சனி, 29 ஜூன், 2019

எந்தவொரு பிரச்சினைக்கும் முயன்றால் தீர்வு காணமுடியும்


ஒரு நாள் காலை நேரத்தில் பெரிய வியாபார நிறுவனத்தின் சொந்தகாரன் அன்றைய பிரச்சினையை எவ்வாறு தீர்வுசெய்வது என தெளிவு பெறாமல் குழப்பத்துடன் தன்னுடைய வீட்டின் பால்கனியில் உட்கார்ந்து கொண்டு தேநீர் அருந்தி கொண்டிருந்தான் அந்நிலையில் ஒரு சிறிய எறும்பு அங்கும் இங்கும் சென்றுகொண்டும் வந்துகொண்டிரும் இருந்ததை கண்ணுற்றதும் தன்னுடைய பிரச்சினையை மனதின் ஓரத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு அந்த சிறிய எறும்பு என்ன செய்கின்றது என பார்வையிட துவங்கினான் அந்த எறும்பானது தன்உருவைவிட மிகப்பெரிய இலை ஒன்றினை தன்னுடைய வாயால் பிடித்து இழுத்துகொண்டு சென்றது எங்குதான் அந்த இலையை இழுத்து செல்கின்றது என பார்ப்போம் என ஆழ்ந்து கவணித்தான் அந்தஎறும்பானது தான் செல்லும் வழியில் அந்த சிறிய எறும்பால் கடந்து செல்லமுடியாதவாறான கீரல் ஒன்று தரையில் இருந்தது அதன் மீது இந்த இலையை கொண்டு சென்று வைத்தது இப்போது அந்த இலையானது தரையிலிருந்த அந்த எறும்பால் கடக்க முடியாதவாறு இருந்த கீரலிற்கு மேல் ஒருபாளம் போன்று ஆகிவிட்டது அதனால் அந்த எறும்பானது அனாயசமாக அந்த இலையின்மீது ஊர்ந்து சென்று கீரலின் அடுத்தபகுதிக்கு சென்றது அங்கு சிறிய மலைபோன்ற தின்பண்டங்களின் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தன அவற்றில் ஒவ்வொன்றாக தன்னுடைய வாயால் பிடித்து இழுத்துகொண்டு அந்த இலையின் மேல் ஊர்ந்து கீரலிற்கு இந்த பக்கத்தில் கொண்டுவந்து தன்னுடைய வசிப்பிடத்திற்கு கொண்டுசேர்த்தது இதனை கண்டவுடன் அடடா ஒரு சிறிய எறும்பு தனக்குமுன் தன்னால் கடக்கமுடியாத அளவிற்கு பெரிய பள்ளம் போன்று இருந்த கீரல் என்ற தடையை தாண்டிசெல்வதற்கு அருமையான வழியை கண்டுபிடித்து தனக்கு தேவையான உணவினை அடைந்துவிட்டதே என ஆச்சரியம் அடைந்தான் அதனை தொடர்ந்து அவனும் நம்பிக்கையுடன் இன்று நாம் நம்முடைய வியாபாரத்தில் எதிர் கொண்டுள்ள பிரச்சினைக்கான தீர்வினை காண கண்டிப்பாக முயற்சிசெய்வோம் வெற்றி கொள்வோம் என முடிவெடுத்தான் Z

சனி, 8 ஜூன், 2019

கையில் கிடைத்த கலாக்காயை விட்டுவிட்டு உயரத்திலிருக்கும் பலாக்காய்க்கு ஆசைபடவேண்டாம்


