தில் என்னை கவனித்து கொள்ள மனைவி , பிள்ளைகள் ஆகியோர் இருப்பார்கள் ஆனால் தம்பிக்குஎன தனியாக குடும்பம் இல்லையாதலால் அவனை பிற்காலத்தில் கவனித்துகொள்ள யாருமே இருக்கமாட்டார்கள் அதற்குபதிலாக பணம் பொருள் என நிறைய அவனிடம் இருந்தால் அதற்காகவாவது அவனை யாராவது கவனித்து கொள்வார்கள் . ஆனால் இப்போது சம்மாக பங்கு பிரித்து கொண்டுவிட்டதால் நிறைய பொருளை தம்பியால் சேர்த்துவைக்க முடியாது அதனால் என்னுடைய பங்கில் எங்களுடைய தேவைபோக மிகுதியை தம்பிக்கு வழங்கிவிடுவோம் என முடிவுசெய்து தன்னுடைய நிலத்தில் விளைந்து வீட்டில் சேமித்து வைத்துள்ள தானியங்களை தன்னுடைய தம்பியினுடைய வீட்டிற்கு தானியத்தை சேமித்துவைக்கும் குதிருக்குள் யாருக்கும் தெரியாமல் தினமும் இரவில் கொண்டுசென்று சேர்த்துவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தான் பெரியவன்

இந்நிகழ்வுகள் பலநாட்களாக நடைபெற்றுவந்தன என்னடா நம்முடைய குதிரில் உள்ள விளைபொருட்கள் குறையவேஇல்லையே என இருவரும் ஆச்சரியபட்டனர் இந்நிலையில் இருவரும் ஒருநாள் இரவில் இந்நிகழ்வின்போது எதிர்பாராதவிதமாக சந்தித்து கொண்டனர் இவன் அண்ணா என்றும் அவர் தம்பி என்றும் கட்டி பிடித்து கொண்டுஅழுதனர்

ஆம் தூய அன்பு செலுத்திடும இருவர் தமக்கு இல்லையென்றாலும் தாம் அன்புசெலுத்துபவருக்காக தம்முடைய பொருளையும் கொடுக்கமட்டுமே மனம் வரும் என இதிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம்

புதன், 24 ஏப்ரல், 2013

ஊழியர்களுக்கான பொதுவான ஆலோசனைகள்


1எப்போதும் சக ஊழியர்களுடன் சமாதானமாக இருந்திடுக

2ஒருஊழியரை பற்றி மற்றஊழியர்களிடம் புறங்கூறுதலை தவிர்த்திடுக

3சகஊழியர்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் நம்மால் முடிந்த உதவியை செய்திடுக

4மற்ற ஊழியர்களை பற்றிய கிசுகிசுக்களை ஒலி பரப்பிட வேண்டாம்

5தலைமையை பற்றி குறைகூறும் கூட்டத்துடன் சேராமல் தூரவிலகியருந்திடுக

6 நாம் தவறு செய்திருந்தால் அதற்காக உடன் நேரடியாக மன்னிப்பு கேட்டிடுக. இல்லையெனில் இதுவும் ஒரு கிசுகிசுப்பாக குறைகூறும் கூட்டத்தாரால் ஒலிபரப்பு செய்யபடும் இதனை தவிர்த்திடுக

7 திறந்த மனதுடன் அனைத்து நிகழ்வுகளையும் விவாதித்திடுக

8 அனைத்து நிகழ்வுகளையும் ஆவணபடுத்திடுக

9 குழுவான குறிப்பிட்டதுறைக்கு ஊக்கவிப்பு தொகை வழங்குவதற்கு பதிலாக நிறுவனத்தின் ஒட்டுமொத்தஉற்பத்தி திறன் அடிப்படையில் நிறுவனத்தில் பணிபுரியும் அனைவருக்கும் ஊக்கவிப்பு தொகை வழங்குக

10 சகஊழியர்களுக்கு முன்மாதிரியாக இருந்திடுக

திங்கள், 22 ஏப்ரல், 2013

அடிப்படை நிருவாக விதிகள்


1பணியாளர்களின் தகுதியும் திறமைக்கு ஏற்ப துறைவாரியாக பணியை பகிர்ந்தளித்தல்.இதனால் ஒவ்வொருவருக்கும் அனைத்து பணிகளுக்காகவென பயிற்சியளிப்பதற்கு பதிலாக அவரவர்களின் சிறப்பு தகுதிக்கு ஏற்ப பணியை ஒதுக்கீடுசெய்திடும்போது பணியானது திறனுடன் செயற்படுத்தபட்டு நிறுவனத்தின் உற்பத்தி திறன் உயருகின்றது

