ஞாயிறு, 24 டிசம்பர், 2017

உண்மைக்கும் பொய்க்கும் இடையே உள்ளவித்தியாசம் என்ன?


ஒரு நாள் பேரரசர் அக்பருக்கு உண்மைக்கும் பொய்க்கும் இடையே உள்ளவித்தியாசம் என்ன என்ற பெரிய சந்தேகம் ஒன்று எழுந்தது, அதனால் தன்னுடைய அரசசபையில் இருந்த பிரபுக்கள் அனைவரிடமும் இவ்விரண்டிற்கும் இடையேயான வித்தியாசத்தை மூன்று அல்லது அதற்கு குறைவான சொற்களுக்குள் கூறமுடியமா எனக் கேட்டார். அவையிலிருந்த அனைவரும் பேரசர் அக்பரின் கேள்விக்கான பதிலை சுருக்கமாக கூறமுடியாமல் திகைத்து ஒருவரையொருவர் பார்த்துகொண்டிருந்தனர், . இறுதியாக பேரரசர் அக்பர் அருகில் அமர்ந்திருந்த மதியூக மந்திரி பீர்பாலிடம் திரும்பி இதற்கான பதிலை நீங்களாவாது கூறமுடியுமா என வினவினார். உடன் 'நான்கு விரல்கள்' என்று பேரரசர் அக்பரின் கேள்விக்கு பதிலாக பீர்பால் கூறினார். அந்த பதிலை கேட்டவுடன் பேரரசர் அக்பர் மிகவும் குழப்பமடைந்தார், அதனால் பீர்பால் பின்வருமாறு விரிவாக விளக்கினார். ' மாட்சிமை தாங்கிய பேரரசர் அவர்களே . கண்களால் நீங்கள் பார்க்கும் அனைத்தும் உண்மை. ஆனால் காதுகளால் நீங்கள் கேட்பவைகளில் பெரும்பாலும் பொய்யாக இருக்கும், அதாவது அவைகள் தவறாக கூட இருக்கலாம். அதனால் கண்ணால் காண்பது மட்டுமே உண்மையாகும் ' அதனை தொடர்ந்து இவைகளுக்கு இடையேயான வித்தியாசம் நான்கு விரல்கள் என எவ்வாறு கூறமுடியும் என பேரரசர் அக்பர் வினவினார் அதற்கு பீர்பால் - 'உண்மையை கூறும் நம்முடைய கண்களுக்கும் பெரும்பாலும் பொய்யானவையை கேட்கும் நம்முடைய காதுகளுக்கும் இடையே உள்ள தூரம் நான்கு விரல்களின் அகலமாகும்.' என விளக்கமளித்தார் நம்முடைய கண்களால் காணும் காட்சி மட்டுமே உண்மையாகும் மற்றவையெல்லாம் பொய்யாகும் .என்ற செய்தியை மனதில் கொள்க

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

உலகின் மிகப் பெரிய பணக்காரர் யார்?


தற்போது அமோசான் நிறுவனத்தின் தலைவர் உலகின் பெரிய பணக்காரர் என்ற நிலையில் உள்ளார் இதற்கு முன்பு உலகில் மிகப்பெரிய பணக்காரராக மைக்ரோ சாஃப்டின் தலைவர் பில்கேட்ஸ் இருந்தார் அதனால் அவரிடம் ஒருவர் , ஐயா உங்களை விட வேறுயாரெனும் பெரிய பணக்காரர் இருக்கிறாரா? எனக் கேட்டார் உடன் அதற்கு பில்கேட்ஸானவர், ஆம், என்னைவிட பணக்காரரர் ஒருவர் உள்ளார் என பதில் கூறினார் அதுஎவ்வாறு சாத்தியம் விளக்கமாக கூறுங்கள் என பில்கேட்ஸை அவர் மடக்கினார் உடன் பில்கேட்ஸானவர் ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு, நான் நியூயார்க் விமான நிலையத்திற்கு வெளியேசென்று கொண்டிருந்தேன். அப்போது கடைகளில் பத்திரிகைகளின் தலைப்பு செய்திகளை படித்தபோது . நான் அவற்றில் ஒன்றை வாங்க விரும்பினேன், . அதனை தொடர்ந்து என்னுடைய சட்டை பை கால்சட்டைபை ஆகியவைகளில் தேடிபார்த்தபோது என்னிடம் அதற்கான ஒரு டாலர் நாணயம் மட்டுமில்லை அதனால் .உலகின் பெரிய பணக்காரன் ஆகிய நான் அந்த பத்திரிகையை மட்டும் என்னால் ஒருடாலருக்கு வாங்கமுடியவில்லையே என அதனை வாங்க முடியாமல் திகைத்து நின்றுவிட்டேன் இந்நிலையில் என்னுடைய செய்கையை பார்த்து கொண்டிருந்த அந்த பத்திரிகைகளை விற்பணைசெய்திடும் கருப்பு சிறுவன் என்னை அழைத்து, "இந்தாருங்கள் ஐயா நீங்கள் விரும்பும் பத்திரிகை " என்று கூறி எனக்கு உதவிசெய்தான் மேலும், " ஐயா நான் இந்த பத்திரிகையை உங்களுக்கு இலவசமாக கொடுக்கிறேன் இதற்காக ஒருடாலர் தரவேண்டாம்". என கூறினான் ஒருசில மாதங்களுக்கு பிறகு, அதே இடத்திற்கு பில்கேட்ஸ் வந்துசேர்ந்தபோது முன்பு நடந்த அதே நிகழ்வு மீண்டும் நடந்தேறியது அதாவது கடைகளில் பத்திரிகைகளின் தலைப்பு செய்திகளை படித்தபோது . நான் அவற்றில் ஒன்றை வாங்க விரும்பினேன், . அதனை தொடர்ந்து என்னுடைய சட்டைபை கால்சட்டைபை ஆகியவைகளில் தேடிபார்த்தபோது என்னிடம் மீண்டும் அதற்கான ஒரு டாலர் நாணயம் மட்டுமில்லை அதனால் .உலகின் பெரிய பணக்காரன் நான் ஆனால் அந்த பத்திரிகையை வாங்க ஒருடாலர் மட்டும் என்னிடமில்லையே என அதனை வாங்க முடியாமல் மீண்டும் திகைத்து நின்றுவிட்டேன் இந்நிலையில் என்னுடைய செய்கையைபார்த்து கொண்டிருந்த அந்த பத்திரிகைகளை விற்பணைசெய்திடும் கருப்பு சிறுவன் என்னை அழைத்து, "இந்தாருங்கள் ஐயா நீங்கள் விரும்பும் பத்திரிகை " என்று கூறி எனக்கு மீண்டும் உதவிசெய்தான் மேலும், " ஐயா நான் இந்த பத்திரிகையை உங்களுக்கு இலவச கொடுக்கிறேன்". என கூறினான் அது சரியான செயல்அன்று தம்பி நான்மிகப்பெரிய பணக்காரன் உன்னிடம் இலவசமாக இதனை வாங்கி கொள்ள கூடாது என்னுடையஇருப்பிடத்திற்கு நான் சென்றவுடன் முன்பு வாங்கிய பத்திரிகைக்கும் இந்த பத்திரிகைக்கும் சேர்ந்து தொகையை நான் கொடுத்தனுப்புகின்றேன் எனக்கூறியபோது அவ்வாறெல்லாம் வேண்டாம் ஐயா நான் என்னுடைய இலாபத்திலிருந்து உங்களுக்குக தருகிறேன்" என்று கூறினான் அதனால் அந்த பத்திரிகை விற்பணை செய்திடும் கருப்புசிறுவனே என்னைவிட பணக்காரனாகும் என தன்னுடைய விளக்கத்தை பில்கேட்ஸ் கூறினார்.

வியாழன், 30 நவம்பர், 2017

சிக்கலான பிரச்சினைகளுக்கு மிகவும் சிறிய தந்திரமான செயல்களுடனும் தீர்வுகாண வேண்டும்


அக்பரின் அரசவைக்கு வித்தியாசமான புகார் ஒன்று வந்தததது. ஒரு கிராமத்து உழவர்கள் இருவர் அருகருகே இரு கினறுகளுடன் கூடிய தோட்டங்களை வைத்தருந்தனர் ஒருவிவசாயினுடைய கினற்றில் அவருடைய தோட்டத்தில் விளைவிக்கும் காய்கறிசெடிகளுக்கு போதுமான தண்ணீர் இல்லை ஆனால் அருகிலிருந்த மற்றொரு தோட்டத்தின் இக்பால் எனும் விவசாயிக்கு சொந்தமான கிணற்றில் போதுமான தண்ணீர் இருந்தது. அதனால் பக்கத்து தோட்டத்து விவசாயி இக்பாலிடம் தன்னுடைய தோட்டத்தில் விளைவிக்கும் காய்கறிசெடிகளுக்கு போதுமான தண்ணீர் இல்லாதாதல் வாடிபோகின்றது அதனால் அவருடைய வாழ்க்கைக்கு தேவையான வருமானமும் கிடைக்காதநிலையாகிவிட்டது அதனால் அவரது கினற்றில் இருந்து தண்ணீர் வழங்கும்படி கோரினார் உடன் இக்பால் என்பவர் கினற்றையே உனக்கு விற்பணைசெய்கின்றேன் எனக்கூறியதை தொடர்ந்து அவ்விருவரும் இக்பால் என்பவரின் தோட்டத்தில் இருந்த கினற்றினை வாங்கு வதற்கான அவர்களுக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உறுதி செய்து கொண்டனர். அதன்பின் இக்பால் ஆனவர் தான் விற்பனைசெய்த கிணற்றிலிருந்து தொடர்ந்து தண்ணீர் எடுதது கொண்டிருந்தார் அந்த கினற்றினை வாங்கிய பக்கத்து தோட்டக்காரருக்கு போதுமான தண்ணீர் இல்லாமல் பழைய நிலையிலேயே இருந்துவந்தார் இந்த பிரசசினையை தீர்வுசெய்திடுமாறே அக்பரின் அவையில் முறையீடு செய்தார் பாதிக்கப்பட்ட தோட்டக்காரர் இக்பாலிடம் அக்பர் ஏன்அவ்வாறு செய்கின்றாய் என வினவியபோது ஐயா நான் பக்கத்து தோட்டக்காரருக்கு என்னுடைய கினற்றினை மட்டுமே விற்பனை செய்தேன் அதிலுள்ள தண்ணீரை விற்பனை செய்யவில்லை இந்த விற்பனை பத்திரத்தினை நீங்களே படித்து பாருங்கள் அதனால் நான் விற்பணை செய்யாத என்னுடைய தண்ணீரை தொடர்ந்து பயன்படுத்திவருகின்றேன் இதில் தவறு இருந்தால் கூறுங்கள் என பதிலளித்தார் உடன் அக்பர் அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் பீர்பாலிடம் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறு உத்திரவிட்டார் உடன் அமைச்சர் பீர்பாலானவர் இக்பாலிடம், 'இக்பால், நீங்கள் அருகிலிருந்த தோட்டக்காரருக்கு கினற்றினை மட்டுமே விற்றுவிட்டீர் ஆனால் தண்ணீரை மட்டும் அவருக்கு விற்பனை செய்யவில்லை எனக்கூறுகின்றீர் அதுதானேஉங்களுடைய வாதம் ஆம் ஐயா என இக்பால் கூறியதை தொடர்ந்து பீர்பால் எனும் அமைச்சரானவர் ஆனால் உங்களுடைய தண்ணீரை அவருடைய கினற்றில் வைத்திருப்பதற்காக வாடகை தரவேண்டாமா அதனால் அவருக்கு சேரவேண்டிய வாடகை யை வழங்கிவிட்டு நீங்கள் உங்களுடைய தண்ணீரை தொடர்ந்து அவருடைய கினறறிலிருந்து எடுத்து கொள்ளலாம் எனத்தீர்பளித்தார் அதன்பின்னர் இக்பால் என்பவர் விற்பணைசெய்த கினற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதை விட்டுவிட்டார் சில நேரங்களில், இவ்வாறு சிக்கலான பிரச்சினைகளுக்கு மிகவும் சிறிய தந்திரமான செயல்களுடனும் தீர்வுகாண வேண்டும் என்ற செய்தியை மனதில் கொள்க.

திங்கள், 20 நவம்பர், 2017

கர்வத்தை விட்டொழியங்கள்


​​அமிதாப் பச்சன்எனும் மிகப்பிரபலமான நடிகர் தன்னுடைய வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை இவ்வாறு கூறுகிறார் ... "என் வாழ்க்கையின் உச்சத்தில் வாழ்ந்துகொண்டிருந்த ஒருநாள் , விமானத்தின் மூலம் ஒருமுறை பயணம் செய்தேன், எனக்கு அருகில் பயனம் செய்த பயணி ஒரு சாதாரண சட்டையும் பேண்ட்டும் அணிந்த மிகவும் மூத்த முதியவராக தோன்றினார் அவர் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் போன்று இருந்தாலும் அவர் நன்கு படித்தவர்.போன்ற தோன்றினார் மற்ற பயணிகள் அனைவரும் என்னை யார் என்று தெரிந்து கொண்டு என்னுடன் அறிமுகம் செய்து கொண்டனர், ஆனால் இந்த மனிதர் மட்டும் என்னைபற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் வழக்கமான பயனிபோன்று அலட்சியமாக திரும்பியபார்க்காமல் இருந்தார் மேலும் அவர் ஜன்னல் வழியே வெளியே பார்ப்பதும் கைகளில் இருந்த நாளிதழைபார்ப்பதுமாக இருந்தார், அதனை தொடர்ந்து பயனிகள் அனைவருக்கும் குடிப்பதற்கு தேநீர் வழங்கியபோது , அவர் அமைதியாக நாளிதழை மூடிவைத்துவிட்டு தன்னுடைய இருக்கையில் சாய்ந்து. வழங்கப்பட்ட தேநீரை குடித்துகொண்டிருந்தார் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்திருப்பவர் நாம் எவ்வாளவு புகழ்பெற்ற நடிகர் ஆனாலும் நம்மை கவணிக்காமல் தன்னுடைய பணியை அவர் செய்துகொண்டிருக்கின்றாறே என "வணக்கம்!” என்று கூறி அவருடன் நான் உரையாட முயற்சித்தேன். அந்த மனிதரும் என்பக்கம் திரும்பி புன்னகைத்து, 'வணக்கம்' என்று பதிலுக்கு சொன்னார். பின்னர் நாங்கள் இருவரும் பொதுவான செய்திகளை பேசிக்கொண்டிருக்கிறோம், அப்போது எங்களுடைய உரையாடல் திரைப்படம் தொடர்பான செய்திகளுக்கு திரும்பியது , 'நீங்கள் திரைப்படங்களை பார்த்திருக்கின்றீர்களா?' எனவினவியதற்கு அந்த மனிதர், 'ஓ, பல ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்தேன். என பதிலளித்தார் அதனை தொடர்ந்து ' நான் திரைப்பட துறையில் பணிபுரிந்து வருகின்றேன் 'நான் ஒரு நடிகர்' எனக்கூறியதும் அந்த மனிதர் , 'ஓ, அது மிகவும் நல்ல அற்புதமான பணிதான்! ' எனக்கூறினார் … நாங்கள் இறங்கவேண்டிய இடம் வந்ததும் இருவரும் விமாணத்தில் இருந்து வெளியவந்தோம் தொடர்ந்து அவர் என்னுடன் கைகுலுக்கினார் அப்போது நான் , "உங்களுடன் பயணம் செய்தது மிகவும் நன்றாக உள்ளது, என் பெயர் அமிதாப் பச்சன்!" அந்த மனிதர் சிரித்துகொண்டே , "நன்றி ... நான் மிகப்பெரும் தொழில் அதிபர் ஜே ஆர் ​ஆர் டி டாடா!" எனக்கூறினார் அதனைதொடர்ந்து நான் இதுவரையில் சினிமா என்ற கவர்ச்சியினால் நான்தான்மிகஉயர்ந்தவன் என தலைகணத்துடன் அனைவரையும் மிகஅற்பமாக பார்த்துவந்தேன் ஆனால் என்னைவிட மிகச்சிறந்த பெரிய தொழில் அதிபர் என்னைபோன்ற கர்வம் எதுவும் இல்லாமல் மிகச்சாதரணமாக இருக்கின்றார் அதுமட்டுமலலாமல் மிகவும் சாதாரண தோற்றத்துடன் இருக்கின்றார் என தெரிந்து அறிந்து கொண்டு என்னுடைய கர்வத்தை அந்த பயனத்தோடு விட்டொழித்தேன்

சனி, 28 அக்டோபர், 2017

நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து சன்டைசச்சரவில்லாமல் ஒற்றுமையுடன் வாழமுயற்சி செய்க


இது ஒரு தம்பதியரின் திருமணநாளாகும் மனைவி தன்னுடைய கணவரின் வருகைக்காக காத்திருந்தார் இந்த தம்பதியரின் திருமணத்திற்கு பின்னர் ஒவ்வொரு நாளும் ஏதாவது தொரு பிரச்சினைக்காக இருவரும் சண்டையிட்டுகொண்டும் ஒருவருக்கொருவர் திட்டிகொண்டும் எலியும் பூனையுமாகவே இருந்துவந்ததால் இவர்களுடைய மணவாழ்க்கை காலப்போக்கில் மிகவும் கசப்பாகவே மாறிவிட்டது அதனால் ஒவ்வொருநாளும் மிகவும் சிரமமாகவே கழித்து வந்தனர் இவ்வாறான நிலையில் அம்மனைவியின் கைபேசிஅழைப்பு மணி ஒலித்தது அவர் எடுத்தவுடன் . "வணக்கம் அம்மா நான் காவல் நிலையத்திலிருந்து அழைக்கின்றேன். "நீங்கள் 'க' என்பவரின் மனைவியா?" என கேட்டார் அதற்கு "ஆமாம் ஐயா!"என பதிலிறுத்ததும் "அம்மா நீங்கள் மனதினை தைரியபடுத்திகொள்ளுங்கள் தற்போது ஒரு விபத்து நடந்துள்ளது அதில் இறந்தவருடைய பணப்பையிலிருந்து நாங்கள் இந்த கைபேசி எண்ணைப் பெற்றோம், அவ்வாறு இறந்தது 'க' என்பவர்தானா என நீங்கள் நேரில் வந்து அடையாளம் கூற வேண்டும்." என்று கூறினார் உடன் 'க' என்பவரின் மனைவியானவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்! தொடர்ந்து ஐயோ !!!என்னசெய்வேன்? !!! மிகுதி நாட்களை யாருடைய துனையுடன் வாழ்வேன் ? !!! எங்களுக்கு இடையே சிறிய வேறுபாடுகள் இருந்த போதிலும் அவர் மிகவும் அன்பாகவும் அக்கறையாகவும் என்னை விட்டுகொடுக்காமல் என்னோடு வாழ்ந்து வந்தாரே !!! என தரையில் விழந்து புரண்டு அழுதார் இவ்வாறான நிலையில் சிறிதுநேரத்தில் அவர்களுடைய வீட்டுவாயிலில் இருந்த அழைப்புமணி ஒலித்தது "ஐயோ! இன்னும் என்னென்ன தீங்கு நேர்ந்துவிட்டதோ ! "என பதைபதைப்புடன் 'க' என்பவரின் மனைவியானவர் தரையிலிருந்து மிகவும் மெதுவாக எழுந்து சென்ற வாயில் கதவினை திறந்தார் "என்னஆச்சரியம்!” நுழைவுவாயிலில் அவருடையகணவர் நின்றிருப்பதை கண்டதும்ஓடிசென்று "ஐயோ! நீங்கள் விபத்தில் அடிபட்டு இருந்துவிட்டதாக காவல்நிலையத்திலிருந்து சற்றுமுன்னர்தானே கூறினார்கள் அவ்வாறு நிகழவில்லையா பதை பதைத்து விட்டே !ரொம்ப மகிழ்ச்சி!” என ஆர்வத்துடன் அவருடைய கணவருடன் இறுக கட்டி ஆச்சரியமும் மகிழ்ச்சியுமாக புலம்ப ஆரம்பித்தாள் அவளுடைய கணவன் "அன்பே! இன்று காலையில் போக்குவரத்து நெரிசலில் என்னுடைய பணப்பையினை திருடி கொண்டுவிட்டனர் அதில் என்னுடைய கைபேசியும் இருந்ததால் உனக்கு தகவல்எதுவம் கூறமுடியவில்லை இன்று சீக்கிரமாக வீடு்வந்து நேராக உன்னிடம் பணப்பை திருட்டு போனதை கூறலாம் என வந்து சேர்ந்தேன்" என கூறியதும் "பணப்பை போனால் பரவாயில்லை நீங்கள் நான் உயிர்வாழும் அளவும் என்னோடு இருந்தால் போதும்" என மனமகிழ்வுடன் கூறினாள் அம்மனைவி நாம் வாழ்வது சிலகாலமே அதுவரையில் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து சன்டைசச்சரவில்லாமல் ஒற்றுமையுடன் வாழமுயற்சி செய்க என பரிந்துரைக்கபடுகின்றது

