ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

யார் பெரிய முட்டாள்?

 முன்னொரு காலத்தில், ஒரு கிராமத்தில்,  ஒருவர் வாழ்ந்து வந்தார்.
தினமும் விடியற்காலையிலேயே  எழுவது அவரது வாடிக்கையான செயலாகும்
அதனை தொடர்ந்து காலைக்கடன்களை முடித்தபிறகு அவர் தனது மளிகை பொருட்களின் விற்பணை செய்திடும் கடைக்குச் சென்று மதிய உணவு நேரம் வரை மட்டும் விற்பணைபணி செய்தபின் தனது  கடையை மூடிடுவார். அதன்பிறகு மாலைமுதல் இரவு தூங்கபோகும் நேரம் வரையில் இயலாதவர்களுக்கும் ஏழைகளுக்கும் சேவை செய்து, தொண்டு செய்து வருவார்
அவரது இத்தகைய நடத்தையால் மக்கள் ஆச்சரியமடைந்தனர்  அவரை பைத்தியக்காரன் என்றும் நினைத்தார்கள்.
அவர் நாள்முழுவதும் தனது மளிகை பொருட்களின் கடையை திறந்து  வைத்திருந்தால் எவ்வளவு சம்பாதிக்க முடியும் அதனைவிடுத்த காலையில் மட்டுமே திறந்து மாலையில்  மூடிவிடுகின்ற ஒரு முட்டாள் என்று மக்கள் அவரை விமர்சிப்பார்கள். . அதுமட்டுமல்லாமல், அவர் அவ்வாறு சம்பாதிக்கின்ற  பணம் முழுவதையும் இயலாதவர்களுக்கும் ஏழைகளுக்கும் தொண்டு செய்வதில் செலவிட்டிடுவார்
அதே கிராமத்தில் ஒரு பணக்காரர் இருந்தார்.
ஒரு நாள், பணக்காரர் மளிகைகடைக்காரரைச் சந்தித்து, அவரிடம் ஒரு தொப்பியைக் கொடுத்தார், "இந்த தொப்பி மிகப்பெரிய முட்டாளுக்கானது. எனவே, உங்களை விட பெரிய முட்டாளை என்னால் கண்டுபிடிக்க முடியாததால், இந்த தொப்பியை உங்களுக்கு கொடுக்க விரும்புகிறேன். இருப்பினும் நீங்கள் . உங்களை விட பெரிய முட்டாள் யாரையாவது பார்த்தால், நீங்கள் இந்த தொப்பியை அவ்வாறான முட்டாளுக்கு  கொடுக்கலாம்." எனக்கூறினார்
மளிகைகடைக்காரர் பதில் எதுவும் பேசாமல் பணக்காரர் தன்னிடம் கொடுத்த அந்த தொப்பியை வாங்கி வைத்துக் கொண்டார்.
சில வருடங்களுக்குப் பிறகு, பணக்காரர் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகஇருப்பதை கேள்விப்பட்டார். எனவே அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்
பணக்காரர் தன்னிடம் நலம் விசாரிக்க வந்த மளிகைகடைக்காரரிடம், "தம்பி, என் முடிவு நெருங்கிவிட்டது, நான் இந்த உலகத்தை  விட்டுகிளம்புகிறேன்." எனக்கூறினார்
உடன் மளிகைகடைகாரர், "ஐயா நீங்கள் பயனம் செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தயார் செய்வதற்காக  யாராவது  இருக்கின்றார்களா அதனோடு உங்களுடைய பயனத்தின போது உங்களுடைய மனைவி, மகன், பணம், கார், பங்களா போன்றவை.. உங்களுடன் கொண்டு போகமுடியுமா?" என்று கேட்டார்.
அதற்கு பணக்காரர், "தம்பி . என்னுடைய இறுதி பயனத்தின் போது யார் வருவார்கள்? என்னுடன் யாரும் வரப் போவதில்லை. நான் தனியாகத்தான் போக வேண்டும். என்னுடைய குடும்பம், செல்வம், அரண்மனை... எல்லாமே இங்கேயே இருக்கும்.. யாரும் துனையாக இருக்கப் போவதில்லை. என்னைத்த் தவிர." எனக்கூறினார்
இந்த சொற்களை கேட்ட மளிகை கடைக்கார் அங்கிருந்த எழுந்து தன் வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் கழித்து  திரும்பினார்.
இதையெல்லாம் பார்த்து ஆச்சரியப்பட்ட பணக்காரர், "என்ன நடந்தது? எங்கு சென்று வருகின்றாய் தம்பி?" என பணக்காரர் வினவியபோது ஏற்கனவே பணக்காரர் தன்னிடம் கொடுத்த அந்த தொப்பியை பணக்காரரிடமே திருப்பி கொடுத்தவாறு, "ஐயா நீங்கள் கொடுத்த இந்த தொப்பியை எடுக்க சென்றேன், இந்தாருங்கள் நீங்களேவைத்துக்கொள்ளுங்கள் " என்றார் மளிகைகடைக்காரர்.  உடன் பணக்காரர் "இந்த தொப்பியை ஏன் என்னிடம் கொடுக்கிறாய்?"எனவினவியபோது
அதற்கு மளிகைகடைகாரர், "இந்த தொப்பியை நீங்கள் கொடுத்த போது, என்னை விட முட்டாள்தனமாக நான் கருதும் ஒருவருக்கு இதை கொடுக்க வேண்டும் என்று சொன்னீர்கள். இன்று நான் அந்த மனிதனைக் கண்டுபிடித்தேன்.
நீங்கள்தான் என்னை விட முட்டாள். ஏனெனில்
நீங்கள் இதுவரையில் சம்பாதித்த  சொத்து, வீடு ஆகிய எதுவுமே உங்களுடன் கொண்டு போகமுடியாது என தெரிந்ததும், உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த பேராசையில் ஈடுபட்டு, உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியான பிறகும், மேலும் அதிக பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டி மேலும் மேலும் பணம் ஈட்டுவதிலேயே உங்கள் வாழ்நாள் முழுவதும் கழித்து விட்டீர்கள், ஆயினும் இதுவரையில் நீங்கள் ஏழைகளுக்கு சேவை எதுவும் செய்யவில்லை,  அவரகளுக்கு தேவையான உதவி எதையும் செய்யவில்லை. . இப்போது புரிகிறதா யார் பெரிய முட்டாள் என்று". என நீண்ட விளக்கமளித்தார் மளிகைகடைகாரர்.

