சனி, 21 டிசம்பர், 2019

சிங்கமும் ஏழை அடிமையும்


முற்காலத்தில் பெரிய பெரிய பணக்காரர்களும் அவர்களின் கீழ் ஏராளமானஅடிமைகளும் வாழும் நடைமுறை இருந்துவந்தது ஆனாலும் இப்போதுஇந்த இருபத்தி.யொன்றாம் நூற்றாண்டில் கூட புதியநவீனமான அடிமை சமூகத்தில் அவ்வாறு அடிமையாக தாங்கள் வாழ்கின்றோம் என்றுதெரியாமலேயே நாமெல்லோரும் வாழ்ந்து வருகின்றோம் அவ்வாறான ஒரு முதலாளியிடம் வாழ்ந்துவந்த அடிமையொருவன் தன்னுடைய முதலாளியால் அதிக கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பொறுக்கமுடியாமல் காட்டிற்கு சென்றால் கொடியவிலங்குகளுக்கு இரையாகி தன்னுடைய உயிரை மாய்த்து கொள்வோம் என ஓடினான் அங்கே காட்டில் ஒருசிங்கமானது இரைதேடுவதற்காக ஓடிடும்போது முள்ஒன்று அதனுடைய காலில் குத்திவிட்டதால் நடக்கமுடியாமல் அதிக வலியுடன் படுத்துகிடந்ததை கண்டான் இந்த அடிமை சரி இந்த சிங்கத்தின் காலில் தைத்த முள்ளை எடுத்துவிடுவோம் அதன்பின்னர் அது நம்மை அடித்து சாப்பிட்டுவிடும் என முடிவுசெய்து அந்த சிங்கத்தின் காலில் தைத்த முள்ளை மிகவும் சிரமமபட்டு எடுத்தபின்னர் அருகிலிருந்த முட்பதரில் வளர்ந்திருந்த பச்சிலையை பறித்து முள்தைத்த சிங்கத்தின் காலில் சாறு பிழிந்து விட்டான் அந்த அடிமை சிறிது நேரத்தில் அந்த சிங்கத்தின் கால் வலி சரியாகிவிட்டது அதனால் அந்த சிங்கமானது அந்த அடிமையை அடித்து தின்றாமல் சென்றுவிட்டது சரி உயிர் இருக்கும் வரையில் வயிற்று பசியையாவது தீர்ப்போம் என அருகிலிருந்த காட்டு பழச்செடிகளிலிருந்து பழங்களை பறித்து தின்று பசியாறினான் இந்நிலையில் அந்த அடிமையினுடை முதலாளியானவன் இவனை எப்படியாவது தேடிகண்டுபிடித்து அழைத்துவருமாறும் மேலும் காட்டில் உள்ள மற்ற விலங்குகளை வேட்டையாடி கொண்டுவருமாறும் தன்னுடைய அடியாட்களை அனுப்பியிருந்தான் அந்த முதலாளியின் அடியாட்கள் காட்டிற்கு வந்து இந்த அடிமையையும் சிங்கம் போன்ற பல்வேறு விலங்குகளையும் சிறைபிடித்து கொண்டு திரும்பினார்கள் திரும்பிய பின்னர் இந்த அடிமை காட்டிற்கு தப்பித்து சென்றதால் அவனுக்கு தக்கதண்டனை வழங்கவேண்டும் என அந்த முதலாளி விரும்பினான் அதனால் தாங்கள் சிறைபிடித்து வந்த சிங்கம் இருக்கும் கூண்டிற்குள் தப்பிசென்ற இந்த அடிமையை உள்ளே தள்ளி கூண்டினை அடைத்து விட்டாான்அந்த முதலாளி என்ன ஆச்சரியம்அந்த கூண்டிலிருந்த சிங்கம் இந்த அடிமையால் அதனுடைய காலில் தைத்திருந்த முள் எடுத்து காத்த சிங்கமாகும் அதனால் அந்த சிங்கமானது மிகவும் நட்புணர்வுடன் அவனுடைய கைகளை நக்கி கொடுத்து கொண்டிருந்தது நீதி: ஒருவருக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உதவியை நாம் செய்தால் , அதற்கு பிரதிபலணாக நமக்கு உதவக்கூடிய செயல்களின் பலன்களைப் கண்டிப்பாக பெறுவோம்.

வெள்ளி, 20 டிசம்பர், 2019

எந்தவொரு நிறுவனத்திலும்பணியில் சேராமலேயே சுதந்திரமாக பணிபுரிந்து சம்பாதிப்பதற்கு உதவும் இணையதளங்கள்


