ஞாயிறு, 25 டிசம்பர், 2016

உண்மையான அழகு நாம் கண்களால் காணும் உடல் தோற்றத்தில் இருக்காது உள்ளத்தில் மட்டுமே இருக்கும்


முன்னொரு காலத்தில் ஒரு பணக்கார வயதான மனிதன் மிகப் பெரிய வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்தார். அவருடைய உடல்நிலை நாளுக்கு நாள் தளர்ந்து பலவீனமாகிக்கொண்டே வந்ததால் அவரால் தன்னுடைய உடல்நிலையையும் தன்னுடைய பெரிய வீட்டையும் பார்த்து நன்கு பராமரித்துக்கொள்ள முடியவில்லை அதனால் அவர் தன்னுடைய பெரிய வீட்டின் சகல வேலைகளுக்கு உதவவும் தன்னை கவனித்து பராமரித்திடவும் பணியாளர் ஒருவரை பணியமர்த்திட எண்ணினார்.

அதனை தொடர்ந்து அந்த வயதான மனிதன் சங்கர் , அருணன் ஆகிய இருவர்களையும் தன்னுடைய பணியாளர்களாக நியமித்தார். அவர்களுள் சங்கர் ஒரு அழகானாகவும் ஆனால் அருணன் ஒரு அசிங்கமான தோற்றத்துடனும் இருந்தனர் அவர்கள் பணியில் சேர்ந்த அன்று அந்த வயதான மனிதன் தன்னுடைய பணியாளரில் ஒருவனாகிய சங்கரிடம் தன்னுடைய வீட்டின் சமையலறைக்கு சென்று தனக்கு ஒரு கோப்பை தேநீர் தயார்செய்து கொண்டுவருமாறு கேட்டுகொண்டார் .

அந்த வயதான மனிதன் கூறிய பணியை நிறைவேற்றுவதற்கு சங்கர் அவ்விடத்திலிருந்து சென்றபின் அகமது எனும் பணியாளர் இருக்கும் பக்கம் திரும்பி , " உன்னை பற்றி சங்கர் மிகவும் தவறாக கூறுகின்றார் அதாவது நீ ஒரு மோசமான ஆள் என்றும் நம்பிக்கைக்குரிய ஆள்அன்று என்றும் கூறுகின்றார் அது சரிதானா ?" என அந்த வயதான மனிதன் கூறினார்

இதனை தொடர்ந்து அருணன் ஒரு கணம் மட்டும் சிந்தித்த பின் "சங்கர் ஒரு மிக அழகான மனிதர் அவருடைய அகத்தில் இருப்பதே முகத்தில் வெளிப்படும் என்பதற்கேற்ப அவர் மிக அழகான தோற்றத்தை கொண்டுள்ளார் " எனக்கூறினார்

மேலும் ஒரு அழகான மனிதர் பொய் ஒன்றும் சொல்லமாட்டார் என்று அருணன் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார் அதனால் அவர் அந்த வயதான மனிதனிடம் "சங்கர் என்னைப் பற்றி தவறான கருத்தினை கொண்டுள்ளார் என்றால், கண்டிப்பாக என்னை அறியாமல் தவறு ஏதாவது என்னிடம் இருக்கும். என நினைக்கின்றேன் அதனால் அவர் கூறுவது சரியாகவும் இருக்ககூடும்"என்று கூறினார் இவ்வாறான கருத்தினை அருணன் கூறியதை தொடர்ந்து மிகவும் அசிங்கமான முகத்தோற்றத்துடன் இருந்த அருணன் எனும் பணியாளரின் உண்மையான மனித தன்மை அந்த வயதான மனிதனை கவர்ந்தது. இதற்கிடையில், சங்கர் தன்னுடைய முதலாளிக்கு ஒரு குவளை தேநீர் கொண்டு வந்தார்.

அதனை கண்ணுற்ற வயதான மனிதன் தனக்கு காலை உணவினை தயார் செய்யுமாறு அருணனிடம் கூறி அனுப்பிய பின்னர் சங்கர்இருக்கும் பக்கம் திரும்பி, "உன்னை பற்றி அருணன் மிகவும் தவறாக கூறுகின்றார் அது பற்றி நீ என்ன சொல்கிறாய்?" எனக்கூறினார் இதைக்கேள்விப்பட்ட சங்கர் கோபம் அதிகமாகி "அருணன் ஒரு பொய்யன்! ஒரு போக்கிரி!" என்றவாறு மிக மோசமான கருத்துக்களை அருணன் மீது சுமத்தி கோபமாக கூறத் தொடங்கினார்.

இதனை தொடர்ந்து அந்த வயதான மனிதன் "ஒரு அழகான தோற்றத்தைக் கொண்ட மனிதனின் உள்ளம் அழகற்று உள்ளது என்றும் ஆனால் அசிங்கமான வெளிப்புற தோற்றத்தை கொண்டவனின் உள்ளம் அழகானதாக உள்ளது அதனால் உருவத் தோற்றத்திற்கும் உள்ளத்திற்கும் தொடர்பு எதுவும் இல்லை " என்ற முடிவிற்கு வந்தார்.

.கதையின் கருத்து "உண்மையான அழகு நாம் கண்களால் காணும் உடல் தோற்றத்தில் இருக்காது உள்ளத்தில் மட்டுமே இருக்கும் நம்முடைய கண்களால் காணும் அழகான தோற்றம் என்றாவது ஒருநாள் மறைந்துவிடும் ஆனால் அகத்தின் அழகே முகத்தின் அழகாக நம்முடைய இதயத்தில் எப்போதும் தங்கிஇருக்கும்"

திங்கள், 19 டிசம்பர், 2016

ஒரு பெண் சுயதொழில் செய்து வெற்றிபெறமுடியுமா?


ஒரு இளம்பெண் தன்னுடைய கல்லூரிபடிப்பை முடித்தவுடன் அப்பெண்ணினுடைய பெற்றோர்கள் "பொதுவாக இதன்பின்னர்பெண்கள் பிஎட் எனும் இளங்கலை கல்வியியல் பயின்று பள்ளியில் ஆசிரியராக பணிபுரிவதுதான் நல்லது" என ஆலோசனை கூறினார்கள் ஆனால் அந்த பெண் கராத்தே கலையை கற்றிட விரும்பி அதற்கான பயிற்சியில் சேர்ந்து நன்கு கற்று அதில Black Belt பெற்றாள்.அதனை தொடர்ந்து அவளுடைய பெற்றோர்களின் வற்புறுத்தலினால் பள்ளிகளில் வேலை தேட ஆரம்பித்தாள் ஆனால் நாட்டில் வேலையின்மை பிரச்சினையாநது நாளுக்கு நாள் அதிகமாகி வேலைதான் குதிரை கொம்பாக இருந்தது.ஆயினும் இவ்வாறான நிலையில் தனியார் பள்ளிகளானது தம்முடைய பள்ளிகளில் படித்திடும்பிள்ளைகளின் பெற்றோர்களிடம் அதிகஅளவு கட்டணங்களை வசூல்செய்திடும் ஆனால் அந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குதான் மிககுறைந்த சம்பளமே வழங்கும் நிலையில் என்னசெய்வது என அவள் தடுமாறி நின்றபோது சொந்தமாக கராத்தே கலையை மாணவர்களுக்கு கற்றுதரும் ஒரு கராத்தே பள்ளியை துவங்கிடலாம் என அந்த பெண் முடிவுசெய்தாள் உடன் அவளுடைய பெற்றோர்கள் பெண்கள் அவ்வாறான சுயதொழில் எதுவும் செய்யவும் கூடவும் கூடாது செய்யவும்முடியாது என மறுத்து தடுத்தனர்

ஆனாலும் அந்த பெண்ணானவள் அவளுடைய பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி சுயமாக தொழில் செய்யவேண்டும் என்ற பேரவாவினால் ஒரு வாடகை இடத்தில் தன்னுடைய நண்பர்களின் உதவியுடன் கராத்தே பயிற்சி பள்ளியொன்றை ஆரம்பித்தாள் அதனை தொடர்ந்து காலப்போக்கில், அவளுடைய கல்லூரி நண்பர்களின் வாயிலாக அந்த பகுதியில் அந்தகராத்தே பள்ளி நன்கு அறிமுகமாகி அப்பள்ளியானது மிகவேகமாக வளர்ந்து அதன்மூலம் போதுமான வருமானமும் அவளுக்கு கிடைத்தது அதனால் அவளுக்கென்று சொந்த வீடு இதர அத்தியாவசி பொருட்கள் என வந்து சேர்ந்தன இவ்வாறு வாழ்வில் வெற்றி பெற்ற அந்த பெண்ணானவள்

இவளுடைய இந்த சொந்த தொழில் துவங்கிடவேண்டும் என்ற முடிவு சரியா? இன்றைய போட்டிகள் நிறைந்த வாழ்வில் வேறு துறைகளிலும் சம்பளத்திற்கான பணிவாய்ப்பினை நாடாமல் அல்லது தேடாமல் இவ்வாறு ஒரு பெண் சுயதொழில் செய்வது சரியானதா? ஒரு பெண் இவ்வாறாக சுயதொழில் செய்து வெற்றிபெறமுடியுமா? ஆகிய கேள்விகளுக்கு பார்வையாளர்களாகிய நம்முடைய பதில் என்ன?

திங்கள், 12 டிசம்பர், 2016

முட்டாள்களிடம் நல்ல ஆலோசனைகளை கூறாதே


.ஒரு காட்டில் இருந்த மரமொன்றின் மீது பல்வோறு வகையான பறவைகள் தாங்கள் தங்குவதற்கேற்ற சிறிய கூடுகளை அமைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. மழைக்காலம் தொடங்குவதற்குமுன், அவையனைத்தும் தங்களுடைய குடியிருப்பான கூடுகளை சிறுசிறு குச்சிகளையும் இலைகளையும் கொண்டு பழுதுபார்த்ததோடுமல்லாமல். மேலும் தாங்களும் தங்களுடைய குஞ்சுகளும் பாதுகாப்பாக இருப்பதற்கான வழிவகைகளை செய்தன அதுமட்டுமல்லாது வரும் மழைகாலத்தில் வெளியில் சென்று தங்களுக்கு தேவையான இரையை தேடிடமுடியாது அதனால் நாம் இதற்காக போதுமான உணவுகளை தேடிபிடித்து கொண்டுவந்து சேமித்துவிடுவோம் என வயதுமுதிர்ந்த பறவை ஒன்று கூறியதை தொடர்ந்து அனைத்து பறவைகளும் காடு எங்கும் அலைந்து திரிந்து போதுமான உணவினை தேடிபிடித்து கொண்டுவந்து கூடுகளில் சேமித்து வைத்தன அதனால் இவைகள் எப்போதும் ஓய்வில்லாமல் உழைத்தவாறு இருந்துவந்தன விரைவாக மழைக்காலம் துவங்கி இடியுடன் கூடிய மழையும் வந்தது. அந்த மழையானது தொடர்ந்து கொட்டிகொண்டே இருந்ததால் குளிரும் நடுக்குமமாக இருந்ததால் அந்த மரத்தில் வாழ்ந்து வந்த பறவைகள் வெளியே எங்கும் செல்லாமல் பாதுகாப்பாக தத்தமது கூடுகளிலேயே தங்கியிருந்தன .

அந்த மழையானது பல நாட்கள் தொடர்ந்து பெய்துகொண்டேயிருந்தது அப்போது ஒருநாள் குரங்குஒன்று அந்த மரத்தின்கீழ் வந்துசேர்ந்தது அதுமழையில் நன்கு நனைந்து அதனுடைய உடலிலிருந்து மழைநீர் சொட்டுசொட்டாக சொட்டியவாறும் கடுங்குளிரில் பல்லெல்லாம் கிடுகிடுவென நடுங்கியவாறும் அமர்ந்து கொண்டிருந்தது மேலும் "ஸ்ஸ்ஸ்! மிகவும் கடுங்குளிர்! " என குரங்கு தனக்குத்தானே கூறிக்கொண்டது அதனை பார்த்துகொண்டிருந்த அந்த மரத்தின் வாழ்ந்துவந்த பறவைகள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தன தொடர்ந்து மிகவும் பரிதாபமான அதனுடைய நிலையை பார்த்த பறவை ஒன்று"அண்ணா! ' எங்கள் சிறிய கூடுகள் நீங்கள் குளிரிலிருந்து பாதுகாப்பாக தங்குவதற்கு போதுமானதாக இல்லை. ". எனக்கூறியாது அதனை தொடர்ந்து மற்றொரு பறவையானது " இந்த மழைக்காலம் துவங்குவதற்கு முன் நீங்களும் வாழ்வதற்கு கேற்ற நல்ல பாதுகாப்பான தங்குமிடத்தை அமைத்திருந்தால் இவ்வாறு குளிரில் நடுங்கிடாமல் எங்களைபோன்று பாதுகாப்பாக இருந்திருக்கலாமே “ என அறிவுரை கூறியாது

" நான் என்ன செய்ய வேண்டும்? என என்னிடம் சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் உள்ளது! இதோபார் உங்களை என்ன செய்கிறேன்" என்று அந்த குரங்கு மிகுந்த கோபத்துடன், மரத்தின் கிளைகளில் தாவி ஏறி அம்மரத்திலிருந்த பறவைகளின் கூடுகளை பிய்த்து கிழித்து தரையில் வீசியெறிந்தது அதனால் அந்த பறவைகளும் அவைகளின் குஞ்சுகளும் மிகவும் பாதுகாப்பாற்ற ஆதரவற்ற நிலையில் அந்தமரத்தில் கீச்கீச்சென் கத்தி கொண்டு உயிர் தப்பி மழையில் நனைந்து அங்குமிங்கும் அடைக்கலம் தேடி சென்று கொண்டிருந்தன.