திங்கள், 10 ஏப்ரல், 2023

ஆடு எண் 3 காணவில்லை -

 ஐந்தாம் வகுப்பில் பயிலும் இரண்டு குறும்புக்காரக் குழந்தைகள்  அருகிலுள்ள பள்ளிக்கு ஒன்றாகப் சேர்ந்து நடந்து சென்று  படித்துவந்தனர்.
அவ்வாறு அவ்விருவரும் பள்ளிசென்றுகொண்டிருந்தபோது ஒரு நாள், முதலாமவன் தன்னுடைய நன்பனிடம், "அண்ணா, எனக்கு ஒரு ஆலோசனை தோன்றுகின்றது.. அதன் படி செயல்பட்டால்  நாமிருவரும் நாளைய வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டியதில்லை." எனக்கூறினான்
உடன் இரண்டாமவன் மிகவும் ஆர்வமாக, "நாமிருவரும் நாளைய வகுப்புகளில் கலந்து கொள்ள  தேவையில்லாத அந்த  ஆலோசனை எதுவென சொல்லுங்க..தம்பி ?" எனக்கேட்டான்
அதனைதொடர்ந்து முதலாமவன் பள்ளிக்கு அருகிலுள்ள காலியான நிலத்தினை நோக்கி, "அங்கே பார், மூன்று ஆடுகள் மேய்கின்றன.." என்றான்.
இரண்டாமவன், "அவைகள் வழக்கமாக புற்களையும் செடிகொடிகளையும் மேய்கின்றன அதனால் என்ன?" என வினவினான்
தொடர்ந்து முதலாமவன், “இன்று மாலை பள்ளி  முடிந்தால் எல்லாரும் அவரவர்களின் வீடுகளுக்கு திரும்பி செல்வார்கள் ஆனால் நாமும் நம்முடைய வீடுகளுக்கு திரும்பி  செல்வதற்கு முன் இந்த மூன்று ஆடுகளையும் பிடித்து பள்ளிவளாகத்தில் விட்டிடுவோம்.அப்புறம் பார்  நாளை அனைவரும் காணாமல் போன ஆடுகளை தேடிக்கொண்டிருப்பார்கள் அதனால் நாம் நாளை பள்ளி திறக்கும்போது பள்ளிக்குள் வந்தாலும்  வகுப்பறைகளுக்கு செல்லவேண்டியதில்லை " எனக்கூறினான்
அதற்கு இரண்டாமவன், "அதெப்படி இவ்வளவு பெரிய ஆடுகளை கண்டுபிடிப்பது ஒன்றும் கடினமான காரியம் இல்லையே.. மூன்று ஆடுகள்தான் உள்ளன,பள்ளி திறந்தவுடன் எளிதாக அம்மூன்றையும் சிறிது நேரத்தில் கண்டுபிடித்திடுவார்கள், பிறகு நாம் படிக்கநம்முடைய வகுப்புகளுக்குத் திரும்ப வேண்டியதுதான்.." என பதிலளித்தான்.
உடன் முதலாமவன் சிரித்துக்கொண்டே, "அவர்களால் அவ்வளவு சுலபமாக கண்டுபிடிக்க முடியாது, நான் என்ன செய்கின்றேன்   பார்.." என்றான்.
அதன் பிறகு, அன்றைய வகுப்பு முடியும் வரை நண்பர்கள் இருவரும் காத்திருந்தனர். பள்ளியை விட்டு அனைவரும் சென்ற பிறகு,அவ்விருவரும் அந்த மூன்று ஆடுகளையும் பிடித்து பள்ளிக்குள் கொண்டு வந்தனர்.
ஆடுகளை பள்ளிவளாகத்திற்கு உள்ளே கொண்டு வந்த பிறகு, முதலாமவன், "இப்போது, இந்த ஆடுகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு எண்ணை எழுதப் போகின்றேன்" எனக்கூறியவாறு அவ்வாடுகளுக்கு எண்களை எழுதத் தொடங்கினான்.
முதலாவது ஆட்டிற்கு - எண் 1 எனவும்
இரண்டாவது ஆட்டிற்கு - எண் 2  எனவும்
மூன்றாவது ஆட்டிற்கு - எண் 4 எனவும்  எண்களை எழுதினான்  
உடன் இரண்டாமவன் "என்ன இது? உனக்கு கணக்கு தெரியாதா ஏன் மூன்றாவது ஆட்டிற்கு 4 என எழுதினாய்?", என ஆச்சரியத்துடன் கேட்டான்.
அதனை தொடர்ந்து முதலாமவன்"இது தான் என்னுடய ஆலோசனை.. நாளைக்குப் பார்.. எல்லாரும் ஒரு நாள் முழுக்க மூன்றாம் எண்ணுள்ள ஆடு மட்டும் எங்கே கானோம் என அந்த ஆட்டைமட்டும் தேடித் தேடிக் கொண்டே இருப்பார்கள், ஆனால் அந்த ஆடு எண் 3 மட்டும் கிடைக்காது அதனால் நாமும் நம்முடைய வகுப்புகளுக்குள் செல்ல வேண்டியதில்லை.." என்று சிரித்துக் கொண்டே கூறினான் .
அடுத்த நாள், நண்பர்கள் இருவரும் பள்ளிக்கு வந்தனர். அப்போது பள்ளி முழுவதும் அவரவர்களின் வகுப்புகளுக்குள் செல்லாமல் அங்கும் இங்கும் திரிந்து கொண்டும் விவாதம் செய்து கொண்டுமிருந்தனர் அதனோடு. எல்லோரும் காணாமல் போன ஆடு எண் மூன்றை  தேட ஆரம்பித் திருந்தார்கள், அதாவது அந்த பள்ளி வளாகத்திற்குள்ளே  வந்த  நான்கு ஆடுகளுள் மூன்று ஆடுகளைமட்டும் கண்டுபிடிக்க முடிந்தது.
ஆனால், ஆடு எண் 3-ஐக் கண்டுபிடிக்க முடியாததால்,  அந்தப் பள்ளியின் மாணவர்களும் ஆசிரியர்களும் ஆடு எண் 3-ஐத் தேடிக்கொண்டேயிருந்தனர்.
அந்த ஆடு எண் 3ஐக் கண்டுபிடிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டாலும் அந்த ஆடு எண் 3 ஐ மட்டும் அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை....! அதனால் அந்த ஆடு எண் 3  ஆனது நம்முடைய பள்ளி வளாகத்திற்குள் காணாமல் போய்விட்டதே என எல்லாரும் வருத்தப்பட்டார்கள் ஆனால் அந்த குறும்புக்கார சிறுவர்கள் இருவரும் அன்றை வகுப்புகளுக்கு செல்லாமல் இதைபோன்ற எப்போதும்  அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்றவாறு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர் ஒரு ஆட்டைக் கண்ணுக்குத் தெரியாமல் தங்கள் புத்திசாலித்தனத்தால் காணாமல்ஆக்கிவிட்டார்கள்.
இந்தக் கதையைப் படித்த பிறகு நமக்கு அது முட்டாள்தனமாகத் தோன்றலாம் ஆனால் அதில் மறைந்திருக்கும் செய்தியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எப்பொழுதும் நாம்எதைபற்றியாவது  கவலைப்படுவது அவசியமா?
 நம் வாழ்வில் நமக்கு கிடைத்தவை  நம் வாழ்க்கையை முழுமையாக்க போதுமானதாக இருந்தாலும்.
 சில நேரங்களில் நாமனைவரும் உண்மையில் சாத்தியம் இல்லாத காணாமல் போன அந்த ஆடு எண் 3 போன்று.. சில விஷயங்களைத் தேடிக் கொண்டே இருப்போம். அதனால் இல்லாததை மறந்து இருப்பதை கொண்டு மகிழ்வாய் வாழ்வோம்

ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

இரண்டு தண்ணீர் தாகமுள்ள பயணிகளும் கிணறும்

 முன்னொரு காலத்தில் ஒருகிராமத்தில்  ஒருகுருவும் ஒரு சீடனும் வாழ்ந்துவந்தனர்.சிலநாட்கள் கழித்து, அந்த குருவிடம் இன்னொரு சீடனும் சேர்ந்தான் புதியதாக சேர்ந்த இரண்டாது சீடன் முதல் சீடனை விட குறைந்த காலத்திலேயே  அதிகம் கற்றுக்கொண்டான். அதனால் முதல் சீடண் அதைக் கவனித்து தான் குருவிடமிருந்து புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்தான்
அதனால் ஒரு நாள் முதல் சீடன் தன் குருவிடம் சென்று, "இரண்டாவது சீடன் வருவதற்கு முன்பிருந்தே உங்களிடம் கலைகளை கற்று வருகிறேன், ஆனால் நீங்கள்  என்னை  புறக்கணித்து இரண்டாவது சீடனுக்கு மட்டும என்னைவிட கூடுதலாக அனைத்தையும அதிகம் கற்றுக் கொடுக்கின்றீர்கள். ஏன்? அவ்வாறு செய்கின்றீர்கள்" எனவினவினான
அந்த குரு சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, "முதலில் நான் ஒரு கதையைகூறுகின்றேன் அதைக் கேள். அதன்பிறகு நீயே முடிவுசெய்திடுவாய்." எனமுதல் சீடனிடம் கூறினார்.
முதல் சீடனும் தன்னுடைய குருவானவர் கூறப்போகும் கதையே கேட்க தயாகராக இருந்தான். குரு கதை சொல்லத் தொடங்கினார், "ஒருமுறை ஒரு பயணி பெருவழியில் வெகுதூரத்திலிருந்த நகரத்தினை நோக்கி சென்று கொண்டிருந்தபோது அந்த பயனிக்கு தண்ணிர் தாகம் எடுத்தது, அவரிடம் கைவசம் தற்போது போன்று தண்ணீர் குப்பிஇல்லை, அதனால் அந்த பெருவழிக்கு அருகில் தண்ணீர் கிடைக்கும என சுற்றிலும் பார்த்துகொண்டே தன்னுடைய பயனத்தை தொடர்ந்தார், அந்த பெருவழியில் சிறிது தூரம் நடந்தபோது, பாதைக்கு அருகில் ஒரு கிணற்றைக் கண்டார். அந்த கிணற்றில் தண்ணீர் இருப்பதைக் கண்டார் ஆனால் கிணற்றிலிருந்து நீரை மேலே கொண்டுவந்த தன்னுடைய தாகத்தை தனிப்பதற்கான கருவிகளான வாளியும் கயிறு இல்லை, அதனால், அவர் தண்ணீர் எதுவும் குடிக்காமல் அவ்விடத்தினை விட்டு அகன்று பெருவழியில் தன்னுடைய பயனத்தை தொடர்ந்தார்.
சிறிது நேரத்தில் அந்த கிணற்றுக்கு அதே பெருவழியில் பயனித்த வேறு ஒரு பயணி வந்தார். அதே கிணற்றைப் பார்த்தார், தண்ணீர் இருப்பதைக் கண்டார். ஆயினும் முன்புபோலவேகிணற்றிலிருந்து நீரை மேலே கொண்டுவந்த தன்னுடைய தாகத்தை தனிப்பதற்கான கருவிகளான வாளியும் கயிறு இல்லாததை கண்டார்  ஆனால் இரண்டாவது பயனியானவர் அந்த கிணற்றிற்க அருகில்  மேலும் தீவிரமாக  சுற்றிப் பார்க்க ஆரம்பித்தார், உடன் ஒரு வாளியை  கண்டார். அதன் பின்னர் அவர் மேலும் தீவிரமாக கயிறுஇருக்கின்றதாவெனத் தேடத் தொடங்கினார், எந்த கயிற்றையும் காணவில்லை, ஆனால் அந்த கிணற்றிற்கு அருகில் உயரமாக புற்கள் வளர்ந்திருப்பதை கண்டார்  அதனால் கிணற்றிற்கு அருகில்  உயரமாக வளர்ந்திருந்த புல்லை கைகளால் பிடுங்கி அவைகளை உருட்டி கயிற்றை உருவாக்கத் தொடங்கினார். சிறிது நேரத்தில் நீண்ட கயிறு தயாராகிவிட்டது அவர் அந்த நீண்ட கயிற்றினை அருகிலிருந்த வாளியுடன் இணைத்து  அந்தக் கயிற்றின் உதவியால், கிணற்றிலிருந்து தண்ணீரை மேலே கொண்டுவந்து தன்னுடைய தாகத்தைத் தணித்துக்கொண்டு அதே பெருவழியில் தன்னுடைய பயனத்தினை தொடர்ந்தார்." என குருவானவர் தன்னுடைய  சீடனிடம் கதையை கூறிமுடித்தபின்னர், "எந்தப் பயணிக்கு அதிக தாகம் இருந்தது என்று கூறுங்கள்?" எனமுதல் சீடனிடம் வினவினார்  உடனடியாக முதல் சீடன் , "இரண்டாவது பயனி." என பதிலளித்தார்
குரு சிரித்துக்கொண்டே, "ஆம்.இரண்டாவது பயணி தாகத்தைத் தணிக்க கடினமாக உழைத்ததால் அவருக்கு தாகம் அதிகமாக இருந்தது என க்கூறலாம்."
 அதேபோன்று  இரண்டாவது சீடனுக்குதான  அறிவு தாகம் அதிகமாகும், அதை நிறைவேற்ற அவன் கடினமாக உழைக்கிறான். அதனால் அவன் விரைவில் அனைத்து கலைகளையும் கற்றுக்கொள்கின்றான்  என விளக்கமும் அளித்தார் குரு
முதல் சீடன், அன்று முதல் அவன் கடினமாக உழைத்து அதிக கலைகளை கற்றுக்கொள்ள ஆரம்பித்தான்.