ஒரு சமயம் காட்டில் வாழும் சிங்கம் ஒன்று காடுமுழுவதும் அலைந்து திரிந்தும் இரை எதுவும் கிடைக்காததால் மிகவும் சோர்வுற்று தன்னுடைய குகைக்கு வெறும் கையுடன் திரும்பியது பசி களைப்பில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தபின்னர் மீண்டும் வேட்டையாடுவதற்காக மிகவும் பசியோடு தன்னுடைய குகையைவிட்டு வெளியில் வந்து சுற்றி பார்த்தபோது ஒரு சிறுமுயல் மட்டும் அதனுடைய கண்ணில் பட்டது அடச்சீ யானை பசிக்கு சோளப்பொறி போன்று நம்முடைய பசிக்கு இது பத்தாதே என்னசெய்வது சரி இருந்தபோதிலும் இந்த சிறியமுயலை அடித்து சாப்பிடுவோம் நம்முடைய பசி களைப்பும் சிறிது குறையும் அதன்பின்னர் வேட்டையாடுவதற்காக கிளம்பலாம் என முடிவுசெய்து அந்த சிறியமுயலை பிடித்திட முயலும்போது கொழுகொழுவென இருக்கும் மான்ஒன்று அந்த வழியாக கடந்து செல்வதை சிங்கம் கண்டது உடன் இந்த சிறிய முயலை பிடித்து சாப்பிட்டால் பசி சிறிதுதான் குறையும் அதற்கு பதிலாக அந்த மானை பிடித்தால் இரண்டு மூன்று வேளைக்கு போதுமானதாக இருக்கும் அதனால் அந்த மானையே பிடிப்போம் என கைக்கு எட்டியதூரத்தில் இருந்த சிறிய முயலை பிடித்திடாமல் மானை பிடித்திட பாய்ந்து சென்றது சிங்கம் தூரத்திலேயே சிங்கத்தை பார்த்துவந்த மானானது தன்னுடைய உயிரை காத்து கொள்வதற்காக அந்த காட்டில் மிகவும் வேகமாக ஓடிமறைந்து விட்டது அந்த மானை பிடிக்கமுடியாமல் தோல்வியுடன் திரும்பியசிங்கமானது சிறிய முயலையாவது பிடித்து தின்று பசிமயக்கத்தை சிறிது குறைத்து கொள்வோம் என திரும்பி பார்த்தால் முயலும் ஏற்கனவே ஓடி மறைந்துவிட்டிருந்தது அடடா கையில் கிடைத்த கலாக்காயை விட்டுவிட்டு உயரத்திலிருக்கும் பலாக்காய்க்கு ஆசைபட்டதால் மொத்தத்தில் எதுவும் கிடைக்காமல் பட்டினி கிடக்க-வேண்டியதாகிவிட்டதே என சோர்வுடனும் பசிமயக்கத்துடனும் தன்னுடைய குகைக்குள் சுருண்டுபடுத்துவிட்டது சிங்கம்