2பணியாளர்கள் அனைவருக்கும் தத்தமது கடமைஎன்ன பொறுப்பு என்னவென உணர்ந்து செயல்படுமாறு பொறுப்பை ஒப்படைப்பதால் பணியானது தொய்வின்றி தொடர்ந்து நடைபெறஏதுவாகின்றது

3பணியாளர்கள் நிறுவனத்தின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒழுங்கு கட்டுபாட்டுடன் நடந்துகொள்ளுமாறும் செயல்படுமாறும் பணியாளர்களை கட்டுபடுத்த வேண்டும்

4பணியாளர்களுக்கு இடப்படுகின்ற கட்டளையானது ஒரேமாதிரியாக இருக்கவேண்டும் அதாவது ஒவ்வொரு மேலாளரும் ஒவ்வொரு வகையான உத்திரவை பிறப்பித்தால் நிறுவனத்தின் செயல்நடை பெறாது குழப்பந்தான் மிஞ்சும்

5ஒருதுறைத்தலைவரின் அடுத்ததுறைக்கான பணியாளர்களுக்கு இடப்படுகின்ற கட்டளையானது தொடர்புடைய துறைத் தலைவர்களின் வாயிலாக அதாவது பணியாளர்களுக்கு இடப்படுகின்ற கட்டளையானது மேலிருந்து கீழாக வரவேண்டுமே தவிர குறுக்காக செயல் படுத்தக்கூடாது

6ஒட்டுமொத்த பணியாளர்களின் செயல் ஆனது தத்தமது தனிப்பட்ட நன்மையைவிட நிறுவனத்தின் நன்மையை மட்டும் நோக்கியவாறு இருக்கவேண்டும்

7பணியாளர்களுக்கு போதுமான சம்பளத்தொகை வழங்கபடவேண்டும் அப்போதுதான் அவர்களின் அடிப்படைத்தேவை நிறைவுபெறும் அதனால் பணியாளர்களும் மனம்நிறைவோடு தம்முடைய நிறுவனத்திற்காக பாடுபடுவார்கள் இதனால் தானாகவே அந்நிறுவனத்தின் உற்பத்தி திறன் உயரும்

8அனைத்து பணியாளர்களுக்கும் நிறுவனத்தின் செயல்பாடுகளில் சமமான வாய்ப்பினை யளித்து ஒவ்வொருவரும அந்நிறுவன்த்தின் வெற்றிக்கு தன்னால் முடிந்த செயலை செய்திட அனுமதிக்கவேண்டும்

9ஒரு நிறுவனத்தின் தலைமையிடும் கட்டளையை செயல்படுத்த வேண்டுமே யொழிய ஊழியர்கள் தானே நிறுவன முதலாளிஎன எண்ணி செயல்படக்கூடாது

10மிகச்சரியான நேரத்தில் தேவையான அனைத்துவளங்களும் பணியாளர்களிடம் வழங்கப்பட்டு நிறுவனத்தின் உற்பத்தி தடைபடாமல் செயல்பட உறுதுனையாக இருக்கவேணடும்

11மேலாளர் தம்கீழ் பணிபுரியும் பணியாளர்களை கௌரவமாகவும் சமமாகவும் நடத்திட வேணடும்

12நிறுவனத்தின் மேலாளர் ஆனவர் தம்முடைய நிறுவனத்தில் போதுமான பணியாளர்களும் வளங்களும் இருக்கின்றதா என்றும் பணியானது நிலையாக தொடர்ந்து செயல்படுமாறு அமைந்துள்ளதா வென்றும் அவ்வப்போது சரிபார்த்திடுக

13நன்கு திறமையுடன் பணிசெய்யும் பணியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் பணியின் முன்னேற்றத்திற்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கிடவேண்டும் அதனால் மற்ற பணியாளர்களும் ஊக்கம் பெற்று திறனுடன் பணிபுரிவார்கள்

14 தன்கீழ்பணிபுரியும் பணியாளர்களை குழுவாக உத்வேகத்தோடு செயல்படுமாறு எப்போதும் அவர்களை உற்சாகத்துடன் இருக்குமாறு நடத்திடவேண்டும்

சனி, 20 ஏப்ரல், 2013

எந்தவொரு சிக்கலான சூழ்நிலையிலும் எவ்வாறு மிகச்சரியான முடிவெடுப்பது -புதிர்


நகர்புறத்தில் விளையாடுவதற்கு இடம் எதுவும் இல்லாததால் போக்கிடம் இன்றி தண்டவாளங்கள் பதிக்கபட்ட இரு வழித்தடங்களாக செல்லும் இரயில் பாதையில் சிறு பிள்ளைகள் குழுவாக விளையாடினர் அதில் ஒரு வழிதடம் தற்போது பயன்பாட்டில் உள்ளது மற்றொன்று பயன்பாட்டில் இல்லாதது இருந்தாலும் அவசிய தேவையின்போதுமட்டும் இந்த பாதையை பயன்படுத்தி கொள்ளமுடியம்.

