வியாழன், 30 ஏப்ரல், 2020

புதிய தலைமை செயல்இயக்குநரை தேர்வுசெய்தல்


வெற்றிகரமாக செயல்படும் ஒரு நிறுவனத்தின் தலைமை செயல்இயக்குநர் வயதாகிவிட்டதால் தனக்கு பின்னர் அந்நிறுவனத்தை தொடர்ந்து வெற்றிபாதையில் கொண்டுசெல்வதற்கான புதிய தலை மை செயல்இயக்குநரை தனக்கு கீழ் பணிபுரியும் செயல்திறனுடைய இளைஞர் களிலிருந்த ஒருவரை தேர்வு செய்யவிரும்பினார் அதற்காக புதிய வித்தியாசமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார் அதாவது தனக்கு கீழ் பணிபுரியும் துடிப்புள்ள இளைஞர்கள் அனைவரையும் ஒரு கூட்டரங்கில் ஒன்று சேர்த்து அவர்களிடம் "இளைஞர்களே உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு மரத்திற்கான விதை யும் அதனை முளைக்கவைத்து வளரச்செய்வதற்கான மண் தொட்டியும் வழங்கப்படும் நீங்கள் அனைவரும் இவ்விரண்டினையும் கொண்டு சென்று தத்தமது வீடுகளில் மண்தொட்டியை வைத்து அதில்அந்த மரக்கன்றின் விதையை ஊன்றி தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்திடவேண்டும் ஒருவருடம் கழித்து அனைவரும் அவரவர்களுக்கு வழங்கிய மண்தொட்டியை அதில் வளர்ந்துள்ள மரச்செடிகளுடன் இதே கூட்டரங்கிற்கு எடுத்துகொண்டுவந்து சேரவேண்டும் அப்போது நான் அவைகளை பார்வையிட்டு அதனடிப்படையில் உங்களுள் ஒருவரை எனக்கு அடுத்த இந்த நிறுவனத்தின் செயல்இயக்குநராக தெரிவுசெய்து நியமனம் செய்தபின் நான் பணிஓய்வு பெற்றவிடுவேன் சென்றுவாருங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்" என வாழ்த்தி அனுப்பிவைத்தார் அவர்களுள் அன்பு எனும் இளைஞனும் மிகவும் ஆர்வமாக தன்னுடைய வீட்டிற்கு சென்று தன்னுடைய துனைவியாரிடம் விவரங்களை கூறி இருவரும் ஆர்வமாக அந்த விதையை அந்த பூந்தொட்டியில் போதுமான எருக்களை இட்டு தண்ணீர் ஊற்றி சூரிய ஒளி படும் இடத்தில் வைத்து பராமரிப்பு செய்துவந்தனர் அந்த இளைஞனுடன் பணிபுரிந்த மற்ற நண்பர்களும் விதையானது முளைத்துவந்ததையும் செடியாக வளர்ந்து வருவதையும் பற்றி தினந்தோறும் தேநீர் இடைவேளையின்போது விவாதித்து வந்தனர் ஆனால் அன்பு என்பவரின் வீட்டின் மண்தொட்டியில் மட்டும் மரக்கன்று எதுவும் முளைக்கவும் இல்லை செடியாக வளரவும் இல்லை ஆயினும் தினமும் அந்த மண்தொட்டிக்கு தண்ணீர் ஊற்றுவது வேறு புல்பூண்டுகள் எதுவும் முளைக்காமல் பார்த்து கொள்வது சூரிய ஒளி படும்படி மிகச்சரியாக அந்த மண்தொட்டி உள்ளதாவெனதினமும் சோம்பலில்லாமல் பார்த்து பராமரித்து வந்தார் ஆறுமாதமானது அனைத்து அலுவலக நண்பர்களும் தத்தமது மரக்கன்றுகல் மண்தொட்டிகளில்பெரிய செடிகளாக வளர்ந்து விட்டதாக அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர் ஆனால் அ ன்புஎன்பவரின்மண்தொட்டியில் மட்டும் விதை முளைக்காமலேயே இருந்துவந்தது அதனால் அதுபற்றி நண்பர்கள் யாரிடமும் தகவல் எதுவும் தெரிவிக்காமல் மிகவும் மனவருத்ததுடன் ஆனால் தினமும் பார்வையிடுதல் தினசரி பராமரிப்பு பணிகளைசெய்தல் ஆகியன தவறாமல் மிகவும்பொறுப்புணர்வுடன் செய்துவந்தார் ஒருவருடம்முடிந்து அனைவரும் குறிப்பிட்டநாளில் அதே கூட்டரங்கிற்கு தாம் வளர்த்துவந்த மரச்செடிகளுடனான மண்தொட்டிகளுடன் வந்துசேர்ந்தனர் ஆனால் அன்பு எனும் இளைஞன் காலியான மரச்செடி ஏதும் முளைக்காத மண்தொட்டியை கூட்டரங்கிற்கு எடுத்துவந்தபோது அனைவரும் அன்புஎனும் இளைஞனையும் அவருடைய காலியான மண்தொட்டியையும் பார்த்து கிண்டலும் கேலியுமாகபேசி எள்ளிநகையாடினர் அதனால் அ ன்பு எனும் இளைஞன் மிக அதிக மனவருத்ததுடன் கூட்டரங்கில் கடைசி வரைசையில் தன்னுடைய காலியான மண்தொட்டியுடன் நின்று கொண்டிருந்தார் இந்நிலையில் நிறுவனத்தலைவர் கூட்டரங்கிற்கு வந்துசேர்ந்தார் "நண்பர்களே! இன்று உங்களுள் ஒருவரைஎனக்கு பதிலான செயல்இயக்குநராக நியமனம் செய்யவிருக்கின்றேன் அனைவரும் தயாராக இருக்கின்றீர்களா? நான் பார்வையிடவரலாமா ?"என அனுமதி கோரினார் .அனைவரும் கோரஸாக "வாருங்கள் ஐயா !"என அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் கூச்சலிட்டனர் ஆனால் அ ன்புஎன்பவர்மட்டும் மிகவும் அமைதியாக இன்றோடு நம்முடைய கதை முடிந்தது நம்மை நம்முடைய பணியிலிருந்து வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள் என பயந்து கொண்டு கடைசி வரிசையில் யாருடைய பார்வையும் தன்மீது படாதவாறு நின்றுகொண்டிருந்தார் அந்த நிறுவனத்தலைவர் அருகிலிருந்த தன்னுடைய நேர்முகஉதவியாளரை அழைத்து கூட்டரங்கில் கடைசியாக பதுங்கி நின்றுகொண்டிருந்த அன்பு என்பவரை மரச்செடிஎதுவும்முளைக்காத அவருடைய காலியான மண்தொட்டியுடன் மேடைக்கு வருமாறு கேட்டுகொண்டார் அன்பு என்பவரும் தன்னுடைய மண்தொட்டியில் மரச்செடி முளையாததால் பயந்து கொண்டு கடைசியில் நின்றிருந்தை கண்டுபிடித்து நம்மை மட்டும் மேடைக்கு அழைக்கின்றாரே என்ன செய்யப்போகின்றாரோ என மனதிற்குள் மிகுந்தபயத்துடன் ஆனால் தனக்கிட்ட கட்டளையை தான் சரியாக பின்பற்றி வந்துள்ளேன் என்ன ஆனாலும் பார்த்து கொள்ளலாம் என மேடைக்கு வந்துசேர்ந்தார் உடன் அந்த நிறுவனத்தின் செயல்இயக்குநர் "வாருங்கள் அன்பு அவர்களே ! இந்த நிறுவனத்தின் வருங்கால் செயல்இயக்குநரே வாருங்கள் எனக்கு அருகில் உள்ள இந்த இருக்கையில் அமருங்கள் அப்படியே புதிய செயல்இயக்கநர் என்ற பதவியையும் ஏற்றுகொள்ளுங்கள் !"என வரவேற்புஉரையை அறிவிப்பு செய்ததும் இதுவரையில் அன்பு எனும் இளைஞனை கிண்டலும் கேலியும் செய்த அனைவரும் மிகவும் ஆச்சரியத்துடன் எவ்வாறு அன்புஎன்பவர் புதிய செயல்இயக்குநராக தேர்வுசெய்யப்பட்டார் என மிகவும் அமைதியாக அமர்ந்துவிட்டனர் "நண்பர்களே! நான் கடந்த ஆண்டு உங்கள் அனைவருக்கும் இதேநாளில் இதே கூட்டரங்கில் நன்கு வ ருத்தெடுக்கப்பட்ட முளைக்காத விதைகளைத்தான் அனைவருக்கும் மண்தொட்டியுடன் கொடுத்தேன் மற்ற அனைவரும் அந்த முளைக்காதவிதைக்கு பதிலாக அவரவர் விருப்பபடியான வேறு மரச்செடிகளின் விதையை அந்த மண்தொட்டியில் ஊன்றி மரச்செடியாக கொண்டுவந்துள்ளீர்கள் ஆனால் இந்த இளைஞன் அன்புஎன்பவர் மட்டும் நான் கொடுத்த முளைக்காத விதையை நன்றாக பராமரித்து அப்படியே அந்த விதையை நான் கொடுத்த நிலையில் என்னிடம் கொண்டுவந்து ஒப்படைத்துள்ளார் அதனால் இவர்தான் எனக்கு பின்னர் நான் இதுவரை இந்த நிறுவனத்தினை வெற்றிபாதையில் கொண்டுவந்தவாறு காப்பாற்றி மீண்டும் நான் விரும்பியபோது என்னிடம் திரும்ப ஒப்படைப்பார் அதனால் அவரையே நான் எனக்கு பின்னரான இந்த நிறுவனத்தின் செயல்இயக்குநராக தெரிவுசெய்தேன்" என அன்பு எனும் இளைஞனை தான் தெரிவுசெய்தஉண்மையை போட்டுடைத்தார் .

புதன், 29 ஏப்ரல், 2020

சேவையாளர்களுக்கும் சரக்கு சேவைவரியின் கீழான கலவைதிட்டம்


இதுவரையில் ஒரு சிறுதொழில்நிறுவனமானது தான் உற்பத்தி செய்திடும் பொருளை கொண்டு ஈட்டிடும் விற்பனைவருமானமானது ஆண்டு ஒன்றிற்கு ரூ.1.5கோடிக்கு மிகாமல் இருந்தால் இந்த சரக்கு சேவைவரியின் கீழான கலவைதிட்டத்தினை(Composition Scheme) தெரிவுசெய்து கொண்டு பல்வேறு வரிவிகிதங்களுக்கு பதிலாக அவைகளுள் ஏதேனும் ஒருவரிவிகிதத்தை மட்டும் அனைத்திற்குபின்பற்றி வரிசெலுத்தினால் போதும் அவ்வாறே வரிசெலுத்தியதற்கான அறிக்கை அரசிற்கு காலாண்டிற்கு ஒருமுறை சமர்ப்பித்தால் போதும் என்ற வசதி பொருட்களின் உற்பத்திசெய்பவர்களுக்கு மட்டும்இருந்துவந்தது.ஆயினும் சேவை வழங்குபவர்கள் இந்த மத்திய சரக்கு சேவைவரியின் கீழான கலவை திட்டத்தினை தெரிவுசெய்யமுடியாத நிலையிலிருந்துவந்தனர் தற்போது 01.04.2019 முதல் பொருட்களின் உற்பத்திமட்டுமல்லாது பல்வேறு சேவைகளை வழங்கிடும் சேவையளர்களும் விருப்பபட்டால் இந்த சரக்கு சேவை-வரியின் கீழான கலவைதிட்டத்தை தெரிவுசெய்து பயன்படுத்தி கொள்ளலாம் சரக்கு சேவைவரியின் கீழான கலவைதிட்டம் என்றால் என்ன? என்ற கேள்வியும் அதுபற்றி விரிவாக விளக்கமளித்தால் மட்டுமே அது பயனுள்ளதாக இருக்குமா இல்லையா-வென முடிவுசெய்து தெரிவுசெய்யமுடியும் என்ற சந்தேகமும் இங்கு கண்டிப்பாக நம்மனைவரின் மனதிலும் எழும் நிற்க சிறுதொழில் நிறுவனங்களில் நுகர்வோர்களுக்கான பொருட்களைஉற்பத்தி செய்பவர் , அந்த பொருட்களை கட்டுகளாக கட்டுபவர் , அந்த கட்டுகளை நுகர்வோருக்கு கொண்டு செல்வோர் என்றவாறு ஒரே வருமானவரிகணக்குஎண்ணின்கீழ் பணிகளை தனித்தனியாக செய்திடுவர் அதேபோன்றே கணினிமென்பொருள் உருவாக்குபவர், அதனை பயனாளரின் கணினியில் நிறுவுகைசெய்பவர் , பின்னர் அந்த பயன்பாட்டில் ஆண்டுமுழுவதும் சிக்கல் எழுந்தால் சரிசெய்து பராமரிப்பவர் என ஒரே வருமானவரி கணக்குஎண்ணின்கீழ் பணிகளை தனித்தனியாக செய்திடுவர் அதனை தொடர்ந்து அந்தந்தபணிகளுக்கென தனித்தனி வரிவிகிதங்களில் சரக்கு சேவைவரியாக அரசிற்கு செலுத்தவேண்டியுள்ளது இதனால் அதிக காலவிரையமும் பொருட்செலவுகளும் ஏற்படுகின்றன ஒரு சிறுதொழில்நிறுவனமானது தாம் வழங்கிடும் சேவைகளினால் ஈட்டப்படும் விற்பனைவருமானம்ஆண்டு ஒன்றிற்கு ரூ.20 இலட்சத்திற்குமிகாமல் இருந்தால் இந்த சரக்கு சேவைவரியின் கீழான கலவைதிட்டத்தினை தெரிவுசெய்து கொண்டு பல்வேறு வரிவிகிதங்களுக்குபதிலாக ஒரேயொருவிகிதத்தை மட்டும் அனைத்திற்கும் பின்பற்றி வரிசெலுத்தினால் போதும் (இந்நிலையில் ஆண்டு ஒட்டுமொத்த விற்பனை வருமானம் என்பது மாநிலங்களுக்குள்ளான விற்பனை , விரிவிலக்கு விற்பனை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி வருமானம், reverse charge வசதி பெற்றவை நீங்கலாக கணக்கிடவேண்டும்) அவ்வாறே வரிசெலுத்தியதற்கான அறிக்கை அரசிற்குகாலாண்டிற்கு ஒருமுறை சமர்ப்பித்தால் போதும் என்ற வசதி 01/04/2019முதல் அனுமதிக்கப்படுகின்றது .ஆயினும்மத்திய சரக்கு சேவைவரிசட்டம் பிரிவு 10(1) a. 10(1) b. ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருசில நிபந்தனையின்கீழ் இந்த வசதி அனுமதிக்கப்படுகின்றது உதாரணமாக சசேவரியின் கீழ் பதிவுபெறாத நபரின் விற்பனைவருமானமானது நிதியாண்டில்15ஜீலை அன்று ரூ.20.இலட்சத்திற்கு-மேல் உயரும்போது கண்டிப்பாக சசேவ கீழ் பதிவுசெய்துகொள்ளவேண்டும் அதனை தொடர்ந்து அவர்விருப்பபட்டால் ஆண்டு ஒன்றிற்கு விற்பனைவருமானம் ரூ.50 இலட்சம்வரை சேவைவரியின் கீழான கலவைதிட்ட வசதியை தெரிவுசெய்து கொள்ளலாம் அதாவது பதிவுசெய்திடும்15ஜீலை அன்று ஆண்டு விற்பணைவருமானம் ரூ.20.இலட்சமாக இருந்து சரக்கு சேவைவரியின் கீழான கலவைதிட்ட வசதியை தெரிவுசெய்து கொண்டு பயன்படுத்தி வரும்போது மிகுதி நிதியாண்டையும் சேர்த்து ஆண்டின் ஒட்டுமொத்த விற்பனைவருமானம் ரூ.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும் ஆயினும் அதேஆண்டின் பிப்ரவரி 20 இல் மிகுதி ரூ.30.(50-20) வரையிலும் வருமானமும் அதன்பிறகு மிகுதிநிதியாண்டின் மார்ச்சு 31வரை ரூ 50 இலட்சத்தினை தாண்டி உயரும்போது இந்த வசதியைபெற முடியாது என்றசெய்தியை மனதில் கொள்க . ஒட்டுமொத்தமாக ஒரு நிதியாண்டிற்கு சேவைகளினால் ஈட்டப்படும் ஆண்டு வருமானமானது ரூ.50 இலட்சத்திற்கு மிகாமல்இருக்கவேண்டும் மேலும் பெட்ரோல் டீசல் போன்ற சசேவகீழ் கொண்டுவரப்படாத பொருட்களை வழங்கிடும் பணியை மேற்கொள்ளகூடாது அதுமட்டுமல்லாது ஒரே மாநிலத்திற்குள் மட்டும் சேவைகளை வழங்குபவர்கள் அதனோடு இந்த வசதியைபெறமுடியாது நிரந்தர இந்திய குடியுரிமைபெறாதவர்களும் இந்திய குடியுரிமையே பெறாதவர்களும் இந்த வசதியை பெறமுடியாது மிகமுக்கியமாக ஐஸ்கிரீம், பான் மசாலா, புகையிலை பொருட்கள் போன்றவைகளை கையாளுபவர் இந்த வசதியை பெறமுடியாது கூடுதலாக ஒரே வருமானவரி கணக்கு எண்ணின்கீழ் வெவ்வேறு பணிகளை செய்திடுபவர் ITC எனும் முந்தைய சசேவரிசெலுத்தியதை கழித்து கொள்ளமுடியாது இவைமட்டுமல்லாது மின்வணிகம் செய்பவர் இந்த வசதியை பெறமுடியாது இந்த வசதியின் படி சேவை வழங்குவதற்காக தனித்தனியாக விற்பனை பட்டியல் தயார்செய்வதற்கு பதிலாக சேவையை வழங்கியதற்கான பட்டியலை மட்டும் தயார்செய்து வழங்கினால் போதும் மேலும் அந்த பட்டியில் ‘taxable person paying tax in terms of notification No. 2/2019-Central Tax (Rate) dated 07.03.2019, not eligible to collect tax on supplies’. என்ற வரியை கண்டிப்பாக குறிப்பிடவேண்டும் பொதுவாக இந்த வசதியை தெரிவுசெய்திடும் சேவை வழங்குபவர் தான் வழங்கிடும் சேவைகளுக்கு 6% மட்டும் வரிசெலுத்தினால் போதும் உணவுவிடுதி தங்கும்விடுதி ஆகிய சேவைகளை வழங்கிடும் சேவையாளர் 5% இந்த திட்டத்தின்கீழ் வரிசெலுத்தினால் போதும் இதற்கான அறிக்கை சமர்ப்பிப்பதற்காக படிவம் எண்GST CMP- 01 அல்லது GST CMP- 02. ஆகியவற்றை பயன்படுத்திடவேண்டும்