திங்கள், 23 அக்டோபர், 2017

உதவிதேவைப்படுபவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்திடலாமே


நான் நெடுஞ்சாலையின் நடைபாதையில்நடந்து சென்றுகொண்டிருக்கும்போது வழியில் ஒரு மின்கம்பத்தில் சிறு துண்டு காகிதத்தில் ஒரு சிறிய குறிப்பு இருந்ததை கண்டேன் அதில்என்னதான் உள்ளது என அறிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தாதல் அதற்கருகில் சென்று பார்த்தபோது. " என்னிடம் வைத்திருந்த 50 ரூபாய் தாள் ஒன்றினை இந்த நெடுஞ்சாலையில் தவறவிட்டிட்டேன், அடுத்தவேளை சாப்பிடுவதற்கு எனக்கு அதனை தவிர வேறு தொகை எதுவும் என்னிடம் இல்லை யாராவது சாலையில் அதை கண்டால், தயவுசெய்து பின்வரும் முகவரியிலுள்ள என்னிடம் கொண்டுவந்து கொடுத்தால் நான் உயிர் உள்ளளவும் இந்த நன்றியை மறக்கமாட்டேன் எனக்கு இருகண்களும் தெரியாது அதனால் தயவுசெய்து உதவி செய்யவும்." நான் அந்த முகவரியைப் தேடிபிடித்து சென்றடைந்தேன் சிறிய பழையகாலத்து வீடாக இருந்தது அதன் கதவினை தட்டிவிட்டு திறந்து வீட்டின் உட்புறம் செல்லஆரம்பித்ததும் என்னுடைய கதவு தட்டுதல் சத்தத்தையும் காலடி சத்தத்தைதயும் கேட்ட அந்த பார்வை தெரியாதவர் யார் என்று கேட்டார். இந்த சாலை வழியாக வந்தேன் சாலையில் இந்த, ரூ. 50 ஐ கண்டெடுத்தேன் அதனை உங்களிடம் ஒப்படைக்க விரும்புகின்றேன். எனக்கூறியதை கேட்டு கண்தெரியாத அந்த தாய் அழ ஆரம்பித்தாள். "ஐயா இதுவரையில் இவ்வாறு கூறி 30-40 பேர் வந்து என்னிடம் 50 ரூபாய் தாளை தாங்கள் சாலையில் கண்டுபிடித்ததாக கொடுத்து சென்றனர் அந்த அறிவிப்பினை நான் எழுதவில்லை, எனக்கு சரியாகப் படிக்கவும் எழுதவும் தெரியாது . " என கூறினார் அந்த குறிப்பை யார் எழுதியிருக்கலாம் என்று ஒரு மில்லியன் கேளவியுடன் அந்த கண்தெரியாத மூதாட்டியின் வீட்டிலிருந்த திரும்பிவந்து கொண்டே யோசித்தபோது அந்த கண்தெரியாத மூதாட்டிக்கு உதவுவதற்காக ..யாரோ ஒரு நல்ல உதவும் உள்ளம் கொண்ட மனிதன் எழுதி கட்டியிருப்பார் என சமாதானத்துடன்என்னுடைய அடுத்தபணியை செய்திட சென்றேன் நாமும் நம்மால் முடிந்த இதைபோன்ற உதவிகளை செய்திடலாமே

செவ்வாய், 10 அக்டோபர், 2017

பெற்றோர்களை பேணி காப்போம்


மிகநீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு கிராமத்தில் பெரிய மாமரம் இருந்தது. அப்போது அந்த ஊரில் இருந்த சிறுவன் ஒருவன் அந்த மாமரத்தின் அடியில் வந்து தினமும் அதை சுற்றி சுற்றி வருவது அந்த மாமரத்தின் கிளைகளில் ஏறி குதிப்பது என்றவாறு விளையாடுவது பசிஎடுத்தால் அந்த மாரத்தில் பழத்துள்ள பழங்களை பறித்து தின்பது சோர்வு அடைந்தால் அம்மரத்தின் நிழலில் படுத்து தூங்குவது என அந்த மாமரத்துடன் ஒட்டிஉறவாடி ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்தனர் சிறிது நாட்கள் அந்த சிறுவன் அந்த மாமரத்தின் பக்கம் வருவதே இல்லை அதனால் அந்த மாமரம் மிகவருத்தத்துடன் அந்த சிறுவனுடன் விளையாடி மகிழ்வாக இருக்கலாம் என காத்திருந்தது அந்த சிறுவன் தற்போது வளர்ந்துவிட்டான், மேலும் அவன் ஒவ்வொரு நாளும் மரத்தின் மேல் ஏறி விளையாடிக் கொண்டிருக்கவிரும்பவில்லை. ஒரு நாள், அந்த சிறுவன் சோகமாக மரத்தை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தான். உடன் அந்த மாமரமானது "தம்பி விரைவாக வா வந்து என்னுடன் விளையாடு",அழைத்தது . அதற்கு அவன்: "நான் தற்போது முன்பைபோன்று சிறுவன் அன்று , நான் உன்னை சுற்றி விளையாட கூடாது .எனக்கு விளையாடுவதற்கு விளையாட்டு பந்து போன்றவை வேண்டும். அவற்றை வாங்க பணம் என்னிடம் பணம் இல்லை அதனால் நான் மிகவருத்ததுடன் இருக்கின்றேன். " எனக்கூறினான் மாமரம்: "ரொம்பநல்லது தம்பி, என்னிடம் உனக்கு கொடுப்பதற்கான பணம் இல்லை, ஆனால் நீ என் மாமபழங்களை பறித்து எடுத்து சென்று அவற்றை விற்கலாம். அதன்வா.யிலாக உனக்கு பணம் கிடைக்கும். அதனை கொண்டு உனக்குத்தேவை.யான விளையாட்டு கருவிகளை வாங்கி விளையாடலாம் " எனக்கூறியது அந்தசிறுவன் மிகவும் உற்சாகமாக மரத்தில் ஏறி அதில் இருந்த எல்லா மாம்பழங்களையும் பறித்து கொண்டு மகிழ்ச்சியுடன் அந்த மரத்தை விட்டு சென்றான். பிறகு அந்த சிறுவன் திரும்பி வரவேஇல்லை. மாமரம் மிகவும் சோகமாக இருந்தது. சிறிது காலம் கழித்தபோது அந்த சிறுவன் இளைஞனாக வளர்ந்த விட்டான் அவனக்கு திருமணமும் நடந்தது அப்போது ஒரு நாள், மனிதனாக மாறிய அவன் அந்த மாமரத்திற்கு திரும்பினான், அந்த மாமரம் அந்த இளைஞனை கண்டவுடன் மிகவும் உற்சாகமடைந்தது. "வா தம்பி வந்து என்னுடன் விளையாடு" என்று அந்த மாமரம் சொன்னது. "எனக்கு உன்னுடன் விளையாட நேரம் இல்லை. நான் என் குடும்பத்திற்கு வேலை செய்து சம்பாதிக்கவேண்டும். நாங்கள் தங்கிவாழ்வதற்கு எங்களிடம் ஒரு வீடு கூட இல்லை என்ன செய்வது என்ற தெரியவில்லை ? " எனவருத்ததுடன் கூறினான் அந்த இளைஞன் அதற்கு மாமரம்: " பராவாயில்லை தம்பி என்னிடம் நீகேட்பது போன்ற வீடும் எதுவும் இல்லை. ஆனால் அதற்கு பதிலாக அவ்வாறான வீட்டைக் கட்டுவதற்கு என்னிடம் இருக்கும் கிளைகளை வெட்டி எடுத்து சென்று பயன்படுத்தி கொள்க. " எனக்கூறி.யது உடன் அந்த இளைஞன் தங்களுக்கான வீடுகட்டுவதற்காக மகிழ்ச்சியுடன் அந்த மரத்தின் கிளைகள் அனைத்தையும் வெட்டி, எடுத்து சென்றான். மாமரமும் அந்த இளைஞனுக்கு உதவியதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது, ஆனால் அந்த மனிதன் நீண்டநாட்களுக்கு அந்த மாமரத்திடம் திரும்பி வரவில்லை. மாமரம் மீண்டும் தனிமையாகவும் சோகமாகவும் இருந்தது. ஒரு வெப்பமிகுந்த கோடைநாளில், அந்த மனிதன் அந்த மாமரத்தினை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தான் மாமரமானது அவனுடைய வருகையினால் மிகமகிழ்ச்சியுற்றது. "தம்பி வா வந்து என்னுடன் விளையாடு!" என்று அந்த மாமரம் சொன்னது. "நான் முன்பு போன்று சிறுவனோ இளைஞனோ அன்று நான் என்னுடைய குடும்பத்திற்கு சம்பாதிக்கவேண்டும் அதற்காக அருகிலுள்ள கடலில் மீன் பிடித்துவந்து விற்பணை செய்திட விரும்புகின்றே ஆனால் அதற்கான படகினை வாங்கு வதற்கு என்னிடம் பணம் இல்லை எனக்கு ஒரு படகு கொடுக்க முடியுமா? "என்று அந்த மனிதன் கூறினான். மாமரம்: "உனக்கு படகு கட்ட என்னுடைய அடிமரத்தை பயன்படுத்தி கொள்க படகின்மூலம் கடலில் வெகுதூரம் சென்றுநல்ல கடல் மீன்களை பிடித்து விற்பணைசெய்து உன்னுடைய குடும்பத்தை காப்பாற்றுக "எனக்கூறியது எனவே அந்த மனிதன் தனக்கான படகு செய்வதற்காக அந்த மாமரத்தின் அடிமரத்தினை மகிழ்ச்சியுடன் வெட்டினான். நல்ல அருமையான படகினை செய்து அதன் வாயிலாக கடலிற்கு சென்று மீன்களை பிடித்த வந்து விற்று போதுமான அளவிற்கு பணம் சம்பாதித்தான் நீண்ட காலம் அந்த மனிதன் அந்த மாமரம் இருந்த பக்கத்திற்கு திரும்பவேயில்லை. இறுதியாக, பல ஆண்டுகள் கழித்து அந்த மனிதன் மாமரத்திற்கு திரும்பினான் "தம்பி நீபறித்து தின்பதற்கு என்னிடம் மாம்பழம் எதுவும் இல்லை ", மரம் கூறியது. அதற்குஅம்மனிதன் : "எந்த பிரச்சனையும் இல்லை, மாம்பழத்தை கடித்து தின்பதற்கு எனக்கு பற்கள் எதுவும் இல்லை." என்று கூறினான் அந்த மனிதன் மாமரம்: "நீ ஏறி விளையாடுவதற்கு என்னிட கிளைகள் இல்லை" என்றது. "எனக்கு இப்போது வயதாகிறது அதனால் கிளைகளில என்னால் ஏறமுடியாது" என்று அந்த மனிதன் கூறினான். " உனக்கு கொடுப்பதற்கு தரையினடி.யிலுள்ள இந்த வேரினை தவிர என்னிடம் எதுவமேஇல்லை இந்த வேர்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன" என்று மாமரம் கண்ணீருடன் சொன்னது. " எனக்கு இப்பொழுதுஎதுவும் தேவையில்லை, நான் ஆடிஓடி பாடுபட்டுவி்ட்டதால் சோர்வாக இருக்கிறேன் ஓய்வெடுக்க ஒரு இடம்.மட்டும் தேவை "என்று அந்த மனிதன் கோரினான் . மாமரம்: "நல்லது! தம்பி வா என்னுடைய வேர்களில் , அமர்ந்துசாய்ந்து ஓய்வெடுத்துகொள். " எனக்கூறியது உடன் அந்த மனிதன் மாமரத்தின் வேர்களில் சாய்ந்த உட்கார்ந்து ஓய்வெடுக்க துவ்ஙகினான், மாமரமானது மகிழ்ச்சியுடனும் கண்ணீருடனும் சிரித்து மகிழந்தது. நாம்சிறுவர்களாகஇருந்தபோது நம்முடைய பெற்றோர்கள்நமக்கு தேவையான உணவினை அளித்து நாம் நோய்நொடி இன்றி நன்றாக வளருவதற்கு தேவையானவகையில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்கள் அதன்பின்னர் நம்க்கு போதுமான கல்வியறிவு பெறச்செய்தார்கள் பின்னர் நல்ல வேலைவாய்ப்பினை பெற்று தந்தார்கள் அதன்பின்னர் நமக்கு திருமனம் செய்து நாம் வாழ்வதற்கான வீடுவாசல் போன்ற வசதிகளை அளித்தார்கள் அவ்வாறானஅனைத்தையும் தனக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை தம்முடைய பிள்ளைகள் நன்கு வாழவேண்டும் என தியாகம் செய்து நம்மை காத்து வளர்த்தார்கள் ஆனால் நாம் அனைவரும் வளர்ந்து பெரிய மனிதனாக மாறியபோது நம்முடைய பெற்றோர்களை பேணி பாதுகாத்திடாமல் அவர்களிடம் இருந்து அனைத்தையும் பறித்து கொண்டு அவர்களை நடுத்தெருவில் நிர்கதியாக விட்டுவிடுகின்றோம் இது சரியா

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

ஒரு திறமையற்ற பணியாளர் தன்னுடைய கருவிகள் சரியில்லை என எப்போதும் குறைகூறுவார்.


நம்முடைய வெற்றி நாம் பயன்படுத்திடும் நம்முடைய கருவிகளை சார்ந்தது அன்று, அதற்கு பதிலாக நாம் அவற்றை எவ்வாறு திறமையாக பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது ஆகும் என்பதே இந்த பழமொழியின் அர்த்தமாகும். எந்தவொரு நபரும் உலகம் முழுவதிலும் உள்ள உபகரணங்கள் அனைத்தையும் தன்கைகளில் வைத்திருக்கலாம், ஆனால் அவற்றை எவ்வாறு மிகச்சிறப்பாக பயன்படுத்துவது என்று அவருக்கு தெரியாவிட்டால் தன்னுடைய பணியில் வெற்றியை ஒருபோதும் அடையவே முடியாது. அதைவிட, தனக்கு கிடைக்கும் எந்தவொரு கருவியையும் கொண்டு திறமையுடைய நபர்ஒருவர் எந்தவொரு பணியையும் மிகவெற்றிகரமாக முடித்திடுவார். அதையே நம்முடைய நடைமுறை வாழ்க்கை சூழலி கூட காணமுடியும். நமது திறமைகளையும் முயற்சிகளையும் அதிகபட்ச நன்மைக்காக வளர்த்து மேம்படுத்திகொள்ள வேண்டுமேயொழிய. அதைவிடுத்து ஏதாவது தவறு நடந்தால் மற்றவர்கள்மீது இதற்காக குற்றம்சாட்டகூடாது .

குமார் ரவி ஆகியஇருவரும் அண்டை வீடுகளில் வாழும் இரு விவசாயிகள் ஆவார்கள். அவ்விருவரும்தங்களுக்கென ஒரு ஜோடி காளை மாடுகளை வைத்திருந்தனர். குமார் தன்னுடைய நிலத்தில் நாள் முழுவதும் கடினமாக உழைத்துவந்தார் அதனோடு, தனது விவசாய பணிகளுக்கு உழவு மாடுகள் மிக அவசியமானது என்று அறிந்திருந்ததால், தன்னுடைய உழவு மாடுகளை நன்றாக கவனித்து பராமரித்துவந்தார்.

அதற்குபதிலாக ரவி என்பவர் தன்னுடைய உழவு மாடுகளை கொண்டு அதிகபட்ச பணியை முடித்திடுவார் ஆனால் அம்மாடுகளுக்கு தேவையான தீவணங்களை இட்டு நன்றாக பராமரிக்காத முழுச்சோம்பேறியாக இருந்துவந்தார்,

அதனால் ஒரு உண்மையான நண்பனாக குமார் என்பவர் இரவி என்பவரிடம் நம்முடைய விவசாயத்திற்கு உதவிடும் விலங்குகளுக்கு தீங்கு விளைவிப்பதையும் கொடுமைப்படுத்தாமலும் அவைகளை பராமரிக்கும்படி அறிவுறுத்தியதோடுமட்டுமல்லாமல் அவைதான் விவசாயத்திற்கு அடிப்படையாகும் என தன்னுடைய நண்பருக்கு சுட்டிகாட்டினார் ஆயினும் இரவி இந்த அறிவுரைகளை ஏற்று பின்பற்றாமல் மாடுகளை சரியாக பராமரிக்காததால் அவைகளினால் விவசாயபிகளை முடிக்கமுடியவில்லை அதனால் அவைகளை அருகிலிருந்த காட்டிற்கு விரட்டிவிட்டார் அதனை தொடர்ந்து இரவி என்பவர் தன்னுடைய நிலத்தில் ஒருபகுதியை விற்று உழவுபணிகளுக்காக புதியதாக டிராக்டர் ஒன்றினை வாங்கினார்.

பருவமழை விரைவில் வந்து பயிரிடவேண்டியநிலையில் . குமார் என்பவர் தன்னுடைய உழவுமாடுகளை கொண்டு நிலத்தை நன்றாக உழுது சாகுபடிக்கு தயாராகவும் இருந்ததால் பயிரிட்டு அந்த பருவத்தில் நல்ல மகசூலை அடையமுடிந்தது. ஆனால் ரவிஎன்பவர் தனது சோம்பேறிதனத்தால் உழவிற்காக வாங்கியிருந்த தனது புதிய டிராக்டரை கூட நன்கு பராமரிக்காமல் விட்டதால் அதனை இயக்கி நிலத்தை உழுது சாகுபடிக்கு தயார்படுத்ததால் குறிப்பிட்ட பருவத்தில் பயிரிடமால் போதுமான மகசூல் விவசாயத்திலிருந்து கிடைக்கவில்லை. அவருடைய பரிதாபகரமான நிலைக்கு அவரே பொறுப்பாளியாவர் என்பதை உணரவில்லை மேலும் விவசாய வருமானத்தை இழந்ததுமட்டுமல்லால் அவர் தன்னுடைய மோசமான பராமரிப்பு காரணமாக புதியாக வாங்கிய டிராக்டரை சரிசெய்வதற்காக அதிக பணம் செலவழித்தார். வருமானத்திற்காக நிலத்தை விற்கவேண்டிய இக்கட்டாண நிலைக்கு தள்ளப்பட்டார்

சிறந்த கருவிகளைப் பெற்றிருந்த போதிலும் ரவிஎன்பவரால் விவசாயத்தில் வெற்றி பெற முடியவில்லை, அதேசமயம் குமார் ஒரு நல்ல திறமைாளராக இருந்ததால், குறைந்த வசதிகொண்ட கருவிகளைகொண்டிருந்தபோதிலும் அவரால் விவசாயத்தில்வெற்றி பெற முடிந்தது.

வியாழன், 14 செப்டம்பர், 2017

ஆளின் தோற்றத்தை வைத்து தவறாக முடிவுசெய்திடக்கூடாது


ஓட்டுநர் நான் மனிதவளத்துறை முதுநிலைபட்டபடிப்பு முடித்தபின்னர்எனக்கு வெகுதூரத்தில் இருந்தஒரு நிறுவனத்தின் மனிதவளததுறை தலைவர்பணிக்கான பயிற்சியாளராக சேருமாறு உத்திரவு கடிதம் கிடைக்கபெற்றவுடன் அங்கு சென்று சேருவதற்கு தொடர்வண்டியில் இரவு பயனம் துவங்கி விடியற்காலை அந்த தொடர்வண்டிநிலையத்திற்கு சென்றுசேர்ந்தேன் எனக்கு வந்த கடிதத்தில் நான் அந்த ஊரின் தொடர்வண்டி நிலையத்திற்கு வந்து சேரும்போது மகிழ்வுந்து ஒன்று வந்துஅழைத்து சென்று அந்நிறுவனத்தின் விருந்தினர்மாளிகைக்கு கொண்டு சேர்த்திடும் எனக்குறிப்பிட்டு இருந்ததால் அவ்வாறான வண்டி எதுவும் வந்துள்ளதாவென தேடியபோது மகிழ்வுந்த ஓட்டுநரின் சீருடையில் நபர்ஒருவர் அங்கு காத்திருந்ததை கண்ணுற்று அவரை அழைத்து என்னுடைய பெட்டியை எடுத்து அந்தவண்டியல் வைத்திடுமாறு குறிப்பிட்ட நிறுவனத்தின் விருந்தினர்மாளிகைக்கு என்னை அழைத்து செல்லுமாறும் கூறியதை தொடர்ந்துஅந்த மனிதன் அவ்வாறே என்னுடைய பெட்டியை எடுத்து சென்று மகிழ்வந்தில் வைத்தார் நானும் அந்த வண்டியில் ஏறிஅமர்ந்த வுடன் வண்டியை இயக்கி ஓட்ட்ஆரம்பித்தார் வழிநெடுக என்னைபற்றிய விவரங்களை கேட்டு கொண்டே வந்தபோது நான் சாதாரண ஓட்டுநரிடம் பேசுவதை போன்றே பதில்கூறிவந்தேன் விருந்தினர் மாளிகை வந்தவுடன் அங்கு பணிபுரியும் பணியாளர் ஓடிவந்த வண்டியின் கதவினை திறந்து பணிவாக வணக்கம் செலுத்தினர் என்னுடைய பெட்டிய வண்டியிலிருந்து எடுத்து சென்றனர் பின்னர் காலைக்கடன் களை முடித்து சிற்றுன்டி சாப்பிட்டபின்னர் அந்நிறுவனத்தின் நிருவாக அலுவலகத்திற்கு என்னுடைய பணியை ஏற்க சென்றபோது அங்கு காலையில் என்னைை தொடர்வண்டி நிலையத்தில் இருந்து அழைத்து சென்ற ஓட்டுநர் இருப்பதை பார்த்து புன்னகைத்து இங்கு என்ன பணியில் இருக்கின்றீர் கள் என வினவியபோது உடன்அருகிலிருந்த பணியாளர் அவர்தான் இந்த நிறுவனத்தின் தலைவரும் சொந்தகாரரும் ஆவார் எனக்கூறியதும் எனக்கு மயக்கமே வந்துவிடும் அளவிற்கு அதிர்ச்சியாகி நின்றுவிட்டேன் அவர் ஒன்றும் பயப்படாதீர் நான் ஒருநன்பரைசந்திப்பதற்காக தொடர்வண்டி நிலையத்திற்கு வந்தேன் அப்படியே புதியதாக பணியில் சேரவந்த உங்களையும் அழைத்துவந்தேன் அவ்வளவுதான் உங்களுடைய பணியை நீங்கள் துவங்கலாம் என தைரியம்அளித்தார் நாம் ஆளின் தோற்றத்தை வைத்து தவறாக முடிவுசெய்திடக்கூடாது என முடிவுசெய்து கொண்டேன்

சனி, 2 செப்டம்பர், 2017

கொடிக்கம்பத்தின் உயரம் எவ்வளவு எனஅளந்திடுமாறு கோரினால் கொடிக்கம்பத்தின் நீளம் எவ்வளவு என அளந்து கூறுகின்றாரே இது சரியா?


