ஞாயிறு, 31 மே, 2020

எளிதாக தொழில் துவங்கிடுவதற்காக MCA எனும் நிறுமங்களின் விவகாரத்துறை அமைச்சகத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்


புதியதாக தொழில் துவங்கிடும் நிறுவனங்களானவை CIN, PAN, TIN, DIN, Name, EPFO, ESIC , GSTN ஆகிய எட்டு பதிவுகளை மூன்று வெவ்வேறு அமைச்சகத்தில் பதிவு செய்வதற்காக மிகசிரமபடவேண்டியுள்ளதை தவிர்த்து இவை எட்டிற்கும் சேர்த்து SPICe என சுருக்கமாக அழைக்கப்பெறும் எளிதாக நிறுவனத்தை மின்னணு முறையில் இணைப்பதற்கான விவரப்படிவம் (Simplified Proforma for Incorporating Company Electronically (SPICe)) எனும் ஒருங்கிணைந்து பதிவுசெய்வதற்கான ஒரேயொரு படிவத்தில் அனைத்து விவரங்களையும் பதிவுசெய்துகொள்ளும் நடைமுறையை அறிமுகபடுத்தியுள்ளது புதிய நிறுவனங்களுக்கான பெயரை எளிதாக தெரிவுசெய்வதற்காக இணையத்தின் வாயிலாக RUN – Reserve Unique Name எனும் நடைமுறையையும் நிறுவனங்களின் இயக்குநர்களாக பதிவுசெய்வதற்கான Director Identification Number (DIN) எனும் நடைமுறையையும் ரூ.15 இலட்சத்திற்குமிகாமல் பங்குத்தொகையுடன் துவங்கிடும் நிறுவனங்கள் பதிவுசெய்வதற்கான கட்டணமில்லாமலும் அறிமுகபடுத்தியுள்ளது ஒன்றுக்கு மேற்பட்டநிறுவனங்கள்ஒன்றாக இணைந்து(Merge) ஒரே நிறுவனமாக மாறி செயல்படுவதற்காகன போட்டிச் சட்டம் (Competition AcT)2002 இன் கீழ் குறைந்தபட்ச விலக்கு நிறுமச்சட்டத்தில் விரைவு படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது பொது சலுகைகளின் நேர வரம்புகளைக் குறைப்பதன் மூலம் செபியுடன் விதிமுறைகளை ஒத்திசை வுசெய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் முந்தைய ஆறு நாட்களுக்குப் பதிலாக விண்ணப்பத்தின் மூன்று நாட்களுக்குள் பத்திரங்களைப் பெறுமுடியும் நிறுமங்களின் சட்டம், 2013 இன் கீழ் மத்தியஸ்தம் மற்றும் சமரசம் தொடர்பான ஏற்பாடுகளை செயல்படுத்தபடுகின்றன. நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான அளவு சுதந்திர இயக்குநர்களை(Independent Director) தெரிவுசெய்துநியமித்து கொள்வதற்கு வசதியாக சுதந்திர இயக்குநரின் தரவுத்தளம் ஒன்று பராமரிக்கப்படுகின்றது நிறுவனங்கள் சட்டத்தின் பல்வேறு விதிகளிலிருந்து தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், நிதி மற்றும் IFSC நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

சனி, 30 மே, 2020

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 115BAA குறித்து பகுப்பாய்வு


நடைமுறையில் இருந்துவரும் வருமான வரிச்சட்டத்தில் தற்போது புதியதாக 115BAA எனும் பிரிவு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது, இந்த புதிய பிரிவின் வாயிலாக உள்நாட்டு நிறுவனங்கள் விரும்பினால் தற்போது செலுத்திடும் 25% (அல்லது 30%) என்ற வருமான வரிவிகிதத்திற்கு பதிலாக வரிவிகிதத்தினை 3% அல்லது 8% அளவிற்கு குறைத்து 22% எனும் புதிய வரி விகிதத்தில் வருமானவரி செலுத்தலாம். இந்த புதிய பிரிவு 115BAA இன்படி தாம் வருமானவரி செலுத்தவிரும்புவதாக தெரிவுசெய்த எந்தவொரு உள்நாட்டு நிறுவனமும் அதனுடைய முந்தைய ஆண்டில் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் நடப்பாண்டில் ஈட்டிய அதனுடைய மொத்த வருமானத்தில் புதிய வரிவிகிதத்தில் வருமானவரி செலுத்தமுடியும் . இதன் வாயிலாக நடப்பாண்டில் புதிய வருமான வரிவிகிதத்தில் வருமான வரியை செலுத்துவதற்கான வாய்ப்பு பல்வேறு உள்நாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கின்றது .இதன் விளைவாக அவ்வாறானநிறுவனங்களில் வரி தொடர்பான பணப்-பரிமாற்றமானது வெகுவாக குறைந்து அதனால் கிடைத்திடும் நடைமுறை மூல-தனத்தினை தத்தமதுவியாபார வளரச்சிக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாகி உள்ளது. ஏற்கனவே இதேபோன்று அறிமுகபடுத்தப்பட்ட வருமான வரிசட்டம் பிரிவு 115BAB என்பதை உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் மட்டுமே சலுகைகளை பெறமுடியும் என கட்டுப்படுத்தப் பட்டது என்பது போன்றில்லாமல், தற்போது இந்தியாவில் செயல்படும் அனைத்து உள்நாட்டு நிறுவனங்களும் இந்த புதிய பிரிவு 115BAA ஐ பயன்படுத்திகொள்ளமுடியும். ஆயினும் இந்த புதிய சலுகைகளை நடைமுறையில் பெறுவதற்கு பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்ய வேண்டும் : அ) அத்தகைய உள்நாட்டு நிறுவனங்கள் பின்வரும் கழிவுகளையும் வரி விலக்குகளையும் கோரக்கூடாது, 1) பிரிவு 10AA. இன்படி.சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள அலகுகள் தொடர்பான வரிவிலக்குகள் 2) ஆந்திரா, பீகார், தெலுங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் ஒரு சில பின்தங்கிய பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள், இயந்திரங்கள் ஆகியவற்றை நிறுவுகை செய்வதற்காக வருமான வரிச்சட்டம் பிரிவு 32 (1) (iia)இன்படி கூடுதல் தேய்மானமும் பிரிவு 32AD இன்படிமுதலீட்டு படியும் . 3) இந்தியாவில் பெட்ரோலியம் அல்லது இயற்கை எரிவாயு அல்லது இந்த இரு தொழில்களிலும் சேர்ந்து ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் வருமானவரிச்சட்டம் பிரிவு 33ABA இன்படி தள மறுசீரமைப்பிற்கான வைப்புத்தொகை செய்வதன் மூலமான கழிவுகள். 4) பிரிவு 35 இன்படி அறிவியல் ஆராய்ச்சிக்கு செலவிடப்பட்ட செலவினங்களுக்கான கழிவுகள். 5) பிரிவு 35ADஇன்படி குறிப்பிட்ட வணிகத்தின் மூலதன செலவினங்களுக்கான கழிவுகள். 6) பிரிவு 35CCCஇன்படி வேளாண் விரிவாக்கத் திட்டம் அல்லது பிரிவு35CCD இன்படி திறன் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றிற்கான செலவுகளுக்கான கழிவுகள். 7) அத்தியாயம் VI-A இன் பிரிவு 80 / JJAA இன்படி புதிய பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான விலக்குகளைத் தவிர மிகுதி பிரிவு 80 uA, 80IAB, 80IB போன்றவற்றில் குறிப்பிடப்பட்ட வருமானத்தின் உள்ளிட்ட கழிவுகள்.. ஆ) அத்தகைய இந்திய நிறுவனங்களானவை தங்களுடைய ஆண்டு வருமான வரி படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கெடுதேதிக்கு முன்னதாக வே குறைக்கப்பட்ட இந்த புதிய22% எனும் வருமானவரி விகிதத்தில் வருமான வரி செலுத்துகின்ற வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். நிறுவனமானது வருமான வரி அறிக்கையை சமர்ப்பிக்க தவறிவிட்டாலும் அல்லது பிரிவு139 (1)இன்டி குறிப்பிடப்பட்ட தேதிக்குப் பிறகு வருமானவரி அறிக்கையை சமர்ப்பித்திருந்தாலும், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்வதற்கான விருப்பத்தினை பிரிவு 139 இன்படி (இந்த புதிய பிரிவு115BAA இன்படி [ 4])குறிப்பிடப்பட்ட தேதிக்கு முன்பே பயன்படுத்தி கொள்ளப்பட வேண்டும். இ) இவ்வாறான வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டவுடன், இந்த புதிய பிரிவு 115BAA ஐ திரும்பப் பெறுவது சாத்தியமில்லை. மேலும் வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 32 (1) (iia) இன்படிகூடுதல் தேய்மான சலுகைககளையும் பிரிவு 115JAA இன் படி குறைந்தபட்ச மாற்று வரி வரவு சலுகைகளையும் இலாபநட்டகணக்கில் கொண்டுவருவது தொடர்பான பின்வரும் ஆலோசனைகளையும் மனதில் கொண்டு தெளிவு பெறுக. 1) பிரிவு 32 (1) (iia) இன்படி கூடுதல் தேய்மானத்தின் காரணமாக ஏற்படும் இழப்பு : எண். 29/2019 நாள் 02.10.2019 அன்று வெளியிடப்பட்ட வருமான வரித் துறை சுற்றறிக்கை யின்படி , 115BAA பிரிவின் கீழ் வருமான வரி செலுத்த விரும்புவதாகத் தேர்ந்தெடுத்த உள்நாட்டு நிறுவனங்களின் இலாபநட்ட கணக்கில் கூடுதல் தேய்மானத்தின் காரணமாக ஏற்படும் இழப்பை பின்வரும் ஆண்டுகளுக்கு கொண்டு செல்லவோ அல்லது சரிசெய்து கொள்ளவோ அனுமதிக்கப்பட மாட்டாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது . பொதுவாக நிறுவனத்தின் ஏற்படும் இழப்புகளானவை , வருமானம் ஈட்டுவதற்காக அதிக படியாக செலவு செய்தல் , நிலையான சொத்துக்களின் தேய்மானத்தால் ஏற்படும் இழப்பு ஆகிய இரண்டு வகைகளாக இருக்கலாம். நிறுவனத்தின் வருமான வரி அறிக்கையி ல் தேய்மானத்தினை குறிப்பிடாவிட்டால் அந்நிறுவனத்திற்கு இலாபம் இருக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறான நிலையில், தேய்மானம் காரணமாக மட்டுமே ஏற்படுகின்ற இழப்பானது . வருமான வரிச் சட்டத்தின் கீழ் திரட்டப்பட்ட தேய்மானம் என குறிப்பிடப்படுகின்றது, மேலும் இது எதிர்வரும் ஆண்டுகளுக்கு கொண்டு செல்வதற்கான காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இப்போது,பிரிவு 32 (1) (ii அ) இல் குறிப்பிடப்பட்டுள்ள கூடுதல் தேய்மானத்திலிருந்து இத்தகைய இழப்பு ஏற்பட்டால், இந்த இழப்பை எதிர்வரும் ஆண்டுகளுக்கு கொண்டு செல்லவோ அல்லது 115BAA பிரிவைத் தேர்ந்தெடுத்த நிறுவனத்தின் வருமானத்தில் அதை சரிசெய்து கொள்ளவோ முடியாது. மேற்கண்ட விளக்கத்தை ஒரு எளிய எடுத்துக்காட்டுடன் விளக்கலாம். எடுத்துக்காட்டாக: கம்பெனி ஏபிசி லிமிடெட் கூடுதல் தேய்மானம் காரணமாக பிரிவு 32(1)(iia) இன்படி ரூ. 10,00,000. ஆக அதனுடைய நட்டம் ஏற்பட்டுள்ளது 2019-20 ஆம் ஆண்டுடன் முடிவடையும் நிதியாண்டில், இந்நிறுவனம் அதன் மொத்த வருமானத்தில் 22% எனும் குறைந்த வரிவிகிதத்தில் வருமான வரியாக செலுத்துவதற்காக இந்த புதிய பிரிவு 115BAA ஐ தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது என கொள்க . இப்போது, இந்நிறுவனம் மொத்த வருமானமாகரூ. 5,00,000 ஈட்டியுள்ளதாக கொள்க இந்த வருமானத்தில் மேற்கண்ட கூடுதல் தேய்மானத்திற்கான இழப்பு ரூ. 10,00,000 சரிசெய்து கொள்ள தகுதியற்றதாக மாறுகின்ற நிலை உருவாகும். மேற்கண்ட சட்டப்பிரிவானது, "உள்நாட்டு நிறுவனத்திற்கு 115BAA ஐத் தேர்ந்தெடுப்பதற்கான காலக்கெடு இல்லாததால், முதலில் இந்த ஆண்டு ஏற்பட்ட இழப்புரூ .10,00,000 ஐ பின்வரும் ஆண்டுகளுக்கு கொண்டு செல்வதற்கேதுவாக, வழக்கம்போன்ற சாதாரண வரிவிகிதத்தின் கீழ் வரி செலுத்துவதற்கான வருமானவரிஅறிக்கையை சமர்ப்பித்து விட்டு அதன்பின்னர் அடுத்துவரும் ஆண்டுகளிலிருந்து , பிரிவு 115BAA இன் குறைந்த வரிவிகிதத்தில் வரியை செலுத்துவதற்கு தெரிவுசெய்து கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகின்றது 2) பிரிவு 115JAA இன் கீழ் குறைந்தபட்ச மாற்று வரிவரவு: பிரிவு 115BAA ஐத் தேர்ந்தெடுக்கும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு, 115JB கணக்கிடுதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. பிரிவு 115BAA ஐத் தேர்ந்தெடுப்பதற்கு நிறுவனத்திற்கு குறைந்தபட்ச மாற்று வரி விதிமுறை பொருந்தாது என்பதால், வழக்கமான ஏற்பாட்டின் கீழ் கணக்கிடப்பட்ட அதன் இலாபத்தில் அதன் வரவுை சரிசெய்து கொள்ளமுடியாது. மேற்கண்ட சட்டவரிகளானது இந்த ஆண்டு குறைந்தபட்ச மாற்று வரிவரவை சரிசெய்து, வரவை முழுவதுமாக சரிசெய்து கொள்ளலாம் , பின்னர் அடுத்த ஆண்டு முதல் 115BAA பிரிவைத் தேர்வுசெய்துகொள்ளலாம் என்றும் பரிந்துரைக்கபடுகின்றது இந்த புதிய வாய்ப்பினை தெரிவுசெய்து கொள்ளுமுன் மனதில் கொள்ளவேண்டிய கூடுதலான முக்கிய தகவல்கள் : 1) 115BAA பிரிவைத் தேர்ந்தெடுக்கும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு, வருமானத்தைப் பொருட்படுத்தாமல் 10% கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். 2) மதிப்பீட்டாளரின் மொத்த வருமானத்தில் 25.168% வரிக்கு பயனுள்ள வரி விகிதம் வருகிறது. (22% * 1.1 * 1.04) 3) பிரிவு 115BAA இன் கீழ் வரி செலுத்துவதற்கான விருப்பத்தை தெரிவுசெய்த பின்னர், அதனை பின்வரும்அனைத்து கணக்கியல் ஆண்டிற்கும் பின்பற்றப்பட வேண்டும். 4) பிரிவு 115BAA இன் கீழ் வரி செலுத்த விரும்பும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு விளிம்பு நிவாரணம் பொருந்தும்.

வெள்ளி, 29 மே, 2020

குறைந்தபட்ச முயற்சிகளுடன் உள்ளீட்டு வரி வரவை மறு ஒத்திசைவிலிருந்து மேலும் ஈட்டிடமுடியும்


இன்று, பெரும்பாலான சரக்கு சேவைவரி(GST) வல்லுநர்கள் தங்களுடைய வாடிக்கை யாளர்களுக்கு உள்ளீட்டு வரிவரவு (Input TaxCredit(ITC)) மறு ஒத்திசைவினை (Reconciliation) செய்யாமல் விட்டு விடுகின்றனர். ஏனெனில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும்இந்த ஐ.டி.சி மறு ஒத்திசை வினை செய்வது மிகவும் அதிக காலஅவகாசம் எடுத்து கொள்ளும் என்பதும் வாடிக்கையாளரிட மிருந்து பெறப்பட்ட கட்டணங்கள் போதுமானதாக இருக்காது என்பதும் புரிந்து கொள்ளத் தக்கதுதான். மேலும், வாடிக்கையாளர்களின் பரிமாற்றங்கள் பற்றிய புரிதல் இல்லாமை மற்றும் செய்ய வேண்டிய வேறு சில மறு ஒத்திசைவுகள் போன்ற பல்வேறு பணிச்சுமைகள் மிகவும் அதிக மாக இருக்கும்போது இந்த உள்ளீட்டு வரிவரவு மறு ஒத்திசை வினை செய்வதற்காக அவர்கள் அதிக மனிதசக்தியை செலவிடவேண்டிய நெருக்கடி ஏற்படுகின்றது. இருப்பினும், உள்ளீட்டு வரிவரவை மறு ஒத்திசைவினை செய்யாமல்விடுவது வாடிக்கையாளர்களை மோசமாக பாதிக்கலாம். - மேலும் வாடிக்கையாளருக்கான உள்ளீட்டு வரிவரவு இழப்பு ஏற்படும் சூழலும் உருவாகும் அதுமட்டுமல்லாது ஜிஎஸ்டிஆர் 2 ஏ இல் காட்டப் பட்டுள்ளதை விட அதிகமானவரவு இருப்பதன் காரணமாக சசேவ துறையிலிருந்து இது குறித்து எச்சரிக்கை அறிவிப்பைப் பெறுவதற்கான சூழலும் உருவாகும் அதைவிட இயல்புநிலை வழங்குநர்களுக்கு முழுமையாக தொகை செலுத்ததவறுதல் ,இயல்புநிலையில் வாடிக்கையாளரின் நம்பிக்கையை இழத்தல் ,அதிகப்படியான வரவு மீள்திருத்த உரிமைகோருதலால் வாடிக்கையாளருக்கான கூடுதல் வட்டி செலவு ஆகியவற்றிற்கான வழிவகுக்கின்றது, உள்ளீட்டு வரிவரவு மறு ஒத்திசைவு என்பது சசேவஇன்கீழ் பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்து-வோரின் கொள்முதல் விவரங்களுடன் பொருளை அல்லது சேவையை வழங்கியோர் பதிவேற்றிய விவரங்களுடன் பொருத்தமாக இருக்கின்றதாவென சரிபார்ப்பதற்கான ஒரு செயல்முறையாகும். பொதுவாக பொருளை அல்லது சேவையை வழங்குபவர் தனது ஜிஎஸ்டிஆர் 1 இல் பதிவேற்றிய அத்தகைய விவரங்கள் பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துவோரின் ஜிஎஸ்டிஆர் 2 ஏவில் பிரதிபலிக்கும். பொருளை அல்லது சேவையை வழங்குபவர் பதிவேற்றிய விவரங்களில் விலைப்-பட்டியல் மட்டுமல்லாது பற்று குறிப்புகள், வரவு குறிப்புகள் மற்றும் எந்தவொரு ஆவணத்திற்கும் செய்யப்பட்ட திருத்தங்களும் அதில் உள்ளடங்கும். , பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துவோரால் இவ்வாறான உள்ளீட்டு வரிவரவுமறுஒத்திசைவிற்காக ஜிஎஸ்டிஆர் 2 ஏ உடன் ஒப்பிடுகையில் எந்தெந்த பதிவுகள் பொருந்துகின்றன, எவை பொருந்தவில்லை எவை கொள்முதல் விவரங்களில் காணவில்லை ஆகியவிவரங்களை இதன் வாயிலாக எளிதாக அடையாளம் காண முடியும். இவ்வாறான உள்ளீட்டு வரிவரவுமறு ஒத்திசைவின் மேற்கொள்வதால் - ஆலோசனைக்கான வாடிக்கையாளர் சார்பு அதிகரித்தல் வாடிக்கையாளர் நம்பிக்கை அதிகரித்து வரிவரவை பெறுவதன் மூலம் வாடிக்கையாளர்களின் வரிசெலுத்துதலைச் சேமித்தல் உள்ளீட்டு வரிவரவு இழப்பினைத் தவிர்த்தல் மேலும் மறுஒத்திசைவின் போது அடையாளம் காணப்பட்ட முரண்பாடுகள் குறித்து மிகச்சரியான நேரத்தில் மிகச்சரியான நடவடிக்கையினால் மிகவும் துல்லியமான உள்ளீட்டு வரிவரவை பெற்று செலவைப் குறைப்பதற்கு வழிவகுக்கும் அதன் வாயிலாக வாடிக்கையாளருக்கு செலவிலிருந்து சேமித்தல் உருவாகும் பொதுவாக , ஜி.எஸ்.டி.ஆர் 2 ஏ , கொள்முதல் தரவுகள் ஆகிய இரண்டும் வழக்கமாக மாதாந்திர அடிப்படையில் மறு ஒத்திசைவு செய்யப்பட்டுவிடும். இருப்பினும், பதிவுசெய்யப்பட்ட அனைத்து வரி செலுத்துவோருக்கும் இது சாத்தியமில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஜி.எஸ்.டி.ஆர் 2 ஏ , கொள்முதல் தரவுகள் ஆகியஇரண்டினையும் வருடாந்திட மறு ஒத்திசைவு செய்வது மிகவும்அவசியமாகும் மேலும் இவ்வாறு மறு ஒத்திசைவு செய்யப்பட வேண்டிய செயலினை அந்த நிதியாண்டைத் தொடர்ந்து அடுத்துவரும் செப்டம்பர் மாதத்தில் வருடாந்திர ஜி.எஸ்.டி ஆண்டறிக்கையை சமர்ப்பிதற்கு முன் செய்யப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக - 2018-19 நிதியாண்டில், செப்டம்பர் 2019 மாதத்தில் ஜிஎஸ்டி ஆண்டுஅறிக்கையை சமர்ப்பிப்பவதற்கு முன் வருடாந்திர மறுஒத்திசைவு செய்யப்படவேண்டும். அவ்வாறான கொள்முதல் தரவுகளுடன் ஜிஎஸ்டிஆர் 2 ஏவினனை மறுஒத்திசைவு செய்திடும்போது, - பின்வரும் நான்கு வகையானமுடிவுகளைப் பெறலாம். அ). பொருந்திய விலைப்பட்டியல்கள் - இவை ஜிஎஸ்டிஆர் 2 ஏ , கொள்முதல் தரவு ஆகிய இரண்டிலும் ஒன்றோடு ஒன்று பொருந்தக்கூடியதாக அமைகின்றன. அத்தகைய அனைத்து பதிவுகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளீட்டு வரிவரவு ஒரே மாதிரியாக கிடைக்கின்றது. ஆ). பொருந்தாத விலைப்பட்டியல் கள்- இவை ஜி.எஸ்.டி.ஆர் 2 ஏ , கொள்முதல் தரவுகள் ஆகிய இரண்டிலும் விலைப்பட்டியல்கள் உள்ளன, ஆனால் இரண்டிலும் பதிவு செய்யப்பட்ட விலைப்பட்டியலின் விவரங்களில் முரண்பாடுகளுடன் உள்ளன. விலைப்பட்டியல் மதிப்பு, விலைப்பட்டியல் தேதி, வரி தொகை, விலைப்பட்டியலின் எண் போன்றவற்றில் உள்ள வேறுபாடுகள் காரணமாக இந்த முரண்பாடுகள் இருக்கலாம். பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துவோர் அத்தகைய முரண்பாடுகளை இதனை வழங்குபவருக்கு அறிவிப்பார், உடன் வழங்குபவர்கள் அவ்விவரங்களை திருத்தி டுவார்கள். அத்தகைய விவரங்கள் திருத்தப்பட்டதும், புதுப்பிக்கப்பட்ட விவரங்கள் பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துவோரின் ஜி.எஸ்.டி.ஆர் 2 ஏ-யில் பிரதிபலிக்கும், அதன்பிறகுவரிவரவு கோரப்படும். வழங்கப்படும் இடம் , வழங்கல் தேதி போன்ற திருத்த முடியாத ஒருசில பிழைகள் அடையாளம் காணப்படும். இந்த சந்தர்ப்பங்களில், ஆவணம் நிராகரிக்கப்பட வேண்டும் மேலும் புதிய ஆவணம் வழங்குபவரால் புதுப்பிக்கப்பட வேண்டும். இ). GSTR 2A இல் இல்லாதவை - கொள்முதல் தரவுகளில் பதிவுசெய்யப்பட்ட ஒருசில விலைப்பட்டியல்கள் இருக்கலாம், ஆனால் GSTR 2A இல் காணப்படவில்லை எனில். வழங்குபர் தனது அறிக்கையை சமர்ப்பிக்காத காரணத்தினால் இது இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துவோர் இதுபோன்ற காணாமல் போன விலைப்பட்டியலில் உள்ளீட்டு வரிவரவை பெறுவது கடினமாகும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துவோர் வழங்குபவரைத் தொடர்புகொண்டு அதற்கேற்ப சரியானவிவரங்களை புதுப்பிக்கும்படி கோர வேண்டும். ஈ). கொள்முதல் தரவில் இல்லாதவை - ஜி.எஸ்.டி.ஆர் 2 ஏ-யில் புதுப்பிக்கப்பட்ட ஒருசில விலைப் பட்டியல்கள் இருக்கலாம், ஆனால் கொள்முதல் தரவுகளில் பதிவு செய்யப்படவில்லை. அதற்கான விலைப்பட்டியல் பெறப்படவில்லை அல்லது கொள்முதல் தரவில் புதுப்பிக்கப்படுவதை தவற விட்டிருக்கலாம். அத்தகைய விலைப்பட்டியல்கள் கொள்முதல் பதிவில் சேர்க்கப்படவேண்டும், மேலும் அது தகுதியுடையதாக இருந்தால் உள்ளீட்டு வரிவரவினைப் பெறலாம். எடுத்துக்காட்டாக - வணிக பயணங்களுக்காக ஊழியர்களால் முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கான விலைப்பட்டியலில் ஜிஎஸ்டியில் பொதுவாக கொடுக்கப்பட்ட ஜிஎஸ்டி எண்ணின் படி அவ்வப்போது புதுப்பிக்கப்படவேண்டும். வரி வல்லுநர்கள் எதிர்கொள்ளக்கூடிய அனைத்து சவால்களிலும், உள்ளீட்டு வரிவரவு நல்லிணக்கத்தை செய்வது முக்கியமாகும். பொதுவாக அதிக பணிச்சுமையைக் கையாள நாம் வழக்கமாக மென்பொருள் கருவிகளைப் பயன்படுத்துகிறோம், ஆனால் இதில் அதிக அளவு சம்பாதிக்க வாய்ப்பு இருந்தால் நாம் எந்த வகையான மென்பொருள் கருவியைப் பயன்படுத்துகிறோம் என்பதைஉண்மையில் வரையறுக்கின்ற. ஒருசில கருவிகள் சந்தையில்உள்ளன, ஆனால் அவற்றில் பெரும்பாலானவை உள்ளீட்டு வரிவரவு நல்லிணக்கத்தை செய்ய உதவும் மேஜைக்கணினி கருவிகளாகும். இருப்பினும், அத்தகைய மென்பொருள் கருவிகள் நம்மை அடிப்படை நல்லிணக்கத்திற்கு மட்டுமே கட்டுப்படுத்துகின்றன, அங்கு அவை பொருந்திய பதிவுகளை மட்டுமே அடையாளம் காண உதவுகின்றன. ஆனால் பொருந்தாத மற்றும் காணாமல் போன பதிவுகளை கையாளுவதற்காக GSTHero என்பது இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட GST Suvidha வழங்குநராகும், மேலும் இது ஒரு மேம்பட்ட உள்ளீட்டு வரிவரவு நல்லிணக்க அம்சத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான ஒரு மென்மையான பொறிமுறையுடன் கூடிய மேககணினி அடிப்படையிலான பல பயனர் மென்பொருளாகும், இது நமக்கும் நம்முடைய வாடிக்கையாளர்களுக்கும் உள்ளீட்டு வரிவரவைக் கையாளுவதற்காக ஒரு தானியங்கி கருவியை வழங்குகின்றது. அதனால்இதனை பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது

வியாழன், 28 மே, 2020

நிறுவனங்களின் சட்டம், 2013 இன் படி அடிக்கடி எழும் சந்தேகங்களுக்கானபதில்கள்


1.நிறுவனங்களின் சட்டம், 2013 இன் படி, நிறுவனத்தின் வருடாந்திர பொதுபேரவைக் கூட்டத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்த முடியாது. பொதுபேரவைக் கூட்டத்தில் உறுப்பினர்கள் நேரடியாக கலந்து கொண்டால் மட்டுமே அவ்வாறான கூட்டத்தினை நடத்த முடியும். 2. நிறுவனச் சட்டம், 2013 இன் படி, வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்படும் இயக்குநர்களின் குழுக் கூட்டத்தில் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையை அங்கீகரிக்க முடியும், ஆயினும் இயக்குநர்களின் குழுக்கூட்டத்தில் நேரடியாக கலந்து கொள்ளும் இயக்குநர்கள் எண்ணிக்கையானது அனுமதிக்கப்பட்ட குறைந்த பட்ச எண்ணிக்கையை கொண்டிருக்க வேண்டும். 3. நிறுவனச் சட்டம், 2013 பிரிவு 92 இன் படி அனைத்து நிறுவனங்களும் MGT-9 ஐ நிதியாண்டு 31.03.2019 இல் முடிய தயார்செய்திடவேண்டும் 4 நிறுவனச் சட்டம், 2013 பிரிவு 134 இன் படி, இணையதளம் கொண்ட ஒவ்வொரு நிறுவனமும் அதன் MGT-7 (வருடாந்திர வருமானம்) நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் மேலும் அதனை இணைப்பாக இயக்குநர்களுக்கான அறிக்கையில் கொடுக்க வேண்டும். 5. நிறுவனச் சட்டம், 2013 பிரிவு 139 (1) இன் படி, நிறுவனத்தின் தணிக்கையாளர் ஒருவரை எந்தவொரு நிறுவனத்திலும் அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே நியமிக்கப்பட முடியும் 6.நிறுவனச் சட்டம், 2013 பிரிவு 134 இன் படி, இயக்குநர்கள் அறிக்கை அதன் இணைப்பு அறிக்கை ஆகிய இரண்டிலும் ஒரேநபரே கையொப்பமிட்டு அனுப்பிடவேண்டும் 7.POSHசட்டத்தின் பிரிவு 22 ன் படி, ஒவ்வொரு நிறுவனமும் இயக்குநர்கள் அறிக்கையில் POSH சட்டத்தின் விதிகள் இணங்குவதை கண்டிப்பாக குறிப்பிடபட வேண்டும். 8.நிறுவனச் சட்டம், 2013 பிரிவு 134 இன் படி, இயக்குநர்கள் அறிக்கை முழுமையான நிதிநிலை அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்படும். 9. செயலக தரநிலை 1 இன் விதிகளின்படி, இயக்குநர்கள் அறிக்கையில் செயலக நியமங்களை பின்பற்றுவது குறித்து ஒவ்வொரு நிறுவனமும் கண்டிப்பாக அறிவிப்பு செய்ய வேண்டும். 10. நிறுவனத்தின் வருடாந்திர பொதுபேரவைக் கூட்டத்தின் குறைந்த பட்ச உறுப்பினர்களை கணக்கிடுவதற்காக அதில் கலந்து கொள்ளும் பதிலாளை கணக்கில் கொள்ளமுடியுாது

புதன், 27 மே, 2020

நிறுவனங்களின் விவகாரங்கள் துறையின்இணக்க கண்காணிப்பு அமைப்பு


நிறுவனச் சட்டம் 2013 இன்கீழ் இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் விவகாரங்கள் துறையின்இணக்க கண்காணிப்பு அமைப்பு ( Ministry of Corporate Affairs Compliance Monitoring System (MCACMS)) எனும் இணையதள பொறிமுறையின் வாயிலாக நேரடியாக கண்காணிப்பு செய்திடமுடியும் , இந்த தளமானது செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிறுவன விவகாரங்கள் துறைகூறுகின்ற அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்றதவறிய அல்லது இணக்க முறையினை பின்பற்றாத எந்தவொரு நிறுவனத்தையும் தானியங்கியாக கண்டு பிடித்து அவ்வாறு இணக்கமற்ற நிறுவனங்களுக்கு / இயக்குநர்களுக்கு டிஜிட்டல் முறையில் அதற்கான-காரணம் கோரும் அறிவிப்புகளை தானாகவே அனுப்பிவைத்திடும். அதனை தொடர்ந்து இதுபோன்ற தவறிய நிறுவனங்கள் / இயக்குநர்கள் இந்த MCACMS இணையதளவாயிலில் இந்த காரணம் கோரும் அறிவிப்பிற்கான தக்க பதிலை உடனுக்குடன் சமர்ப்பிக்க வேண்டும். இந்தியாவில் பதிவுசெய்யப்பட்டு செயல்படும் எந்தவொரு நிறுவனத்திலும் ஏதேனுமொரு பெரிய மோசடி நடந்தபின்னர் அவ்வாறான மேசடியை கண்டறியப்படாதவை அல்லது அவ்வாறு கண்டறியப்பட்டும் இணக்கமாக செயல்படாத வை அல்லது இணக்க மாக செயல்படுவதற்காக தாமதத்திடுபவை என்பனபோன்ற ஏராளமான வழக்குகள் தீர்வுசெய்யப்படாமல் மலைபோன்று குவிந்து கொண்டேவருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் இவைகளை தீர்வுசெய்வதற்காக பலவேறு வழிகாட்டி அமைப்புகள் அல்லது பாரம்பரிய ஆய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையிலான வழிமுறை மூலம் இணங்காதவைகளை கண்காணித்து அதற்கு தக்கநடவடிக்கைகளை எடுப்பது என்பது மிகவும் கடினமான சூழ்நிலையாக இருந்துவருகின்றது, தற்போது அவ்வாறாக ஏறத்தாழ 14 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தீர்வு செய்யப் படாமல் நிலுவையாக உள்ளன. எனவே, இணக்கமற்றதைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவின்( A.I) அடிப்படையிலான உலகளாவிய இணக்க கண்காணிப்பு அமைப்பினை செயல்படுத்திடுவதற்கான மிகச்சரியான நேரம் இதுவேயாகும், எந்தவொரு இணக்கசெயலையும்மிகச் சரியான நேரத்தில் நிறைவேற்றத் தவறிய பின்னர், அவ்வாறு தவறிய நிறுவனம் / இயக்குனர் அல்லது நிறுவனத்தின் செயலாளர் ஆகியோர்களுக்கு புதிய இந்த எம்.சி.ஏ.சி.எம்.எஸ் எனும் தளமானது உடனுடக்குடன் மின்னஞ்சல் வழியாக காரணம் கோரிடும் அறிவிப்பை ஒன்றினை தானாகவே அனுப்பிவைத்திடும். இந்த காரணம் கோரும் அறிவிப்பானது F.No. D/RC000/000/2019/00/11-11 என்பது போன்றதொரு CMS மேற்குறிப்பு எண்ணைக் கொண்டிருக்கும். . அவ்வாறான காரணம் கோரும் அறிவிப்பில் ; நிறுவனசட்டம்2013 இன்படி எந்த பிரிவின் கீழ் இந்த காரணம் கோரும் அறிவிப்பு வழங்கப்படுகின்றது; , இந்த காரணம் கோரும் அறிவிப்பிற்கான பதிலைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு. ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும், இந்த காரணம் கோரும் அறிவிப்பானது இணக்கத்தன்மையில்லாத நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு அல்லது முதன்மை நிருவாக பணியாளர்களுக்கு(Key Managerial Person(KMP))அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு இந்த அறிவிப்பின் அடிப்படையில் நிறுவனங்கள் சட்டம் 2013 இன் விதிமுறைகளை பின்பற்றாததற்காக அந்நிறுவனத்தின் ஒவ்வொரு அலுவலருக்கும் இந்தஅறிவிப்பு வழங்கப்பட்டதாகக் கருதப்படும். இவ்வாறு காரண கோரும் அறிவிப்பு பெற்ற நிறுவனத்தின் இயக்குனர் ஒரு வர்அவ்வாறான அறிவிப்பு ஒன்றினை பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் அதற்கான தக்கபதிலை சமர்ப்பித்திட வேண்டும்.MCACMS தளம் வழங்கிய காரண கோரும் அறிவிப்பிற்கான பதில் தயார்செய்து சமர்ப்பிதற்கான படிமுறைகள் பின்வருமாறு: 1. முதலில் MCACMS இணையதளபக்கத்தில் நேரடியாக உள்நுழைவுசெய்திடுக; 2. தொடர்ந்து Reply to Show Cause Notice எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக ; 3. பின்னர் விரியும் திரையில் நமக்கு கிடைத்த காரணம் கோரும் CMS அறிவிப்பிற்கான எண்ணை உள்ளீடுசெய்திடுக; 4. அதன்பின்னர் நம்முடைய பதில் செயல்பாட்டிற்கான OTP ஐ உருவாக்குக; (இது பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு மட்டும் அனுப்பப்படும்) 5.அவ்வாறு பெறப்பட்ட OTP ஐ இந்த MCACMS தளத்தில் உள்ளீடுசெய்திடுக; 6. அதனை தொடர்ந்து இந்த காரணம் கோரும் அறிவிப்பிற்காக500 சொற்களுக்கு மிகாமல் பதிலை உள்ளீடு செய்து சமர்ப்பித்திடுக. அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் பதிலானது 500 க்கும் மேற்பட்ட சொற்களில் இருந்தால், அதை நிறுவனத்தின் பெயருடையகடித தலைப்புதாளில் அச்சிட்டு, இயக்குநர் / நிறுவன செயலாளரால் கையொப்பமிடப்பட்டு, மின்னஞ்சலினுடைய இணைப்பாக சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது; 7. இவ்வாறான காரணம் கோரும் அறிவிப்பிற்கு உடனடியாக பதிலை சமர்ப்பித்திடவேண்டும். அவ்வாறு காரணம் கோரும் அறிவிப்பிறக்கு பதி்லைச் சமர்ப்பிக்கத் தவறினால், இது குறித்து தொடர்புடைய நிறுவனமானது பதில் கூறுவதற்கு தகுந்த காரணம் எதுவும்இல்லை என்று கருதப்பட்டு அடுத்த கட்டநடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும். அதாவது இதன் விளைவாக, நிறுவனங்களின் சட்டம் 2013 இன் விதிமுறைகளை மீறியதற்காக, நிறுவனத்தின் பதிவாளர் (ROC) அந்நிறுவனத்தின் மீது தண்டனை நடவடிக்கைகளை எடுத்திடுவார். எம்.சி.ஏ-சி.எம்.எஸ் தளமானது தற்போதுகாரணம் கோரிடும் அறிவிப்பினை நிறுவனங்களின் சட்டம், 2013 இன் பிரிவு 96 மற்றும் 204 இன் ஆகிய இரண்டின்கீழ் இணங்காததற்காக மட்டும் வழங்கப்பட்டு வருகின்றது. காலப்போக்கில், நிறுவனங்கள் சட்டம், 2013 இன் அனைத்து பிரிவுகளும் இந்த எம்சிஏ-சிஎம்எஸ் இன் கீழ் கொஂண்டுவரப்படுவதைக் காணலாம்;

செவ்வாய், 26 மே, 2020

சசேவ( CGST)வில் வரிவிலக்கு, வரிஇல்லாதது, பூஜ்ஜியவரி ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாடுகள்


1. சசேவ(GST )யின் கீழ் வரி விலக்கு: மத்திய சரக்கு மற்றும் சேவை வரி( CGST)ச் சட்டம், 2017 இன் பிரிவு 2 (47) இன் படி, “வரிவிலக்குடன் வழங்குதல்” என்பது வரி விகிதம் எதுவும் இல்லாமல் முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டு எந்தவொரு பொருளை அல்லது சேவையை வழங்குவதாகும். இதே சட்டத்தின் பிரிவு 11 இன் கீழ் வரி, அல்லது ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (IGST )ச் சட்டத்தின் 6 வது பிரிவின் கீழ், வரி விதிக்கப்படாத விநியோகத்தையும் உள்ளடக்கியதாகும். இவ்வாறு வரிவிலக்குடன் வழங்குதல் ஆனது அ. சசேவ சட்டத்தின் கீழ் வரி விதிக்கப்படக்கூடியது, ஆனால் வரிஇல்லாததை( Nil rate) சார்ந்தது. ஆ. சசேவ சட்டத்தின் கீழ் வரி விதிக்கப்படக்கூடியது, ஆனால் மத்திய சசேவ சட்டத்தின் 11 வது பிரிவின் கீழ் அல்லது ஒருங்கிணைந்த சசேவ சட்டத்தின் 6 வது பிரிவின் கீழ் அரசாங்கத்தின் அறிவிப்பு மூலம் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இ. சசேவ சட்டத்தின் கீழ்வரி விதிக்கப்படாமல் வழங்குதல் ஆகிய மூன்று பிரிவுகளை உள்ளடக்கியதாகும்: மேலும் மத்திய சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம், 2017 இன் பிரிவு 2 (78) இன் படி, “வரி விதிக்கப்படாத வழங்குதல்” என்பது பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குதலுக்கு இந்தச் சட்டத்தின் கீழ் அல்லது ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் வரி விதிக்கப்படாததை குறிக்கின்றது. அதாவது வரி விதிக்கப்படாத வழங்குதல் என்பது CGST சட்டத்தின் பிரிவு 7 இன் படி வரிவிதிக்கப்படாத பொருட்களின் அல்லது சேவைகளின் அல்லது அவ்விரண்டின் வழங்குதல் ஆகும் ஆயினும் இவை CGST அல்லது IGST சட்டத்தின் கீழ் வரி விதிக்கப்படாததாகும். பின்வரும் பரிமாற்றங்கள் வரி விதிக்கப்படாத விநியோகத்தின் கீழ் வருகின்றன: i. மனித நுகர்வுக்கான ஆல்கஹால் மதுபானம், ii. பெட்ரோலிய கச்சாஎண்ணெய், iii. அதிவேக டீசல், iv. மோட்டார் ஸ்பிரிட் (பொதுவாக பெட்ரோல் என அழைக்கப்படுகிறது), vஇயற்கை எரிவாயு, vi. விமான விசையாழி எரிபொருள் 2. ஜிஎஸ்டியின் கீழ் வரிஇல்லாத வழங்குதல்: இது குறித்து இந்த சட்டத்தில் எங்கும் வரையறுக்கப் படவில்லை. எவ்வாறாயினும், இது வரிவிதிப்புக்கு உட்பட்ட ஒரு விநியோகத்தை உள்ளடக்கியதாகும், அதாவது இந்த சட்டத்தின் கீழ் வரி விதிக்கப்படக்கூடியது, ஆனால் வரிஇல்லாததாக அனுமதிக்கப் படுகின்றது CGST சட்டத்தின் 11 வது பிரிவு அல்லது IGST சட்டத்தின் 6 வது பிரிவின் கீழ் அரசானது தன்னுடைய அதிகாரங்களைப் பயன்படுத்துவதன் வாயிலக வரிவிலக்கு அறிவிப்பை வெளியிட்டு “வரிவிலக்குடன் வழங்குதல்(Exempt Supply)” என்பதன் கீழ் கொண்டு வரும் , ஆனால் அது இல்லாமல் அதே அறிவிப்பை வரிஇல்லாதது என அறிவிப்பு செய்தால் அவ்வரிவிலக்கு அறிவிப்பானது , பின்னர் அது “வரிஇல்லாத வழங்குதல்(Nil Rated Supply)” என்பதன் கீழ் வரும் 3. சசேவஇன் கீழ் பூஜ்ஜியவரியில் வழங்குதல்: ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம், 2017 இன் பிரிவு 2 (23) இன் படி, “பூஜ்ஜியவரியில் வழங்குதல்” என்பது இதே சட்டம் பிரிவு 16 இல் ஒதுக்கப்பட்ட பொருளைக் கொண்டிருக்கும். ஒருங்கிணைந்த பொருட்கள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம், 2017 இன் பிரிவு 16 இன் படி, “பூஜ்ஜிய வரி வழங்குதல்” என்பது பின்வரும் பொருட்கள் அல்லது சேவைகளில் ஏதேனும் ஒன்று அல்லது இவ்விரண்டையும் குறிக்கின்றது, அதாவது: - (அ) பொருட்கள் அல்லது சேவைகளின் ஏற்றுமதி (ஆ) ஒரு சிறப்பு பொருளாதார மண்டல மேம்பாட்டாளர் அல்லது ஒரு சிறப்பு பொருளாதார மண்டல அலகுக்கு பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குதல். மேலே உள்ள பரிவர்த்தனைகள் மட்டுமே பூஜ்ஜிய வரி விநியோகத்தின் கீழ் இருக்கும். 4. ஜிஎஸ்டி அல்லாத வெளிப்புற வழங்குதல்: இது குறித்தும் இந்த சட்டத்தில் எங்கும் வரையறுக்கப் படவில்லை. ஜிஎஸ்டி அல்லாத வெளிப்புற வழங்குதல் பற்றி ஒரு பெரிய குழப்பமே உள்ளது. இது வரை, மேலே உள்ள அனைத்து வகைகளும், அதாவது வரிவிலக்குடன் வழங்குதல், வரிஇல்லாது வழங்குதல் , பூஜ்ஜியவரியில் வழங்குதல் ஆகியவை CGST சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் வழங்குதல் வரம்பிற்கு உட்பட்டுள்ளன, ஆயினும் அத்தகைய வெளிப்புற வழங்குதலுக்கு வரி விதிக்கப்படுகிறதா இல்லையா. என தெளிவாக்கப்படவில்லை , ஆயினும் சசேவ அல்லாத வெளிப்புற வழங்குதல் என்பது CGST சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் வரிவிலக்கு அளிக்கப்பட்ட அல்லது இதன் வரம்புக்குட்படாத பரிமாற்றங்கள் ஆகும், அதாவது இத்தகைய பரிமாற்றங்கள் சசேவ சட்டத்தின்படி வழங்குதல் அன்று, அதாவது “வழங்குதலே இல்லை”. எனப்பொருள்படுவதாகும் மத்திய சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம், 2017 இன் பிரிவு 7 (2) இன் படி, பின்வரும் பரிமாற்றங்கள் பொருட்கள் வழங்குதலாக அல்லது சேவை வழங்குதலாக என கருதப்படாது: i. அட்டவணை III இல் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் அல்லது பரிமாற்றங்கள்; அல்லது ii. கவுன்சிலின் பரிந்துரைகள் தொடர்பாக அரசாங்கத்தால் அறிவிக்கப்படக்கூடிய, மத்திய அரசு, ஒரு மாநில அரசு அல்லது உள்ளூர் நிருவாகம் ஆகியவற்றில் ஈடுபடும் எந்தவொரு அலுவலர்களாலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அல்லது பரிமாற்றங்கள்.