ஒருசில சுதந்திரமான இணையதளங்கள் எந்தவொருநிறுவனத்திலும் அடிமையாகாமல் சுதந்திரமாக பணிபுரிந்து போதுமான பணத்தினை ஈட்டிடுவதற்காக உதவுகின்றன அதிலும் தேவையானசேவைகளை இணையத்தின் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு இவை வழங்கு கின்றன சுதந்திரமாக பணிபுரிந்து பணம் ஈட்டிடுவதற்கு விரும்பு-வோர்கள் முழுநேரமாகஅல்லது பகுதிநேரமாக தம்முடைய வீ்ட்டிலிருந்தவாறுகூட பணிபுரியவும் அதற்கானஒப்பந்தத்தை மேற்கொள்ளவும் இவை பேருதவியாய் விளங்குகின்றன அவைகளுள் ஒருசில பின்வருமாறு 1.Upwork எனும் தளமானது 12 மில்லியன் பயனாளர்களையும் பல்வேறு வாடிக்கையாளர்களையும் கொண்டு சுதந்திரமாக பணிசெய்திட விரும்பு-வோர்களுக்கு மிகவிரைவாக தேவையான பணிகளை அதாவது ஏறத்தாழ மூன்று மில்லியன் பணிகளை விரைவாக கிடைக்கசெய்கின்றது ஒவ்வொரு செயல்-திட்டத்திற்கும் அல்லது பணிக்கும் எவ்வளவு என தனித்தனியாக தொகையானது நிர்ணயம் செய்யப்பட்டு அதில் நம்முடைய பணிக்கேற்றவாறு அல்லது காலஅளவிற்கு ஏற்றவாறு தொகைவழங்கப்-படுகின்றது எழுதுதல் வடிவமைத்தல்,மெய்நிகர் உதவியாளர்களாக செயல்படுதல் என்பனபோன்ற பல்வேறு பணிவாய்ப்புகள் இதில் கிடைக்கின்றன மேலும் விவரங்களுக்கு https://www.upwork.com/ என்ற இணைய தள பக்கத்திற்குசென்றறிந்து பயன்பெறுக 2. Fiverr என்பது ஒரு சுதந்திரமாக பணிசெய்து போதுமான பணத்தினை ஈட்டிடுவதற்காக உதவிடும் மிகவும்பிரபலமான இணையதளமாகும் இது அனைத்து வகையான பணிகளும் கிடைக்க செய்கின்றது பணிவாய்ப்பு வழங்கிடும் நிறுவனங்களுடன் ஒரு சிறந்த இணைப்பு பாளமாக இது விளங்குகின்றது மேலும் இந்த தளத்தின் வாயிலாக நம்முடைய சேவையை விற்பணை செய்திடமுடியும் இதில் பணிஒன்றிற்கு அடிப்படை விலையாக குறைந்தபட்சம் ஆறுடாலரிலிருந்து துவங்குகின்றது மேலும் விவரங்களுக்கு https://www.fiverr.com/ என்ற இணைய தள பக்கத்திற்குசென்றறிந்து பயன்பெறுக 3.People per Hour என்பது மற்றொரு பிரபலமான வேலைவாய்ப்பினை வழங்கிடும் இணையதளமாகும் இது முக்கியமாக கணினிசெயல்திட்டங்களான developers, SEO, writers, coders ஆகியவற்றில் மட்டும்அதிக பணிவாய்ப்புகளை வழங்குகின்றது இதிலுள்ள WorkStream எனும் கருவியானது நிறுவனங்களையும் பணிபுரிபவர்களையும் இணைத்திடும் பாளமாகவும் பணம் வழங்குதலிலும் நிருவகிப்பதிலும் சிறப்பாக செயல்படுகின்றது அதிக பட்ச வியாபாரம் தொடர்பான பணிக்கு இது உதவுகின்றது நம்முடைய பணியைபற்றிய விவரங்களை கானொளிபடங்களாக இதில் பதிவுசெய்து கொண்டால்நமக்கு பணி-அறிவிப்புகளை நமக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பிவைக்கின்றது அதனை தொடர்ந்து நமக்கான பணியை நாம் பெறவும் தொடர்ந்து பணிக்கான தொகை நமக்கு கிடைக்கவும் இடைமுகமாக செயல்படுகின்றது மேலும் விவரங்களுக்கு https://www.peopleperhour.com/ என்ற இணைய தள பக்கத்திற்குசென்றறிந்து பயன்பெறுக 4. 99 Designs என்பதுவடிவமைப்பாளர்களுக்கான ஒரு மிகச்சிறந்த பணிவாய்ப்பினை வழங்கிடும் இணயதளமாகும் இதில் தற்போது ஒருமில்லியன் வடிவமைப்பாளர்கள் உலகமுழுவதிற்கும் பதிவுசெய்துள்ளனர் பொதுவாக இது அனைத்து வாடிக்கையாளர்-களுடனும் இணைப்பினை ஏற்படுத்தி தங்களின் வடிவமைப்புதிறனை காண்பிக்குமாறு செய்கின்றது வாடிக்கை-யாளர்களும் தங்களுடைய வியாபாரம் தொடர்பான விவரங்களை வழங்கி அதற்கேற்ற வியாபார குறியீடுகள்(லோகோ) போன்றவைகளை வடிவமைத்திடுமாறு கோருகின்றனர் இதன்பின்னர் தேவையான வடிவமைப்பினை பெற்று வியாபார நிறுவனங்களும் திருப்தி கொள்கின்றன வடிவமைப்பாளர்களும் தேவையான பணத்தினை இதன் வாயிலாக ஈட்டுகின்றனர்மேலும் விவரங்களுக்கு https://99designs.com/ என்ற இணைய தள பக்கத்திற்குசென்றறிந்து பயன்பெறுக 5.Guru .என்பது மிகவும் நீண்டகாலமாக வேலைவாய்ப்பினை வழங்குகின்ற மிகவும் பிரபலமான இணையதளமாகும் இது தொழில்நுட்ப வியாபார திட்டங்களுக்கு மட்டும் வேலைவாய்ப்பினை வழங்கிடும் இணையதளமாகும் சுதந்திரமாக பணிசெய்ய விரும்புவோர் தங்களுடைய சுயவிவரங்களை இதில்பதிவுசெய்து கொண்டால் போதும் அதனை பார்வையிடும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தகுதியானவர்களை தெரிவு-செய்து கொள்கின்றனர். இந்த பணியானது ஒருமணிநேரம் ,ஒரு வாரம் ,ஒருமாதம் அல்லது குறிப்பிட்ட பணிமுடிப்பதற்கு மட்டுமென தெரிவுசெய்து கொள்ளமுடியும் மேலும் விவரங்களுக்கு .https://www.guru.com/ என்ற இணைய தள பக்கத்திற்குசென்றறிந்து பயன்பெறுக 6.iFreelance என்பது சுதந்திரமாக பணிபுரிபவர்களுக்கான மற்றொரு பிரபலமான இணைய-தளமாகும் இதுphotography, videography, traditional art, writing, marketing, architecture translation,, engineeringஎன்பனபோன்ற பல்வேறு வகையான சுதந்திரமானபணிகளை வழங்கும் இணையதளமாகும் இதில் மிகஎளிதாக நம்முடைய விவரங்களை பதிவுசெய்து கொண்டு நமக்கான பணியைதேடிபெறஉதவுகி்ன்றது மேலும் விவரங்களுக்கு https://www.ifreelance.com/ என்ற இணைய தள பக்கத்திற்குசென்றறிந்து பயன்பெறுக 7. Freelancerஎன்பது சுதந்திரமாக பணிபுரிபவர்களுக்கான பிரபலமான இணைய-தளமாகும் இதுmarketing, writing, web design, என்பனபோன்ற பல்வேறு வகையான சுதந்திரமான பணிகளை வழங்குமொரு இணையதளமாகும்இதில் வாடிக்கையாளர்கள் பல்வேறு பணப்பரிசுகளின் வாயிலாக தங்களுக்கு தேவையான சுதந்திரமான பணிபுரிபவர்களை தெரிவுசெய்கின்றனர்.மேலும் விவரங்களுக்கு https://www.freelancer.com/ என்ற இணைய தள பக்கத்திற்குசென்றறிந்து பயன்பெறுக