ஒரு நிருவாகிகளின் பயிற்சி நடைபெறும் இடத்தில் நடைபெற்ற பயிற்சியில் கலந்துகொண்ட மூத்த மேலாளர்களின் குழுவிற்கு அருகிலிருந்த கொடிமரத்தின் உயரம் எவ்வளவு என கூறுமாறு பணிக்கப்பட்டனர் உடன் அந்தபயிற்சியில் கலந்து கொண்ட மூத்தமேலாளர்களின் குழுவானது இதற்காக உயரமான ஏணி அளப்பதற்கான நாடா ஆகியவற்றை கொண்டு குழுவாக முயற்சிசெய்தனர் அதாவது அந்த குழுஉறுப்பினர்களில் இருவர் ஏணியைஎடுத்துவந்து அந்த கொடிக்கம்பத்தின்மீது சாய்த்து தரையில் நிற்க வைத்து பிடித்துகொண்டனர் மூன்றாமவர் அளவுநாடாவின் ஒருமுனையை பிடித்து கொண்டு அந்த ஏணியில் கொடிமரத்தின் உச்சிக்கு ஏறமுயன்றுகொண்டிருந்தார் நான்காவது நபர் அளவுநாடவின் மற்றொரு முனையை தரையில் உட்கார்ந்து கொடிக்கம்பத்தின் அடியில்பிடித்து கொண்டிருந்தார் ஐந்தாவது நபர் இதனை மேற்பார்வை செய்துகொண்டிருந்தார் ஏணியின் வாயிலாக கொடிக்கம்பத்திற்கு ஏறமுயற்சித்தவர் ஒரு குறிப்பிட்ட நிலைக்குமேல் ஏறமுடியாமல் கீழேவிழுவதை போன்று தடுமாறினார் அதனால் அதற்குமேல் கொடிமரத்தின் உச்சிக்கு தன்னால் சென்றுஅதன் உயரத்தை அளக்கமுடியாது என கீழேஇறங்கிவந்தார் அந்த குழுவின் மிகுதி உறுப்பினர்களும் கொடிமரத்தின் உச்சிக்கு செல்வதற்கு பயந்ததால் தங்களால் அந்த பணியை செய்யஇயலாது எனஒத்துகொண்டனர் இந்நிலையில் பார்வையாளராக இருந்தஒருவர் தான் அந்த பணியை செய்வதாக ஏற்றுகொண்டு அந்த கொடிமரத்தினை சுற்றி பள்ளம் தோண்டி அந்த கொடிக்கம்பத்தை வெளியிலெடுத்து தரையில் படுக்கவைத்து அளவுநாடவின் வாயிலாக அதன் ஒருமுனையிலிருந்து மற்றொரு முனைவரைஅளந்து எவ்வளவு என தாளில் குறித்து கொண்டு அந்த கொடிமரத்தைமீண்டும் செங்குத்தாக அதேஇடத்தில் நட்டு தோண்டிய பள்ளத்தை மண்ணால் மூடிவிட்டு எவ்வளவு நீளம் அந்த கொடிக்கம்பம் என விடையை கூறிவிட்டு நடையை கட்டினார் அதனை தொடர்ந்து பயிற்சியில் கலந்துகொண்ட மூத்த மேலாளர்களின் குழுவானது கொடிக்கம்பத்தின் உயரம் எவ்வளவு எனஅளந்திடுமாறு கோரினால் இந்த நண்பர் கொடிக்கம்பத்தின் நீளம் எவ்வளவு என அளந்து கூறுகின்றாரே இது எங்களுக்கு தெரியாதா என கேலி செய்து சிரித்தனர்

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

நம்பிக்கையானவர்கள் யார்யார் என அறிந்து கொள்க


முற்காலத்தில் முனிவர் ஒருவர் ஒருநாட்டின் இளவரசனுக்கு பரிசாக மூன்று பொம்மைகளை அளித்தார் உடன் அவ்விளவரசன் அம்முனிவரிடம் ஐயா நான் என்ன விளையாட்டு பிள்ளையா இந்த பொம்மைகளை வைத்து விளையாடுவதற்கு என கூறினான் உடன் இளவரசே கொஞ்சம் பொறுங்கள் வருங்காலத்திய அரசனுக்கு இந்த பொம்மைகளின் செயல் மிகமுக்கிய படிப்பினையாக இருக்கும் பாருங்கள் இப்போது எனக்கூறினார் அதனைதொடர்ந்து அம்முனிவர் அவ்விளவரசினடம் சிறு கம்பியை கொடுத்து அந்த பொம்மைகளின் ஒவ்வொன்றின் காதுகளின் வழியாக அந்த கம்பியினை உள்செலுத்துக அதன்பின்னர் என்ன நடைபெறுகின்றது என பொறுமையாக பார் எனக்கூறினார் அதனை தொடர்ந்து அவ்விளவரசன் முனிவர் வழங்கிய கம்பியைமுதல் பொம்மையின் காதின் வழியாக உள்நுழைத்தபோது அந்த கம்பியின் முனையானது மற்றொரு காதுவழியாக வெளிவந்தது இவ்வாறான மனிதர்கள் நாம் கூறும் எந்தவொரு செய்தியையும் ஒருகாதில் வாங்கி மறுகாதுவழியாக விட்டிட்டு நாம் கூறும் கட்டளையை பின்பற்றி செயல்படமாட்டார்கள் அதனால் அவ்வாறானவர்களை நம்பவேண்டாம் என அறிவுரைகூறினார் அடுத்த பொம்மையின் காதின் வழியாக கம்பியை அவ்விளவரசன் உள்நுழைத்தபோது அந்த கம்பி அந்த பொம்மையின் வாய்வழியாக வெளியேவந்தது இந்த பொம்மையானது நாம் கூறும் எந்தவொரு செய்தியையும் இரகசியம் காத்திடாமல் மற்றவர்களுக்கு உடனடியாக தகவலை பரப்பிவிடுவார்கள் அதனால் இவர்களையும் நம்பிக்கையான நபராக வைத்து கொள்ளக்கூடாது அவ்விளவரசன் மூன்றாவது பொம்மையின் காதின் வழியாக கம்பியை உள்நுழைத்தபோது அப்படியே உள்ளேயே இருந்தது இந்தமூன்றாவது பொம்மைபோன்ற மனிதர்கள் நாம்கூறும் செய்திகளை எங்கும் யாருக்கும் கூறவும்மாட்டார்கள் மேம்போக்காக விட்டிடவும் செய்யமாட்டார்கள் மிகநம்பகமான மனிதர்கள் அவர்களை நம்முடன் வைத்து கொள்ளலாம் இவ்வாறான அறிவுரையை இந்த பொம்மைகளின் தொகுதிகளிலிருந்து மனிதர்களின் தன்மையை தெரிந்து நம்பகமானவர்கள் யார்யார் என அறிந்து செயல்படுக என அம்முனிவர் இளவரசனுக்கு அறிவுரை வழங்கினார்

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

ஸ்மார்ட் போன் போன்ற பல்வேறு வீட்டு உபயோக பொருட்களுக்கு அடிமையாகாதீர்கள்


மதிய உணவிற்குப் பிறகு ஆசிரியை ஒருவர் தன்னுடைய மாணவர்களிட-மிருந்து பெறப்பட்ட வீட்டுப்பாடங்களைத் திருத்தம் செய்திட துவங்கினார். அவரது கணவர் அவருடைய விருப்பமான விளையாட்டு ஒன்றினை திறன் பேசியில் (ஸ்மார்ட் போனில் )விளையாடிகொண்டிருந்தார் . அம் மாணவர்களின் கடைசி வீட்டுபாட நோட்டினை திருத்தவதற்காக படிக்கும்போது, அந்த ஆசிரியை மௌனமாக கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோட அழுத்தொடங்கினாள். இதனை கண்ணுற்ற அவளுடைய கணவன் , 'ஏன் அழுகிறாய்? என்ன நடந்தது?' என வினவினான் உடன் அவருடைய மனைவி: 'நேற்று நான் என் னுடைய நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு - என் விருப்பம். என்ற தலைப்பில் வீட்டுபாடம் எழுதிடுமாறு கூறியிருந்தேன் ' கணவன்: 'எல்லாம் சரி, ஆனால் நீ ஏன் அழுகிறாய்?' மனைவி: 'இன்று அம்மாணவர்களின் வீட்டுப்பாடங்களை திருத்தி கொண்டிருந்தேன் இந்த கடைசி வீட்டுபாட நோட்டை சரிபார்த்து திருத்தம் செய்திடலாம் என படித்தபோது எனக்குமிகவும் அழுகையாக வருகின்றது.' கணவன் ஆர்வத்துடன்: 'நீ அழுகின்ற அளவிற்கு அதில் என்ன எழுதியிருக்கிறது?' மனைவி: ' நீங்களே பாருங்கள் என அந்த வீட்டுபாட நோட்டினை தன்னுடைய கணவனிடம் கொடுத்தாள் அதில் 'நான் ஒரு திறன் பேசியாக( ஸ்மார்ட் போன் ஆக) விரும்புகிறேன். ஏனெனில் எப்போதுமே என்னுடைய பெற்றோர்கள் என்னை கவனித்துக் கொள்ள மறந்துவிடுகிறார்கள். அதாவது என் பெற்றோர்கள் என்னை விரும்புவதைவிட தங்களுடைய ஸ்மார்ட் போனையே அதிகம் விரும்புகிறார்கள். என்னுடைய தகப்பனார் அலுவலகத்திலிருந்து சோர்வாக வந்து சேர்ந்தாலும் உடன் என்னை மட்டும் மறந்துவிட்டு தன்னுடைய ஸ்மார்ட் போனில் மூழ்கி போய்விடுகின்றார் அவ்வாறே என்னுடைய தாயும் அலுவலகம் முடிந்த சோர்வாக வந்துசேர்ந்தாலும் உடன் என்னை மட்டும் மறந்துவிட்டு தன்னுடைய ஸ்மார்ட் போனை கையிலெடுத்து கொள்கின்றார் ஆனால் இவ்விருவரும்என்னை மட்டும் கவணிக்க நேரம் இல்லை என்கின்றார் என் பெற்றோர் ஒரு சில முக்கிய வேலைகளை ஆழ்ந்து செய்து கொண்டிருந்தாலும் ஸ்மார்ட் போன் ஒலிக்கத்துவங்கியவுடனே அதனை கையிலெடுத்து அவர்கள் தொலைபேசியின் உரையாடலில் கலந்து கொள்கிறார்கள், ஆனால் . நான் அழுதால் ஏனென்று கூட திரும்பி பார்க்காமல் தங்களுடைய பணியில் மூழ்கி இருக்கின்றனர். எப்போதும் என்னுடைய பெற்றோர்கள் தங்களுடைய ஸ்மார்ட் போன்களில் விளையாடுகின்றனர் ஆனால் என்னுடன்மட்டும் விளையாடுவதேயில்லை. என்னுடன் விளையாடுவதற்கு மட்டும் நேரமே இல்லை யென்கின்றனர் என்னுடைய பெற்றோர்கள் தங்களுடைய ஸ்மார்ட் போனில் மற்றவர்களுடன் பேசும் போது மற்றவர்கள் கூறுவதை காதுகொடுத்து எவ்வளவு நேரமானாலும் பதில் கூறுகின்றனர் ஆனால், நான் ஏதேனும் என்னுடைய பெற்றோர்களிடம் சந்தேகம் கேட்டால் தங்களுக்கு தலைக்கு மேல் வேலை ஏராளமாக இருப்பாதல் காதுகொடுத்து கேட்கவும் மாட்டேன்என்கின்றார்கள் என்னுடைய சிரித்து பேசி உரையாடவும் செய்வதி்ல்லை . எனவே, நான் ஸ்மார்ட் போன் ஆகவே விரும்புகிறேன். என முடிந்திருந்தது இதனை படித்த கணவன், உணர்ச்சிவசப்பட்டு, தன்னுடைய மனைவியிடம் , 'இதை எழுதியவர் யார்?' என வினவினார் மனைவி: 'நம் மகன் தான் இ்வ்வாறு வீட்டுபாடத்தினை எழுதியுள்ளான என பதில் கூறினாள் ஆம் நாம்அனைவரும் ஸ்மார்ட் போன் போன்ற பல்வேறு வீட்டு உபயோக பொருட்களுக்கு அடிமையாகி நம்முடை ய வீடு குழந்தைகள் ஆகிய யாருடனும் அன்புடனும் பேசி பழகி வாழ்வதற்கு அறவே மறந்து விடுகின்றோம் இதனுடைய தீய விளைவை தற்போதாவது தெரிந்து விழிப்புணர்வு பெற்று நம்முடைய பிள்ளைகளுடன் கூடிஉரையாடி பேசி மகிழ்வுடன் வாழ உறுதி கொள்வோம்

சனி, 22 ஜூலை, 2017

நம் மனதில் இருந்து தேவையற்ற எல்லா செய்திகளையும் மறந்துவிட்டால், நிம்மதியாக இருப்பதைஉணரலாம்


ஆசிரியர் ஒருவர் அவருடைய மாணவர்களுடன் சேர்ந்து பொருட்களை விற்கவும் வாங்கவும் செய்வதற்காக பலரும் கூடிடும் ஒரு சந்தையில் நடந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு மனிதன் கயிறு ஒன்றால் கட்டப்பட்ட மாடுஒன்றினை பிடித்து இழுத்து கொண்டிருந்தை பார்த்தனர். . "மாணவர்களே இந்த பசு மாடு மனிதன் ஆகிய இருவரில் யார் யாரைக் கட்டுப்படுத்துகின்றனர் என்று சொல்லுங்கள்? பசுமாடு மனிதனை கட்டுபடுத்துகின்றதா அல்லது மனிதன் பசுமாட்டினை கட்டுபடுத்துகின்றனா? என ஆசிரியர் வினவினார்

உடன் ஒருமாணவன் "மனிதன் மாட்டினை கட்டுப்படுத்துகின்றான், ஏனெனில் மனிதன் அந்த மாட்டினை கயிறுமூலம் கட்டி அதனை தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருக்கிறான், அதானால் அந்த மாடுஆனது அந்த மனிதன் எங்கே போனாலும் அவனைப் பின்தொடர வேண்டும் அந்த மாடானாது அவனுக்கு அடிமையாகும அந்தமனிதன் அந்த மாட்டிற்கு எஜமானன் " என்று கூறினான். . "

"இப்போது என்ன நடக்கபோகின்றது என பாருங்கள்" என்று அந்த ஆசிரியர் கூறியபடி, தன்னுடைய பையிலிருந்து கத்தரிக்கோல் ஒன்றினை தன்னுடைய கைகளால் எடுத்து, மாட்டை கட்டியிருந்த கயிற்றினை வெட்டினார். உடன் அந்த பசுமாடானது தன்னுடைய எஜமானனின் பிடியிலிருந்து விடுபட்டு வெகுவேகமாக ஓடியது அதனை தொடர்ந்து அந்த மனிதன் ஓடுகின்ற தனது மாட்டினை பிடிப்பதற்காக வேகாமாக துரத்திக்கொண்டு ஓடினான். .உண்மையில் அந்த பசு மாட்டிற்கு இந்த மனிதன் மீது அக்கறை இல்லை, அதனால் அவனுடைய இழுப்பிற்கு செல்லாமல் திமிறிகொண்டிருந்தது அவ்விருவருக்கும் இடையில் இருந்த தடைநீங்கியவுடன் தப்பித்தால் போதுமென அந்த பசுமாடானது தப்பித்து வேகமாக ஒடுகின்றது அது போலவே, நாம் நம்மனதிற்குள் செல்லும் தேவையல்லாத அனைத்து உணர்வுகளையும் அதில் ஆர்வம் இல்லையென்றாலும் . நாம் . நம் கட்டுப்பாட்டின்கீழ் அனைத்தையும் ஒன்றாக வைத்துக்கொள்ள முயற்சிகின்றோம்.அவ்வாறான நம்முடைய மனதில் நிரப்பப்பட்டிருக்கும் அனைத்து குப்பைகளானசெய்திகளை மிகுதியான ஆர்வத்தால் கட்டுபடுத்தாமல் அவை மாடுகளைப் போலவே, தப்பித்து தானாகவே ஓடி மறைந்துவிடும். "நம் மனதில் இருந்து தேவையற்ற எல்லா செய்திகளையும் மறந்துவிட்டால், நிம்மதியாக இருப்பதைஉணரலாம்

புதன், 12 ஜூலை, 2017

பங்குசந்தை நிலவணிகம் ஆகியவற்றின் சந்தைவிலை நிலவரங்கள்


சிவப்பிந்தியர்கள் வாழும் துருவப்பகுதியின் இலையுதிர் காலத்தில் மக்கள் அனைவரும் தங்களுடைய புதியதாக தலைமை ஏற்றிருந்த தலைவரை நேரடியாக சந்தித்து "வருகின்ற குளிர்காலம் அதிக குளிராக இருந்திடுமா அல்லது மிதமானதாக இருந்திடுமா அதிக குளிராக இருந்தால் அவ்வாறான அதிக குளிரிலிருந்து பாதுகாத்து கொள்ள நாங்கள் என்ன செய்யவேண்டும்? என ஆலோசனை கூறுங்கள்" என கோரினர் உடன் அந்த புதிய தலைமையாளரும் ஒரு நவீன சமுதாயத்தில் அவர் ஒரு புதிய சிவப்பு இந்தியத் தலைவராக இருந்ததால், வானிலை என்னவாக இருக்கும் என்று அவரால் சொல்ல இயலாமல். தடுமாறினார் , பாதுகாப்பாக இருக்கட்டும் என்று "வருகின்ற குளிர்காலம் அதிக குளிராக இருக்குமா அல்லது மிதமானதாக இருக்குமா என யூகிக்கமுடியவில்லை இருந்தபோதிலும் அவரவர்களுக்கு தேவையான போதுமான காய்ந்த விறகுகளை காடுகளுக்கு சென்று சேகரித்து வைத்துகொள்ளுங்கள்" என ஆலோசனை கூறினார் அதனை தொடர்ந்து செவ்விந்தியர்கள் அனைவரும் காடுகளுக்கு சென்று தத்தமக்கு போதுமானஅளவு விறகுகளைசேகரித்து கொண்டுவந்துகொண்டிருந்தனர் அந்த புதிய தலைமையாளரும் மக்களுக்கு நாம் தவறாக வழிகாட்டக்கூடாது அதனால் தேசிய வானிலை சேவையாளரிடமும் அவருடைய கருத்தினை அறிந்து கொள்வோமே என தொலைபேசியில் "வணக்கம் ஐயா! வரவிருக்கும் குளிர்காலமா மிகவும் கடுமையன குளிராக இருக்குமா?” என வினவினார் உடன் அந்த தேசிய வானிலை மைய சேவை அதிகாரியானவர் 'இந்த குளிர்காலம் உண்மையில் மிகவும் குளிராக இருக்கும் போல் தெரிகிறது,' எனப்பதில் கூறினார் அதைக்கேட்டவுடன் அந்த தலைவர் பதறியடித்து கொண்டு தன்னுடைய மக்களிடம் வந்து "மக்களே! வருகின்ற குளிர்காலம் மிகவும்கடுமையானதாக இருக்குமாம் அதனால் நீங்கள் அனைவரும் சோம்பேறித்தனபடாமல் மேலும் போதுமான காய்ந்த விறகுகளை மீண்டும் காடுகளுக்கு சென்று சேகரித்து வைத்துகொள்வது மிகவும் நல்லது" என தன்னுடைய ஆலோசனையை வலியுறுத்தி கூறினார் ஓரிரு வாரங்கள் கழி்த்துஅந்த செவ்விந்தியமக்களின் தலைமையாளர் மீண்டும் தொலைபேசியில் தேசிய வானிலை சேவையாளரிடமும் தன்னுடைய சந்தேகத்தினை உறுதிபடுத்தி கொள்வோமே என "வணக்கம் ஐயா! வரவிருக்கும் குளிர்காலம் மிகவும் கடுமையன குளிராக இருக்குமா?” என மீண்டும் வினவினார் 'ஆமாம் ஐயா,' என தேசிய வானிலை சேவைமையத்தில் உள்ள மனிதன் ஆமோதித்தோடுமட்டுமல்லாது 'இது மிகவும் குளிர்ந்த குளிர்காலமாக இருக்கும்.' மறுபடியும் பதிலளித்தான், அதனை தொடர்ந்து "எப்படி இவ்வாறு உறுதியாக கூறுகின்றீர்கள்" என வினவியபோது "அதுவா செவ்வி்ந்திய தலைமையாளர் தன்னுடைய மக்களிடம் வருகின்ற குளிர்காலத்திற்கு போதுமான காய்ந்த விறகுகளை காட்டிற்கு சென்று சேகரித்துவருமாறு உத்திரவிட்டுள்ளார் அதனால் நான் வருகின்ற குளிர்காலம்மிககடுமையாக இருக்கும்" என முன்னறிவிப்பு செய்தேன் எனபதிலளித்தார் இதே போன்றதே பங்குசந்தை நிலவணிகம் ஆகியவற்றின் சந்தைவிலை நிலவரங்களாகும் என மனதில் கொள்க