செவ்வாய், 4 ஜூன், 2019

தவறான புரிதல்


சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முடிவெட்டும் கடைக்கு ஒருநாள் வயதான மனிதர் ஒருவர் சென்றார் அவருக்கு அந்த கடைகாரர் அழகாக முடிவெட்டிமுடித்தபின்னர் அந்த வயதான மனிதர் எவ்வளவு தொகை தரவேண்டும் என கோரி தன்னுடை சட்டைபையிலிருந்து பணத்தைஎடுத்து கொடுத்தார் உடன் இவர் மிவும் வயதானவர் என்பதால்" நன்றி! ஐயா நான் சமுதாய சேவைக்காக கட்டணமெதுவும் வாங்குவதில்லை அதனால் தொகைஎதுவும் தேவையெில்லை" என வாங்காமல் மறுத்துவிட்டார் அதனால் அந்த வயதான மனிதரும் "சரி தம்பி!” என தன்னுடைய வீட்டிற்கு திரும்பி சென்றார் அதற்கு மறுநாள்காலையில் அந்த முடிவெட்டும் கடைக்காரர் தன்னுடைய கடையின் பூட்டினை திறக்கும்போது "தங்களின் சமுதாய சேவைக்கு மிக்க நன்றி!” என்ற அட்டையும் அதனோடு கூடவே டஜன் கணக்கான கேக்குகளும் இருந்தன அதனை கண்ணுற்றதும் மிகவும் நெகிழ்ச்சியுடன் அன்றைய பணியை துவங்கினார். அதற்டுத்து ஒருசிலநாட்கள் கழித்து மற்றொரு வயதான மென்பொருள் பொறியாளர் அதே கடைக்கு வந்தார் அவருக்கு அந்த கடைகாரர் அழகாக முடிவெட்டிமுடித்தபின்னர் அந்த வயதான மனிதர் எவ்வளவு தொகை தரவேண்டும் என கோரி தன்னுடை சட்டை-பையிலிருந்து பணத்தைஎடுத்து கொடுத்தார் உடன் இவர் மிவும் வயதானவர் என்பதால் "நன்றி ஐயா! நான் சமுதாய சேவைக்காக கட்டணமெதுவும் வாங்குவதில்லை அதனால் தொகைஎதுவும் தேவையெில்லை" என வாங்காமல் மறுத்துவிட்டார் அந்த வயதானமென்பொருள் பொறியாளரும் தன்னுடைய வீட்டிற்கு திரும்பி சென்றார்அதற்கடுத்த நாள் சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளதன்னுடைய முடிவெட்டும் கடைக்கு அந்த கடைக்கு வந்தபோது அவருடைய கடையின் வாயிலில் டஜன் கணக்கான மென்பொருள் பொறியாளர் கள் கட்டணமில்லாமல் முடிவெட்டிகொள்வதற்காக வரிசையாக நின்று கொண்டிருந்தனர்

சனி, 1 ஜூன், 2019

மரியாதை என்பது இருவழிப்பாதை போன்றது