பயன்பாட்டில் உள்ள தடத்தில் நாம் விளையாடினால் அதிகபாதிப்பு நமக்கு ஏற்படும் ஏன் நம்முடைய உயிருக்கே கூட ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது அதனால் பயன்பாட்டில் இல்லாத தடத்தில் நாம் விளையாடுவோம் என்றும் விதி முறைகளையும் அதன் விளைவுகளையும் மற்றபிள்ளைகளிடம் விவரமாக ஒரு பையன் கூறினான் .

பெரும்பாலானவர்கள் அதை ஏற்றக்கொள்ளாமல் விளையாடுவதற்கு நமக்கு இடமேஇல்லை இதில் விதிமுறையென்ன இருக்கின்றது என பயன்பாட்டில் உள்ள தடத்தில் அனைவரும் விளையாடினர் வாதாடிய பையன்மட்டும் பயன்பாட்டில் இல்லாத தடத்தில் தனியாக விளையாடிகொண்டிருந்தான்

அப்போது அந்த வழியாக அதிவேக ஒரு பயனிகள் தொடர்வண்டி ஒன்று வந்துகொண்டிருந்தது கூப்பிடு தூரத்திற்கு அப்பால் தொடர்வண்டிசெல்லும் பாதையை மாற்றிவிடும் லைன்மேன் ஒருவர் இந்த பிள்ளைகளை உடன் வெளியேறும்படி கையசைத்து சைகயால் கூறியதை இந்த பிள்ளைகள் பொருட்படுத்தாது தங்களுடைய விளையாட்டில் மும்முரமாக விளையாடிகொண்டிருந்தனர்

தொடர்வண்டியையும் உடன் நிறுத்தமுடியாது நிறுத்தினால் தொடர்வண்டி விபத்திற்கு உள்ளாகும் இந்நிலையில் அந்த லைன்மேன் ஆனவர் அதிக எண்ணிக்கையில் தற்போது பயன்பாட்டில் உள்ள பாதையில்(விளையாடும் அதிக எண்ணிக்கையில் உயிர் இழப்பை ஏற்படுத்தும்) இந்த அதிவேக பயனிகள் தொடர்வண்டி செல்லுமாறு அனுமதிப்பதா அல்லது தனியாக விளையாடும் பயன்பாட்டில் இல்லாத பாதையில் (ஒரு உயிர் மட்டும் இழப்பு ஏற்படுத்தும் )அதிவேக பயனிகள் தொடர்வண்டியை திருப்பிவிடுவதா என ஒரு நொடிநேரம் தயங்கி பின் சரியான முடிவை தெரிவுசெய்து எந்த தடத்தில் இந்த அதிவேக பயனிகள் தொடர்வண்டியை அனுமதிப்பது.என செயல்பட்டார்

இந்த சிக்கலான சூழ்நிலையில் அந்த லைன்மேன் எந்த முடிவை எடுக்கமுடியும் அதுசரியானதுதானா என அடுத்த வலைபூவில் காண்போம்

புதன், 17 ஏப்ரல், 2013

எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் மனந்தளராமல் அதனை தீர்வுசெய்வதற்கான மாற்றுவழிஎன்னவென சிந்தித்து அதன்படி செயல்படுக


ஒருமுதலாளி மிகப்பெரிய பணசிக்கலில் மாட்டிகொண்டார் அதாவது அவருடைய நிறுவனம் உற்பத்தி செய்த பொருட்கள் விற்பணையாகாமல் கிடங்கில் இருந்தன அதனால் அவருடைய நிறுவனத்திற்கு கடன் கொடுத்தவர்கள் எல்லோரும் உடனே தங்களுடைய கடனை திருப்பும்படி வலியுறுத்தினர் மேலும் பொருள் வழங்கியோர் அனைவரும் தாம் அளித்த பொருளிற்கான தொகையை உடன் வழங்கும்படி வலியுறுத்தினர் மற்ற அன்றாட செலவுகள் வரிசையாக அவர்முன் நின்றுகொண்டிருந்தன.