முட்டாள்களிடம் அவர்கள் வாழ்வதற்கான நல்ல ஆலோசனைகளை கூறினால் அதனை அவர்கள் ஒருபோதும் ஏற்கவும் மதிக்கவும் மாட்டார்கள் அதனால் அவர்களுக்கு அவ்வாறான ஆலோசனைகளை கூறாமல் இருப்பதே நமக்கு பாதுகாப்பானது என இந்த நிகழ்வின்மூலம் அறிந்து கொள்க

திங்கள், 5 டிசம்பர், 2016

மதிப்பு மிக்க பொருட்ளைகள் மதிப்புகுறைவான பொருட்கள்க ஏது பாதுகாப்பாக இருக்கும்?


ஜே.ஆர்.டி டாட்டாவிற்கு நண்பர் ஒருவர் இருந்தார் அவர் தான் பயன்படுத்திடும் பேனா அடிக்கடி காணாமல் போய்விடுகின்றது என்று எப்போதும் ஜே.ஆர்.டி டாட்டாவிடம் கூறிக்கொண்டே யிருப்பார் . அதனை தொடர்ந்து அன்று ஒருநாள் நீ எவ்வாறான போனாவை பயன்படுத்தி வருகின்றாய் எனஜே.ஆர்.டி டாட்டா தன்னுடைய நண்பரிடம் வினவியபோது தான் எப்போதும் மிகவும் விலை மலிவான பேனாக்களையே பயன்படுத்துவதாக அந்த நண்பர் கூறினார் உடன்ஜே.ஆர்.டி டாட்டாவும் தன்னுடைய நண்பரிடம் மிகவும் விலை மலிவான பேனாக்களை பயன்படுத்து-வதால்தான் அதனை பாதுகாப்பது பற்றி கவலைப்படாமல் கவணக்குறைவாக இருக்கின்றாய் அதனால் அவை காணாமல் போய்விடுகின்றன நான் கூறுவது போன்று செய்தால் உன்னுடைய பேனா காணாமல் போகாது எனக்கேட்டுகொண்டார் அதனால் நீ இன்றுமுதல் மதி்ப்புமிக்க அதிகவிலை உயர்ந்த பேனாவை வாங்கி பயன்படுத்து அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என பரிந்துரைத்தார் இந்த ஆலோசனையின் படி அந்த நண்பரும் மதி்ப்புமிக்க ஒரு 22 காரட் தங்கத்திலான அதிகவிலையுடைய பேனாவை வாங்கி பயன்படுத்திவந்தார் அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜே.ஆர்.டிடாட்டா அந்த நண்பரை சந்தித்தபோது இப்போதும் அவர் தனது பேனாவை தவற-விட்டு-விடுகின்றாரா என வினவினார் உடன் அவரது நண்பர் விலையுயர்ந்த தன்னுடைய பேனா பற்றி மிகவும் கவனமாக இருப்பதாகவும் ஆனால் இப்போது மட்டும் தன்னுடைய பேனாவானது எவ்வாறு காணாமல் போகவில்லை! என்பதே தனக்கு மிக ஆச்சரியமாக உள்ளது என்றும் கூறினார் அதற்கு ஜே.ஆர்.டிடாட்டா எப்போதும் மனிதமனமானது மதிப்புமிக்க பொருள் எனில் மிகவும் கவணமாகவும் மதிப்புகுறைவான மலிவான பொருட்கள் எனில் கவணமில்லாமலும் இருக்கும் அதனால்தான் நீ முன்பு அடிக்கடி எழுதிடும் பேனாவை தவறவிட்டுவிட்டாய் ஆனால் தற்போது விலைஅதிகமுள்ள பேனாவை மட்டும் மிககவணமுடன் தவறவிடாமல் பாதுகாத்து வருகின்றாய் எனவிளக்கமாகக்கூறினார் இவ்வாறே நம்முடைய வாழ்க்கையின் அடிப்படையான பணத்தைமட்டும் நாம் அதிகமாக செலவழிக்காமலும் மற்றவர்கள் யாரும் அபகரித்திடாமலும் மிககவணமாக பாதுகாக்கின்றோம் அவ்வாறே நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் எனில் மிககவணமுடன் அவர்களுடைய தொடர்பை பராமரிக்கின்றோம்

செவ்வாய், 29 நவம்பர், 2016

மற்றவர்கள் தேவையில்லாமல்உ தவிசெய்வதாக எண்ணிக்கொண்டு உபத்திரவும் செய்வதை நிறுத்தினால் போதும்


நண்பர் ஒருவர் தினமும் மாலை அன்றைய பணிமுடிவடைந்ததும் அருகிலிருந்த பூங்காவிற்கு செல்வது வழக்கமான செயலாகும் அவ்வாறு சென்றுவரும்போது அன்று நாள்ஒரு செடியில்பட்டாம்பூச்சியின் முட்டை கூட்டினை பார்த்தார் அதில் சிறி ஓட்டை ஒன்று தெரிந்தது அதில் சிறு பட்டாம்பூச்சி அந்த முட்டை ஓட்டினை உடைத்து கொண்டு வருவதற்கு போராடி கொண்டிருந்தது சரி என்னதான் நடக்கின்றது என பார்த்திடலாம் என அவரும் நீண்டநேரம் பார்த்து கொண்டே இருந்தார் அந்த சிறு பட்டாம்பூச்சியும் தன்னுடைய சிறகினை அடித்து முட்டிமோதி பார்த்தும் அந்த முட்டை ஓட்டினை கிழித்துகொண்டு வரமுடியவில்லை அதனால் சே என்ன இந்த சின்னசிறு பட்டாம்பூச்சி வெளியில் வரமுடியாமல் தவிக்கின்றதே என அவருக்கு மிகமனவருத்தம் அதிகமாகி அருகிலிருந்த சிறுகுச்சியினால் அந்தபட்டாம்பூச்சியின் முட்டை ஓட்டினை குத்தி கிழித்து அந்த சிறு பட்டாம்பூச்சி வெளியேறுவதற்கு உதவினார் அதனைதொடர்ந்து அந்த சின்னஞ்சிறு பட்டாம்பூச்சி தன்னுடைய கூட்டிலிருந்து வெளியே வந்தவிட்டது ஆனால் அதனால் பறக்கமுடியாமல் அப்படியேசெடியிலிருந்து தரையில் வீழ்ந்து உயிரற்று போய்விட்டது அடடா ஐயோ பாவமே நான் முட்டை ஓட்டை உடைத்து கொண்டுவர உதவலாமே என உதவிசெய்தால் அதனுடைய உயிர்போக்கிவிட்டேனே என மிகவும்மனவருத்தபட்டார் இயற்கையானது அந்தந்த உயிரும் தனக்கு தேவையான வழியையும் வாய்ப்பையும் பயன்படுத்தி தன்னுடை இருப்பை உறுதி செய்து கொள்ள உதவுகின்றது அதில் மற்றவர்கள் தேவையில்லாமல்உ தவிசெய்வதாக எண்ணிக்கொண்டு உபத்திரவும் செய்கின்றோம் அதனை முதலில் நிறுத்தினால் போதும்

செவ்வாய், 22 நவம்பர், 2016

மற்றவர்களின் நிலையை சரியாக ஆராய்ந்தபின்னரே அவரை பற்றி விமர்சனம் செய்திடவேண்டும்


அலுவலகங்களில் பணிபுரியும் நபர்கள் தினமும் மதிய உணவு இடைவேளையின்போது ஒன்றாக அமர்ந்து உணவு அருந்துவது வழக்கமான செயலாகும் அவ்வாறே ஒரு அலுவலகத்தில் வாரத்தின் முதல்நாளான திங்கள் கிழமை அன்று அந்த அலுவலகத்தில் பணிபுரியும் நபர் ஒருவர் தன்னுடைய உணவு பெட்டியை திறந்து அதிலிருந்த தயிர் சோற்றினை உண்ண ஆரம்பித்தார் மற்ற அலுவலக நன்பர்கள் விதவிதமாக கொண்டு வந்த தங்களுடைய உணவுவகைகளை சாப்பிட்டனர் தினமும் இவர் ஒரேமாதிரியாக தயிர் சோற்றினை உண்டுவந்தார் இதனை கண்ணுற்ற மற்ற அலுவலக நண்பர்கள் ஏன் நண்பா உன்னுடைய மனைவியிடம் நாங்கள் கொண்டுவருவதை போன்று மதியம் நீ சாப்பிடுவதற்காக வகைவகையாக கொடுத்தனுப்பிட கோரலாமே என நக்கலாக கிண்டலடித்தனர் அதனால் அவர் உடன் ஐயா எனக்கு இன்னும் திருமனம் ஆகவில்லை அதனால் நான் தனியாக இருப்பதால் காலைஉணவையும் மதியஉணவையும்அவசர அவசரமாக தயார்செய்யவேண்டியிருப்பதால் சுலபமாக தயார்செய்திடும்இந்த தயிர்சோறினை தயார்செய்து எடுத்து கொண்டு வருகின்றேன் என பதில் கூறினார் உடன் அனைவரும் அமைதியாக விட்டனர் மற்றவர்களின் நிலையை சரியாக ஆராய்ந்தபின்னரே அவரை பற்றி விமர்சனம் செய்திடவேண்டும் என இதன்மூலம் அறிந்து கொள்க

புதன், 16 நவம்பர், 2016

முதலில் செயலில் இறங்கு அதன்பின்னர் அதனால் ஏற்படும் வசதிகளை அனுபவிப்பதற்கான கனவு காண்


தமிழகத்தின் கிராமப் புற மாணவன் ஒருவன் மருத்துவ படிப்பு படிப்பதற்கு இடம்கிடைக்கவில்லை சரிதான் என பொறியியல் படிக்கலாம் என்றால் புற்றீசல் போன்று ஏராளமான பொறியியல் கல்லூரிகள் உருவானதால் ஏராளமானவர்கள் பொறியியல் படிப்பு படித்து விட்டு பொறியியலிற்கு போதுமான பணிவாய்ப்பு கிடைக்காததால் சாதாரண எழுத்தர் பணியாவது கிடைத்தால் பரவாயில்லை என எங்கும் எதிலும் போட்டி அதிகமாகிவிட்டது இதனால் நண்பர்கள் ஆசிரியர்கள் கூறினார்கள் என்று பட்டயகணக்கர் அடக்கவிலை கணக்கர் நிறுமசெயலர் ஆகியவற்றில் ஒன்றை படித்தால் உடனடியாக பணிவாய்ப்பும் அதைவிட வெளிநாடுகளில் அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறியவுடன் இவற்றில் ஒன்றினை தெரிவுசெய்து படிக்க ஆரம்பித்தான் இந்தநிலையில் அவனுடைய தந்தை இந்த படிப்பினுடைய இறுதி தேர்வில் ஒரேமுயற்சியில் வெற்றிபெற்றால் அந்த மாணவனை சிங்கப்பூர் அல்லது மலேசியாவிற்கு சுற்றுலா செல்ல அனுமதிப்பதாக உறுதிகூறியவுடன் இந்திய விமானத்திலா அல்லது மலேசிய விமானத்திலா எதில்பயனம் செய்வதற்கான பயனசீட்டை பதிவுசெய்திடவேண்டும் , அங்கு சென்று இறங்கியவுடன் ஐந்துநட்சத்திர தகுதியுடைய எந்த தங்கும் விடுதியில் தங்குவது என்பன போன்ற கனவுகளில் மிதக்க ஆரம்பித்தான் உடன் அவனுடைய இந்த தேர்வுகளை எழுதுவதற்கான தயாரிப்புக்கு தேவையான புத்தகங்கள் வாங்கிவிட்டாயா என வினவியபோது இன்றுதான் நகரத்தின் புத்தககடைக்கு சென்ற தேவையான புத்தகங்களை வாங்கவேண்டும் எனக்கூறினான் உடன் அவனுடைய ஆசிரியர் தம்பி முதலில் இந்த தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி கொண்டுவந்து படித்து தயார்செய்து தேர்வுஎழுதி வெற்றிபெற முயற்சி செய் அதன்பின்னர் வெளிநாட்டு சுற்றலா செல்வது பற்றி கனவு காணலாம் என அறிவுரை கூறினார்