ஞாயிறு, 26 மார்ச், 2023

பணக்காரனாக வேண்டும் - ஏழையின் வேண்டுகோள்

 முன்னொரு காலத்தில் ஒரு பரமஏழை இருந்தார். அவர் தனது கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு ஆசிரமத்திற்கு தினமும் செல்வார்
தினமும் அவ்வாசிரமத்தில் துப்புரவு பணி செய்து  வந்தார். அதன் பிறகுதான் அவர் தன்னுடைய அன்றாட பணிசெய்வதற்குச் செல்வார்.
ஒரு நாள், அவ்வாசிரமத்தின் குரு அவ்வேழையிடம், "நீங்கள் ஏன் தினமும் ஆசிரமத்திற்கு வருகிறீர்கள்?" என வினவியபோது
அதற்கு ஏழை, "ஐயா நீங்கள் என்னை ஆசீர்வதித்தால், எனக்கு நிறைய செல்வம் கிடைக்கும் அதனால் நான் பெரிய பணக்காரனாகி நிம்மதியாக வாழ்வேன்" என்று பதிலளித்தார்.
குரு , "நீ இங்கு வருவது அதற்காக மட்டும்தானா?" என வினவியபோது
உடன் அந்த ஏழையானவர் "ஆம்,ஐயா" என நேர்மையாக ஒப்புக்கொண்டார்.
அந்த ஏழையானவர் தொடர்ந்து, "ஒரு வண்டியில் ஏராளமாக சரக்குகளை  ஏற்றி சென்று விற்பதும். அதனடிப்படையில் நிறைய பணம் சம்பாதிப்பதும்தான் எனது நோக்கம், அதனால்தான் உங்களுடைய ஆசிரமத்திற்கு தினமும் உங்களை பார்க்க வந்து செல்கின்றேன், நான் மகிழ்ச்சியாக வாழும் நாட்கள் எப்போது வரும் என்று எனக்குத் தெரியவில்லை." என கூறினார்
குரு, "கவலைப்படாதே. நேரம் வரும்போது வாய்ப்புகளின் கதவுகள் உன் முன் திறக்கும்" என்றார்.
ஏழை தன்னுடைய வழக்கமான பணி செய்வதற்கு சென்றார் காலம் மிகப்பெரிய  திருப்பத்தை கொடுத்தது, விரைவில் அந்த ஏழை மனிதன் அதிக பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார். அதனால் ஏற்பட்ட  அதிக பணிச்சுமை யினால் ஆசிரத்திற்கு வழக்கமாக செல்வதை நிறுத்தினார்.
பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு நாள் காலை , அந்த மனிதர் ஆசிரமத்தில் முன்பு போன்று சுத்தம் செய்யும் பணியை செய்து கொண்டிருந்தார்.
அதனைப் பார்த்த குரு ஆச்சரியமாக, " ஏன் என்ன செய்தி இத்தனை வருடங்களுக்குப் பிறகு வந்திருக்கிறாய். நீ பெரிய பணக்காரன் ஆனாய் என்று கேள்விப்பட்டேன்" என்று கேட்டார்.
அதற்கு அந்த மனிதர், "நான் நிறைய பணம் சம்பாதித்தேன். என் பிள்ளைகளுக்கு நல்ல வீடுகளில் திருமணம் நடந்தது. எதற்கும் குறைவில்லை ஆனால் இன்னும் என்  மனதில் மட்டும் அமைதி இல்லை.
நான் தினமும் இங்கு வந்து சேவை செய்ய வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் வர முடியவில்லை. ஐயா, நீங்கள் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தீர்கள், ஆனால் வாழ்க்கையின் அமைதியை மட்டும் கொடுக்கவில்லை." எனக்கூறினார்.
தொடர்ந்து குரு, "ஆனால் நீங்கள் அதை எப்போது கேட்டீர்கள்? நீங்கள் கேட்டது உங்களுக்கு கிடைத்தது, இல்லையா? பிறகு ஏன் இப்போது  வந்தீர்கள்?" என வினவினார்
அம்மனிதனின் கண்கள் கண்ணீரால் நிரம்பி வழிந்தன, அவர் குருவிடம், " இனி நான் உங்களிடம் எதையும் கேட்க மாட்டேன், எனக்கு மனஅமைதி மட்டும் கிடைச்செய்யங்கள்" என வேண்டினார்.
குரு, "நிச்சயமா, அமைதிக்காக மட்டுமே இங்கு வருவீர்களா? உங்கள் சேவைக்கு ஈடாக வேறு எதையும் கேட்க மாட்டீர்களா?" என்றார்.
அம்மனிதன் குருவிடம், "எனக்கு எதுவும் வேண்டாம். ஐயா பணம் சம்பாதிப்பதைவிட மன அமைதி மிகவும் விலைமதிப்பற்றது என்பதை நான் புரிந்துகொண்டேன். ஐயா நான் தினமும் இங்கு வந்த சேவைசெய்கின்றேன்" என்றார்  

ஞாயிறு, 19 மார்ச், 2023

அமைதியற்ற மனம்