திங்கள், 25 மே, 2020

வருமானவரிச்சட்டம் 1961 பிரிவு 143(1) இன் கீழான அறிவிப்பு


வருமான வரி செலுத்துபவர்களுக்கு அவர்கள் வழங்கிய மின்னஞ்சல் முகவரிவாயிலாக வருமானவரிச்சட்டம் 1961 பிரிவு 143(1) இன் கீழான அறிவிப்பு கிடைக்கப்பெற்றவுடன் ஐயய்யோ நாம் தவறாக ஏதாவது வருமான வரிபடிவத்தை சமர்ப்பித்துவிட்டோமோ என பதற்றத்துடன் பெரும்பாலானவர்கள் அடுத்து என்னசெய்வது என தெரியாமல் அறியாமல் திகைத்து நின்று-விடுவார்கள் ஐயன்மீர் அவ்வாறு பதறி துடிக்கவேண்டாம் நம்முடைய வருமானவரி படிவத்தை இணையத்தின் வாயிலாக சமர்ப்பித்தவுடன் வருமானவரித் துறையால் பராமரிக்கப்படும் சேவையாளர் கணினியானது E-Proceeding எனும் இணையதள பக்கத்தின் வாயிலாக இவ்வாறு சமர்ப்பித்திடும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் உதாரணமாக மார்ச்சு 2018 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான ஒரு அறிவிப்பினை தானியங்கியாக மார்ச்சு 2020 இற்குள் அனுப்பிவைத்திடுமாறு கட்டமைத்துள்ளனர் என்ற அடிப்படை செய்தியை மனதில் கொண்டு அமைதியடையுங்கள் அவ்வாறு எந்தவொரு அறிவிப்பும் கிடைக்க பெறவில்லை யெனில் குறிப்பிட்ட நிதியாண்டிற்கு வருமானவரி படிவத்தினை சமர்ப்பித்தவுடன் நமக்கு கிடைக்கும் ஏற்புகை படிவமான ITR– V என்பதை அவ்வாறான அறிவிப்பாக எடுத்து கொள்க. . இந்த அறிவிப்பானது நாம் சமர்ப்பித்த நம்முடைய வருமானவரி படிவத்தில் பொருத்தமல்லாதவைகள் ஏதேனும் இருந்தால் அதனை சுட்டி காட்டியதாக இருக்கும் ஏதும் சுட்டிகாட்டப் படவில்லையெனில் நிகரமாக செலுத்த வேண்டிய வருமானவரி (Net Amount Payable) என்ற பகுதி பூஜ்ஜியமாக (Zero) உள்ளதாவென சரிபார்த்து கொள்க நமக்கு திரும்ப வழங்க வேண்டிய தொகையை குறிப்பிடாமல் அல்லது பொருத்தமல்லாத இந்த அறிவிப்பு வந்திருந்தால் பின்வரும் படிமுறைகளை பின்பற்றிடுக படிமுறை1.முதலில் வந்துள்ள அறிவிப்பின் (a) As provided by Tax Payer in Return of Income ,(b)As computed under section 143(1) ஆகிய இரண்டுநெடுவரிசைகளில் எந்த பகுதி தொகை வித்தியாசமாக பொருத்தமற்று இருக்கின்றன என ஒப்பிட்டு சரிபார்த்து அதற்கான காரணத்தை அறிந்து கொள்க படிமுறை2. அடுத்துஇரண்டாவது படிமுறையாக பிரிவு 154(1) கீழ் பதிலளிப்பதற்காக வருமான வரித்துறையின் இணையதள பக்கத்திற்குள் உள்நுழைவுசெய்து பிழையை அல்லது வேறுபாட்டினை சரிசெய்து மீண்டும் சமர்ப்பித்திடுக பின்னர் E-Proceeding என்ற வாய்ப்பினை தெரிவு செய்து சொடுக்குதல்செய்து சரிபார்த்திடுக. படிமுறை3. நாம் சரிசெய்தது நம்முடைய E-Proceeding என்ற பகுதியில் சரிசெய்யப்பட்ட திரையில் தோன்றவில்லையெனில் மத்திய செயலாக்க மையத்திற்கு (Central Processing Center (CPC)) புகார் கடிதம் ஒன்றினை மின்னஞ்சல் வாயிலாக http://simplifiedlaws.com/compliant-grievance-cpc-efiling-income-tax-return/ என்ற முகவரிக்கு அனுப்பிவைத்திடுக படிமுறை4 மத்திய செயலாக்க மையத்திற்கு புகார் கடிதம் அனுப்பியும் சரிசெய்திட-வில்லையெனில் http://simplifiedlaws.com/do-you-know-about-income-tax-ombudsman என்ற முகவரிக்கு மற்றொரு புகார் கடிதத்தை அனுப்பி வைத்திடுக

ஞாயிறு, 24 மே, 2020

ஏர்டாஸ்கர்( Airtasker) எனும் சேவைகளுக்கான சந்தை ஒரு அறிமுகம்


ஏர்டாஸ்கர்என்பது எந்தவொரு நபரும் தமக்கு தேவையான தம்முடைய பகுதியில் கிடைக்கின்ற உள்ளூர் சேவைகளை/பணிகளைக் கண்டுபிடித்து பயன்படுத்தி கொள்வதற்கும், அவ்வாறான பணிகளை/சேவைகளைச் செய்பவர்கள் தாம் ஆற்றும் பணிகளுக்கு/சேவைகளுக்கு போதுமான பணத்தினை சம்பாதிப்பதற்கும் உதவுகின்ற ஒரு இணையதள சந்தையாகும் ஏர்டாஸ்கரானது பணிகளை வெளியாட்களை கொண்டு செய்துகொள்வதற்கும், உள்ளூரில் பணிகளை ஆற்றுபவர்களை தேடிக்கண்டுபிடிப்பதற்கும், தொலைதூரத்திலிருந்து இவ்வாறான பணிகளை செய்வதற்கும் அல்லது பணம் சம்பாதிக்க நெகிழ்வான நம்பகமான முழுமையாக பணிகளைசெய்வதற்கானஒரு சமூகஇணையதள சந்தையாகும். இந்த ஏர்டாஸ்கரானது நடைமுறையில் வருவதற்கு முன்பு, திறமையும் பணிசெய்ய நேரமும் கிடைக்கக்கூடியவர்கள் தங்களுடைய உள்ளூர் சமூகத்தில் உள்ள மற்றவர்களை அடையாளம் காண எளிதான வழி எதுவும் இதுவரையில் இல்லாமலிருந்து வந்தது, பாரம்பரியமாக வகைப்படுத்தப்பட்ட விளம்பரம் , நேரடி அஞ்சல்களைத் தவிர புதிய வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிப்பதற்காக சுயதொழில் செய்பவர்களுக்கும், சிறு வணிகர்களுக்கும் தொழில் வல்லுநர்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட விருப்பங்களாக இருந்துவந்தன. ஏர்டாஸ்கரில், பணியை செய்பவர்கள் தாங்கள் செய்திடும் எந்தவொரு பணியையும் செய்யதயாராக இருப்பதாகவும் அதற்காக எதிர்பார்க்கப்படும் கட்டணத்தையும் குறிப்பிட்டு பதிவுசெய்து கொள்ளலாம் அவ்வாறே ஒரு பணியை விரும்புவோர்தங்களுக்கு குறிப்பிட்டபணியை செய்துதருமாறும் தங்களுக்காக செய்திடும் பணிக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த தாம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்ட சலுகைகளைதாம் வழங்கவிருப்பதாகவும் குறிப்பிடலாம். பின்னர் அவர்களின் அனைத்து சலுகைகளையும் மதிப்பாய்வு செய்து, வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தேவையான ஒரு நபரைத் இந்த டாஸ்கரில் தேர்ந்தெடுக்கமுடியும் தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு ஒருவருக்கொருவர் கிடைக்கும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பணியைச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளவும் முடியும் மறுபுறம், ஒரு டாஸ்கர் அவர்கள் விரும்பும் போதெல்லாம் வேலை வாய்ப்புகளை தேடி இணைய உலாவரலாம் அவர்கள் ஆர்வமுள்ள ஒரு பணியைக் காணும்போது, அதுகுறித்து கேள்விகளைக் கேட்கலாம், சந்தேககங்களை தெளிவுபடுத்திகொள்ளலாம் சலுகைகளை வழங்கலாம். அதனை தொடர்ந்து பணிசெய்யதுவங்கி அந்த பணி முடிந்ததும், டாஸ்கருக்கு அதற்கான பணம் கிடைக்கும். வீடுகளை சுத்தம் செய்தல், தோட்டம்பராமரித்தல், விநியோக சேவைகள், பிளம்பிங் சேவைகள், தளவாடங்களை ஒருங்கிணைத்தல், மொழிபெயர்ப்பு சேவைகள், இணையதள அபிவிருத்தி, நகல் எழுதுதல், செல்லப்பிராணி வளர்ப்பு, குழந்தைகள் காப்பகம், உணவு விநியோகம் ஆகியவை நாம் வாழும் சமூகத்திற்கு வழங்கக்கூடிய ஒருசில பிரபலமான சேவைகள்ஆகும் எந்தவொரு பணியையும் முடிக்க தேவையான திறன்களானவை நாம் செய்யும் பணியை முழுமையாக சார்ந்துள்ளது. சில பணிகளுக்கு நிபுணத்துவ திறன்கள் தேவையில்லை மறுதலையாக, குறிப்பிட்ட பணிக்கு சான்றளிக்கப்பட்ட மெக்கானிக் அல்லது எலக்ட்ரீஷியன் என்பனபோன்ற தொழில் நுட்ப பணிகளுக்கு அவ்வாறான, பணிகளை முடிக்க அந்தந்த திறன்களை நாம் கொண்டிருக்க வேண்டும் இந்த ஏர்டாஸ்கரை பயன்படுத்திகொள்வதற்கானஆலோசனை குறிப்புகள்: நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை சரிபார்க்க உதவும் பேட்ஜ்கள் மூலம் நம்முடைய கணக்கை சரிபார்த்து உறுதிசெய்க இந்த இணையதளமேடையை உள்ளூர் சமூகம் போல நடத்துக சட்டவிரோத அல்லது மோசடி நடத்தையில் ஈடுபட வேண்டாம்அவ்வாறு சட்ட விதிகளை மீறுவோர்களும் மோசடி நடத்தையில் ஈடுபடுவோர்களும் தளத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் உயர் நட்சத்திர மதிப்பீடு , நிறைவு வீதத்தை பராமரிக்க முயற்சி செய்க, ஏனெனில் அவை பணியின் தரத்தையும் பணியாளர்களின் நம்பகத்தன்மைக்கும் ஆன சுட்டிகாட்டிகளாக விளங்குகின்றன மேலும் விவரங்களுக்கு https://www.airtasker.com/எனும் இணையதள பக்கத்திற்கு சென்றறிந்து கொள்க

வெள்ளி, 22 மே, 2020

வர்த்தக முத்திரையில்(Trade Mark) அத்துமீறுதல்(Infringement)


இந்தியாவில் வர்த்தக முத்திரைகள் சட்டம் 1999 இல் 29 வது பிரிவின் கீழ் இது குறித்து பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது. , அங்கீகரிக்கப்படாத ஒருவர் பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரையுடன் 'ஒத்த’(identical) அல்லது 'ஏமாற்றும் வகையில் ஒரே மாதிரியான(deceptively similar) வர்த்தக முத்திரையைப் பயன்படுத்தும் போது இது ஒருவர்த்தக முத்திரையில் அத்துமீறல் என அழைக்கப்படுகிறது. இவ்வாறான வர்த்தக முத்திரை அத்துமீறலை 1. நேரடி அத்துமீறல், 2. மறைமுக அத்து மீறல் ஆகிய இரண்டு வகையாக பிரிக்கலாம் நேரடி அத்துமீறல் பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரையின் பிரத்தியேக சட்டரீதியான உரிமைகளின் எந்தவொரு அங்கீகாரமற்ற பயன்பாடும் நேரடி வர்த்தக அத்து மீறலாகும். வர்த்தக முத்திரை சட்டம், 2019 இன் பிரிவு 29 இன் கீழ் பொருந்தக்கூடிய முதல்நோக்கில் வரையறுக்கப்படும் வர்த்தக முத்திரைகளின் அத்து மீறலின் கூறுகள் கீழே குறிப்பிடப் பட்டுள்ளன: 1. அங்கீகரிக்கப்படாத நபர் - பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரையின் உரிமையாளர் அல்லது உரிமம் பெறாத நபர். 2. ‘ஒத்த’ அல்லது ‘ஏமாற்றும் வகையில் ஒரே மாதிரியான’ - பொதுவாக இதற்கான மதிப்பெண்கள் ஒரே மாதிரியானதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கான சோதனை என்பது பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பதை தீர்மானிப்பதன் மூலம் செயல்படுவதாகும். நுகர்வோர் இரண்டு மதிப்பெண்களுக்கும் இடையில் குழப்பமடைய வாய்ப்புள்ளதெனில், அத்துமீறல் உள்ளது என அறிந்து கொள்க 3. பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரை - ஒரு பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரையில் மட்டுமே அத்துமீறுதலை காண முடியும். பதிவுசெய்யப்படாத வர்த்தக முத்திரையைப் பொறுத்தவரை, கடந்து செல்வதற்கான பொதுவான சட்டக் கருத்துமட்டுமே பொருந்தும். 4. பொருட்கள் / சேவைகள் - இதில் அத்து மீறலை நிறுவுவதற்கு, அத்துமீறுபவரின் பொருட்களை / சேவைகளை கூட பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரை பிரதிநிதித்துவப்-படுத்தும் பொருட்களுடன் ஒத்ததாகவோ அல்லதுஅதேபோன்று இருக்க வேண்டும். மறைமுக அத்துமீறல் என்பது ஒரு பொதுவான சட்டக் கொள்கையாகும், இது நேரடி அத்துமீறல் செய்பவர்களுக்கு மட்டுமல்ல, நேரடி அத்து மீறல்களைத் தூண்டுவதற்கான நபர்களுக்கும் பொறுப்புகளைக் கூறுகின்றது. மேலும் மறைமுக அத்து மீறல் ஆனது இரண்டாம் நிலை பொறுப்பு என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு பங்களிப்பு அத்து மீறலும் பொறுப்புமாகும். இரண்டு சூழ்நிலைகளில் பங்களிப்புஅத்து மீறல்களுக்கு ஒரு நபர் பொறுப்பேற்க வேண்டும்: 1. ஒரு நபர் அத்துமீறல் பற்றி அறிந்துகொண்டிருந்தால் 2. ஒரு நபர் அத்து மீறலைச் செய்ய நேரடியாக அத்து மீறலை பொருள் ரீதியாக பங்களிக்கும்போது அல்லது தூண்டும்போது. பின்வரும் சூழ்நிலைகளில் அத்துமீறுவதற்காக ஒரு நபர் பொறுப்பேற்க வேண்டிருக்கும்: 1. ஒரு நபர் நேரடியாக அத்துமீறுபவரின் செயல்களைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டிருக்கும்போது. 2. ஒரு நபர் அத்து மீறலில் இருந்து நிதி பலண்களைப் பெறும்போது. 3.ஒரு நபர் அத்து மீறல் குறித்த அறிவைக் கொண்டு அதற்கு பங்களிக்கும் போது. பொதுவாக முதலாளி-பணியாளர் உறவுகளில் வழக்கமான பொறுப்பு பொருந்தும். இது வர்த்தக முத்திரைகள் சட்டத்தின் 114 வது பிரிவில் மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிரிவின் படி, ஒரு நிறுவனம் இந்த சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்தைச் செய்தால், . நல்ல நம்பிக்கையுடனும், அத்து மீறல் பற்றிய அறிவும் இல்லாமல் செயல்பட்ட நபரைத் தவிர.அந்த நிறுவனத்திற்கு பொறுப்பான ஒவ்வொரு நபரும் பொறுப்பேற்க வேண்டும் மொத்தத்தில், ஒரு நபர் நேரடியாக அத்துமீறவில்லை என்றாலும், மற்றொரு நபர் வர்த்தக முத்திரையை அத்துமீறும் போது மறைமுக அத்துமீறல் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் பொறுப்புக்கூற வேண்டியிருப்பதால், மறைமுகஅத்து மீறல் அதிகமுக்கியத்துவம் பெறுகின்றது இந்தமறைமுக அத்துமீறலிற்கு அடிப்படையாக மின் வர்த்தக(e-commerce) துறையின் வளர்ச்சி மிகவும் முக்கியமான காரணமாகும். ஆகவே, நேரடியாக அல்லது மறைமுகமாக இருந்தாலும், இந்தியாவில் எந்தவொரு வர்த்தக முத்திரை அத்து மீறலும் பொறுப்பை ஈர்க்கும். வர்த்தக முத்திரைகளில் அத்து மீறுவதைத் தவிர்க்க, நம்முடைய பிராண்ட் அல்லது தயாரிப்பைத் தொடங்குவதற்கு முன் வர்த்தக முத்திரைகள் சட்டம் 1999 ஐ நன்கு ஐயமற அறிந்து கொண்டு செயல்படுக என பரிந்துரைக்கப்படுகின்றது.

வியாழன், 21 மே, 2020

இந்தியாவில் எந்தவொரு வணிகநிறுவனத்தையும் எளிதாக துவங்குவதற்காக இந்தியஅரசால் எடுக்கப்பட்ட முன்முயற்சிகள்