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

LLP எனும் கூட்டாண்மை நிறுவனங்களும் உற்பத்தி துறையில்ஈடுபடமுடியும்


இந்தியாவில் LLP என சுருக்கமாக அழைக்கப்பெறும் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை எனும் கருத்தமைவு 2008 ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டம்2008 (Limited Liability Partnership Act, 2008 )இன் வாயிலாக அறிமுகபடுத்தப்பட்டது. இதில் கூட்டாண்மையின் நெகிழ்வுதன்மையும் நிறுமங்களின் வரையறுக்கப்பட்டபொறுப்பும் ஒருங்கிணைந்து கிடைக்கின்றது. அதனைதொடர்ந்து தனியார் நிறுமங்கள் பங்குசந்தையில் பட்டியலிடப்படாத நிறுமங்கள் போன்றவை தங்களுக்குள் ஒன்றிணைந்து LLP எனும் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுவனங்கள் ஏராளமாக உருவாக்கிகொண்டன. ஆனால் இந்தியாவில் இவ்வாறான LLP நிறுவனங்களானவை உற்பத்தி தொழிலகம் தவிர்த்த மிகுதி 12,000வகையான வியாபார பணிகளில் அல்லது சேவைகளில் மட்டுமே ஈடுபடுவதற்காக இதுவரை அனுமதிக்கப்பட்டுவந்தது. அதாவது இந்தLLP நிறுவனங்கள் உற்பத்தி துறையில் மட்டும் ஈடுபடமுடியாது எனும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வந்தது இந்நிலையில் நிறுமச் செயலர்களின் மாமன்றமானது உலகமுழுவதும் ஒரேகுடையின் கீழ் என்ற கருத்தமைவை நோக்கி அனைத்து வியாபாரநடவடிக்கைகளும் முன்னோக்கி சென்று கொண்டிருக்கும்போது LLP நிறுவனங்களை உற்பத்தி துறையிலும் அனுமதித்திடவேண்டும் என நிறுமங்களின் விவகாரத்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் இதுவரையில் இருந்துவந்த உற்பத்தி தொழிலகத்தை துவங்கி செயல்படுத்தகூடாது என்ற கட்டுப்பாடு தற்போது தகர்க்கப்பட்டு ஏப்ரல்17,2019 முதல்LLP நிறுவனங்களும் உற்பத்திதொழிலகம் அதனுடைய துனைதொழிலகம் ஆகிய பணிகளை செயற்படுத்திடுவதற்காக பதிவுசெய்து கொள்ளலாம் எனும் அனுமதியை வழங்கியுள்ளது என்ற இனிய புதிய செய்தியை தெரிந்து கொள்க.

திங்கள், 27 ஏப்ரல், 2020

வரிவரவு , வரிசெலுத்து-வதற்கான மாதவாரியான அட்டவணையாக காணும் புதிய செயலியொன்று அறிமுகம்


பொதுவாக சசேவரி செலுத்துவதற்கான வரிபொறுப்பிற்கானGSTR-1எனும் படிவம் அவ்வாறே வெளிநாட்டிற்கு ஏற்றுமதிசெய்திடும்போதும் வரியேயில்லாது அனுப்பிடும்போதும் வழக்கமான பொருளை அல்லது சேவையை பெறும்போதும் நம்முடைய கணக்கில் சசேவரி செலுத்திய வரிவரவுக்கான GSTR3B எனும் படிவம் , ஒரு வியாபாரநிறுவனத்திலிருந்து மற்றொரு வியாபார நிறுவனத்திற்கு B2B (business to business) என்றவாறு விற்பணை பட்டிவாயிலாக பொருட்களை அல்லது சேவைகளை பரிமாறிக் கொள்ளும்போது அதற்காக செலுத்த போகும் வரிவரவை (input tax credit (ITC))குறிப்பிடுவதற்கான GSTR2A எனும் படிவம் என்றவாறு சசேவரி செலுத்துவது, சசேவரி உள்ளீட்டு வரிவரவு, செலுத்தப்போகும் உள்ளீட்டு வரிவரவு ஆகிய படிவங்களை தனித்தனியாக நாம் ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு காலாண்டிற்கும் இந்த சசேவஇணையதளத்தில் இதுவரையில் நாம் சமர்ப்பித்திடுவோம் . பொருளை அல்லது சேவையை பெறுபவரும் வழங்குபவரும் இந்த படிவங்களை அவ்வாறு தனித்தனியாக சமர்ப்பித்திடும்போது அவைகளை ஒன்றுகொன்று ஒப்பீடு செய்து சரிபார்ப்பது என்பது மிகச்சிரமமானபணியாகும் அவ்வாறான சிரமத்தை தவிர்த்து எளிதாக்கும் பொருட்டு GSTஇன் இணையதள பக்கத்தில் இவைகளை ஒருங்கிணைத்து நாம் கோரும் வரிவரவு வரிசெலுத்து-வதற்கான விவரங்களைமாதவாரியாக ஒரேயொரு அட்டவணையாக காண்பதற்கான புதிய செயலியொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த அட்டவணையின் வாயிலாக இப்படிவங்களில் ஏதேனும் வித்தியாசம் உள்ளதாவென ஒப்பிட்டு பார்த்து சரிசெய்து கொள்ளமுடியும் பொதுவாக வழக்கமான சசேவரி செலுத்துபவர் உள்ளீட்டுவரிவரவை GSTR3B எனும் படிவத்திலும் அவ்வாறு செலுத்தபோகும் உள்ளீட்டுவரிவரவை GSTR2A எனும் படிவத்திலும் பதிவுசெய்து மேலேற்றம் செய்திடுவார்கள் அதனை தொடர்ந்து அவைகளை நாம் பதிவேற்றம் செய்திடும் GSTR-1எனும் படிவத்தில் உள்ளீடு செய்யப்பட்டவிவரங்களுடன் ஒப்பிட்டு பார்த்து எவ்வளவு உள்ளீட்டுவரிவரவை கணக்கில் கொள்ளமுடியும் என்ற அட்டவ ணையானது இந்த புதிய செயலியின் வாயிலாக கிடைக்கின்றது. இந்த விவரங்களை பின்வரும் நாட்களில் சரிபார்த்து கொள்ளலாம் என விரும்பிடும்போது இந்த அட்டவணையை எக்செல் தாளாக பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும் இந்த வசதியானது GSTஇன் இணையதளபக்கத்தில்இதனுடைய Returnsஎனும் முகப்பு பக்கத்தில் Comparison of liability declared and ITC claimedஎன்பதன்கீழ் நாம் பயன்படுத்தி கொள்ள தயாராக உள்ளது என்ற செய்தியை மனதில் கொண்டு செயல்படுத்தி பயன்பெறுக .

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

DIR3-KYCஎனும் படிவத்தை சமர்ப்பிக்கவில்லையெனில் ஏற்படும் விளவுகள்


MCA என சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியஅரசின் நிறுமங்களின் விவகாரத்துறை அமைச்சகமானது(Ministry of Corporate Affairs) நிறுமங்களின் இயக்குநர்களின் நியனமும் தகுதியும் நான்காவது திருத்தம்விதிகள்2018 எனும் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது இதன்படி நிறுமங்களின் விவகாரத்துறை அமைச்சகத்தின்(MCA)இணையதள பக்கத்தில் பதிவுசெய்து DINஎனும் இயக்குநரின் பதிவுஎண் பெற்ற ஒவ்வொரு இயக்குநரும் DIR3KYCஎனும் படிவத்தை இந்த MCA இன் இணையபக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு 31இற்குள் சமர்ப்பித்திடவேண்டும் அதற்கு பிறகு எனில் ரூ.5000/- அபாரதத்துடன் இந்த படிவத்தை சமர்ப்பித்திடவேண்டும்.இவ்வாறு DIR3KYCஎனும் படிவத்தை இந்த MCA இன் இணையபக்கத்தில் சமர்ப்பிக்க வில்லை யெனில் குறிப்பிட்ட இயக்குநராக பதவிசெய்தவருக்கு ஒதுக்கப்பட்டDINஎனும் இயக்குநரின் பதிவுஎண் செயல்படாமல் நிறுத்தம் செய்யப்பட்டு விடும் அதனை தொடர்ந்து அந்தஇயக்குநர்வேறு எந்தவொரு நிறுமத்திலும் இயக்குநராக செயல்பட முடியாது. மேலும் நிறுமங்களுக்கான AOC-4, MGT-7 என்பன போன்ற பல்வேறு படிவங்களை MCA இன் இணையபக்கத்தில் பதிவேற்றம் செய்திடும்போது செயல்படாத இயக்குநரின் DINஎனும் இயக்குநரின் பதிவுஎண்ணை குறிப்பிடவே முடியாது. அதைவிட MCA இன் இணையபக்கத்தில் பல்வேறு படிவங்களை பதிவேற்றம் செய்திடும்போது செயல்படாத இயக்குநரின்DSC எனும் இரும கையொப்பத்தினை பயன்படுத்தி கொள்ளவே முடியாது. அதுமட்டுமல்லாது இவ்வாறு சமர்ப்பித்திடும் படிவங்களுடன் இணத்திடவேண்டிய பல்வேறு ஆவணங்களிலும் DINஎனும் இயக்குநரின் பதிவுஎண் செயல்படாத இயக்குநரின் கையொப்பமும் அவருடைய DINஎனும் இயக்குநரின் பதிவுஎண்ணும் செல்லாது ஆகிய செய்திகளை மனதில் கொண்டு பதிவு பெற்ற ஒவ்வொரு இயக்கு-நருக்குமானDIR3KYCஎனும் படிவத்தை இந்த MCA இன் இணையபக்கத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சமர்ப்பித்திடுக என பரிந்துரைக்கப் படுகின்றது .