ஞாயிறு, 18 ஜூன், 2017

நீரில் மூழ்கிப்போன பூனை


ஓடும் தண்ணீரில் வீழ்ந்த பூனை ஒன்று , அந்த தண்ணீருக்குள் மூழ்கி தன்னுடைய உயிருக்காக தத்தளித்து கொண்டிருந்தது அதனை கண்ணுற்று கரையில் நின்று கொண்டிருந்த வயதான நபர் ஒருவர் அவ்வாறு உயிருக்கு போராடிகொண்டிருந்த அந்த பூனையை காப்பாற்ற முடிவு செய்தார், . அதற்காக அவர் தனது கையை நீட்டி அந்த பூனையை பிடித்திட முயன்றார் ஆனால் உயிருக்கு போராடி கொண்டிருந்த அந்த பூனையானது தன்னுடைய கால் நகத்தால் அவருடைய கையை கீறியது அதனை தொடர்ந்து அவருடைய கைகளில் ஏற்பட்ட வலியினால் அவர் தனது கையை பூனை காப்பாற்றுவதிலிருந்து இழுத்துகொண்டார் எனினும், ஒரு நிமிடம் கழித்து அவர் அந்த பூனையை காப்பாற்ற மீண்டும் தனது கையை நீட்டி பிடிக்க முயன்றார், ஆனால் அந்தபூனையானது மீண்டும் அவரை தன்னுடைய கால்களின் நகத்தால் கீறியது , அதானால் மீண்டும் ஏற்பட்ட மிக அதிக வலியால் மீண்டும் தன்னுடைய கையை இழுத்து கொண்டார் . இருந்தபோதிலும் மற்றொரு நிமிடம் கழித்து அவர் மூன்றாவது முறையாக மீண்டும் தன்னுடைய கைகளை நீட்டி அந்த பூனையை காப்பாற்ற முயற்சி செய்தார்! உடன் அவருடைய உள்மனமானது அவரிடம், " அந்த பூனையானதுஇரண்டுமுறையும் உன்னுடைய கைகளை தன்னுடைய கால்களின் நகங்களால் கீறி காயப்படுத்தியும் அதிலிருந்து பாடம் எதுவும் கற்றுகொள்ளாமல் மூன்றாவது முறையாக அந்த பூனையை காப்பாற்ற முயற்சிக்கிறாயா?” எனக்கேள்வியை எழுப்பியும் அதனை ஒதுக்கிவிட்டு அந்த மனிதன் வாயற்ற உயிரினம் ஒன்று உயிருக்கு போராடும்போது அந்த பூனையை காப்பாற்ற நம்மால் முடிந்த வரை முயற்சி செய்வது நம்முடைய கடமைஎன முயற்சி செய்து கைகளில் அந்த பூனையின் கால்நகங்களினால் கீறியதால் ஏற்பட்ட வலியை பொருட்படுத்தாது அந்த பூனையின் உயிரைகாப்பதில் வெற்றி பெற்றர். அதேபோன்று மனிதர்களாகிய நாம் அனைவரும் நம்முடைய பிள்ளைகளுக்கும் நம்மைவிட அனுபவமில்லாதவர்களுக்கும் உதவி செய்யமுற்படும்போது நமக்கு ஏற்படும் எந்தவொரு இடர்களுக்கும் சோர்வுறாமல் அவர்களுக்கு தேவையான நல்ல செயல்களை செய்து நல்வழிகாட்டுவது நம்முடைய கடைமையாகும்

செவ்வாய், 13 ஜூன், 2017

இரத்தத்தில் சர்க்கரை இருக்கின்றதா எனும் பரிசோதனை


தமிழ்நாட்டின் கிராமம் ஒன்றில் வாழும் ஒரு நடுத்தர வயதுமனிதன் அருகிலிருந்த நகரத்தின் மருந்துகடை ஒன்றிற்கு சென்றார்கையோடு சிறு கண்ணாடியாலான பாட்டில் ஒன்றும் ஒரு ஸ்பூனும் எடுத்து சென்றிருந்தார் அந்த மருந்துகடையில் இருந்த மருந்தாளுநரிடம் தான்வைத்திருந்த பாட்டிலிலிருந்த தண்ணீர் போன்ற திரவத்தை கைவசமிருந்த ஸ்பூனில் ஊற்றி "ஐயா! இந்த தண்ணீரை சுவைத்து பாருங்கள் இனிப்பாக இருக்கின்றதா? என சுவைத்தபின் கூறுங்கள்" என கேட்டுகொண்டார் அதனைதொடர்ந்த அந்த மருந்தாளுநரும் அந்த ஸ்பூனில் இருந்த தண்ணீரை வாயில் வைத்து சுவைத்தபின்னர் "இனிப்பாகவும் இல்லை சுவையாகவும் இல்லையே" என பதில் கூறினார் "இதைதான்ஐயா! நானும் கூறுகின்றேன் ஆனால் மருத்துவர் "உனக்கு சர்க்கரை வியாதி வந்துள்ளது உன்னுடைய மூத்திரத்தில் சர்க்கரை அளவு அதிகமாக செல்கின்றது நீபோய் அந்த மருந்து கடையில் நான் எழுதிதரும் மாத்திரையை வாங்கி ஒருமாதத்திற்கு சாப்பிட்டபின் திரும்பிவா" எனக்கூறுகின்றார் இது சரியா? ஐயா! என்னுடைய மூத்திரம் இனிப்பாக இல்லை எனநீங்களே கூறிவிட்டீர்கள் அப்புறம் நான்எதற்கு சர்க்கரைக்கான மாத்திரை வாங்கவேண்டும்" என பஞ்சாயத்து பேசினார் இவ்வாறான பேச்சினை கேட்டவுடன் மருந்தாளுநர் வெண்ணைதின்ற குரங்காக அடுத்து என்னசெய்வது என தெரியாமல் திகைத்து உட்கார்ந்து விட்டார்

திங்கள், 5 ஜூன், 2017

குட்டி முயல்களும் அவற்றின் தாய்முயலும்


ஒரு தாய் முயலும் பல குட்டி முயல்களும் ஒன்றாக சேர்ந்து ஒரே குடும்பமாக வாழ்ந்துவந்தன . அந்த தாய்முயலானது , நாள் முழுவதும் அவைகளுக்கு சிறந்தது எது என அவ்வப்போது அறிவுரை கூறி திருத்துவது: அவைகள் சாப்பிடக்கூடிய மூலிகைகள், சாப்பிடாமல் தவிர்க்கூடியவை எவை என சிறந்த வழிகாட்டியாக வும் இருந்து ,உணவை தேடுவதற்கு வெளியே எப்போது செல்வது என்பனபோன்று ஆலோசனைகளுடனும் ஒரு நல்ல தாயாக தன்னுடைய பிள்ளைகளுக்கு சிறப்பாக வழிகாட்டி வளர்த்துவந்தது "எல்லாவற்றிற்கும் மேலாக, வேட்டைக்காரர்களிடம் மாட்டாமல் நம்முடைய உயிர்பாதுகாப்பதி ல் நீங்கள் அதிககவனம் செலுத்த வேண்டும் ..." என்ற அறிவுரையை இறுதியாக கூறியது "ஆனால் பத்திரிகைகளை எதையும் நாங்கள் படிக்காமல் வேட்டைக்கார்களை ப் பற்றிய செய்தியை நாம் எப்படி அறிந்து கொள்வது?" என்று ஒரு குட்டிமுயல் ஒன்று தன்னுடைய தாயிடம் சந்தேகம் கேட்டது. "வெகு தொலைவில் துப்பாக்கி சத்தங்களுடன், வேட்டை நாய்கள் குரைத்து கொண்டு ஓடிவருகின்ற சத்தங்களை கேட்டவுடன் , நீங்கள் ஓடி பதுங்கி கொள்ள வேண்டும்," என்று அவர்களுடைய தாய் முயல் எச்சரித்தது. இதனை தொடர்ந்து ஒரு நாள், குட்டிமுயல்களில் ஒன்று அவசரஅவசரமாக தன்னுடைய தாய்முயலிடம் ஓடிவந்து "அம்மா அம்மா நான் வெகுதூரத்தில் நீங்கள் கூறியவாறான வேட்டுசத்தங்களும் பேண்ட் வாத்திய முழக்கங்களும் நாய் குறைப்பு சத்தத்தையும் கேட்டேன் வேட்டைக்காரர்கள் வேட்டையாட வந்துகொண்டிருக்கின்றனர் தயைவுசெய்து வாருங்கள் நாம் மறைந்து கொள்வோம் . " என பதட்டத்துடன் கூறியது உடன் தாய் முயல் "பிள்ளைகளே , தூரத்தில் கேட்கும் வேட்டுசத்தம் துப்பாக்கி சத்தமன்று கிராமத்தில் திருவிழா நடைபெறுகின்றது அதில் புஸ்வானம் விடுவார்கள் அந்த சத்தமும் அதனோடு அவர்கள் இசைக்கருவிகளை இயக்கி மகிழ்ச்சியாக ஆடிப்பாடுகின்றனர் அதுவும் சேர்ந்து அவ்வாறு கேட்கின்றது அதனால் பயப்படவேண்டாம் நாம் நம்முடைய உணவு தேடலை தொடர்ந்து செயல்படுத்திடுவேம் . " என ஆறுதல் கூறி அமைதிபடுத்தியது சில நாட்கள் கழித்து, குடும்பம் முழுவதும் உணவை தேடி மேய்ந்து கொண்டிருக்கும்போது ஒரு பாம்பு நடனம் போன்ற காதுக்கு இனிய மெல்லிசைய காற்றில் எதிரொலித்தது போது ..இதற்குமுன் இது போன்ற எதையும் கேட்டதில்லை அதனால் தாய் முயல் கவனத்துடன் குட்டி முயல்களை பார்த்து."பிள்ளைகளே நாம் தற்போது நம்முடைய வீட்டிற்கு செல்வதுதான் நம்முடைய உயிருக்கு பாதுகாப்பானது ," என்று எச்சரிக்கை செய்தது, குட்டி முயல் அந்த இசையை வினோதமாகக் கண்டறிந்து:"ஆனால் அம்மா, இத்தகைய இனிமையான இசையை நாம் இதுவரை கேட்டதே இல்லை அதனால் இதனை நாம் இங்கிருந்து கேட்டு மகிழ்வோமே?" எனக்கோரிக்கை வைத்தது "பிள்ளைகளே இந்நிலையில் தவறாக இசைக்கு மயங்காதீர்கள் வாருங்கள் இந்த குழிக்குள் மறைந்து கொள்வோம் என க்கூறி தாய்முயலானது பிள்ளைகளுடன் ஒரு மன்குழிக்குள் மறைந்து கொண்டது சிறிது நாள் கழித்து மற்றொரு குட்டிமுயல் வந்து : "நான் துப்பாக்கிகளை கைகளில் வைத்து கொண்டு இ்ந்த வழியாக செல்லும் மனிதர்களை பார்த்தேன். அவர்கள் வேட்டைக்காரர்களாக இருக்க வேண்டும். " என பதற்றத்துடன் கூறியது "நானும் அவர்களைப் பார்த்தேன்," என்று தாய்முயல் கூறியது மேலும் அந்த தாய்முயலானது . "நீங்கள் இதைப் பற்றி கவலைப்படக்கூடாது. அவர்கள் வனக்காவலாளர்களாவார்கள் , அவர்கள் சட்டத்தால் தடைசெய்யப்பட்ட யாரும் வேட்டையாடவும் இதர செயல்களுக்காகவும் இந்த காட்டிற்குள் நுழையாமல் நமக்கு பாதுகாப்பதற்காக பணிபுரிகின்றனர் . இருப்பினும், எப்போதும் நாம் பாதுகாப்புடன் இருப்பது நல்லது. " இவ்வாறான காடுகளின் வாழ்க்கை யானது எப்போதும் மிகவும் ஆபத்தானது. அறிவுரை: நம்முடைய வாழ்க்கையானது ஒரு முழு அனுபவத்துடன் கூடிய ஒரு தொடர்ச்சியான பயணமாகும் இதல் மற்றவர்களின் தவறுகளிலிருந்து நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அனுவவத்தை கற்றுக்கொள்வதோடு, புதிய செய்திகளைத் தொடர்ந்து தெரிந்துகொள்ள நம்முடைய கண்களையும் அனைத்து புலன்களையும் திறந்து அனைத்து செய்திகளையும் பெற்ற அவைகளிலிருந்து நாம் சிறந்த மனிதர்களைப்போல் வாழ்வது முக்கியம். எனினும், உண்மையில் நம்முடைய வாழ்வின் அனைத்து செயல்களிலும் நாம் பயப்பட வேண்டிய ஒன்றும் இல்லை. நம் வாழ்வில் உள்ள பெரும்பாலான பிரச்சினைகளுக்கு எப்போதுமே தீர்வு ஒன்று கண்டிப்பாக இருக்கின்றது. இந்த சூழ்நிலையை நன்கு பகுப்பாய்வு செய்வது சரியான நபர்களுடன் ஆலோசனை செய்த செயல்படவேண்டும்

வியாழன், 25 மே, 2017

வியாரஉலகில் வெற்றியாளர் எந்தசெயலை செய்து வெற்றிபெற்றார் எனநன்கு நுனுக்கமாக கவணித்து அதைபின்பற்றி நாமும் வெற்றிபெறுவோம்


அரசு மருத்துவ கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் வகுப்பு முடிந்து அறுவை சிகிச்சைக்கான நேரடி களப்பயிற்சிக்காக அதற்கான பேராசிரியருடன் பினவறைக்கு சென்றனர் அப்பிணைவறையில் இவர்களுக்கு முன்புறம் மேஜையின்மீது இறந்தபோன பிணம் ஒன்று அறுவைசிகிச்சைபயிற்சிக்காக வெள்ளைத்துனியால் மூடிதயாராகஇருந்தது அந்த அறுவைசிகிச்சை பேராசிரியர் "அன்பான மாணவர்களே நாம் இதுவரையில் புத்தகத்தில் படித்த கல்விவேறு இப்போது நாம் செய்யவேருக்கின்ற நேரடி களப்பயிற்சி வேறுஎன்பதை மனதில் கொள்ளுங்கள் தற்போது நாமெல்லோரும்அறுவைசிகச்சை செய்யதயாராகவிருக்கின்றோம் நம்மை போன்ற அறுவைசிகிச்சை மருத்துவர்களுக்கு முதலில் சகிப்புத்தன்மை இருக்கவேண்டும் என்ற செய்தியை நன்குமனதில் கொள்ளுங்கள் மேலும் அன்புமாணவர்களே நன்கு கவணியுங்கள் நான்செய்வதை போன்று அனைவரும் செய்க" எனக்கூறி அந்த அறுவைசிகிச்சை பேராசிரியர் பிணத்தின்முகம் இருந்தபக்கத்தில் மூடியிருந்த வெள்ளைதுணியை நீக்கினார் அந்த அந்த பிணத்தின் முகத்தில் புழுக்குள் நெளிந்தவாறு சிதைந்த நிலையில் பார்ப்பதற்கு மிகஅறுவறுப்பாக இருந்தது அவ்வாறு இருந்தபோதிலும் அந்த அறுவைசிகிச்சை பேராசிரியர் அந்த பிணைத்தின் சிதைந்த முகத்தில் தன்னுடைய கைவிரல்களால் தொட்டு தன்னுடைய வாயில் வைத்து சூப்பினார் பின்னர் அனைத்து மருத்துவமாணவர்களையும் அவ்வாறே செய்யுமாறு கோரினார் இது முதலாவது நிகழ்வு என்பதால் மருத்துவகல்லூரி மாணவர்கள் அனைவரும் அவ்வாறு செய்வதற்கு சிறிது தயங்கினர் இருந்தபோதிலும் அவர்களில் ஒவ்வொருமாணவராக தயங்கி மயங்கி அவ்வாறே அந்த பிணைத்தின் சிதைந்த முகத்தில் அவரவர்களின் கைவிரல்களால் தொட்டு தத்தமது வாயில் வைத்து சூப்பினார்கள் அவர்களுள் ஒருமாணவன் மட்டும் சிறந்த அறுவைசிகிச்சை மாணவன் என அந்த அறுவைசிகிச்சை பேராசிரியர் தேர்வுசெய்தார் மற்றஅனைவரும் உடன் மருத்தவகல்லூரி மாணவர்கள் அனைவரும் அந்தவொருமாணவரைமட்டும் அந்த மருத்துவ பேராசிரியர் எப்படி தெரிவுசெய்தார் என மிகஆச்சரியமாக அவரிடம் வினவினர் "மாணவர்களே நன்கு கவணியுங்கள் என நான் கூறி என்னுடைய பணியை செய்தபோதுவேறு எந்த மாணவனும் நான் செய்த செயலை பின்பற்றவில்லை அதாவது நான் அந்த பிணைத்தின் சிதைந்த முகத்தில் என்னுடைய ஆள்காட்டி விரலால் தொட்டு வாயில் என்னுடைய நடுவிரலை வைத்து சூப்பினேன் ஆனால் அந்த ஒருமாணவர்மட்டும் நான்செய்த செயலை மிகநுணுக்கமாக மிகச்சரியாக கவணித்து அப்படியே பின்பற்றினார் அதனால் அம்மாணவனே வெற்றியாளன் எனக்கூறினார் அதேபோன்று வியாரஉலகில் வெற்றியாளர் எந்தசெயலை செய்து வெற்றிபெற்றார் எனநன்கு நுனுக்கமாக கவணித்து அதைபின்பற்றி நாமும் வெற்றிபெறுவோம்