1. நிறும விவகார அமைச்சகமானது நிறுவனங்களின் (திருத்தம்) சட்டம், 2015 மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒருசில விதிவிலக்குகளை அளித்துவருகின்றது, அதாவது எந்தவொரு நிறுவனத்திற்கும் குறைந்தபட்ச செலுத்தப்பட்ட மூலதனத்திற்கான தேவை அறவே நீக்கப்பட்டுள்ளது. 2. அரசு செயல்முறை மறு பொறியியல் (GPR) முன்முயற்சியில் உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் விரைவான ஒருங்கிணைப்பு தொடர்பான சேவைகளை வழங்குவதற்காக 22.01.2016 தேதியிட்ட அறிவிப்பின் வாயிலாக மத்திய பதிவு மையம் Central Registration Centre(CRC) நிறுமங்களின் சட்டத்தின் 2013 பிரிவு 396 இன் கீழ் நிறுமங்களின் விவகாரத்துறை அமைச்சகத்தால் (MCA) நிறுவப்பட்டுள்ளது 3 ஒரு நிறுவனத்தின் பெயர் ,இடஒதுக்கீடு, இணைப்பதற்கான விண்ணப்பங்கள் ஆகியவற்றை D அல்லது D + 1 நாட்களுக்குள் செயல்படுத்தப்பட்டு பூர்த்தி செய்யப்பட வேண்டும் ( இங்கு D என்பது கட்டண உறுதிப்படுத்தல் தேதியாகும்). முதலில், இந்த CRC ஆனது மின்-படிவம் INC -1 இன்மூலம் பெயர் கிடைப்பதற்கான விண்ணப்-பங்களை செயலாக்குகின்றது. இரண்டாவாதாக CRCயானது நிறுவனங்களை இணைப்பதற்கான மின் படிவங்களை செயலாக்கத் துவங்குகின்றது. 4. MCAஎனும் நிறுவனங்களின் விவகார துறை அமைச்சகமானது படிவம் எண் INC -29 க்கு பதிலாக மின்னணு முறையில் நிறுவனத்தை SPICe இன்வாயிலாக மின்-படிவத்தை இணைப்பதற்கான எளிமையான படிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இந்த SPICeஐ பயன்படுத்தி இணைக்கப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு PAN , TAN ஆகியவற்றை வழங்குவதற்காக CBDT எனும் மத்திய நேரடிவரிவாரியத்துடன் MCA 21 எனும் அமைப்பை அமைச்சகம் ஒருங்கிணைந்து செயல்படுகின்றது. பங்குதாரர்கள்PAN , TAN ஆகியவற்றிற்-கான விண்ணப்பங்களை SPICe மூலம் இணைப்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் நேரத்தில் மட்டும் சமர்ப்பித்தால் போதுமானதாகும். வருமான வரித் துறையால் ஒதுக்கப்பட்ட PAN / TAN ஐ நிறுவனத்தின் இணைத்தல் சான்றிதழில் ஒட்டப்படவேண்டும். பங்குதாரர்கள் மூன்று இயக்குநர்கள் வரை SPICe மூலம் DIN (இயக்குநர் அடையாள எண்) க்கு விண்ணப்பிக்கலாம். இதன் விளைவாக நம்து நாட்டில் ஒரு வணிகநிறுவனத்தைத் தொடங்குவதற்கான செயல்முறைகளின் எண்ணிக்கையும் நேரமும் குறைக்கப்பட்டுள்ளன. 5. SPICe க்குப் பிறகு, MCA ஒரு புதிய எளிமைப்படுத்தப்பட்ட இணைய அடிப்படையிலான தனித்த பெயர் ஒதுக்கீடு செய்வதற்காக R.U.N. எனும் சேவையை மின் படிவம் INC -1 க்கு பதிலாக அறிமுகபடுத்தியுள்ளது. இந்த பெயர் முன்பதிவின் போது டிஜிட்டல் கையொப்ப சான்றிதழை (DSC) பயன்படுத்த வேண்டிய தேவையை இதன்மூலம்அறவே நீக்கியுள்ளது. இது இந்தியாவில் எளிதாக வணிகத்தை செய்வதற்கான மற்றொரு மதிப்பு கூட்டல் நடவடிக்கையாகும். 6. மேலும், நிறுவன விவகார அமைச்சகம் LLP விதிகள், 2009 ஐ வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாளிகள் (இரண்டாம் திருத்தம்) விதிகள், 2018 மூலம் 18.09.2018 அன்று அறிவிக்கப்பட்டு 02.10.2018 முதல் நடைமுறைபடுத்தியுள்ளது. இந்த திருத்தத்தில் பெயரை முன்பதிவு செய்வதற்காக LLP படிவம் 1 இற்கு பதிலாக RUN-LLP எனும் படிவத்தையும், LLP படிவம் 2 இற்கு பதிலாக FiLLiP எனும் படிவத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது, முந்தைய LLPஇன் இணைப்புகள் அந்தந்த ROCஎனும்வட்டார நிறுமங்களின் பதிவாளர்களிடம் செய்யப்பட்டன. இப்போது இந்த செயல்முறை நிறுவனங்களுடன் இணையாகவும், இந்தியாவில் ஒரு தொழிலைத் தொடங்குவதற்கான ஒரு பகுதியாகவும் மையப்படுத்தப் பட்டுள்ளது 7. மத்திய அரசானது G.S.R. எண்180 (E). நாள் 06.03.2019 இன் வாயிலாக நிறுவனங்கள் (ஒருங்கிணைப்பு) விதிகள், 2014 இன் விதி 38 (2) ஐ திருத்தியுள்ளது. இந்த அறிவிப்பில் , அனுமதிக்கப்பட்ட மூலதனம் ரூ15, 00,000 இற்குள் அனைத்து நிறுவனங்களும் MCA இல் பூஜ்ஜிய கட்டணத்துடன் பதிவுசெய்து தங்களுடைய வணிகத்தை துவங்கலாம் என குறிப்பிட்டுள்ளது 8. முன்னர் இணைக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்திற்கு பதிலாக, SPICe மின் படிவத்திலேயே வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது 9. மத்திய அரசானது G.S.R. எண்275 (E) நாள். 29.03.2019 இன் வாயிலாக நிறுவனங்கள் (ஒருங்கிணைப்பு) விதிகள், 2014 ஐ திருத்தம்செய்துள்ளது இதில் SPICe மின்-படிவத்தில் நிறுவனங்களை இணைக்கும் நேரத்தில் EPFO, ESIC, GST ஆகியவற்றை பதிவுசெய்து MCA21 முறையை ஒருங்கிணைக்க விதி 38A ஐ புதியதாக கொண்டுவந்துள்ளது. 10. நிறுவனத்திற்கான பெயர் ஒதுக்கீடுசெய்திடும் விதிகள் MCA வால் எளிமைப்படுத்தப் பட்டுள்ளன, இருப்பினும் நிறுவனங்கள் (இணைத்தல்) ஐந்தாவது திருத்த விதிகள், 2019. இல் பெயர் இடஒதுக்கீட்டில் தெளிவற்ற தன்மையைத் தவிர்ப்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, பெயர் நிராகரிப்பு விகிதம் குறைந்துவிட்டது. ஒப்புதலுக்கான நேரம் குறைந்துள்ளது. இதன் விளைவாக விரைவாகவும் அதிக வெளிப்படைத்தன்மையும், சீரான தன்மையும் செயல்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 11. நிறுமங்களின் சட்டம்2013 பிரிவு 8இன்கீழ் பதிவுசெய்யபட்ட நிறுவனங்களுக்கான ஒருங்கிணைப்பு விதிகளை MCA திருத்தியுள்ளது. 07.06.2019 தேதியிட்ட . G.S.R. எண் 411 (E), இன்படி அந்த நிறுவனங்களின் உரிமமும் இணைப்பதற்கான விண்ணப்பமும் ஒரே வடிவத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும், அதாவது SPICeஐ.அரிமுகபடுத்துவதற்கு முன் அத்தகைய உரிமம் அந்தந்த ROC கள் / RD களில் இருந்து மின்-படிவம் INC-12 மூலம் பெறப்பட்டது, இது இப்போது SPICe உடன் இணைக்கப்பட்டு மையப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எளிமைப்படுத்தப்பட்ட செயல்முறை பிரிவு 8இன்கீழ் நிறுவனங்களை பதிவுசெய்வதற்கான கால அளவைக் குறைத்துள்ளது.

புதன், 20 மே, 2020

நிறுவனங்களின் சட்டம் 2013 இன்கீழ் பதிவுசெய்யப்பட்ட சிறிய நிறுவனங்களுக்கு கிடைக்கும் ஒரு சில நன்மைகளும் விதிவிலக்குகளும்


எந்தவொரு நிறுவனத்திலும் உள்ள பங்குதாரர் ஒவ்வொருவரும் தம்முடைய நிறுவனத்தினை சிறிய நிறுவனமாக மாற்றியமைப்பதால் தம்முடைய நிறுவனத்திற்கு ஒரு சில நன்மைகளும், விதிவிலக்குகளும் கிடைக்கும் என்ற செய்தியை நினைவில் கொண்டு தம்முடைய நிறுவனத்தினை சிறிய நிறுவனமாக மாற்றியமைத்திடலாமா எனயோசித்து அதன்படிசெயல்படுத்த முயற்சித்திடுக. நிறுவனங்களின் சட்டம் 2013 பிரிவு 2 (85)இன்படி சிறு நிறுவனம் என்றால் பொது நிறுவனங்கள் தவிர அ. செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தொகையானது ஐம்பது லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்ககூடாது ஆ.இந்நிறுவனத்தின் வருடாந்திர விற்பணை வருவாயானது *** [உடனடி முந்தைய நிதியாண்டிற்கான இலாப நட்டக் கணக்கின் படி] ரூபாய்இரண்டு கோடி க்கு மேல் இருக்ககூடாது ஆகிய இருநிபந்தனைகளுக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே அது ஒரு சிறு நிறுவனம் ஆகும் இந்நிலையில் அவ்வாறான நிபந்தனைக்களுக்கு உட்பட்டவை அனைத்தும் சிறுநிறுவனங்களா என்ற கேள்வி நம்முடைய மனதில் எழும் நிற்க ஆயினும் மேற்கண்ட மேற்கண்ட இரு நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்தாலும்.அ.முதன்மை நிறுவனம் அல்லது துனைநிறுவனம் .ஆ. நிறுவனங்களின் சட்டம் 2013 பிரிவு 2 (8)இன்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனம்.இ.சிறப்பு சட்டத்தின் படி நிறுவுகைசெய்யப்பட்ட நிறுவனம் அல்லது அமைப்பு ஆகியவை சிறிய நிறுவனங்களின் வகைக்கு உட்பட்டவை அல்ல இதனை எளிய மொழியில் கூற வேண்டுமெனில் எந்தவொரு தனியார் நிறுவனமும் அ. ஒரு தனியார் நிறுவனத்தின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தொகை ரூபாய்50/- இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் .மேலும் ஆ. அந்நிறுவனத்தின் வருடாந்திர விற்பணை வருவாயானது ரூபாய் 2/- கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆகிய இரு நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் போது, அந்நிறுவனம் சிறிய நிறுவனம்என்ற வகையின் கீழ் உள்ளடங்கும் எனக்கொள்க இதன்அடிப்படையில் குறிப்பிட்ட ஆண்டில் ஒரு நிறுவனம் சிறுநிறுவனமாக மாற்றம் செய்யப்பட்டபின்னர் தொடர்ந்து வரும் அடுத்த ஆண்டுகளில் ஏதேனு-மொரு காரணத்தால் மேலே கண்ட இருநிபந்தனைகளான செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் அல்லது வருடாந்திர விற்பணைவருமானம் குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் உயரும்போது அந்நிறுவனமானது சிறிய நிறுவனத்தின் வகையின் கீழ் வராது, மேலும் சிறிய நிறுவனத்தின் கீழ் கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் / விதிவிலக்குகளையும் அந்நிறுவனம் கைவிட வேண்டும். நிறுவனங்களின் சட்டம் 2013 இன்கீழ்சிறிய நிறுவனங்களுக்கு கிடைக்கும் பொதுவான நன்மைகள் / விதிவிலக்குகள் பின்வருமாறு அ.இயக்குநர்களின் குழுக்கூட்டம் நடத்துதல் : - சிறிய நிறுவனங்களுக்கு பரந்த அளவிலான வியாபார வணிகசெயல்பாடுகள் எதுவும் இல்லை என்பதால் அவ்வாறான சிறிய நிறுவனங்கள் நிறுவனங்களின் சட்டம் 2013 இன்படி ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு இயக்குநர்களின் குழுக்கூட்டம் வீதம் ஆண்டு ஒன்றிற்கு மொத்தம் நான்கு இயக்குநர்களின் குழுக்கூட்டங்களை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்ற நிபந்தனையை பின்பற்றத்தேவையில்லை, அதற்கு பதிலாக சிறிய நிறுவனங்கள் ஒரு ஆண்டில் இரண்டு இயக்குநர்களின் குழுக்-கூட்டங்களை மட்டுமே நடத்தினால் போதும், அதாவது ஆண்டின் ஒவ்வொரு ஆறுமாத்திற்கு ஒரு இயக்குநர்களின் குழுக்கூட்டமும் இரண்டு கூட்டங்களுக்கு இடையில் குறைந்தபட்சம் தொண்ணூறு நாட்கள் இடைவெளியிலும் கூட்டப்படவேண்டும். ஆ.தணிக்கையாளர்நியமனம்செய்தல்: - தனிநபர் தணிக்கையாளர்களெனில் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அல்லது கூட்டாண்மை நிறுவன தணிக்கையாளர்களெனில் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயமாக ஒரு நிறுவனத்தின் தணிக்கையாளர்களை சுழற்சி முறையில் நியமனம் செய்திடவேண்டும் என நிறுவனச்சட்டம் 2013 இன் பிரிவு 139 (2) இல் குறிப்பிடப் பட்டுள்ள நிபந்தனையைசிறிய நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை, இ. இயக்குநர்களின் குழுக்கூட்டத்தின் அறிக்கையில் விதிவிலக்குகள்: - நிறுவனங்களின் (கணக்குகள்) விதிகள், 2014 , விதி -8 இன்படி இயக்குநர்களின் குழுக்கூட்டத்தின் அறிக்கையில் உள்ளடக்கங்களாக சேர்க்கப்பட வேண்டிய இனங்கள் அல்லது விவரங்கள் என்பவை சிறிய நிறுவனத்திற்கு பொருந்தாது. ஈ.நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் கையொப்பமிடுதல்: - சிறிய நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் நிறுவனத்தின் செயலாளர் மட்டுமே கையெழுத்திட முடியும், அல்லது நிறுவன செயலாளர் இல்லாத நிலையில், நிறுவனத்தின் ஏதேனுமொரு இயக்குநர் கையெழுத்திடலாம். உ.நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்படும் ஆண்டறிக்கையில் குறிப்பிடவேண்டிய ஊதிய விவரங்கள்: - நிறுவனங்களின் சட்டம், 2013 பிரிவு 92 இன் படி, நிறுவனங்களில் பணிபுரியும் இயக்குநர்கள் , முக்கிய நிருவாக பணியாளர்கள் (Key Managerial Person(KMP))ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆண்டிலும் வழங்கப்பட்ட ஊதியம் குறித்த விவரங்களை கண்டிப்பாக தனித்தனியே குறிப்பிட வேண்டும், ஆனால் சிறிய நிறுவனங்களெனில் அதற்கு பதிலாக “இயக்குநர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த ஊதியம்” என்றுமட்டும் குறிப்பட்டால் போதுமானதாகும் ஊ. நிறுவனங்களின் ரொக்கஓட்ட அறிக்கை: - ஒரு சிறிய நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டிய அதன் நிதி அறிக்கையின் ஒரு பகுதியாக ரொக்கஓட்ட அறிக்கையையும்(CASH FLOW STATMENTS) சேர்த்து சமர்பிக்கத் தேவையில்லை. எ.தணிக்கை அறிக்கையில் விலக்குகள்: - அக நிதிக் கட்டுப்பாடுகள் குறித்த நிதி அறிக்கைகள், தணிக்கை கட்டுப்பாடுகளின் இயக்க செயல்திறன் ஆகியவற்றை பற்றிய விவரங்களை சிறிய நிறுவனங்கள்தணிக்கை அறிக்கையில் குறிப்பிடத் தேவையில்லை. ஏ.நிறுவனங்கள் சட்டம், 2013 . பிரிவு 446 பி இன் கீழ் சிறு நிறுவனங்களுக்கான அபராதத்தொகை: - சிறிய நிறுவனங்கள் நிறுவனங்களின் சட்டம், 2013 பிரிவு 92 (5), பிரிவு 117 (2) அல்லது பிரிவு 137 (3) ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை பின்பற்றத் தவறினால், அத்தகைய சிறிய நிறுவனமும் அந்நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலரும் அத்தகைய நிறுவனத்தின் இயல்புநிலை அபராதத்திற்கு பொறுப்பாவார்கள், ஆனால் அத்தகைய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள அபராதத்தில் பாதிக்கு மேல் அபாரததொகை இருக்கக்கூடாது.

செவ்வாய், 19 மே, 2020

புதிய சசேவ படிவங்களை பற்றிய ஒருஅறிமுகம்


புதிய சரக்கு சேவை வரி2017 இன் அறிமுகமானது மறைமுக வரிவிதிப்பில்ஒரு சிறந்த சீர்திருத்த நடவடிக்கையாகும் இதன்படி உள்ளீட்டு வரிவரவில் இணக்க மானநடைமுறைகளை எளிமையாகவும் வெளிப்படையாகவும் வைத்திருக்க அரசாங்கம் எப்போதும் விரும்புகின்றது. மேலும்'விலைப்பட்டியலில்-விலைப்பட்டியலை பொருத்துதல்' என்ற தனித்துவமான கருத்தை அதன் மறைமுக வரி உலகில் அறிமுகப்படுத்த அரசாங்கம் முயன்று வருகின்றது . . இந்நிலையில் அரசாங்கத்தின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளில் ஆங்காங்கே ஒருசில தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பதால், இந்த கனவினை நடைமுறையில் செயலாக்கும் பணியில் ஒருசில சுணக்கங்கள் உருவாகியுள்ளன. இருந்தபோதிலும் அரசாங்கமானது தனது பார்வையை சரியான செயல்பாட்டுக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது அதன்படி . அக்டோபர் 2019 முதல் இந்த சசேவ2017இன்கீழ் 'புதிய அறிக்கை சமர்ப்பிக்கும் முறையை' கொண்டு வந்துள்ளது.இதற்காக ஏற்கனவே இருந்து வருகின்ற பழைய நடைமுறைகளை மேம்படுத்தி புதிய படிவங்களாக கடந்த மார்ச்சு 2019 அரசினுடைய ஜிஎஸ்டி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது தொடர்ந்து கடந்த ஆகஸ்2019 மாதத்தில் இதனை இணைய இணைப்பு இல்லாதபோதும் செயல்படுத்தி பயன்படுத்திடும் வகையில் எளிமை-படுத்தியும் உள்ளது இதன் வாயிலாக அரசின் கொள்கைகளை அடைவதில் அரசாங்கத்தின் உறுதியைக் தெரிந்துகொள்ளமுடியும். தற்போது முன்மொழியப்பட்ட இந்த புதிய அறிக்கை சமர்ப்பிக்கும் முறையானது வரி செலுத்துவோரை இரண்டு வகைகளாக வகைப்படுத்துகின்றது: அ.ஆண்டு ஒன்றிற்கு விற்பணைவருமானம் ரூபாய் .ஐந்து கோடிக்குக் குறைவாக வருவாய் கொண்ட வரி செலுத்துவோர் (மொத்த வரி செலுத்துவோரில் இந்த வகையில் 93 சதவீதமாக உள்ளனர்) - மாதாந்திர அல்லது காலாண்டு வருவாய் அறிக்கை சமர்ப்பிப்பதற்கான விருப்பம் தெரிவித்தல் ஆ.ஆண்டு ஒன்றிற்கு விற்பணைவருமானம் ரூபாய் .ஐந்து கோடிக்குக் அதிகமாக வருவாய் கொண்ட வரி செலுத்துவோர் - மாதாந்திர வருவாய் அறிக்கை சமர்ப்பிப்பதற்கான விருப்பம் தெரிவித்தல் இந்த புதிய அமைவானது Upload-Lock-Pay(ULP)எனும்கருத்தமைவில் அதாவது பொருட்களுக்கான பட்டியலை நிகழ்வு நேரத்திலேயே பதிவேற்றம் செய்தலும் ஏற்றுகொள்ளுதலும் எனும் வசதியை இந்த புதிய நடைமுறையில் செயல்படுத்த படவிருக்கின்றது இது பொருட்களை வழங்குபவர்களின் ஆவணங்களை சமர்ப்பிப்பதில் பொருட்களை பெறுபவரின் உள்ளீட்டு வரிவரவை (ITC) யும், காணாமல் போன ஆவணங்களில் தற்காலிக வரிவரவுவைப்பதற்கான நெகிழ்வுத்தன்மையையும் முற்றிலும் இணைக்கின்றது. . இவை மட்டுமல்லாது இந்த புதியமுறையில் கிடைக்கும் வேறுசில முக்கியமான பயன்கள் பின்வருமாறு அ.கொள்முதல் செய்திடும் பொருட்களை வழங்குபவர்களின் பன்முகத்தன்மையைப் பொறுத்து படிவத்தை காலாண்டு அறிக்கை கோப்புக்கான விருப்பங்களான (இயல்பான, சஹாஜ், சுகம்)ஒன்றினை தெரிவுசெய்தல் ஆ உள்ளீட்டு வரிவரவான( ITC)ஆறு இலக்க HSN அறிக்கையின் தயார்நிலைஇணைப்பிற்கும் பெறுபவருக்கும் பொருட்களை வழங்குபவர் சமர்ப்பிக்கும் ஆறிக்கையை காணும் நிலை இ. உள்ளீட்டு வரிவுகளை( ITC) உள்ளீட்டு பொருட்கள், உள்ளீட்டு சேவைகள் , மூலதனப் பொருட்களாகப் பிரித்தல் ஈ.தனித்தனியான திருத்தப் படிவங்கள் உ. வரிவருவாய் ஒன்றுமில்லை எனும் அறிக்கையை சமர்ப்பிபவர்களுக்கான NIL return எனும் குறுஞ்செய்தி (SMS) கிடைத்திடசெய்தல் இதன்வாயிலாக புதிய அறிக்கை சமர்ப்பிக்கும் அமைவினை செயல்படுத்தப் படுவது ஜிஎஸ்டி2017இன் கீழ் இணக்கங்களின் முழுமையான மறுசீரமைப்பைக் குறிக்கின்றது எனத் தெளிவாகத் தெரிகின்றது. மேலும் வரி செலுத்துவோரைப் பொறுத்தவரை, பழையதிலிருந்து புதிய முறைக்குமாறிடும்போது ஒரு மென்மையான மாற்றத்தைத் சரியாக திட்டமிட்டு வரிவருமானம் ஒன்றும் இல்லாதபோது இடையில் நிறுத்திவிட்டு பின்னர் வரிவருவாய் வரும் போது தொடர்ந்து சமர்ப்பிப்பதைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியமாகும் ஊ. ஒவ்வொரு விலைப்பட்டியலுடன் ஒரு -விலைப்பட்டியலை பொருத்துவதின்' தாக்கம் - எடுத்துக்காட்டாக, ITC எனும் உள்ளீட்டு வரிவரவை பயன்படுத்தி கொள்ளும்போது எந்த ஆவணங்களுக்கான பொருள்பட்டியலை வழங்குநர் பதிவேற்றம் செய்யவில்லை.என சுலபமாக தெரிந்து கொள்ளமுடியும் எ. புதிய படிவங்களுடன் சீரமைப்பில் தரவை உருவாக்க ERP ஒருங்கிணைப்பு வசதி - எடுத்துக்காட்டாக, ஆறு இலக்க HSN சேவை உள்ளீட்டுவரிவரவுகளை தனியாக பிரித்தல் ஏ.இணக்க பணியாளர்களின் மாதாந்திர பொறுப்பு அறிதல் - எடுத்துக்காட்டாக, தானாக உருவாகும் ஆவணங்களில் நடவடிக்கை எடுப்பதற்கும், வழங்குபவர்களைப் பின்தொடர்வதற்கும் ANX-2 உடன் கொள்முதல் பதிவேட்டை பொருத்துவதற்கான பொறுப்பு யாருடைது என தெரிந்து கொள்ளுதல். ஐ. இடைநிலை வழக்குகளின் தீர்வு வழங்குநர் தவறவிட்டுவிட்டார், ஆனால் பெறுநர் GSTR-3B யில் தொடர்புடைய ITC யைக் கோருகின்றார் எனில் இதன் வாயிலாக புதிய அறிக்கை சமர்ப்பிக்கும் படிவங்களில் கணக்கிடப்படும். விவரங்களை அறிந்து கொள்ளலாம் அக்டோபர் 2019முதல் தற்போது நடைமுறையில் வரவிருக்கும் GST PMT 08 என்பதற்கு பதிலாக ஜனவரி 2020 மாதிரி பயன்பாடாக GST PMT 08 என்பதையும் புதிய GSTR 3B எனும் படிவத்தையும் பின்பற்றலாம் அதற்கு பிறகு GSTR 3B எனும் படிவத்தை மட்டுமேசமர்ப்பிக்கவேண்டும் பெரிய நிறுவனங்கள் புதிய GST – RET – 01 என்பதுடன் இணையஇணைப்பில்லாது பயன்படுத்தி கொள்ளப்படும் GST ANX-1,GST ANX-2 ஆகிய இரு கூடுதல் இணைப்பு படிவங்களையும் சமர்ப்பிக்கலாம் மேலும்உள்ளூர் கொள்முதல் சிறிய நிறுவனங்கள் B2Bவழங்குபவர்கள் Sahaj என்பைதயும் B2B , B2C ஆகிய இருவகைகளிலும் வழங்குபவர்கள் Sugam எனும் எளிய காலாண்டு அறிக்கைகளை பின்பற்றலாம் உள்ளீட்டு வரவினை பதிவிறக்கம் செய்து இணையஇணைப்பில்லாது போதுகூட ஆகஸ்டு 2019 மாதத்திலிருந்து சரியாக இருக்கின்றதாவென சரிபார்த்து கொள்ளலாம் பெரிய நிறுவனங்கள் அக்டோபர் 2019 GSTR-1 இற்கு பதிலான GST ANX-1 பதிவேற்றம் செய்வதை கண்டிப்பாக பின்பற்றிடவேண்டும் சிறிய நிறுவனங்கள் தங்களுடைய முதன்முதலான காலாண்டு அறிக்கையை ஜனவரி 2020இருந்து பயன்படுத்தி கொள்ளவேண்டும் அதுவரை பழைய மாதாந்திர நடைமுறையை பின்பற்றலாம் அல்லது புதிய காலாண்டு நடைமுறையையும் பின்பற்றலாம் ஆயினும் GST ANX-2 எனும் படிவத்தை சரிபார்ப்பதற்காக பார்வையிட மட்டும் வைத்துகொள்ளலாம் ஆனால் செயல்படுத்திடமுடியாது பெரிய நிறுவனங்கள் அக்டோபர் 2019 நவம்பர் 2019 ஆகிய இருமாதங்களுக்கு மட்டும் GSTR-3B பயன்படுத்தி கொள்ளலாம் ஆனால் டிசம்பர் 2019 அறிக்கையை புதிய GST RET-01 படிவத்தில் ஜனவரி 2020 இல் சமர்ப்பிக்கவேண்டும் சிறிய நிறுவனங்கள் GSTR-3B படிவத்தை நிறுத்தம் செய்து GST PMT-08 படிவத்தை அக்டோபர் 2019 இலிருந்து பின்பற்றலாம் இவர்கள் அக்டோர்2019 டிசமபர்2019 காலாண்டுகளுக்குரிய அறிக்கைகளை GST RET-01 எனும் படிவத்தில் ஜனவரி 2020இல் சமர்ப்பிக்கலாம். ஜனவரி 2020. இலிருந்து தற்போது பயன்பாட்டிலுள்ள GSTR-3B படிவத்தினை பயன்படுத்தி கொள்ளமுடியாது புதிய GST RET-01எனும் படிவத்தைமட்டுமே பின்பற்றிடவேண்டும் ஆயினும் இவ்வாறு புதிய படிவத்திற்கு மாறிடும்போது பழையமுறையில் வரிவரவு ஏதேனும் வரவேண்டியிருந்தால் அதற்காக அரசாங்கம தணியாக உத்தரவினை பிறப்பிக்கும்