சனி, 25 ஏப்ரல், 2020

Bagisto எனும் ஒரே மின்வணிககடை பலவிற்பணையாளர் ஒருஅறிமுகம்


Bagisto என்பது நம்முடைய ஒற்றையான மின்வணிக கடையை முழுமையான சந்தையாக மாற்றிடுகின்றது அதன்வாயிலாக நம்முடைய மின்வணிக கடைக்குள் பல்வேறு விற்பணையாளர்களும் தங்களுடைய வெவ்வேறு வகையான பொருட்-களை விற்பணைசெய்திடும் ஒரு சந்தைபோன்ற வசதியை இது வழங்குகின்றது. மேலும் நம்முடைய மின்வணிககடைக்கு வந்துசேரும் அனைத்து வாடிக்கையாளர்-களுக்கும் கொள்முதல் செய்திடுவதற்கான ஏராளமான வாய்ப்புகளை வெவ்வேறு வகையில் பல்வேறு விற்பணை யாளர்களிடமிருந்து பெறுகின்றவாறான வசதியை ஏற்பாடு செய்கின்றது. மேலும் ஒரே பொருளானது பல்வேறு விற்பனையாளர்-களால் வெவ்வேறு விலைகளில் விற்பணை செய்யப்படுவதால் வாடிக்கையாளர் ஒருவர் அவைகளின் விலைகளை ஒப்பிட்டுபார்த்து தான் விரும்பியவாறான பொருட்களை சரியான விலையில் கொள்முதல் செய்திடும் முடிவை எடுத்திடுமாறு ஊக்கவிக்கின்றது. ஒவ்வொரு விற்பணையாளரிடமும் கைவசமுள்ள பொருட்களின் அளவை அவ்வப்போது கணக்கிட்டு தேவைக்கேற்ப பொருட்களின் அளவை உயர்த்தி கொள்ளவும் நம்முடைய மின்வணிககடையில் எந்தபொருளும் இல்லையென்ற நிலையே நிகழாமல் பராமரித்திடவும் இது உதவுகின்றது. மேலும் விற்பணையாளர்களிடமிருந்து நமக்கு சேரவேண்டிய கழிவுத்தொகையை மிகச்-சரியாக கணக்கிட்டு வசூலித்திடவும் உதவுகின்றது. ஒருசில விற்பணையாளர்களின் புதிய பொருட்களை கொண்டுவந்து விற்பணைசெய்வதற்கான அனுமதியை தானாகவே வழங்கிடுமாறு செய்கின்றது ஒவ்வொரு விற்பணையாளரும் என்னென்ன பொருட்களை விற்கின்றனர் என இது பட்டியலிடுவதால் இதில் வாடிக்கையாளர் தமக்கு தேவையான பொருட்களை மிகச்சரியான விற்பணையாளரிடமிருந்து பெறுவதற்கும் விலைகளையும் பொருளின் தரத்தையும் ஒப்பீடுசெய்வதற்கும் ஆன வசதியை வழங்கின்றது. இந்த Bagisto எனும் பலவிற்பணையாளர் சந்தையானது தேடுவதற்கு எளிய இணைய முகவரியின் செயலை கொண்டிருப்பதால் விற்பணையாளர்கள் தங்களுடைய தன்விவர பக்கங்களின் விவரங்களையும் உற்பத்தி பொருட்களின் விவரங்களையும் அதற்கான இணைய முகவரிகளையும் தேவையானபோது மாற்றி கொள்வதற்காக இது அனுமதிக்கின்றது கூகுள் போன்ற தேடிபொறிக்கு எளிதில் புரிந்து கொள்ளுமாறு இதனுடைய விதிஅமைந்துள்ளது. இதில் நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களை கவர்ந்திடுமாறு அல்லது விற்பணையாளர்களை ஊக்கு வித்திடுமாறு கூடுதலான வசதிவாய்ப்புகளை கூடுதலிணைப்பாக இதில் சேர்த்துகொள்ளமுடியும் என்ற செய்தியையும் மனதில் கொள்க.

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

MSMEஆக பதிவுசெய்வதற்கான வழிமுறைகளும் அதனால் கிடைக்கும் பயன்களும்


மீச்சிறு ,சிறு ,நடுத்தர தொழிலகங்களை(Micro,Small,Medium Enterprises) சுருக்கமாக MSME என அழைக்கப்படும். பொதுவாக இந்த தொழிலகங்களை செயல்படுத்திடு-வதற்கான இயந்திரங்களுக்கும் கருவிகளுக்கும் தேவையான தொகையை முதலீடு செய்வதன் அடிப்படையில் இவைகள் எந்தெந்தவகையென வரையறுக்கப்-படுகின்றது.அதாவது, மீச்சிறு தொழிலகம் எனில் இயந்திரங்களுக்கு இந்தியரூபாய் 25 இலட்சம் வரையிலும் கருவிகளுக்கு இந்தியரூபாய் 10 இலட்சம் வரையிலும் முதலீட்டு வரையறை கொண்டிருக்கவேண்டும். சிறுதொழிலகம் எனில் இயந்திரங்களுக்கு இந்தியரூபாய் 25 இலட்சம் முதல் 5 கோடி வரையிலும் கருவிகளுக்கு இந்தியரூபாய் 10 இலட்சம் முதல் 2கோடிவரையிலும் முதலீட்டு வரையறை கொண்டிருக்கவேண்டும். நடுத்தர தொழிலகம் எனில் இயந்திரங்களுக்கு இந்தியரூபாய் 5 கோடி முதல் 10 கோடி வரையிலும் கருவிகளுக்கு இந்தியரூபாய் 2 கோடி முதல் 5கோடி வரையிலும் முதலீட்டு வரையறை கொண்டிருக்கவேண்டும். இந்தியாவில் உற்பத்தி அல்லது சேவை நிறுவனமாக தொழில் துவங்கிடும் எந்தவொரு நிறுவனத்தின் முதலீட்டு தொகையும் மேற்கண்ட வரையறைக்குள் உள்ளவாறு பதிவு செய்து கொண்டால் பின்வரும் பல்வேறுபயன்கள் அந்நிறுவனத்திற்கு கிடைக்கின்றன. MSME ஆக பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் தமக்கு தேவையான கடன்தொகையை வணிக வங்கிகளில் கோரும்போது அதற்காகவென தனியாக வங்கிஉத்திரவாதம் எதுவும் வழங்கத் தேவையில்லை MSME பதிவுஎண் மட்டுமே போதுமானதாகும். MSME ஆக பதிவுசெய்யப்பட்ட தொழிலகங்கள் பயன்படுத்திடும் மின்சாரத்திற்கு குறிப்பிட்ட அளவுவரை மின்கட்டணத்தினை செலுத்தாமல் அதற்கு- மேல் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் MSME ஆக பதிவுசெய்யப்பட்ட தொழிலகங்கள் தங்களுக்கான patent, Trademark ஆகியவற்றை பதிவுசெய்திடும்போது அதற்கான பதிவு கட்டணத்தில் 50 % மட்டும் செலுத்தினால் போதும். MSME ஆக பதிவுசெய்யப்பட்ட தொழிலகங்கள் தங்களுடைய தொழிலை விரிவு- படுத்திகொள்ளவும் மேம்படுத்திகொள்ளவும் ஏராளமான தொழில் வளர்ச்சி சலுகை (subsidy) வழங்கப்படுகின்றது MSME ஆக பதிவுசெய்யப்பட்ட தொழிலகங்கள் துவங்கி குறிப்பிட்ட காலம் வரை பல்வேறு நேர்முக, மறைமுகவரிகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகின்றது. MSME ஆக பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை அல்லது சேவைகளை குறிப்பிட்ட செந்தரத்துடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திடும்-போது முழுமையான ஏற்றுமதி வரிவிலக்கு கிடைக்கின்றது. MSME ஆக பதிவுசெய்யப்பட்ட தொழிலகங்களின் புத்தாக்கங்ளுக்கும் புதுவடிவமைப்புகளுக்கும் 75 % முதல் 80 % வரை அரசின் கடனுதவி வழங்கப்படுகின்றது , MSMEதொழிலகங்களை பெண்களின் பதிவுசெய்து துவங்கிடும்போதுமேலும் பல்வேறு புதிய சலுகைகள் வழங்கப்படுகின்றன . நடப்பிலுள்ள தொழிலகங்கள் MSMEஆக பதிவுசெய்து தங்களுடைய தொழிலை பழைய தொழில்நுட்பத்திலிருந்து புதிய தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தி கொள்ளும்போது பல்வேறு முதலீட்டு சலுகைகள் வழங்கப்படுகின்றன தனிநபர் நிறுமம் ,வரையறுக்கப்பட்ட நிறுமம் ,கூட்டுகுடும்ப தனியார் வரையறுக்கப் பட்டநிறுமம் ,கூட்டாண்மை நிறுமம் ஆகியகட்டமைப்பில் உள்ள தொழிலகத்தினை ஒரு MSME பதிவுசெய்துகொள்ளமுடியும் இவ்வாறானMSME பதிவுசெய்துகொள்வதற்காக பின்வரும் வழிமுறைகளை பின்பற்றிடுக முதலில் இதற்காக https://legaldocs.co.in/msme-registration எனும் இணைய பக்கத்திற்கு செல்க. உடன் திரையில் விரியும் படிவத்தில் பதிவுசெய்ய விரும்புவோரின் பெயர் ,ஆதார் எண், தொழிலகத்தின் பெயர், முகவரி, வருமானவரி பதிவுஎண், செல்லிடத்து பேசிஎண், வங்கி கணக்குஎண் என்பனபோன்ற தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளீடுசெய்து பூர்த்தி செய்திடுக.இவைகளை இணைய இணைப்பில்லாமலும் பூர்த்திசெய்து மேலேற்றம் செய்திடலாம். மேலும் சொந்த கட்டிடம் எனில் வீட்டுவரி செலுத்திய ஆவணம், வாடகை கட்டிடம் எனில் கட்டிட சொந்தகாரருடன் ஏற்படுத்தி கொண்ட ஒப்பந்த நகலுடன் அங்கு தொழிலகத்தை துவங்குவதற்கு அந்த கட்டிடசொந்தகாரரின் ஆட்சேபனை யில்லையெனும் கடிதம் ,கூட்டாண்மைநிறுவனமாக பதிவுசெய்யப்பட்டதெனில் அதற்கான சான்றாவணம் ,நிறுமமாக பதிவுசெய்யப்பட்டதெனில் அதற்கான ஆவணம், இயக்குநர்களின் குழுக்கூட்டத்தீர்மானம் போன்ற தேவையான அனைத்துஆவணங்களையும் இதனுடன் இணைப்பதற்காக தயார்செய்துகொள்க. இவையனைத்தையும் பதிவேற்றம் செய்து சமர்ப்பித்திடுக உடன் அனைத்தும் சரியாக இருந்தால் அன்றே நமக்கென தனியாக MSMEபதிவுஎண் ஒன்று ஒதுக்கீடுசெய்யப்பட்டு வழங்கப்படும். அன்றிலிருந்து நம்முடைய பணியை துவங்கிடலாம் MSME ஆக பதிவு-செய்வதற்கான பதிவுகட்டணம் எதுவும் செலுத்ததேவையில்லைஎன்ற செய்தியையும் மனதில் கொள்க. .

வியாழன், 23 ஏப்ரல், 2020

நிறுமங்களின் சட்டம் 2013 இன்படி புதியமின்னனு படிவம் INC-20A ஐ பற்றி தெரிந்து கொள்வோம்


நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 10Aஇன்படி 02//11/2018 நாளிற்கு பிறகு புதியதாக துவங்கி பங்குத்தொகையுடன் பதிவுசெய்திடும் நிறுமங்கள் அனைத்தும் அந்நிறுமத்தை துவக்குவதற்கான முதலீட்டுத்தொகையை வழங்குவதாக பதிவுசெய்தஅன்றைய நாளின்போது MOA இல் ஒத்துகொண்டு கையொப்பமிட்ட முதலீட்டாளர்கள் அனைவரும் முதலீட்டிற்கான தொகையை அந்நிறுமத்தின் வங்கிகணக்கில் செலுத்திவிட்டனர் எனும் உறுதிமொழி படிவம் ஒன்றினை நிறுமங்களின் பதிவாளரிடம் அந்நிறுமங்களின் இயக்குநர்கள் பதிவுசெய்த180 நாட்களுக்குள் சமர்ப்பித்திடவேண்டும் இந்த உறுதிமொழி படிவத்தினை நிறுமச்செயலர் அல்லது பட்டய கணக்கர் அல்லது அடக்கவிலை கணக்கர் சரிபார்த்து சான்றொப்ப மிட்டிருக்கவேண்டும் அவ்வாறா ன உறுதிமொழிக்கான ஆவணமாக அம்முதலீட்டாளர்கள் தம்முடைய முதலீட்டு தொகையை வங்கியில் செலுத்தியதற்கான ஆதாரசீட்டுகள் அல்லது தம்முடைய வங்கியின் கணக்கின் நகல் அல்லது நேரடியாக இணையத்தின் NEFT / IMPSவாயிலாக முதலீட்டு தொகையை நிறுமத்தின் வங்கிகணக்கிற்கு செலுத்தியிருந்தால் அதற்கான ஒப்புகை சீட்டு ஆகியவற்றில்ஏதேனுமொன்றினை ஒவ்வொரு உறுப்பினரும் இணைத்திடவேண்டும் மேலும் இந்த படிவத்துடன் இந்திய ரிசர்வு வங்கி அல்லது SEBI அல்லது IRDA போன்ற நிறுவனங்களை கட்டுபடுத்து பவர்களிடம் அந்நிறுமமானது பதிவு அல்லது ஒப்புதல் பெறவேண்டியிருந்தால் அவ்வாறு அந்நிறுமத்தால் பதிவுசெய்யப்பட்டு பெறப்பட்ட சான்றுகளையும் இந்தமின்னனு படிவம் INC-20A வுடன் இணைத்து சமர்ப்பிக்கவேண்டும் ஆயினும் நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 10Aஇன்படி 02//11/2018 நாளிற்குமுன் பதிவுசெய்து கொண்ட நிறுமங்களும் 02//11/2018 நாளிற்குபின் பங்குத்தொகை இல்லாமல் துவங்கிடும் நிறுமங்களும் இந்த புதியமின்னனு படிவம் INC-20A ஐ நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பிக்கத்தேவையில்லை இந்த புதியமின்னனு படிவம் INC-20Aஐ தேவைப்படுவோர் நிறுமங்களின் இணையதளத்திலிருந்து 26/01/2019 முதல்பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்ளலாம் அவ்வாறான முதலீட்டாளர்களின் உறுதிமொழியுடனான புதியமின்னனு படிவம் INC-20A ஐ தேவையான ஆவணங்களுடன் பதிவுபெற்ற 180 நாட்களுக்குள் நிறுமங்களின் பதிவாளரிடம்சமர்ப்பிக்காமல் இருந்தால் நிறுமங்களின் பதிவாளர் அந்நிறுமத்தின் பதிவை நீக்கம்செய்வதற்கான நடவடிக்கையை எடுத்திடுவார் மேலும் அந்நிறுமமானது எந்தவொரு வியாபார நடவடிக்கைகளையும் செயல்படுத்திடமுடியாது அல்லது நிறுமத்தின் நடவடிக்கைகளுக்காக கடன்வாங்கும் திறனைபயன்படுத்திகொள்ளமுடியாது அதுமட்டுமல்லாது அவ்வாறான நிறுமமானது ரூ. 50,000 அபராத தொகை செலுத்தநேரிடும் இவ்வாறு செயல்படுத்தாத நிறுமத்தில் பணிபுரியும் ஒவ்வொரு அலுவலரும் நாளொன்றிற்கு ரூ.1000/ வீதம் அதிகபட்சம் ரூ.1,00,000/வரை அபாரதமாக செலுத்தவேண்டியிருக்கும்

புதன், 22 ஏப்ரல், 2020

சிறிய வியாபார நிறுவனத்தை முன்னேற்றி வளர்ச்சிபாதையில் கொண்டுசெல்வதற்கான வழிமுறைகள்