ஆனால் அந்நிறுவனத்திற்கு வருமானத்திற்கான வழிதான் ஒன்றும் தெரியவில்லை அதனால் தத்தளித்து தடுமாறி கொண்டிருந்தார்

அன்றுமாலை அருகிலிருந்த பூங்கவிற்கு சென்று உயிரை மாய்த்து கொள்ளலாமா அல்லது மஞ்சள் கடுதாசி கொடுத்துவிட்டு தலைமறைவாகி விடலாமா அல்லது ஊரைவிட்டே ஓடிபோய்விடலாமா என பலவாறாக சிந்தித்து நிதிசிக்கலிற்கான வழிஒன்றும் தெரியாமல் மன வருத்ததுடன் உட்காரும் பலகையில் அமர்ந்து என்னசெய்வது என திக்குதெரியாத காட்டில் மாட்டி கொண்டவன்போன்று அமர்ந்திருந்தார்

அந்நிலையில் ஒருவயதானவர் அவர்முன் வந்து அஞ்சற்க நீங்கள் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிகொண்டுள்ளீர்கள் என தெரிகின்றது அதற்கான தீர்வு என்னுடைய கையில் உள்ளது இந்தாருங்கள் என இவருடைய பெயர் என்னவென கேட்டறிந்து இவருடைய பெயருக்கான காசோலை ஒன்றை எழுதி இதனை வைத்துகொண்டு உங்களுடைய பிரச்சினையை தீர்வுசெய்துவிடுக ஒருவருடம் கழித்து இதேநாளில் இதேஇடத்திற்கு வந்து இதனை எனக்கு திருப்பிகொடுத்துவிடுக என கூறிமறைந்தார்

அந்த பெரியவர் மறைந்தபின் அந்த காசோலையை திறந்து பாரத்தபோது அதில் ரூபாய் நூறுஇலட்சத்திற்கான தொகை குறிப்பிட்டிருந்தது தெரியவந்தது மேலும் வந்தவர் ஜிடிநாயடு என்றும் தெரிந்துகொண்டார் உடன் கடன் பிரச்சினை முழுவதும் தீர்ந்தது என மகிழ்வுடன் வீட்டிற்கு சென்று அந்த கசோலையை பெட்டியில் வைத்து பூட்டியபின் அன்றிரவு நிம்மதியாக தூங்கி எழுந்தார் அந்த முதலாளி

மறுநாள் அலுவலகத்திற்கு சென்று தம்முடைய நிறுவனத்திற்கு கடன் கொடுத்தவர்களிடமும் தன்னுடைய நிறுவனம் உற்பத்தி செய்த பொருட்கள் உடன் விற்பணையாகாமல் கிடங்கில் முடங்கி இருப்பதால் பொருள் வழங்கியோர்களிடமும் கடன்வழங்கியோர்களிடமும் அந்த தொகையை திருப்புவதற்கு சிறிது காலஅவகாசம் நீட்டித்து தருமாறு கோரி பெற்றார்

அந்நிலையில் அவருடைய நிறுவனம் உற்பத்தி செய்து தற்போது தயாராக உள்ள அனைத்து பொருட்களையும் தாங்கள் கொள்முதல் செய்திட விரும்பவதாகவும் அதற்கான தொகை முழுவதையும் இன்றைய தேதியில் அவருடைய வங்கிகணக்கில் நேரடியாக மின் பணபறிமாற்றம் வாயிலாக அனுப்பிவைப்பதாகவும் மேலும் ஒருவருடத்திற்கு அவருடைய நிறுவனம் உற்பத்தி செய்திடும் பொருளை வாங்கி கொள்வதாகவும் உடன் அதனை ஏற்று பொருட்களை அனுப்பிவைக்கும்படி அவருக்கு மிகப்பெரிய நிறுவனத்தின் கடிதம் ஒன்று அவருக்கு மின்னஞ்சல்மூலம் கிடைக்கபெற்றது

அதனை தொடர்ந்த இந்த விற்பணையை ஆமோதித்தவுடன் அன்றைய தினமே இவருடைய நிறுவனத்தின் வங்கிகணக்கிற்கு போதுமான தொகை கிடைக்கபெற்றது அதனை அப்படியே நடைமுறைமூலதானமாக பயன்படுத்தி தேவையான மூலப்பொருட்களையும் இதர இடுபொருட்களையும் கொள்முதல் செய்து ஒருவருடம் வாக்குதவறாமல் பொருளை உற்பத்தி செய்து அனுப்புதற்கும் அன்றாட நடைமுறை செலவுகளையும் தீர்வுசெய்தார் பின்னர் காலஅவகாசம் நீட்டித்தவாறு குறிப்பிட்ட காலத்தில் பொருள்வழங்கியோர்களுக்கும் கடனாளர்களுக்கும் கடனை திருப்பினார் தன்னுடைய நிறுவனத்தையும் நன்கு நடத்தினார்