திங்கள், 18 மே, 2020

சசேவ இன்கீழ் தலைகீழ் வரிகட்டமைப்பு


சரக்கு சேவைவரி(சசேவ)2017சட்டத்தில் தலைகீழ் வரி கட்டமைப்பு (Inverted Duty Structure) எனும் சொற்கள் குறித்து இதுவரை வரையறுக்கப்படவில்லை ஆயினும் இந்த சொற்களுக்கான விளக்கம் பின்வருமாறு "உள்வருவனமீதான வரி விகிதம் ஆனது வெளியீட்டு பொருட்களின் அல்லதுசேவைகளின் மீது விதிக்கப்படும் வரி விகிதத்தை விட அதிகமாக இருக்கும்போது, அதனை சசேவ இன்கீழான தலைகீழ் வரி கட்டமைப்பாக கருதப்படும் " என இதனை மிகஎளியவிளக்கமாக கூறலாம் அதாவது ஒரு நிறுவனம் தான் உற்பத்தி செய்யப்படும் பொருளிற்காக அல்லது வழங்கும் சேவைக்காக பயன்படுத்திடும் உள்ளீட்டு பொருளிற்கான அல்லது சேவைக்கான வரியானது ( ரூ.100/-) அந்நிறுவனத்தில் உற்பத்திசெய்து வெளியிடும் பொருளிற்கான அல்லது சேவைக்கான வரி(ரூ.80/-)யைவிட அதிகமாக இருந்தால் அதனை சசேவ இன்கீழான தலைகீழ் வரிகட்டமைப்பு என கூறலாம் அதெல்லாம் சரி இதுபோன்ற உள்ளீட்டிற்காக செலுத்திய அதிகப்படியான வரியை திரும்பப் பெற எங்களுக்கு உரிமை ஏதும் உள்ளதா? என்ற கேள்வி இப்போது நம்மனைவருக்கும் எழும். நிற்க. இந்த சசேவசட்டத்தின்கீழ் பதிவுசெய்துகொண்டுள்ள எந்தவொரு நபரும், CGST எனும் மத்திய சசேவ சட்டம் பிரிவு 54(3) இன்கீழ் இதே 54 ஆவதுபிரிவின் (10)எனும் உட்பிரிவின் கூறப்பட்டுள்ள நிந்தனைகளுக்கு உட்பட்டு எந்தவொரு வரியாண்டின் முடிவிலும் மிகுதியாக உள்ள பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரிவரவைத் திரும்பப்பெறக்கோரலாம்: ஆயினும்பின்வரும் சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரிவரவை திரும்பப் பெற அனுமதிக்கப்படமாட்டாது. அ. நிறுவனத்தின் வெளியீட்டு பொருளிற்கு அல்லது சேவைக்கு பூஜ்ஜிய வரிவிகிதம் (Rate =0 )இருக்கும்போது ஆ.வெளியீடுளுக்கான வரி விகிதத்தை விட உள்ளீட்டின் மீதான வரி விகிதத்தின் காரணமாகவரவு குவிந்துள்ளது (பிற பூஜ்ஜியமாக மதிப்பிடப்பட்ட அல்லது முழுமையாக விலக்கு அளிக்கப்பட்ட உள்ளீடுகள்), சசேவ சபையின் (GST Council) பரிந்துரைகளின் படி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளின் அல்லது இவ்விரண்டின் விநியோக்ததை தவிர,இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் ஏற்றுமதிவரி செலுத்துவதற்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரிவரவை திரும்பப் பெற அனுமதிக்கப்படமாட்டாது பொருட்கள் அல்லது சேவைகளை அல்லது இவ்விரண்டையும் வழங்குபவர் மத்திய வரியிலிருந்து திரும்பபெறுவது (duty drawback) அல்லது அத்தகைய பொருட்களுக்கு செலுத்தப்பட்ட ஒருங்கிணைந்த மத்திய வரியினை திரும்ப பெறுவது ஆகியன இருந்தால்,இந்த உள்ளீட்டு வரிவரவு திரும்பப்பெற அனுமதிக்கப்படாது. CGST எனும் மத்திய சசேவ விதி 89 இல் இந்த தலைகீழ் வரி கட்டமைப்பின்படி தொகை திரும்பபெறுவதற்கான கணக்கீட்டு சூத்திரம் வழங்கப்பட்டுள்ளது சசேவ வரி, வட்டி, அபராதம், கட்டணம் அல்லது வேறு ஏதேனும் தொகையைத் திரும்பப்பெறுவதற்காக விதி 89 இன்கீழ் விண்ணப்பிக்கலாம் இதன் துனைவித(5) இன் படி தலைகீழ் வரி கட்டமைப்பின் காரணமாக நாம் செலுத்திய அதிகமான வரிக்கான பணத்தைத் திரும்பப் பெறும்போது, பின்வரும் சூத்திரத்தின்படி உள்ளீட்டு வரிவரவைத் திரும்பப் பெறுதலுக்கான தொகைவழங்கப்படும்: -கணக்கீட்டு சூத்திரம் பின்வருமாறு அதிகபட்சம் திரும்ப வழங்கப்படும் தொகை (Maximum Refund Amount ) = {(Turnover of inverted rated supply of goods andservices) X Net ITC ÷ Adjusted Total Turnover} - tax payable on such inverted rated supply of goods and services. அதாவது (தலைகீழ் வரி கட்டமைப்பின்கீழான மொத்த கொள்முதல் வருமானத்தினை) X( நிகர உள்ளீட்டு வரிவரவு தொகையினால் பெருக்கி) ÷(சரிகட்டபட்ட மொத்த விற்பணை வருமானத்தால் வகுத்து கிடைக்கும் தொகையிலிருந்த )-(தலைகீழ் வரி கட்டமைப்பின்கீழ் வழங்கப்பட்ட பொருளிற்கும் சேவைகளுக்கும் ஆன செலுத்தவேண்டிய உள்ளீட்டு வரியை கழித்து) வருவதாகும் இந்த கணக்கீட்டு சூத்திரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள Net ITC என்பதற்கான விளக்கம் பின்வருமாறு தொடர்புடைய காலகட்டத்தில் இதே விதி89 இன் துணை விதிகள் (4A) , (4B) அல்லது இரண்டின் கீழும் பணத்தைத் திரும்பப்பெறும் உள்ளீட்டு வரிவரவு தவிர; உள்ளீட்டிற்காக(INPUTS) பெறப்பட்ட உள்ளீட்டு வரிவரவு என்பதே நிகர உள்ளீட்டு வரிவரவு (Net ITC) ஆகும் அதற்கடுத்ததாக Adjusted Total Turnover என்பதற்கான விளக்கம் இதேசட்டம் பிரிவு 2 இன்கீழான பிரிவு (clause) (112) இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி, , சேவைகளின் விற்பனை வருவாயைத் தவிர்த்து மிகுதி ஒரு மாநில அல்லது யூனியன் பிரதேசத்தில் கிடைக்கும் விற்பணைவருமானமே சரிகட்டப்ட்ட மொத்த விற்பணைவருமானம் (Adjusted Total Turnover) ஆகும் இந்ததலைகீழ் வரி கட்டமைப்பின்படி தொகை திரும்பபெறுவது குறித்து Shabnam Petro filsPvt. Ltd.எதிர் union of India என்ற வழக்கில் குஜராத் உயர்நீதி மன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பினை தொடர்ந்து இந்த விதிஎண் 89(5) திருத்தம் செய்யப்பட்டு தலைகீழ் வரிகட்டமைப்பு நடைமுறை படுத்தப்பட்டுள்ளது முக்கியகுறிப்பு மத்தியஅரசின் அறிவிப்பு எண் 21/2018-Central Tax நாள் 18.4.2018 இன்படியும், மத்திய அரசின்மற்றொரு அறிவிப்பு எண் .26/2018- Central Taxநாள் 13.6.2018இன்படியும் இந்த விளக்கத்திற்கான திருத்தமானது 1.7.2017 அன்றிலிருந்து அதாவது முன்கூட்டியநாளிலிருந்து (retrospectively) நடைமுறை படுத்திடுமாறு மத்திய சசேவ சட்டவிதிஎண் 89(5) இல்திருத்தம் செய்து உத்திரவிட்டுள்ளது

ஞாயிறு, 17 மே, 2020

சிறு நடுத்தர நிறுவனங்குளுக்கு உதவிடும் பணம் இல்லாமல் காசோலை வருவதற்கான திருத்தங்கள்


தற்போது நிலையில் இவ்வாறு காசோலை ஒன்றின் வாயிலாக தொகை கிடைக்கபெற்றால் அந்த காசோலையில் குறிப்பிட்டுள்ள நாளிலிருந்து மூன்று மாதத்திற்குள் நாம் கணக்கு வைத்திருக்கும் வர்த்தக வங்கியில் சமர்ப்பித்து பணம் கோரலாம் அதனை தொடர்ந்து வர்த்தக வங்கியானது குறிப்பிட்ட காசோலைக்கு பணம் இல்லையென திருப்பி அனுப்பிய நிலையில் தொடர்புடைய அந்த காசோலையில் கையொப்பமிட்ட நபருக்கு உடன் பணம் வழங்க கோரி ய கடிதம் ஒன்றின்வாயிலாக முப்பது நாட்களுக்கள் அறிவிப்பு ஒன்றினை அனுப்பிடவேண்டும் அவ்வாறான அறிவிப்பிற்கு பதினைந்து நாட்களுக்குள் காசோலை எழுதியவர் பணம் வழங்கியிருக்கவேண்டும் அவ்வாறு வழங்கவில்லையெனில் பாதிக்கப்பட்டவர் இதற்கான நீதிமன்றத்தில் காசோலைக்கான பணம் கிடைக்கப்பெறாமல்காசோலையே திரும்ப வந்தது (Cheque Bounce ) குறித்து வழக்கு தொடுக்கலாம் இவ்வாறான வழக்கானது செலாவணி முறிச்சட்டம் (Negotiable Instruments Act) 1881 இன் கீழ் வழக்காக பதிவுசெய்யப்பட்ட ஆறுமாத்தத்திற்குள் நீதிமன்றம் உத்திரவிடவேண்டும் என மிக நீண்ட நடைமுறையில் பாதிக்கப்பட்ட நபர் தன்னுடைய வியாபார நடவடிக்கைகளுக்கு போதுமான நடைமுறை மூலதனம் இல்லாமல் அல்லலுறவேண்டிய அவலநிலைக்கு தள்ளப்படுகின்றார் அதாவது MSME என சுருக்கமாக அழைக்கப்படும் மிகச்சிறிய சிறிய நடுத்தர நிறுவனங்கள் , சிறிய வியாபாரிகள் ஆகியோர்கள் தங்களுக்கு வழங்கப்படும் காசோலைகள் அவைகளுக்கான தொகை தமக்கு வழங்கப்பட்ட காசோலையில் குறிப்பிட்ட வர்த்தக வங்கியின் கணக்கில் இல்லாத தால் திரும்பிவிடும் நிலையில் அதற்கான நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அந்ததொகை பெறுவதற்குள் போதும் போதும் என அதிக காலவிரையம் ஆவது மட்டுமல்லாமல் தங்களுடைய வியாபார நடவடிக்கைகளக்கு தேவையான போதுமான நடைமுறை மூலதனம் இல்லாமல் நிறுவனத்தின் இயக்கத்தையே நிறுத்திவிடும் நிலைக்கு தள்ளப்படும் தற்போதை ய அவலநிலையில் இவ்வாறான சிக்கலை தீர்வு செய்வதற்காக உதவிடும் பொருட்டு செலாவணிமுறிச்சட்டம் 1881 இல் பிரிவு 143A ,148 ஆகிய இரண்டிலும் திருத்தம் செய்து கடந்த செப்டம்பர் 1., 2018 இலிருந்து நடைமுறை படுத்தப்பட்டுள்ளது என்ற ஒரு நல்லசெய்தியானது அவ்வாறு அல்லல்படும் பவர்களுக்கு வயிற்றில் பால்வார்த்தது போன்றதாகும் . பணமில்லாமல் காசோலை திரும்ப வந்ததற்காக தொடர்புடையவர்மீது வழக்கு தொடுத்தபின்னர் இடைக்கால நிவாரணமாக 20% இற்கு மிகாமல் 60 நாட்களுக்குள் இந்த தொகையுடன் வங்கியின் வட்டிவிகிதத்தின் அடிப்படையில் வட்டியும் சேர்த்து வழங்கிடுமாறு நீதிமன்றம் உத்திரவிடலாம் இந்த உத்திரவின்படி தொடர்புடையநபர் தொகை வழங்கத்தவறினால் தொடர்புடைய நபருக்கு சொந்தமான நிலையான சொத்துகளை மாவட்ட ஆட்சியர் வாயிலாக பொது ஏலத்தில் விற்பணைசெய்து பாதிக்கப்பட்டவருக்கு தொகை வழங்குமாறு நீதிமன்றம் உத்திரவிடலாம் பிரிவு 148 இன் படி பாதிக்கப்பட்டவர் இவ்வாறான வழக்கு தொடுத்தவுடன் காசோலையில் கையொப்பமிட்டு கொடுத்த நபர் தொடர்புடைய நீதிமன்றத்ததில் 20% தொகையை வைப்புதொகையாக செலுத்திடவேண்டும் வழக்கு காசோலை வழங்கிய நபருக்குசார்பாக தீர்ப்பானால் அந்த தொகையும் அதற்கான வட்டியும் சேர்த்து அவருக்கு திருப்பிவழங்கப்பெறும்

சனி, 16 மே, 2020

சிக்கலை அடையாளம் காண விமர்சன சிந்தனையும் ஆனால் அதற்கான தீர்வுகளுக்கு மட்டும் மிகவும் ஆக்கபூர்வமான சிந்தனையும் தேவையாகும்


ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் எனும் நிறுவனத்தின் தலைவர், அந்நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுடன் ஒவ்வொரு வாரமும் வாராந்திர சந்திப்பிற்கான கூட்டத்தை நடத்தி அதில் தம்முடையபணியாளர்கள் கூறும் குறைகளை உடனுக்குடன் தீர்வுசெய்து வந்தார். அவ்வாறான ஒரு வாராந்திர சந்திப்பு கூட்டத்தில் பணியாளர் ஒருவர் பிரச்சினை ஒன்றினை கொண்டுவந்தார். அதாவது பணியாளர்கள் பயன்படுத்திவருகின்ற கழிப்பறைகளின் தரமும் சுகாதாரமும் மிகவும் மோசமாக இருக்கின்றது என்றும் . அதேசமயம், தலைமை நிர்வாகிகள் பயன்படுத்திடும் கழிப்பறைகளில் தூய்மையும் சுகாதாரமும் எப்போதும் மிகச் சிறந்தவையாக உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார். அதனைதொடர்ந்து" அதை சரிசெய்ய எவ்வளவு காலஅவகாசம் தேவைப்படும்?" என தலைவர் தனது உயர் நிர்வாகிகளிடம் வினவினார். "அதை சரிசெய்ய குறைந்த பட்சம் ஒரு மாதம் ஆகும்." என அதற்கான பொறுப்பான நிருவாகி பதில் கூறினார். உடன் தலைவர் "நான் அதை ஓரிரு நாளில் செய்வேன், அதற்காக ஒரு தச்சு பணியாளரை மட்டும் என்னிடம் அனுப்பிவையுங்கள்" என்றார். அடுத்த நாள், ஒரு தச்சுப்பணியாளர் தலைவரிடம் வந்தபோது, உடன் அந்த தச்சுப்பணியாளரிடம் கழிப்பறையின் முகப்பில் அதனை சுட்டிகாட்டிடும் பெயர் பலகைகளை மட்டும் இடம்மாற்றி வைத்திடுமாறு கட்டளையிட்டார் . அதாவது பணியாளர்கள் பயன்படுத்தி கொள்ளும் கழிப்பறையின் முகப்பில் சுட்டி காட்டிடும் பெயர் பலகையை "நிர்வாகிகள் கழிவறை " என்றும் நிர்வாகிகள் பயன்படுத்தி கொள்ளும் கழிப்பறையின் முகப்பில் சுட்டிகாட்டிடும் பெயர் பலகையை "தொழிலாளர்கள் கழிவறை" என்றும் மாற்றி வைத்திடுமாறு கட்டளையிட்டார் அதன்படி அவ்விரு பெயர்பலகைகளும் இடம் மாற்றி வைக்கப்பட்டன . என்ன ஆச்சரியம் பெயர்பலகைகள் இடம் மாறியபின்னர் இரண்டு கழிப்பறைகளின் தரமும் அடுத்த ஓரிரு நாட்களில் சமமான அளவில் மிகவும் சுத்தமாகமாகவும் சுகாதாரமாகவும் மாறிவிட்டன அதன் பின்னர் ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறே பெயர்பலகைகளை மட்டும் இடம் மாற்றி வைத்திடுமாறு தலைவர் அறிவுறுத்தினார். அதன்பிறகு நடைபெற்ற வாராந்திர கூட்டத்தில் அந்த பிரச்சினை குறித்துஎந்தவொரு பணியாளரும் எழப்பவேயில்லை. நிறுவனத்தின் தலைவராக இருப்பது என்பது அந்நிறுவனத்தின் நிருவாகியாக இருப்பதை விட மிக உயர்ந்தநிலையானதாகும் இருந்தபோதிலும் பொதுவாக எந்தவொரு தொழில் நிறுவனத்தின்தலைமை பதவியில் இருப்பவர்களும் தங்களின் கட்டுபாட்டின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் கூறும் குறைகளை பொறுமையாக காது கொடுத்து கேட்டு அவ்வாறான குறைகளுக்கான மிகச்சரியான தீர்வுகளை அதிக காலஅவகாசம் எடுத்து கொள்ளாமல் உடனுக்குடன் செயற்படுத்தி பணியாளர்கள் திருப்தியடையுமாறு செய்திடவேண்டும் அவ்வாறான சிக்கலை அடையாளம் காண விமர்சன சிந்தனை தேவையாகும் . ஆனால் அதற்கான தீர்வுகளுக்கு மட்டும் மிகவும் ஆக்கபூர்வமான சிந்தனை தேவையாகும் என்ற செய்தியை மனதில் கொள்க

வெள்ளி, 15 மே, 2020

சசேவ சட்டத்தின் கீழ் GSTR 2A எனும் சரிகட்டிடும் எக்செல்லின் வசதி


தற்போது சசேவ இன்கீழ் வரிசெலுத்தவோர் அனைவரும் GSTR 9 எனும் படிவத்தில் சமர்ப்பித்திடும் ஆண்டு அறிக்கையானது ஏற்கனவே சமர்ப்பித்திருக்கும் GSTR 2A எனும் படிவத்தில் குறிப்பிடும் தொகையுடன் சரிகட்டுதல் என்பது மிகப்பெரிய போராட்டமாக உள்ளது இவ்வாறான சிக்கலை தவிர்த்து GSTR 9 எனும் படிவத்தினை சரியாக சமர்பித்துவிட்டோம் என நிம்மதியாக திருப்தியாக இருப்பதற்காக இதுவரை இவ்வாறான நிலையில் JSON எனும் வடிவத்தில் வழங்கப்பட்டு வந்ததற்கு பதிலாக எக்செல்லில் உள்ளீட்டு வரிகளை சரிகட்டிடும் புதிய GSTR 2A படிவம் உருவாகிடுமாறு செய்யப்பட்டுள்ளது அதாவது புதிய GSTR 2A Reconciliation Excel எனும் வடிவமைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது இந்த வசதியை பயன்படுத்தி கொள்வதற்காக GST portal எனும் தளத்திற்குள் உள்நுழைவுசெய்திடுக அதில் Return Dashboard > Month > Auto Drafted GSTR2A > என்றவாறு வாய்ப்புகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக பின்னர் விரியும் திரையின் Download எனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் புதிய வாய்ப்புகளின் திரையில் Generate Excel File எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இது உருவாவதற்காக 20நிமிடம் எடுத்துகொள்ளலாம் அதன்பின்னர் Click Here to Download Excel என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நம்முடைய GSTR 2A Reconciliation Excel வடிவமைப்பு கோப்பானது பதிவிறக்கம் ஆகிவிடும் இதனுடைய பணித்தாட்களை நகலெடுத்து நாம் தயார் செய்துள்ள GSTR (Input) எனும் பணித்தாளில் ஒட்டிடுக உடன் GSTR எனும் படிவத்தை சமர்ப்பிக்காதவர்களின் பட்டியல் ,சசேவ மதிப்புடன் GSTR எனும் படிவத்தை சமர்ப்பித்த ஆனால் உள்ளீட்டு வரிவரவு எடுக்காதவர்களின் பட்டியல், GSTஇல் குறைவாக சசேவரி செலுத்திய GSTR எனும் படிவத்தை சமர்ப்பித்த வர்களின்பட்டியல், GSTஇல் கூடுதலாக சசேவரி செலுத்திய GSTR எனும் படிவத்தை சமர்ப்பித்த வர்களின் பட்டியல் , ஒட்டுமொத்த சாராம்ச பட்டியல் அதில் நாம் உள்ளீட்டு வரிவரவுஎடுத்ததற்கும் இணையத்தின் வாயிலாக நாம் GSTR 2A தரவினை சரிகட்டஎடுத்த நடவடிக்கைஆகயவை பட்டியல்களாக விரியும் இவைகளை கொண்டு ஒப்பீடுசெய்து GSTR 9 எனும் படிவத்தில் தேவையானவாறு சரிசெய்து சமர்ப்பித்திடலாம்