புதன், 18 டிசம்பர், 2019

ஒரு வணிக குறியீட்டினை(Trade Mark)எவ்வாறு பதிவுசெய்வது


ஒரு தனிநபரோ அல்லது வணிக நிறுவனமோ அல்லது பிற சட்டப்படியான நபரோ தமது வணிகப் பொருட்களையோ அல்லது சேவைகளையோ தன்னுடைய வாடிக்கையாளரிடம் தனித்துவமாய் அடையாளப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு தனிப்பட்ட சின்னத்தையே அல்லது குறியீட்டையே வணிக குறியீடு என அழைப்பார்கள். இந்த வணிக குறியீடானது நம்முடைய வியாபார பொருட்களை அல்லது சேவைகளை மற்ற வியாபார பொருட்களிலிருந்து அல்லது சேவைகளிலிருந்து வேறுபடுத்தி காண்பிக்கின்றது. இவ்வாறானதொரு வணிக குறியீட்டை நம்முடைய நிறுவனத்தின் பெயரில் பதிவுசெய்வதன் மூலம், நம்முடைய வணிக குறியீட்டில் நம்முடைய பொருளை உற்பத்தி செய்து சந்தைபடுத்தலாம் அல்லது சேவைகளை வழங்கலாம் மேலும் சந்தையில் மற்ற போலியான வணிக குறியீடு களிலிருந்து நம்முடைய வணிக குறியீட்டினுடைய தனித்துவத்தை நம்மால் பாதுகாக்கமுடியும். எந்தவொரு மூன்றாம் நபராவது நம்முடையவணிக குறியீட்டினை சட்டவிரோதமாக பயன்படுத்தினால் உடன் அவர்மீது இந்த வணிக குறியீட்டின் உரிமையாளரான நம்மால் அதற்காக சட்டபடியான நடவடிக்கை எடுக்கமுடியும். இந்த வணிக குறியீட்டினை அதற்குரிய கட்டணத்துடன் வணிக குறியீட்டின்பதிவு அலுவலகத்தில் நாம் பதிவுசெய்துகொண்டால் அந்த பதிவானது பத்தாண்டுகளுக்கு செல்லுபடியாகும் மேலும் தேவையெனில் உரிய கட்டணத்துடன் புதுபித்துக்கொள்ளவேண்டும் பல்வகை பொருட்கள் அல்லது சேவைகளுக்கான வணிக குறியீடுகளை பதிவு செய்வதற்கு ஒரேயொரு விண்ணப்பம் மட்டுமே போதுமானதாகும் இவ்வாறான வசதி வாய்ப்புகளை கொண்ட இந்த வணிக குறியீட்டினை இணையத்தின் வாயிலாகவும் பதிவுசெய்திடமுடியும் அதற்கான படிமுறைகள் பின்வருமாறு: 1. முதலில்நாம் பதிவு செய்ய விரும்பும் வணிககுறியீட்டிற்கான சொல்லை அல்லது சின்னத்தினை (Logo)வேறு யாரும் பயன்படுத்தவில்லை என்பதை உறுதி படுத்திகொள்க இதற்காக. பின்வரும் இணையமுகவரிக்கு சென்று சரிபார்த்து உறுதி படுத்தி கொள்க. https://ipindiaonline.gov.in/tmrpublicsearch/frmmain.aspx/ தொடர்ந்து நம்முடைய வியாபாரம் எந்த வகைகளுக்குள் வருகின்றது என சரிபார்த்திடுக இதற்கான இணையமுகவரி https://ipindiaonline.gov.in/tmrpublicsearch/classfication_goods_service.htm/ஆகும் 2.பின்னர் இந்த இணைய வாயிலின் வழியாக வணிக குறியீட்டினை பதிவுசெய்ய விரும்பும் விண்ணப்பதாரரான உரிமையாளர் அல்லது பதிலாள் அல்லது பதிவுபெற்ற வழக்குரைஞர் ஆகியோர் இந்த இணையபக்கத்திலுள்ள அதற்கான படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்திடுக. அதனுடன் தம்முடைய மூன்றாம் வகுப்பு(class) இரும கையொப்ப சான்றிதழை(digital Signature Certificate(DSC)) யும் இணைத்து சமர்ப்பித்திடுக. 3.படிமுறை இரண்டில் கூறிய அனைத்தும் சரியாக செயல்படுத்தியபின்னர் இவ்வாறு பதிவுசெய்திடும் விண்ணப்பதாரரால் தன்னுடைய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்திடும்போது வழங்கிய மின்னஞ்சல் முகவரிக்கு இவ்வாறு பதிவுசெய்திடும் செயல் அனைத்தும் சரியாக உள்ளது என்பதை உறுதிபடுத்திடுவதற்கான மின்னஞ்சல் ஒன்று வந்த சேரும் அதில் குறிப்பிட்ட இந்த விண்ணப்பதாரர் வணிக குறியீடு பதிவுசெய்திடும் இணையபக்கத்தில் தம்முடைய கணக்கில் உள்நுழைவுசெய்வதற்கான இணைய இணைப்பொன்றும் இந்த மின்னஞ்சலுடன் கிடைக்கப்பெறும் 4.