வெள்ளி, 11 நவம்பர், 2016

கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத வெற்றிக்கனி


கிராமபுற நபர் ஒருவருக்கு இரண்டடுக்கு எழுத்து தேர்வுகள் குழுவிவாதம் ஆகிய வற்றை நன்கு முடித்த பின்னர் இறுதியான நேர்முக தேர்விற்கு அழைப்பானை கிடைத்தது அதனால் அந்நபர் உடன் முடிதிருத்ததகத்திற்கு சென்று முகத்தையும் தலையையும் நன்றாக சரிசெய்து கொண்டு தேவையான உடைகளையும் நன்கு தேய்த்து அணிந்து கொண்டு தற்போதைய நாட்டு நடப்புகளைபற்றிய விவரங்களையும் நன்கு தயார்செய்து கொண்டு மறுநாள் நடைபெறவுள்ள நேர்முகத்திற்கு தயாரானார் அதனை தொடர்ந்து மறுநாள் காலையில் விழித்து எழுந்து புறப்படும்போது நன்றாக இருந்த வானம் மழைகொட்ட ஆரம்பித்தது இருந்தாலும் பேருந்தில் ஏறி உட்கார்ந்த போது பேருந்து முழுவதும் ஆங்காங்கு சொட்டுசொட்டாக மழைத்துளி உடையை ஈரமாக்க முடிவுசெய்தது அதனால் மிகுந்த சிரமத்துடன் மழைத்துளி் கொட்டாத பகுதியாக பார்த்து நின்று கொண்டார் பின்னர் நேர்முகதேர்வு நடத்தபோகும் அலுவலகத்திற்கு அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பொடிநடையாக நடந்து சென்றபோது வாடகை வண்டிகளும் சுமைவண்டிகளும் சாலையில் இருந்த சேரும் சகதியுமான தண்ணீரை அவன்மேல் வாரி இறைத்து கொண்டு சென்றதால் முழங்கால் அளவிற்கு அணிந்து வந்த துணி நனைந்து விட்டது ஒருவழியாக அந்த அலுவலகத்தை அடையும் நிலையில் அந்த அலுவலக வாயிலின் ஓரம் இருந்த மரத்தின் மீது மழைக்கு அடைக்கலம் பெற்றிருந்த பறவைஒன்று மிகச்சரியாக தலையில் எச்சமிட்டது உடன் அந்த அலுவலகத்திலி இருந்த குழாய் நீரை கைகளால் பிடித்து துடைத்து கொண்டு அந்த அலுவலகத்திற்கு நுழைந்தார் அங்கு நேர்முகத்தேர்வு நடைபெறுவதற்கான எந்த அறிகுறியும் கானோம் அதனால் வரவேற்பாளரை சந்தித்து நேர்முகத்தேர்வு பற்றிய விவரம் கோரியபோது அன்று மிகவும் மழையாக இருப்பதால் நேர்முகத்தேர்வினை நடத்தும் தலைவர் தன்னால் கலந்து கொள்ளமுடியாது என்றும் தேர்வினை 15 நாட்கள் தள்ளிவைப்பதாக தொலை நகல்செய்தி அனுப்பியுள்ளதாக தகவல் தெரிவித்தனர் வெற்றிக்கனி கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே என இந்த தகவலை தெரிந்து கொள்வதற்காகவா இவ்வளவு சிரமபட்டு வந்து சேர்ந்தேன் என வருத்ததுடன் தன்னுடைய வீட்டிற்கு திரும்பினார்

ஞாயிறு, 6 நவம்பர், 2016

ஒரு நல்ல ஆசிரியர்


முற்காலத்தில் மாணவர்கள் அனைவரும் ஆசிரியரின் இருப்பிடத்திற்கு சென்று அவருக்கு சேவைசெய்து அவருடனேயே வாழ்ந்து கல்வி கற்று வந்தனர் அந்த கல்விக்கூடமானது நகருக்கு வெளியே இயற்கை சூழ்ந்த இடமாக அமைந்திருக்கும் அவ்வாறான ஒரு குருகுலகல்விகூடத்தில் ஆசிரியர் தம்முடைய மாணவர்களை அழைத்து அவர்கள் தங்குவதற்கான விடுதி ஒன்று கட்டுவதற்கு தேவையான பொருட்களை அருகிலுள்ள நகரத்தில் கொண்டுவருமாறும் அவ்வாறு பொருட்கள் கொண்டுவருவது யாருக்கும் தெரியாமல் இருக்கவேண்டும் என்றும் உத்திரவிட்டார் உடன் மாணவர்கள் அனைவரும் பொருட்களை கொண்டுவருவதற்காக கலைய ஆரம்பித்தனர் ஒருமாணவன் மட்டும் ஐயா அதுஎப்படி சாத்தியமாகும் பொருட்களை திருடுவதே குற்றம் அவ்வாறு இருக்கையில் அந்த பொருட்களை யாரும் பார்க்காதவாறு கொண்டுவர கூறுகின்றீர்கள் இரவில் பொருளை கொண்டு வரும்போது யாரும் பார்க்கவில்லையென்றாலும் என்னுடைய இரண்டு கண்கள் நான் பொருளை திருடி எடுத்து வருவதை பார்த்துவிடுமே அதனால் என்னால் அவ்வாறு பொருட்களை நகரத்திலிருந்து கொண்டு வர முடியாது எனக்கூறினான் இதைத்தான் எதிர்பார்த்தேன் நான் என்னிடம் பயிலும் அனைவரும் நான் எதிர்பார்த்திடும் தகுதி இருக்கின்றதாவென பரிசோதித்த இந்த தேர்வில் நீமட்டுமே வென்றுள்ளாய் அதனால் எனக்கு பின் நீதான் இந்த குருகுலத்தின் ஆசிரியராக தேர்வுசெய்திட தகுதியுடையவன் என அவனை பாராட்டி தேர்வுசெய்தார்

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

நல்லத்தலைவனக்கு உரிய பண்பியல்புகள் எவை


முன்பு ஒருகாலத்தில் நம்முடைய இந்தியாவில் இருந்த ஒரு சிறிய நாட்டில் மழைஇல்லாமல் பஞ்சத்தில் மிகசிரமமாக மக்கள் வாழ்ந்து வநதனர் அதனால் அடுத்தவரும் மழைகாலத்திற்குள் ஆங்காங்கு புதிய ஏரிகளை உருவாக்குதல் ஏற்கனவே இருக்கின்ற ஏரிகளை தூர்வாருதல் செய்துவிட்டால் வரும் ஆண்டுகளிலாவாது மக்கள் பஞ்சமில்லாமல் வாழ்வார்கள் என அரசன் ஒருவன் தன்னுடைய இரு இளவரசர்களையும் அழைத்து இந்த பணியை இரு மாதத்திற்குள் முடிக்குமாறு உத்திரவிட்டார் உடன் மூத்த இளவரசன் நாட்டின் வடக்குபகுதியிலும் மற்றொரு இளவரசன் நாட்டின் தெற்கு பகுதியிலும் பணியை முடிப்பது என தமக்குள் பிரித்து செயல்படுத்துவது என முடிவுசெய்தனர் அதனை தொடர்ந்து மூத்த இளவரசன் அரசனின் கருவூலத்தில் இருந்து ஏராளமான பணமும் பாதியளவு நாட்டின் படைவீரர்களையும் அழைத்து கொண்டு வடக்கு பகுதிக்கு சென்று அங்கு கிராமங்களில் வாழும் மக்களையும் தன்னுடன் அழைத்து சென்றபடைவீரர்களையும் அந்த பணியில் ஈடுபடுத்தி பொதுமக்களுக்கு ஏராளமான அளவில் பொருட்களை அவர்கள் பணிபுரிவதற்காக வழங்கி புதிய ஏரிகுளங்களை அமைத்தல் ஏற்கனவே இருக்கும் ஏரிகுளங்களில் தூர்வாரி ஆழப்படுத்துதல் ஆகிய பணியை மிகசிறப்பாக தன்னுடைய பணியை முடித்து திரும்பி வந்தார் அப்போது அரண்மனையில் அவருடைய இளைய சகோதரனுக்கு அரசனாக முடிசூட்டுவதற்கான ஏற்பாடுநடந்து கொண்டிருந்ததை கண்ணுற்றுதும் நேராக தன்னுடைய தந்தையிடம் நாங்கள் இருவருமே சமமாக பணிபுரிந்து தலைநகர் திரும்பியுள்ளபோது இளைய சகோதரனுக்கு மட்டும் அரசனாக பதவியேற்பு செய்வது சரியான செயலா அண்ணன் இருக்கும் போது தம்பிக்கு அரசனாக முடிசூடலாமா என கோபத்துடன் பொரிந்து தள்ளினான் மகனே அமைதியாக இரு உன்னுடைய தம்பி உன்னை போன்று அரசாங்க கருவூலத்திலிருந்து எடுத்து சென்ற பணத்தை செலவுஎதுவும் செய்யவில்லை அவ்வாறே அரசு படைவீரர்களையும் இந்த பணிக்காக பயன்படுத்தி கொள்ளவில்லை அதற்கு பதிலாக அந்தந்த கிராம மக்களையை இந்த பணிகளை முடிப்பதற்காக அவர்களாகவே முன்வந்து செய்திடுமாறு பயன்படுத்தி கொண்டது மட்டுமில்லாமல் அந்தந்த ஏரி குளங்களில் தேக்கிவைத்திடும் ஏரிகளில் நீரினை அனைவருக்கும் பகிர்ந்து பயன்படுத்தி கொள்ளுமாறு பல்வேறு கால்வாய்களையும் உருவாக்கி அந்த பகுதியின் மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளார் அதனால் உன்னுடைய தம்பிதான் சிறந்த தலைவனுக்கு உரிய பண்பியல்புகளை யும் தகுதியையும் பெற்றுள்ளார் அதனால் அவரையே எனக்கு பிறகு அரசாளுவதற்காக அரசனாக முடிசூட்டுவதற்கு முடிவுசெய்தேன் என பதில் கூறினான்

வெள்ளி, 21 அக்டோபர், 2016

பெறுநர் முகவரி பகுதியில் 'கடவுள்' என்று மட்டும் குறிப்பிட்டதொரு கடிதம்


ஒருநாள் பல்வேறு சிறு சிறு தபால் அலுவலகங்களிலிருந்து வருகின்ற கடிதங்களையெல்லாம் பிரித்து அந்தந்த முகவரிக்கு அனுப்புகின்ற பிரிப்பகத்திற்கு பெறுநர் முகவரி பகுதியில் 'கடவுள்' என்று மட்டும் குறிப்பிட்டு வேறு முழுமுகவரி எதுவும் இல்லாமல் ஒரு கடிதம் வந்திருந்தது உடன் அதனை எந்த ஊருக்கு அனுப்புவதற்காக பிரிப்பது என சிறிதுநேரம் தடுமாறியபின் அதனை தனியே எடுத்து வைத்துவிட்டு மற்ற கடிதங்களையெல்லாம் பிரித்து முடித்து கட்டுகளாக கட்டி பணியமுடித்தபின்னர் இந்த கடிதத்தில் என்னதான் செய்தி உள்ளது என பார்த்திடலாம் என பிரித்து பார்த்தபோது அந்த கடிதத்தில் அன்புள்ள கடவுளே நான் ஒரு எண்பது வயதுடைய வயாதான யாருடைய உதவியுமில்லாமல் என்னுடைய இறந்த கணவரின் மிகக்குறைவான ஓய்வூதிய தொகையை கொண்டு வாழ்பவள் இந்நிலையில் என்னுடைய பணப்பையில் மிகுதி இருந்த ஒரு ஆயிரம் ரூபாயை யாரோ திருடி சென்றுவிட்டனர் அதனால் வரும் தீபாவளி பண்டிகையை என்னுடைய நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாட இயலாமல் மிகமனவருத்ததுடன் இருக்கின்றேன் நான் வயிறார சாப்பிடுவதற்கு தேவையான உணவு பொருட்களை வாங்குவதற்குகூட வழியில்லாமல்மிக சிரமப்படுகின்றேன் எனக்கென தனியாக வாரிசு யாரும் இல்லாததால் எனக்கு இருக்கின்ற ஒரே நம்பிக்கையாக இருப்பவர் கடவுளாகிய நீ மட்டுமே அதனால் கண்டிப்பாக நீ எனக்கு இந்த இக்கட்டில் உதவுவாய் என நம்புகின்றேன் என்றும் உன்னுடைய நம்பிக்கையில் வாழும் என முடிந்திருந்தது உடன்தன்னுடன் பணிபுரியும் அனைவரிடமும் இந்த கடித்தத்தினை காண்பித்து இறுதியாக அனைவரிடமும் அவரவர்களால் கொடுக்க முடிந்த தொகைய வசூலித்து போது ரூபாய் 990 மட்டும் சேர்ந்திருந்திருந்தது அதனை அப்படியே அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு பணஅஞ்சல் வாயிலாக அனுப்பி வைத்தார் அந்த தபால் அலுவலக பணியாளர் அதன்பின்னர் தீபாவளி பணிடிகை முடிந்து நான்கைந்து நாட்கள் கழித்து அதே முகவரியிலிருந்து மீண்டும் பெறுநர் முகவரியாக முன்புபோலவே 'கடவுள்' என்று மட்டும் குறிப்பிட்டு வேறு முழுமுகவரி எதுவும் இல்லாமல் ஒரு கடிதம் வந்திருந்தது தற்போது என்னதான் அந்த பாட்டி எழுதியிருப்பார் என அந்த கடிதத்தை பிரித்து பார்த்தபோது அன்புள்ள கடவுளே உன்னுடைய கருணையை குறிப்பிடுவதற்கு சொற்களே இல்லை உள்ளன்புடன் இந்த அபலையின் கோரி்க்கையைஏற்று செயற்படுத்திய உன்னுடைய உதவிக்கு மிகவும் நன்றிகூற கடமைபட்டுள்ளேன் மேலும் மிக மகிழ்ச்சியுடன் உன்னுடைய நினைவாக என்னுடைய நண்பர்களுடன் தீபாவளி பண்டிகையைமிகசிறப்பாக கொண்டாடிவிட்டேன் அதனோடு எனக்கு கண்டிப்பாக நீ ரூபாய் ஆயிரம் அனுப்பி இருப்பாய் என நம்புகின்றேன் ஆனால் இந்த தபால் அலுவலகத்தில் பணிபுரியும் யாரோ ஒரு சோம்பேறி பயல் அதில் பத்துரூபாயை மட்டும் திருடி கொண்டுவிட்டான் அவனை மன்னித்திவிடுக என்றும் உன்னுடைய நம்பிக்கையில் வாழும்