ஆம் எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் மனந்தளராமல் அதனை தீர்வுசெய்வதற்கான மாற்றுவழிஎன்னவென சிந்தித்து அதன்படி செயல்படுவதுதான் ஒருநிறுவனத்தின் தலைமையாளர்களுக்கு நல்ல பண்பாகும் அதனைவிடுத்து கோழைபோன்று தவறான முடிவுசெய்வது சரியன்று பரிந்துரைக்கபடுகின்றது

ஒருநிறுவனத்தின் நல்ல தலைமையாளராக வளர இயலாததற்கான தடைகற்கள்


1நம்முடைய வீட்டில் உள்ள சாளரத்தின் வழியே வெளியுலகை நம்முடைய கண்களால் பார்வையிட்டு அதுதான் உலகம் என மற்றவர்களிடம் சாதிக்க முடியாது அதற்கு பதிலாக நாம் நம்முடைய வீட்டை விட்டு வெளியில் வந்து பரந்த இந்த உலகை பார்த்த பின்னரே உலகின் நிலையை மிகச்சரியாக நம்மால் அறியமுடியும்

அவ்வாறே நமக்கு தெரிந்ததை மட்டும் வைத்துகொண்டு நான்தான் இந்த நிறுவனத்திற்கு ஒரே தலைவன் என மார்தட்டி கொண்டு அதாவது நாம் நம்முடைய துறையில் சிறந்த நிபுணராக விளங்கினாலும் மற்றதுறைகளைபற்றிய அறிவும் சிறிதளவாவது நம்மிடம் சேர்ந்திருந்தால் மட்டுமே ஒரு நிறுவனத்தின் சிறந்த தலைமையாளராக வளரமுடியும்

2 நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்தவுடன் நமக்கு என்ன புரிந்ததோ அதனைமட்டுமே சரியானது என நம்பி செயல்படக்கூடாது நாணயத்தின் மறுபக்கத்தையும் பார்த்தபின்னரே சரியானது எதுவென முடிவுசெய்து செயல்படவேண்டும்

3 பொதுவாக நமக்கு என்னதெரியாது என நாம் எளிதில் ஒத்துகொள்ளமாட்டோம் இது தவறான செயலாகும் நாம் எப்போதும் ஒரு அதிமேதாவியன்று நமக்கு தெரியாதது இவ்வுலகில் எவ்வளவோ உள்ளன அதனால் நமக்கு தெரியாத நிகழ்வுகளும் உள்ளன என ஏற்று கொள்ளும மனபக்குவம் நமக்கு வரவேண்டும்

4மற்றவர்களை விட தான் செய்துள்ள பணி மிகஅதிகம் என எப்போதும் நாம் அனைவரும மதிப்பீடு செய்து கொள்வோம் இதுவும் ஒரு தவறான நடைமுறையாகும் பெரிய நிறுவனத்தின் செயல்பாடுகளில் நம்முடைய செயலும் ஒரு பற்சக்கரத்தின் சிறு அச்சுபோன்றது என மனதிருப்தியை மட்டும் அடைக

5ஒருசெயல் நம்முடைய ஆமோதிப்பிற்காக காத்திருக்கும் வேளையில் அதனை பற்றி நமக்கு தெரியவில்லை எனினும் முதலில் அதனை ஆமோதித்தபின் அதைபற்றி தீரவிசாரித்து அறிந்து கொள்க அவ்வாறு விசாரித்தபின்னர்தான் அதனை ஆமோதிப்பேன் என அடம்பிடித்து தர்மசங்கடமான நிலையை உருவாக்கவேண்டாம்

திங்கள், 15 ஏப்ரல், 2013

மக்கள் தொடர்பு கலையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள்


1மக்களோடு தொடர்புகொள்ளும்போது அவருடைய தனிப்பட்ட பெயரை விளித்து அழைத்து பழகுவது அவர்களோடு நாமும் ஒரு குடும்ப உறுப்பினராக ஆகிவிடுகின்றோம்

2 மற்றவர்கள் நம்முடைய உரையை கேட்டவுடன் தத்தமது செயலை செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கிடுமாறு நம்முடைய உரையாடல் அமையுமாறு பார்த்துகொள்க

3நாம் கூறவிழையும் தகவலை பார்வையாளர் யூகித்து கொள்ளுமாறு விட்டுவிடாதீர்

4நாம்கூறவிழையும் அனைத்து தகவல்களையும் ஒன்றுவிடாமல் நாம் கூறும் செய்தியின் வாயிலாக வழங்கிடுக