பொதுவாக சிறுவியாபார நிறுவனங்கள் தங்களுடைய அன்றாட பணிகளை முடிப்பதற்கே சிரமமப்படும்போது தம்முடைய வியாபாரத்தின் வெற்றிக்கான வளர்ச்சிபாதையில் கொண்டுசெல்வதற்காக புதியவழிமுறைகளை செயல்படுத்திடுவதை பற்றி சிந்திக்கவேமுடியாத சூழலில்இவைகளை அறவே தவிர்த்திடுவார்கள் அவ்வாறானவர்கள் இவ்வாறான சூழலில்கூட பின்வரும் படிமுறைகளை பின்பற்றி தங்களுடைய வியாபாரத்தை வெற்றிகரமாக வளர்ச்சிபாதைக்கு கொண்டுசெல்லமுடியும் படிமுறை.1. நம்முடைய நிறுவனத்தில் உற்பத்தியாகும் பொருளைபற்றிஅல்லது வழங்கிடும் சேவையை பற்றி கானொளி காட்சிகளை மிகச்சரியாக போதுமானஅளவு தயார்செய்து அதனை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூதாய பல்லூடக வலைபின்னலில் வெளியிடச்செய்திடுக அதனோடுகூடவே நம்முடைய நிறுவனத்தைபற்றியும் வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடிஎழும் சந்தேகங்களையும் அதை தீர்வுசெய்வதற்கான வழிமுறைகளைபற்றியும் அதற்கான பதிலும் FAQ வாயிலாக தயார்செய்து அதனையும் வெளியிடச்செய்திடுக அதைவிட உள்ளூர் நிகழ்வுகளில் நம்முடைய நிறுவனமும் LinkedInமூலம் பங்கெடுத்து கொள்ளுமாறு செயல்படச்செய்திடுக மிக முக்கிய மாக ஒருசிலசிறப்பு அறிவிப்புகளை சமூதாயபல்லூடக வலைபின்னலின் வாயிலாக அவ்வப்போது வெளியிடச்செய்திடுக படிமுறை.2. நம்முடைய நிறுவனத்திற்கென தனியாக இணையதளபக்கத்தை உருவாக்கி பராமரித்திடுக தொடர்ந்து மேலே படிமுறை1.இல் கூறியவாறு சமூதாயபல்லூடக வலைபின்னலில் கானொளி காட்சிகளாக வெளியீடு செய்தவைகளை நம்முடைய இணையதளபக்கங்களிலும் வெளிடச்செய்திடுக மிகமுக்கியமாக நிறுவனத்தைபற்றியும் வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடிஎழும் சந்தேகங்களையும் அதை தீர்வுசெய்வதற்கான வழிமுறைகளைபற்றியும் அதற்கான பதிலும் FAQ வாயிலாக தயார்செய்து வெளியிடசெய்திடுக படிமுறை.3. மேலேகூறிய கானொளி காட்சிகளை பொழுதுபோக்குபோன்றோ வழக்கமான பத்தோடு பதினொன்று என்றவாறோ பார்வையாளர் தாண்டிசென்றிடாமல் call-to-action (CTA) எனும் அடுத்த செயலிற்கு அதாவது மேலும்நம்முடைய நிறுவனத்தைபற்றிய விவரங்களை முழுவதுமாக அறிந் தெரிந்து கொள்வதற்காகவென தனியாக மின்புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படித்தறியுமாறு கொண்டுசெல்க இந்நிலையில் உடனடியாக நம்முடைய உற்பத்தி பொருளை அல்லது சேவையை வாங்கிடுமாறு பார்வையாளர்களிடம் வலியுறுத்தி தொந்திரவுசெய்து அவர்களை வெறுப்படையச் செய்திடக்கூடாது அதற்கு பதிலாக எவ்வாறான வழிமுறையில் இவற்றை எளிதாக கொள்முதல் செய்திடமுடியும் என்ற விவர கானொளி காட்சியை மட்டும் CTA எனும் செயலில் கொண்டுவருவது நன்று படிமுறை.4. அடுத்து என்னதான் இணையதளபக்கத்தை பராமரித்தாலும் பொதுமக்கள் அனைவரும் நம்முடைய இணையபக்கத்தை பார்வையிட வருவார்கள் என்ற உத்திரவாதம்எதுவும் அளிக்கமுடியாது அதனால்அதற்கான தீர்வாக பொதுமக்கள் கைகளில் வைத்துள்ள அனைத்துவகையான செல்லிடத்து பேசிகளிலும் மேலேகூறிய கானொளி காட்சிகளை தகவல்களை காணமுடியுமாறு செய்திடுக மிகமுக்கியமாக இவையனைத்தும் சமூதாய பல்லூடகங்களின் வாயிலாக பொதுமக்களின் கைபேசி களிலும் அல்லது திறன்பேசிகளிலும் சென்றடையுமாறு செய்திடுக படிமுறை.5. இறுதியாக மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களுடனும் நடப்பிலுள்ள வாடிக்கையாளர்களுடனும் நேரடியான கேள்விபதில் ,குழுவிவாதம் ஆகியவற்றின் வாயிலாக தொடர்பு இருந்து கொண்டே இருக்குமாறு பார்த்து கொள்க .

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

சசேவ(GST)வின் கீழ் பின்செல்செலவுதொழில்நுட்பம்(Reverse Charge Mechanism)


பொதுவாக .சசேவவின் கீழ் பொருட்களை வழங்குபவர் அல்லது சேவைகளை வழங்குபவர் இவைகளை பெறுபவரிடமிருந்து விற்பணைத்தொகையுடன் சசேவ வரியையும் சேர்த்து வசூலித்து அரசிற்கு செலுத்துவார்.அதற்குபதிலாக பொருட்களை பெறுபவர் அல்லது சேவைகளைபெறுபவர் இவைகளை வழங்குபவர் வாயிலாக அரசிற்கு இந்த சசேவவரியை செலுத்துவதற்கு பதிலாகஇவைகளை பெறுபவரே நேரடியாக அரசிற்கு சசேவவரியை செலுத்திடுவதே RCM என சுருக்கமாக அழைக்கப்படும் பின்செல் செலவு தொழில் நுட்பம்(Reverse Charge Mechanism) ஆகும் இவ்வாறான தொழில்நுட்பமானது சசேவவின் கீழ் பதிவு பெறாதவரிடமிருந்து சசேவவின் கீழ் பதிவுபெறுபவர் பொருட்களை அல்லது சேவைகளை பெறும்போது நடைமுறை படுத்தப்படும் சசேவவின் கீழ் இந்த RCM ஆனது பிப்ரவரி 2019முதல் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது அயல்பணிவழிமுறையில் நிறுவனத்திற்கு பணியாளரை வழங்குபவர்கள், காப்பீட்டு முகவர்கள், நிதிநிறுவனங்கள் அல்லது வங்கிகளின் வாராக்கடனை வசூலித்திடுவதற்காக நியமித்திடும் முகவர்கள் ,வியாபார நிறுவனத்திற்காக செயல்படும் வழக்குரைஞர்கள் அல்லது இசைவுதீர்ப்பாளர்கள் , இணையவழிவணிக இயக்குநர்கள் (E-commerce Operator), பொருள் போக்குவரத்தாளர்கள் போன்றவர்கள் வழங்கும் சேவைகளின் மீது சசேவ வரி விதித்தாலும் அவர்களின் ஆண்டுவருமானம் இருபது இலட்சத்திற்கு மிகாமல் இருக்கும் நிலையில் இந்த சசேவவரியை செலுத்தத் தேவையில்லை என்ற நிலையில் அவ்வாறான பரந்துபட்ட சேவைவழங்குபவர்களின் சேவைகளையும் சசேவவரி வசூலின்கீழ் கொண்டுவருவதற்காகவே இந்த RCM ஆனது நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது தற்போது நடைமுறையில் பொருட்களை வழங்குபவர் இந்த RCM ஐ செயல்படுத்துவதில்லை அதனால் பொருட்களை வழங்குபவர்களையும் சேவைகளை வழங்குபவர்களையும் சசேவவின்கீழ் கொண்டு வரச்செய்வதே இந்த RCM அடிப்படை நோக்கமாகும் சசேவவின் கீ்ழ் பதிவு பெற்ற நபர் ஒருவர் RCM இன்அடிப்படையில் சசேவவின் கீ்ழ்பதிவு பெறாத நபரிடமிருந்து பொருட்களை அல்லது சேவைகளை பெறும்போது அதற்கான சசேவவரியைபதிவு பெறாத நபருக்குபதிலாக பதிவுபெற்ற நபர் செலுத்துவதாக இடமாற்றம் செய்யப் பெறுகின்றது. வரிஏய்ப்பினை தடுப்பதே இந்தRCMஇனுடைய அதற்கடுத்தஅடிப்படை நோக்கமாகும் இந்த RCMஇன் படி சசேவவரியில் ஒருபகுதியைமட்டும் வழங்குவது மிகுதியை விலக்குப்பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை இந்தRCMஇன்வாயிலாக 100% சசேவவரியைமுதலில் கண்டிப்பாக செலுத்தியாக வேண்டும் இவ்வாறானRCMஇன் படி சசேவவின்கீழ் பொருட்களை எப்போது வழங்கினார் எனஎவ்வாறு நிர்ணயம் செய்து வரியை வசூலிப்பது என்ற பிரச்சினைஎழும் ஆயினும் பின்வரும்சூழ்நிலைகளில் எது முந்தைய நிகழ்வோ அதனையே பொருட்களை வழங்கிய நாளாக கணக்கில் கொள்ளப்படும் அ.பொருட்களை வழங்குபவரிடமிருந்து பெறுபவர் பொருட்களை பெற்ற நாள் ஆ. பொருட்களை பெறுபவரின் கணக்குப்பதிவேடுகளில் அந்த பொருட்களுக்கான விற்பணைத்தொகை வழங்கப்பட்ட நாளாக பதிவுசெய்யப்பட்ட நாள் இ.பொருட்களை பெறுபவரின் வங்கிகணக்கில்பதிவுசெய்யப்பட்டு அந்த பொருட்களுக்கான விற்பணைத்தொகை வழங்கப்பட்ட நாள் ஈ.பொருட்களை வழங்குபவர் அந்த பொருட்களை வழங்கும்போது அதனோடுகூடவே வழங்கிய விற்பணைபட்டியலில் குறிப்பிட்டநாளிலிருந்து முப்பது நாள் குறிப்பு மேலேகூறியசூழலிலும் பொருட்களை வழங்கிய நாளினை கண்டுபிடித்திடமுடியாதபோது பொருட்களை பெறுபவரின் கணக்குப்பதிவேடுகளில் அந்த பொருட்களுக்கான விற்பணைத்தொகை வழங்கப்பட்ட நாளாக பதிவுசெய்யப்பட்டநாளே கணக்கில் கொள்ளப்படும் அதேபோன்று இவ்வாறானRCMஇன் படி சசேவவின்கீழ் சேவைகளை எப்போது வழங்கினார் என எவ்வாறு நிர்ணயம் செய்து வரியை வசூலிப்பது என்ற பிரச்சினைஎழும் ஆயினும்பின்வரும்சூழ்நிலைகளில் எது முந்தைய நிகழ்வோ அதனையே சேவைகளை வழங்கிய நாளாக கணக்கில் கொள்ளப்படும் அ. சேவைகளை பெறுபவரின் கணக்குப்பதிவேடுகளில் அந்தசேவைகளுக்கானத்தொகை வழங்கப்பட்ட நாளாக பதிவுசெய்யப்பட்ட நாள் ஆ.சேவைகளை பெறுபவரின் வங்கிகணக்கில் அந்தசேவைகளுக்கானத்தொகை வழங்கப்பட்ட நாளாக பதிவுசெய்யப்பட்டநாள் இ.சேவைகளை வழங்குபவர் அந்தசேவைகளை வழங்கும்போது அதனோடுகூடவே வழங்கிய விற்பணைபட்டியலில் குறிப்பிட்டநாளிலிருந்துஅறுபது நாள் குறிப்பு மேலேகூறியசூழலிலும் சேவைகளை வழங்கிய நாளினை கண்டுபிடித்திடமுடியாதபோது சேவைகளை பெறுபவரின் கணக்குப்பதிவேடுகளில் அந்த சேவைகளுக்காகத்தொகை வழங்கப்பட்ட நாளாக பதிவுசெய்யப்பட்ட நாளே கணக்கில் கொள்ளப்படும் இவ்வாறு RCMஇன் படி சசேவவரிசெலுத்திடும்போது உள்வரும்வரவினங்களை கழித்து கொண்டு மிகுதி தொகை செலுத்திடும் வசதியான ITCஐ கணக்கில் கொள்ளாமல் முதலில் RCMஇன் படி சசேவ வரியை ரொக்கப்பேரேட்டின் வாயிலாக செலுத்தியபின்னர் மற்ற சசேவவரி செலுத்திடும் தொகையில் இவ்வாறு RCMஇன் படிரொக்கமாக செலுத்திய தொகையை ITCஐ கணக்கில் கொண்டு கழித்ததுபோக மிகுதி தொகைய செலுத்திடலாம் இந்த RCMஇன் படி சசேவ வரியானது ஒவ்வொருமாதத்தின் தொகையும் அதற்கடுத்த மாதம் 20 தேதிக்குள் செலுத்திடவேண்டும் படிவம் எண்GSTR 2 ஐ தயார் செய்திடும்போது இந்தRCMஇன் படி செலுத்தப்பட்ட சசேவ வரியானது தானாகவே திரையில் காண்பிக்காது நாம் தான்அவ்வாறான விவரங்களை உள்ளீடு செய்திடவேண்டும் மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் இந்த RCMஇன் படியான வசதியை சசேவஇன் கீழ் பயன்படுத்தி கொள்ளமுடியாது ஒரே மாநிலத்திற்குள் நடைபெறும் விற்பணைநடவடிக்கைகளில் மட்டும் இந்த RCMஇன் படியான வசதியை சசேவஇன் கீழ் பயன்படுத்தி கொள்ளமுடியும் என்ற செய்தியை மனதில் கொள்க Self-invoicing எனும் வசதியை கொண்டு இந்த RCMஇனை பயன்படுத்தி கொள்ளமுடியும் ஆயினும் இதனை செயல்படுத்திடுவதற்கான ClearTax GST எனும் மென்பொருளை பயன்படுத்தி Self-invoicingஇன்படி பட்டியலைநாமே தயார்செய்திட வேண்டும் ஏனெனில் பொருட்களை வழங்குபவர் அல்லது சேவைகளை வழங்குபவர் சசேவ இன்கீழ் பதிவுபெறாதவர் என்பதால் அவர் சசேவஇன்படி விற்பணைபட்டியலை தயார்செய்ய வேண்டிய அவசியமில்லாது போகின்றது . பின்வரும் படிமுறைகளை பின்பற்றி Self-invoicing என்பதன்படி ClearTax GST எனும் மென்பொருளை பயன்படுத்திபெறுபவரே பட்டியலை உருவாக்கி கொள்ளமுடியும் முதலில் New Purchase Invoice எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் திரையின் Invoice Serial Number என்ற புலத்தில் இந்தபட்டியலிற்கான வரிசை எண்ணை உள்ளீடு செய்து கொள்க Invoice Date என்ற புலத்தில் பொருளை அல்லது சேவையை பெற்ற நாளினை உள்ளீடுசெய்திடுக Reference Number என்ற புலத்தில் இந்த பொருளை அல்லது சேவையை பெறுவதற்காக நாம் வழங்கிய கொள்முதல் உத்திரவு எண்ணை உள்ளீடு செய்திடுக Due Date என்ற புலத்தில் நாம் இதனை வழங்குபவருக்கு தொகையைவழங்கஉத்தேசித்து இருக்கும் நாளினை உள்ளீடு செய்திடுக Vendor Name எனும் புலத்தில் இந்த பொருளை அல்லது சேவையை வழங்கியவரின் பெயரையும் முகவரியையும் உள்ளீடு செய்திடுக எச்சரிக்கைஇந்த புலத்தில் கண்டிப்பாக நம்முடைய பெயரை உள்ளீடு செய்திடாதீர்கள் பொருள் அல்லது சேவையின் விவரங்களையும் தொகை விவரங்களையும் அவைகளுக்கான புலங்களில் உள்ளீடு செய்திடுக Advance Settings என்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து Reverse Charge’ என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து கொள்க அனைத்து புலங்களிலும் தேவையான விவரங்களை உள்ளீடுசெய்ததை உறுதி செய்து கொள்க இறுதியாக Save. எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து சேமித்து கொள்க