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

எளியவர்களுக்கும் உதவிடுக


ஒரு ஏழுவயது சிறுவனும் அவனுடன் அவனிடைய நான்கு வயது தங்கையும் கடற்கரையோரம் காற்றாட விளையாட சென்றார்கள் விளையாடி முடிந்தபின்னர் இருவரும் வீட்டிற்கு திரும்பினர் அப்போது அவனுடைய தங்கைமட்டும் தொடர்ந்து நடந்துவராமல் ஒரு பொம்மை கடையில் நின்றுவிட்டது அதனால் அந்த சிறுவன் அந்த பொம்மை கடைக்கு திரும்பிபார்த்தபோது அவனுடைய தங்கையானவள் குறிப்பிட்ட ஒரு பொம்மையையே பார்த்து கொண்டு நின்று கொண்டிருப்பது தெரியவந்தது உடன் இந்த பொம்மைதான் உனக்கு வேண்டுமா இந்தா எடுத்துகொள்க என தன்னுடைய தங்கைக்கு எடுத்து கொடுத்துவிட்டு அந்த கடைமுதலாளியிடம் அந்த விளையாட்டு பொம்மையை வாங்குவதற்கு என்ன தரவேண்டும் என அந்த சிறுவன் வினவினான் உடன் அந்த பொம்மைகடை முதலாளியானவர் தம்பி உன்னுடைய பையில் என்னஇருக்கின்றதோ அதனை கொடு என பதில் கூறினான் உடன்அந்த சிறுவன் தன்னுடைய கால்சட்டை பையில்கையைவிட்டு கடற்கரையோரம் விளையாடும் போது சேகரித்து சேர்த்து வைத்த கிளிஞ்சல்கள் முழுவதையும் எடுத்து அந்த பொம்மை கடைகாரரிடம் கொடுத்தான் உடன் அவர் அந்த கிளிஞ்சல்களை பணத்த போன்று எண்ணிக்கை செய்து கொண்டிருந்தார் ஐயா இந்த கிளிஞ்சல்கள் அந்த பொம்மைக்கு போதுமானதாக இல்லையா அப்படியாயின் மீண்டும் நான் கடற்கரைக்கு சென்று கிளிஞ்சல்களை சேகரித்து வருகின்றேன் எனக்கூறினான் இல்லைதம்பி போதுமானதாக உள்ளது என க்கூறி பத்து கிளிஞ்சல்களை எடுத்து கொண்டு மிகுதியை அந்த சிறுவனிடமே திருப்பி அளித்தார் அந்த சிறுவர்களும் மிகமகிழ்ச்சியாக பொம்மைகடையை விட்டு தாங்கள் வாங்கிய பொம்மையுடன் சென்றனர் உடன் அங்கு பணிசெய்திடும் பணியாளர் ஐயா அந்த பொம்மைக்கான விலையை பணமாக பெறாமல் சாதாரணமான கிளிஞ்சல்களை பெற்றுகொண்டு கொடுக்கின்றீர்களே ஐயா எனவினவியபோது அந்த பொம்மை கடை முதலாளி அந்த சிறுவன் உண்மையான அன்புடன் தன்னுடைய தங்கைக்கு விரும்பிய பொம்மையை வாங்கி கொடுக்கும் அக்கறையுடன் தான் ஆசையாக சேகரித்த கிளஞ்சல்களை அதற்கு ஈடாக வழங்க முன்வரும் போது அவர்களின் ஆசையை பூர்த்தி செய்தால் வளர்ந்து பெரியவனாகும் போது இந்த நிகழ்வை மனதில் கொண்டு நம்முடைய கடையின் பெருமையை உலகிற்கு கூறுவான் அதுவே இந்த கடைக்கான விளம்பரமாகும் என பதில் கூறினார்

வியாழன், 13 அக்டோபர், 2016

எப்போதும் எந்தவொரு ஆளின் தோற்றத்தை மட்டும் வைத்து தவறாக முடிவுசெய்யாதே அவருடைய திறமையை வைத்து முடிவுசெய்திடுக


ஹார்வேர்டு பல்கலைகழக தலைவரை பார்ப்பதற்காக தம்பதிகள் இருவர் அந்த பல்கலைகழக நிருவாக அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர் ஹார்வேர்டு பல்கலைகழக தலைவரின் செயலரிடம் பல்கலைகழக தலைவரை தாங்கள் பார்க்க விரும்புவதாக கூறினர் உடன் அந்த பல்கலைகழக தலைவரின் செயலர் தற்போது உடனடியாக சந்திக்க முடியாது சிறிது நேரம் காத்திருங்கள் என கூறி அவர்கள் இருவரையும் இருக்கையில் அமரச்செய்தார் நீண்ட நேரம் காத்திருந்தபின்னர் தம்பதிகள் அந்த செயலரிடம் நினைவுபடுத்தியபோது அப்போதுதான் ஞாபகம் வந்ததைபோன்று தலைவரின் அறைக்குள் சென்று அனுமதிபெற்று அவர்களை உள்ளே அழைத்து சென்றார் அவர் இவர்களை கவணிக்காது மிகத் தீவிரமாக ஏதோவொரு பணியை பணிசெய்து கொண்டிருந்தார் தம்பதிகள் இருவரும் மிக மெல்லிய குரலில் ஐயா என அழைத்தபோது என்ன அவசரம் என நிமிர்ந்து பார்த்து என்னவேண்டும் உங்களுக்கு உடன் விரைவாக கூறிஇடத்தை காலிசெய்யுங்கள் என கூறினார் ஒன்றுமில்லை ஐயா எங்களுடைய மகன் இந்த பல்கலை கழகத்தில் படித்து கொண்டிருந்தபோது கடந்தஆண்டு இறந்து விட்டார் அதனால் அவருடைய நினைவாக நினைவகம் ஒன்றினை இந்த பல்கலை கழகத்தில் அமைக்க விரும்புகின்றோம் என கோரினர் உடன் பல்கலைகழக தலைவர் நீங்கள் கோரியவாறு இந்த பல்கலைகழகத்தில் இறந்தவர்களுக்கு எல்லாம் நினைவகம் கட்டினால் இந்த பல்கலைகழகம் அமைந்துள்ள இடம்போதுமானதாக இருக்காது அதனால் அதை ஏற்கமுடியாத நீங்கள் கிளம்பலாம் என மீண்டும் கோபமாக கூறினார் எங்களுடைய மகனின் நினைவகமாக பல்கலைகழகத்திற்கான கட்டிடம் கட்டிதரவிரும்புகின்றோம் என மீண்டும் கோரியபோது ஒருகட்டிடம்கட்டுவதற்கு பத்துஇலட்சம் பணம் செலவாகும் அவ்வளவு தொகை உங்களிடம் உள்ளதா வந்துவிட்டார்கள் நினைவகம் கட்டிடம் கட்டிவழங்கு வதற்கு என அவர்களின் எளிய தோற்றத்தை பார்த்து எள்ளி நகைத்து தன்னுடைய உதவியாளரை அழைத்து அவர்களை வெளியே அழைத்து சென்றிடுமாறு விரட்டினார் அந்த தம்பதிகள் பல்கலைகழக தலைவரின் அறைக்கு வெளியே வந்து என்ன நம்முடைய மகனின் நினைவாக ஏதாவது செய்யலாம் என்றால் அதனை இந்த பல்கலைகழக தலைவர் ஏற்காமல் இப்படி நம்மை வெளியே விரட்டிவிட்டாரே என மனமுடைந்து நின்றனர் பின்னர் மனதினை தேற்றிகொண்டு கட்டிடம் கட்டுவதற்கு பத்துஇலட்சம் என்றால் நம்மிடம் கோடிகணக்கில் பணம் இருக்கின்றது அதனை கொண்டு இதேபோன்று புதிய பல்கலைகழகம் நம்முடைய மகனின் நினைவாக ஆரம்பித்துவிடலாம் என முடிவுசெய்தனர் அவ்வாறே அந்த தம்பதிகள் புகழ்பெற்ற ஸ்டேன்ட்வேர்டுஎனும் பல்கலைகழகத்தினை துவக்கினர் அப்பல்கலைகழகமானது பேரும்புகழுமாக திகழ்கின்றது எப்போதும் எந்தவொரு ஆளின் தோற்றத்தை மட்டும் வைத்து தவறாக முடிவுசெய்யாதே அவருடைய திறமையை வைத்து முடிவுசெய்திடுக

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

அனைவரும்ஒன்றாக கூடி ஒற்றுமையாக செயல்பட்டு மகிழ்ச்சியாக இருப்போம்


சமூக சேவையாளர் ஒருவர் ஆப்பிரிக்க நாட்டின் பழங்குடியினர் வாழும் குக்கிராமத்திற்கு சென்றார் அங்கு அந்த பழங்குடியினர்களின் குழந்தைகளை ஊக்குவிக்கும் பொருட்டு நூறுமீட்டர் ஓட்டபந்தயம் நடத்தவிருப்பதாக தெரிவித்தார் அந்த ஓட்டபந்தயத்தில் கலந்து கொள்பவர்களில் யார் முதலில் நூறுமீட்டர் தூரத்தை முதலில் கடக்கின்றனரோ அவர் நூறாவது மீட்டர் தூரத்தில் அவர் வைத்துள்ள பெட்டிநிறைய இனிப்புவகைகள் அனைத்தும் வெற்றியாளரே எடுத்து கொள்ளலாம் என கூறினார் அதனைதொடர்ந்து அனைவரையும் அந்த ஓட்டபந்தயத்தில் ஓடுவதற்கு தயாராக நிற்க வைத்தார் பின்னர் ready steady go! என கூறினார்

உடன் அனைவரும் ஒருவருக்கொருவர் கைகோர்த்து கொண்டு ஒரே சீராக ஓடி அனைவரும் ஒரே சமயத்தில் அந்த சமூக சேவையாளர் குறித்த நூறாவது மீட்டர் தூரத்தில் அவர்வைத்திருந்த இனிப்புவகைகள்வைத்துள்ள பெட்டியை திறந்து அதிலுள்ள இனிப்புவகைகளை அனைவரும் சமமாக பங்கிட்டு தின்று மகிழந்தனர் அந்த சமூக சேவையாளருக்கு மிக ஆச்சரியமாகிவிட்டது ஏன் அந்த சிறுவர்கள் அவ்வாறு செய்தனர் என அவர்களிடம் வினவியபோது உபுண்டு என ஒரேயொரு சொல்லை கூறினர்

அதற்கான பொருள் என்னவென வினவியபோது ஒருவர் மற்றொருவரை வருத்தபடவைத்து எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கமுடியும் அதனால் நான் மகிழ்ச்சியாய் இருக்கின்றேன் என்றால் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கின்றோம் என பொருளாகும் அதனால் அனைவரும்ஒன்றாக கூடி ஒற்றுமையாக செயல்பட்டு மகிழ்ச்சியாக இருப்போம்

சனி, 10 செப்டம்பர், 2016

எளிய ஆலோசனை கிடைத்தாலும் அதனை ஏற்றுகொள்ளும் மனப்பாங்கு தலைமையாளருக்கு இருக்கவேண்டும்


ஒருமகிழ்வுந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைமைபொறியாளர் ஒருவர் புதிய வகை மகிழ்வுந்து ஒன்றினை வடிவமைத்து தொழிலகத்திலிருந்து நுழைவுவாயில் வழியாக வெளியில் காட்சி கூடத்திற்கு அந்தபுதிய வகை மகிழ்வுந்தினை கொண்டு செல்ல முயன்றார்

ஆனால் நுழைவுவாயிலின் வாயிற்படியானது மகிழ்வுந்தின் கூரை மோதிக்கொண்டு வெளியேகொண்டுவரமுடியாமல் நின்றுகொண்டது அதனால் அந்த நிறுவனத்தின் தலைமைபொறியாளருக்கு "முதன்முதல் புதியவகை மகிழ்வுந்து ஒன்றினை வடிவமைத்தோம் அதனை தொழிலகத்திலிருந்து காட்சி கூடத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லையே" என மனவருத்தமாகிவிட்டது

இந்நிலையில் வர்ணம் பூசம் தொழிலாளி "ஐயா மகிழ்வுந்தின் கூரையின் மேல் பூசிய வர்ணத்தை சுரண்டிவிட்டால் வண்டியை சுலபமாக வெளியே கொண்டுவரமுடியும்" என ஆலோசனை கூறினார் மேலும் இவ்வாறு ஒவ்வொருதொழிலாளியும் ஒவ்வொரு ஆலோசனை கூறியதை கேட்டதலைமைபொறியாளர் கோபம் அதிகமாகி யாரும் எனக்கு ஆலோசனை கூறத்தேவையில்லை நான் உத்திரவிடுவதை செயற்படுத்து-வதுதான் உங்களுடைய பணி எல்லோரும் பேசாமல் கலைந்து போய்விடுங்கள் " எனக்கூறியபின்னர் சிறிதுநேரம் தமக்குள் ஆலோசித்து தம்கீழ் பணிபுரியும் தொழிலாளர்களை அழைத்து "இந்த நுழைவுவாயிலின் மேற்பகுதியை மட்டும் வெட்டியெடுங்கள் போதும் என உத்திரவிட்டார்

அப்போது அந்த நுழைவாயிலின் காவலுக்கு நின்றிருந்த காவலாளி "ஐயா நான் இந்த பிரச்சினையை தீர்வுசெய்வதற்கான வழியொன்று கூறுகின்றேன் சற்று காதுகொடுத்து கேட்கின்றீர்களா" என மிகமெதுவாக கோரினார் தற்போது அந்த தலைமை-பொறியாளர் கோபமில்லாமல் அமைதியாக இருந்ததால் "சரி சொல்" என உத்திரவிட்டார்

உடன் அந்த நுழைவாயிலின் "காவலாளி பெரியதாக ஒன்றுமில்லை ஐயா வண்டியின் உயரம் குறைந்துவிடும் அளவிற்கு வண்டியின் நான்கு சக்கரத்திலும் உள்ள காற்றினைதிறந்துவிட்டபின்னர் வண்டியை நுழைவு வாயிலிற்கு வெளியில் கொண்டுவந்து அதன்பின்னர் நான்கு சக்கரத்திலும் போதுமான காற்றினை பிடித்து கொள்ளலாம் இதற்காக நுழைவாயிலின் மேற்கூரையை வெட்டிடத் தேவையில்லை" என கூறினார் உடன் அவ்வாறே செயல்படுத்த பட்டது.