5எதிரில் இருப்பவர் ஏதேனும் சொல்ல விழையும் முன்பு முந்திரிகொட்டைபோன்று தவறாக முடிவுசெய்திடவேண்டாம் எதிரிக்கும் ஒருவாய்ப்பளித்து அவர் கூறவருவதை முழுமையாக கூறிமுடித்தபின் நம்முடைய தரப்பு வாதத்தை கூறுக

6 மற்றவர்களை பற்றிய நம்முடைய யூகமானது சாளரத்தின் கண்ணாடி போன்று தெளிவற்றதாகும் அதனால் அந்த கண்ணாடியை அவ்வப்போது துடைத்து சுத்தபடுத்தினால் மட்டுமே தெளிவான காட்சி நமக்கு தோன்றிடும் அதுபோன்று மற்றவர்களை பற்றிய கருத்துகளை அவ்வப்போது தெளிவுபடுத்தி நிகழ்நிலை படுத்திகொள்க

7 நாம், நாமெல்லோரும் என தன்னிலையில் அனைவரையும் ஒருங்கிணைத்து செல்லுமாறு நம்முடைய உரையாடல் அமைந்திடுமாறு பார்த்து கொள்க

8 நாம் கூறவந்த செய்தியின் சாராம்சத்தை மற்றவர்கள் புரிந்துகொண்டார்களா என தெளிவுபடுத்திகொள்க

9 நாம் கூறும் செய்திக்கான பதில் கூறிடுமாறு இருக்க வேண்டுமேயொழிய பதில் செயல்போன்று இருக்ககூடாது

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

பாத்திரத்தை பார்க்காதே பாத்திரத்தில் உள்ள பொருளை பார்


பழைய கல்லூரி மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தங்களின் பழைய கல்லூரி பேராசிரியரை பார்க்க சென்றனர் .அவர்கள் உடன் அனைவருக்கும் ஒரு சிறு தேனீர்விருந்து அளிக்க அப்பேராசியர் விரும்பினார்

அப்போது நடைபெற்ற குழுவிவாதத்தில் பொதுவான நலன் விசாரிப்பிற்கு பின் அவர்கள் அனைவரும் தங்களுடைய பணியிலும் வாழ்விலும் ஏராளமான பிரச்சினைகளை சந்திப்பதால் மனஅழுத்தம் மிக அதிகஅளவில் ஏற்படுகின்றது என்றும் அதிலிருந்து எவ்வாறு மீண்டுவருவது என்றும் தங்களுடைய பழைய கல்லூரி பேராசிரியரிடம் வினவினர்

இந்நிலையில் அப்பேராசியர் ஒரு பாத்திரத்தில் தேனீரும் அதனோடு பீங்கான் ,அலுமினியம் ,வெள்ளி ஆகியவற்றினால் ஆன குவளைகளையும் கொண்டுவந்து வைத்து அவரவர்கள் விருப்ப பட்ட குவளைகளில் தேனீரை ஊற்றிகொண்டு அருந்தலாம் என கூறினார்

பழைய கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் ஆவலாய் பரந்து சென்று வெள்ளி, பீங்கான் ஆகியவற்றினால் ஆன குவளைகளை மட்டும் தெரிவு செய்து அவைகளில் தேனீரை ஊற்றி அருந்த ஆரம்பித்தனர் ஆனால் யாரும் அலுமினியத்தாலான குவளையை கைகளால் தொடக்கூட இல்லை .

உடன் அப்பேராசியர் பார்த்தீர்களா மாணவர்களே நாம் அனைவரும் பாத்திரத்தில் உள்ள ஒரேமாதிரியான தேனீரைத்தான் அருந்த விருக்கின்றோம் ஆனால் நாம் அனைவரும் அந்த தேனீரை வைத்து குடிப்பதற்கான குவளையை மட்டும் மிகச்சிறந்ததாக இருக்கவேண்டும் என விரும்பி அதற்காக அல்லல்படுகின்றோம் .

ஆயினும் சாதாரண அலுமினிய குவளையை நாம்யாரும் தொடவேஇல்லை இதுதான் நம்முடைய மனஅழுத்தத்திற்கு காரணம் ஆகும். அதாவது சிறந்த குவளை நமக்கு கிடைக்காது போய்விடுமோ என அனைவரும் தேனீரை குடிப்பதைபற்றி கவலைபடாமல் அதை தாங்குகின்ற குவளை சிறந்ததாக இருக்கவேண்டும் என முட்டிமோதி அல்லாடுகின்றோம் இதனால் தான் நமக்கு மனஅழுத்தம் ஏற்படுகின்றது கூறினார் .