திங்கள், 20 ஏப்ரல், 2020

நிறுமத்தின் அனைத்து இயக்குநர்களும்தகுதிஇழப்பு ஏற்படும் சூழலில் புதியதாகவொரு இயக்குநரை எவ்வாறு நியமிப்பது


எந்தவொரு நிறுமத்திலும் இயக்குநர்களின் குழுவால்மட்டுமே புதியதாக இயக்குநர் ஒருவரை நியமித்திடமுடியும் அதன்பின்னர்அந்நியமனத்தினை பொதுப்பேரவை கூட்டத்தில் பின்னேற்பு செய்து கொள்ளப்படும் என்ற தற்போதையநடைமுறை பின்பற்றப்படுகின்றது இவ்வாறான நிலையில் நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 167 (1) இன்படி பின்வரும்சூழ்நிலைகளில் ஒருநிறுமத்தின் அனைத்து இயக்குநர்களும்தகுதிஇழப்பு ஏற்பட்டு இயக்குநர்களின் குழுவே செயல்படமுடியாதநிலைஏற்படும் அ. நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 164 இல்குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலையில் ஆ.ஒரு ஆண்டில் நடைபெற்ற இயக்குநர்களின் குழுக்கூட்டங்கள்அனைத்திலும் கலந்துகொள்ளாததற்கான அனுமதிபெறாமலும் தொடர்ந்து கலந்துகொள்ளாமலும் இருத்தல் இ. நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 184இன்படி ஆதாயம் தரும் பணிகளை அல்லது ஒப்பந்தங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அந்நிறுவனத்துடன் மேற்கொண்டிருத்தல் ஈ. நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 184இன்படி ஆதாயம் தரும் பணிகள் ஒப்பந்தங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அந்நிறுவனத்துடன் மேற்கொண்டிருப்பதை வெளியிடாது மறைத்துவிடுதல் உ.இயக்குநர்களின் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தால் ஆறுமாதம் அல்லது அதற்கு மேலான சிறைதண்டனை பெற்றிருத்தல் ஊ. நிறுமத்திலோ அல்லது முதன்மைநிறுமத்திலோ அல்லது துனைநிறுமத்திலோ பணியாளராக பணியமர்த்தப்பட்டிருத்தல் இவ்வாறு தகுதியிழப்பு ஏற்படும் இயக்குநர்களின் DINஎனும் பதிவுஎண் ஐந்து ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டுவிடும் அதனால் அடுத்தஐந்தாண்டிற்கு அவர்எந்தவொரு நிறுமத்திலும் இயக்குநராக செயல்படமுடியாது பொதுவாக எந்தவொரு பதிவுபெற்றதனியார் நிறுமம் எனில் குறைந்தபட்சம் இரண்டு இயக்குநர்கள் பதிவுபெற்ற பொதுநிறுமம் எனில்குறைந்தபட்சம் மூன்றுஇயக்குநர்கள் கண்டிப்பாக இயக்குநர்களின் குழுவில் இருக்கவேண்டும் அவ்வாறுகுறைந்தபட்ச இயக்குநர்கள் இருந்தால் மட்டுமே நிறுமங்கள் தங்களுடைய வியாபார நடவடிக்கையை எளிதாக தொடரமுடியும் தேவையான படிவங்களையும் ஆவணங்களையும் நிறுமங்களின் விவகாரத்துறைஅமைச்சகத்தின்இணையதளவாயில்(MCA Portal) சமர்ப்பிக்கமுடியும் என்ற இக்கட்டான நிலையில் அதாவது அனைத்து இயக்குநர்களும் தகுதியிழப்பின் காரணமாக செயல்படமுடியாத சூழ்நிலைநிலையில் அவ்வாறான நிறுமம் புதியதாக இயக்குநர்களை எவ்வாறு நியமிக்கமுடியும் என்றநிர்கதியானசூழலில் குறைந்தபட்சம் ஒரு இயக்குநரை மட்டும் வழக்கமான வழிமுறையில்லாது பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி நியமனம் செய்து கொள்ள நிறுமங்களின் விவகாரத்துறை (MCA)யானது அனுமதித்துள்ளது நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 167(3)இன்கீழ் நிறுமமானது அனைத்து இயக்குநர்களும் தகுதியிழப்பு ஏற்பட்டு செயல்பட முடியாத நிலைஉருவாகி விட்டதால் தங்களுடைய நிறுவனம் பரிந்துரைக்கும் நபரை ஒரு இயக்குநராக நியமித்திட அனுமதிக்குமாறு குறிப்பிட்டு கோரிக்கை கடிதம் ஒன்றினை அந்நிறுமத்தின் உருவாக்குநர்களின் அல்லது உறுப்பினர்களின் கையொப்பத்துடன்அனுப்பிடவேண்டும் குறிப்பு நபர்ஒருவர் நிறுமத்தின் இயக்குநராக செயல்படுவதற்கு தகுதியிழந்தநிலையில் அவர்அந்நிறுமத்தின் உறுப்பினர் என்ற அடிப்படையில் இந்த கோரிக்கை கடிதத்தில் கையொப்பமிடலாம் நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 167(3)இன்கீழ் நிறுமத்தை உருவாக்குநர்அல்லது உறுப்பினர் ஒப்புகை கையொப்பமிடவேண்டும் தகுதியிழப்பு ஏற்பட்ட அனைத்து இயக்குநர்களும் இவ்வாறு ஒரு இயக்குநரை நியமிப்பதில் தங்களுக்கு ஆட்சேபணை எதுவும் இல்லையெனும்  சான்றிதழ்( NOC) வழங்கவேண்டும் இருமகையொப்பத்துடனும்தேவையான கட்டணம் செலுத்திய சலானுடனும் படிவம் எண்DIR-12 ஐ இணைத்திடவேண்டும் இந்த படிவத்ததுடன் புதிய இயக்குநர் எனில் அவருடைய ஒப்புதல் படிவம் எண் DIR – 2,இந்த புதிய இயக்குநரின் சுட்டிஎண் (DIN) முகவரி சான்று,படிவம் எண் MBP-1 எனும் அறிவிப்பு ஒரே நபர் எத்தனை நிறுமங்களில் இயக்குநராக இருக்கலாம் என்றவிவரங்களை குறிப்பிடும் படிவம் எண் DIR-8,புதிய இயக்கு நருக்கான DIN பதிவுவிவரம் ,புதிய இயக்குநர் ஏற்கனவே இயக்குநராக இருக்கும் நிறுமங்களின் பெயர் பதிவுஎண் (CIN)போன்ற விவரங்கள் இந்த படிவம் எண்DIR-12 உடன் இணைத்திடவேண்டும் நிறுமத்தை உருவாக்குநர்அல்லது உறுப்பினர் என்பதற்கான ஆதாரமாக அவருடைய பங்குசான்றிதழின் நகல் இவ்விவரங்களை சரிபார்த்ததற்கான நிறுமச்செயலரின் சான்றிதழ், இவ்வாறு புதிய இயக்குநரை நியமனம் செய்வதற்காக கூட்டப்பட்ட அசாதாரணபொதுப்பேரவை கூட்டம் அதில்புதிய இயக்குநரை நியமனம் செய்வதற்காக நிறைவேற்றப்பட்ட தீர்மாணம் , கூட்டஅழைப்பு நகல் ,ஆகிய ஆவணங்களுடன் நிறுமங்களின் பதிவாளரிடம் கோரிக்கை கடிதத்தை அனுப்பிவைத்திடவேண்டும். மேலேகூறிய ஆவணங்களின் அச்சிடப்பட்டநகல் அதனோடு இவைகளின் சாப்ட் காப்பியை பதிவுசெய்ய்பட்ட பென்ட்ரைவ் ஆகியவற்றினை மும்பையில் இருக்கும் நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பித்திடவேண்டும் சிடி அல்லது டிவிடியை கண்டிப்பாக சமர்ப்பிக்ககூடாது குறிப்பு இந்த நடைமுறையானது தற்போது செயல்பட்டுகொண்டிருக்கும் நிறுமங்களில் நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 164(2)(a)இன்கீழ் தகுதியிழப்பு ஏற்பட்ட இயக்குநர்களை கொண்ட நிறுமங்களுக்குமட்டுமே பொருந்தும் என்ற செய்தியை மனதில் கொள்க

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

சசேவ விலக்கு வரம்பு உயர்த்தபடுவதால் சிறுதொழில் நிறுவனங்களுக்கு கிடைத்திடும் பயன்கள்


1. மிகச்சிறு ,சிறு, நடுத்தரநிறுவனங்களின்(Micro,Small,Medium Scale Enterprises(MSME)), சிறுவியாபாரிகளின் ஆண்டுவிற்பணைவருமானம் ரூபாய்ஒரு கோடியிலிருந்து ரூ.1.5 கோடியாக உயர்த்தப் பட்டுள்ளது அதிலும் காம்போஸிஸன் திட்டத்தினை பின்பற்றுபவர்கள் 01.04.2019 முதல் சரக்கு சேவை வரியை ஒவ்வொரு காலாண்டிற்குஒருமுறை செலுத்திடவேண்டும் அதற்கான அறிக்கையை மட்டும் ஆண்டிற்கு ஒருமுறை சமர்ப்பித்தால்போதுமானதாகும் தற்போது ஒவ்வொரு காலாண்டிற்கும் சரக்கு சேவை வரியை செலுத்திடவேண்டும் அதற்கான அறிக்கையையும் அந்தந்த காலாண்டில் சமர்ப்பித்திடவேண்டும் என்ற தற்போதைய நடைமுறையால் சிரமமப்படும் மிகச்சிறு சிறு நடுத்தரநிறுவனங்களின் (MSME's) கம்போஸிஸன் விற்பனையாளர்களின் பணிச்சுமை இதன் மூலம் குறைக்கப் பட்டுள்ளது 2 சரக்கு சேவைவரி செலுத்துவதற்கான மாநிலத்திற்குள் பொருட்களுக்கான விற்பணை வருமானம்வரம்பு ரூ.20. இலட்சங்களானது 01.04.2019 முதல்ரூ.40. இலட்சங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. சேவைகளுக்கு விற்பணை வருமானம்வரம்பு உயர்த்தப்படாமல் ரூ.20 இலட்சங்களானது அப்படியே உள்ளது மாநிலங்களுக்கிடையேயான விற்பணைவருமானமும் உயர்த்தப்படாமல் ரூ.20. இலட்சங்களானது அப்படியேஉள்ளது 3.மிகச்சிறு, சிறு, நடுத்தரநிறுவனங்களின்(MSME's) கம்போஸிஸன் திட்டத்தின் கீழ் சேவைபுரிபவர் எனில் ஆண்டு விற்பணைவருமானம் ரூ.50 இலட்சங்களுக்குள் இருப்பவர்கள் செலுத்தவேண்டிய சேவைவரியானது01.04.2019 முதல்6%(3% CGST + 3%SGST) ஆக குறைக்கப்பட்டுள்ளது தற்போது நடைமுறையில் இவர்கள் 12% அல்லது 18% ஆகசேவைவரி செலுத்துகின்றனர் விற்பணைவருமானம் ரூ.50 இலட்சங்களுக்குள் இந்த பணியை செய்திடுபவர்கள் உள்வரும்சேவைக்கான வரிசெலுத்துவதை வரவுஎடுத்துகொள்ளாமல்இந்த பயனைபெறலாம் 4. மிகச்சிறு ,சிறு ,நடுத்தர நிறுவனங்களானவை (MSME's) சரக்கு சேவை வரி கணக்கீடு செய்வதற்காக ஏற்படும் சிரமத்தை குறைப்பதற்காகவும் தனியாகஇதற்காகவென செலவிடாமல் இருப்பதற்காகவும் Accounting & Billing Software ஆனது இந்திய அரசால் இலவசமாக வழங்கப்படுகின்றது இதனை பதிவிறக்கம் செய்து தம்முடைய நிறுவனங்களின் விற்பணை பட்டியல் தயார்செய்வதுமுதல் கணக்குப்பதிவியல்பதிவுசெய்வதுவரை அனைத்துபணிகளையும் எளிதாக செயல்படுத்தி பயன்பெறலாம்.