தகுதி குறைவானவர்களாக இருந்தாலும் அவர்களிடமிருந்து மிகச்சரியான பொருத்தமான எளிய ஆலோசனை கிடைத்தால் அதனை ஏற்றுகொள்ளும் மனப்பாங்கு தலைமையாளருக்கு இருக்கவேண்டும்

புதன், 7 செப்டம்பர், 2016

கூடியவரை தவறு எதுவும் செய்திடாமல் கவணமாக வாழ பழகுக


பள்ளி ஆசிரியர் ஒருவர் ஒருநாள் தன்னுடைய வகுப்பு மாணவர்களுக்கு 4 ஆம் பெருக்கல் வாய்ப்பாட்டினை பின்வருமாறு கரும்பலகையில் எழுதினார் :

1X 4 =2

2X 4 =8

3X 4 =12

4X 4 =16

5X 4 =20

6X 4 =24

7X 4 =28

8X 4 =32

9X 4 =36

10X 4 =40

உடன் வகுப்பு மாணவர்கள் அனைவரும் கேலியாகவும் கிண்டலாகவும் ஆசிரியரை பார்த்து சிரித்து மகிழ்ந்தனர் ஏனெனில் இந்த 4 ஆம் வாய்ப்பாட்டின் முதலில் 1X 4 =4 என எழுவதற்கு பதிலாக 1X 4 =2 என தவறாக எழுதிவிட்டார்

உடன் ஆசிரியர் அந்த மாணவர்களை பார்த்து "மாணவர்களே இந்த வாய்ப்பாடு நான் எழுதியதிலிருந்து நீங்கள் அனைவரும் ஒரு படிப்பினை கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே நான் இந்த வாய்ப்பாட்டின் முதல்வரியினை வேண்டுமென்றே தவறாக எழுதினேன் இந்த வாய்ப்பாட்டின் 1 முதல் 10 வரையிலுள்ள வரிகளை பார்த்தீர்கள் எனில் முதல் வரியை தவிர மிகுதி ஒன்பது வரியும் மிகச்சரியாக எழுதியிருந்தாலும் அந்தமுதல் வரியிலுள்ள தவறு மட்டுமே நம்முடைய கண்களுக்கு தெரிகின்றது ஆனால் யாரும் சரியான இந்த ஒன்பது வரிகளை மட்டும் ஆமோதிக்க மறுக்கின்றோம் அதே போன்று நாம் வாழும் இந்த சமுதாயத்தில் ஆயிரகணக்கான நன்மை செய்தாலும் அதனை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள் ஆனால் ஒரேயொரு சிறு தவறு செய்துவிட்டாலும் அதனை ஊதி பெருக்கி பூதாகரமாக செய்து இந்த உலகமே அதனால் மட்டுமே அழியபோவதாக தவறாக செய்த நபரை கேலியும் கிண்டலுமாக பேசி ஒருவழியாக்கிவிடுவார்கள் அதனால் முடிந்தவரை கூடியவரை தவறு எதுவும் செய்திடாமல் கவணமாக வாழ பழகுங்கள்" என அறிவுரை வழங்கினார்

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

எதையெதை எதனோடு மிகச்சரியாக கலந்தால் அமைதியாகிவிடும் என பக்குவமாக கையாளச்செய்தால் அமைதியான வாழ்க்கை அமையும்


ஒரு சிறுவன் தன்னுடைய பாட்டியிடம் ஏன் பாட்டி தற்போதெல்லாம் பள்ளிக்கு போனாலும் பிரச்சினை ,நண்பர்களுடன் விளையாடச்சென்றாலும் பிரச்சினை, வீட்டிற்கு ஓய்வெடுக்க வந்தால் இங்கு வீட்டிலும் பிரச்சினை வீட்டிற்கு வெளியில்தான் செல்வோமே என வெளியில் சென்றால் அங்கு பக்கத்து வீட்டு பிள்ளைகளுடன் பிரச்சினை, அதைவிட தலைவலி உடல்வலி என நம்முடைய உடலிலும் பிரச்சினை என எந்த பக்கம் திரும்பினாலும் பிரச்சினையாகவே உள்ளன இதற்கு என்னதான் காரணம் என வினவினான்

"பேராண்டி அவைகளுக்கான காரணத்தை அப்புறமாக விளக்கமாக கூறுகின்றேன் முதலில் இப்போது மாலை நேரமாகின்றது உனக்கு தின்பண்டம் எதுவும் இல்லை என்ன வேண்டும்" என பாட்டி வினவினாள் உடன் அந்த சிறுவன் "பாட்டி எனக்கு பஜ்ஜி செய்து கொடு பட்டி" என கோரினான்

உடன் பாட்டி "அப்படியா இது என்ன" சிறுவன் "எண்ணெய் பாட்டி". பாட்டி"இதை குடி பார்க்கலாம்" சிறுவன் "ஐய்யய்யோ வயிற்றுப்போக்கு ஆகிவிடும் பாட்டி" பாட்டி "சரி இது என்ன" சிறுவன் "பஜ்ஜி மாவு" பாட்டி"இதை தின்னு பார்க்கலாம்" சிறுவன் "ஐய்யய்யோ வயிறு செரிக்காது பாட்டி" பாட்டி "சரி இது என்ன" சிறுவன் "பச்சைமிளகாய் பாட்டி" பாட்டி "இதை கடித்து தின்னு பார்க்கலாம்" சிறுவன் "ஐய்யய்யோ காரம் வாயெல்லாம் எரியும் பாட்டி"

பாட்டி "ரொம்ப சரி ஆயினும் இவைகளுள் தேவையான பொருட்களை மட்டும் மிகச் சரியாக கலந்து அடுப்பில் வானலியை வைத்து அதில் எண்ணெய்யை ஊற்றி சூடேற்றி நீ கோரிய பஜ்ஜி செய்தால் சாப்பிடலாம் அல்லவா அதேபோன்று பிரச்சினைகளுள் எதையெதை எதனோடு மிகச்சரியாக கலந்தால் அமைதியாகிவிடும் என பக்குவமாக கையாளச்செய்தால் அமைதியான வாழ்க்கை அமையும்என தெரிந்துகொள்" என தன்னுடைய பெயரனுக்கு அறிவுரை கூறினார் பாட்டி

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

விலைமதிப்பற்ற நம்முடைய வாழ்நாளை வீணாக்கிடவேண்டாம்


இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் கிராமத்து விவசாயி ஒருவர் தன்னுடைய குடும்பத்திற்கு தேவையான பயிரிடும் நிலமாக மேம்படுத்தி கொள்வதற்காகஅருகிலிருந்த காட்டினை அழித்து தயார்செய்து கொண்டிருந்தார் கடைசியாக நிலத்தை திருத்திடும் பணிமுடியும் நேரத்தில் அவர் பயன்படுத்திகொண்டிருந்த கருவியானது நிலத்தில் சிக்கிக்கொண்டு எவ்வளவு முயற்சிசெய்தும் வெளியில் எடுக்க முடியாமல் தடுமாறி கொண்டிருந்தார் இருப்பினும் கடைசிமுயற்சியாக அந்த கருவியை எடுப்பதற்கு அவ்விடத்தை சுற்றி ஆழமாக பள்ளம் வெட்டியபோது ஒரு பெட்டி ஒன்று கிடைத்தது அதனை கடும் முயற்சிசெய்து திறந்து பார்த்தபோது அந்த பெட்டிநிறைய பளபளவென மின்னிடும்கருமைநிறகற்கள் இருந்தன சே இதனை சாப்பிடவா முடியும் கடுமையாக பள்ளம் வெட்டி இந்த பெட்டியை எடுத்தது வீண் வேலை இதனை வேறு என்னசெய்வது என அவ்விடத்திலேயே வைத்து சென்றார்

பின்னர் அந்த நிலத்தினை உழுது பயிரிட்டார் விவசாய பயிர்களும் நன்கு முளைத்து விளைந்தன அந்நிலையில் ஏராளமாக காட்டுப்பறவைகள் அவருடைய நிலத்தில் விளைந்த தானியங்களை திண்பதற்கு வந்து சேர்ந்தன உடன் அந்த விவசாயி அவைகளை விரட்டுவதற்காக கருவி ஒன்றினை செய்து அதில் நிலத்தை திருத்தும் போது கிடைத்த பெட்டியிலிருந்த கற்களில் ஒவ்வொன்றாக வைத்து வீசி எறிந்து பறவைகளிடமிருந்து பயிர்களை பாதுகாத்தார்

இவ்வாறாக அவர் கண்டெடுத்த பெட்டியின் கற்களை காலிசெய்து கடைசியாக ஓரிரு கற்கள் மட்டுமே இருந்த நிலையில் அருகிலிருந்த நகரத்தில் இருந்த வந்தஒருவர் ஐயா அந்த கற்களை இவ்வாறு விணாக்கவேண்டாம் அதனை நான் விலைக்கு வாங்கி கொள்கின்றேன் ஒவ்வொன்றிற்கும் 100 டாலர் கொடுக்கின்றேன் எனக்கூறியபோது அந்த விவசாயி மறுத்தார் மீண்டும் மேலும் நூறு டாலர் சேர்த்து 200 டாலர் கொடுக்கின்றேன் எனக்கூறியபோது அந்த விவசாயி மீண்டும்மறுத்தார். இவ்வாறே அந்த கற்களுக்கான விலையாக நூறு நூறு டாலராக உயர்த்தி கொண்டே சென்று கடைசியாக 1000 டாலர் கொடுப்பதாக கூறியபோது அந்த விவசாயி சரிஎன ஏற்றுகொண்டார்

உடன் எத்தனை கற்கள் இருக்கின்றன சரிபார்த்திடுங்கள் இந்த கற்கள் மதிப்புமிக்க வைரகற்களாகும் இந்த கற்களுக்கான தொகை நாளை எடுத்துவருகின்றேன் தொகையை வாங்கி கொண்டு என்னிடம் அந்த கற்களை கொடுத்தால் போதும் என உறுதியளித்து சென்றார்

அந்த விவசாயி மிக அதிக வருத்தத்துடன் ஐய்யய்யோ நான் என்னசெய்வேன் கடைசியாக இந்த ஒன்று மட்டுமே மிஞ்சியுள்ளதே ஐய்யய்யோ இந்த பெட்டிநிறைய கற்களாக இருந்ததே அவ்வளவும் இருந்தால் பெரிய கோடீசுவரணாகியிருப்பேனே என அழுது புலம்பினார் அழுது புலம்பி என்ன செய்வது வீசியெறிந்த கற்கள் கிடைக்கவா போகின்றன

அதேபோன்ற நாம் கூட நம்முடைய வாழ்க்கையில் நமக்களிக்கபபட்ட அருமையான விலைமதிப்பற்ற நம்முடைய வாழ்நாளின் பலநாட்களை வீணாக்கி வருகின்றோம் அதனை தவிர்க்க இன்றுமுதல் நம்முடைய வாழ்நாளில் மிகுதி இருக்கின்ற நாட்க ளையாவது பயனுள்ளதாக ஆக்கி மகிழ்ச்சியுடன் வாழ உறுதிகொள்வோம்

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

ஒரு வித்தியாசமான தேர்வு


ஒருநாள் கல்லூரி பேராசிரியர் ஒருவர் தன்னுடைய வகுப்பு மாணவர்களிடம் தான் இன்று ஒருவித்தியாசமான தேர்வு நடத்தவிருப்பதாகவும் உடன் அனைவரும் தயாராக இருக்குமாறு கூறி ஒவ்வொரு மாணவரிடமும் ஒரு வினாத்தாளையும் விடை எழுதுவதற்கான வெள்ளைத்-தாளையும் வழங்கி அனைவரையும் தேர்வினை எழுதுமாறு கூறினார்