வியாழன், 14 மே, 2020

நிறுவனங்களில் நியமிக்கப்படும் ஒவ்வொரு இயக்குநரும் கட்டாயமாக KYC எனும் படிவத்தினை MCA வலைதளத்தில் சமர்ப்பிக்கவேண்டும்


நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் (MCA) ஆனது நிறுவனங்கள் (இயக்குநர்களின் நியமனம் மற்றும் தகுதி) மூன்றாம் திருத்த விதிகள், 2019 (படிவம் DIR-3 KYC / படிவம் DIR-3 KYC WEB ஐ தாக்கல் செய்தல்) எனும் புதிய திருத்தத்தை (இயக்குநர்களின் நியமனம் மற்றும் தகுதி ) விதி, 2014 இல் கடந்த ஜூலை 25, 2019.இலிருந்து நடைமுறைக்கு வருமாறு அறிமுகப்படுத்தியுள்ளது இந்த திருத்தங்களின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு; இயக்குநர் அடையாள எண் (Director Identification Number (DIN))பெற்றுள்ள ஒவ்வொரு தனிநபரும் ஒரு நிதியாண்டின் மார்ச் 31 ஆம் தேதி வரை, அந்த நிதியாண்டிற்கான DIR-3-KYC என்ற மின்-படிவத்தை அடுத்த நிதியாண்டின் செப்டம்பர் 30 இற்குள் அல்லது அதற்கு முன்னதாக மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆயினும், ஏற்கனவே எந்தவொரு முந்தைய நிதியாண்டு தொடர்பாக மின்-படிவம் DIR-3 KYC ஐ சமர்ப்பித்த எந்தவொரு இயக்குநரும், அடுத்த நிதியாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் இது தொடர்பாக வலைபடிவ DIR-3 KYC-WEB ஐ இணையத்தின்மூலம் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, எந்தவொரு தனிநபருக்கும் குறிப்பிட்ட நிதியாண்டில் புதிய DIN எண் கிடைத்தால், அவர் / அவள் உடனடியாக அடுத்த நிதியாண்டின் செப்டம்பர் 30 அல்லது அதற்கு முன்னதாக மினனு-படிவம் DIR-3 KYC யை சமர்ப்பிப்பார்கள், அதன்பிறகு அவர் / அவள் வலைபடிவம் DIR-3 KYC WEB ஐ ஒவ்வொரு நிதியாண்டிற்கும் அடுத்த நிதியாண்டு செப்டம்பர் 30 க்குள் சமர்ப்பித்திடவேண்டும். இந்த புதிய வலை படிவம் DIR-3 KYC WEB என்பது இயக்குநர்கள் நடைமுறையில் எளிதாக பின்பற்றிடுவதற்காக MCA ஆல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அவர்கள் ஏற்கனவே தங்களுடையKYC ஆவணங்களை மின்னனு-படிவ DIR-3 KYC இல் முந்தைய நிதியாண்டில் சமர்ப்பித்துள்ளனர், அதனால் இந்த புதிய வலை படிவத்திற்கு புதியதாக எந்தவித இணைப்பு ஆவணங்களும் தேவையில்லை அல்லது அது தொடர்பு விவரங்களின் OTP சரிபார்ப்பு என்தும் தேவையில்லை , அதனோடு எந்தவொரு தொழில்முறை சான்றிதழ் / சான்றளிப்பு ம் தேவையில்லை.என்ற கூடுதல் தகவல்களையும் மனதில் கொள்க மேலும், ஒரு நபர் தனது தனிப்பட்ட செல்லிடத்து பேசி எண்ணை அல்லது மின்னஞ்சல் முகவரியை தனது DINதகவல்களின் தரவுகளில் புதுப்பிக்க விரும்பினால், அவர் / அவள் மின்னணு படிவம் DIR-3 KYCயை மட்டும் சமர்ப்பிப்பதன் மூலம் புதுப்பிக்க வேண்டும். இது ஒவ்வொரு நிதியாண்டிலும் செப்டம்பர் 30 அல்லது அதற்கு முன்னர் DIN வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் செய்ய வேண்டிய புதிய இணக்கமாக இருக்கும். இவ்வாறான நடைமுறை செயல்படுத்தபட்ட பின்னர் இந்த வலைபடிவம் DIR-3 KYC WEB ஐ ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்காத இயக்குநரின் DIN எண்ணானது செயலிழக்கம் செய்யப்படும் மேலும் இவ்வாறு தவறிய நபரின்மீது அபாரத தொகை ரூ 5,000./- மட்டும் விதிக்கப்படும்

புதன், 13 மே, 2020

மீச்சிறிய சிறிய நடுத்தர நிறுவனங்களின்(MSME)உதவிக்கு கணக்குபதிவியலிற்கும் பொருட்களின் பட்டியல் தயாரிப்பதற்குமான கட்டணமில்லாத மென்பொருள்


ஜூலை2017 இலிருந்துசசேவ(GST)நடைமுறைபடுத்தியதால் MSMEஎன சுருக்கமாக அழைக்கப்படும் மீச்சிறு சிறு நடுத்தர நிறுவனங்கள் வரிசெலுத்துவது அதற்கான அறிக்கைகளை குறிப்பிட்ட கால இடைவெளியல் சமர்ப்பிப்பது பொருட்களை பயனாளர்களுக்கு அல்லது வேறு எங்கு அனுப்பினாலும் அதனோடுகூடவே பொருள்பட்டியலை உருவாக்கி அனுப்புவது என மிக அதிகமாக அலைகழிக்கப்பட்டு தங்களுடைய வழக்கமான பணியுடன் இந்த கூடுதல் பணிகளையும் சேர்த்து செய்யவேண்டியிருந்ததால் மிகவும் சோர்வுற்றனர் இந்நிலையில் இவர்களுடைய இவ்வாறான கூடுதல் பணிகளை எளிதாக்கும் பொருட்டு சசேவ மன்றமானது (GSTCouncil)MSMEநிறுவனங்கள் தங்களுடைய கணக்கு பதிவியலை சசேவ(GST)இற்கு ஏற்றவாறு பதிவுசெய்து பராமரித்திடவும் பொருட்களை மற்ற இடங்களுக்கு அனுப்பிடும்போது அதற்கான விலைபட்டியலை மிகவும் சரியாக உருவாக்கிடவும் கட்டணமில்லாத புதிய Free Accounting & Billing Software எனும் மென்பொருளை வெளியி்ட்டுள்ளது இதனை கொண்டு ஒரு நிதியாண்டின் விறபணை வருமானம் 1.5 கோடிக்கு மிகாத MSME நிறுவனங்கள் தங்களின் அன்றாட வியாபார நடவடிக்கையின் ஒருபகுதியான கணக்குபதிவேடுகளைசசேவ(GST)இற்கு ஏற்றவாறு பராமரித்தல் பொருட்களுக்கான விலைபட்டியல் தயார்செய்தல் இவைகள் சேர்ந்த சசேவரியை மிகச்சரியாக கணக்கிடச்செய்து தேவையான படிவங்களை குறிப்பிட்ட காலகெடுவிற்குள் தாயர்செய்து சமர்ப்பிக்க உதவுகின்றது இதனை பயன்படுத்தி கொள்ள விழையும் MSME நிறுவனங்கள் GST இன் இணையதளபக்கத்திற்கு சென்று Downloads > Accounting and Billing Software என்றவாறு வாய்ப்புகளை செயல்படுத்தி பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க மேலும் இது தொடர்பான விவரங்களையும் எவ்வாறு செயல்படுத்தி பயன்படுத்தி கொள்வது என அறிந்துகொள்ளவும் விழைபவர்கள் https://tutorial.gst.gov.in/userguide/taxpayersdashboard/index.htm#t=manual_accountingsoftware.htm ,https://tutorial.gst.gov.in/userguide/taxpayersdashboard/ index.htm#t=FAQs_Accountingsoftware.htm எனும்இணையமுகவரிக்கு அதற்கான ஆவணங்களை பதிவிறக்கம் செய்து படித்து அறிந்து பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது

செவ்வாய், 12 மே, 2020

ஊதிய சாதாரணபங்குகள்(Sweat equity shares )ஒரு அறிமுகம்


ஒரு நிறுமத்தின் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபடும் , ஊழியர்கள் நிறுவனத்தை நன்றாக வழிநடத்தி செல்லும் இயக்குநர்கள் ஆகியோர் அந்நிறுமம் வெற்றிபெறுவதற்காக தங்களின் அறிவையும் ஆற்றலையும் வழங்கியது அல்லது தங்களுடைய அறிவுசார் சொத்துரிமைகளின் தன்மையில் கிடைக்கக்கூடிய விளைவுகளின் உரிமைகளை அந்நிறுமத்திற்கு வழங்கியது அல்லது அந்நிறுமத்தின் மதிப்பினை கூட்டியது ஆகிய அவர்களின் பல்வேறு சேவைகளுக்கு வெகுமதி அளிப்பதன் மூலம் அவர்களை அந்த நிறுமத்திலேயே இருக்குமாறு தக்க வைத்துக் கொள்ளவும் அவர்களை கௌரவிக்கும் பொருட்டும் இவ்வாறான ஈடு செய்யமுடியாத பணிகளுக்கு இணைையாக ரொக்கமாக வழங்காமல் அதற்கு பதிலாக நிறுமத்தின் சாதாரண பங்குகளை தள்ளுபடி விலையில் வழங்குவதையே ஊதிய சாதாரணபங்குகள்(Sweat equity shares ) என அழைக்கப்பெறும் அதாவது அவர்கள் அளித்த பங்களிப்புக்கு பதிலாக சலுகைவிலையில் அந்நிறுமத்தின் சாதாரணபங்குகளை வழங்குவதன் மூலம் அவர்களின் உழைப்பிற்கான பரிசாக அல்லது வெகுமதியாக ஊதிய சாதாரணபங்குகள் அளிக்கிப்படுகின்றன. இவ்வாறான பங்குகளை வழங்குவதற்காக முதலில் அந்நிறுமத்தின் இதற்காக சிறப்பு தீர்மாணம் நிறைவேற்றியிருக்கவேண்டும் .அடுத்து பங்கு பரிவர்த்தனை ஆணையத்தின்(SEBI)வழிகாட்டுதல்களின் படி இருக்கவேண்டும். இந்த பங்குகளின் மதிப்பானது மேலாண்மை அலுவலர்களுக்கு வழங்கபெறும் ஊதிய உச்சவரம்பிற்குமிகாமல் இருக்கவேண்டும். இவ்வாறான சலுகைவிலையில் வழங்கபெறும் பங்குகளின் மொத்த மதிப்பானது ஒவ்வொருமுறையும் 15 சதவிகித பங்குதொகைக்கு மிகாமல் இருக்கவேண்டும் ஆயினும் ஒட்டுமொத்தமாக சாதாரணபங்குகளின் 25சதவிகிதத்திற்கு மேல் மிகாமல் இருக்கவேண்டும் இந்த பங்குவெளியிட்டில் பங்குகளின் விலையானது பதிவுபெற்ற மதிப்பீட்டாளரின் பரிந்துரைக்கின்ற தள்ளுபடிக்கு மிகாமல் இருக்கவேண்டும் இவ்வாறு வழங்கபெறும் சாதாரண பங்குகளை இவர்கள் மூன்றுஆண்டுகாலத்திற்கு பங்குசந்தையில் விற்பணை செய்திடக்கூடாது .இவ்வாறு பங்குகளை வெளியிடுவதற்காக சிறப்பு தீர்மாணம் நிறைவேற்றப்பட்டு ஒருவருடத்திற்குள் இந்தபங்குகள் வழங்கப்பட்டுவிடவேண்டும் அதற்குமேல் எனில் வேறு தீர்மாணம் நிறைவேற்றிதான் செயல்படுத்தவேண்டும் புதியதாக துவங்கிடும் நிறுவனங்கள் முதல் ஐந்துஆண்டுகளுக்கு இவ்வாறான பங்குகளை வெளியிடவேக்கூடாது இந்த வகையான பங்குகளை வெளியிடும் நிறுவனமானது இந்த வகையானபங்கு வெளியீட்டினை படிவம் எண் SH.3 இல் பதிவுசெய்து ஆவணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும் என்பனபோன்ற பல்வேறு சட்டதிட்டங்களை நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 54 இல் குறிப்பிட்டவாறு பின்பற்றி இந்த ஊதிய சாதாரணபங்குகளை(Sweat equity shares ) வெளிடலாம்

திங்கள், 11 மே, 2020

காப்புரிமை யை பதிவுசெய்தல்


நம்முடைய புத்தாக்கங்களையும் புதிய கண்டுபிடிப்புகளையும் இந்திய காப்புரிமைச்சட்டம் 1970 இன் கீழ் காப்புரிமைச்சட்ட அலுவலகத்தில் பதிவுசெய்து கொண்டால் அந்த புத்தாக்கங்களையும் புதிய கண்டுபிடிப்புகளையும் பயன்படுத்துபவர்கள் அதற்காக ராயல்டி தொகையை அவ்வாறு பதிவுசெய்து கொண்டவர்களுக்கு வழங்குவார்கள் இவ்வாறு பதிவுசெய்வதற்காக பின்வரும் படிமுறைகளை பின்பற்றிடுக படிமுறை1. இவ்வாறான புத்தாக்கங்கள் அல்லது புதிய கண்டுபிடிப்புகள் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டுள்ளதாவென காப்புரிமை தேடுதல் பணியை செயற்படுத்த வேண்டும் இதற்காக தனியாக தொழில்முறைவல்லுநர்களிடம்தேடுவதற்கான கட்டணத்தினை வழங்கினால் போதும் அவ்வல்லுநர்களே தேடிபார்த்து காப்புரிமை பதிவு செய்ய-வில்லையெனும் சான்று வழங்குவார்கள் படிமுறை2 புத்தாக்கத்தின் அல்லது புதிய கண்டுபிடிப்பின் காப்புரிமை பதிவுசெய்வதற்காக தனியான விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து இந்திய காப்புரிமைச்சட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும் படிமுறை3 புத்தாக்கத்தின் அல்லது புதிய கண்டுபிடிப்பின் காப்புரிமைக்கான அறிக்கை (patentability report)காப்புரிமை பதிவுஎதுவும் செய்யப்படவில்லை எனும் தேடியஅறிக்கை, தேவையான இணப்பு ஆவணங்கள் ஆகியவற்றை தனியாக தொழில்முறைவல்லுநர்கள் தக்க கட்டணத்தை பெற்று கொண்டு தயார்செய்து தருவார்கள் இவவற்றை காப்புரிமை கோரும் விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்கவேண்டும் படிமுறை4மேலே கூறியவாறு புத்தாக்கத்தின் அல்லது புதிய கண்டுபிடிப்பின் காப்புரிமை பதிவுசெய்ய கோரி சமர்ப்பித்த விண்ணப்பம் காப்புரிமைக்கான அறிக்கை காப்புரிமை தேடிய அறிக்கை இதர தேவையான ஆவணங்கள் ஆகியவற்றை இந்திய காப்புரிமைச்சட்ட அலுவலகத்தில் முழுவதுமாக நன்குஆய்வுசெய்திடுவார்கள் படிமுறை5 காப்புரிமையை பதிவுசெய்யுமாறு கோரிய புத்தாக்கத்தினை அல்லது புதிய கண்டுபிடிப்பினை வேறுயாரும் காப்புரிமையாக பதிவுசெய்யவில்லை என சரிபார்த்தபின்னர் மற்ற ஆவணங்களும் சரியாக இருக்கின்றதா காப்புரிமை பதிவுசெய்வதற்கான அத்தியாவசிய கட்டணம் சரியாக செலுத்தப்பட்டுள்ளதாவென சரிபார்த்து இறுதியாக அனைத்தும் சரியாக இருந்தால் நமக்கு நம்முடைய புத்தாக்கத்தின் அல்லது புதிய கண்டுபிடிப்பின் காப்புரிமையை பதிவுசெய்து அதற்கான காப்புரிமை சான்றிதழை வழங்குவார்கள் இந்த காப்புரிமையானது குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் வரையில் செல்லுபடியாகும் இவ்வாறு காப்புரிமை பதிவுசெய்து காப்புரிமை சான்று பெறுவது அதிக செலவுபிடிக்ககூடியது , ஆனால் அறிவுசார் சொத்துரிமை, சட்டப் பாதுகாப்பு, சொத்து உருவாக்கம் என்பன போன்ற பெரிய நன்மைகளைக் கொண்டுள்ளதுஎன்ற அடிப்படை செய்திகளை மனதில் கொண்டு நம்முடைய புத்தாக்கத்திற்க அல்லது புதிய கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை பெற்றிடுக என பரிந்துரைக்கப்படுகின்றது

ஞாயிறு, 10 மே, 2020

நிறுமங்களின் சட்டத்தின்படிபதிவுசெய்யப்பட்ட நிறுமத்தினை பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுவனமாக மாற்றியமைத்திடலாம்


தற்போது LLPஎன சுருக்கமாக அழைக்கப்பெறும் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை(Limited Liability Partnerships)நிறுவனத்தினை இந்திய நிறுமங்களின் சட்டம் 2013 இல் பதிவுசெய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது இதன் வாயிலாக நிறுமத்தின் வரையறுக்கப்பட்ட பொறுப்பு என்ற கருத்தமைவின் கீழ் கூட்டாண்மை நிறுவனத்தினை பதிவுசெய்து வியாபார நடவடிக்கைகளை எளிதாக செயல்படுத்தலாம் அதாவது கூட்டாண்மை நிறுவனமானது நிறுமங்களுக்கான அனைத்து வசதி வாய்ப்புகளை இயக்குநர்களின் கூட்டம் நடத்தவேண்டும்என்ற நிபந்தனைகளை பின்பற்ற தேவையில்லைமேலும் அத்தியாவசிய மின்னனு படிவங்களை சமர்ப்பிக்க தேவையில்லை அதுமட்டுமல்லாது நிறுமமானது இலாப பகிர்வான டிவிடென்டு வழங்கும்போது அதற்கான வரி செலுத்ததேவையில்லை மிகமுக்கியமாக MATகுறைந்த பட்ச பதிலீ்ட்டு வரி செலுத்ததேவையில்லை என்பன போன்ற கூட்டாண்மை நிறுவனத்தின் சலுகைகளையும் நிறுமத்தின் மற்ற சலுகைகளையும் செயல்படுத்தி பயன்பெறலாம் அதனால் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் LLP நிறுவனமாக மாற்றியமைத்து கொள்வது நல்லது அல்லவா.இவ்வாறு மாற்றியமைப்பதற்காக தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமத்தின் அனைத்து உறுப்பினர்களும் புதிய கூட்டாண்மை நிறுமத்தின் கூட்டாளிகளாக கண்டிப்பாக இருக்கவேண்டும் கடைசியாக சமர்ப்பித்த வருமானவரி அறிக்கையை நிறுமங்களின் பதிவாளர்களிடம்(ROC)சமர்ப்பித்திடவேண்டும் நிறுமத்தின் கடனாளிகள் அனைவரும் இந்த மாறுதலை ஏற்றுகொள்ளவேண்டும் எந்தவொரு குற்ற நடவடிக்கக்கான தண்டனையும் நிறுமத்திற்கு விதித்திருக்ககூடாது புதியநிறுமமாக பதிவுசெய்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டிற்கான இருப்பிநிலைகுறிப்பு இலாபநட்ட கணக்கு வருமான வரி அலுவலகத்தில் சமர்ப்பித்திருக்கவேண்டும் இவ்வாறு கூட்டாண்மை நிறுவனமாக மாற்றிட விரும்பும் நிறுமமானது நிறுமங்களின் சட்டம் 1956/2013. பிரிவு 25 அல்லது 8 இன் கீழ் பதிவுசெய்த நிறுமமாக இருக்ககூடாது இந்த நிறுமத்திற்கு தேவையான கடன் அல்லது இதர பணபரிமாற்றத்திற்காக நிறுமத்தின் சொத்தகளின்மீது எந்த வில்லங்கமும் பதிவுசெய்து இருக்ககூடாது ஆகிய மேலேகூறிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு பதிவுசெய்யப்பட்ட நிறுமத்தினை பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுவனமாக மாற்றியமைத்திடலாம்(LLP)

சனி, 9 மே, 2020

சட்டப்படியான பெயர்(Legal Name) ,வியாபாரபெயர்(Trade Name) ஆகிய இரண்டிற்கும் இடையேயான வேறுபாடுகள்


வியாபார பெயர் என்பது ஒரு நிறுவனத்தின் உற்பத்தி செய்யப்படும் பொருள் அல்லது சேவை பற்றி பொதுமக்கள் அறிந்து கொண்டிருக்கின்ற பிரபலமான பெயராகும் .அதாவது நிறுவனம் உற்பத்தி செய்கின்ற அல்லது அளிக்கின்ற சேவையை பற்றிய பொதுமக்களிடையே கிடைக்கும் புகழ் பெற்றஅல்லது நம்பிக்கை பெற்ற பெயரே வியாபார பெயராகும் சட்டப்படியான பெயர் என்பது அவ்வியாபார நிறுவனத்தின் நடவடிக்கைகளை அரசுத்துறைகளாலும் நீதிமன்றங்களாலும் அறியப்படுகின்ற பெயராகும் அதாவது ஒரு அரசின் ஆவணங்களில் பதிவுசெய்யப்படுகின்ற பிற்காலத்தில் எந்தவொரு பிரச்சினைகளையும் தீர்வுசெய்வதற்கான ஆதாராமாக இருக்கின்ற பெயரே சட்டப்படியான பெயராகும் உதாரணமாக இன்டிகோ என்பது விமான சேவை செய்கின்ற நிறுவனத்தின்பெயர் என பொதுமக்கள் அனைவரும் அறிந்து வைத்திருக்கின்றனர் இந்த பெயரே வியாபார பெயராகும் அதற்கு பதிலாக நிறுவனங்களின் விவாகாரத்துறை பதிவேட்டில் இந்த இன்டிகோ எனும் விமான சேவை செய்கின்ற நிறுவனத்தின் பெயராக Inter Glope Aviation Ltd என பதிவுசெய்யப்பட்டு செயல்படுகின்ற பெயரே சட்டப்படியான பெயராகும் அவ்வாறே தமிழ்நாடுமுழுவதும் தலப்பாகட்டு என்ற உடனே அனைவருக்கும் பிரியானி என்ற உணவு நினைவில் தோன்றிடும் இந்த பெயர் வியாபார பெயராகும் ஆனால் தமிழகம் முழுவதும் நகரங்களில் அந்த பிரியானி செய்கின்ற நிறுவனத்தின் பெயர் வெவ்வேறாக இருக்கும் என்ற செய்தியை மனதில் கொள்க . இந்த சட்டப்படியான பெயரை பற்றி பொதுமக்களுக்கு அவ்வளவாக தெரியாது ஆனால் அரசு ஆவணங்களில் மட்டுமே பதிவுசெய்யப்பட்ட நிறுவனத்தின் பெயராக இதனைஅறிந்து கொள்ளமுடியும் இவ்விரண்டிற்குமான வித்தியாசத்தை நன்கு ஐயம்திரிபற அறிந்துதெரிந்து கொண்டு நிறுவனங்களின் விவகாரத்துறை, சரக்குசேவைவரிதுறை , வருமானவரித்துறை போன்ற அரசுத்துறைகளில் தேவையான இடத்தில் தேவையானவாறு பெயரை மிகச்சரியாக பதிவுசெய்து கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது

வெள்ளி, 8 மே, 2020

Pvtநிறுவனத்தை துவக்கியபின் தொடர்ந்து செயல்படுத்த வேண்டிய செயல்கள்


நமக்கு தேவையான இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகணத்தை அதற்கான கடைகளிலிருந்து வாங்கிவிட்டால் மட்டும் போதுமா அதனை தொடர்ந்து பயன்படுத்தி கொள்வதற்காக அதனை பதிவுசெய்யவேண்டும் காப்பீடு செய்திடவேண்டும் அவ்வப்போது பணிமனையில் விட்டு சரியாக பழுதுபார்ப்பு பராமரிப்பு பணிகளை செய்து கொள்ளவேண்டும் மேலும் அவை இயங்குவதற்கு தேவையான எரிபொருளை அவ்வப்போது நிரப்பி கொண்டே இருக்கவேண்டும் என்பன போன்ற அனைத்து பணிகளையும் தொடர்ந்து செயல்படுத்தி கொண்டே இருந்தால்தான் அவற்றை வாங்கியதால் நமக்கு பயன்கிடைக்கும் அல்லவா அதேபோன்று Pvtஎன அறியப்படும் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தை பதிவுமட்டும் செய்துவிட்டால்போதாது அவ்வாறு பதிவுசெய்து புதிய நிறுமத்தை துவக்கியவுடன் செய்யவேண்டிய பின்வரும் செயல்களை தொடர்ந்துசெய்து கொண்டே இருந்தால்தான் நிறுவனம் நன்கு இயங்கும் நிறுவனத்தை பதிவுசெய்த 30 நாட்களுக்குள் முதன்முதலான இயக்குநர்களின் குழுக்கூட்டம் கூட்டப்படவேண்டும் பதிவுசெய்த 30 நாட்களுக்குள் இயக்குநர்களின் குழுவால் நிறுவனத்திற்கான தணிக்கையாளரை நியமனம்செய்திடவேண்டும் இயக்குநர்களின்குழுவில் உள்ள ஒவ்வொரு இயக்குநரின் தகுதி அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளில் அவர்களின் ஈடுபாடு போன்ற விவரங்களை முதன்முதலான இயக்குநர்களின் குழுக்கூட்டத்தில அறிவிப்பு செய்து அதனை MBP-1 , DIR-8 ஆகிய படிவங்களின் வாயிலாக நிறுமங்களின் வி்வாகாரத்துறை அமைச்சகத்தில் சமர்ப்பித்திடவேண்டும் பதிவுசெய்த 30 நாட்களுக்குள் அந்நிறுவனத்தின் பெயரில் ஏதேனும் ஒருவணிக வங்கியில் நடப்புகணக்கு ஒன்று துவங்கிடவேண்டும் அவ்வாறான நிறுவனத்தின் பெயரில் இருக்கும் நடப்பு கணக்கில் அந்நிறுவனத்தினை துவங்குவதற்காக பதிவுசெய்து கொண்ட பங்கு முதலீட்டாளர்கள் அனைவரும் தாம் ஏற்றுகொண்ட முதலீட்டு தொகை அனைத்தையும் 60 நாட்களுக்குள் செலுத்திடவேண்டும் அவ்வாறு முதலீட்டாளர்களால் செலுத்திடும் பங்குத்தொகைக்கான பங்கு சான்றிதழை பங்குதாரர் ஒவ்வொருவருக்கும் அந்நிறுமத்தினை பதிவுசெய்த 60 நாட்களுக்குள் வழங்கவேண்டும் அவ்வாறு பங்குசான்றிதழ் வழங்கிடும்போது அதற்கானமுத்திரை கட்டணத்தினை அரசிற்கு 30 நாட்களுக்குள் செலுத்திடவேண்டும் தொடர்ந்து படிவம் எண் Inc 20A வாயிலாக நிறுவனத்தை பதிவுசெய்த180 நாட்களுக்குள் அந்நிறுவனமானது தம்முடைய வியாபார நடவடிக்கைகளை துவங்கிவிட்டதற்கானஅறிவிப்பு ஒன்றினை செய்திடவேண்டும் அந்நிறுமத்தின் முதன்முதலான பொதுப்பேரவை கூட்டத்தினை அந்நிறுமம் துவங்கிய முதலாம் ஆண்டு முடிந்த 9 மாதத்திற்குள் கூட்டவேண்டும் அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டிலும் பொதுப்பேரவை கூட்டத்தினைகூட்டவேண்டும் நிறுமத்தின் அளவிற்கு ஏற்ப ஒவ்வொரு காலண்டர் ஆண்டிலும் குறைந்தபட்சம் நான்கு இயக்குநர்களின் குழுக்கூட்டம் ஒருபொதுப்பேரவை கூட்டம் கண்டிப்பாக கூட்டுவதை கடைபிடிக்கவேண்டும் பொதுப்பேரவை கூட்டம் முடிந்த 30 நாட்களுக்குள் AOC-4எனும் படிவத்தையும் நிதிநிலை அறிக்கையை 60நாட்களுக்குள் MGT-7 எனும் படிவத்தையும் நிறுமங்களின் விவகாரத்துறை அமைச்சகத்தி்ல் சமர்ப்பித்திடவேண்டும் மேலும் நிறுமங்களின் சட்டம் 2013 இல் குறி்ப்பிட்டவாறான சட்டப்படியான பதிவேடுகளையும் ஆவணங்களையும் கண்டிப்பாக பராமரித்திடவேண்டும் நிறுவனத்திற்கென தனியான stamp, common seal ஆகியவற்றை உருவாக்கி பராமரித்திடவேண்டு்ம் அவ்வாறே நிறுமத்திற்கென தனியான பதிவுஅலுவலகத்தை கண்டிப்பாக பராமரித்திட வேண்டும் மேலும் அப்பதிவுஅலுவலகத்தில் அந்நிறுமத்தின் பெயரில்letter heads, Memorandum & Articles of Association of Company, ஆகியவற்றை அச்சிட்டு வைத்து கொள்ளவேண்டும்

வியாழன், 7 மே, 2020

பல்லடுக்கு போக்குவரத்து இயக்குபவராக(Multi modal transport operator ) பதிவுசெய்தல்


தற்போது வியாபார நிறுவனங்களில்உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் அதன் பயனாளிகளுக்கு கொண்டு சேர்ப்பதற்காக இடையில் பல்வேறு பொருள் போக்குவரத்தாளர்களை பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது அவ்வாறான பொருள்போக்குவரத்தினை செயல்படுத்துபவர் சாலைவழிபோக்குவரத்து, தொடர்வண்டி போக்குவரத்து, விமானத்தின் வழி போக்குவரத்து, கப்பல் வழி போக்கு வரத்து என ஒன்றிற்கு மேற்பட்ட பல்வேறுவழிமுறைகளை பின்பற்றி பொருட்களை உற்பத்தியாளர்களிடமிருந்து பயன்பாட்டாளர்களுக்கு உள்நாட்டிற்குள் அல்லது நாடுகளுக்கு இடையேகொண்டு சென்று சேர்த்திடும் முகவர் பணியாற்றிடும் நிறுவனத்தினை பல்லடுக்கு போக்குவரத்து இயக்குபவர் (Multi modal transport operator) என அழைக்கப்படுவார் இவ்வாறான ஒன்றிற்குமேற்பட்ட வழிமுறைகளில் பொருட்களை கொண்டுசெல்லும் பணியாற்றுகின்ற பல்லடுக்கு போக்குவரத்து இயக்குபவர்கள் அனைவரும் Multimodal Transportation of Goods Act, 1993 எனும் சட்டத்தின் கீழ் கண்டிப்பாக பதிவுசெய்து கொள்ளவேண்டும் இந்த சட்டத்தின் படி பதிவுசெய்து கொள்ள ஒரு நிறுமமாக அல்லது கூட்டாண்மை நிறுவனமாக அல்லது தனிநபர் நிறுமமாக இருக்கவேண்டும் ஆண்டு வருமானம் ரூ.50 இலட்சத்திற்கு மேல் அல்லது பங்கு முதலீட்டு தொகை ரூ.50 இலட்சத்திற்கு மேல் இருக்கவேண்டும் இரு வெவ்வேறு முகவர்கள் வெவ்வேறு இடங்களில் அல்லது வெவ்வேறு நாடுகளில் இந்த பல்லடுக்கு பொருள் போக்குவரத்து கையாளும் பணிக்காக ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கவேண்டும் ஆகியவையே அடிப்படை நிபந்தனைகளாகும் இவ்வாறு பதிவுசெய்வதற்கு தேவையான ஆவணங்களாக கடந்தமூன்றாண்டுகளில் ஈட்டப்பட்டவருமான சான்றிதழும் பங்குமுதலீட்டின் சான்றிதழும் பட்டயகணக்கரின் கையொப்பத்துடன் இருக்க-வேண்டும் மேலும் கடந்த மூன்றாண்டுகளில் சமர்ப்பித்த நிறுவனத்தின் வருமான வரிபடிவங்களின் முதல் பக்கங்களின் நகலை சமர்ப்பிக்கவேண்டும் கடந்த மூன்றாண்டுகளின் நிறுவனத்தின் தணிக்கை சான்றிதழ்கள், பல்லடுக்கு பொருள் போக்குவரத்து கையாளும் பணிக்கான முகவர்களாக ஏற்படுத்தி கொண்ட ஒப்பந்த நகல், நிறுமமாக அல்லது கூட்டாண்மை நிறுமமாக பதிவுசெய்து கொண்ட பதிவுசான்றிதழ், முதன்மைஆவணம் , நிறுமத்தின் இயக்குநர்கள் அல்லது கூட்டாளிகள் ஆகியோர்களின் இந்திய முகவரிகளுடனான விவரங்கள் , பல்லடுக்கு பொருள் போக்குவரத்து கையாளும் பணிக்கான அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களின் பெயர்பட்டியல் இந்தMTD பணியை செயல்படுத்திடுவதற்கான பொறுப்பேற்பு கடிதம் நிறுவனத்தின் முத்திரைத்தாளில் பொறுப்பு அலுவலரின் கையொப்பம் ஆகிய ஆவணங்கள் தேவையாகும் மேலே கூறிய நிபந்தனைகளும் ஆவணங்களும் தயாராகவும் சரியாகவும் இருந்தால் www.digishipping.gov.in எனும் இணையதளபக்கத்திற்கு செல்க அங்கு E-Governance எனும் தாவியின் திரைக்கு செல்க அதன் இடதுபுறத்தில் MTO Registration (New License) என்பதை தெரிவுசெய்து கொள்க தொடர்ந்து MTO Registration Form எனும் படிவத்திற்கான பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதில் ஏழு தாவி-பொத்தான்கள் உள்ளன அவைகளை ஒவ்வான்றாக சொடுக்குதல் செய்தவுடன் விரியும் திரையில் தேவையானவிவரங்களை உள்ளீடு செய்து கொள்க இவ்வாறான அனைத்து விவரங்களும் உள்ளீடுசெய்து முடித்தவுடன் Registration Fees எனும் பொத்தானை சொடுக்குதல் செய்து தேவையானகட்டணத்தினை இணையவங்கி கணக்கின் வாயிலாக செலுத்திடுக அனைத்தும் சரியாக இருக்கின்றது எனில் Generate Application Number எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நமக்கான விண்ணப்ப எண் ஒன்றுஉருவாகி திரையில் தோன்றிடும் அதனை தொடர்ந்து மேலேகூறிய அனைத்து ஆவணங்களையும் ஒவ்வான்றாக பதிவேற்றம் செய்திடுக இவையனைத்தும் வெற்றிகரமாக முடிந்தபின்னர் தொடர்புடைய அலுவலகத்தில் இவைகளை சரிபார்த்து MTO பதிவுசான்றிதழை மூன்றாண்டுகளுக்கு வழங்கிடுவார்கள் இவ்வாறு MTO ஆக பதிவுசான்றிதழ் கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் இதனை ஏற்றுகொண்டதற்கான சான்றிதழ் காப்பீட்டு சான்றிதழ் நிறுவனத்தின் பதிவுஎண் ,பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களடங்கிய மாதிரி படிவத்தினை சமர்ப்பிக்கவேண்டும்

புதன், 6 மே, 2020

சரக்கு சேவைவரியின் கீழ்புதிய சஹாஜ் சுகம் அறிக்கைகள் ஒருஅறிமுகம்


ஆண்டு ஒன்றிற்கு ரூ5 கோடிக்கு மிகாமல் விற்பனைவருமானம் உடைய சிறிய வரிசெலுத்துபவர்களின் வசதிக்காக 27 ஆவது சசேவகுழுக்கூட்டத்தில் சசேவ அறிக்கை சமர்ப்பிப்பதை எளிமைபடுத்தி சஹாஜ்(SAHAJ), சுகம்(SUGAM) ஆகிய இரு வடிவங்களில் அறிக்கைகளை சமர்பித்திட்டால்போதும் எனும் எளிய வழிமுறைகள் அறிமுகபடுத்திப்பட்டுள்ளன சஹாஜ் எனும்அறிக்கை ஆண்டொன்றிற்கு விற்பணைவருமானம் ரூ5கோடிக்கு மிகாமல் இருக்கவேண்டும் மூன்றுமாதத்திற்கு ஒருமுறையானகாலாண்டு அறிக்கையை சமர்ப்பித்தால் போதும் ஆயினும் தாம் வழங்கும் பொருள் அல்லது சேவையானது B2C எனும் வகையில் அதாவது வியாபாரிகளிடமிருந்து நேரடியாக பயனாளிகளுக்கு செல்வதற்குமட்டுமானநடவடிக்கை யாக இருக்கவேண்டும் உள்ளீட்டு வரிக்கழிவு அனுமதிக்கப்படாது மின்வணிக இயக்குபவர்கள்இதில் அனுமதிக்கப்படார்கள் இவ்வாறான நிபந்தனைகளை பூர்த்தி செய்பவர் இந்த சஹாஜ் அறிக்கையை சமரிர்ப்பிக்க விரும்பினால் சசேவஇணையதளத்தில் தாம் சமர்ப்பிக்கும் அறிக்கையாக SAHAJஎனும் வகையை தெரிவுசெய்து கொள்ளவேண்டும் மேலும் தாம் சமர்ப்பிக்க விரும்புவது காலாண்டு அறிக்கையா அல்லது மாதாந்திர அறிக்கையா எனவும் தெரிவுசெய்து கொள்ளவேண்டும் மிகமுக்கியமாக இந்த வகையில் காலாண்டு அல்லது மாதாமாதம் என்றஇரண்டிற்குமிடையே மாறிகொள்ளும் வாய்ப்பானது ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமேஅனுமதிக்கப்படும் ஆயினும் சஹாஜிலிருந்து சுகம் அறிக்கைக்கு மாறிடும்போது ஆண்டிற்கு ஒருமுறைமட்டுமே என்ற வரையறை எதுவும் இல்லை என்ற செய்தியை மனதில் கொள்க சுகம் எனும் அறிக்கை விற்பணைவருமானம் ரூ5கோடிக்கு மிகாமல் இருக்கவேண்டும் B2B அல்லது B2C ஆகிய அதாவது வியாபாரியிடமிருந்து மற்றொரு வியாபாரிக்கு அல்லது வியாபாரியிடமிருந்து நேரடியாக பயனாளிகளுக்கு செல்வது ஆகிய இருவழிகளில் செயல்படுபவர்களைஇந்த வகையில் சசேவ அறிக்கையை சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுகின்றது ஆயினும் உள்ளீட்டு வரிக்கழிவு அனுமதிக்கப்-படாது மின்வணிக இயக்குபவர்கள்இந்த வசதியைபயன்படுத்தி கொள்ளமுடியாது மூன்றுமாதத்திற்கு ஒருமுறையானகாலாண்டு அறிக்கை அல்லதுமாதாந்திர அறிக்கையாகவும் சமர்ப்பிக்கலாம் மூன்றாவதாக RET-1 எனும் படிவம் இந்த படிவத்தை சமர்ப்பிக்க விரும்புவோர் தாம் வழங்கும் பொருள் அல்லது சேவையானது B2Bவியாபாரியிடமிருந்து மற்றொரு வியாபாரிக்கு செல்லும் வகையில் இருக்கவேண்டும் மேலும் உள்ளீட்டு வரிக்கழிவு அனுமதிக்கப்படும் மின்வணிக இயக்குபவர்கள்இதில் அனுமதிக்கப்படுவார்

செவ்வாய், 5 மே, 2020

சிறியவிவாயாபார நிறுவனங்களுக்கான குறைந்த செலவில் சந்தைபடுத்துதலுக்கான ஆலோசனைகள்


பல்வேறு குறைந்த திட்ட செலவுகளிலான சந்தைப்படுத்தல் உத்திகள் நம்முடைய திட்டசெலவிணங்களை அதிகரிக்கவேண்டும்என வலியுறுத்தாது, ஆனால் அவை நம்முடைய கவனத்தை ஈர்க்கும். மேலும் இதற்காக நம்முடைய நிறுவனத்தின் நிதியைமிகத்திறனுடனும், சிக்கனமான வழிகளிலும் பயன்படுத்தலாம், அதைவிட சந்தைப்படுத்தலுக்காக எவ்வளவு தொகையை நாம் ஒதுக்கீடு செய்கின்றோம் என்பது முக்கியமன்று ஆயினும் அதே அளவு திட்ட நிதியை எவ்வளவு கால அளவிற்கு நீட்டிக்க முடியும் என திட்டமிடலாம் .அவ்வாறான சிறிய வணிக நிறுவனங்களால் செயல்படுத்தகூடிய மிகச்சிறந்த குறைந்த செலவின சந்தைப்படுத்தல்களுக்கானஆலோசனைகள் பின்வருமாறு 1.தற்போதுவியாபாரஉலகில் உள்ளஎந்தவொரு நிறுவனமும் தமக்கென தனியாக இணையபக்கங்களை வைத்துகொள்ளாமல் செயல்படமுடியாதுஎன்ற மேம்பட்ட நிலையில் இயங்கிவருகின்றன பெரிய நிறுவனங்கள் எனில் அவ்வாறு தமக்கென தனியாக இணையபக்கங்களை எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என உருவாக்கி பராமரித்து கொள்ளமுடியும் சிறிய நிறுவனங்கள் அவ்வாறு அதிக செலவிடஅந்நிறுவனங்களின்பொருளாதார நிலை இடங்கொடுக்காதல்லவா அதனால் சிறியநிறுவனங்கள்கூட குறைந்த செலவில் அவ்வாறான இணைய பக்கங்களை நிறுவுகை செய்து பராமரித்திடலாம் அதாவது இணையபக்கங்களில் தம்முடைய வியாபார நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை பிளாக் என்பதன் வாயிலாக வழங்குவதற்காக பணியாளர்களை தனியாக நியமனம்செய்து தினமும் பல்வேறு செய்திகளை வெளியிடுவார்கள் அதற்கு பதிலாக வெளியிலிருந்து ஒப்பந்த பணி (Outsource) பயன்படுத்தி தம்முடைய நிறுவனத்தை பற்றிய செய்திகளை கூறும் அதேபோன்ற பிளாக்கை வெளியிடும் பணியை செயல்படுத்தி செலவினை குறைத்து கொள்க 2. தற்போது கானொளி காட்சியின் வாயிலாக தம்முடைய நிறுவனங்களை பற்றி விவரங்களை சந்தை படுத்திடுவதற்காக யூட்யூப் எனும் இணையதள பக்கத்தின் இணைப்பினை வழங்கி வாடிக்கையாளர்களை தம்முடைய இணைய பக்கங்களிலிருந்து அங்கு செல்லுமாறு அந்நிறுவனங்களதிசை திருப்பிவிடுகின்றன இது சரியான வழிமுறையன்று இதற்கு பதிலாக கட்டற்ற பயன்பாடுகளின் துனையுடன் இதே கானொளி காட்சி வாயிலாக சந்தைபடுத்துதல் நடவடிக்கைகளைபதிவுசெய்து நம்முடைய இணைய பக்கங்களிலேயே வெளியிடுவது நன்று 3. பக்கம்பக்கமாக எழுத்துகளின்மூலமான விளக்கவுரையைவிட தம்முடைய உற்பத்தி பொருளை அல்லது சேவையை பற்றிய விவரங்களை வரைகலை படத்தின் வாயிலாக நுகர்வோர்களை காட்சி படங்களாக காணுமாறு செய்வது எளிதாக அனைவரின் கவணத்தையும் ஈர்க்குமல்லவா அதனால் உரைவடிவிலான விளக்கத்திற்கு பதிலாக விளக்கவரைகலையை பயன்படுத்தி அதிலும் பொம்மை வரைகலை விளையாட்டு களின் வாயிலாக நிறுவனத்தை பற்றிய போதுமான தகவல்களை வழங்கிடுக 4. வாடிக்கையாளர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்றாக கூட்டி கட்டணமற்ற மாதிரிபொருட்களுடன்.கட்டணமற்ற சேவைகளுடன்விருந்து உபச்சாரங்களைுடன்சேர்த்து வழங்குவது எனும் நடைமுறையானது இந்நிறுவனம் எளிதாக நம்முடைய கோரிக்கையை நிறைவேற்றுகின்றார்கள் என்ற மனநிலையை வாடிக்கையாளர்களின் மனதில் உருவாகசெய்திடும் 5.ஒவ்வொரு ஆண்டும்அல்லது குறிப்பிட்ட காலஇடைவெளியில் அரசு அல்லது முகமைகள் குறிப்பிட்ட உற்பத்திபொருட்களுக்கு அல்லது சேவைகளுக்கு பரிசுபோட்டி நடத்திடுவார்கள் அதில் கண்டிப்பாக கலந்து கொண்டு பரிசகளை நம்முடைய உற்பத்தி பொருள் அல்லது சேவையானது வெற்றிபெறும்போது இலவச விளம்பரமாக தானாகவே அந்த பரிசுபோட்டியின் நம்முடைய வெற்றி செய்தியானது நம்முடைய உற்பத்தி பொருள் அல்லது சேவைக்கு கிடைக்கின்றது