சனி, 18 ஏப்ரல், 2020

முயற்சி செய்தால் எந்தவொரு பிரச்சினையையும் தீர்வுசெய்திடமுடியும்


ஒரு நாள் காலை நேரத்தில் பெரிய வியாபார நிறுவனத்தின் சொந்தகாரர் ஒருவர்தம்முடைய நிறுவனத்தில் நேற்று உருவாகிய பிரச்சினையை எவ்வாறு தீர்வுசெய்வது என தெளிவு பெறாமல் குழப்பத்துடன் தன்னுடைய வீட்டின் பால்கனியில் உட்கார்ந்து தேநீர் அருந்தி கொண்டிருந்தார் அந்நிலையில் ஒரு சிறிய எறும்பு அங்கும் இங்கும் சென்றுகொண்டும் வந்துகொண்டிரும் இருந்ததை கண்ணுற்றதும் தன்னுடைய பிரச்சினையை மனதின் ஓரத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு அந்த சிறிய எறும்பு என்னதான் செய்கின்றது என பார்வையிடத் துவங்கினார் அந்த எறும்பானது தன்னஉடைய உருவத்தைவிட மிகப்பெரிய இலை ஒன்றினை தன்னுடைய வாயால் பிடித்து இழுத்துகொண்டு சென்றது எங்குதான் அந்த இலையை இழுத்து செல்கின்றது என பார்ப்போம் என ஆழ்ந்து கவணித்தார் அந்தஎறும்பானது தான் செல்லும் வழியில் அந்த சிறிய எறும்பால் கடந்து செல்லமுடியாதவாறான கீரல் ஒன்று தரையில் இருந்தது அதன் மீது இந்த இலையை இழுத்து சென்று வைத்தது இப்போது அந்த இலையானது அந்த எறும்பால் கடக்க முடியாதவாறு தரையிலிருந்த கீரலிற்கு மேல் ஒருபாளம் போன்று ஆகிவிட்டது அதனால் அந்த எறும்பானது அனாயசமாக அந்த இலையின்மீது ஊர்ந்து சென்று கீரலின் அடுத்தபகுதிக்கு சென்றது அங்கு தின்பண்டங்களின் கழிவுகள் சிறிய மலைபோன்ற கொட்டப்பட்டு இருந்தன அவற்றில் ஒவ்வொன்றாக தன்னுடைய வாயால் பிடித்து இழுத்துகொண்டு அந்த இலையின் மேல் மெதுவாக ஊர்ந்து கீரலிற்கு இந்த பக்கத்தில் கொண்டுவந்து தன்னுடைய வசிப்பிடத்திற்கு கொண்டுசேர்த்தது இதனை கண்டவுடன் அடடா ஒரு சிறிய எறும்பு தனக்குமுன் அதனால் கடக்கமுடியாத அளவிற்கு பெரிய பள்ளம் போன்று இருந்ததடையை தாண்டிசெல்வதற்கு அருமையான வழியை கண்டுபிடித்து தனக்கு தேவையான உணவினை கொண்டுவந்த சேர்த்திட துவங்கிவிட்டதே என ஆச்சரியம் அடைந்தார் அதனை தொடர்ந்து நம்பிக்கையுடன் இன்று நாம் நம்முடைய வியாபாரத்தில் எதிர் கொண்டுள்ள பிரச்சினைக்கான தீர்வினை கண்டிப்பாக முயற்சிசெய்து தீர்வுகாண்போம் வெற்றி கொள்வோம் என முடிவெடுத்தார்

வியாழன், 16 ஏப்ரல், 2020

தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமங்களில் நிருவாக இயக்குநரையும் முழுநேர இயக்குநரையும் நியமித்தல்


நிறுமங்களின் சட்டம்2013இல் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமங்களில் நிருவாக இயக்குநரைஅல்லது முழுநேரஇயக்குரை கண்டிப்பாக நியமனம் செய்யவேண்டும் என்றோ அல்லது நியமனமே செய்ய வேண்டாம் என தடுக்கவோ தவிர்க்கவோ இல்லை ஆயினும் எந்தவொரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமமும் திறனுடன் செயலாற்றுவதற்காக அந்நிறுமத்தில் நிருவாக இயக்குநரைஅல்லது முழுநேரஇயக்குரை நியமித்து கொள்வது நல்லது என பரிந்துரைக்கப்படுகின்றது. நிறுமங்களின் சட்டம்2013 பிரிவு 2 (54) இன்படிநிருவாக இயக்குநர் என்பவர் நிறுமத்தின் நிறும அமைப்பு விதிமுறைகளின்படி(Articles of Association) அல்லது அந்த நிறுமத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி அல்லது நிறுமத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அல்லது இயக்குநர்களின் குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி நிறுமத்தினை திறம்பட நடத்தி செல்வதற்கான அந்நிறுமத்தின் அனைத்து அதிகாரங்களையும் கைகொண்டு செயல்படும் நிருவாக இயக்குநர் அல்லது வேறுஏதேனும் பெயரில் செயல்படும் நபராவார் நிறுமங்களின் சட்டம்2013 பிரிவு 2 (94) இன்படி முழுநேர இயக்குநர் என்பவர் அந்நிறுமத்தின் முழுநேரமும் பணிபுரியும் இயக்குநராவார் .வேறு வார்த்தைகளில் கூறுவதெனில், ஒரு நிறுவனத்தின் விவகாரங்களை கவணித்து கொள்வதில் தனது முழுநேரத்தையும் கவணத்தையும் செலவழித்து பணிபுரியும் இயக்குநரே முழுநேரஇயக்குநராவார். ஏற்கனவே ஒரு நிறுமத்தின் இயக்குநராக இருக்கும் நபர் மட்டுமே அந்நிறுமத்தில் நிருவாக இயக்குநராகவோ அல்லது முழுநேர இயக்குநராகவோ நியமிக்கமுடியும்.அதனால் ஒருநபர் எந்தவொரு நிறுமத்திலும் நிருவாக இயக்குநராகவோ அல்லது முழுநேர இயக்குநராகவோ செயல்பட வேண்டுமெனில் முதலில் அந்த நபர் அந்நிறுமத்தில் இயக்குநராக இருக்கவேண்டும் என்பது முன்நிபந்தனையாகும் அதனால் தற்போது ஏதேனும் ஒருநபரை ஒருநிறுமத்தில் கூடுதல் இயக்குநராக இயக்குநர்களின் குழுவில் நியமனம் செய்தால் அந்த கூடுதல் இயக்குநராக பதவிவகிப்பவர் தானாகவே அந்நிறுமத்தின் நிருவாக இயக்குநராகவோ அல்லது முழுநேர இயக்குநராகவோ நியமனம் செய்வதற்கு தகுதியுடையவர் ஆகின்றார் ஆயினும் அந்த கூடுதல் இயக்குநர் பதவியானது அடுத்த பொதுப்பேரவை கூட்டம் நடைபெறும்வரை மட்டுமே நிருவாக இயக்குநராகவோ அல்லது முழுநேர இயக்குநராகவோ பதவி வகிக்கமுடியும் அந்த பொதுப்பேரவை கூட்டத்தில் அந்த கூடுதல் இயக்குநரை மறுநியமனம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் தானாகவே அக்கூடுதல் இயக்குநர் தொடர்ந்து அந்நிறுமத்தின் நிருவாக இயக்குநராகவோ அல்லது முழுநேர இயக்குநராகவோ பதவி வகிக்க இயலும் . பொதுவாக எந்தவொரு நிறுமத்திலும் நிருவாக இயக்குநராகவோ அல்லது முழுநேர இயக்குநராகவோ நியமனம் செய்பவருக்கு குறைந்தபட்சம் 21 வயதும் அதிகபட்சம் 70 வயதும் இருக்கவேண்டும் 70 வயதிற்கு மேல் எனில் அந்நிறுமத்தின் பொதுப்பேரவைகூட்டத்தில் சிறப்புத்தீர்மானம் நிறைவேற்றி பொதுப்பேரவையில் உறுப்பினர்கள் அத்தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்திடவேண்டும் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே நிருவாக இயக்குநராகவோ அல்லது முழுநேர இயக்குநராகவோ நியமனம் செய்திடமுடியும் மேலும் காலநீ்ட்டிப்பு வேண்டுமெனில் மற்றொரு 5 ஆண்டிற்கு மறுநியமனம் செய்து கொள்ளலாம் ஆயினும் இயக்குநரின் பதவிகாலம் ஒரு ஆண்டிற்குள் இருக்கும்போது நிருவாக இயக்குநராகவோ அல்லது முழுநேர இயக்குநராகவோ நியமனம் செய்திடமுடியாது இந்நிலையில் நிருவாக இயக்குநர் ,முழுநேர இயக்குநர் ஆகிய இருபதவிகளையும் வகிப்பவர்கள் நிறுமத்தின் நிருவாகத்தை திறம்பட நடத்துபவர்கள்தான் எனில் இவ்விருவர்களுக்கும் இடையேயான வேறுபாடுகள் யாவை என்ற கேள்வி நம்முடைய மனதில் இயல்பாக எழும் .நிற்க. நிருவாக இயக்குநரை 5 ஆண்டுகளுக்கு மட்டுமே ஒவ்வொருமுறையும் நியமனம் செய்திடமுடியும் முழுநேர இயக்குநர் அவருடைய வாழ்நாள் முழுவதற்குமாக நியமனம் செய்திடலாம் தனிநபர் ஒருவர் நிருவாக இயக்குநராக இரண்டு நிறுமங்களில் மட்டுமே பணிபுரியமுடியும் ஆனால் முழுநேர இயக்குநர் ஒரேயொரு நிறுமத்தில் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கப்படுவார் நிறுமங்களின் சட்டம்2013இன்படி நிருவாக இயக்குநரை அல்லது முழுநேர இயக்குநரை நியமனம் செய்திடுவதற்கான வழிமுறைகள் நிறுமத்தின் அமைப்புவிதிமுறைகளில் இவ்வாறு நிருவாக இயக்குநரை அல்லது முழுநேர இயக்குநரை நியமனம் செய்திடுவதற்காக குறிப்பிடப்பட்டு ஒப்புதல் பெறப் பட்டிருக்கவேண்டும் அவ்வாறு இல்லையெனில் அவ்விதிமுறைகளில் திருத்தம் செய்வதன் வாயிலாக நியமனம் செய்வதற்கான விதிமுறைகளை சேர்த்திடவேண்டும் அதற்காக இயக்குநர்களின் குழுக்கூட்டத்தை கூட்டி அதில் நிருவாக இயக்குநரை அல்லது முழுநேர இயக்குநரை நியமனம் செய்வதற்கான விதிமுறைகளை உருவாக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெறவேண்டும் மேலும் நியமனம் செய்திடும் நிருவாக இயக்குநருடன் அல்லது முழுநேர இயக்குநருடன் இந்நியமனம் தொடர்பான நிபந்தனைகள் விதிமுறைகள் ஆகியவற்றுடன் தனியாக ஒப்பந்தம் ஒன்றினை ஏற்படுத்தி கொள்ளவேண்டும் படிவம் எண்DIR- 12இல் நிருவாக இயக்குநரை பற்றியஅல்லது முழுநேர இயக்குநரை பற்றிய விவரங்களை முழுவதுமாக பூர்த்திசெய்தபின் , இயக்குநர்களின் குழுக்கூட்டத்தில் இதற்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கான படிவம் எண் MGT-14 இல் மேலும் தேவையான விவரங்களை பூர்த்தி செய்துகொண்டு இவ்வாறு நியமனம் செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் நிறுமங்களின் விவகார அமைச்சகத்தின் (MCA)கீழ்செயல்படும் நிறுமங்களின் பதிவாளரிடம் இவ்விரு படிவங்களையும் சமர்ப்பித்திடவேண்டும் புதியதாக நியமனம் செய்வது மட்டுமல்லாமல் மறுநியமனம் செய்வது நியமன நிபந்தனைகளை அல்லது விதிமுறைகளில் மாறுதல்கள் செய்து கொண்டாலும் அதையும் படிவம் எண்DIR- 12 படிவம் எண் MGT-14 ஆகியவற்றின் வாயிலாக நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பித்திடவேண்டும் எந்தவொரு நிறுமத்திலும் சாதாரன இயக்குநர் பதவியை வகிப்பவர் எனில் அவ்வியக்குநர் தன்னுடைய பதவி விலகலை எழுத்துமூலமாக தம்முடைய நிறுமத்தின் இயக்குநர் குழுவிடம் அளித்துவிட்டால் போதுமானதாகும் ஆயினும் நிருவாக இயக்கநர் அல்லது முழுநேர இயக்குநர் எனில் பதவிவிலகல் கடிதம் அளித்து அந்த கடித்தத்தினை இயக்குநர்களின் குழுக்கூட்டத்தில் ஏற்றுகொண்டால்மட்டுமே பதவிவிலகமுடியும் அதுவரையில் அவர் தன்னுடைய பதவியில் தொடர்ந்து இருக்கவேண்டும் தனியார்வரையறுக்கப்பட்ட நிறுமத்தில் நிருவாக இயக்குநரை அல்லது முழுநேர இயக்குநரை நியமனம் செய்வது தொடர்பாக பொதுப்பேரவைகூட்டத்தில் ஒப்பதல் பெறத்தேவையில்லை அவ்வாறே அவர்களுக்கான ஊதியம் தொடர்பான நிறுமங்களின் சட்டவிதிகள் பொருந்தாது மின்னனு படிவம்எண் MR-1 சமர்ப்பிக்கவும் தேவையில்லை

திங்கள், 13 ஏப்ரல், 2020

சசேவ (GST)பதிவுஎண்இல்லாமலேயே பொருட்களை மின்னனுவழிபட்டியலுடன் கொண்டுசெல்லலாம்


உதாரணமாக அ என்பவர் திருப்பூரில் பனியன் உற்பத்திசெய்திடும் சிறுதொழில் நிறுவனர் அவருடைய நிறுவனத்தின் ஆண்டு விற்பணை வருமானம் ரூ.20/- இலட்சங்களுக்குள் (அல்லது புதிய விற்பணைவருமானவரம்பு ரூ40/-இலட்சங்களுக்குள்) உயர்த்தப்பட்டுள்ளது உள்ள ஒரு சிறுதொழில் நிறுவனம் என்பதால் GST இல் பதிவு எண் பெறாமல் தன்னுடைய தொழிலை நடத்திவருகின்றார் ஆனாலும் அவர் இந்த GST யை நடைமுறைபடுத்தப்பட்ட பிறகு தன்னுடைய உற்பத்தி பொருட்களை தமிழ்நாட்டிற்குள் அல்லது மற்றமாநிலங்களுக்கு அனுப்பிடும்போது மின்னனுவழி பட்டியலுடன் (E-Way Bill) மட்டுமே அனுப்பவேண்டுமா? ஆம் எனில் GST இல்பதிவு எண் பெறாத அவரால் இந்த E-Way Bill ஐ தயார்செய்து தன்னுடைய உற்பத்தி பொருட்களை அனுப்பமுடியுமா? என்ற மிகப்பெரிய கேள்விக்குறி அவர்முன் எழுந்து என்ன செய்வதுஎன தடுமாறி நிற்கின்றார் இந்நிலையில் அதற்காக கவலைப்படாதீர்கள் இவ்வாறானவர்களுக்கு உதவுதற்காகவே GSTஇன் இணையதளத்தில் E-Way Bill for Citizensஎனும் வாய்ப்பு தயாராக இருக்கின்றது இதற்கான தீர்வினை காண்பதற்குமுன் மின்னனு வழிபட்டியல் என்றால் என்னவெனஅறிந்து கொள்க மின்னனு வழிபட்டியல் என்பது GST இல்பதிவு எண் பெற்று வியாபாரம் செய்திடும் நபரொருவர் அல்லது GSTAஇல் பதிவுபெற்ற பொருள் போக்குவரத்து செய்திடும் நபரொருவர் பொருட்களை கொண்டுசெல்லும்போது அவைகளுடன் கூடவே அவைகளுக்கான ஆதார ஆவணமாக கொண்டுசெல்வதே மின்னனு வழிபட்டியலாகும் ஒரு மாநிலத்திற்குள் அல்லது மாநிலங்களுக்கிடையே ரூ. 50,000 மதிப்பிற்கு மேல்பொருட்களை கொண்டுசெல்லும்போது கண்டிப்பாக இந்த மின்னனு வழிபட்டியலுடன் மட்டுமே பொருட்களை கொண்டு செல்லவேண்டும் இந்தமின்னனு வழிபட்டியலை உருவாக்குவதற்காக தனியாக E-Way Bill System எனும் தளம் உதவத்தயாராக இருக்கின்றது GST இல்பதிவு பெற்றவர் ரூ. 50,000மதிப்பிற்கு மேல்பொருட்களை கொண்டு செல்லும்போது இந்த தளத்தில் இவ்வாறான மின்னனுவழி பட்டியலை உருவாக்கி அச்சிட்டு கொண்டுசெல்லலாம் GST இல்பதிவு பெறாதவரிடமிருந்து GST இல்பதிவு பெற்றவர் ரூ. 50,000 மதிப்பிற்கு மேல்பொருட்களை பெறும்போது பொருட்களை பெறுபவர் இந்த மின்னனு வழிபட்டியலை உருவாக்கி அச்சிட்டுக் கொண்டு செல்லவேண்டும் சாலைவழி , தொடர்வண்டிவழி ,வான்வழி ஆகியவற்றின் வாயிலாக ரூ. 50,000 மதிப்பிற்கு மேல்பொருட்களை கொண்டுசெல்லும் பொருள்போக்குவரத்தாளர் கண்டிப்பாக இந்த மின்னனு வழிபட்டியலுடன் மட்டுமே அவைகளை கொண்டு செல்ல வேண்டும் GST இல்பதிவு பெறாதவர் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி இந்தமின்னனுவழி பட்டியலை உருவாக்கி அச்சிட்டு கொள்ளலாம் 1. முதலில் E-Way Bill System எனும் தளத்திற்குள் செல்க 2. பின்னர் அதிலுள்ள Registration எனும் பட்டியில் E-Way Bill For Citizens எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக 3. தொடர்ந்து விரியும் திரையில் Generate New EWB எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக 4. பின்னர் விரியும் விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பிடுக இவ்வாறு விவரங்களை நிரப்பிடும்போது மிகமுக்கியமாக நாம் பொருட்களை கொள்முதல் செய்கின்றோம் எனில் Inward Option -எனும் வாய்ப்பினையும் நாம் பொருட்களை விற்பணை செய்கின்றோம் எனில் Outward Option -எனும் வாய்ப்பினையும் தெரிவுசெய்து கொள்க நாம் GST இல்பதிவு பெறாதவர் என்பதால் GSTIN எனும் புலத்தில் URP என உள்ளீடு செய்து கொண்டு இறுதியாக Submit எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக 5. இதனை தொடர்ந்து இறுதியாக நமக்கான மின்னனு வழிபட்டியல்(E-Way Bill) ஒன்றுஉருவாகி திரையில் பிரதிபலிக்கும் அதனை அச்சிட்டுகொள்க இதனை தொடர்ந்து பொருள் போக்குவரத்தாளர் இந்த மின்னனு வழிபட்டியலுடன் குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டுசெல்லலாம் இந்த E-Way Bill For Citizens எனும் வாய்ப்பானது விற்பணைவருமான மதிப்பு ரூ.20 இலட்சங்களுக்குள் (அல்லது புதிய விற்பணைவருமானவரம்பு ரூ40/-இலட்சங்களுக்குள்) உள்ள பொருட்களை கொண்டு செல்லபேருதவியாக இருக்கும் .