இவ்வாறு வெற்றிகரமாக தம்முடைய வணிக குறியீட்டினை பதிவுசெய்திடும் நடைமுறைகளை முடித்தபின் தொடர்ந்து பயனாளர் தனக்கு கிடைத்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் வாயிலாக தம்முடைய கணக்கிற்குள் உள்நுழைவு செய்து TM-A எனும் படிவத்தைபூர்த்தி செய்திடுக பின்னர் இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்திலுள்ள Payment எனும் இணைப்பினை தெரிவு செய்து சொடுக்குக அதனை தொடர்ந்து தோன்றிடும் திரையில் NEFTஅல்லது Credit Card போன்றவற்றில் நாம் எந்தவகையில் பதிவு கட்டணத்தினை செலுத்தவிரும்புகின்றோம் என்பதை தெரிவுசெய்து அதன்வாயிலாக பதிவுகட்டணத்தினை செலுத்துக இவ்வாறு சரியாக பதிவுகட்டணத்தினை செலுத்தியவுடன் பதிவுக்கட்டணம் செலுத்தியதற்கான ஏற்புகை சீட்டு ஒன்று உடன் தானாகவே உருவாகிவிடும் 5.ஆயினும் இந்த பதிவுகட்டணம் ஏற்றுகொள்ளப்பட்டதற்கான ஏற்புகை சீட்டினை இரண்டு நாட்கள் கழித்து இதே இணையதளபக்கத்தின் Generate Receipt எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து பெற்றுகொள்க 6.இவ்வாறான வணிக குறியீடு பதிவுசெய்வதற்கான நடைமுறைகள் அனைத்தும் சரியாக பின்பற்றி செயல்படுத்தியிருந்தால் இணையத்தின் வாயிலாக நம்முடைய வணிக குறியீட்டினை பதிவுசெய்வதற்கான நம்முடைய விண்ணப்பமானது வணிக குறியீட்டு பதிவு அலுவலர்களால் சரிபார்க்கப்படும் அனைத்தும் சரியாக இருக்கின்றன என திருப்தியுற்றால் நம்முடைய வணிக குறியீட்டின் பெயரையும் வணிககுறியீட்டையும் வணிக குறியீட்டின்சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி சரியாக இருக்கின்றதாவென வணிக குறியீட்டு பதிவாளரால் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்படும் அதன் பின்னர் இந்தியாவில் வெளியிடப்படும் வணிக குறியீடு காலமுறை இதழில் நம்முடைய வணிக குறியீடு வெளியிடப்படும் அதனோடு குறிப்பிட்ட விண்ணப்பததாரருக்கு இந்த வணிக குறியீட்டினை வழங்குவதில் யாருக்காவது ஆட்சேபணை இருந்தால் அதனை 30நாட்களுக்குள் தெரிவிக்குமாறு வணிக குறியீட்டு பதிவுத்துறையால் அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்படும் அவ்வாறான ஆட்சேபணை எதுவும் முப்பது நாட்களுக்குள் வரவில்லை-யெனில் இந்த வணிக குறியீட்டினை பதிவுசெய்த விண்ணப்பதாரருக்கு அவர் பதிவுசெய்த வணிக குறியீட்டிற்கான சான்றிதழ் ஒன்று வணிக குறியீட்டு பதிவாளரால் வழங்கப்படும் இவ்வாறான செயல்முறைகள் நடைபெற்றுகொண்டிருக்கும்போது விண்ணப்பம் செய்தவர் தம்முடைய பொருட்களுக்கான அல்லது சேவைகளுக்கான வணிக குறியீட்டின் அருகில் TM அல்லது SMஎன்ற குறியீட்டினை பயன்படுத்தி கொள்ளலாம் இங்கு TM என்பது பொருட்களுக்காகவும் SMஎன்பது சேவைகளுக்காகவும் வணிக குறியீட்டிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என பொருளாகும் பிறகு சான்றிதழ் கைக்கு கிடைக்கப்பெற்றபின்னர் தமக்கு அனுமதிக்கப்பட்ட வணிக குறியீட்டுடன் ® என்ற குறியீட்டினை பயன்படுத்தி கொள்ளலாம் .இந்த வணிக குறியீட்டினை பதிவுசெய்வதற்கு தேவையான ஆவணங்கள் பின்வருமாறு அ.தனிப்பட்டநபர் எனில் 1. வணிக குறியீட்டின் அல்லது வர்த்தக சொற்றொடரின் நகல் (விரும்பினால் ), 2 விண்ணப்பதாரரானவர் முகவர் அல்லது பதிவுபெற்ற வழக்குரைஞர் எனில் கையொப்பமிடப்பட்ட படிவும் எண் 48, 3. தனிநபரின் அல்லது உரிமையாளரின் அடையாளச்சான்று , 4. தனிநபரின் அல்லது உரிமையாளரின் முகவரி ச்சான்று ஆகியவைகளாகும் ஆ.கூட்டாண்மைநிறுவனம்அல்லதுவரையறுக்கப்பட்டகூட்டாண்மைநிறுவனம் அல்லது நிறுமம் எனில் 1. வணிக குறியீட்டின் அல்லது வர்த்தக சொற்றொடரின் நகல் (விரும்பினால் ), 2 கையொப்பமிடப்பட்ட படிவும் எண் 48, .3. சிறுநிறுவனம் எனில் பணிஆதார பதிவுசான்றிதழ், 4 நிறுமபதிவுசான்றிதழ் அல்லது கூட்டாண்மை பதிவுசான்றிதழ் அல்லது கூட்டாண்மை ஒப்பந்தம், 5.கையொப்பமிடுபவரின் அடையாளச்சான்று, 6 கையொப்பமிடுபவரின் முகவரிச்சான்று 7. நிறுமம் எனில் பதிவுசெய்வதற்கான இயக்குநர்களின் குழுவின், தீர்மானம் ஆகியவைகளாகும்