நமது இந்திய நாட்டின் எல்லையோரத்தில் காவல்பணியாற்றிடும் தரைப்படையில் புதியதாக சேர்ந்த காவல்படை அலுவலர் ஒருவர் ஒருநாள் தன்னுடைய கட்டுப்-பாட்டில் உள்ள அனைத்து காவலர்களும் விழிப்புடன் பணிபுரிகின்றார்களா என சுற்றி பார்த்துகொண்டேவந்தார்.அப்போது ஒரு காவலர் மட்டும் இந்த இளம்-காவல்படை அலுவலர் வரும்போது மரியாதை நிமித்தமாக வணக்கம் செய்யாமல் வேடிக்கை பார்த்து கொண்டு நின்றுகொண்டிருந்தார் அதனை கண்ணுற்ற நமது இளம்காவல்படை அலுவலர் ' மரியாதை நிமித்தமான வணக்கம்கூடநமக்கு செய்யாமல் நின்றுகொண்டிருப்பதா' என கோபமுற்று "ஏன் எனக்கு வணக்கம் செலுத்தாமல் நின்று கொண்டுள்ளாய்!” என அந்த காவலரிடம் வினவினார். அதனை தொடர்ந்து "ஐயா! நீங்கள் வருவதை நான் பார்க்கவில்லை" எனஅந்த காவலர் பதில் கூறினார்.அதனால் மிகவும் கோபமுற்று "அப்படியா! என்னுடைய வருகை அவ்வளவு அலட்சியமாகி விட்டதா! இந்த செயலிற்கு தண்டனையாக நீ எனக்கு100 முறை வணக்கம் செலுத்த வேண்டும்" என அந்த இளம்காவல்படை அலுவலர் உத்திரவிட்டார். அப்போது அந்த வழியாக தரைப்படை தலைமை அலுவலர் ஃபீல்டு மார்ஷல் சாம் மானக்ஸா சென்று கொண்டிருந்தார் இந்த செயல்களை பார்த்து தன்னுடைய வாகணத்தை நிறுத்தம் செய்து "இங்கு என்ன பிரச்சினை?” என வினவினார் "அதுஒன்றும் இல்லை,ஐயா! நான் வழக்கம்போன்று அனைத்து காவலர்களும் விழிப்புடன் பணிபுரிகின்றார்களா என சுற்றி பார்த்து கொண்டு வந்தேன் இந்த காவலர் மட்டும் நான் வரும்போது எனக்கு வணக்கம் செலுத்தாமல் வேடிக்கைபார்த்து கொண்டிருந்தார் அதனால் இவருக்கு தண்டனையாக எனக்கு100 முறை வணக்கம் செலுத்தவேண்டும்" என க்கூறிக்கொண்டிருந்தேன். என்றார் இளம்காவல்படை அலுவலர். "அப்படியா சரிசரி அந்த காவலர் வணக்கம் செலுத்திடும்போது பதிலுக்கு நீங்களும் வணக்கம் செலுத்துங்கள்" என தரைப்படை தலைமை அலுவலர் இளம்காவல்படை அலுவலருக்கு ஆலோசனை கூறிச்-சென்றார். அதனை தொடர்ந்து அடுத்த இரண்டு மணிநேரமாக அந்த காவலர் 100முறைஅந்த இளம்காவல்படை அலுவலருக்கு வணக்கம் செய்தார் அதனை ஏற்று அந்த இளம்காவல்படை அலுவலரும் 100முறை பதில் வணக்கம் செய்தார் .மரியாதை என்பது இருவழிப்பாதை போன்றது எனஅந்த இளம்காவல்படை அலுவலர் இந்த செயலின் வாயிலாகதெரிந்து கொண்டார்