 குளிர்காலத்தில் ஒரு நாள், குருவும் அவரது சீடனும்  அருகிலிருந்த கடற்கரையில் நடந்து வந்துகொண்டிருந்தனர், அப்போது புயலுடன் கூடியகடல்காற்று பலமாக வீசியது அதனால் கடலில் உயரமான அலைகள் எழுந்தகரைக்குவந்து .சேர்ந்தன.
சிறிது நேரம் நடந்த பிறகு, குரு தனது சீடரைப் பார்த்து, "தற்போதைய இந்தக் கடல்காட்சி உனக்கு என்ன நினைவூட்டுகிறது?" என வினவினார்
அதற்கு அவருடைய சீடன், "இது என் மனதையும் அதன் அமைதியற்ற எண்ணங்களையும் நினைவூட்டுகிறது ஐயா" எனபதிலளித்தார்.
உடன் குரு, "ஆமாம், நம்மனம் கடலிலுள்ள நடுநிலையான நீர் போன்றது. அதில் நல்லதும் இல்லை கெட்டதும் இல்லை அமைதியாக உள்ளது . ஆனால் கடலின் மீது வீசும்  கடுமையான புயலுடன் கூடிய இந்த கடல் காற்று ஆனது அதிக அலைகளை உருவாக்குகிறது, அவ்வாறே ஆசைகளும் அச்சங்களும் அமைதியான நம்முடைய மனதைஅலைகழித்து புதிய எண்ணங்களையும் கருத்துகளையும் உருவாக்குகின்றன." என்றார்
தொடர்ந்து குரு, "சரி, இப்போது சொல்லுங்கள், இவ்வளவு புயல் நிறைந்த கடலின் நடுவில் நீங்கள் படகில் செல்ல விரும்புகிறீர்களா?" என வினவினார்
உடன்அவருடைய  சீடன், "நான் செல்லமாட்டேன் ஐயா" என்று பதிலளித்தார்.
தொடர்ந்து குரு, "அதெல்லாம் சரிதான். ஆனால் உண்மையில், தற்போதைய கடுமையாக வீசிடும் இந்தப் புயலுக்குள்தான் நாம் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதுமட்டுமன்று பெரும்பாலான மக்கள் கடுமையான இவ்வாறான புயல்காற்றுடன் கூடிய கடலின் நடுவில் சுக்கான் இல்லாத படகில் பயனம் செய்வதை போன்றே தாங்கள் அவ்வாறான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என உணராவிட்டாலும் கூட வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், .
பொதுவாக நம்முடைய மனம் மிகவும் அமைதியற்றது, எல்லா வகையான எண்ணங்களும் கடல் அலைகளைப் போன்று குறுக்கும் நெடுக்குமாக இடைவிடாமல் வந்து செல்கின்றன, நம்முடைய மனதைக் கிளர்ச்சியுறச் செய்கிறது." என நீண்ட விளக்கமளித்தார்
அதற்கு அவருடையசீடன், "ஆமாம்..ஐயா. நான் இவ்வாறான செய்தியைதான்   உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறேன்" என்று பதிலளித்தார்.
குரு தன்னுடைய சீடனைப் பார்த்து புன்னகைத்து, "தண்ணீரை அசைய விடாமல் பிடித்துநிறுத்தி கடலை அமைதிப்படுத்த முடியாது. அமைதியான கடலின்மீது வீசும் காற்றை நிறுத்துவதுதான் அதற்கான ஒரேவழியாகும்.
நம்மனதில் எழும் பல்வேறு எண்ணங்கள், ஆசைகள், அச்சங்கள் இந்த கடல் காற்றைப் போன்றது, அதனை அமைதிப்படுத்த வேண்டும்.  கவனத்தையும் செயல்களையும் கட்டுப்படுத்துவதன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த முடியும், அப்போதுதான்  கடலின் தண்ணீர் போன்ற நம்முடையமனம் அமைதியாக இருக்கும்." என அறிவுரை கூறினார்
தொடர்ந்து குரு தன்னுடைய சீடனிடம், "கடல் காற்றை அலட்சியப்படுத்துவது சாத்தியம் என்று வைத்துக்கொள்வோம். அப்போது என்ன நடக்கும்?" என வினவினார்
அதற்கு சீடன், "அவ்வாறு நடந்தால் கடலில் அலைகள் நின்றுவிடும்" என்றார்.
பின்னர் குரு, "உண்மையில், நீங்கள் இயற்கையாக  காற்றை புயல்காற்றைக் உங்களால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் உங்கள் மனதில் எழும் புயலுடன்கூடிய காற்று போன்ற பல்வேறு எண்ணங்களை கட்டுப்படுத்தலாம், இது  மனதை அமைதியாக்குகிறது." என்றார்
உடன் அவருடைய சீடன், "ஐயா, என் மனதில் எழும் புயலாக வீசும் காற்றினை போன்ற எண்ணங்களை தணிப்பதில் நான் வெற்றி பெற்றால், என்னைச் சுற்றியுள்ள உலகில் இன்னும் அமைதியையு கொண்டு வர முடியுமா?"என ஐயம் எழுப்பினார்