சனி, 14 டிசம்பர், 2019

எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்


முன்னொரு காலத்தில், காட்டில் வாழும் சிங்கம் ஒன்று மிகவும் வயதாகி, தனது உணவுக்காக அங்கிங்கும் என அலைந்து திரிந்து எந்தவொரு விலங்கையும் தன்னுடைய இரையாக கொன்று தின்ன முடியாத நிலை ஏற்பட்டது . எனவே, அது தனக்குத்தானே , என் வயிற்று பசியை தனிப்பதற்காக நான் ஏதாவது செய்ய வேண்டும், இல்லையென்றால் நான் பட்டினியால் இறந்துவிடுவேன். என்னசெய்வது என யோசித்துக்கொண்டே இருந்தது, கடைசியில் ஒரு அருமையான யோசனை ஒன்றினை அடைந்தது. அதாவது அந்த சிங்கமானது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக நடித்து கொண்டு குகையில் படுத்துக்கொள்ள முடிவு செய்தது , பொதுவாக இவ்வாறு நமக்கு அருகில் இருப்பவர்கள் யாருக்காவது உடல்நிலைசரியில்லாமல் படுத்த படுக்கையாக கிடக்கின்றனர் எனில் உடன் சுற்றுபுறத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஒருவர் பின்ஒருவராக அவர்களுடை வீட்டில் அவர்களுக்கு அருகில் சென்று நலம் விசாரிப்பதுநம்முடைய வழக்கமல்லவா அதேபோன்று மற்ற விலங்குகள் தன்னுடைய உடல்நிலை குறித்து விசாரிக்க எந்த விலங்காவது குகைக்குள் வந்து சேரும் நாம் உடன் அதனை அடித்து தின்று நம்முடைய வயிற்று பசியை ஆற்றிகொள்ளலாம் என முடிவுசெய்து பொல்லாத திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்ததுஅதனை தொடர்ந்து அந்த சிங்கத்திற்கான நலம் விரும்பிகள் பல அந்த சிங்கத்தினை நலம்விசாரிக்க குகைக்குள் சென்றவுடன் அவைகள் கொல்லப்பட்டு அந்த சிங்கத்திற்கு நல்ல இரையாகிவிட்டன. ஒரு நாள், ஒரு நரி அந்த சிங்கத்தைப் பார்க்க வந்தது. நரிகள் இயற்கையாகவே புத்திசாலித்தனமாக இருப்பதால், அந்நரி குகையின் வாயில் நின்று பார்த்தது. அதனுடைய ஆறாவது உணர்வு வேலை செய்தது மேலும் அது யதார்த்தநிலையை அறிந்து கொண்டது . எனவே, அது வெளியில் இருந்துகொண்டே சிங்கத்திடம், “ஐயா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் உடல்நிலை இப்போது பரவாயில்லையா என நலன் விசாரித்தது” அதற்கு சிங்கம் , “எனக்கு உடல்நிலை சரியில்லை. நடக்கவே முடியவில்ல ஆனால் நீ ஏன் உள்ளே என்னுடைய அருகில்வந்து நலன்விசாரிக்ககூடாது? ” என பதிலளித்தது அதனை தொடர்ந்து நரி , “நானும் குகைக்குள் உங்களுக்கு அருகில் வந்து நலன்விசாரிக்க விரும்புகிறேன், ஐயா! ஆனால் உள்வரும் வழித்தடத்தை பார்த்தவுடன், குகைக்குச் வரும் பாதையில் உள்ளே அனைவரும் வந்ததற்கான கால் தடம் மட்டுமே காணப்படுகின்றன ஆனால் அவை வெளியே திரும்பி வந்ததற்கான காலடி எதுவும் காணவில்லை ஐயா அதனால் அவ்வாறாக , திரும்பி வெளியேறமுடியாமல் உள்ளே மட்டும் வருவதற்கு நான் ஒன்றும் முட்டாள்தனமாக இருக்கமாட்டேன். என கூறி , நரி மற்ற விலங்குகளை எச்சரிக்கச் சென்றுவிட்டது. நீதி: எந்தவொரு சூழ்நிலையிலும் அடுத்த படிமுறையை பின்பற்றுவதற்கு முன் அதனால் நமக்கு பாதிப்பு ஏதேனும் ஏற்படுமாவென எப்போதும் எச்சரிக்கையாக கவணமுடன் செயல்படுக