புதன், 29 மே, 2019

எவ்வாறான சூழலில் நாம் வாழ்ந்தாலும் நம்முடைய உண்மையான திறன்களையும் ஆற்றலையும் பயன்படுத்தி வாழ்வில் வெற்றிகொள்க


முன்னொரு காலத்தில் ஒரு உயரமான மலையின் உச்சியிலிருந்த மரங்களில் பருந்து கள் கூடுகட்டி வாழ்ந்து வந்தன. அந்த கூட்டில் பருந்துகள் முட்டையிட்டு பாதுகாத்துவந்தன ஒருநாள் திடீரென நிலநடுக்கம் உருவாகி அனைத்து பொருட்களும் தன்னிலையில் இல்லாமல் அசைந்தாடி உருண்டோடி கொண்டிருந்தன அதனை தொடர்ந்து பருந்து முட்டைஒன்றும் உருண்டோடி கீழே மனிதர்கள் வாழும் தரைக்கு வந்து சேர்ந்து அவ்வாறு வந்து சேர்ந்த இடம் கோழிகள் வாழும் கோழிக்கூண்டாகும் அங்கு ஏற்கனவே கோழிமுட்டைகள் நிறைய இருந்தன அதனோடு இந்த பருந்து முட்டையைும் சேர்ந்துவிட்டது பின்னர் அந்த கோழிகூண்டிலிருந்த பெட்டைக்கோழியானது அனைத்து முட்டைகளையும் சேர்த்து அடைகாத்து குஞ்சுகளை பொறிக்கசெய்தது அதன்பின்னர் கோழிக்குஞ்சு-களோடு பருந்து குஞ்சும் சேர்ந்து வழக்கமான பறத்தல் மற்ற இரையை தேடி-பிடித்தல் போன்ற பணிகளுக்கு பதிலாக கோழிகள் செய்வதைபோன்று குப்பைகளை காலால் கிளரி கிடைக்கும் உணவுதானியங்களையும் புழுபூச்சிகளையும் தன்னுடைய அலகால் கொத்தி தின்பதற்கு பழகி கொண்டது அந்த சமயத்தில் வானத்தில் பருந்து ஒன்ற பறந்து கொண்டிருந்தது உடன் தாய்க்கோழியானது பிள்ளைகளே பருந்து ஒன்று வானத்தில் பறந்து வருகின்றது அது உங்களை கொத்தி கொண்டுசென்றுவிடும் அதனால் உடன் நம்முடைய கூட்டிற்கு சென்று பதுங்கி கொள்ளுங்கள் என எச்சரித்தது உடன்அனைத்து கோழிக்குஞ்சுகளும் தாம் வாழும் கூண்டிற்கு ஒடிச்சென்றன அவைகளுடன் இந்த பருந்துகுஞ்சும் மிகவிரைவாக கோழிக்கூட்டிற்குள் ஓடிசென்று பதுங்கிகொண்டது அதேபோன்று நல்லதிறமைகளும் ஆற்றல்களும் நமக்கிருந்தாலும் நாம் சேரும் சூழலிற்கேற்ப நம்முடைய அனைத்து திறமையும் ஆற்றலும் மறந்துசாதாரணமாக வாழும் நிலைஏற்பட ஏதுவாகிவிடும் அதனால் எவ்வாறான சூழலில் நாம் வாழ்ந்தாலும் நம்முடைய உண்மையான திறன்களையும் ஆற்றலையும் பயன்படுத்தி வாழ்வில் வெற்றிகொள்ள உறுதிகொள்க