திங்கள், 22 மே, 2017

சிறந்த மகன் யார்


முன்னொரு காலத்தில் மிகவும் பணக்கார நபர் ஒருவர் வாழ்ந்துவந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். முதல் மகன் தந்தையின் சொல்லை தட்டாமல் மிககடினமாக பணிபுரிந்து மிகநல்லவனாகவும் வல்லவனாகவும் வாழ்ந்து வந்தாதான்.. ஆனால் இரண்டாவது மகன் முதல் மகனை காட்டிலும் மிகவும் முற்றிலும் வேறுபட்டவனாக சோம்பேறியாக தந்தையின் சொல்லை கேட்டு கீழ்ப்படியாமல் உல்லாசமான வாழ்க்கை யை பின்பற்றிவந்தான் அதிலும் அவ்வாறான உள்ளாச வாழ்க்கையை தந்தையின் குறுக்கீடுஇல்லாமல் தொடர்ந்து வாழ விரும்பியதால் ஒரு நாள் இளைய மகன் தன் தந்தையிடம் . "தந்தையே, உங்களுடைய சொத்தில் என்னுடைய பங்கினை பிரித்து எனக்குக் கொடுங்கள்" என்று கோரினான் அதனை தொடர்ந்து அந்த தந்தையும் சொத்துக்களைப் பிரித்து இரண்டாவது மகனுடைய பங்கை அவனிடம் கொடுத்தார் உடன் அந்த இரண்டாவது மகன் தன்னுடைய பங்கு சொத்துகளை விற்று பணமாக எடுத்துக் கொண்டு, வீட்டைவிட்டு வெளியேறி, தொலைதூர தேசத்திற்குச் சென்றான் , அங்கு கெடுதலான நண்பர்களுடனும் சேர்ந்து உணவுப் பழக்கங்களிலும், உல்லாச பொழுதுபோக்குகளிலும் தன்னுடைய பணத்தினை தண்ணீர் போன்ற கணக்கு வழக்கில்லாமல் பணத்தை செலவழித்தான் .அவனிடமிருந்த பணம் முழுவதும் வீணாகி காலியாகவிட்டதால் அவனோடு சேர்ந்திருந்த கெடுதலான நண்பர்கள் அனைவரும் அவனைவிட்டு விலகி சென்றுவிட்டனர் மேலும் அந்த பகுதியில் கொடிய பஞ்சம் வேறு வந்துவிட்டது அதனால் யாரும் அவனுக்கு உதவிசெய்திடாமல் தம்மிடம் அன்டவிடாமல் துரத்தினர் அன்றாட உணவிற்குஅல்லாட வேண்டிய நிலையில் அந்த நாட்டில்ஏற்பட்ட கொடிய பஞ்சத்தால்.அவனுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை.அவனுடைய நண்பர்கள் யாரும் அவனுக்கு உணவோ அல்லது அதனை பெறுவதற்கான பணத்தையோ அளிக்கவில்லை.அவன் ஏதாவது கூலிவேலையாவது செய்து தன்னுடைய உணவிற்கு தேவையானஅளவு சம்பாதிக்கமுடியாமல் தின்டாடினான் அதனால் தெருவில் சுற்றித்திரியும் பன்றிகளுக்கான உணவை மட்டும் எப்படியோபெற்று உண்டு உயிர்வாழும் நிலைக்கு தள்ளப்ப ட்டான் இந்நிலையில் அவன் தன்னுடைய தகப்பனாரையும் சகோதரனையும் குறித்து நினைத்து: ஏங்கினான் தன்னுடைய தகப்பன் வீட்டில் ஊழியஞ்செய்கிறவர்களுக்கு கிடைக்கும் உணவுக்கூட எனக்கு கிடைக்கவில்லையே என்றும் தகப்பனாரின் வீட்டின் வேலைக்காரர்கள் கூட எவ்வளவு சுகமாயிருப்பார்கள்; ஆனால், இங்கே நான் உணவு, தங்குமிடம் ஆகியவற்றிற்காகவே மிகவும் போராடி வருகிறேன், அதனால் நான் இன்றே என்னுடைய தந்தையின் இருப்பிடத்திற்கு திரும்பி சென்று அவருடைய வேலைக்காரனாக என்னைக் ஏற்று காப்பாற்றுமாறு என்னுடைய தந்தையிடம் கோருவேன். " என முடிவுசெய்து தன்தையின் வீட்டிற்கு திரும்பி சென்றான் இதற்கிடையில், அவரது தந்தை எப்போதும் தனது இரண்டாவது மகனை நினைத்து கொண்டிருந்தார். அவர் ஜன்னல்களுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு தன்னுடைய இரண்டாவது மகன் எப்போது மனம்திருந்தி தன்னுடைய வீட்டிற்கு திரும்பிவருவான் என எதிர்பார்த்து காத்திருந்தார். ஒரு நாள் சன்னல் வழியாக பார்த்திடும்போது தூரத்தில் தன்னுடைய இரண்டாவது மகன் வருவதைக் கண்டார். அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் வீட்டை விட்டு வெளியில் வந்து தன்னுடைய இரண்டாவது மகனை வரவேற்றார் இரண்டாவது மகன், "அப்பா, நான் உன்னுடைய மகனாக இருப்பதற்குக தகுதியற்றவன் நான் உங்களுடைய கட்டளைக்கு கீழ்படிந்து வாழாமல் தான்தோன்றிதனமாக வாழ்ந்த சொத்துக்கள் அனைத்தையும் அழித்துவிட்டேன் எனக்கு உணவிற்கு வழியெதுவும் இல்லை அதனால் என்னை உங்களுடைய வீட்டில் ஒரு வேலைக்காரணாக பணியமர்த்தி எனக்கு தேவையான உணவு.அளித்தால் மட்டும் போதும் " என அழுதுபுலம்பினான் தந்தையானவர் தன்னுடைய இரண்டாவது மகன் உயிருடன் திரும்பி தன்னிடம் வந்துசேர்ந்ததால் போதும் என தவித்துகொண்டிருந்தவர் உடன் அனைவருக்கும் நல்ல விருந்துடனும் இன்னிசையோடும் கொண்டாடிமாறு உத்திரவிட்டார் மூத்த மகன் தன்னுடைய வேலையில் இருந்து திரும்பி வந்தான். அவன் தன்னுடைய வீட்டில் இசை , நடனம் ,பாட்டொலி விருந்து என பரபரப்பாக இருந்ததால் என்னகாரணம் என தங்களுடைய வீட்டின் பணிபுரியும் வேலைக்காரன் ஒருவனை விசாரித்தபோது இரண்டாவது மகன் திரும்பி வந்த மகிழ்ச்சியை கொண்டாட தன்னுடைய தந்தையால் இவ்வாறு செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொண்டு அவன் நேராக தந்தையிடம் மிககோபமாக சென்று நான் எப்போதும் உங்களுடைய உத்திரவின்படி செயல்பட்டு உங்களுடனேயே இருந்தும் எந்தவித மகிழ்ச்சியான நிகழ்ச்சியையும் ஏற்பாடு செயதிடாமல் தற்போது இரண்டாவது மகன் தந்னுடைய பங்கு சொத்தினை அழித்ததோடு மட்டுமல்லாது கெட்டுபோய் திரும்பிவந்ததை இவ்வளவு மகிழ்ச்சியாக கொண்டாடுவதா என கேட்டான் அதற்த அவருடைய தந்தைானவர்து, "என் மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய், மிகுதியுள்ள சொத்து முழுவதும் உன்னுடையதுதான் , உன் னுடைய இளைய சகோதரன் இறந்துவிட்டான், இப்போது தான் அவன் உயிரோடு திரும்பிவந்திருக்கிறான், அதனால் நாம் இப்பொழுது அவன்மனம் திருந்தி வந்ததற்காக நாம் மகிழ்ச்சியடையவேண்டும் ?" கூறியதை தொடர்ந்து மூத்த மகன் தனது தந்தையின் வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள அன்பை புரிந்து கொண்டாருஇளைய சகோதரனைப் பற்றிய பழைய நிகழ்வுகளை எல்லாம் மறந்துவிட்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தான்

திங்கள், 1 மே, 2017

குறுக்குவழியில் வெற்றியடைய திட்டமிடுபவர்களை கண்டு ஒதுங்கி செல்க


ஒருநாள் ஆமையும் யானையும் எதிரெதிரே சந்திக்கொண்டன அதனால் யானையானது எகத்தாளமாக, " நீ மிகச்சிறியவன் என் வழியில் நீ குறுக்கிட்டுவிட்டாய் அதனாள் என்னுடைய ஒரு காலடியினால் நான் உன்னை நசுங்கிவிடுவேன் ." என மிரட்டியது இருந்தபோதிலும் அந்த ஆமையானது பயப்படாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தது யானையானது ஆமையை நோக்கி வந்தாலும் மிதிக்காமல் தான்டிச்சென்றது ஆனாலும் ஆமையானது யானையை பார்த்து " ஐயா யானையாரே உங்களுடைய உருவத்தை வைத்து பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டாம், நானும் உன்னைப் போல வலுவாக இருக்கிறேன்!" என்று சொன்னது, அதனால் யானையானது ஆமையை பார்த்து " என்ன நீ என்னைபோன்ற பலசாலியாக இருக்கின்றாயா" என சிரித்தது. எனவே ஆமையானது யானையாரை பார்த்து அடுத்தநாள் தான் வாழும் மலைக்கு வந்தால் இருவரிலும் யார் வலுவானவர் என போட்டியிட்டு வெற்றிபெறுவதை வைத்து முடிவுசெய்யலாம் என சவால் விட்டது ஆமையின் அந்த சவாலை யானையாரும் ஏற்றுக்கொண்டது இதனிடையே அந்த ஆமையானது அந்த மலைக்கும் கீழ்பகுதியில் ஓடும் ஆற்றில் நீர் யானைவாழ்ந்துவந்தது அதனிடம் சென்று நான் உன்னை போல் வலுவானவனாக இருக்கிறேன் என்று! "ஆமை கூறி யது உடன் அந்த நீர்யானை அதனை கேட்டு சிரித்து உடன் நாம் இருவரில் யார்வலுவானவர் என நமக்குள் கயிறு இழுக்கும் போட்டியொன்றை வைப்போம் அதில் வெற்றி பெறுவது யார்என முடிவுசெய்திடுவோம் என ஆமையானது நீர்யாணையை போட்டிக்கு அழைத்தது அந்த போட்டியை நீர்யாணையும் ஏற்றுக்கொண்டது மறுநாள், சூரிய உதயத்திற்கு முன், அந்த ஆமை மலைக்கு கீழே ஆமை சென்றது பின்னரி ஒரு நீண்ட கயிறில் முடிச்சிட்டு இதனை உன்னுடைய வாயால் பிடித்துகொள் நான் மலையின் மேல்பகுதிக்கு சென்று தயார் எனக்கூறியவுடன் இந்த கயிற்றினை உன்வாயால் பிடித்து இழுத்து கொண்டிரு நான் விடுஎன கூறியவுடன் விட்டிடு என நீர்யானையை பார்த்து க்கூறி மலையின் மேல்பக்தியில் யானை நின்றுகொண்டிருந்த இடத்திற்கு வந்தது அங்கு அந்த யானையிடமும் மலையின் கீழ்பகுதியிலிருந்து இணைத்து கொண்டுவந்த கயிற்றின் மற்றொருமுனையை அதனிடம் கொடுத்து தான் மலையின் கீழ்பகுதிக்கு சென்று தயார் எனக்கூறியவுடன் இந்த கயிற்றினை உன்வாயால் பிடித்து இழுத்து கொண்டிரு நான் விடுஎன கூறியவுடன் விட்டிடு எனக்கூறிய பின் மலையின் கீழ்பகுதிக்கு ஓடிச்சென்றது பாதிதூரம் வந்தவுடன் தன்னை கீழேயிருந்து நீர்யானையும் மேலேயிருந்து யானையும் பார்க்கமுடியாதவாறு மறைந்து நின்று கொண்டு தயார் எனக்கூறியது உடன் யானையும் நீர்யானையும் அந்த கயிற்றின் இருமுனைகளையும் தங்களுடைய வலுவனைத்தும் சேர்த்தும் இழுத்துபார்த்தன ஆயினும் கயிற்றினை இழுத்து மற்றமுனையில் இருப்பவரை தோல்வியுற செய்யமுடியவில்லை இந்நிலையில் விடடிடு என ஆமைகூறியதும் அவையிரண்டும் இழுப்பதை அப்படியே விட்டிட்டன அதனை தொடர்ந்து அவை தங்களுடைய தோல்வியை ஒத்துகொண்டு ஆமையே தங்களைவிட வலுவானதுஎன ஒப்புக்கொண்டன இவ்வாறு குறுக்குவழியில் வெற்றியடைய திட்டமிடுபவர்கள் இந்த ஆமையை போன்றே தம்முடைய குறுக்குவழிபுத்தியினால் நம்முடைய சக்திகளை / முயற்சிகளைத் திருடுவார்கள் / பயன்படுத்துவார்கள். அவ்வாறானவர்களால் நாம் பாதிக்கபடாமல் சரியான வழியில் நம்முடைய திறமையையும் அதிகாரத்தையும் நிரூபிக்க கற்றுக்கொள்க

வியாழன், 27 ஏப்ரல், 2017

மனிதகொல்லி புலியை கொல்லலாமா


இந்திய காடுகளில் சிங்கம் புலி போன்ற காட்டுவாழ்விளங்குகள் வாழ்ந்துவருவதே இயற்கையே அவ்வாறான விலங்குகள் மற்ற காட்டு விலங்குகளை அடித்து கொன்று தங்களுக்கு தேவையான இரையாக உட்கொள்வதும் இயற்கையே இவ்வாறான புலி ஒன்று வயதாகிவிட்டதால் காட்டில் ஓடும்விலங்குகளை பாய்ந்து சென்று பிடித்திடமுடியாமல் ஆன நிலையில் காடுகளில் தங்களுடைய தேவைக்கான காய்கணிகள் வேர்கள் விறகு போன்றவைகளை சேகரிக்க செல்லும் விலங்குகளை போன்று வேகமாகஓடமுடியாத மனிதர்களை அடித்து கொன்று உணவாக்கி கொண்டது இதனால் மனிதர்கள் அந்த காட்டிற்குள் செல்வதை தவிர்த்தனர் அதனால் அந்தபுலியானது காட்டைவிட்டு மனிதர்கள் வாழும் கிராமப்புறத்திற்குள் வந்து கிராமத்தில் வளர்க்கும் ஆடுமாடுகளையும் சிறுவர்களையும் அடித்துகொன்று சாப்பிட்டு செயலை வழக்கமாக கொண்டிருந்தது அதனால் பாதிப்புற்ற அந்த கிராமத்து மக்கள் தங்களையும் தங்களுடைய உடமையான விலங்குகளையும் காத்துகொள்வதற்காக மிகப்பிரபலமான வேட்டையாடி ஒருவரை இந்தமனிதனை கொல்லும் புலியை கொன்று தங்களுடைய கிராமத்தை காத்திடுமாறு வேண்டிகொண்டனர் அதனடிப்படையில் அந்த வேட்டைகாரர் அந்த புலியானது அந்த கிராமத்திற்கு வரும் வழி திரும்பசெல்லும் வழி ஆகியவிவரங்களை அறிந்துகொண்டபின்னர் அந்த புலிவழக்கமாக அந்த கிராமத்திற்கு வரும் வழியில்ஒரு மரத்தின் அடியில்நல்ல காளைகன்றினை கட்டிவைத்தவிட்டு மரத்தின் மேலே கையில் துப்பாக்கியுடன் காத்திருந்தார் அந்த மனிதகொல்லியான புலியானது வேட்டைக்காரன் மரத்தின் மீது தன்னை குறிவைத்து கொல்வதற்கு தயாராக இருப்பதையும் காளைகன்று மரத்தினடியில் கட்டப்பட்டிருப்பதையும் அறிந்து கொண்டு தூரத்திலேயே நின்றுவிட்டது வெகுநேரமாகியும் அந்த மனிதகொல்லியான புலியானது வராததால் வெறுப்புற்று சரி சாப்பிட்டுவரலாம் எனஅந்த வேட்டைக்காரன் மரத்திலிருந்து கீழே இறங்கி ஊருக்குள் சென்றார் தூரத்திலிருந்து இதனை பார்த்து கொண்டிருந்த மனிதகொல்லி புலியானது இன்று நமக்கு நல்ல இரைகிடைத்தது என மிகமெதுவாக வந்துஅந்த காளைக்கன்றை அடித்து காட்டிற்குள் இழுத்து சென்று தின்றது நல்ல உணவு கிடைத்ததால் ஒருபுதருக்கு அருகில் அப்படியே படுத்து உறங்கிவிட்டது இந்த செய்தியை கேட்டறிந்த வேட்டைக்காரன் உடன் அந்த புலி சென்றவழியை பின்பற்றி அருகே சென்றபோது அந்த புலியானது உண்டமயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பதைபோன்று நன்றாக ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தது . தூங்குகின்ற விலங்கினை கொல்லலாமா என மனதில் கேள்வி ஒன்று உறுத்தியது அதனால் அந்த வேட்டைக்காரன் சிறிது தயங்கினார் ஆனாலும் அது சாதாரன புலியாக இருந்தால் இவ்வாறு தூங்கிடும்போது கொல்லாமல் விட்டுவிடலாம் அது மனிதகொல்லி புலியாக இருப்பதால் தயங்ககூடாது என அதனை துப்பாக்கியால்சுட்டு கொன்றார் உடன் கிராமமக்கள் அனைவரும் வந்து பார்த்து அவரை தங்களுடைய உயிரை காத்த உத்தமர் எனவாழ்த்தி சென்றனர்

புதன், 19 ஏப்ரல், 2017

எதிரியின் உயிரை பாதுகாத்திடும் மனநிலை பெற்றிடுக


ஒருகாலத்தில் அரேபிய நாட்டில் தலைவர் யூசுப் என்பவர் வாழ்ந்துவந்தார் அவர் பாலைவணத்தில் தன்னுடைய கூடாரத்தில் தனியாக அமர்ந்திருந்தார் அதுஒரு இரவு நேரம் என்பதால் வானத்தில் ஜொலிக்கும் நட்சரத்தின் ஒளியை தவிர அந்த கூடாரத்தில் வேறு ஒளிவசதி எதுவும் இல்லை அவர் மிகவும் ஆழ்ந்த மனவருத்ததுடன் அமர்ந்திருந்தார் கடந்த பலநாட்களாக இரவும் பகலும் அழுதுகொண்டே இருந்ததால் அவருடைய கண்களிருந்து கண்ணீரானது ஆறுபோன்று தரையில் ஓடிக்கொண்டே இருந்தது ஏனெனில் அவருடைய ஒரேமகனான அவருக்குபிறகு அரசனாக வேண்டிய மகன் எதிரிகளால் கொல்லப்பட்டதால் அவருடைய மனதில் ஏற்பட்ட வருத்தம் வார்த்தைகளால் சொல்லமுடியாத அளவிற்கு மிகஅதிகமாக இருந்தது அதனால் அவர் வேறு எந்தவொரு பணியையும் செய்திடாமல் அப்படியே அமர்ந்தவிட்டார் அந்த சமயத்தில் புதியவன் ஒருவன் மிகவிரைவாக அந்த பாலைவணத்தில் தன்னுடைய உயிர்தப்பித்தால் போதுமென ஓடிவந்துகொண்டிருந்தான் . அப்புதியநபர் யூசுப் அமர்ந்திருந்த கூடாரத்திற்குள் உள்நுழைந்து அவருடையகாலடியில் வீழ்ந்துவணங்கி தலைவரே என்னை கொல்லுவதற்கு பல்வேறு எதிரிகள் துரத்திவருகின்றனர் அவர்களிடம் உயிர்தப்பித்தால் போதுமெனவ ஓடிவருகின்றேன் நீங்கள்தான் என்னுடைய உயிரை காப்பாற்றவேண்டும் என்னால் இந்த பாலைவணத்தில் இதற்கு மேல் ஓடமுடியாது நீங்கள் நல்ல தலைவர் என அனைவரும் கூறுகின்றனர் இன்று ஒரு இரவு மட்டும் நான் தங்குவதற்கு உங்களுடைய கூடாரத்தில் இடமளித்தால் போதும் நீங்கள் கோடிபுன்னியம் செய்தவராவீர் என பணிவாக கூறினான் ஐயா புதியவரே நீங்கள் என்னுடைய விருந்தாளி அதனால் எழுந்துவாருங்கள் இரவு உணவை உங்களுடைய வயிறார சாப்பிடுங்கள் பின்னர் இரவு நன்றாக ஓய்வெடுங்கள் எனக்கூறி அந்தநபுதிய நபருக்கு தேவையான இரவு உணவையும் ஓய்வெடுப்பதற்கான படுக்கையும் வழங்கினார் இரவு தூங்கியபின் விடியற்காலை யூசுப் ஆனவர் எழுந்து அந்த புதியநபரை எழுப்பி ஜயா எழுந்திருங்கள் சூரியன் உதித்து நல்ல வெளிச்சம் வருவதற்குமுன் இந்த இடத்தைவிட்டு சென்றுவிடுவது உங்களுக்கு நல்லது உங்களால் மேலும் நடக்கமுடியாது என்பதால் குதிரை ஒன்று உங்களுடைய பயனத்திற்கு தயாராக இருக்கின்றது இந்தாருங்கள் உங்களுடைய செலவிற்கு தேவையான பொற்காசுகள் என அந்த புதிய நபர் புறப்பட்டு செல்வதற்கு தேவையான ஏற்பாட்டுடன் அவரை புறப்பட துரிதபடுத்தினார் இந்நிலையில் அந்த புதியநபர் தலைவர் யூசுப்பை பார்த்தவுடன் இவருடைய மகனைத்தான் தான் கொன்றுவிட்டோம் ஆயினும் தன்னை பழிவாங்காமல் இரவு தங்கி ஓய்வெடுப்பதற்கு வசதிசெய்துகொடுத்ததுமட்டுமல்லாமல் மிகபாதுகாப்பாக செல்ல ஏற்பாடு வேறு செய்கின்றாரே என மிகவெட்கத்துடன் யூசுப்பின் கால்களில் மீண்டும் விழுந்து வணங்கி ஐயா நான்தான் உங்களுடைய மகனை கொன்றவன் இந்தாருங்கள் குறுவாள் என்னை இந்த குறுவாளால் குத்தி உங்களுடைய மகனை கொன்ற பழியை தீர்த்து கொள்ளுங்கள் என அழுது புரண்டான் யூசுப்பானவர் ஐயா புதியவரே நீங்கள் தற்போது என்னுடைய விருந்தாளி விருந்தாளியை சகமனிதன் கொல்வது நல்லதன்று மேலும் உங்களை பழிவாங்கவேண்டும் என்ற என்னமே எனக்கு துளிகூட இல்லை என்னுடைய மகன் இந்த பாலைவனத்தில் கடினமான வாழ்க்கையில் வருத்தப்படாமல் இருக்கும்பொருட்டு அவனை ஆழ்ந்த உறக்கத்தில் செல்வதற்கு உதவியுள்ளீர்கள் அதனால் இந்தாருங்கள் என கூடுதலாக மேலும் மூன்றுமடங்கு பொற்காசுகளை வழங்கி உங்களுடைய எதிரி யாரும் இங்கு வந்து சேருவதற்குள் நீங்கள் இங்கிருந்து தப்பித்து செல்லுங்கள் என்று கூறி யூசுப் ஆனவர்அந்த புதிய நபரை வழிகூட்டி பாதுகாப்பாக அனுப்பிவைத்தார்