புதன், 11 டிசம்பர், 2019

கடனளிப்பு கடிதம் என்றால் என்ன


LC. என சுருக்கமாக அழைக்கப்படும் கடனளிப்பு கடிதங்களானவை (LETTERS OF CREDIT) வியாபார நடவடிக்கைகளின் அடிப்படையான உயிரோட்டமாக மிகமுக்கிய பங்காற்றுகின்றன இவ்வாறான கடனளிப்பு கடிதங்களை வியாபார நிறுவனங்கள் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு 1.இந்த கடனளிப்புகடிதமானது ஒரு ஒளிவு மறைவற்ற பாதுகாப்பான ஆவணமாகும் 2 .பொதுவாக விற்பணைசெய்திடும் பொருட்களை அல்லது சேவைகளை வழங்குவதிலிருந்து கொள்முதல் செய்பவரிடமிருந்து அதற்கான தொகையானது விற்பனையாளருக்கு கிடைத்திடும் வரை பல்வேறு நிலைகள்உள்ளன அதனால் விற்பணையாளருக்கு தன்னுடைய உற்பத்தி பொருளை விற்பணைசெய்திடும்போது அதற்கான விற்பணைதொகை கிடைப்பதற்கு அதிக காலஅவகாசம் ஏற்படுகின்றது. அதனை தவிர்த்து உடனடியாக விற்பணை தொகை கிடைப்பதற்கு ஏதுவாக இந்த கடனளிப்புகடிதம் அமைகின்றது. 3.பொருட்களை அல்லது சேவைகளை வழங்கிய நாளிலிருந்து அதற்கான தொகையை பயனாளிகளிடமிருந்து பெறுகின்றநாள்வரை விற்பணையாளருக்கு கண்டிப்பாக விற்பணைத்தொகை கிடைக்கும் என்பதற்கான உறுதிமொழியாக இந்த கடனளிப்பு கடிதமானது பயன்படுகின்றது 4.விற்பணையாளர் இந்த கடனளிப்புகடிதங்களை பெற்றதன்அடிப்படையில் பொருளிற்கான தொகை பெற்றதை போன்று கருதி உடன் பொருளை அல்லது சேவையை வழங்க துவங்கலாம் 5.இந்த கடனளிப்பு கடிதம் கிடைக்கப்பெற்றவர்அதன் இறுதி நாள்வரை காத்திருக்காமல் உடனடியாக நடைமுறை மூலதனம் தேவையெனில் வங்கியில் இதனை சமர்ப்பித்து தொகையை பெற்றுகொள்ளலாம் 6.இந்த கடனளிப்பு கடிதமானது பொருட்களை அல்லது சேவையை பெறுபவரின் நம்பகத்தன்மையை அதற்கான தொகைவழங்குவதற்கான திறனை உறுதி படுத்திடுகின்றது 7 கொள்முதல் செய்பவரின் நம்பகத்தன்மையை சரிபார்ப்பதற்காகவென தனியாக ஆய்வுபணிஎதுவும் செய்து உறுதிபடுத்தி கொள்ளவேண்டும் என்றில்லாமல் விற்பணையாளர் தன்னுடைய பொருட்களை அல்லது சேவையை வழங்குவதில் மட்டும் கவணம் செலுத்தினால் போதும் 8.விண்ணப்பதாரரின் (கொள்முதல் செய்பவரின்)ஏற்புகை இல்லாமல் இந்த கடனளிப்பு கடிதத்தில் திருத்தம் எதுவும் செய்யமுடியாது 9. பொருட்களை அனுப்பிவைத்தவுடன் அதனை கொண்டுசெல்லும் வழியில் பொருட்கள் காணாமல் போனாலும் அல்லது இழந்துபோனாலும் அந்த பொருளிற்கான தொகை ஏற்கனவே கிடைத்துவிட்டது என விற்பணையாளர் கவலைப்படாமல் நிம்மதியாக தன்னுடைய வழக்கமான பணியை தொடரலாம் 10 இருநாடுகளுக்கிடையே பொருட்களை கொண்டுசெல்லும்போது ஏற்படும் இழப்பினாலும் அதற்கான தொகை கிடைக்காது என அஞ்சத்தேவையில்லை ஓரே நாட்டில் மட்டுமல்லாது இருவேறுநாடு-களுக்கிடையே கூட இந்த கடனளிப்புகடிதத்தினை பயன்படுத்தி பொருட்களின் விற்பணை அல்லது கொள்முதல் செய்வதற்காக பயன்படுத்தி கொள்ளமுடியும் இவ்வாறானவசதி வாய்புகளை கொண்ட கடனளிப்புகடிதங்களை பயன்படுத்தி கொள்வதற்கான நடைமுறைகள் பின்வருமாறு முதலில் கொள்முதல் செய்பவர் தான் குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து பொருட்களை கொள்முதல் செய்வதற்காக கடனளிப்புகடிதம் ஒன்றினை உருவாக்கி தன்னுடைய ஏற்பகை வங்கியின்கிளைக்கு அதனை ஏற்றுஉறுதிபடுத்திடுமாறு கோருவார் அதனை தொடர்ந்து கடனளிப்புகடிதத்தினை ஏற்கும் வங்கியின் கிளையானது அந்த நிறுவனத்தின் கடந்தகால நிதிநடவடிக்கையின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் கடனளிப்பு கடிதத்தினை ஏற்றுக்கொள்வதாக கையொப்பிட்டு வழங்குவர் அதன்பின்னர் இந்த கடனளிப்பு கடிதமானது விற்பணையாளருக்கு கொள்முதல் செய்பவரால் அனுப்பிவைக்கப்படும் பின்னர் உடனடியாக தன்னுடைய நிறுவனத்தின் நடைமுறை மூலதனத்தை மேம்படுத்திடும்பொருட்டு கழிவுத்தொகைபோக மிகுதி நிகரமாக தொகை-பெறுவதற்காக விற்பணையாளர் அல்லது பயனாளர் தனக்கு கிடைத்த இந்த கடனளிப்புகடிதத்தினை நியமனம் செய்யப்பட்ட தன்னுடைய வங்கிகிளையில் சமர்ப்பிப்பார் (கடனளிப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு சமர்ப்பிக்கவேண்டிய நாளிற்கு முன் ) அதன்பின்னர் பயனாளரால் சமர்ப்பிக்கப்பட்ட கடனளிப்பு கடிதமானது அதற்கான நிபந்தனைகளுக்கு இணங்க சரியாக எழுதபட்டுள்ளதாவென நியமனம் செய்யப்பட்ட வங்கிகிளையானது பரிசோதித்து சரிபார்த்திடும் பின்னர் அவ்வாறு பரிசோதித்திடும்போது அந்த கடனளிப்பு கடிதத்தில் குறைகள் அல்லது முரண்பாடுகள் ஏதேனும் இருந்தால், உடன் நியமனம் செய்யப்பட்ட வங்கிகிளையானது அதனை சரிசெய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு பயனாளருக்கு அந்த கடனளிப்புக்கடித்தத்தை திருப்பிவிடும் அதன்பின்னர் அந்த கடனளிப்புகடிதத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து மீண்டும் அனுப்பிடுமாறு கொள்முதல் செய்பவருக்கு பயனாளரால்திரும்ப அனுப்பபடும் இவ்வாறு நியமனவங்கிகிளையால் சுட்டிகாட்டப்பட்ட குறைகளை கொள்முதல் செய்பவர்சரிசெய்து பயனாளருக்கு( விற்பணையாளர்) திரும்ப அனுப்பப்பட்டு மீண்டும் நியமனவங்கி-கிளையில் சமர்ப்பிக்கப்படும் பின்னர் நியமனவங்கிகிளையானது தன்னிடம்சமர்ப்பித்த கடனளிப்புகடிதத்தினை அந்த தொகையை வழங்குமாறு அதனைஏற்றுகொண்ட வங்கிகிளைக்கு அனுப்பி வைத்திடும் அதன்பின்னர் ஏற்றகொண்ட வங்கிகிளையானது அந்த கடனளிப்புகடிதத்தில் அனைத்து நிபந்தனைகளும்சரியாக இருக்கின்றனவா என மீண்டும் ஒருமுறை சரிபார்த்து நியமன வங்கிகிளைக்கு ஏற்றுகொண்ட வங்கிகிளையானது குறிப்பிட்டதொகையை வழங்கிடும் . அதனை தொடர்ந்து நியமனவங்கியானது கழிவுத்தொகை போக மிகுதி நிகரத்-தொகையை மட்டும் விற்பணயாளரான பயனாளிக்கு வழங்கிடும் பிறகு இறுதியாக விண்ணப்பதாரர் தான்ஏற்றுகொண்ட இறுதிநாளின்போது கடனளிப்பு கடிதத்திற்கான முழுத்தொகையை ஏற்றுகொண்ட வங்கிகிளைக்கு செலுத்தி தம்முடைய கடனை தீர்வுசெய்திடுவார் இவ்வாறான நடைமுறைகளுக்கிடையில் விற்பனையாளர்கள் கடனளிப்புகடிதத்தின் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, குறிப்பிட்ட பொருட்களை அல்லது சேவைகளை வழங்கிடும் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு முடிவுபெறும்