சனி, 18 மே, 2019

சூழல் ஒன்றுதான் ஆயினும் அவருவருடைய கண்ணோட்டம் மட்டும் மாறிவிடுகின்றன


ஒரு நகரத்தில் ஒருகுடும்பத்தில் பிறந்த இரு சகோதரர்கள் வாழ்ந்துவந்தனர் அவர்களுள் மூத்தவன் எப்போதும் போதை மருந்தினை சாப்பிட்டுகொண்டும் குடித்துகொண்டும் வீட்டில் இவைகளை வாங்குவதற்காக பணம் தரவில்லையெனில் அடித்து உதைத்துகொண்டும் குடும்ப உறுப்பினர்களுடைய அனைவரின் வாழ்க்கையையும் வீணாக்கி அழித்துகொண்டுவந்தான் இளையவன் அதற்கு மறுதலையாக நல்ல உழைப்பாளி சிறியஅளவில் வியாபாரம் செய்து அவனுடைய குடும்பு உறுப்பினர்கள் மட்டுமல்லாது அந்தநகரில் வாழும் அனைவருக்கும் நல்லவனாக வல்லவனாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்தான்.இந்நிலையில் ஒரே குடும்பத்தில் ஒரேசூழலில் பிறந்த இருசகோதரர்கள் எப்படி இவ்வாறு வெவ்வேறான நிலையில் வாழும் நிலைக்கு மாறிவி்ட்டனர் என்ற சந்தேகம் ஒருவருக்கு தோன்றியது அதனால் அதனை தீர்வுசெய்து கொள்வதற்காக அவர் மூத்தவனிடம் "தம்பி! நீயும் உன்தம்பியும் ஒரே வீட்டில் ஒரே சூழலில் பிறந்துவளர்ந்திருந்தாலும் நீ குடிகாரனாகவும் உன்னுடைய தம்பி நல்லவனாகவும் எவ்வாறு உருமாறி விட்டீர்கள்?” எனவினவியபோது மூத்தவன் "என்னுடைய அப்பாதான் காரணம் அவர் எப்போதும் போதை மருந்தினை சாப்பிட்டுகொண்டும் குடித்துகொண்டும் வீட்டில் இவைகளை வாங்குவதற்காக பணம் தரவில்லையெனில் அடித்து உதைத்துகொண்டும் இருப்பார் அதனால் அதனை கண்ணுற்ற நானும் அவரைபோன்றேஅச்சுபிசகாமல் வாழ்ந்து வருகின்றேன்" எனக்கூறினான் . அதன்பின்னர் அவர் அவனுடைய தம்பியிடம்அதே கேள்வியை கேட்டபோது "என்னுடைய அப்பா எப்போதும் போதை மருந்தினை சாப்பிட்டுகொண்டும் குடித்துகொண்டும் வீட்டில் இவைகளை வாங்குவதற்காக பணம் தரவில்லையெனில் அடித்து உதைத்துகொண்டும் இருப்பார் அதனால் அதனை கண்ணுற்ற நான் அவ்வாறு செய்வது தவறு நாம் சமுதாயத்தில் வாழும் மற்றவர்களை போன்ற நல்லவனாக வாழவேண்டும் என மனஉறுதி எடுத்துகொண்டு வாழ்ந்து வருகின்றேன்" எனக்கூறினான் சூழல் ஒன்றுதான் ஆயினும் அவருவருடைய கண்ணோட்டம் மட்டும் மாறிவிடுகின்றன .அதனால் நாம் வாழும் இந்த சமுதாயத்தில் சீரழிவை ஏற்படுத்தும் குறிப்பிட்ட சூழலில் வளர்ந்தாலும் நாம்வாழும் இந்த சமுதாயத்திற்கு நன்மைபயக்கும் நோக்கில் அவ்வாறான தீங்கான செயலை செய்யக்கூடாது என சிந்தித்து நல்லவனாகவும் வல்லவனாகவும் வாழவேண்டும் மனஉறுதியுடன் வாழமுயன்றிடுக என அறிவுறுத்தப்படுகின்றது