புதன், 5 ஏப்ரல், 2017

வயதான மூதாட்டியும் வங்கிகிளையின் காசாளரும்


கடந்த நவம்பர் 8,2016 பிறகு ஒரு வயதான மூதாட்டி வாழ்க்கையின் அன்றாட செலவிற்காக தன்னுடைய வங்கி கணக்கில்இருந்து ரூபாய் 500 மட்டும் எடுத்திடுவதற்காக வங்கியின் கிளைஅலுவலகத்திற்கு சென்றார் அப்போது அந்த வங்கிகிளையின் பணம் வழங்கும் காசாளரிடம் தான் காசோலை வைத்திருப்பதாகவும் தன்னுடைய கணக்கில் இருந்து ரூபாய் 500 மட்டும் வழங்கும்படியும் கோரினார் உடன் அவ்வங்கிகிளையின் பணம் வழங்கும் காசாளர் ரூபாய் 500 ஐ தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில் மட்டுமே எடுக்கவேண்டும் இங்கு அவ்வளவு குறைந்த தொகை வழங்கஇயலாது என மறுத்தார் உடன் ஐயா நான் மிகவும் வயதானவள் அவ்வாறான தானியங்கி இயந்திரத்திற்கு சென்று என்னால் பணம் எடுக்கமுடியாது என மன்றாடியபோது அதுதான் எங்களுடைய வங்கியின் விதி நீங்கள் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்திற்கு சென்று பணம் எடுப்பதுதான் நல்லது நகருங்கள் வரிசையாக உங்களுக்கு பின்புறம் நிற்பவர்களின் தேவையை நான் செயற்படுத்தவேண்டும் என அந்த பணம் வழங்கும் காசாளர் அந்த மூதாட்டியை விரட்டியடிப்பதிலேயே குறியாக இருந்தார் உடன் அந்த மூதாட்டி சரி ஐயா என்னுடைய கணக்கில் மிகுதி எவ்வளவுதான் தொகை இருக்கின்றது எனக்கோரியபோது அவருடைய கணக்கில் ரூபாய் முப்பது இலட்சம் இருப்பதாக அந்த பணம் வழங்கும் காசாளர் கூறினார் உடன் அந்த மூதாட்டியானவர் அப்படியா ஐயா ரொம்ப நல்லது என்னுடைய வங்கி கணக்கினை இன்றே முடித்துகொள்கின்றேன் அந்த தொகை முழுவதும் இப்போதே வழங்கிடுங்கள் என மூதாட்டி கோரியபோது அவ்வளவு அதிக தொகை எடுக்கவேண்டும் எனில் வங்கிகிளைமேலாளரைத்தான் நாளை நேரில் சந்தித்து எடுத்து செல்லமுடியும் அதனால் தயவுசெய்து இடத்தை காலி செய்து என்னுடைய மற்றைய பணியை செய்யவிடுங்கள் என மீண்டு்மஅந்த மூதாட்டியை விரட்டியடிப்பதிலேயே குறியாக இருந்தார் உடன் அந்த மூதாட்டி சரி ஐயா என்னுடைய கணக்கில் இருந்து நான் தற்போது அதிகபட்சம் எவ்வளவு தொகைதான் எடுக்கமுடியும் எனக்கோரினார் அதனை தொடர்ந்து பணம் வழங்கும் காசாளர் அதிகபட்சம் தற்போது நீங்கள் ரூபாய் மூன்றுஇலட்சம் எடுக்கலாம் எனபதில் கூறியவுடன் தன்னுடைய கையிலிருந்த காசோலையில் தொகை ரூபாய் 300000 என எழுதி தன்னுடைய கையொப்பமிட்டு இப்போது அந்த தொகையை உடன் தனக்கு வழங்கிடுமாறு அந்த மூதாட்டி கோரினார் அதன்பின்னர் அந்த பணம் வழங்கும் காசாளர் அந்த மூதாட்டி கோரியவாறு தொகை ரூபாய் 300000 வழங்கினார் பின்னர் அந்த மூதாட்டியானவர் அதில் ரூபாய் 500 ஐ மட்டும் தன்னுடைய பணப்பையில் எடுத்துவைத்துகொண்டு மிகுதி 299500ஐ அந்த காசாளரிடம் கொடுத்து இதனை என்னுடைய வங்கிகணக்கில் வரவு வைத்திடுக என கூறி கொடுத்தார் அதனை தொடர்ந்து அந்த வங்கிகிளையின் பணம் வழங்கும் காசாளர் பதிலேதும் பேசமுடியாமல் அப்படியே உட்கார்ந்து விட்டார்

வெள்ளி, 31 மார்ச், 2017

பொருட்களை விட மனித பாதுகாப்பே மிகமுக்கியமானது


முற்காலத்தில் வாழ்ந்துவந்த ஒரு அரசனுக்கு ஏராளமான அடிமைகள் சேவகர்களாக பணிபுரிந்து வந்தனர் ஒரு நாள் பக்கத்து நாட்டுக்கு முக்கிய செய்தியை நேரடியாக விவாதிப்பதற்காக அந்த அரசன் தன்னுடைய அடிமைகளுடன் குதிரைவண்டியில் பயனம் செய்தார் பயனம் செய்த பாதையானது மேடுபள்ளம் அதிகமாக இருந்தன அவ்வாறான பள்ளம் ஒன்று பாதையில் குறுக்கிட்டபோது குதிரைவண்டியானது பள்ளத்தில் இறங்கி பின்னர் மேட்டில் எகிறி ஏறி சென்றது இதனால் அந்த அரசன் கைகளில் வைத்திருந்தசிறுபெட்டியில் இருந்த முத்துக்கள் அனைத்தும் தரையில் கொட்டிசிதறிவிட்டன உடன் அரசன் தான் பயனம் செயந்துவந்த குதிரை வண்டியை நிறுத்தம் செய்து தன்னுடைய கையில் இருந்த பெட்டியலிருந்து சிதறியோடிய முத்துகள் அனைத்தையும் தேடிசேகரித்திடுமாறு உத்திர – விட்டார். அதனை தொடர்ந்து ஒரு அடிமையை தவிர மற்றவர்கள் அனைவரும் சிதறிய முத்துகளை தேடிபொறுக்கி கொண்டுவந்த சேர்த்தனர் ஒரு அடிமை மட்டும் சிதறிய முத்துகளை தேடிபொறுக்கி கொண்டுவந்த சேர்த்திடும் பணியை செய்திடாமல் அரசனுக்கு அருகிலேயே பாதுகாப்பாக நின்றுகொண்டிருந்தான் இதனை கண்ணுற்ற அரசன் தன்னருகிலேயே நின்று கொண்டிருந்த அடிமையிடம் ஏன் அவ்வாறு சிதறிய முத்துகளை தேடிபொறுக்கி கொண்டுவந்த சேர்த்திடும் பணியை செய்திடாமல் நிற்கின்றாய் என வினவியபோது ஐயா அதைபோன்ற ஏராளமானமுத்துகள் நீங்கள் சம்பாதித்து விடுவீர்கள் அதைவிட உங்களை பாதுகாப்பதுதான் என்னுடைய தலையான பணியாகும் என பதில்கூறினான் அதனை தொடர்ந்து அந்த அடிமையை தன்னுடைய அந்தரங்க பாதுகாவலனாக தன்னுடைய வாழ்நாள்முழுவதும் பணியமர்த்தி கொண்டார்

வெள்ளி, 24 மார்ச், 2017

அந்த மூன்று கேள்விகள்


முன்னொரு காலத்தில் ஜான் எனும் அரசனொருவன் இங்கிலாந்தில் அரசாட்சி செய்து வந்தான் அவன் தன்னைத்தவிர இந்த உலகில் ஒப்பாரும் மிக்காருமான மிகப்பெரிய மனிதன் யாருமே இல்லை என்ற இறுமாப்புடன் அரசாட்சி செய்துவந்தான் இந்நிலையில் அரசசபையில் இருந்த அரசகுரு ஒருவர் மிக வசதி வாய்ப்புகளுடன் ஆடம்பரமாக வாழ்ந்துவந்தது இந்த அரசன் கவணத்திற்கு வந்தது அதனால் அரசனானவன் மிக கோபமுற்று தன்னுடையு படைவீரர்களை அழைத்து உடன் அந்த அரசகுருவை கைது செய்து அரசசபைக்கு அழைத்துவரும்படி உத்திரவிட்டார் அதனை தொடர்ந்து அவ்வாறே அந்த அரகுருவை அரசசபைக்கு படைவீரர்கள் அழைத்தவந்தபோது "இந்த நாட்டில் அரசன் பெரியவரா அரசகுரு பெரியவரா யார் மிகவும் உயர்ந்தவர் என கூறுங்கள் அரசனைவிட ஆடம்பரமாக அரசகுரு வாழமுடியமா அதனால் வருங்காலத்தில் இந்த நாட்டிற்கு நீங்கள் அரசனாக முடிசூட்டி கொள்வீர்களா அவ்வளவு உயர்ந்த இடத்திற்கு நீங்கள் சென்றுவிட்டீர்களா அவைக்காவலர்களே இவருடைய தலையை உடனே வெட்டி வீழ்த்துங்கள்" என உத்தரவிட்டார். உடன் அரசகுருவானவர் "மதிப்பிற்குரிய ஐயா என்னை மன்னித்துவிடுங்கள் அரசன்தான் இந்த உலகில் உயர்ந்தவன்" என பதில் கூறியதும் அரசன் "அவ்வாறு மன்னிப்பு அளிக்கவேண்டுமெனில் நான் கேட்கும் பின்வரும் மூன்று கேள்விகளுக்கான பதிலை உடன் கூறுமாறு அரசன் கேட்டார் "என்னுடைய(அரசனுடைய) மதிப்பு எவ்வளவு பெறும்? இந்த உலகை நான் (அரசன்) எவ்வளவு நேரத்தில் சுற்றிவந்து சேரமுடியும்? தற்போது என்னுடைய(அரசனுடைய) மனதில் என்ன எண்ணுகின்றேன்?” உடன் அரசகுருவானவர் நான்குநாட்கள் காலஅவகாசம் கொடுத்தால் இந்த மூன்று கேள்விகளுக்கான பதிலை கூறுவதாக வேண்டி கொண்டதை தொடர்ந்து அரசனும் நான்கு நாள் கால அவகாசத்தினை அனுமதித்தான் அந்த அரசகுருவும் மிகவும் சோர்வுற்ற மனநிலையில் வீடு திரும்பினான் பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் ஆகிய வற்றின் நூலகங்களில் இந்த கேள்விகளுக்கான பதிலை தேடிஅலைந்தான் மேலும் இந்த பல்கலைகழகங்களில் பணிபுரிந்த பேராசரியர்களிடமும் ஆலோசனை கோரியபோது அவர்களாலும் அவைகளுக்கான பதிலை கூறமுடியுவில்லை மிகவும் மனமுடைந்து தன்னுடைய வீட்டிற்கு திரும்பி வரும் நிலையில் ஆடுமேய்த்திடும் இளைஞன் ஒருவன் குறுக்கிட்டான் "ஏன் ஐயா மிக மனவருத்ததுடன் இருக்கின்றீர்" என வினவியபோது தன்னுடைய இக்கட்டான நிலையை அவனிடம் அரசகுரு கொட்டிதீர்த்தார் மேலும் தன்னுடைய உயிருக்கு மிகுதி இரண்டுநாட்கள்தான் அவகாசம் இருப்பதாகவும் கூறினார் "கவலைப்படாதீர்கள் ஐயா உங்களுக்கு பதிலாக நான் அரகுருபோன்று வேடமிட்டு அரசன் கேட்ட மூன்று கேள்விகளுக்கான பதிலை கூறுவதற்கு தயவுசெய்து என்னை அனுமதிப்பீர்களா" என ஆடுமேய்ப்போன் கோரியபோது எப்படியோ தன்னுடைய உயிர்தப்பினால் போதுமென அரசகுரு ஆடுமேய்ப்பவனை அவ்வாறே செய்திட ஏற்று அனுமதித்தார் உடன் ஆடுமேய்த்திடும் இளைஞன் அரசகுருவின் ஆடையை அணிந்து கொண்டவுடன் அச்சுஅசல் அரசகுருபோன்றே தோற்றமளித்தான் அதன்பின்னர் ஆடுமேய்த்திடும் இளைஞன் அரசகுருவின் வேடத்துடன் அரச சபைக்கு சென்றான் அரசன் இந்த அரசகுரு இவ்வளவு விரைவில் தன்னுடைய மூன்று கேள்விகளுக்கான பதிலை கூறுவதற்காக வந்துசேரவார் என எதிர்பார்த்திடவில்லை வந்தவன் அரசகுருவா வேறுயாராவது அரசகுருபோன்று வேடமிட்டுவந்தாரா எனவித்தியாசம் எதுவும் தெரியாமல் அரசனானவன் "ரொம்ப மகிழ்ச்சி அரசகுருவே நீங்கள் வாக்களித்தவாறே விரைவாக அரசசபைக்கு என்னுடைய மூன்று கேள்விகளுக்கான பதிலை கூறுவதற்கு வந்துள்ளீ்ர்கள்" என வரவேற்றபோது "ஆம் மேன்மைமிகு ஐயா அவர்களே என்னால் முடிந்தவரை அந்த மூன்று கேள்விகளுக்கான பதில்களை கூறுவதற்கு முயற்சிக்கின்றேன்" என கூறினான் "நான் இந்த இங்கிலாந்து நாட்டின் அரசன் என்னுடைய(அரசனுடைய) மதிப்பு எவ்வளவு பெறும்?” என அரசன் தன்னுடைய முதல் வினாவினை எழுப்பினார் உடன் அரசகுருவேடத்தில் இருந்த ஆடுமேய்ப்போன் "மேன்மைமிக்க ஐயா பைபிளின் படி இயேசுவானவர் இம்மூலகத்திற்கும் அரசனாவார் அவரை விற்பனை செய்தால் முப்பது ரூபாய் பெறுவார் உங்களுடைய மதிப்பு இயேசுவின் மதிப்பில் ஒருரூபாய் குறைவாகும் அதனால் இங்கிலாந்து நாட்டின் அரசனாகி தாங்கள் வெறும் 29 ரூபாய்தான் பெறுவீர்" என பதில் கூறினான் உடன் அரசன் "அடடா என்னுடைய மதிப்பு வெறும் 29 ரூபாய்தானா" என சிரிக்கஆரம்பித்தான் சிரிப்பு அடங்கியபின்னர் "என்னுடைய இரண்டாவது கேள்வி இந்த உலகை நான் (அரசன்) எவ்வளவு நேரத்தில் சுற்றிவந்து சேரமுடியும்?” என்பதை எழுப்பினான் உடன் அரசகுருவேடத்தில் இருந்த ஆடுமேய்ப்போன் "மேன்மைமிக்க ஐயா சூரியன் உதிக்கும்போது இந்த உலகை சுற்ற ஆரம்பித்து நாள் முழுவதும் சுற்றிவந்த பின்னர் இரவு முழுவதும் சுற்றிவந்து மறுநாள் காலை சூரியன் தோன்றும் நேரத்தில் அதாவது 24 மணிநேரத்திற்குள் இந்த உலகை சுற்றிவந்து விடுவீர்கள் ஐயா" என பதில் கூறினான் உடன் அரசன் "வெறும் 24 மணிநேரத்திற்குள்ளாகவே நான் இந்த உலகை சுற்றிவந்து-விடுவேனா அடடா வித்தியாசமான பதிலாக இருக்கின்றதே" என விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான் அரசனுடைய சிரிப்பு நின்றபின் "என்னுடைய மூன்றாவது கேள்வியாக தற்போது என்னுடைய (அரசனுடைய) மனதில் என்ன எண்ணுகின்றேன்?” என கேட்டான் உடன் அரசகுருவேடத்தில் இருந்த ஆடுமேய்ப்போன் "மேன்மைமிக்க ஐயா தற்போது தாங்கள் உண்மையில் நான் அரசகுருதான் என எண்ணுகின்றீர்கள் ஆனால் உண்மையில் நான் அரசகுரு அன்று சாதாரண ஆடுமேய்த்திடும் ஒரு இளைஞன் எனக்காக அரசகுருவை மன்னித்திடும்படி மிகபபணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்" எனக்கூறி தன்னுடைய அரசகுருவாக உருமாற்றம் செய்த உடைகளை களைந்து சாதாரண ஆடுமேய்த்திடும் இளைஞனின் உடைக்கு மாறியிபின் அரசனை வணங்கினான் அரசன் தற்போது கோபமெதுவும் ஏற்படாமல்மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான் நீண்ட சிரிப்பிற்கு பின்னர் "தம்பி உன்னுடைய அறிவுத்திறனை நான் மெச்சுகின்றேன் நான் இன்றுமுதல் உன்னை அரசகுருவாக நியமிக்கின்றேன்" எனக்கூறியதை தொடர்ந்து "ஐயா நான் எழுதவும் படிக்கவும் தெரியாத சாதாரண ஆடுமேய்ப்பவன் அதனால் நான் அரசகுருவாக செயல்படமுடியாது என்னை மீண்டும் மன்னித்துவிடுங்கள்" என கோரினான் உடன் அரசன் "பரவாயில்லை இன்றுமுதல் நீ உயிர்வாழும்வரை வாரத்திற்கு ஒருஇலட்சம் ரூபாய் அரசு ஊதியமாக பெறுவாய் உன்னுடைய இருப்பிடத்திற்கு நீ செல்லலாம் அரசகுருவை நான் மன்னித்ததாக கூறு அவரை அரசசபைக்கு வரச்சொல் " என விடை கொடுத்தனுப்பினான் அரசன்

வியாழன், 16 மார்ச், 2017

எந்த வொரு நபரையும் அவருடைய சம்மதமில்லாமல் அவருடைய பெயரைவேண்டுமென்றே கெடுப்பதற்காக காயப்படுத்தி நக்கலாக கிண்டல் செய்திடாதீர்கள்


அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஒருவர் ஜனாதிபதி மாளிகையில் இருந்த கூட்டரங்கில் தனது பதவியை ஏற்பதற்கான தொடக்க உரையை ஆற்றுவதற்காக எழுந்துநின்றார் அப்போது பணக்கார உயர்குடியில் இருந்துவந்த மனிதன் ஒருவன் எழுந்து நின்று ஐயா ஜனாதி பதி அவர்களே உங்களுடைய தந்தை எங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் காலணிகளை செய்து தரும் ஒரு சாதாரண தொழிலாளி என்பதை மறந்துவிடாதீர்கள் என நினைவு படுத்தியதை தொடர்ந்து ஜனாதிபதியை அந்த நபர் முட்டாளாக ஆக்கிவிட்டார் எனஅந்த கூட்டரங்கில் இருந்த மிகுதி அனைத்து உறுப்பினர்களும் ஜனாதிபதியை பார்த்து நக்கலாக கைகொட்டி சிரித்தனர் பொதுவாக ஒருசிலர் அவ்வா்று மற்றவர்களை மட்டம் தட்டி நக்கல் செய்திடும் மனநிலையிலேயே இருப்பார்கள் அதனை தொடர்ந்து அந்த ஜனாதியானவர் அந்த மனிதரின் முகத்தை நேருக்குநேர் பார்த்து ரொம்ப நல்லது ஐயா என்னுடைய தந்தை சிறந்ததொரு படைப்பாளியாக இருந்து. கால்களில் அணியும் காலணிகளை வெறுமனே காலணிகளாக இல்லாமல்; தன்னுடைய முழு ஆத்ம திருப்தியோடு உங்களுடைய குடும்பத்திற்கு தேவையான காலணிகளை தரமாக செய்து கொடுத்தது வழக்கமான செயல்தான் என எனக்கு தெரியும் அவர்செய்த காலணிகளில் குறைஏதாவது இருந்தது என உங்களால் கூறமுடியமா அவ்வாறுகுறை ஏதேனும் இருந்தால் கூறுங்கள் இப்போதே நானே அதற்கு மாற்று காலணிகளை செய்து வழங்குகின்றேன் இங்கு இருப்பவர்கள் யாராவது அவ்வாறு வாடிக்கையாளரொருவர் எந்தவொரு குறையும் கூறாமல் திருப்தியுறும் வண்ணம் தத்தமது பணியை செய்திடுவார்களா என பதிலடியாக ஜனாதிபதி பேசியதும் கூட்டரங்கமே அமைதியாகிவிட்டது வாடிக்கையாளரிடமிருந்து எந்தவொரு அதிருப்தியான புகார் எதுவும் இல்லாமல் அந்த ஜனாதிபதியின் தந்தை நல்ல தரமான பணியை வழங்கியுள்ளார் அதனால் அவருக்கும் அவருடைய சந்ததியினருக்கும் பெருமையாகும் பொதுவாக எந்த வொரு நபரையும் அவருடைய சம்மதமில்லாமல் அவருடைய பெயரைவேண்டுமென்றே கெடுப்பதற்காக காயப்படுத்தி நக்கலாக கிண்டல் செய்திடாதீர்கள்

சனி, 11 மார்ச், 2017

நம்முடைய சக்திக்கு ஏற்ப நம்மால் என்ன முடியுமோ அதைமட்டும் செய்திடுக


வெகு நாட்களுக்கு முன் மலையுச்சியில் பருந்து ஒன்றும் மலையடிவாரத்தில் இருந்த ஆலமரத்தில் காகம் ஒன்றும் வாழ்ந்தவந்தன இந்த காகமானது அறிவில்லாத முட்டாளாகும் அதைவிட மற்றவர்கள் என்ன செய்கின்றார்களோ அதே செயலை அப்படியே தானும் போலியாக செய்திடும் மனப்பாங்கு உடையதாகும்

தினமும் மலையுச்சியில் இருக்கும் பருந்தானது ஏதேனும் உணவு இருக்கின்றதாவென தேடுவதற்காக சமதரைக்கு பறந்துவந்திடும். வெகுஉயரத்தில் இந்த பருந்து பறந்து செல்லும்போது சுன்டெலி யொன்று தன்னுடைய வலையைவிட்டு வெளியில் நடமாடுவதை தன்னுடைய கூறிய பார்வையால் கண்டுபிடித்தவிட்டது அதனால் பருந்தானது உடன் கீழே தாழ்ந்து பறந்து சென்று தன்னுடைய இரையான சுன்டெலியை அலகால் பிடித்து கொண்டு பழையபடி மேலே பறந்து சென்றது இந்த முட்டாள் காகமானது பருந்து செய்வதை பார்த்து கொண்டே இருந்த பின் ஏன் நாமும் அந்த பருந்துபோன்றே உயரத்தில் பறந்தவாறே நம்முடைய இரையை தேடி அவ்வாறு இரை கிடைத்தவுடன் கீழே தாழ்ந்த பறந்து பிடித்திடுவோமே என எண்ணியது அதனை தொடர்ந்து அந்த முட்டாள் காகமும் அவ்வாறே ஆலமரத்தில் இருந்து உயரத்தில் தன்னுடைய இரையை தேடி பறந்து கொண்டிருந்தது அப்போது பெரிய எலி ஒன்று வயல்வெளியில் இரைதேடி கொண்டிருந்ததை கண்ணுற்றதும் காகமானது தாழ்ந்த பறந்து சென்று இரையை பிடிக்க முயன்றது அதற்குமுன் காகம் தரையை நோக்கி தாழ்ந்த பறக்கஆரம்பித்ததை கண்ட பெரிய எலியானது தன்னுடைய வலைக்குள் உட்புக ஆரம்பித்தது அதனால் காகம் தன்னுடைய இரையை பிடிக்கமுடியாமல் தரையில் மோதி அதனுடைய அலகுமட்டும் காயமாகிவிட்டதா ஆ வலிக்குதே என்னசெய்வேன் என அப்படியே தரையில் வீழ்ந்ததுபின்னர் எப்படியோமுயன்று ஆலமரத்த்திலுள்ள தன்னுடைய கூட்டிற்கு பறந்து சென்றது இதே போன்று பலமுறை அந்த காகமானது பருந்து போன்று தன்னுடைய இரையை பிடிக்க முயலும்போது இரைக்கு பதிலாக தரையில் அது அடிபட்டு அதனுடைய உடலில் வலி மட்டும்தான் மிஞ்சியதே தவிர இரை எதையும் பிடிக்கமுடியாத நிலைஏற்பட்டன