சனி, 13 ஏப்ரல், 2013

எதனையும் தவறாக முடிவுசெய்து ஏராளமான பொருள் நட்டமும் மனவருத்தமும் நமக்கு ஏற்படுத்தி கொள்ளாதீர்


இளம் பணக்காரர் ஒருவர் காலையில் எழுந்து தான் புதியதாக வாங்கிவைத்துள்ள மகிழ்வுந்தை துடைத்து சுத்தபடுத்தி கொண்டருந்தார் அப்போது அவருடைய ஐந்து அல்லது ஆறு வயது மகன் அங்குவந்து அந்த மகிழ்வுந்தின் மறுபுறத்தில் சிறு கல்லால் ஏதோ கிறுக்கினான்

இதை கண்ணுற்று அவர் அதிக கோபமுற்று அவருடைய மகனை தூக்கிசென்று அம்மகனின் கைகளை அருகிலிருந்த தூனில் இந்த கைதானே புதிய மகிழ்வுந்தில் கிறுக்கியது என பலமுறை மோதி நசுக்கினார்

உடன் அவருடைய மகனின் கைவிரல்கள் நசுங்கி இரத்தம் பீரிட்டு வந்தது அதனால் அருகிலிருந்த மருத்து வமனைக்கு அழைத்து சென்று பலஆயிரகணக்கான ரூபாய் செலவுசெய்து காயத்திற்கும் விரல்முறிவிற்குமான தகுந்த சிகிச்சையை அளித்தார்

அப்போது அவருடைய மகன் அப்பா என்னுடைய விரல்கள் உங்களுடைய விரல்கள்போன்று எப்போது வளர்ந்து வரும் அப்பா என அமைதியாக அப்பாவியாக வினவினான்.

பின்னர் அவருடைய வீ்ட்டிற்கு அவர்கள் இருவரும் திரும்பி வந்து தன்னுடைய புதிய மகிழ்வுந்தை சுற்றி பார்த்தார் அதில் அவருடைய மகன் அப்பா நான் உங்களை என்றென்றும் நேசிக்கின்றேன் என்று கிறுக்கியிருந்ததை கண்ணுற்றார்

ஆம் நாம் நம்முடைய வாழ்வில் எந்த வொரு நிகழ்வையும் அமைதியாக அதனைபற்றிய முழுவிரங்களையும் தெரிந்துகொள்ளாமல் உடனடியாக நாம் என்ன யூகிக்கின்றோமோ அதுவாகத்தான் அது இருக்கும் என தவறாக முடிவுசெய்து அதனால் ஏராளமான பொருள் நட்டமும் மனவருத்தமும் நமக்கு ஏற்படுத்தி கொள்கின்றோம் .

புதன், 10 ஏப்ரல், 2013

நம்முடைய பார்வைக்கேற்ப நடைபெறும் செயல்களும் தோன்றும்


புதுமன தம்பதிகள் ஒரு புதியதான வீட்டில் குடியேறினார்கள் .மறுநாள் காலையில் அவர்கள் எழுந்து காலைக்கடன்களை முடித்தபின் அவர்களுடைய வீட்டின் சாளரத்தின் வாயிலாக அடுத்தவீட்டில் துணிகளை துவைப்பதும் அதனை கொடியில் காயவைப்பதையும் அந்த புதுமனத்தம்பதிகளில் இளம் பெண்மனி மட்டும் பார்த்து விட்டு தன்னுடைய கணவனிடம் பார்த்தீர்களா நல்ல தரமான சோப்பினை துணிகளை துவைப்பதற்கு பக்கத்துவீட்டுகாரர்கள் பயன் படுத்தவில்லை அதனால் அவர்கள் துவைத்ததுனிகளும் அழுக்காகவே உள்ளன என கூறினாள் அவளுடைய கணவனும் அதற்கான பதில் ஒன்றையும் கூறவில்லை

இவ்வாறு தினமும் பக்கத்திவீட்டார்களின் துனிதுவைப்பதை பற்றி குறைகூறிக்கொண்டே இருந்தாள் அந்த இளமங்கை அவளுடைய கணவனும் அதற்காக பதிலேதும் கூறாமல் இருந்துவந்தான்

சிறிது நாள்கழித்து அதே இளம்பெண் ஏங்க இங்கு வாங்களேன் பக்கத்து வீட்டம்மா இன்று நல்ல தரமான சோப்பினை பயன்படுத்தியிருப்பார்கள் போலிருக்கின்றது அதனால் அவர்கள் துவைத்து கொடியில் காயவைத்த துனிகளும் பளிச்சிடுகின்றன என மகிழ்ச்சியுடன் கூறினாள்.