சனி, 11 மே, 2019

LLP என சுருக்கமாக அழைக்கப்படும் பொறுப்பு வரையறுக்கப்பட்டகூட்டாண்மை நிறுவனத்தை பதிவுசெய்தெவ்வாறு


நிறுவனங்களுக்கான பல்வேறுவிதமான இணக்கசெயல்களையும் நடைமுறைகளையும் பற்றி கவலைப்படாமல் சிறு வியாபாரிகள் தங்களுடைய வியாபாரத்தைச் மேம்படுத்துவதிலும் வளர்ச்சிக்கு இட்டுசெல்வதிலும் மட்டும் கவணம் செலுத்தினால் போதும் என்றவாறான தற்போதைய சூழலிற்கு மாற்றி கொண்டுவருவதற்காக அவ்வாறான சிறுநிறுவனங்களில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த கடினமான சூழலை சரிசெய்து அவை சிறப்பாக செயல்படுவதற்காக மத்திய அரசு ஒருசில மாற்றங்களையும் புதிய திருத்தங்களையும் செய்து தற்போது நடைமுறைபடுத்தியுள்ளது . இவ்வாறு மத்தியஅரசால் செய்யப்பட்ட மாற்றங்களாலும் திருத்தங்களாலும் , கடந்த சில ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தில் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுமங்களின்(Limited Liabilities Partnership (LLP)) பங்களிப்புகள் மிகவும் வேகமாக உயர்ந்துவருகின்றன. இங்கு, LLP என சுருக்கமாக அழைக்கப்படும் பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமத்தினை பதிவுசெய்து செயல்படுத்திடுவதற்கான செயல்முறைகளையும் வழிமுறைகளையும் நடவடிக்கைகளையும் பற்றி காணவிருக்கின்றோம் . இதற்காக பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமச்சட்டம் (LLP சட்டம்), 2008 இல் முழுமையானவழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. புதியதாக ஒரு LLP ஐ பதிவுசெய்வதற்கான அடிப்படை தேவைகள் பின்வருமாறு: 1. குறைந்தபட்சம் இரண்டு கூட்டாளிகள், (அவ்விருவரும் தனிநபராகவோ அல்லது நிறுமமாகவோ இருக்கலாம்). 2. நிறுமம் பதிவுசெய்யப்பட்டபின்னர் தொடர்ந்து தகவல்தொடர்புகளை அனுப்புவதற்கும் பெறுவதற்குமான இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு பதிவுஅலுவலகம். 3. குறைந்தபட்சம் இரண்டு தனிநபர்களையாவது நியமிக்கப்பட்ட கூட்டாளிகளாக (Designated Partners)நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமனம் செய்யப்படும் ஒவ்வொரு நியமிக்கப்பட்ட கூட்டாளியும் நிறுமங்களின் விவகார அமைச்சகத்தால் (MCA) ஒதுக்கீடுசெய்யப்பட்ட ஒரு நியமிக்கப்பட்ட கூட்டாளி அடையாள எண் (Designated Partner Identification Number(DPIN)) ஒன்றினை பெற்றிருக்க வேண்டும். 5. கூட்டாளிகளுக்கு இடையே அல்லது கூட்டாண்மை நிறுமத்திற்கும் அதன் கூட்டாளிகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். 6. அந்த LLP நிறுமத்திற்கென தனியான பெயர் ஒன்று உருவாக்கியிருக்கவேண்டும் . வரையறுக்கப்பட்ட கூட்டாண்மைநிறுமத்தினை(LLP) பதிவுசெய்தற்கான படிமுறைகள்பின்வருமாறு படிமுறை.1: முதல்படிமுறையாக இரும கையொப்ப சான்றிதழை(Digital Signature Certificate (DSC)) அந்த கூட்டாண்மைநிறுமத்தில் கூட்டாளிகளாக சேரவிரும்பும் ஒவ்வொரு கூட்டாளியும் நியமிக்கப்பட்ட கூட்டாளியும் பெற்றிடவேண்டும். படிமுறை.2: அடுத்து புதியதாக சேரும் கூட்டாளிகளுக்கும் நியமிக்கப்பட்ட கூட்டாளி களுக்கும் படிவம் எண் DP-3 ஐ பயன்படுத்தி அல்லது LPP_FILLIP எனும் படிவத்தைப் பயன்படுத்தி நியமிக்கப்பட்ட கூட்டாளி அடையாள எண் (DPIN) ஐப் பெறுவதற்காக விண்ணப்பம் செய்து பெறவேண்டும் படிமுறை.3: மூன்றாவதாக RUN-LLP சேவைகளைப் பயன்படுத்திஅல்லது LPP_FILLIP எனும் படிவத்தைப்நேரடியாக பயன்படுத்தி நிறுமங்களின் விவகார அமைச்சகத்தில்(MCA) விண்ணப்பம் செய்து புதிய LLP நிறுமத்திற்கான பெயரை ஒதுக்கீடு செய்துபெற்றிடவேண்டும் படிமுறை.4:நான்காவதாக பின்வரும் ஆவணங்களுடன் படிவம் எண்LLP_FILLIPஐ நிறுமங்களின் விவகார அமைச்சகத்தில்(MCA) சமர்ப்பித்திடவேண்டும் 4.1.