இதன்பின்னர் அந்த காகமானது இவ்வாறு மற்றவர்களை போன்று போலியாக நடந்துகொள்வதை விட்டிட்டு தன்னால் என்ன முடியுமோ அதைமட்டும் செய்யஆரம்பித்தது அதே போன்று நாமும் நம்முடைய சக்திக்கு ஏற்ப நம்மால் என்ன முடியுமோ அதைமட்டும் செய்திடுக என பரிந்துரைக்கப்படுகின்றது

சனி, 4 மார்ச், 2017

எது நடந்தாலும் அது நல்லதாகவே நடக்கும்


முன்பு ஒருகாலத்தில் இந்தியாவில் மிகப்பெரிய அரசன் ஒருவன் இருந்தான் அவனுடைய அரண்மனை வாயிலில் இரு பிச்சைக்காரர்கள் எப்போதும் நின்று பிச்சை வாங்கிகொண்டிருப்பது வழக்கமானசெயலாகும் முதல் பிச்சைகாரன் "அரசனிடம் உதவி கோருபவர்களுக்கு அரசன் உதவிடுவார்" என எப்போதும் அரசன் வெளியே செல்லும்போதும் உள்ளே அரண்மனைக்கு திரும்பிடும்போதும் கூறி கொண்டிருப்பான் ஆனால் இரண்டாமவன் "ஆண்டவனிடவனிடம் உதவி கோருபவர்களுக்கு ஆண்டவன் உதவிடுவார்" என எப்போதும் அரசன் வெளியே செல்லும்போதும் உள்ளே அரண்மனைக்கு திரும்பிடும்போதும் கூறி கொண்டிருப்பான் முதலாவது பிச்சைகாகாரன் கூறுவதை கேட்டு மகிழ்ச்சியுற்ற அரசன் ஒருநாள் உணவினை பொட்டலமாக மடித்து அதனுள் தங்க நாணயங்களை உள்பொதியவைத்து முதலாவது பிச்சைகாகாரனுக்கு பிச்சையாக இட்டுசென்றார் முதலாவது பிச்சைகாகாரனுக்கு செலவிற்கு பணம் உடனடியாக தேவைப்பட்டதால் அந்த உணவு பொட்டலத்தை இரண்டாவது பிச்சைகாகாரனுக்கு மிக குறைந்த தொகையை வாங்கி விற்றுவிட்டு தன்னுடைய பணியை கவணிக்க சென்றுவிட்டான் இரண்டாவதுபிச்சைக்காரன் அந்த உணவு பொட்டலத்தை தன்னுடைய குடிசைக்கு சென்று பிரித்து பார்த்தபோது தங்க நாணயங்கள் அதனுள் இருந்ததை கண்ணுற்று அவைகளை எடுத்து கடைகளில் விற்று அதனால் கிடைத்த தொகையை கொண்டு பிச்சை எடுத்திடும் தொழிலையே மறுநாளில் இருந்து நிறுத்திவிட்டான் ஆனால் முதல் பிச்சைகாரன் மறுநாள் வழக்கம்போன்று "அரசனிடம் உதவி கோருபவர்களுக்குஅரசன் உதவிடுவார்" என பிச்சை எடுத்து கொண்டிருப்பதை கண்ணுற்ற அரசன் திடுக்கிட்டு நின்று "என்னப்பா நேற்று நான் கொடுத்த உணவு பொட்டலத்தை பிரித்து சாப்பிட்டாயா " என வினவியபோது " இல்லை அரசே நேற்று நீங்கள் உனவு பொட்டலத்தை என்னிடம் கொடுத்து சென்றவுடன் அதனை எனக்கு அருகில் "ஆண்டவனிடவனிடம் உதவி கோருபவர்களுக்கு ஆண்டவன் உதவிடுவார்" எனக்கூறும் பிச்சைக்காரனிடம் விற்றுவிட்டேன்" என பதிலளித்தான் "அடடா அப்படியா ஆயிற்று அதுவும் நல்லதுதான்" என கூறி சென்றார் அந்த அரசன்

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

நம்முடைய வாழ்வில் கடைபிடிக்கவேண்டிய மூன்று விதிகள்


முற்காலத்தில் பணக்காரன் ஒருவன் வாழ்ந்துவந்தான் அவன் எப்போதும் பணம் பணம் என பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருந்துவந்தான் இந்நிலையில் ஒரு அழகான பளபளவென தங்கம்போன்று மின்னிடும் பறவை ஒன்று மரம் ஒன்றில் அமர்ந்திருப்பதை கண்டவுடன் அதனை பிடித்து விற்றால் நல்லவிலைகிடைக்கும் என அந்த வித்தியாசமான பறவையை எப்படியோ பிடித்து விட்டான் உடன் அந்த பறவையானது ஐயா என்னை ஏன் பிடித்தீர்கள் என்னை விட்டுவிடுங்கள் எனக்கதறியது உன்னை விடுவதற்கா பிடித்தேன் நீ நன்றாக பளபளவென்று தங்கம்போன்று மின்னுகின்றாய் அதனால் உன்னை நல்ல விலைக்கு விற்று மேலும் என்னால் பொருள் சேர்த்திடமுடியும் என கூறியதை தொடர்ந்து உங்களிடம்தான் ஏராளமான பணம் இருக்கின்றதே என பதில் கூறியது உடன் பணக்காரன் உன்னை விற்று மேலும் பணம் சேர்ப்பதற்குத்தான் உன்னை பிடித்தேன் அதனால் உன்னை எப்படி விடமுடியும் எனகூறினான் நீங்கள் தொடர்ந்து என்னை பிடித்து கொண்டிருந்தால் என்னுடைய தோற்றம் பார்க்க சகிக்காத மாறிவிடும் எனகூறியதை தொடர்ந்த அதனுடைய பளபளவென மின்னும் தோற்றமும் மாறிவிட்டது உடன் அவனுக்கு கோபம் அதிகமாகி உன்னை கொன்று சாப்பிட்டுவிடுகின்றேன் என கருவினான் உடன் அந்த பறவை ஐயா என்னை மன்னித்து விடுதலை செய்திடுங்கள் உங்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்கின்றேன் என மிகவும் பரிதாபமாக கேட்டது அதனால் அந்த பணக்காரண் மனமிரங்கி சரியென விடுதலை செய்தான் உடன் அந்த பறவையும் அருகிலிருந்த மரத்திற்கு சென்று உட்கார்ந்து கொண்டு மிக்க நன்றி ஐயா உங்களுக்காக பொதுவாக மனிதர்கள் கடைபிடிக்கவேண்டிய மூன்று விதிகளை கூறுகின்றேன் எனக்கூறி முதல் விதி மற்றவர்கள்கூறும் எந்தவொரு செய்தியை அப்படியே நம்பாதீர்கள் இரண்டாவது விதி நம்முடைய கையில் கிடைத்த பொருளை விட்டுவிடாதீர்கள் மூன்றாவது நம்மிடம் இருந்த பொருளை இழந்து விட்டால் அதற்காக வருத்தபடாதீர்கள் என மூன்று விதிகளை கூறியது அந்த பணக்காரன் அடமடப்பறவையே இந்த எளிய விதிகள்தான் எங்கள் எல்லோருக்கும்தான் ஏற்கனவே தெரியுமே மேலும் அவைகளைதான் நாங்கள் அனைவரும் ஏற்கனவே பின்பற்றி வாழ்ந்துவருகின்றோமே என எகத்தாளமாக கூறினான் அப்படியா ஐயா அப்படியெனில் நான்கூறியதை நம்பினேர்களே அதுஏன் அதனை தொடர்ந்து உங்களுடைய கையில் கிடைத்த என்னை ஏன் விட்டுவிட்டீர்கள் இது இரண்டும் நான்கூறிய முதலிரண்டு விதிகளாயிற்றே அதனை பின்பற்றியிருந்தால் நான் இவ்வாறு சுதந்திரமாக மரக்கிளையில் எவ்வாறு உட்கார்ந்திருக்குமுடியும் ரொம்ப நல்லது ஐயா மூன்றாவது விதியையும் கடைபிடியுங்கள் எனக்கூறியவாறு அந்த பறவை அந்த மரத்தில் இருந்து பறந்து சென்றது

திங்கள், 20 பிப்ரவரி, 2017

ஒருவருக்கொருவர் கொடுத்து உதவிடும் நண்பர்களாக வாழ்வதே சிறப்பானதாகும்


முற்காலத்தில் ஆடுகளை வளர்த்து வந்த குடியானவனும் காட்டிற்கு சென்று விலங்குகளை வேட்டைநாய்களை கொண்டு வேட்டையாடும் வேடனும் கிராமம் ஒன்றில் அருகருகே வாழ்ந்துவந்தனர் வேடனுடைய வேட்டைநாய்களானவை அவ்வப்போது ஆடுவளர்ப்பவனின் வீட்டு எல்லைக்குள் புகுந்து ஆட்டு குட்டிகளை கடித்து தின்று செல்வது வழக்கமான செயலாக இருந்துவந்தன அதனால் அந்த குடியானவன் பக்கத்து வீட்டிலிருந்த வேடனிடம் சென்று ஐயா உங்களுடைய வேட்டைநாய்களானவை எங்களுடைய வீட்டின் எல்லைக்குள் வந்து ஆட்டு குட்டிகளை அடித்து சாப்பிட்டுவிடுகின்றன என்னுடைய பிழைப்பே அந்த ஆட்டுகுட்டிகளை வளர்த்து பெரியஆடாக ஆக்கியபின் விற்பனைசெய்வதால் வரும் வருமானம் தான் நான் வயிறார சாப்பிடமுடியும் அதனால் தயவுசெய்து உங்களுடைய வேட்டைநாய்களை எங்களுடைய வீட்டிற்குள் வந்திடாமல் கட்டிவைத்திடுங்கள் என பலமுறை கூறியும் செவிடன் காதில் ஊதிய சங்குபோன்று அந்த வேடன் அந்த குடியானவன் கோரியவாறு செய்யாமலேயே இருந்துவந்தான் ஒரு நாள் வேட்டைநாய்கள் மிகவும் கொடூரமாக ஏராளமான ஆட்டுகுட்டிகளை அடித்து சாப்பிட்டதுமல்லாமல் வீணாக அடித்து போட்டுவிட்டும் சென்றன அதனால் இதற்கு ஒரு தீர்வு கண்டே ஆகவேண்டும் என அந்த கிராமத்தின் நீதிபதியிடம் சென்று முறையீடு செய்தார் அந்த குடியானவன் உடன் அந்த நீதிபதியானவர் சரி ஐயா பக்கத்து வீட்டுகார வேடன் உனக்கு எதிரியாகவேண்டுமா நண்பனாக வேண்டுமா எனக்கூறினால் அதற்கேற்ற தீர்வினை உனக்கு வழங்குவேன் எனக்கூறியதை தொடர்ந்து முடிந்தவரை நண்பனாக இருந்தால் நன்றாக இருக்கும் என அந்த குடியானவன் தன்னுடைய கருத்தினை கூறியதை தொடர்ந்து அந்த குடியானவன் காதில் இரகசியமாக அதற்கான தீர்வினை கூறி இதனை நடைமுறை படுத்தினால் நீங்கள் இருவரும் நண்பர்களாகிவிடுவீர்கள் எனஆலோசனை கூறி அனுப்பினார் அந்த குடியானவனும் தன்னுடைய வீட்டிற்கு வந்த மறுநாள் இரண்டு சிறிய ஆட்டுக்குட்டிகளை கையில் எடுத்து கொண்டு பக்கத்துவீட்டிற்கு சென்று அந்த வேடனின் பிள்ளைகளிடம் ஆளுக்கு ஒன்று கொடுத்து விளையாடிக் கொண்டிருந்தான் சிறிதுநேரத்தில் அந்த வேடனின் பிள்ளைகள் அந்த ஆட்டுகுட்டியுடன் விளையாடுவதில் ஒன்றி போய்விட்டன காட்டிற்கு வேட்டைக்கு சென்ற வேடனும் திரும்பி வந்த பார்த்தபோது பக்கத்து குடியானவனின் ஆட்டுகுட்டிகளுடன் தங்களுடைய பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் விளையாடுவதை கண்டு பெருமகிழ்ச்சியுற்றான் அதனை தொடர்ந்து தன்னுடைய பிள்ளைகளிடமிருந்த ஆட்டுகுட்டிகளை திண்பதற்கு பாய்ந்த சென்ற தன்னுடைய வேட்டைநாய்களை சங்கிலியால் கட்டிவைத்துவிட்டான் அதுமட்டுமல்லாது இத்தனை நாட்கள் நம்முடைய வேட்டைநாய்கள் பக்கத்து வீட்டு குடியானவனின் ஆட்டுக்குட்டிகளை அடித்து கொன்று சாப்பிட்டுவந்தாலும் அதனை பெரிய பகையாக எடுத்துகொள்ளாமல் நம்முடைய குழந்தை நாம் இல்லாதபோது பொழுதுபோக்காக விளையாடுவதற்கு தன்னுடைய ஆட்டுகுட்டியை கொடுத்து விளையாட செய்த குடியானவனின் பெருந்தன்மையை மெச்சி நாமும் அவ்வாறே ஏதாவது அந்த குடியானவனுக்கு செய்திடவேண்டும் என தான் வேட்டையாடும்போது கிடைத்த முயல்குட்டிகளை பக்கத்து வீட்டு குடியானவனுக்கு பரிசாக அளித்தான் அதன்பின்னர் இவ்விருவரும் ஒருவருக்கொருவர் கொடுத்து உதவிடும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர்

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

தடையெதுவும் இல்லையென்றாலும் ஏற்கனவே பட்ட அனுபவத்தால் தடைஇருப்பதாக கற்பனை செய்துகொண்டு வேறு வழிகளில் முயற்சித்திடாமல் விட்டுவிடுகின்றோம்


கடல்வாழ் உயிரிகளை ஆய்வுசெய்திடும் ஆராய்ச்சியாளர் ஒருவர் மீன்களையும் சுறாவினை பற்றியும் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டார் இந்த ஆய்விற்காக ஒரு பெரிய நீர்தொட்டியில் சுறா ஒன்றையும் பல சிறிய மீன்களையும் விட்டு வளர்த்தார் அதனை தொடர்ந்து ஓரிரு நாட்களில் சிறியமீன்கள் அனைத்தையும் பிடித்து சாப்பிட்டு விட்டதால் தனியாக வேறு உணவு ஏதேனும் கிடைத்திடுமாவென அந்த மீன் தொட்டியில் அந்த சுறாவானது அலைந்து திரிந்து நீந்திகொண்டிருந்தது அதன்பிறகு ஆய்வாளர் அந்த பெரிய மீன்தொட்டியை கண்ணாடியிழையினால் தடுப்புசுவர்போன்று இரண்டாக பிரித்து அந்த தொட்டியின் ஒரு பகுதியில் இந்த சுறாவையும் மறுபகுதியில் பலசிறியமீண்களையும் விட்டுவளர்த்தார் அதன்பின்னர் மறுபுறம் இருந்த சிறிய மீன்களை உண்பதற்காக அந்த சுறாவானது பாய்ந்த சென்றது ஆனால் இடையிலிருந்த கண்ணாடி-யிழையிலான தடுப்புசுவர் அதனை தடுத்துவிட்டது பின்னர் அந்த கண்ணாடி இழைதடுப்புசுவர் அருகில் சிறிய மீன்கள் நீந்திவரும்போது அவைகளை பிடித்து உண்பதற்காக சுறாவானது மீண்டும் பாய்ந்த செல்லும் ஆனால் கண்ணாடியிழைலான தடுப்பு சுவரின்மீது சுறாவானது மோதி திரும்பிவிடும் அதனால் பக்கத்தில் இருக்கும் சிறியமீன்களை பிடித்து உண்ண முடியவில்லையேயென கோபமுற்று மீண்டும் வேகமாக பாய்ந்து சென்றபோது மீண்டும் கண்ணாடி இழை தடுப்பு சுவரானது சுறாவினை தடுத்து விடும் இவ்வாறே கடுமையாக அந்த சுறா முயன்றாலும் அந்தசுறாவினால் சிறிய மீன்களை பிடித்து உண்ணமுடியாத நிலை ஏற்பட்டது இதே போன்று அந்த சுறாவானது தினமும் சிறிய மீன்களை உண்பதற்காக பாய்ந்து சென்று முயன்று பார்த்தாலும் அந்த சிறிய மீன்களை பிடிக்கமுடியாமல் சோர்வுற்று அதன்பின்னர் அவ்வாறான முயற்சியையே கைவிட்டுவிட்டது அதனை தொடர்ந்து அந்த கண்ணாடி இழைக்கு அருகில் அந்த சிறிய மீன்கள் நீந்துவதும் இந்த சுறாவானது அதற்கருகில் அவைகளை பிடித்து தின்னமுடியாமல் நீந்துவதும் வழக்கமான செயலாகி விட்டது இதன்பின்னர் சிறிதுகாலம் கழித்து இடையிலிருந்த கண்ணாடியிழையிலான தடுப்புசுவரினை அந்த ஆய்வாளர் எடுத்துவிட்டார் என்ன ஆச்சரியம் அப்போதும் அந்தசிறியமீன்கள் அந்த சுறாவின் அருகிலேயே நீந்தி சென்றாலும் அவைகளை பிடித்து உண்ணாமல் அந்தசுறாவானது வாழ்ந்துவந்தது

இந்த சுறாவினை போன்றே நம்மில் பலரும் கடந்த காலத்தில் செய்த செயல்களில் ஏற்பட்ட பின்னடைவுகள் , தோல்விகள் ஆகியவற்றை அனுபவித்து வாழ்ந்துவந்ததால் எதிர்காலத்தில் குறிப்பிட்ட நிகழ்வினால் மீண்டும் நமக்கு அவ்வாறான தோல்வியே ஏற்படும் என நம்பி அந்த செயலை செய்வதற்கான வேறு வழிமுறையை காண முயற்சிக்காமல் அதற்கான முயற்சியையே கைவிட்டுவிடுகின்றோம் அதாவது நம்முடைய வாழ்வில் எந்தவொரு செயலிலும் தடையெதுவும் இல்லையென்றாலும் ஏற்கனவே பட்ட அனுபவத்தால் தடைஇருப்பதாக கற்பனை செய்துகொண்டு வேறு வழிகளில் முயற்சித்திடாமல் விட்டுவிடுகின்றோம் என்பதே எதார்த்தமான உண்மை நிலவரமாகும்

புதன், 8 பிப்ரவரி, 2017

விருந்தோம்புதல் எனும் பண்பு


ஒரு காட்டில் ஒருசமயம் கணவன் மனைவியாக இரண்டு புறாக்கள் பெரிய மரம்ஒன்றில் கூடுகட்டி வாழ்ந்துவந்தன அவை தினமும் பகல் முழுவதும் அந்த காட்டில் பறந்து சென்று தங்களுக்கு தேவையான உணவினை தேடிபிடித்து தாம்உண்டதுபோதுமிகுதியை இரவு உண்பதற்கு தங்களுடைய கூட்டிற்குஎடுத்துவருவது வழக்கமான நடைமுறை செயலாகும் இந்நிலையில் அன்று மழை நன்கு பொழிந்து கொண்டிருந்ததால் இவைகளுக்க இரை அதிகமாக கிடைக்கவில்லை பொழுது சாயும் நேரம் பெண்புறாமட்டும் கூட்டிற்கு திரும்பிவந்து சேர்ந்தது ஆண்புறா திரும்பவில்லை அடடா ஏன் இன்னும் திரும்பவில்லை ஏதாவது ஆபத்தில் மாட்டிகொண்டதா என பதைபதைப்புடன் காத்திருந்தது மழைபொழிவும் நின்றுவிட்டது அப்போது ஒரு வேடன் குளிரில் வெடவெடன நடுங்கிகொண்டு இந்த புறாக்களின் கூடு இருந்த மரத்தின்அடியில் வந்த ஒதுங்கி நின்று ஓய்வெடுக்கவிரும்பினான் அவனுடைய கையிலிருந்த கூண்டில் ஆண்புறா மாட்டிகொண்டிருந்தது அதனை கண்ணுற்ற பென்புறாவானது ஐயோ எவ்வாறு இந்த வேடன் வலையில் மாட்டிகொண்டீர்கள் எவ்வாறு உங்களை நான் காப்பாற்றுவேன் ஒன்றும் புரியவில்லையே என அழுது புலம்பியது உடன் அந்த ஆண்புறாவானது அழாதே என்னை காப்பாற்றுவதை பற்றி பின்னர் யோசிக்கலாம் இந்த வேடன் வந்திருப்பது நாம் வாழும் கூடுள்ள மரத்திற்கு அதனால் அவர் நமக்கு விருந்தாளி அவரை வரவேற்று உபசரிப்பது நம்முடைய முதல் கடமையாகும் என க்கூறியதை தொடர்ந்த பெண்புறாவானது சிறுசிறு குச்சிகளையும் இலைதழைகளையும் கொண்டுவந்து அந்த வேடன் அருகில் வைத்து நெருப்பிட்டு எரியவைத்தது பின்னர் ஐயா வேடரே நீங்கள் எங்களுடைய விருந்தாளி உங்களுடைய குளிரை போக்குவதற்குக நெருப்பினை எரியவிட்டுள்ளேன் உங்களுடைய பசியை போக்குவதற்கு இன்ற மழை பொழிந்ததால் காய்கணிகளைஎங்களால் சேகரித்து கொண்டுவரமுடியவில்லை அதனால் உங்களுடைய பசியை போக்குவதற்காக நான் இந்த நெருப்பில் பாய்ந்துவிடுகின்றேன் உடன் நெருப்பில் என்னுடைய உடல் நீங்கள் உண்பதற்கேற்ப பதமாகி விடும் அதன்பின்னர் நீங்கள் உண்டு பசியாறலாம் எனக்கூறி அந்த பெண்புறாவானது நெருப்பில் பாய தயாரானது உடன் ஐயய்யோ புறாக்களே உங்களுடைய இந்த விருந்தோம்புதல் பண்பினை புரிந்து கொள்ளாமல் நான் மடையனாக உன்னுடைய கணவனை என்னுடைய கூண்டில் பிடித்து அடைத்துவிட்டேனே எனக்கூறி உடன் அந்த ஆண்புறாவை கூண்டிலிருந்து விடுவித்துவிட்டான் வேடன் புறாக்கள் இரண்டும் அதன்பின்னர் சுதந்திரமாக வாழ்ந்த வந்தன