அதற்கு குரு, "உங்கள் மனதை ஒருமுகப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள், ஆற்றல் மற்றும் சுய ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் . உங்கள் மனதைக் கட்டுப்படுத்தி அதை அமைதியானதாக மாற்றினால், உங்கள் வாழ்க்கையை நீங்கள் கட்டுப்படுத்துவீர்கள்.
இருப்பினும், வெளி உலகத்தை மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டாம். உங்கள் உள் உலகத்தை மாற்றுவதற்கும் அமைதிப்படுத்துவதற்கும் கவனம் செலுத்துங்கள். உங்கள் உள் உலகத்தை நீங்கள் கட்டுப்படுத்த முடிந்த பிறகே, உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியும்". என அறிவுரை கூறினார்



ஞாயிறு, 12 மார்ச், 2023

யார் உயர்ந்தவர் கொடுப்பவரா அல்லது பெறுபவரா?

 முன்பு பணக்காரர் ஒருவர் பெரிய தொழிற்சாலைகளுக்கு முதலாளியாக இருந்தார். ஆயினும் ஒரு நாள் அவர் தனது தொழிற்சாலைகளிலிருந்தும் வணிகங்களிலிருந்தும் வெளியேறி துறவியானார்.
 விரைவில் அவர் பிரபலமானார். அவருடைய சொற்பொழிவைக் கேட்க ஏராளமான மக்கள் கு வரத் தொடங்கினர்.
அவ்வாறான சொற்பொழிவின்போது ஒரு நாள், தான் தன்னுடைய வணிக நிறுவனத்திலிருந்து வெளியேி துறவியாக ஆக்க தூண்டியச் செய்த நிகழ்வைப் பற்றி பின்வருமாறுகூறினார்