கூட்டாளிகளாக நியமனம் செய்வதற்காக முன்மொழியப்பட்டஒவ்வொரு கூட்டாளிகளிடமிருந்து ம் ஒப்புக்கொள்ளப்பட்டகூட்டாளிகளிடமிருந்தும் பெறப்பட்ட அவ்வாறு கூட்டாளிகளாக அந்நிறுமத்தில் செயல்படுவதற்கான ஒப்புதல் கடிதம். 4.2.பதிவுசெய்வதற்காக முன்மொழியப்பட்ட அந்த LLP நிறுமத்தின் இருப்பிட முகவரிக்கான சான்றிதழ். 4.3.முன்மொழியப்படும் அல்லது நியமிக்கப்பட்ட ஒவ்வொரு கூட்டாளிகளையும் சுட்டிகாட்டுவதற்கான அடையாளச் சான்று. 4.4.நியமனம் செய்வதற்காக முன்மொழியப்படும் கூட்டாளிகளின் இருப்பிடமுகவரிச் சான்று. 4.4.வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறமத்தில் முதலீடு செய்பவர்களின் விவரங்களடங்கிய தாள். 4.5.கூட்டாளிகளில் / நியமிக்கப்பட்ட கூட்டாளிகளில் யாரேனும்ஒருவர் ஒரு இயக்குநராக / கூட்டாளிகளாக உள்ள LLP(கள்) மற்றும் / அல்லது நிறும((த்தின்) (ங்களின்)) விவரங்கள். 4.6.இந்நிறுமத்திற்கான வர்த்தக முத்திரையின் உரிமையாளரின் அங்கீகாரம் அல்லது வர்த்தக முத்திரையைப் பதிவு செய்வதற்கு விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரர் ஆகியவற்றிற்கு வழங்கிய ஒப்பதல். 4.7.முன்மொழியப்பட்ட பெயரில் எந்தவொரு சொல்லை (சொற்களை) அல்லது வெளிப்பாடு (களை) தேவைப்பட்டால் மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் பெறப்பட்ட , ஒப்புதலின் நகல். 4.8.வெளிநாட்டுடனோ அல்லது வெளிநாட்டிலுள் ஒருகுறிப்பிட்ட பகுதியுடனோ வியாபாரம் செய்வதற்கான ஒத்துழைப்பு மற்றும் அனுமதி ஆகியவற்றினை வழங்கிடும் தகுதிவாய்ந்த அவ்வெளிநாட்டு அதிகாரியின் ஒப்புதலின் நகல். 4.9. ஏற்கனவே RUN-LLP சேவைகளை பயன்படுத்தி நிறுமத்திற்கான பெயர் ஒதுக்கீடு ஏற்கப்பட்டிருந்தால் அந்த பெயருக்கான ஒப்புதல் கடிதம் படிமுறை.5:LLP படிவம் 3 இல் இந்த LLP ஐ துவங்கப்பட்ட 30 நாட்களுக்குள் நிறுமங்களின் விவகார அமைச்சகத்தின்(MCA) கீழ்செயல்படும் நிறுமங்களின் பதிவாளரிடம் இந்த LLP ஒப்பந்தத்தை சமர்ப்பித்திடவேண்டும். கீழ்காண்பவை முக்கிய மாக கவணத்தில் கொள்ளவேண்டியவைகளாகும்: 6.1.பெயர் ஒதுக்கீட்டிற்கான RUN-LLP சேவைகளை விருப்பபட்டால் பயன்படுத்தி கொள்க இது கட்டாயமன்று, LLP பெயரைப் ஒதுக்கீடு பெறுவதற்காக நிறுமங்களின் விவகார அமைச்சகத்தின்(MCA) கீழ்செயல்படும் நிறுமங்களின் பதிவாளரிடம் நேரடியாக படிவம் LLP_FILLIP ஐப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் . 6.2. கூட்டாளிகளாக நியமனம் செய்வதற்காக முன்மொழியப்பட்ட கூட்டாளிகளுக்கான மற்றும் நியமிக்கப்பட்ட கூட்டாளிகளுக்கான DPIN ஐப் விரும்பினால் பெறலாம் கட்டாயமன்று, இதற்காக விண்ணப்பதாரர் நேரடியாக படிவம் LLP_FILLIP ஐப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். 6.3. நிறுமங்களின் விவகார அமைச்சகத்தால்(MCA) நிறுமத்திற்கான பெயரானது ஒதுக்கீடுசெய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டபின் 90 நாட்கள் வரை அந்த பெயரை பயன்படுத்தி நிறுமத்தை பதிவுசெய்து கொள்ளலாம் அதற்குமேல் கடந்துவிட்டால் மீண்டும் பெயர் ஒதுக்கீடுசெய்திடுமாறு விண்ணப்பிக்கவேண்டும் . 6.4.LLP. ஒப்பந்தத்தின் முத்திரைத்தாள் கட்டணமும் நோட்டரிகளின் கட்டணமும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...