திங்கள், 4 மே, 2020

சப்கா விஸ்வாஸ் (சட்டதகராறு தீர்வு )திட்டம் 2019


SVLDRS, 2019 எனசுருக்கமாக அழைக்கப்படும் SABKA VISHWAS (LEGACY DISPUTE RESOLUTION) SCHEME, 2019 எனும் புதிய சட்டத்தகராறு தீர்வுதிட்டத்தின் குறிக்கோள்களாவன: மத்திய கலால்வரி, சேவை வரிதுறைகளின் கடந்தகாலத்தில் ஏற்பட்ட சட்ட தகராறுகளை தீர்வுசெய்வதற்கான ஒரு முறைமட்டுமான நடவடிக்கை, இணக்க வரி செலுத்துவோருக்கு தன்னார்வமாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குதல். அதாவது இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் வாயிலாக அரசாங்கத்தின் அடிப்படை நோக்கம், பழைய சேவை வரி கலால்வரி ஆகியவற்றின் அடிப்படையிலான வழக்குகளில் முடக்கப்பட்டுள்ள ரூ. 3.75 லட்சம் கோடி தொகையை சச்சரவுகளிலிருந்து வியாபாரிகளைவிடுவித்து, தங்களுடைய வியாபார பணிகளை முழுமையாக தொடர அனுமதிப்பதாகும். எனவே, சேவை வரி மத்திய கலால் வரி வழக்குகள் தொடர்பான நிலுவையில் உள்ள சச்சரவுகளை தீர்வுசெய்வதற்கு அதனால் பாதிக்கப்படுபவர் அனைவரும் இந்த திட்டத்தை பயன்படுத்திகொள்ள வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது, அதனை தொடர்ந்து அவ்வாறான சச்சரவுகள் அனைத்தும் இந்த திட்டத்தின் வாயிலாக தீர்வுசெய்யப்பட்டுவிடுவதால் அனைவரும் புதிய ஜிஎஸ்டியை நடைமுறைபடுத்துவதில் அதிக கவனம் செலுத்த முடியும்அல்லவா. இந்த தீர்வு திட்டத்தின்கீழ் இரண்டு அடிப்படையான முக்கிய கூறுகள் உள்ளடங்கியுள்ளன: 4.1.தகராறுகளுக்கான தீர்வு: மத்திய கலால்வரி, சேவை வரிஆகியவற்றின்கீழ் தகராறுகள் ஏதேனும் ஏற்கனவே உருவாகி பல்வேறு மேல்முறையீட்டு மன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சுமுகமான தீர்வினை கொண்டு அதனை அறவே கைவிடுவது. 4.2.பொது மன்னிப்புதிட்டம் : இதன்படி வரி செலுத்துவோர் நிலுவையில் உள்ள வரிகளில் குறிப்பிட்ட சதவீதத்தை செலுத்துவதற்கும் சட்டத்தின் கீழ் வேறு எந்தவொரு விளைவுகளிலிருந்து விடுபடுவதற்கும் ஒரு முறைமட்டுமான வாய்ப்பை வழங்குகின்றது. இந்த திட்டத்தின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சம் என்னவென்றால், இது அனைத்து வகை வழக்குகளுக்குமான வரி நிலுவைகளில் கணிசமான நிவாரணம் அளிக்கின்றது, அத்துடன் வட்டி, அபராதம், தண்டம் ஆகியவற்றை முழுமையாக தள்ளுபடி செய்கின்றது. பழைய மத்திய கலால் வரி, சேவை வரியின்கீழான எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் எழுந்த அனைத்து தகராறுகளின் , வட்டி, அபராதம் ,தண்டம் ஆகியவற்றின் வேறு எந்தப் பொறுப்பும் இருக்காது. மேலும் அவ்வாறான வழக்குகளிலிருந்து முழுமையான பொது மன்னிப்பும் கிடைக்க வழிவகைசெய்யப்பட்டுள்ளது. பின்வரும் வழக்குகளுக்கு இந்த புதிய சட்டத்தகராறு தீர்வுதிட்டத்தின் கீழ் தீர்வு பெறமுடியும் அ.சேவை வரி, மத்திய கலால்வரி தொடர்பான ஜூன் 30, 2019 அன்று நிலுவையில் உள்ள காரணம்கோரும் அறிவிப்பு அல்லது மேல்முறையீடுகள் ஆ.சேவை வரி , மத்திய கலால்வரி தொடர்பான வரித்தொகை செலுத்தாமல் நிலுவையாக உள்ளத் தொகை இ.ஜூன் 30, 2019 அன்று அல்லது அதற்கு முன்னர் சேவை வரி , மத்திய கலால்வரி தொடர்பாக விசாரணை, பலனாய்வுவிசாரணை அல்லது தணிக்கை ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டு நிலுவையிலுள்ள வரித்தொகை ஈ. சேவை வரி , மத்திய கலால்வரி தொடர்பாக தானாகவே முன்வந்து செய்யப்படும் ஒரு தன்னார்வ வெளிப்பாடு. இந்த புதிய சட்டத்தகராறு தீர்வுதிட்டத்திலிருந்தான விதி விலக்குகள் அ. மத்திய கலால்வரிச் சட்டம், 1944 இன் நான்காவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களின் வழக்குகள் (இதில் புகையிலை , பெட்ரோலிய பொருட்கள் அடங்கும்) ஆ. வரி செலுத்துவோர் மத்திய கலால் வரிச்சட்டம், 1944 அல்லது நிதிச் சட்டம், 1944 இன் கீழ் தண்டனை பெற்ற வழக்குகள் இ. இந்த சட்டத்தின்கீழ்தவறாக பணத்தைத் திருப்பி வழங்கியது தொடர்பான வழக்குகள் ஈ.இந்த சட்டத்தின்கீழ் தீர்வாணையத்தின் முன் நிலுவையில் உள்ள வழக்குகள் இந்த புதிய சட்டத்தகராறு தீர்வுதிட்டத்தின் கீழ்கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு அ. வட்டி, அபராததொகை (fine) , தண்டத்தொகை (penalty) ஆகியவற்றை மொத்தமும் தள்ளுபடி செய்வது ஆ வழக்கு விசாரணையிலிருந்து விடுவிப்பது இ. தீர்ப்பு அல்லது மேல்முறையீட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளில் சம்பத்தப்பட்டவரித் தொகையானது 50 இலட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், அவ்வாறான வரிசெலுத்தும் கோரிக்கையிலிருந்து 70% நிவாரணமும் வழக்குகளில் சம்பத்தப்பட்டவரித் தொகையானது 50 இலட்சத்துக்கு மேல் இருந்தால் அவ்வாறான வரிசெலுத்தும் கோரிக்கையிலிருந்து 50%நிவாரணமும் கிடைக்கும் ஈ. இந்த வரிதொடர்பான விசாரணை மற்றும் தணிக்கைக்கு உட்பட்ட வழக்குகளுக்கு வரிசெலுத்தும் கோரிக்கையானது 2019 ஜூன் 30 அல்லது அதற்கு முன்னர் குறிப்பிட்டுள்ள வரித்தொகைமட்டும் இதன்கீழ் நிவாரணம் கிடைக்கும் உ. வரிசெலுத்துவேண்டிய தொகை செலுத்தாமல் நிலுவையாக இருந்தால், அவ்வாறு செலுத்தவேண்டுமென உறுதிப்படுத்தப்பட்டதொகையானது 50 இலட்சம் அல்லது 50 இலட்சத்திற்கு குறைவாக இருந்தால் அவ்வாறான வரிசெலுத்தும் கோரிக்கையிலிருந்து 60% நிவாரணமும் ,மற்ற சந்தர்ப்பங்களில் அதாவதுஅவ்வாறு செலுத்தவேண்டுமென உறுதிப்படுத்தப்பட்ட தொகையானது 50 இலட்சத்திற்கு மேல் இருந்தால் அவ்வாறான வரிசெலுத்தும் கோரிக்கையிலிருந்து 40% நிவாரணமும் கிடைக்கும் ஊ.தன்னார்வமாக வெளிப்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில், இவ்வாறு அறிவித்தவர் வெளிப்படுத்திய வரிசெலுத்தவேண்டிய கடமையின் முழுத் தொகையையும் செலுத்த வேண்டும். இந்த திட்டத்தின் பிற வசதிகள் அ. ஏற்கனவே இந்த வரிசெலுத்துவதற்காக செலுத்தப்பட்ட வைப்புத்தொகையை சரிசெய்துகொள்ளும்வசதி ஆ. இந்த தீர்வு திட்டத்தின் கீழ் நிலுவைத் தொகையினை மின்னணு முறையில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும், அவ்வாறு செலுத்தப்பட்ட தொகை பின்னர் உள்ளீட்டு வரிவரவாகப் பெற முடியாது இ. கேள்விக்குரிய நடவடிக்கைகளின் முழுவதுமாகவும் இறுதியாகவும் முடிவுக்கொண்டுவருதல். ஒரே விதிவிலக்கு என்னவென்றால், பொறுப்பை தானாக முன்வந்தால், ஒரு வருட காலத்திற்குள் தவறான அறிவிப்பை மீண்டும் திறக்க ஏற்பாடு செய்யப்படுகிறது ஈ.இந்த திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் கடந்த கால மற்றும் எதிர்கால வரிவரவுகளுக்கான முன்னோடியாக கருதப்படமாட்டாது. இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் இறுதி முடிவு கொண்டுவரப்படும் உ.கருத்து வேறுபாடு ஏற்பட்டால் தனிப்பட்ட விசாரணைக்கு வாய்ப்பு இல்லாமல் இறுதி முடிவு இல்லை ஊ.இந்த திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் முழுமையாக தானியங்கியாக செய்யப்படும்.

ஞாயிறு, 3 மே, 2020

சந்தைப்படுத்தலுக்கான உதவித் திட்டத்தைப் பயன்படுத்தி கொள்ளுதல் எனும் குறுசிறுநடுத்தர நிறுவனங்களின்( MSME)திட்டம் ஒரு அறிமுகம்


நம்முடைய வணிகம் மேலும் வளர வேண்டுமா? ஆம் எனில் நம்முடைய நிறுவனத்திற்கு இந்த MSMEதிட்டம் கண்டிப்பாக பொருந்தும் அதாவது குறு சிறு நடுத்தர நிறுவனங்கள், தொழிலக கூட்டமைப்பு கழகங்கள் ஆகியவற்றிற்கு இந்த MSMEதிட்டமானது கண்டிப்பாக பொருந்தும் .பொதுவாக ஒவ்வொரு தொழிலதிபரும் தனது வணிகத்தை இமயமலை போன்ற பெரும் உயரத்துக்கு எடுத்துச் செல்ல விரும்புவார்கள் அவ்வாறு விரும்பினால் மட்டும் போதுமா நம்முடைய வணிகம் தொடர்ந்து செயல்படுவதற்கும் தொடர்ந்து வளரவும் நாம் என்ன செய்யவேண்டும் என்பதே மிகப்பெரிய சிக்கலான கேள்விக்குறியாக நம்மை பயமுறுத்துகின்றது .நம்முடைய வணிகம் தொடர்ந்து வளருவதற்கு அடிப்படையாக நம்முடைய போட்டியாளர்களின் நடவடிக்கைகளின்மீது நாம் எப்போதும் ஒரு கண்வைத்திருக்க வேண்டும் அதாவது நம்முடைய பொருளின் அல்லது சேவையின் தனித்தன்மை விற்பனைக்கு பிந்தைய சேவைகள் என்பனபோன்ற அனைத்தும் நம்முடைய போட்டியாளர்களைவிட முதன்மையாக இருக்கவேண்டும் . இதனுடன், நம்முடைய பிராண்டுகளை மிகவிரிவாக சந்தைப்படுத்திட வேண்டும் மேலும் நம்முடைய அடுத்தடுத்த திட்டங்களை பற்றியவிவரங்களை நம்முடைய வருங்கால வாடிக்கையாளர்களுக்கு நன்கு அறிந்து கொள்ளுமாறு அவ்வப்போதுஅறிவிக்கவும் தெரிவிக்கவும் வேண்டும் .நம்முடைய வியாபாரத்தின் முதன்மையான செலவுகளை கட்டுபடுத்தி மிகச்சிறந்த முறையில் சந்தைபடுத்தி விற்பனையை மேம்படுத்திட நடவடிக்கை எடுத்திடவேண்டும் உள்நாட்டில் மட்டுமல்லாது உலகமுழுவதும் இந்த சந்தைபடுத்திடும் நடவடிக்கைகளை கொண்டுசெல்லவேண்டும் அதன்வாயிலாக நம்முடைய நிறுவனத்தின் வருமானம் உயர்ந்து நம்முடைய நிறுவனம்மேலும் வளருவதற்கான சூழல் தானாகவே உருவாகிடும்.ஆயினும் இவ்வாறான செயல்களை செயற்படுத்திடுவதற்கான கட்டமைப்பு வசதி, நல்ல நிதிநிலை ஆகியவற்றை கொண்டுள்ள பெரிய நிறுவனங்கள் மட்டுமே இவற்றினை செயல்படுத்தி பயன்பெறமுடியும் . இன்றைய சூழலில் MSME எனசுருக்கமாக அழைக்கப்படும் குறுசிறநடுத்தர நிறுவனங்களும் இவ்வாறான சந்தைபடுத்துதல் செயலில் பங்கெடுத்து கொண்டு பயன்பெற்று தங்களின் வளர்ச்சியை உறுதிபடுத்தி கொள்வதற்காக இந்த சந்தைப்படுத்தலுக்கான உதவித் திட்டத்தைப் பயன்படுத்தி கொள்ளுதல் எனும் குறுசிறுநடுத்தர நிறுவனங்களின் திட்டமானது - தற்போது நடைமுறைபடுத்தப்-பட்டுள்ளது இந்திய அரசின் MSME அமைச்சகமானது இந்த திட்டத்தை செயல்படுத்திடுவதற்கென்றே தனியாக சிறப்பு கவணம் செலுத்துகின்றது இந்த திட்டத்தின்வாயிலாக தேசிய மற்றும் சர்வதேச கண்காட்சிகளில் நம்முடைய நிறுவனத்தினை பங்கேற்பு செய்தல், கூட்டு நிதியளிப்பு கண்காட்சிகள், பல்வேறு வர்த்தக கண்காட்சிகளில் பங்கேற்றல், வாங்குபவர் -விற்பனையாளர் ஆகியோர்களின் சந்திப்பு, விளம்பரபடுத்துதல, சந்தைபடுத்திடும் நிகழ்வுகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு நம்முடைய நிறுவனத்தினை வெற்றிபெற முயற்சி செய்திடுவோம் இந்த திட்டத்தின் வாயிலாக உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச சந்தையிலும் நம்முடைய பொருட்களை அல்லது சேவைகளை சந்தைப்படுத்துவதன் மூலம் நம்முடைய நிறுவனத்தின் விற்பனை வருவாயை அதிகரிக்க செய்யமுடியும் அவ்வாறான சர்வேச சந்தைபடுத்துதலில் கலந்துகொள்ளும் நிறுவனங்களுக்கு 95% விமான கட்டண சலுகையும் பொருட்காட்சியில் காட்சிபடுத்துகின்ற இடத்தின் வாடகையில் 95% சலுகையும் அனுமதிக்கப்படுகின்றது இந்த வசதியை பயன்படுத்தி கொள்வதற்காக அதிக சிரமப்படத்தேவையில்லை இந்த திட்டத்தில் பங்குகொண்டு சந்தை படுத்த விழையும் குறுசிறுநடுத்தரநிறுவனங்கள் இதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அருகிலுள்ள தேசியசிறுதொழில்வளர்ச்சி கழக அலுவலகத்தில் சமர்ப்பித்தால் மட்டும் போதுமானதாகும் என்ற செய்தியை மனதில் கொள்க

சனி, 2 மே, 2020

நீங்கள் எந்தவொரு பணியை செய்தாலும் பரவாயில்லை அந்த பணியை முழுமனதுடன் ஆத்மதிருப்தியுடன் செய்யுங்கள்


.ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக முதன்முதல் பதவி ஏற்க செல்லும்நிலையிலஅவருடைய தந்தையானவர் ஒரு முழுக்காலணி தயாரிப்பாளராக இருந்துவந்தார். அதனால், நம்மைபோன்று ஆட்சிஅதிகாரத்தில்இல்லாத ஒரு சாதாரண காலணி தயார் செய்பவனின் மகன் நமக்கு மேல்நிலையில் ஜனாதிபதியாக பதவியேற்பதா என சுயநலவாதிகள் அதிலும் மேட்டுகுடி மாந்தர்களான பிரபுக்கள் அனைவரும் மிகவும் மனவருத்தத்துடன் இருந்தனர் . அம்மேட்டுகுடி மக்கள் பரம்பரை பரம்பரையாக இதுவரையில் ஆட்சி அதிகாரத்தில் இருந்துவருபவர்கள் இவ்வாறான பதவிக்கு இதுவரையில் அவர்களில் ஒருவர்தான் பதவியேற்று ஆட்சி புரிந்துவந்துள்ளனர் அதனால் அப்பிரபுக்கள் அனைவரும், ஜனாதிபதி போன்ற மிக உயர்ந்த அரசாங்க பதவியில் இருப்பது தங்களின் பிறப்புரிமை என்று நினைத்து வந்தவர்கள். மேட்டுகுடி மக்களால் நிறைந்த அந்த கூட்டத்தின் முதல் நாளில், ஆபிரகாம் லிங்கன் தனது தொடக்க உரையை ஆற்றுவதற்காக அந்த கூட்டரங்கில் நுழைந்தபோது, அந்த கூட்டத்தில் இருந்து, ஒருவர் எழுந்து நின்றார். அவர் மிகவும் பணக்கார பிரபுஆவார். அவர், “திரு. லிங்கன், அவர்களே உங்களுடைய தந்தை எங்களுடைய குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் காலணிகளைத் தயாரித்து வழங்கியவர் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ” என கூறியதும் அங்கு கூடியிருந்த மேட்டுகுடிமக்கள் அனைவரும் "ஆஹா இவர்நாட்டின் மிகஉயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியேற்கும்முதல்நாளிலேயே ஆபிரகாம் லிங்கனை நன்றாக மட்டம் தட்டிவிட்டார் மேலும் அவரை முட்டாளாக்கி விட்டார்" என கைகொட்டி சிரிக்கஆரம்பித்தனர் ஆனால் லிங்கன் - அந்த மாதிரியான நபர் முற்றிலும் மாறுபட்ட மனநிலை கொண்டவர் என தெரிந்து கொண்டார் அதனால் - ஆபிரகாம்லிங்கன் அவ்வாறு பேசிய மனிதரைப் பார்த்து, “ஐயா, என் தந்தை உங்கள் குடும்பஉறுப்பினர் அனைவருக்கும் காலணிகளைத் தயாரித்து வழங்கியதை நான் அறிவேன், அவர் ஒரு சிறந்த படைப்பாளி. அவர்உருவாக்கியது வெறும் காலணிகள் மட்டுமல்ல, செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமதுசெல்வும் என அவர் தனது முழுமனத்தையும் ஈடுபாட்டுடன் செலுத்தி அந்த பணியை செய்கொண்டிருந்தார் நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன், உங்கள் குடும்ப உறுப்பினர் எவரேனும் அவர் தயார்செய்த காலணியின்மீது புகார் ஏதேனும் கூறியிருக்கின்றனரா? எனக்குத் தெரிந்தவரை, என் தந்தையின் காலணிகளைப் பற்றி இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. ஏனென்றால் அவர் காலணிகளை உருவாக்கிய விதம், வேறு யாராலும் முடியாது அவ்வாறு திறனுடன் நுகர்வோரின் மன திருப்தியடையுமாறு தன்னுடைய பணியை செய்துவந்தார் அவர் ஒரு மேதை, ஒரு படைப்பாளி, நான் என் தந்தையைப் பற்றி பெருமைப்படுகிறேன்! ஏன் உங்களுக்கு தேவையென்றால் கூறுங்கள் எனக்கும் காலணிகளை உருவாக்கத்தெரியும் இப்போது உங்களுக்கான, காலணிகளை வேண்டுமானால் நான் தயார்செய்து வழங்க தயாராகஇருக்கின்றேன்" என ஆபிரகாம் லிங்கன் பதில் கூறினார் உடன் அவை முழுவதும் அமைதியாகிவிட்டது. ஆபிரகாம் லிங்கன் எந்த வகையான மனிதர் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. . முதலில் அவரை மட்டம் தட்டவேண்டும் என மனநிலை திரிந்தவாறு பேசிய அந்த மனிதனை பார்த்து , “ஐயா நீங்கள் இப்போது வாய்திறந்து பேச வேண்டும்! நீங்கள் ஏன் ஊமையாகிவிட்டீர்கள்? நீங்கள் என்னை ஒரு முட்டாளாக்க விரும்பினீர்கள், இப்போது, சுற்றிப் பாருங்கள்: நீங்களே ஒரு முட்டாளாகிவிட்டீர்கள். பார்த்தீர்களா" ஆபிரகாம் லிங்கன் காலணி தயாரிப்பதை ஒரு கலையாகவும், படைப்பாற்றல் மிக்க பணியாகவும். பெருமிதம் கொண்டார், ஏனென்றால் அவரது தந்தை அந்த பணியை மிகச் சிறப்பாக செய்தார், இதுவரை ஒரு புகார் கூட எழுந்ததில்லை. ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றபோதிலும், அவ்வாறு தன்னுடைய தந்தை செய்த பணியில் புகார் ஏதேனும் எழுந்தால் அதனை தான் சரிசெய்துதர தயாராக இருப்பதாக உறுதியளித்தார் அவ்வாறே நீங்கள் எந்தவொரு பணியை செய்தாலும் பரவாயில்லை. முக்கியமானது என்னவென்றால் - நீங்கள் அந்த பணியை முழுமனதுடன் ஆத்மதிருப்தியுடன் செய்யுங்கள் - உங்கள் சொந்த விருப்பத்துடன், உங்கள் சொந்த பார்வையுடன், . நீங்கள் எதைத் தொட்டாலும் அது தங்கமாக மிளிரும் என்பதை காண்பீர்கள்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...