அதனை தொடர்ந்து அனைத்து மாணவர்களும் வினாத்தாளை பிரித்து பார்த்தபோது அது காலியாக இருந்தது ஆனால் அதன் நடுவில் மட்டும் சிறிய கரும்புள்ளி ஒன்று இருந்தது அதனை கண்ணுற்ற அனைத்து மாணவர்களும் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று பேராசிரியரிடம் "ஐயா இந்த வினாத்தாட்களில் கேள்வி எதுவுமே இல்லையே அதனால் நாங்கள் என்ன விடையை எழுதுவது" என கோரினர். உடன் பேராசிரியர் "என்ன கேள்வி எதுவுமே அந்த கேள்வித்தாளில் இல்லையா இருக்கின்றது சரியாக பாருங்கள்" என பதில் கூறியதும் "ஐயா கேள்வித்தாளின் நடுவில் கரும்புள்ளி மட்டுமே உள்ளது" என அனைத்து மாணவர்களும் பதில் கூறியதும் "அப்படியா ரொம்ப சரி அந்த கரும்புள்ளியை பற்றி உங்களுடைய மனதில் தோன்றியதை எழுதுக" என கேட்டுகொண்டார்

உடன் மாணவர்கள் அனைவரும் அந்த கரும்புள்ளியை பற்றி தங்களுக்கு தோன்றிய கருத்தினைஎழுதி பேராசிரியரிடம் தங்களுடைய விடைத்தாள்களை கொண்டுவந்து கொடுத்தனர். பேராசிரியர் அந்த விடைத்தாள் அனைத்தையும் திருத்தினார் ஆனால் அவையனைத்தும் ஒரேமாதிரியான அந்த கரும்புள்ளியை பற்றிய வர்ணனையாகவே இருந்தன. அதனால் யாருக்கும் மதிப்பெண் எதுவும் வழங்காமல் வெறும் பூஜ்ஜியத்தை மட்டும் அனைவரின் விடைத்தாளிலும் வழங்கி விடைத்தாட்களை அவரவரிடம் திருப்பினார்

அதன்பின்னர் "மாணவர்களே இந்த கேள்வித்தாளில்இருந்த வெள்ளையான பகுதியை பற்றி யாருமே எழுதவில்லை ஆனால் நீங்கள் அனைவரும் கேள்வித்தாளில் இருந்த அந்த சிறிய கரும்புள்ளியை பற்றி மட்டுமே எழுதியுள்ளீர்கள் உங்களுடைய மனமானது அந்த கேள்வித்தாளில் இருந்த மற்ற வெள்ளையான பகுதிகளை பார்க்கதவறிவிட்டது அதேபோன்றே நாம் வாழும் இந்த சமுதாயத்தில் நிகழும் சிறிய தவறான நிகழ்வுகளை மட்டுமே ஒட்டுமொத்த மக்களும் தங்களுடைய கவணத்தை கொண்டுசெல்கின்றார்களே தவிர மிகுதிஉள்ள எத்தனையோ நல்ல செயல்களை எதனையும் கவணித்து அதனை பின்பற்றி வாழ்க்கையை வளமாகவும் நலமாகவும் வாழத்தலைப்படுவதில்லை என்பதே உண்மை நிலவரமாகும் அதனால் மாணவர்களே நீங்களாவது இந்த சமுதாயத்தில் நிகழும் மிகுதியுள்ள அனைத்து நல்ல செயல்களையும் அறிந்து அதனை பின்பற்றி உங்களுடைய கல்வியை மட்டுமன்று உங்களுடைய வாழ்வை மகிழ்ச்சியாகவும் சிறந்ததாகவும் அமைந்திடுமாறு செய்து கொள்க " என அறிவுரை கூறினார்

சனி, 20 ஆகஸ்ட், 2016

அமைதியாக இருந்தால் மனதும் குழப்பம்எதுவுமின்றி தெளிவாகிவிடும்


ஒரு ஆசிரியர் தம்முடைய மாணாக்கர்களுடன் வெகுதூரத்திலிருந்த நகரத்திற்கு நடைபயனமாக சென்று கொண்டிருந்தார் மதிய நேரமானதால் அருகில் இருந்த மரத்தடியில் இளைப்பாற சென்றார் அதனை தொடர்ந்து அந்த ஆசிரியருக்கு அதிக நாவறட்சி ஏறபட்டது அதனால் தம்முடைய மாணாக்கர்களில் ஒருவனை அழைத்து "தம்பி அருகில் ஓடும் ஆற்றில் குடிப்பதற்கு நீர் கொண்டுவா" என கேட்டுக்கொண்டார் அந்த மாணவரும் தன்னுடைய ஆசிரியரின் உத்திரவை பின்பற்றி ஆற்றிற்கு சென்றார் அங்கு ஆற்றில் விலங்குகளின் நடமாட்டமும் மக்களின் நடமாட்டமும் இருந்ததால் ஆற்றில் ஓடும் நீர் சேரும் சகதியுமாக கலங்களாக இருந்தது அதனால் இந்த கலங்களாக இருக்கும் ஆற்று நீரை ஆசிரியருக்கு குடிப்பதற்கு எப்படி எடுத்து சென்று கொடுப்பது என மனம் தடுமாறி வெறுங்டுகையுடன் திரும்பி வந்து "ஐயா ஆற்றுநீர் சேறு சகதியுமாக கலங்கியிருப்பதால் அதனை குடிக்கவே முடியாது அதனால் ஆற்றுநீரை நீங்கள் குடிப்பதற்காக எடுத்து வரவில்லை" எனக்கூறினான் உடன் "சரிசரி போய் ஓய்வு எடு" என அதனை ஆமோதித்தார்

சிறிது நேரம் கழித்து அதே மாணவனை அழைத்து மீண்டும் தன்னுடைய தாகத்திற்கு தண்ணீர் கொண்டுவருமாறு உத்திரவிட்டார் மீண்டும் அதே மாணவன் ஆசிரியரின் உத்திரவினை செயல்படுத்திடுவதற்காக ஆற்றிற்கு சென்றார் தற்போது ஆற்றில் தண்ணீர் தெளிவாக ஓடிக்கொண்டிருந்தது உடன் ஆசிரியரின் தாகம் தீர்க்கும் அளவிற்கு தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தார் ஆசிரியரும் தாகம் தீர தண்ணீரை அருந்தியபின் அந்த மாணவனிடம் "தம்பி ஆற்றில் எப்போதும் ஒரேமாதிரியாகத்தான் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கின்றது அதில் மக்களும் விலங்களும் நடமாடுவதால் முன்பு கலங்கியவாறும் பின்னர் அவ்வாறு நடமாடாததால் தெளிவாகவும் ஓடுகின்றதல்லவா அதேபோன்று நம்முடைய மனதில் பல்வேறு எண்ணங்களையும் நினைவிற்கு கொண்டுவந்தால் ஒரே குழப்பமாக கலங்கி நிற்கும் அமைதியாக இருந்தால் மனதும் குழப்பம்எதுவுமின்றி தெளிவாகிவிடும் அதற்காக தனியான முயற்சி எதுவும் எடுக்கத்தேவையில்லை மனதில் பல்வேறு எண்ணங்களை கொண்டுவராமல் அமைதியாக இருந்தால் மட்டும் போதுமானதாகும்" என அறிவுரை கூறினார்

புதன், 17 ஆகஸ்ட், 2016

என் வாழ்க்கையில் நடந்த சிறுசம்பவத்தால் என்வாழ்க்கை மட்டுமல்ல வாழ்க்கையை நோக்கிய என்னுடைய கருத்துகூட மாறிவிட்டது .


தற்போதுதான் என்னுடைய வாழ்க்கையை துவக்கும் இளைஞனான நான் என் சொந்த ஊருக்கு அருகிலுள்ள நகரத்தில் கடந்த நான்கு மாதங்களாக ஒரு நிறுவனத்தில் புதியதாக பணியில் சேர்ந்து பணிபுரிந்து வருகின்றேன். இந்த என்னுடைய வாழ்க்கையானது புத்துணர்ச்சி ஏதுமின்றி ஒரு சலிப்பானதாக இருக்கின்றது .இந்நிலையில் ஒரு நாள் நான் பணிமுடிந்து வீட்டிற்கு திரும்பி வரும்போது ஒரு சாலையோர மாலைநேர உணவகத்தில் சிற்றுண்டி சாப்பிடுவதற்காக சென்றேன். அந்த சாலையோர மாலைநேர உணவகத்தில் இரண்டு சகோதரர்கள் மட்டுமே வேலை செய்து வந்தனர். மூத்தசகோதரர் உணவகத்திற்கு தேவையான சிற்றுண்டிகளை தயார் செய்து கொண்டிருந்தார் , மற்றொரு இளைய சகோதரர் அந்த உணவகத்திற்குள் வருபவர்களுக்கு அதனை பரிமாறும் பணியை செய்துகொண்டிருந்தார். அதுஒரு மாலை 6 மணி ஆனதால் , அவ்விருவரும் வாடிக்கையாளர்களின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர் அன்று நான்தான் முதல்ஆளாக அந்த உணவகத்திற்கு வந்து எனக்கான சிற்றுண்டியை கொண்டுவருமாறு உத்தர விட்டேன் உடன் எனக்குத் தேவையான சிற்றுண்டியை இளைய சகோதரர் கொண்டுவந்து பரிமாறி கொண்டிருந்தார் இதற்கிடையில் நான் உணவு பரிமாறுவதற்காக வந்திருந்த ஒரு நல்ல தடகள வீரர் போன்று உடல் கொண்ட அந்த இளைய சகோதரரிடம் பேச ஆரம்பித்து முதலில் “தம்பி நீ படிக்கின்றாயா?” என்ற ஒரு எளிய கேள்வியை கேட்டேன் ; உடன் அந்த இளைய சகோதரர் “அதை ஏன் ஐயா கேட்கின்றீர்? தற்போது நான் அருகிலுள்ள கல்லூரியில் இளங்களை வேதியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகின்றேன் நாளை காலை என்னுடைய வேதியில் கல்வியின் செயல்முறை பயிற்சி தேர்வு நடக்கவிருக்கின்றது அந்த வேதியில் கல்வியின் செயல்முறை பயிற்சி தேர்வு நான் செய்திடவேண்டும் அது முடிந்து மாலை கால்பந்து போட்டி நடக்க விருக்கின்றது அதில் நான் கலந்து கொண்டு விளையாட வேண்டும் அதுமுடிந்ததும் மாலை இந்த உணவகத்தில் இரவு 11 மணிவரை பணியாற்றவேண்டும் அவ்வாறு பணியாற்றியபின்னர் இரவு 11 மணிக்குமேல் வீட்டிற்கு செல்வேன் விடியற் காலையில் 4 மணிக்கு எழுந்து அன்றன்றைய பாடத்தை படித்து தயார் கொள்வேன்” என தன்னுடைய இயந்திரமயமான வாழ்க்கையை பற்றி கூறினார். உடன் “சரிதம்பி பொழுது போக்கிற்கான தொலைக்காட்சி பெட்டியின் நிகழ்ச்சியை எப்போது காண்பாய்? கால்பந்தாட்ட பயிற்சியை எப்போது செய்கின்றாய்?” என நான் வினவியபோது “எங்களுடைய வீட்டில் தொலைக்காட்சி பெட்டியே கிடையாது ஒன்று மாற்றி ஒன்றாக பணியை முடிக்கவே நேரம் சரியாக இருக்கின்றபோது பொழுது போக்கெல்லாம் என்னுடைய வாழ்வில் இல்லை கால்பந்தாட்ட பயிற்சியைகூட செய்வதற்கு நேரம் எங்கே கிடைக்கின்றது அதற்கு பதிலாக நண்பர்கள் கால்பந்தாட்டம் பற்றிய கானொளி காட்சி படத்தினை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொடுப்பார்கள் அதனை என்னுடைய கைபேசியில் செயல்படுத்தி பார்த்து அதன் நுனுக்கங்களை தெரிந்து கொண்டு நானாக முயற்சிசெய்து கால்பந்து விளையாடி வருகின்றேன்”. என இளைய சகோதரர் தன்னை பற்றி கூறினார்.இடையே மூத்தசகோதரர் “என்னுடைய தம்பி அவர் பயிலும் கல்லூரியில் சிறந்த கால்பந்து வீரராக பிரபலமாகிவிட்டதால் அவருடைய கல்லூரி நண்பர்கள் அனைவரும் அவரை ரொனால்டோ என்றே சிறப்பு பெயரிட்டு அழைக்கின்றனர்” என கூறினார் தொடர்ந்து நான் “கால்பந்து விளையாட்டில் எந்த வீரரையாவது முன்னுதாரணமாக கொள்கின்றாயா?” என வினவியபோது உடன் அந்த இளைய சகோதர்ர் “நான் எந்த கால்பந்து விளையாட்டு வீரரையும் பின்பற்ற எனக்கு நேரம் ஏதும் இல்லை என்னுடைய கைபேசியில் மட்டும் கால்பந்தாட்டம் பற்றிய கானொளி காட்சி படத்தினை பார்த்து நானாக பயிற்சி செய்து கால்பந்தாட்ட விளையாட்டில் கலந்து விளையாடி வருகின்றேன்” என க்கூறினார் அதனை தொடர்ந்து நான் “கல்லூரி படிப்பு ,கால்பந்து விளையாட்டு ,இந்த சிற்றுண்டி உணவகத்தில் வேலைஎன ஒரே குழப்பமாக இருக்காதா உனக்கு” என வினவினேன் “இதில் குழப்பம் ஏன்? வருகின்றது ஐயா! எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான கல்வியை கல்லூரியில் பயின்றுவருகின்றேன்; நீங்கள் கூறிய பொழுதுபோக்கிற்காக கால்பந்துவிளையாட்டினை பயிற்சிசெய்து சிறந்த கால்பந்து விளையாட்டு வீரனாக விளையாடி வருகின்றேன் ; வாழ்க்கையின் அடிப்படைத் தேவையான உணவு போன்ற அனைத்து பொருட்களையும் பெறுவதற்காக மாலையில் இந்த சிற்றுண்டியகத்தில் பணிபுரிந்து வருகின்றேன்; இந்த பணிகளில் அந்தந்த நேரத்தில் அந்தந்த பணியை மட்டும் மனநிறைவோடும் மகிழ்ச்சியாகவும் செய்து வருகின்றேன் . மேலும் என்னுடைய மூத்த சகோதரர் என்னுடைய கால்பந்து விளையாட்டு போட்டிக்காக முழுக்காலணியை இங்கு பணிபுரிவதற்கான பரிசாக எனக்கு வழங்கியுள்ளார்” என பதில் கூறியதும். என்னுடைய மனதில் ‘இதேபோன்று அனைவரும் இருந்தால் இந்த உலகில் வாழும் அனைவரும் மிகமகிழ்ச்சியோடு வாழமுடியுமே!’ என்ற இந்த சம்பவம் உண்மையில் என்னை போன்றவர்களின் வாழ்க்கையின் கண்ணோட்டத்தையே மாற்றியுள்ளது