வெள்ளி, 6 டிசம்பர், 2019

தவறுகளிலிருந்து கற்றல்


தாமஸ் ஆல்வா எடிசன் எனும் அறிவியல் அறிஞர் தற்போது நாமெல்லோரும் பயன்படுத்திவரும் மின்சாரத்தில் எரிகின்ற ஒளி விளக்கைத் கண்டுபிடிப்பதற்காக வெவ்வேறு பொருட்களில் மின்சாரத்தினை பாய்ச்சி அதனை தற்போது நாம் பயன்படுத்திவருகின்ற வெளிச்சம் தருகின்ற ஒளிரும் விளக்கை போன்று எரியச்செய்திடுமாறு இரண்டாயிரம்முறை மிககடுமையாக முயற்சித்தார். ஆயினும் அவை எதுவும் திருப்திகரமாக மின்சாரத்தில் எரிந்து ஒளிரவில்லை அவ்வாறான நிலையில் , அவரது உதவியாளர் , “ஐயா நாம் இதுவரை செய்த பணிகள் அனைத்தும் வீண். ஏறத்தாழ இரண்டாயிரம் வகையான பொருட்களில் நாம் முயற்சிசெய்தும் ஒன்றுகூட நமக்கு வெற்றிதரவில்லை,மேலும் இவ்வாறு மின்சாரத்தை சரியாகப் பயன்படுத்தி ஒளிரும் விளக்கை எரியச்செய்ய முடியுமா என்று உறுதியாக தெரியவில்லை. அதனால் இதோடு இந்த ஆய்வினை விடுத்து வேறு ஏதேனும் பயனுள்ள பணிகளை செய்யலாம் ” என கோரினார் அதனை தொடர்ந்து எடிசன் , “ஓ, நாம் வெகுதூரம் பயனித்து வந்துவிட்டோம், இதுவரையில் நிறைய கற்றுக்கொண்டோம். அதாவது மின்சாரத்தில் எரியும் ஒரு நல்ல மின் விளக்கை உருவாக்க நம்மால் பயன்படுத்த முடியாத இரண்டாயிரம் கூறுகள் இருப்பதை நாம் அறிந்தகொண்டோம். அவைகளை விடுத்து வேறு புதியவழிமுறைகளில் முயன்றால் வெற்றி பெற்றிடுவோம் ” என மிகவும் நம்பிக்கையுடன் பதிலளித்தார் என்ன ஆச்சரியம் அடுத்த ஒருசில நாட்களில் டங்ஸ்டன்எனும் இழையானது மின்சாரத்தில் எரிந்து நன்கு ஒளி உமிழ்வதை கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தார் நீதி: நம்முடைய தவறுகளையே வெற்றிபடிக்கல்லாக மாற்றிகொண்டு அயராது முயற்சிசெய்தால் அவைகளிலிருந்து புதியஏதேனும் ஒன்றை சாதிக்கமுடியும்

புதன், 4 டிசம்பர், 2019

நிறுமங்களின் அனைத்து பொதுபங்களும் இனி தாராளமயமாக்கல் வடிவத்தில்(Demat) மட்டுமே கையாளபடும்