அதெல்லாம் ஒன்றுமில்லை நம்முடைய வீட்டின் சாளரத்தின் கண்ணாடி அழுக்காக இருந்தது அதனால் தினமும் நீ பார்த்து அந்த துணிகளில் அழுக்கு போகவில்லை என கூறினாய்

நான் இன்று நீ எழுவதற்கு முன்பு நேரத்தோடுஎழுந்து நம்முடைய வீட்டின் சாளரத்தின் கண்ணாடியை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தமாக துடைத்துவிட்டேன் அதனால்தான் இவ்வாறு தெரிகின்றது என அந்த கணவனும் தன்னுடைய மனைவிக்கு பதில்கூறனான்

ஆம் நடைபெறும் செயல்கள் என்னவோ ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன ஆனால் நாம் நம்முடைய பார்வை எவ்வாறு உள்ளதோ அவ்வாறே நடைபெறும் செயலும் நமக்கு புலப்படும் என்பதே உண்மையாகும்

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

பணியாளர்களின் உற்பத்தி திறனை உயர்த்த அவர்களின் திறனை புத்தாக்கம் செய்து மேம்படுத்துக


ஒரு செல்லிடத்து பேசியினுடைய பேட்டரியின் திறனை மறுமின்னேற்றம் செய்வதைபோன்று அவ்வப்போது பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி பணியாளர் களினுடைய திறனை மேம்படுத்தி உற்பத்தி திறனை உயர்த்துக.

பொதுவாக நம்முடைய கையிலிருக்கும் செல்லிடத்து பேசியானது அதிலுள்ள பேட்டரியின் மின்அளவை திரையில் காண்பித்துகொண்டே இருக்கும் அம்மின்அளவு குறிப்பிட்ட சதவிகிதத்திற்கு குறைவாக இருக்கும்போது நாம் அதனை மறுமின்னேற்றம் செய்தால் மட்டுமே மீண்டும் அது தொடர்ந்து நம்முடைய செல்லிடத்து பேசியை செயல்பட அனுமதிக்கும்

அதுபோன்று ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் உற்பத்தி திறன் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும் இந்நிலையில் அவர்களை ஊக்கபடுத்தி அவர்களுக்கு தேவையான புத்தாக்க பயிற்சியை அவ்வப்போது அளித்தால் நாம் எந்தஅளவிற்கு இதனை நடைமுறைபடுத்துகின்றோமோ அந்தளவிற்கு அவர்களின் உற்பத்தி திறன் உயர வாய்ப்பு உள்ளது

1.நேரடி களபயிற்சி, இணையத்தின் மூலம் பயிற்சி ,வகுப்பறை பயிற்சி கல்விசுற்றுலா பயிற்சி என ஏதாவதொருவகையில் அவ்வப்போது பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சியளித்திடுக

2 தொழில்நுட்பகுழுவின் கூட்டமைப்பில் பணியாளர்களை உறுப்பினர்களாக சேருவதற்கு ஊக்கபடுத்தி அதற்கான ஆண்டுகட்டணம் போன்றவற்றை நிறுவனமே செலுத்துமாறு அனுமதிப்பதால் உறுப்பினர்களுக்கு தத்தமது தொழில்சார்ந்த புதியதொழில்நுட்பங்கள் வசதிகள் போன்றவற்றை அறிந்துகொண்டு அதனை நம்முடைய நிறுவனத்தில் செயல்படுத்திடுவார்கள்

3 வார இறுதியில் பணியாளர்கள் அனைவரையும் அவர்களுடைய குடும்பத்தாருடன் நேரடியாக வரவழைத்து ஒன்றுகூடிடுமாறுசெய்து அவர்களுக்கு இரவு விருந்து அளித்தல் விளையாட்டுபோட்டி நடத்தி பரிசளித்தல் நாட்டியம்,நாடகம்,பாட்டு போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்

4 நல்ல திறமையுடன் அதிக உற்பத்தி திறனை வழங்கும் பணியாளர்களை ஊக்கவிப்பதற்காக அவர்களை பாராட்டி ரொக்கபரிசளித்தல் சான்றிதழ் வழங்குதல்

5 பணியாளர்களின் தொழில்நுட்ப அறிவைமேம்படுத்துவதற்கு ஏதுவாக அவ்வாறான தொழில்நுட்பவல்லுனர்களை அழைத்து அவர்களின் சொற்பொழிவு கருத்தரங்கம் போன்றவற்றை நடத்துதல்

6 பணியாளர்கள் அனைவரையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒன்றுகூடசெய்து அக்கூட்ட்த்தில் பணியாளர்கள் அனைவரும் தத்தமது சொந்த அனுபவங்களையும் அவர்கள் சந்தித்த சிக்கல்களையும் அதற்கு அவர்கள் எடுத்த முடிவுகளையும் அனைத்து பணியாளர்களின் முன்பு விளக்கி கூறுமாறு செய்தல்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...