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

மலையின் அடிப்படை கொள்கையே நாம் வாழும் சமுதாயத்திற்கும் பொருந்தும்


ஒரு சிறுவனும் அவனுடைய தந்தையும் வானாளாவ உயர்ந்த மலைகளுக்கிடையே காலாற நடை பயற்சி மேற்கொண்டிருந்தனர் திடீரென அந்த சிறுவன் கால்சருக்கி கீழேவிழுந்தான் அதனால் அந்த சிறுவன் "ஆஆஆஆ " என தன்னுடைய உடலில் ஏற்பட்ட வலியால் கத்தினான் என்ன ஆச்சரியம் அந்த மலையும் "ஆஆஆஆ " என அதே வலியை எதிரொலித்தது உடன் ஆர்வத்தினால் "நீ யார்?" எனசத்தமாக கேள்விகேட்டான் உடன் அந்த மலையும் "நீ யார்?"என பதில் கேள்வியை அவனிடமே கேட்டது .

பின்னர் அந்த சிறுவன் "நான் உன்னை பாராட்டுகிறேன்!" என புகழ்ந்தான் உடன் அந்த மலையும் "நான் உன்னை பாராட்டுகிறேன்!" என பதிலுக்கு அவனை புகழ்ந்தது அதன் பின்னர் அந்த சிறுவன் என்ன இந்த மலையானது நாம் கூறியதையே திரும்புதிரும்ப நமக்கு கூறுகின்றது என மிகவும் கோபமுற்று "கோழையே!" என கத்தினான் என்ன ஆச்சிரியம் பதிலுக்கு அந்த மலையும் "கோழையே!" என அவனிடம் கத்தியது அதனை தொடர்ந்து இந்த நிகழ்வை அவனால் புரிந்து கொள்ள இயலவில்லை அதனால் தன்னுடைய தந்தையிடம் "அப்பா இங்கு என்னதான் நடக்கின்றது எனக்கு ஒன்றுமே புரியவில்லையே" என வினவினான்

அவனுடைய தந்தை புன்முறுவலுடன் மகனே இப்போது நடைபெறபோவதை கவணி எனக்கூறியபின்னர் "நீ ஒரு வெற்றியாளன் !" என சத்தமாக கத்தினார் உடன் அந்த மலையும் "நீ ஒரு வெற்றியாளன் !" என கத்தியது அவருடைய மகனுக்கு மேலும் கூடுதலாக ஆச்சரியமாகிவிட்டது நாம் கத்தியதை போன்று நம்முடைய அப்பாவும் கத்தினார் ஆனால் அந்த மலை அதற்கும் அதேபோன்று கத்துகின்றதே இதனை ஒன்றும் புரிந்து கொள்ளமுடியவில்லையே என மனம் தடுமாறினான்

அதனை தொடர்ந்து அவனுடைய தந்தை அவனிடம் "மகனே இவ்வாறு இந்த மலையும் நாம் கூறுவதையே திரும்ப கூறுவதை பொதுவாக மனிதர்கள் எதிரொலி எனக்கூறுவார்கள் ஆனால் நம்முடைய வாழ்விலும் இதேபோன்று நாம் என்ன செய்கின்றோமோ அதுவே நமக்கு பதிலாக கிடைக்கின்றது அதாவது நாம் என்ன செயல் செய்கின்றோமோ அதுவே திரும்பநமக்கு கிடைக்கின்றது அதனடிப்படையில் நாம் இந்த உலகில் உள்ள மற்றவர்களுடன் இதயபூர்வமாக அதிக அளவு அன்புடன் பழகினால் பதிலுக்கு அனைவரும் நம்முடன் இதய பூர்வ அன்புடன் பழகுவார்கள் இந்த உறவும் பதில் செயலும் நம்முடைய வாழ்வின் அனைத்து செயல்களிலும் தொடர்கின்றது அதனால் நாம் மற்றவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கின்றோமோ அதனை முதலில் நாம் மற்றவர்களுக்கு வழங்கினால் உடன் அது நமக்கு தானாகவே கிடைக்கும் என்ற அடிப்படையை இந்த மலையின் எதிரொலியில் இருந்து தெரிந்து கொள்" என அறிவுரை கூறினார்

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

ஏழைஎளியவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்களையாவது வழங்கி உதவி செய்திடுக


அருகிலிருந்த நகரத்தின் ஒரு பிரபலமான தேநீர்கடையில் நண்பருடன் அமர்ந்து தேநீர் அருந்திகொண்டிருக்கும்போது அந்த நகரத்தின் நபர் ஒருவர்வந்தார் வந்தவுடன் இரண்டு குவளை தேநீர் ஒன்றுஎனக்கு மற்றொன்று அந்த சுவருக்கு என உத்திரவிட்டார் உடன் பரிமாறுபவர் ஒருகுவளை தேநீரை அவரிடம் கொண்டுவந்து கொடுத்துவிட்டு சுவற்றில் ஒருகுவளை தேநீர் என தாள் ஒன்றினை ஒட்டி சென்றார் வந்தவரும் தேநீர் அருந்தி முடித்தவுடன் இரு குவளை தேநீருக்கான தொகையை வழங்கி சென்றார் அதன்பின்னர் வேறு இரு நபர்கள் வந்தனர் அவர்களும் மூன்று குவளை தேநீர் இரண்டு எங்களுக்கு மூன்றாவது அந்த சுவற்றுக்கு என உத்திரவிட்டனர் உடன் பரிமாறுபவர் இரண்டு குவளை தேநீரை அவர்களிடம் கொண்டுவந்து கொடுத்துவிட்டு சுவற்றில் ஒருகுவளை தேநீர் என தாள் ஒன்றினை ஒட்டி சென்றார் வந்தவர்களும் தேநீர் அருந்தி முடித்தவுடன் மூன்று குவளை தேநீருக்கான தொகையை வழங்கி சென்றார்கள் அந்த நகரத்தின் அந்த பிரபலமான தேநீர் கடையில் நடைபெற்றுவரும் இந்த நிகழ்வை கண்டு எனக்கு மிக ஆச்சரியமாகிவிட்டது இருந்தாலும் தொடர்ந்து என்னதான் நடக்கின்றது என பார்க்கலாம் என பார்வையிட்டு கொண்டிருந்தேன் அதன்பின்னர் எளிய தோற்றமுள்ள ஏழையொருவர் அந்த தேநீர் கடைக்கு வந்து அந்த சுவற்றை பார்த்து ஒருகுவளை தேநீர் வழங்குக எனஅந்த உத்திரவிட்டார் உடன் பரிமாறுபவர் ஒருகுவளை தேநீரை அவரிடம் கொண்டுவந்து கொடுத்துவிட்டு சுவற்றில் ஒருகுவளை தேநீர் என்றிருந்த தாள் ஒன்றினை கிழித்து எடுத்து சென்றார் வந்தஎளிய தோற்ற-முடையவரும் தேநீர் அருந்தி முடித்தவுடன் ஒரு குவளை தேநீருக்கான தொகையை வழங்காமல் சென்றார்அதன்பின்னர் அந்த கடையின் பரிமாறுபவரிடம் விசாரித்தபோது அந்த நகரத்தில் வாழும் மக்கள் அந்த தேநீர்கடைக்கு தேநீர் அருந்தவரும்போது கூடுதலாக ஒரு குவளை தேநீருக்கான தொகையை வழங்கி செல்வார்கள் என்றும் அவ்வாறு கூடுதலாக பெற்ற தொகையை வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளியவரகளுக்கு தேநீர் வழங்கு வது வழக்கம்என்றும் கூறினார் ஏழைஎளியவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்குமாறு செய்தும் உதவிசெய்திடலாம்

ஞாயிறு, 31 ஜூலை, 2016

ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வதே மனித தன்மையாகும்


ஒருமனிதன் வயதான கிழவி நடத்தும் பழக்கடையில் தினமும் ஒருகிலோ கொய்யா பழம் அல்லது ஆரஞ்சு பழம் வாங்குவது வழக்கமாகும் ஆனாலும் வாங்கியவுடன் ஒருபழத்தை எடுத்து கடித்துவிட்டு அந்த பழக்கடைகார கிழவியிடம் அம்மா உங்களிடம் வாங்கிய பழம் சுவையாக இல்லை வேண்டுமானால் இந்த பழத்தை தின்று பாருங்கள் என தான் அவர்களிடம் வாங்கிய பழங்களில் ஒன்றை எடுத்து கொடுத்து அந்த பழக்கடைகார கிழவியிடம் தின்று ருசி பார்க்குமாறு கூறுவார் உடன் அந்த பழக்கடைகார கிழவியும் அவரிடமிருந்து பழம் ஒன்றை வாங்கி கடித்து தின்று பார்த்து விட்டு இந்த பழம் சுவையாகத்தானே உள்ளது வீட்டிற்கு எடுத்து சென்று உங்களுடைய பிள்ளைகளுக்கும் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் கொடுங்கள் என பதிலளிப்பார் இவ்வாறான நிகழ்வு தினமும் நடந்துகொண்டிருந்தது அவருடன் வரும் அவருடைய குடும்ப உறுப்பினர் தங்களுடைய வீட்டிற்கு சென்றபின்னர் ஏன் தினமும் பழக்கடைகார கிழவியிடம் பழத்தை வாங்கியவுடன் ஒரு பழத்தை நீங்கள் கடித்து பார்த்துவிட்டு மற்றொன்றை அந்த பழக்கடைக்கார கிழவியிடம் கொடுத்து கடித்து தின்று பார்க்குமாறு கூறுகின்றீர்கள் என வினவினார் உடன் அவர் அந்த பழக்கடைகார கிழவி-யானவர் இவ்வளவு பழங்களை தன்னுடைய கடையில் விற்பணை செய்தாலும் ஒருபழம் கூட தனக்கு வேண்டுமென எடுத்து தின்று பசியாறுவதில்லை அதனால் நான் வாங்கு கின்ற பழத்திலாவது ஒன்றை அந்த அம்மா தின்று பசியாறட்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவ்வாறு செய்வதாக கூறினார் இதேபோன்று அந்த கிழவியின் பழக்கடைக்கு அருகிலுள்ள மற்றொரு கடைகாரன் அம்மா தினமும் அந்த மனிதர் உங்களிடம் ஒருகிலோ பழம் வாங்குகின்றார் வாங்கியவுடன் ஒருபழத்தை எடுத்து தின்றுவிட்டு சுவையாக இல்லை எனக்கூறி மற்றொன்றை உங்களிடம் கொடுத்து கடித்து தின்று பார்க்குமாறு கூறுகின்றார் ஏன் இவ்வாறான நிகழ்வு தினமும் நடைபெறுகின்றது என வினவினார்

உடன் அந்த பழக்கடை கிழவியும் நானும் பலநாட்களாக இந்த மனிதனில் செயலை பார்த்தேன் அந்த மனிதன் தன்னுடைய பழத்தில் இருந்து எனக்கு கொடுப்பதாக எண்ணி கொண்டு அந்த மனிதன் பழம் ஒன்றை எனக்கு கொடுத்து கொண்டு உள்ளார் உண்மையில் நான் அவருக்கு விற்பணை செய்திடும் பழங்களை எடை போடும்போது மட்டும் உண்மையான எடையைவிட எனக்கு கொடுக்கும் பழம் ஒன்றையும் கூடுதலாக சேர்த்து எடையிட்டு அவரிடம் கொடுத்து விடுகின்றேன் ஆனால் அவர் தன்னுடைய பழத்தை எனக்கு கொடுப்பதாக மனதி்ற்குள் எண்ணிக் கொள்கின்றார் அவ்வாறெல்லாம் இல்லை என பதில்கூறினார் அந்த பழக்கடைக்கார கிழவி

நீதி ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வதே மனித தன்மையாகும் என இதிலிருந்து அறிந்துகொள்க