திங்கள், 30 ஜனவரி, 2017

நிகழ்விற்கு காரணம்அவரவர்கள் வாழும் சூழலே


ஒரு காட்டில் இரு கிளிகள் கணவன் மனைவியாக ஒரு மரத்தில் கூடுகட்டி வாழ்ந்துவந்தன அந்த கூட்டில் முட்டையிட்டு இரு கிளிகுஞ்சுகள் உருவாகியதை தொடர்ந்து அவ்விரண்டு பெற்றோர் கிளிகளும் தினமும் பகல் முழுவதும் காடுகளில் பறந்து திரிந்து தங்களுடைய பிள்ளைகளுக்கு தேவையான உணவினை தேடிபிடித்து கொண்டுவந்த ஊட்டி வளர்த்துவந்தன அவ்வாறு தாங்கள் இரைதேட செல்லும்போது பத்திரமாக இருக்குமாறு தம்முடைய குஞ்சுகளுக்கு அறிவுரை கூறி செல்வது வழக்கமான செயலாக இருந்துவந்தது இந்நிலையில் இந்த கிளிகளின் போக்கினை அறிந்து கொண்ட வேடன் ஒருவன் பெரிய கிளிகள் இரண்டும் காடுகளில் உணவினை தேட புறப்பட்டபின்னர் கிளிக்குஞ்சுகள் இரண்டையும் மடக்கி பிடித்து எடுத்து சென்றான் அப்போது ஒரு கிளிக்குஞ்சு மட்டும் எப்படியோ தப்பி பிழைத்து ஓடிச்சென்றுவிட்டது அதனால் மற்றொன்றை மிகபத்திரமாக வீட்டிற்கு கொண்டுவந்த கூண்டு ஒன்று செய்து அதில் வைத்து வளர்த்து வந்தான் அந்த கிளிக்குஞ்சும் வளர்ந்து அவர்களுடன் பேசி பழக ஆரம்பித்தது தப்பித்த மற்றொன்று காடுகளில் அலைந்து திரிந்து அருகிலிருந்த ஆசிரமத்தின் சோலையில் குடியேறி அமைதியாக அவர்களின் நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றி சுதந்திரமாக வாழ்ந்துவந்தது இந்நிலையில் வழிபோக்கன் ஒருவன் வேடன் வீட்டின் திண்ணையில் கால்நடையாக நடந்து வந்த களைப்பாறுவதற்காக உட்கார்ந்தபோது உடன் கூண்டில் இருந்த இளைய கிளியானது "முட்டாள் இங்கு ஏன்டா வந்தாய் நான் உன்னுடைய குரல்வலையை கடித்து குதறிவிடுவேன் எழுந்துபோடா" என மிரட்டியது இதனை கேள்வியுற்றதும் அந்த வழிபோக்கன் உடன் களைப்பாறுதலை அப்புறம் பார்த்து கொள்ளலாம் என எழுந்து சென்றான் அதன் பின்னர் அந்த வழிபோக்கன் ஆசிரமத்திற்கு அருகே வந்தபோது "வாருங்கள்ஐயா வணக்கம் ஐயா இந்த மரநிழலில் நீங்கள் நடந்து வந்த களைப்பை ஆற்றுக இங்குள்ள சோலைகளில் உங்களுக்கு பிடித்தமான கணினிகளை உண்டு பசியாறுக இங்கிருக்கும் சுனையின் நீரினை அருந்தி தாகத்தை போக்குக" என முகமலர்ந்து வரவேற்புஅளித்த இளைய கிளியை கண்ணுற்ற அந்த வழிபோக்கன் மிகவும் ஆச்சரியத்துடன் உன்னை போன்றே வேடனிடத்தில் இருக்கும் கிளிமட்டும் எவ்வாறு கரடுமுரடாக திட்டுகின்றது என வினவியபோது அவரவர்கள் வாழும் சூழலே இவ்வாறான நிகழ்விற்கு காரணம் என இந்த இளைய கிளிக்கூறியது

செவ்வாய், 24 ஜனவரி, 2017

ஒரு கிராமத்து விவசாயியும் அவருடைய மனைவியும்


விவசாயி ஒருவர் எப்போதும் தன்னுடைய மனைவியை பார்த்து நீ சோம்பேறி காலகாலத்தில் அந்தந்த வேலையைய விரைவாக முடிப்போம் என்றில்லாமல் வீட்டிலேயே சாப்பிடவேண்டியது அதன்பின்னர் தூங்க வேண்டியது என்றுதான் பொழுதை போக்குகின்றாயே தவிர உருப்படியாக எதையும் செய்வதே இல்லை சோம்பேறி என திட்டிகொண்டே இருப்பார் இதனால் கோபமுற்ற அவருடைய மனைவி நீங்கள் தவறாக எண்ணிவிட்டீர்கள் நாளை ஒரு நாள் மட்டும் நீங்கள் வீட்டிலிருந்து எனக்கு பதிலாக என்னுடைய பணியையும் உங்களுடைய பணியை உங்களுக்கு பதிலாக நானும் மாற்றி பார்த்திடுவோம் அதன்பின்னர் யார் சோம்பேறி என முடிவுசெய்திடுக என சவாலுக்கு தன்னுடைய கணவனை அழைத்தார் அதனை தொடர்ந்து அந்த விவசாயியும் மிகமகிழ்ச்சியாக அந்த சவாலை ஏற்றுகொண்டு மறுநாள் அதன்படி அவர் வீட்டிலும் அவருடைய மனைவி வயல்வெளியிலும் மாறி பணிபுரிய சென்றனர் அந்த விவசாயி முதலில் பசுமாட்டிலிருந்து பாத்திரத்தில் பால்கறப்பதற்கு முயன்றபோது அந்தபசுவானது அவரை எட்டி உதைத்து தள்ளியது சரிதான் என வீட்டிற்கு தேவையான தண்ணீரை கிணற்றிலிருந்து இறைத்திடலாம் என முயன்ற போது ராட்டினத்தில் கயிறு மாட்டிகொண்டு தண்ணீர் இறைக்கவே முடியவில்லை சமைக்கலாம் என அடுப்பை பற்றவைத்திட முயன்றபோது அடுப்பானது புகையால் நிரம்பியதே தவிர எறியவேஇல்லை இவ்வாறு அவருடைய மனைவி செய்த பணியை அவரால் முழுமையாக செய்து முடிக்கமுடியாமல் அல்லாடிகொண்டிருந்தார் சாயுங்காலம் அவருடைய மனைவி வீடுதிரும்பியபின் தன்னுடைய கணவர் வீட்டுபணியை செய்து முடிக்கமுடியாமல் அல்லாடுவதை கண்ணுற்று அவரை விலகச்செய்து ஒவ்வொரு பணியாக செய்து முடித்தார் இதனால் அந்த விவசாயி மிகவும் வெட்கத்துடன் அவருடைய மனைவியை நோக்கி நான் உன்னுடைய அருமைதெரியாமல் உன்னை தவறாக தீட்டிவிட்டேன் என்னை மன்னித்துவிடு என சமதான தூதுவிட்டார் அதன்பின்னர் இரண்டுபேரும் அமைதியாக சமாதானமாக வாழ முடிவுசெய்தனர்

செவ்வாய், 17 ஜனவரி, 2017

சமமற்ற பங்கீடு


அரேபிய நாட்டில் முஸ்லீம் ஒருவர் இருந்தார் அவருக்கு ஒரு ஒட்டகமும் பேரிச்சை மரம் ஒன்றும் இருந்தன ஒட்டகபாலும் பேரிச்சைபழமும மட்டுமே அவர்களின் குடும்ப வருமானமாகும் அவருக்கு ஒருமனைவியும் அலி, அக்பர் ஆகிய இருபிள்ளைகளும் இருந்தனர் பிள்ளைகள் வளர்ந்துவரும்போது திடீரென அந்த கணவன் மனைவி ஆகிய தம்பதிகள் இருவரும் அகால மரணம் அடைந்தவிட்டனர் அதனால் பிள்ளைகள் தங்களுடைய பிழைப்பை பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டது பெரியவன் அலி மிகவும் தந்திர சாலி பேராசைக்காரன் இளையவன் மிகவும் அன்புடையவன் அனைவரிடமும் மிக சுமுகமாக பழகுபவன் அவ்விருவரும் குடும்ப சொத்தான ஒட்டகத்தையும் பேரிச்சமரத்தையும் எப்படி பாகம் பிரிப்பது என பிரச்சினை எழுந்தபோது பெரியவன் தந்திரமாக தம்பி நான் நம்முடைய குடும்பத்தில் பெரியவன் அதனால் பேரிச்சை மரத்தின் மேல்பகுதி எனக்கும் கீழ்பகுதி உனக்கும் அதேபோன்று ஒட்டகத்தின் பின்பகுதி எனக்கும் முன்பகுதி உனக்கும் என பங்கிட்டுகொள்வோம் அந்தந்த பகுதியில் வரும் இலாப நட்டங்களை வருமான செலவுகளை அவரவர்கள் ஏற்றுகொள்ளவேண்டும் என ஒப்பந்தம் செய்தான் அதனை தொடர்ந்த இளையவன் ஒட்டகத்தி்ற்கு தேவையான குடிநீர் உணவு போன்றவற்றை அளித்து வந்தான் அவ்வாறே பேரிச்சமரத்தின் அடிமரத்தை சுற்றி பாத்தி கட்டி நன்கு நீர் பாய்ச்சி வந்தான் பெரியவன் அலி ஒட்டகத்தின் பாலை கறந்து விற்றும் பேரிச்சம் பழத்தை விற்றும் பணம் சம்பாதித்து வந்தான் ஆனால் இளையவன் அக்பருக்கு வருமானம் இல்லை செலவு மட்டுமே அதனால் அலியிடம் விற்பணை வருமானத்தை தனக்கு பங்கிட்டு தருமாறு இளையவன் அக்பர் கோரியபோது ஒப்பந்தத்தின்படி ஒட்டகத்தின் பின்பகுதியும் பேரிச்சமரத்தின் மேல்பகுதியின் வருமானமும் தன்னைத்தான் சேரும் என வாதிட்டான் இதனை கண்ணுற்ற வழிபோக்கன் ஒருவன் இளையவன் காதில் இரகசியமாக ஏதோ கூறி அவ்வாறு செயல்படுமாறு கூறினான் அதனை தொடர்ந்து மறுநாள் பெரியவன் அலி ஒட்டகத்தின் மடியில் பால்கறந்து கொண்டிருக்கும்போது இளையவன் அக்பர் ஒட்டகத்தின் முன்பகுதியை சாட்டையால் அடித்தான் அதனால் ஒட்டகம் வலிதாங்காது பால் கறந்து கொண்டிருந்த பெரியவன் அலியை தன்னுடைய காலால் எட்டி உதைத்து தள்ளியது அதனை தொடர்ந்து ஐயோ அம்மா என அடித்துபிடித்து எழுந்து ஓடினான்பெரியவன் அலி அப்போது தம்பி ஏன் அவ்வாறு ஒட்டகத்தை சாட்டையால் அடிக்கின்றாய் என பெரியவன் அலி வினவியபோது ஒப்பந்தத்தின் படி ஒட்டகத்தின் முன்பகுதியில் நான் என்னவேண்டுமானாலும் செய்து கொள்வேன் அதை நீ கேட்க முடியாது என இளையவன் அக்பர் கூறினான் இவ்வாறே மறுநாள் பெரியவன் அலி பேரிச்சமரத்தில் ஏறி பழத்தை பறித்து கொண்டிருக்கும்போது இளையவன் அக்பர் பேரிச்சமரத்தின் அடிமரத்தினை கோடாளியால் வெட்டத் துவங்கினான் உடன் பெரியவன் அலி தம்பி தம்பி நிறுத்து உன்னுடைய செயலை நான் பேராசையால் வருகின்ற வருமானத்தை இருவரும் பங்கிட்டு கொள்வதை தவிர்த்து தவறு செய்துவிட்டேன் இனிமேல் வருகின்ற வருமானத்தை இருவரும் சமமாக பங்கிட்டுகொள்வோம் அவ்வாறே அவைகளின் பராமரிப்பையும் இருவரும் சமமாக செய்திடுவோம் என திருந்தி சரிசெய்தான்

வியாழன், 12 ஜனவரி, 2017

நம்முடைய வாழ்வில் எதிர்படும் எந்தவொரு நிகழ்வையும் நேர்மறையாக சிந்தித்து நமக்கு ஏற்றவாறு அதனை பயன்படுத்தி கொள்க


.நாம் ஒரு நேர்மறையான சிந்தனை, மற்றொரு எதிர்மறையான சிந்தனை ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டினை விவரிக்கின்ற பழைய கதை ஒன்றினை கண்டிப்பாக கேள்விபட்டிருப்போம்: அதாவது பல ஆண்டுகளுக்கு முன்பு சூரியன் மறையாத ஆட்சிபுரி்ந்த பிரிட்டன் நாட்டின் காலணி உற்பத்தி செய்திடும் ஒரு நிறுவனமானது தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு விற்பனையாளர்களை அழைத்து அவ்விருவரும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று தங்களுடைய நிறுவனத்தின் உற்பத்தி பொருளான காலணிகளின் விற்பணையை மேலும் உயர்த்துவதற்குதேவையான சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கட்டளையிட்டது . அதனை தொடர்ந்து அவ்விருவரும் ஒருவாரகாலம் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்றுவந்தனர் பிறகு முதல் விற்பனையாளர், "ஆப்பிரிக்க நாடுகளில் காலணிகள் எதையும் யாரும் அணியவில்லை அதனால் அங்கு காலணி விற்பதற்கான வாய்ப்பு எதுவும் இல்லை " என தன்னுடைய அறிக்கையை சமர்ப்பித்தார் இரண்டாவது விற்பனையாளர், "ஆப்பிரிக்க நாடுகளில் காலணிகள் எதையும் யாரும் அணியவில்லை அதனால் நம்முடைய நிறுவனத்தின் காலணிகளை அங்கு விற்பணை செய்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன " என சமர்ப்பித்தார் "ஆப்பிரிக்க நாடுகளில் யாரும் காலணிகள் அணியவில்லை" என்பதுதான் உண்மையான நிலவரமாகும் அந்த கள நிலவரத்தை முதல் விற்பணையாளர் எதிர்மறையாக சிந்தித்து "அங்கு காலணி விற்பதற்கான வாய்ப்பு எதுவுமே இல்லை " என்றும் அதே களநிலவரத்தை நேர்மறையாக சிந்தித்து "நம்முடைய நிறுவனத்தின் காலணிகளை அங்கு விற்பணை செய்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன " என இரண்டாவது விற்பணையாளரும் அறிக்கை சமர்ப்பித்தனர் - இந்த எளிய குறுகிய கதையானது எவ்வாறு இரண்டு வெவ்வேறு வழிகளில் ஒரே களநிலவரத்தை கருதலாம் என்பதற்கான சிறந்த உதாரனத்தை நமக்கு வழங்குகின்றது. அதே போன்று நம்முடைய வாழ்வில் எதிர்படும் எந்தவொரு நிகழ்வையும் நேர்மறையாக சிந்தித்து நமக்கு ஏற்றவாறு அதனை பயன்படுத்தி நம்முடைய வெற்றிகரமான வாழ்வின் முன்னேற்றத்திற்கு எவ்வாறு தயார் செய்து கொள்வது எனவிழிப்புடன் நேர்மறையான சிந்தனையில் இருக்கவேண்டும் அதாவது எந்தவொரு நிகழ்வையும் நமக்கு சாதகமாக பயன்படுத்தி வெற்றிகொள்ள தயாராக இருக்கவேண்டும் என நாம் அனைவரும் உறுதிமொழியேற்போம் வெற்றிபெறுவோம்

புதன், 4 ஜனவரி, 2017

மற்றவர்களுக்கு தீங்கு ஏற்படுத்துவதை தவிர்த்து மகிழ்ச்சியான வாழ்வை உறுதிபடுத்திடுக


ஒருதச்சு தொழில் செய்திடும் தச்சர் ஒருநாள்மாலை நேரத்தில் அன்றைய பணிமுடிந்து தன்னுடைய தொழிலகமான தச்சுப்பட்டறையை மூடிபூட்டிவிட்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றார் அதன்பிறகு விஷமுள்ள கருநாகபாம்பு ஒன்று மிகப்பசியோடு அவரது பட்டறைக்குள் நுழைந்தது தனக்கு எலி போன்ற இரை ஏதேனும் கிடைக்குமா என அந்த பட்டறை முழுவதும் அது தேடி அலைந்தது தச்சு பட்டறையில் எலிக்கு என்ன வேலை அதனால் கருநாகபாம்பிற்கு தேவையான உணவு கிடைக்காத விரக்தியில் அது மிகவேகமாக அலைந்து திரிந்ததால் அந்த தச்சுபட்டறையிலிருந்த இருபுறமும் வெட்டுகின்ற கூரான நீண்ட வாளில் இதனுடைய உடல் பட்டு சிறியஅளவு கீறி விட்டது இதனால் கோபம் கொண்ட அந்த கருநாகமானது மற்றவர்களை கடித்து கொல்லுகின்ற வீரமுள்ள என்னுடைய உடலையே கீறி விட்டாயா உன்னை என்னசெய்கின்றேன் பார் என கோபமாக அந்த கூர்மையானபகுதியை தன்னுடைய வாயால் கொத்தியது மூர்க்கனிடம் சண்டையிட்டால் நமக்குதானே நஷ்டம் என்பதற்கு ஏற்ப அந்த கருநாகத்தின் வாயிலும் அந்த கூர்மையான வாளின் பகுதி கீறி வாயெல்லாம் இரத்தம் கொட்டுமாறு ஆகிவிட்டது அதனால் அடே என்னிடம் நேருக்குநேர் மோதுகின்றாயா நீயா நானா என பார்த்துவிடலாம் என கோபம் மிகவும் அதிகமாகி கண்மண் தெரியாமல் தன்னுடைய நீண்ட உடலை கொண்டு அந்த இருபுறமும் கூரான வாளினை சுற்றி வளைத்து இறுக்கி நெருக்கியது முடிவு அந்த கருநாகத்தின் உடல்தான் துண்டுதுண்டாக வெட்டப்பட்டதுதவிர வாளிற்கு தீங்கு ஒன்றும் நேரவில்லை பாம்பின் சொந்த கோபமும், மூர்க்கமான செயலே அதனுடைய உயிர் போவதற்கு காரணமாகிவிட்டது ஆனால் அந்த வாளானது எப்போதும் போலவே அப்படியேதான் இருந்தது மறுநாள் காலை அந்த தச்சர் தன்னுடைய தச்சுபட்டறையை திறந்து பார்த்தபோது வாளிற்கு அருகில் துண்டுதுண்டான கருநாக பாம்பின் உடல் மட்டும் கிடந்ததை கண்ணுற்றுவுடன் அவருக்கு மிக ஆச்சர்யமாகிவிட்டது

அதேபோன்றே நம்மில் பலரும் சில நேரங்களில் தேவையில்லாத நிகழ்வுகளில் கூட குறிப்பிட்ட நபரால்தான் நமக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டது என நமக்கு கோபம் அதிகமாகி காரணமான மற்றவர்களுக்கு தீங்கு ஏற்படுத்துவதற்காக நாம் முயற்சி செய்திடுவோம் ஆயினும் நேரம் போக போக அதனுடைய பாதிப்பு நமக்கே திரும்ப ஏற்படுவதை நாம் உணராமல் அறியாமல் தெரியாமல் நமக்கு நாமே தீங்கிழைத்து கொள்வோம் அதனால் இதனை தவிர்த்து மகிழ்ச்சியான நம்முடைய வாழ்க்கையில், அவ்வாறான நிகழ்வுகளை புறக்கணித்து சமாளித்து வாழக்கற்றுக்கொள் வோம் நம்முடைய வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக ஆக்கிடுவோம் எனஉறுதிமொழி ஏற்றுக்கொள்க

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...