அவர் , "ஒரு நாள் நான் எனது தொழிற்சாலையில் சுற்றி மேற்பார்வை பார்த்து கொண்டுவந்தபோது, ஒரு நாயின் மீது வாகனம் ஒன்று மோதியது, அதனால் அதன் மூன்று கால்கள் உடைந்தன, விபத்துக்குப் பிறகு அது ஒரு காலால் மட்டும் ஊர்ந்து செல்லத்துவங்கியது.
அதைகண்டு நான் மிகவும் வருந்தினேன், உடன ஒரு விலங்குகளுக்கான மருத்துவமனைக்கு அடிபட்ட நாயை எடுத்து செல்ல ஏற்பாடு செய்தேன், அப்போது என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.
 இதன்பிறகு இந்த நாய்க்கு தேவையான உணவு கிடைக்கும் என காண வேண்டும் என்று நான் நினைத்தேன்
 அடிபட்ட நாய்க்கு தேவையானசிகிச்சை அளித்தபின் சாலையோரம் விடபட்டது அதன்பின்னர் என்ன ஆச்சரியம் மற்றொரு நாய் வாயில் ரொட்டிதுண்டு எடுத்துவந்து அடிபட்ட நாய்க்கு கொடுத்தது.
அடிபட்ட நாயும் அந்த ரொட்டியை சாப்பிட்டு தன்னுடைய பசியாற்றிக்கொண்டது. அதன் பிறகு, மற்றொரு நாய் அடிபட்ட நாய்க்கு தினமும் ரொட்டி துண்டுகளை கொண்டு வந்து கொடுத்துது வந்தது , அடிபட்ட நாயும் விரைவில் குணமடைந்து தானாகவே நடக்கதுவங்கியது.
இந்த நிகழ்வை கண்டவுடன் எல்லோருக்கும் அவரவர்கள் உயிர்வாழத்தேவையான பொருட்கள் இயற்கையான நிகழவாக அனைவருக்கும் கிடைத்து கொண்டே இருக்கின்றன என்பதை உணர்ந்து, நாம் ஏன் இவ்வளவு தொழிற்சாலைகளுக்கு முதலாளியாக இருக்கவேண்டும் என முடிவுசெய்து அன்றே நான்  தொழிற்சாலைகள் வணிகங்கள் ஆகியவற்றினை விட்டுவிட்டு  துறவியாகிவிட்டேன்  ."
அந்த துறவியின் சொற்பொழிவை கேட்பதற்காக அங்கே அமர்ந்திருந்த  ஒருவர் இந்த விளக்கத்தை கேட்டு சத்தமாகச் சிரிக்கத் தொடங்கினார்.தொடர்ந்துஅந்த நபர், "காயமடைந்த அந்த நாய்க்கு வேறொரு நாய் உணவு வழங்குவதை நீங்கள் பார்த்தீர்கள், ஆனால் அவ்விரண்டில்  யார் உயர்ந்தவர் உணவளித்தவரா அல்லது உணவினை பெற்றவரா?  என்பதை நீங்கள் அறிந்து  கொள்ளமுயற்சி செய்யவில்லை  ஆனாலும் மற்றவர்களுக்கு உணவளிப்பவரே உயர்ந்தவர் என்பதை புரிந்து கொள்ளவில்லையா?
 அதைப் பார்த்த பிறகு, மற்றவர்களுக்கு உணவளிக்க வேண்டியஉயர்ந்த நிலையலிருந்து தாழ்ந்து உங்களுடைய உணவிற்காக மற்றவர்களைச் சார்ந்து வாழத்துவங்கி அடிபட்ட நாய் போன்று ஆகிவிட்டீர்கள். முன்பெல்லாம் அடிபட்ட நாய்க்கு உணவளித்த நாய்போன்று மற்றவர்களுக்கு உணவளிக்கும்உயர்ந்த நிலையில். பலருக்கு வாழ்வளிக்கும் தொழிற்சாலைகளை நடத்தினீர்கள்.
நீங்கள் முன்பு செய்து கொண்டிருந்தது  பெரிய பணியா அல்லது இப்போது நீங்கள் செய்வது பெரிய பணியா எது உயர்ந்தது  என்று நீங்களே நினைக்கிறீர்கள்?" என பதிலுக்கு நீண்ட விளக்கமளித்தார்
இதனை கேட்டபின்னர் துறவி தனது தவறை உணர்ந்து திரும்பிச் சென்று  மீண்டும் தனது வணிகத்திலும் தொழிற்சாலையிலும் தன்னுடைய பணியை தொடர்ந்து நடத்த தொடங்கினார்.
கற்றல்:
 தற்போது நாம் செய்யும் பணியைநிறுத்தக் கூடாது என்பதை நாம் புரிந்து கொள்க.  நாம் உழைத்து மற்றவர்களுக்கு உணவளிக்கவேண்டும் நாம் உழைக்காமல் நம்முடைய  உணவிற்காக மற்றவர்களிடம் பிச்சையெடுக்கக்கூடாது.