சனி, 11 ஏப்ரல், 2020

விற்பனை அலுவலர்கள் தம்கண்ணோட்டத்தை வித்தியாசமாக பதிவுசெய்திடுக


தங்களுடைய தொழிலகங்களின் உருவாக்கப்பட்ட பொருட்களைஉலகமுழுவதும் உள்ள நாடுகளில் விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளை கண்டறிந்து விற்பனையை பெருக்கி உலகமெல்லாம் ஒரேகுடையின் ஆண்டு வந்த இங்கிலாந்து நாட்டின் முழுகாலணி உற்பத்தி செய்திடும் நிறுவனம் ஒன்று தன்னுடைய விற்பனை அலுவலர்கள் இருவரை ஆப்பிரிக்க நாட்டிற்கு அனுப்பி அங்கு விற்பனை வாய்ப்புகளை ஆராய்ந்து வருமாறு பணித்தது அதனை தொடர்ந்து அவ்விருவரும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று திரும்பி வந்து இருவரும் தங்களுடைய நிறுவனத்தின் முழுகாலணி விற்னைணை செய்வதற்கான வாய்ப்பிற்கான தங்களுடைய கண்ணோட்டங்களை பின்வருமாறான அறிக்கைகளாக சமர்ப்பித்தனர் முதலாவது அலுவலர் ஆப்பிரிக்கநாடுகளில் வசிக்கும் நபர்கள் யாரும் காலணியே அணிவதில்லை அதனால் அங்கு நம்முடைய நிறுவனத்தின் முழுக்காலணி விற்பனை செய்வதற்கான வாய்ப்பே இல்லை என எதிர்மறையாக அறிக்கை சமர்ப்பித்திருந்தார் இரண்டாவது அலுவலர் ஆப்பிரிக்கநாடுகளில் வசிக்கும் நபர்கள் அனைவரும் காலணிஅணியாமல் வெறுங்கால்களால் நடக்கின்றனர் அதனால்அம் மக்களிடம் தம்முடைய கால்களில் நம்முடைய நிறுவனத்தின் முழுக்காலணிகளை அணிந்து மிகப் பாதுகாப்பாக இருக்குமாறு செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் வாயிலாக அங்கு நமது நிறுவனத்தின் முழுக்காலணியை விற்பனை செய்வதற்கான வாய்ப்பு மிகப்பிரகாசமாக இருக்கின்றது என அறிக்கை சமர்ப்பித்திருந்தார் கண்ணால் காணும் காட்சி ஒன்றுதான் ஒருவர் அதை தம்முடைய நிறுவனத்திற்கு சாதகமாகமாற்றி வெற்றிபெறலாம் என்றும் மற்றொருவர் அதையே நிறுவனத்திற்கான வாய்ப்பே இல்லை யென எதிர்மறையாகவும்சமர்ப்பித்தனர் விற்பனை அலுவலர்கள்தாம்கண்டு கொண்ட நிலையில்தம்முடைய கண்ணோட்டத்தை வித்தியாசமாக பதிவுசெய்வதில் நேர்மறையாக கைகொண்டு ஒவ்வொருவரும் தத்தமது நிறுவனத்தை வெற்றிபாதையில் கொண்டு செல்லமுடியும்

புதன், 8 ஏப்ரல், 2020

பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமத்தைவிட (Pvt) பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுவனம் (LLP) எவ்வாறு சிறந்தது


இந்தியாவில் தற்போதைய நிறுமங்களின் சட்டம் 2013இன் படி புதியதாக தொழில் துவங்கிடும்போது தனியார் பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமம் என பதிவுசெய்து துவங்குவதைவிட பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுவனமாக பதிவுசெய்து துவங்கிடுவது சிக்கல் குறைந்தது ஏராளமான சட்டதிட்டங்கள் பின்பற்றிடும் நடைமுறைஇல்லாததாகும் தற்போது Startup India Scheme எனும் திட்டத்தின்கீழ் Pvt , LLP ஆகிய இருவகைகளிலும் பதிவுசெய்து தொழிலை துவங்கிடலாம் ஆயினும் கூட்டாண்மை நிறுவனத்தில் கூட்டாளிகள் அனைத்து சட்டதிட்டங்களுக்கும் பொறுப்பாவார்கள் Pvt இல் அதன் உறுப்பினர்கள் அல்லது இயக்குநர்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பாக மாட்டார்கள் அதற்குபதிலாக Pvt எனும் நிறுமமே அனைத்து சட்டதிட்டங்களுக்கும் பொறுப்பாகும் நிறுமங்களின் விவாகாரத்துறையின்கீழ் (MCA) LLP என அழைக்கப்படும் ஒருகூட்டாண்மை நிறுவனமானது பொறுப்புவரையறுக்கப்பட்டகூட்டாண்மைசட்டம், 2008, இன்கீழ் பதிவுசெய்யப்படுகின்றது Pvtஎனசுருக்கமாக அழைக்கப்படும் தனியார் வரையறுக்கப் பட்ட நிறுமமானது நிறுமங்களின் சட்டம் 2013இன்கீழ் பதிவுசெய்யப்படுகின்றது. தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமத்தை (Pvt) பதிவுசெய்வதற்கான செலவு அதிகமாகும் வரையறுக்கப்பட்ட கூட்டாண்மையாக (LLP) பதிவுசெய்வதற்கு மிகவும் குறைவாகவே செலவாகும் அவ்வப்போது அறிக்கை சமர்ப்பித்தல் விவரங்களை சமர்ப்பித்தல் ஆகியவற்றிற்கான பொறுப்புறுதியும் செலவுகளும் Pvt ஐ விட LLP ஆனது மிகவும் குறைவாகும் கூட்டாண்மை நிறுவனத்தின் ஆண்டு வருமானம் குறைந்தபட்சவரம்பு ரூ.40 இலட்சங்களைவிட கூடுதலாக உயரும்போதும் கூட்டாளிகளின் பங்குத்தொகைரூ 25 இலட்சங்களைவிட அதிகமாகும் போது மட்டுமே கூட்டாண்மை நிறுவனத்திற்கு கணக்குகளின் தணிக்கைபணி அவசியமாகும் அதற்குபதிலாக தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமமெனில் குறைந்தபட்ச வரம்பெதுவுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் கணக்குகளின் தணிக்கை பணிகண்டிப்பாக செயல்படுத்திடவேண்டும் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொதுப்பேரவைகூட்டம் கண்டிப்பாக நடத்தபடவேண்டும் அவ்வாறே ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு இயக்குநர்களின் குழுக்கூட்டம் வீதம் ஆண்டொன்டிற்கு குறைந்தபட்சம் நான்கு இயக்குநர்களின் குழுக்கூட்டம் கண்டிப்பாக நடத்தப்படவேண்டும் அவ்வாறான நடைமுறை எதுவும் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுவனத்திற்கு இல்லை அதற்கு பதிலாக கூட்டாண்மை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டவாறு தேவைப்படும்போது மட்டும்கூட்டாளிகள் கூடி வியாபாரம் தொடர்பாக விவாதித்து முடிவுசெய்து கொள்ளலாம் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது நாம் துவங்க நினைக்கும் தொழிலை Pvt என பதிவுசெய்வதை விட LLP என பதிவுசெய்து துவங்குவது குறைவான பொறுப்புறுதிகளும் செலவுகள் குறைவாக வும் அதே சமயத்தில் நிறுமத்திற்கு உரியஅனைத்து நன்மைகளும் கிடைக்கின்றன

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

உணவகத்தொழில்துறையில் நெகிழ்வான கட்டுதல் (Flexible Packaging) எனும்வசதி


தற்போது உணவு மற்றும் பானங்கள் போன்ற நுகர்வு பொருட்களின் தேவை அதிகரித்து வருவதால், இவைகளின் உற்பத்தியாளர்கள் கட்டுதலில் கூடுதல் மதிப்பை உருவாக்க வேண்டிய தேவைஉருவாகின்றது. இந்நிலையில்நெகிழ்வான கட்டுதலானது உணவுத் தொழில்துறைக்கு மறுக்கமுடியாத ஆபத்துதவியாளராக விளங்குகின்றது, ஏனெனில் இது உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், நீடித்து நிலைக்கும் தன்மைக்கும் பொருந்தக்கூடிய தன்மையையும் வழங்குகிறது. நெகிழ்வானகட்டுதலை உணவகபொருட்கள் உற்பத்தியில் பயன்படுத்துவதால் பல்வறு நன்மைகள்கிடைக்கின்றன அவை பின்வருமாறு 1.நீடித்த உணவுப்பொருட்களின் பாதுகாப்பு , இந்த நடைமுறையில் உணவுப்பொருட்களை நீண்டகாலத்திற்கு சேமித்து வைத்திருக்கும்போது வழக்கமான நடைமுறையில் சேமித்து வைத்திடும்போது வீணாகி அழிந்து கெட்டுபோவதைபோன்றில்லாமல் நல்லநிலையில் நீண்டநாட்கள் இருக்கஉதவுகின்றது நெகிழ்வான கட்டுதலில் பெரும்பாலும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள், ஈரப்பதம் ஆகியவற்றிலிருந்து உணவுப் பொருட்களை மிகப்பாதுகாப்பாகவும், புத்தம்புதியாதாகவும் வைத்திருப்பதற்கான வழியை வழங்குகின்றது. எனவே, நெகிழ்வான கட்டுதல் செய்திடும் நிறுவனங்கள் உணவு பொருட்களை நீண்டநாட்கள் கெடாமல் வைத்திட இதன்வாயிலாக உறுதிப்படுத்துகின்றன. 2 மிகச் செலவுகுறைந்தது இதனை நடைமுறைபடுத்திட அதிக செலவிடத்தேவயில்லை அதாவது பெரிய நிறுவனங்கள் மட்டுமே இதனை நடைமுறைபடுத்தமுடியும் என்றில்லாமல் சிறுதொழில்நிறுவனங்கள் கூட இதனைநடைமுறைபடுத்தி கட்டுதல் செலவினை குறைத்திடலாம் இவ்வாறு கட்டுதலுக்கு குறைந்தஅளவு பொருட்களும் எடைகுறைந்த வாறும் நம்முடைய உணவுப்பொருட்களின் உற்பத்தி தேவைக்கு ஏற்பவும் கட்டுதல் செய்துகொள்ளலாம் 3. பயனாளர் விரும்பியவாறு கட்டுதல்பல்வேறு வகைகளாலான உணப்பொருட்களின் தோற்றம் அளவிற்கு ஏற்ப வாடிக்கையாளர் விரும்பியவண்ணம் வரத்தக தேவைக்கேற்ப கட்டுகளின் அளவை தோற்றத்தை வடிவமைத்து அளவிடுதல் செய்து பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் கட்டுதலை உருவாக்கிகொள்ளமுடியும் 4சுற்றுச்சூழலின் நண்பன் தற்போதைய நடைமுறையில் கட்டும்பொருட்களால் அதிக கழிவுகள் உருவாகி பெரியஅளவ சுற்றுசூழல் பிரச்சினை பெரும் அச்சுறுத்தலாக உயர்ந்துவருகின்றது அதனை தவிர்த்து இந்த புதிய நெகிழ்வு கட்டுதல் முறையானது விரைவான மறுசுழற்சி வழிமுறையினால் சுற்றுசூழலின் இனிய நண்பனாக விளங்குகின்றது போக்குவரத்தின்போது ஏற்படும் சேதத்தினை தவிர்க்கின்ற மறுசுழற்சியாக பயன்படும் இந்த நெகிழ்வான கட்டுதல் (Flexible Packaging) எனும்வசதியை பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது

சனி, 4 ஏப்ரல், 2020

வி்யாபார வெற்றிக்கதை


பிரட் ஸ்மித்என்பவர் அமெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக்கழகத்தில் 1965 ஆம் ஆண்டில் இளங்கலை பட்டம் பெற்றார். அவ்வாறான இளங்கலை பட்டப்படிப்பின்போது ஒரு பகுதியாக, அவர் அமெரிக்கநாட்டில் பொருட்களின் போக்குவரத்து வழிவகைகளை ஆய்வு செய்து பொருளியல் கட்டுரைஒன்றினைசமர்ப்பித்தார். அதில் பெருமளவிளான பொருட்களனைத்தும் தரைவழி போக்குவரத்தில் கொண்டுசெல்வதையும் பயனிகள் வான்வழியில் செல்வதையும் கண்டறிந்தார் அதனை தொடர்ந்து பயனிகள் போக்குவரத்திற்கு பயன்படும் விமானம் மூலம் சிறிய, அத்தியாவசிய பொருட்களையும் கொண்டு செல்வதுஒரு சிறந்தசெயலாக இருக்கும் என அவருடைய மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. அதற்காக கடைசி நிமிட ஆவணமாக அதனை சேர்த்துசமர்ப்பித்தார். இருப்பினும், அத்தகைய நிறுவனத்தை எவ்வாறு உண்மையில் நடத்துவது என்பது குறித்த விவரங்களை அதில்அவர் செல்லவில்லை. அதனால் அவருடைய கட்டுரையானது "சி" என்று வரிசைப்படுத்தப்பட்டது. ஆனால் ஸ்மித் அந்த யோசனையை கைவிட்டுவிடாமல் 1971 ஆம் ஆண்டில் அதனை செயற்படுத்திடுவதற்கான ஃபெடரல் எக்ஸ்பிரஸ்என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். ஆனால்அந் நிறுவனம் நிறுவப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள், நலிவுறும் விளிம்பிற்குள் தள்ளப்பட்டிருந்தது. ஏனெனில் உயரும் எரிபொருள் செலவுகளின் காரணமாக மாதமொன்றிற்கு ஒரு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நிறுவனத்தின் கையிருப்பில் $ 5000 மட்டுமே இருந்தது.அதாவது அன்றாடம் தேவைப்படும் விமானஎரிபொருளை கொள்முதல் செய்வதற்குகூட போதுமான நிதியில்லாமல் அல்லாடவேண்டிய சூழ்நிலை உருவானது அதனால் ஸ்மித் தன்னுடைய நிறுவனத்திற்காக உள்ளூரில் பல்வேறு நிதிநிறுவனங்களிடமிருந்து நிதியுதவி கோரினார் ஆனால் அவருடைய . கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பொதுவாக இவ்வாறான நிலையில் பெரும்பாலானவர்கள்தம்முடைய நிறுவனத்தை மூடிவிட்டு இந்ததொழிலே நமக்கு வேண்டாம் என விலகிஓடிவிடுவார்கள், . ஆனால் பிரெட் ஸ்மித் அவ்வாறான முடிவெதும் எடுத்திடாமல்.அருகிலிருந்த லாஸ் வேகாஸ் எனும்நகரத்திற்கு பறந்து சென்று அங்கு அறிமுகமானஒருசில நண்பர்களின் நிதிநிறுவனங்களிடமிருந்து சொந்த தனிப்பட்ட நபரின் உத்திரவாதத்தின் அடிப்படையில் தன்னுடைய நிறுவனத்தின் நடைமுறை மூலதனத்திற்கு தேவையான நிதியினை பெறமுயற்சி செய்து வெற்றி பெற்றார் அதனால் மறுநாள் அவருடைய ஃபெடரல் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் ஆச்சரியமாக 32,000 டாலர்களாக உயர்ந்திருந்தது இது ஒரு சில நாட்களுக்கு விமானங்களின் எரிபொருளை கொள்முதல் செய்து விமான இயக்கம் தடைபெறாமல் இருப்பதற்கு போதிய நடைமுறைமூலதன அளவாகும் அதனை தொடர்ந்து . அவருடைய ஃபெடரல் எக்ஸ்பிரஸ் நிறுவனம் குறிப்பிடத்தக்க அளவு வருமானமும் ஈட்டத்தொடங்கியது நாளுக்கு நாள் மென்மேலும் வளர்ந்துகொண்டேவந்துஇன்று 220 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் செயல்படும் ஒரு உலகளாவிய மாபெரும் நிறுவனமாக ஃபெடரல் எக்ஸ்பிரஸானது 45 பில்லியன் அமெரிக்கடாலர் வருடாந்திர வருவாய் ஈட்டிடும் நிறுவனமாக ஆலமரம்போன்று தழைத்தோங்கி வளர்ந்துள்ளது. எந்தவொரு இக்கட்டான நிலையிலும் மனந்தளர்ந்துவிடாமல் முயன்றால் வெற்றி நிச்சயம்

புதன், 1 ஏப்ரல், 2020

தேவைக்கேற்ப அலுவலர்களை நியமித்தல் (Flexi-staffing)


ஓரு நிறுவனத்தில் தணிக்கை பணியை முடிப்பதற்கு பட்டய கணக்கரை நியமிக்கின்றனர். அந்நிறுவனத்தின் தணிக்கை பணி முடிந்து அதற்கான கட்டணத்தை அவருக்கு வழங்கியவுடன் அத்துடன் அவருக்கும் அந்நிறுவனத்திற்கும் உள்ள உறவு முடிந்துவிடுகிறது. அவ்வாறே ஒரு நிறுவனத்தின் சட்டப்பிரச்சனைகளை சமாளிக்க முழுநேர ஊழியரை நியமிப்பதை விட தேவைப்படும்போது மட்டும் சட்ட வல்லுநா¢களின் ஆலோசனையை அதற்கான கட்டணத்தை வழங்கி பயன்படுத்திகொள்வது அந்நிறுவனத்திற்கு செலவை குறைக்க கூடிய ஒரு சிறந்த வழிமுறையாகும். பெரிய மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவா¢களை முழு நேர பணியாளராக நியமிப்பதற்கு பதிலாக தேவைக்கேற்ப இவர்களை நியமனம் செய்து அந்நிறுவனத்தின்¢ நிரந்தர செலவை குறைத்துகொள்கின்றன. இதனால் இவ்வாறான சிறப்பு மருத்துவா¢கள்¢¢ சுதந்திரமாக தம்முடைய பணியை முடித்து அதற்கான கட்டணத்தை பெற்றுக் கொண்டு அடுத்தவேறு பல பணிகளை செய்ய முடிகிறது. ஒரு மருந்து உற்பத்தி நிறுவனம் குறிப்பிட்ட ஆய்வு பணிக்காக நிரந்தர பணியாளர்களை நியமித்துள்ளது அந்த ஆய்வுப்பணி முடிவடைந்தவுடன் ஆய்வில் ஈடுபட்ட அலுவலர்களை வேறு பணிக்கு மாறுதல் செய்யும்போது அந் நிறுவனம் நிறைய சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இ¢வ்வாறு அந்நிறுவனம் ஆராய்ச்சி வளா¢ச்சி பிரிவு என்று தனியாக ஏற்படுத்துவதை விட இதற்காக ஏற்கனவே செயல்படும் நிறுவனத்திடமிருந்து தம்முடைய தேவைக்காக அதற்கான கட்டணத்தை மட்டும் வழங்கி சேவையை பெற்று கொள்வது சாலச் சிறந்தது. இவ்வாறான செயல்களைத்தான் தேவைக்கேற்ப அலுவலா¢களை நியமித்தல் Flexi-staffing என்று கூறுகிறோம். இது கடந்த பத்தாண்டுகளாக மிக அதிக அளவில் எல்லாத்துறையிலும் பரவி வருகிறது. இப்போது ஒரு லட்சம் அளவான இந்த பணி வரும் நான்கைந்து ஆண்டுகளில் பத்து லட்சம் அளவிற்கு உயர வாய்ப்புள்ளது. இந்த தேவைக்கேற்ப அலுவலா¢களை நியமித்தலி Flexi staffingனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன? 1. குறிப்பிட்ட ஒரு தொழில்நுட்ப பணிக்காக ஒருவரை நியமிக்கும்போது அந்த பணி முடிந்து அதற்கான கட்டணத்தை வழங்கியவுடன் அவருடன் உள்ள உறவு அத்தோடு முடிந்துவிடுகிறது. இவருக்கான சம்பளம் மற்றும் இதர செலவுகள் வாழ்நாள் முழுவதும் தொடராது அதனால் நிறுவனத்திற்கான நிதிச்சுமை பெருமளவு குறைக்கப்படுகிறது. 2. குறிப்பிட்ட வகை தொழில்நுட்ப வல்லுனா¢ தம்முடைய துறையின் பணியில் மட்டும் ஈடுபடுவதால் தம்துறையில் மேலும் பல புதிய புதிய உத்திகளை நடைமுறைப்படுத்தி மிக சிறப்பாக பணியாற்ற முடிகிறது. 3. இந்த தனிச்சிறப்பு தொழில்நுட்ப வல்லுனா¢ தன்னுடைய பணியில் யாருடைய தலையீடும்/இடையூறுமின்றி சுதந்திரமாக பணியாற்ற முடிகின்றது. 4. இந்தவகை சிறப்பு தொழில்நுட்ப வல்லுனரின் புதிய புதிய உத்திகளும், வழிமுறைகளும் குறைந்த செலவில் விரைவில் முடித்திடும் வகையிலான வசதிகளும், வாய்ப்புகளும் சிறிய நிறுவனங்களுக்கு கூட எளிதில் கிடைக்கின்றன. 5. இந்த வழிமுறையில் ஒரு நிறுவனத்தின் பணிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரம் வரையில் பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. பணியின் தன்மையை மட்டும் அறிந்து கொண்டு எப்போது விருப்பமோ அப்போது நிறுவனத்தின் பணியைசெய்து முடித்து இதற்கான கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம். உதாரணமாக பண்டிகை நாட்களின் அதிக தேவையை முன்னிட்டு நிறுவனங்கள்¢¢ தங்களின் பொருளை அதிக அளவு உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது நிரந்தர தொழிலாளா¢களுக்கு மிகை ஊதியம் வழங்கி இரண்டு அல்லது மூன்று காலப்பகுதியாக பணியினைசெய்யும்போதும் முடியாத சமயத்தில் தேவைக்கேற்ப அலுவலா¢களை நியமித்தல் அடிப்படையில் கூடுதலான தொழிலாளா¢களை பயன்படுத்தி தம்முடைய பணியை முடித்து கொளகின்றன. இது ஒரு கூடுதலான தேவையை நிறைவு செய்வதற்கேற்ப நிறுவனத்தின் உற்பத்தியை உயா¢த்தும் வழிமுறையாகும். மேலும் அந்நிறுவனத்தின் உற்பத்தி செலவையும் இதன் மூலம் குறைக்கவும் முடிகிறது. இவ்வாறே Business processing outsourcing என்பது மிக முக்கியமாக தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ள ஒரு கருத்தமைவாகும். வெளிநாட்டு நிறுவனங்கள் தமக்கு தேவையான அனைத்து பணிகளையும் முழுநேர அலுவலா¢களின் நியமனத்திற்கு பதிலாக இந்த Flexi staffing அடிப்படையில் குறைந்த செலவில் வெளிநாடுகளில்¢ உறையும் மக்களின் மூலம் தம்முடைய பணியை முடித்து கொள்கின்றன. ஒரு நிறுவனத்தில் முழுநேர ஊழியரை நியமிப்பதா? தேவைக்கேற்ப வெளியில் உள்ள அலுவலா¢களின் மூலம் பணியை முடிப்பதா? எது பயனுள்ளது? சிறு நிறுவனமாக இருந்தால் தம்முடைய நிறுவனத்திற்கு தேவையான மென்பொருட்களை கட்டணத்துடன் வெளியிலிருந்து பெற்று பயன்படுத்துவது நல்லது. மிகப்பெரிய நிறுவனமெனில்¢ அதையே முழுநேர ஊழியரின் துணையுடன் அந்த பணியை முடித்து கொள்வதுதான் செலவு குறைந்த செயலாகும்., அதனால் இதற்கான இறுதி முடிவு என்பது அந்தந்த நிறுவனத்தின் நிலை, தேவை ஆகியவைபொறுத்து மாறுபடும், இந்த Flexi-staffing ஆனது சிறப்பு வகை செயல்திறமையை மக்களிடம்ஊக்குவிக்கிறது, வளா¢க்கிறது. மிக முக்கியமாக மக்களை கிராமப்புறத்திலிருந்து நகரத்தை நோக்கி நகருவதை தடுப்பதற்கு பயன்படு¢கின்றது. எப்படி? கிராமப்பகுதிகளில் விவசாயம் சார்ந்த தொழில்களான விதைவிதைத்தல்,நாற்று நடுதல் ,களை பறித்தல், அறுவடை செய்தல் போன்ற பல்வேறு பணிகளும் இந்த தேவைக்கேற்ப பணியாளா¢களை தற்காலிகமாக நியமனம் செய்தல் அடிப்படையில் தான் செயல்படுத்தப்படுகிறது, இவ்வாறே தொழில்துறையிலுள்ள நுகா¢வோ£¢ பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று தம்முடைய பொருட்களை நாடு முழுவதும் விற்பனை செய்வதற்காக முழு நேர விற்பனையாளா¢களை நியமனம் செய்வதற்கு பதிலாக அந்தந்த ஊ£¢களிலும் குறிப்பாக கிராம பகுதியில் தகுதியும் திறமையும் உள்ளவா¢களை தனித்திறன்கிளை (Franchise) அமைத்திடும் அடிப்படையில் நியமித்து எந்த அளவிற்கு விற்பனை செய்கிறார்களோ அந்த அளவிற்கு கழிவுத்தொகை ஈட்டலாம் என ஊக்கப்படுத்தியது. இதனடிப்படையில்¢ கிராமவாசி ஒருவரால்¢ தம்முடைய குடும்ப உறுப்பினா¢களின் அனைவரின் உதவியுடன் தம்முடைய ஊரிலேயே இந்த பொருளை விற்று அதற்கேற்ற வருவாயை ஈட்ட முடியும். நிறுவனங்களின் விற்பனை பணிக்கு மட்டுமன்று உற்பத்தி பணிக்கு கூட இவ்வாறு Flexi-staffing வழிமுறையை பின்பற்றலாம். ஒரு நிறுவனம் கிராம பகுதிக்கு தேவையான பொருட்களை குறிப்பிட்ட ஓரே இடத்திலேயே உற்பத்தி செய்யாமல் நாடுமுழுவதும் உள்ள அந்தந்த கிராமங்களில் வாழும் இளைஞா¢களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் பயிற்சி அளித்து உற்பத்தி செய்வதற்கு தேவையான மூலப்பொருட்களை வழங்கி உற்பத்தி செய்ய தூண்டும்படிச்செய்கிறது எனக் கொள்வோம். இவர்கள் பிழைப்பைத்தேடி நகரத்திற்கு செல்லாமல் தம்முடைய கிராமத்தி¢லேயே இந்தப் பொருட்களை உற்பத்தி செய்து தாம் வாழ்வதற்கு தேவையான வருவாயை ஈட்ட முடியும். அதனால் அந்நிறுவனத்திற்கும்¢ பொருள் உற்பத்தியின் செலவு குறையும்¢. இதே அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப பணிகளையும் கிராமப்புறத்திற்கு கொண்டு சென்றால் கிராமமக்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.இந்த Flexi-staffing என்பதன் மூலம் மக்கள் மற்றும் நிறுவனம் இணைந்த கிராமபொருளாதாரத்தை உயா¢த்த கூடிய ஒரு வெற்றி கூட்டணியாக சிறந்து மேலோங்¢க முடியும். அரசு இதற்கு தேவையான அடிப்படை கட்டமைவான சாலை, மின்சாரம், தொலைத்தொடா¢பு போன்றவசதிகளை மட்டும் செய்து கொடுத்தால் போதும். கிராமமக்களுக்கும் அதிக அளவு வேலை வாய்ப்பை வழங்க கூடிய வாழ்வை மேம்படுத்த கூடிய செயலாக இந்த தேவைக்கேற்ப அலுவலா¢களை நியமித்தல் (Flexi-staffing) அமையும்¢.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...