பொதுபங்குகளின் வெளியீடுகளின் மூலம் பொதுமக்களிடமிருந்து பங்குத்தொகை பெற்று பங்குசந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களும் 2.10.2018 முதல் மேலும் புதிய பங்குகளை வெளியிடுவதாக இருந்தாலும் பங்குதாரர்களுக்கிடையே பங்குகளை பரிமாற்றம் செய்வதாக இருந்தாலும் தாராளமயமாக்கல் வடிவம்(Demat) எனும் புதிய வழிமுறையில் மட்டுமே செய்யவேண்டும் என நிறுமங்களின் விவகாரத்துறை அமைச்சகம் தனது சுற்றறிக்கையின் வாயிலாக உத்திரவிட்டுள்ளது அதாவது இதுவரையில் பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே தாராளமயமாக்கல் வடிவத்தில்(Demat) இருந்துவந்ததற்கு பதிலாக அனைத்து நிறுவனங்களும் மேலும்புதியதாக வெளியிடும் பங்களையும் பங்கு பரிமாற்றங்-களையும் தாராளமயமாக்கல் வடிவத்தில்(Demat) மட்டுமே 2.10.2018 முதல் செயற்படுத்தவேண்டும் என உத்திரவிட்டுள்ளது நிறுவனங்களில் பங்குபரிமாற்ற நடவடிக்கைகளில் மேலும் வெளிப்படைத்தன்மை,, முதலீட்டாளர்களின் பாதுகாப்பு நிறுமங்களின் நிருவாகத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மேலும் இதன்பொருட்டு நிறுமங்களின் விதிகளும் திருத்தப்பட்டிருக்கின்றன இதன்வாயிலாக கிடைக்கும் முக்கிய நன்மைகள் பின்வருமாறு 1பங்குசான்றிதழ்கள் காணாமல் போதல், திருட்டுபோதல், அழிந்துபோதல், மோசடியாக அபகரித்தல் என்பனபோன்ற அபாயங்களை அறவே அகற்றப்படும் 2. வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல், பினாமி பங்குதாரர் நடவடிக்கைகள் , நிறுமனங்கள் தம்முடைய பங்குதாரர்களுக்கு முன் தேதியிடப்பட்டு பங்குகளை வழங்குதல் என்பனபோன்ற பல்வேறு தவறான நடைமுறைகளை தடுக்கும் வகையில் நிறுவனங்களின் நிருவாக அமைப்புமுறை இதன்மூலம்மேம்படுத்தப்படும் 3.பங்குகளின் பரிமாற்றத்தின்போது முத்திரை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு. அளிக்கப்படும் 4. பங்குகளின் பரிமாற்றம்செய்தல் ,அடைமானம் செய்தல் போன்ற நடவடிக்கைகளை எளிமையாக்கபடும் ஆகியனவாகும் பொதுமக்களுக்காக பங்குகளை வெளியிடுவதற்கான விதிமுறைகள் 2014 விதிமுறை 9 க்குப் பின்,"9A. எனும் திருத்தம் செய்வதன் வாயிலாக இந்த புதிய நடைமுறை 2.10 .2018 நடைமுறைக்கு வருகின்றது அதனை தொடர்ந்து 2.10.108 முதல்எந்தவொரு பட்டியலிடப்படாத பொது நிறுவனமும் பொதுபங்குகளை இனி வெளியிடுவதாக இருந்தால் தாராளமயமாக்கல் வடிவத்தில்(Demat) மட்டுமே வெளியிடப்படவேண்டும் இதனை தொடர்ந்து பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்கள் அனைத்தும் வைப்புத்தொகைச் சட்டம், 1996 ன் விதிமுறைகளுக்கு இணங்க தாம் இதுவரை வெளியிடுதல் செய்து தற்போது நடப்பு பங்குகளை வைத்திருக்கும் அனைத்து பங்குதாரர்களின் பங்கு பத்திரங்களின் வகைக்கேற்ப உலகளாவிய பொதுப்பங்குகளின் சுட்டிஎண் (International security Identification Number (ISIN))ஒன்றினை ஒதுக்கீடு செய்து அந்த தகவலை பங்குதாரர்களுக்கு அறிவிப்பு செய்திடவேண்டும் மேலும் புதிய பங்குகளை வெளியிடுதல் அல்லது மிகைஊதிய பங்குகளை(Bonus Share) வழங்குதல் அல்லது உரிமை பங்குகள் (Right Share)வழங்குதல் ஆகியவற்றின் எந்தவொரு பங்குபத்திரமும் வழங்குவதற்கு, முன்னர், அதன் விளம்பரதாரர்கள், இயக்குநர்கள், முக்கிய மேலாளர்கள் ஆகியோரின் பங்குபத்திரங்கள் அனைத்தையும் நிறுமமானது தாராளமயமாக்கல் வடிவத்திற்கு(Demat) மாற்றிடவேண்டும் பத்திரங்கள் மற்றும் பங்கு பரிவர்த்தனை வாரிய (டெபாசிட்டரிகள் மற்றும் பங்கேற்பாளர்கள்) விதிமுறை 55Aஇன் கீழ் தணிக்கை அறிக்கையை ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒருமுறை தங்களுக்கு அருகேயுள்ள நிறுமங்களின் பதிவாளருக்கு சமர்ப்பிக்கவேண்டும் பங்குசந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களின் பங்குகளை வைத்திருக்கும் எந்தவொரு நபரும் தன்னுடைய பங்குகளை மற்றவர்களுக்கு பரிமாற்றம் செய்யவிரும்பினால் முதலில் தான் வைத்திருக்கும் பங்குகளுக்கான பத்திரத்தை தாராளமயமாக்கல் வடிவத்தில்(Demat)உருமாற்றம் செய்தபின்னரே மற்றவர்களுக்கு பங்குகளை பரிமாற்றம் செய்திடும் பணியை மேற்கொள்ளமுடியும் இத்தகைய தாராளமயமாக்கல் வடிவம்(Demat) செய்வதால் எழும் எந்தவொரு குறைபாடுகளையும் அல்லது பங்குசந்தையில் பட்டியலிடப்படாத பொது நிறுவனங்களின் பங்குகளை வைத்திருக்கும் தனிநபர்களுக்கு குறைகள் ஏதேனும் இருந்தாலும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிய ஆணையத்தினை (The Investor Education and protection Fund Authority( IEPF)) அனுகிதீர்வு செய்து கொள்ளலாம்.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...