ஞாயிறு, 5 மார்ச், 2023

பறவையின் கோரிக்கை மரம் மறுப்பு! நிராகரிப்பு பற்றிய கதை

 
பருவகாலம் மாறி மழைகாலம் வரவிருந்தது. அதனால் மழைவருவதற்குள் தங்களுக்கு ஒரு கூடு கட்டினால்தான் தாங்கள் மழைகாலத்தில் பாதுகாப்பாக வாழமுடியும் என முடிவுசெய்து எந்த மரத்தில் கூடுகட்டினால் நன்றாக இருக்கும் என ஒரு ஜோடி பறவைகள் தங்களுக்கான கூடு கட்ட மரத்தைத் தேடிக் கொண்டிருந்தன. அவ்வாறு அவை பொருத்தமான மரத்தினை தேடிபறக்கும் போது ஆற்றின் கரையோரத்தில் பலமரங்கள் இருப்பதைப் பார்த்தன . அவைகளுள் தங்களுக்கு கூடு கட்டுவதற்கு ஏற்ற மரம் ஒன்றைக் கண்டன.
அப்பறவைகள் அம்மரத்திற்குஅருகில் சென்று, "மழைக்காலம் வருவதற்கு முன் நாங்கள் வாழ்வதற்கான ஒரு கூடு கட்ட வேண்டும், தயவுசெய்து உங்கள் கிளைகளில் ஒன்றில் எங்களுக்கான கூடு கட்ட அனுமதிக்கின்றீர்களா" என அனுமதி கேட்டன.
உடன் அந்த மரமானது, "இல்லை, என்னுடைய கிளைகளில் உங்களுக்கான கூட கட்ட அனுமதிக்க முடியாது" என்று மறுத்தது. அப்பறவைகள் அம்மரத்திடம் பலமுறை கெஞ்சியும் அம்மரம் ஒப்புக்கொள்ளவில்லை
அந்த மரம் தங்களுக்கான கூடகட்டமறுத்ததால் பறவைகள் சோகமடைந்தன. அப்பறவைகள் தங்களுக்கான கூடுகட்டுவதற்காக வேறு ஏதாவது பொருத்தமான மரத்தினை தேடிகண்டுபிடிப்போம் என புறப்படத் தயாராகும்போது அவை அம்மரத்திடம், "இப்படிப்பட்ட ஆணவம் நல்லதன்று. ஒரு நாள் நீ உன் அகங்காரத்தினால்வேரோடு முறிந்து அழிந்து போவாய், ." எனக்கூறிச் சென்றன.
அப்பறவைகள் அவ்வாறு கூறியபோது மரம் எதுவும் பதிலுக்கு சொல்லும் முன், அப்பறவைகள் விருட்டென்று பறந்து சென்றன.
பறவைகள் தங்கள் தேடலைத் தொடர்ந்தன, விரைவில் அருகிலிருந்த காட்டினை அடைந்தன.அந்தகாட்டில் ஏராளமாக மரங்கள் இருந்ததால் அந்த பறவைகள் மிகவும் மகிழ்ச்சியுற்று தங்களுக்கு கூடுகட்டுவதற்கான பொருத்தமான மரமொன்றினை தேடிக்கண்டுபிடித்து அதில் தங்களுக்கான கூடுஒன்றினை கட்டி மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தன, விரைவில் மழைக்காலம் வந்தது. இரண்டு பறவைகளும் இப்போது தங்கள் கூட்டில் மிகவும்பாதுகாப்பாக இருந்தன
ஒரு நாள் மிக பலமாக புயல் ஒன்று வீசியது அதனோடு இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்தது, அந்த பலமாக வீசி புயலாலும், பலத்த மழையினாலும், பறவைகளுக்கு கூடு கட்டுவதற்கு அனுமதி மறுத்த  மரம் வேறோடு தரையில்  விழுந்தது. அதனோடு மழையினால் ஆற்றில் வெள்ளம்பெருக்கெடுத்து ஓடியது அவ்வெள்ளத்தில்  பறவைகளுக்கு கூடு கட்டுவதற்கு அனுமதி மறுத்த  மரம் அடித்து செல்லப்பட்டது
மழை நின்றதும்.அப் பறவைகள் உணவு தேடி பறந்தன. அவை ஆற்றின் மேல் பறந்து சென்றுகொண்டிருந்தபோது, ஆற்றின்  வெள்ளத்தில் தங்களுக்கு கூடு கட்டுவதற்கு அனுமதி மறுத்த  மரம் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டன.
 மரத்தின் நிலையைப் பார்த்த, அப்பறவைகள் கீழே தாழபறந்து அந்த மரத்தின் அருகே சென்று, "ஒரு நாள் நீ உன் அகங்காரத்தினால்  உன்  வேரோடு முறிந்து அழிந்து போவாய், என்று நாங்கள் கூறினோம். இன்று அந்த நாள் வந்துவிட்டது. இது உன் அகங்காரத்தின் விளைவு" என்றன.
அதற்கு மரம், "பறவைகளே நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள். மழைகாலத்தில் நான் இவ்வாறு வேறோடு பெயர்ந்து வீழ்ந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவேன் என்றும், இந்த மழைக்காலத்தில் தொடர்ந்து என்னால் வாழ முடியாது என்றும் எனக்குத் தெரியும். அதனால்தான் நான் அன்று உங்களுக்கான கூடுகட்டுவதற்காக மறுத்தேன்.
என் கிளையில் நீங்கள் கூடு கட்டியிருந்தால் இன்று நீங்களும் உயிருடன் இருந்திருக்க மாட்டீர்கள் உங்களுடைய கூட அழிந்து போயிருக்கும். அன்று, இதையெல்லாம் உங்களிடம் விவரமாக சொல்ல முடியவில்லை, நான் மறுத்ததால் நீங்கள் வருத்தப்பட்டீர்கள். பரவாயில்லை நீங்களாவது மகிழ்ச்சியோடு வாழுங்கள்." என நீண்ட விளக்கமளித்தது
மரத்தின அவ்வாறான நீண்ட விளக்கத்தை கேட்டவுடன், பறவைகள் அன்று தாங்கள் மரத்திடம் அவ்வாறு கோபமாக பேசியதை எண்ணி மிகவும் வருத்தமடைந்தன, தாங்கள் முன்பு அவ்வாறு கூறியதற்கு தங்களை மன்னித்திடுமாறு அமரத்திடம் மன்னிப்பு கோரின.
கற்றல்:
நாம் நம்முடைய வாழ்க்கையில் பல நேரங்களில் ஏதாவதொரு நிராகரிப்பை  சந்திக்க வேண்டியிருக்கும். கண்டிப்பாக அவ்வாறான, நிராகரிப்பைக் கேட்க யாரும் விரும்ப மாட்டார்கள். நிராகரிப்பு நம் உணர்வுகளைப் புண்படுத்துகிறது, இருந்தபோதிலும் அந்த நேரத்தில் நாம் நம்முடைய உணர்வுகளைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம்.
அவ்வாறு மறுத்தவர்களுக்கு அதற்கான காரணங்கள் இருந்திருக்க வேண்டும் அல்லது நம்முடைய நலனுக்காக கூட மறுத்திருக்க முடியும் என்பதை நாம் திறந்த மனதுடன் சிந்திப்பதில்லை.
எனவே, "இல்லை" என்று யாராவது கூறினால், அதனால் மனதில் வருத்தம் கொள்ளாதீர்கள் அவர்மீது கோபப்படாதீர்கள். அவரைப் பற்றி தவறாக நினைக்காதீர்கள். யாரோ ஒருவரின் "இல்லை" என்பது நம்மை ஏதேனுமொரு பெரிய சிக்கலில் இருந்து நம்மைக் காப்பாற்றுவதற்காக கூட இருக்கலாம். என மனத்தில் மகிழ்ச்சியடைந்திடுக

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...