ஞாயிறு, 24 ஜூலை, 2016

சிங்கப்பூரின் வாடகைமகிழ்வுந்தின் ஓட்டுநர்


வெளிநாட்டு பயனி ஒருவர் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றிருந்தார் அங்கு அவசரமாக குறிப்பிட்ட இடத்திற்கு போகவேண்டியிருந்ததால் வாடகைமகிழ்வுந்தில் சென்றார் அந்த வண்டியின் ஓட்டுநர் பயனம் துவங்கும்போது பயனதூரம் அதற்கான வாடகை தொகை ஆகியவற்றை காண்பிக்கும் கருவியை செயல்படசெய்தார்

பின்னர் குறிப்பிட்ட இடம் வந்தவுடன் அந்த கருவியில் 110 டாலர் என காண்பித்தது உடன் வெளிநாட்டு பயனியும் 110 டாலரை தன்னுடைய பையிலிருந்து எடுத்து ஓட்டுநரிடம் கொடுத்தார்

ஆனால் அந்த ஓட்டுநர் "வாடகை தொகையாக எனக்கு 100 டாலர் மட்டும் கொடுத்தால் போதும் ஐயா" என 100 டாலர் மட்டும் வாங்கி கொண்டார் "என்ன ஓட்டுநரே பயனதூரம் காண்பிக்கும் கருவியில் 110 டாலர்தானே கணக்கிட்டு காண்பிக்கின்றது" என வெளிநாட்டு பயனி வினவியபோது

"இல்லை ஐயா இந்த இடத்திற்கு நேர்வழியில் வந்தால் 100 டாலர் மட்டுமே அந்த கருவி கணக்கிட்டு காண்பிக்கும் . ஆனால் அந்த வழியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் விரைவில் உங்களை இங்கு கொண்டுவந்து சேர்க்கவேண்டும் என்ற அவசரத்தை கருதி போக்கு வரத்து நெரிசல் இல்லாத சுற்றுவழியில் இன்று கொண்டு வந்து சேர்த்தேன் அதனால் கணக்கிடும் கருவி அதிக தொகையை காண்பிக்கின்றது" என பதில் கூறியதை தொடர்ந்து ஓட்டுநரின் அந்த பதிலால் திருப்தியுற்று அந்த வெளிநாட்டு பயனியும் அடுத்தபணியை செய்வதற்குசென்றார்

அந்த ஓட்டுநருக்கு குறைந்த அளவே கல்வி அறிவு இருந்தபோதிலும் வெளிநாடுகளில் தம்முடைய நாட்டை பற்றிய தவறான எண்ணம் ஏற்படக்கூடாது என இந்த ஓட்டுநர் நடந்துகொண்டார் இதுதான் உண்மையான ஒரு நாட்டின் ஒவ்வொரு மனிதனின் மிகச்சரியான செயலாகும் தன்னுடைய வாழ்க்கைக்கு பணம் மட்டுமே முக்கியமன்று நாட்டின் கெளரவமே முக்கியம் என அந்த ஓட்டுநர் நடந்து கொண்டதே மிகச்சரியான செயலாகும்

வியாழன், 21 ஜூலை, 2016

மனிதன் முதலில் தத்தமது உடல்நலனை சரியாக பராமரித்துவந்தால்தான் மற்றவர்களுக்கு உதவமுடியும்


ஒருகிராமத்தில் நாம் காலில் அணியும் காலணிகளை உருவாக்கும் தொழிலாளி ஒருவர் இருந்தார் அவர்மட்டும் தான் அந்த ஊரிலுள்ளஅனைவருக்குமான காலணியை உருவாக்குபவர் அதனால் அந்த கிராமத்தில் இருந்த அனைவருக்குமான காலணியை அவர் மட்டுமே தைத்து வழங்குவதால் அந்த தொழிலாளியால் நாள்முழுக்க பணிசெய்தாலும் இந்த பணியை செய்துமுடிக்கஇயலாத நிலையில் இருந்தார் ஆனால் இவ்வாறான வேலைபளுவால் அந்த தொழிலாளி தனக்கு மட்டும் தேவையான காலணியை செய்து அணிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தார் அதனை தொடர்ந்து அந்த கிராமத்தில் உடன் வாழும் மக்கள் அனைவரும் முதலில் உங்களுடைய காலிற்கான காலணியை செய்து அணிந்து பணிபுரிந்தால்தான் உங்களுடைய உடல்நிலை நலமாக இருக்கமுடியும் அதனடிப்படையில் மற்றவர்களுக்கு தேவையான காலணிகளை உங்களால் செய்து வழங்கமுடியும் என அறிவுரை கூறியும் அவர் அதனை ஒரு பொருட்டாக எடுத்துகொள்ளவில்லை அதனை தொடர்ந்து அவருடைய கால் பழுதாகி அவரால் நடக்கமுடியாத அளவிற்கு காலையே வெட்டி எடுத்துவிடும் நிலைக்கு வந்துவிட்டது அதனால் அந்த தொழிலாளியால் அந்த கிராமத்து மக்களுக்கு தேவையான காலணியை செய்து கொடுக்கமுடியாத நிலையில் இருந்தார் அதன்காரணமாக ஊர்மக்கள் அனைவருக்கும் தேவையான காலணி அவரால் உருவாக்கமுடியாததால் மக்கள்அனைவரும் தத்தமது கால்களில் காலணி அணிந்திடாமல் நடப்பதற்கு சிரமபட்டனர் இவ்வாறே பெற்றோர்கள் ,ஆசிரியர்கள், தலைவர்கள் ,அரசாள்பவர்கள் ஆகியோர் முதலில் தங்களுடைய உடல்நலனை சரியாக பராமரித்துவந்தால்தான் மற்றவர்களுக்கு உதவமுடியும் என்ற அடிப்படை செய்தியை தெரிந்து அதன்படி செயல்படுவது நல்லது என அறிவுறுத்தபடுகின்றது

சனி, 9 ஜூலை, 2016

உணவகத்தில் ஒரு வயதான தந்தையும் அவருடைய மகனும்


ஒரு வயதான தந்தையும் அவருடைய மகனும் நகரத்தில் இருந்த பிரபலமான உணவகத்திற்கு உணவு உண்பதற்காக சென்றமர்ந்தனர் அந்த வயதான தந்தை மிகவும் நலிவுற்று மெலிவுற்று இருந்தார் தொடர்ந்து அவ்விருவருக்கும் தேவையான உணவுவகைகள் பரிமாற பட்டு உண்ண ஆரம்பித்தனர் வயதான தந்தை உண்ணும்போது அவருடைய உடையிலும் இலையை சுற்றியும் இரைத்துகொண்டும் சிந்தி கொண்டும் உண்டார் அதனால் அந்த உணவகத்தில் உணவு உண்ண வந்தவர்கள் அனைவரும் இந்த வயதான தந்தை உணவு உண்ணுவதை மிக அருவருப்பாக பார்த்துகொண்டிருந்தனர் இது அவருடைய மகனுக்கு மிக இக்கட்டண நிலையாகிவிட்டது இருந்தபோதிலும் வாய்திறக்காமல் அமைதியாக தன்னுடைய தந்தை உணவு உண்ணுவதற்கு தேவையான உதவியை மட்டும்செய்து வந்தான் அதனை தொடர்ந்து அவ்விருவரும் உணவு உண்டபின்னர் அந்த மகன் தன்னுடைய தந்தையை கைகழுவுமிடத்திற்கு கைத்தாங்கலாக பிடித்து அழைத்து சென்று சிந்திய அனைத்தையும் கழுவி சுத்தம் செய்து திரும்பியபின் உணவிற்கான தொகையை வழங்கியபிறகு தன்னுடைய தந்தை கைபிடித்து அழைத்து கொண்டு உணவகத்தின் வாயிலை நெருங்கினான் அப்போது வயதான தந்தையானவர் தம்பி உணவகத்தில் ஏதாவது விட்டுவிட்டு வந்தாயா என வினவியபோது மகன் ஒன்றும் விட்டுவிடவில்லை அப்பா என்றான் இல்லை தம்பி ஏதோ உணவகத்தில் விட்டுவிட்டவந்தது போன்று தெரிகின்றது என மீண்டும் அந்த வயதான தந்தை கூறியவுடன் மகன் அவர்களிருவரும் உணவுஉண்டஇடத்தை மீண்டும் திரும்பி பார்த்து விட்டு ஒன்றும் இல்லை அப்பா என பதில் கூறினான் இல்லை தம்பி பல்வேறு மக்களும் நடமாடும் பொது இடங்களில் ஒவ்வொரு மகனும் தன்னுடைய வயதான தந்தைக்கு எவ்வாறு பணிவிடை செய்வது பராமரிப்பது அறிவுரையை இந்த உணவகத்தில் விட்டிட்டு வந்துள்ளாய் தம்பி எனக்கூறியவுடன் அந்த உணவகத்தில் இருந்த அனைவரும் தத்தமது செயலை அப்படியே பாதியில் விட்டிட்டு அமைதியாக அவ்விருவரையும் மிக ஆவலோடு பார்த்து விடைகொடுத்து அனுப்பினர்

நீதி வயதானவர்களுக்கு தேவையான உதவியை செய்வது இளையோர்களின் அடிப்படை கடமையாகும்

ஞாயிறு, 3 ஜூலை, 2016

பொறியாளர் மருத்துவர் போலி மருத்துவரா


தமிழ்நாட்டில் தற்போது ஒவ்வொரு வீட்டிலும் இரண்டுமூன்று BEபடித்த பொறியாளர்களாகவது கண்டிப்பாக இருப்பார்கள் அதாவது தடுக்கிவிழுந்தால் ஏதாவதொரு BEபடித்த பொறியாளர்மீதுதான் விழவேண்டும் என்றநிலையில் ஏராளமான பொறியியல் படித்துவேலைகிடைக்காமல் இருப்பது அனைவரும் அறிந்ததே

இவ்வாறான நிலையில் BEபடித்த பொறியாளர் ஒருவருக்கு எந்தவொரு பணியும் கிடைக்காததால் தீவிரமாக யோசித்து மருத்தவர்கள் போன்று மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகூறுவதற்கும் மருத்துவசிகிச்சை செய்வதற்குமான சிறிய அளவு மருத்துவமனை ஒன்றினை ஆரம்பித்தார் இந்த மருத்துவமனை வாயிலில் எந்தவொரு நபருக்கும் தேவையான மருத்துவ சிகிச்சை அல்லது மருத்துவ ஆலோசனை கட்டணமாக ரூபாய் 300/- மட்டும் செலுத்தினால் போதும் ஒருவேளை எங்களுடைய மருத்துவசிகிச்சையால் நோயாளிக்கு நோய் சரியாக வில்லை எனில் அந்தநோயாளிக்கு மட்டும் நட்டஈடாக ரூபாய் 1000/- திரும்ப வழங்கப்படும் என்ற அறிவிப்பு பலகை தொங்கவிடப்பட்டிருந்தது

இந்த அறிவிப்பினால் BEபடித்த பொறியாளர் ஆரம்பித்த சிறுமருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டம் எக்கச்சக்கமாக ஆகிவிட்டது அதனால் போக்குவரத்தினை கட்டுபடுத்துவதற்காக தனியான காவலர் ஒருவர் பணிபுரியுமாறு ஆகிவிட்டது

ஆனால் அதேஊரில் MBBSபடித்த மருத்துவரின் மருத்துவமனை ஒன்றும் இருந்தது. அங்கு நோயாளிகள் ஒருசிலர் மட்டும் மருத்துவம் செய்துகொள்வதற்கு வந்து சென்றதால் அந்த மருத்துவர் ஈ ஓட்டிக்கொண்டிருந்தார் அதனால் இந்த மருத்துவர் புதிய மருத்துவமனையின் பொறியியல் மருத்துவர் நம்மை போன்று MBBSபடித்து மருத்துவராக செயல்படவில்லை

அதனால் நாம் ஒரு புறநோயாளியாக சென்று சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என நிரூபித்து ரூபாய் 1000/ ஆவது இன்றைய வருமானமாக ஈட்டலாம் என முடிவுசெய்து அந்த புதிய மருத்துவமனைக்கு மருத்துவர் சென்று ஐயா என்னுடைய நாக்கு உணர்வில்லாமல் போய்விட்டதால் சாப்பாடே சரியாக சாப்பிடமுடியவில்லை எனக்கூறினார்

உடன் புதிய மருத்துவமனையின் பொறியாளர் மருத்துவர் தன்னுடைய உதவியாளரிடம் அம்மா பெட்டிஎண் 12 இல் உள்ள சொட்டு மருந்தினை கொண்டுவந்து இந்த நோயாளியின் நாக்கில் மூன்று சொட்டு விடுக என உத்திரவிட்டார்

உடன் அவருடைய பெண் உதவியாளரும் பெட்டிஎண் 12 இல் உள்ள சொட்டு மருந்தினை கொண்டுவந்து நோயாளியின் நாக்கில் மூன்று சொட்டு விட்டார் உடன் மருத்துவ நோயாளியானவர் ஐயா இது டீசல் ஆயிற்றே இதனை என்னுடைய நாக்கில் மூன்று சொட்டு விடக்கூறுகின்றீர்களே என விவாதம் செய்யஆரம்பித்ததும்

பொறியாளர் மருத்துவர் ரொம்ப நல்லது ஐயா உங்களுடைய நாக்கு சுவையறிய துவங்கிவிட்டது எங்களுடைய மருத்தவசிகிச்சையால் உங்களுடைய நோய் சரியாகிவிட்டது அதனால் நாங்கள் அறிவிப்பு செய்தவாறு மருத்துவ கட்டணமாகரூபாய் 300/- உடன் செலுத்துக எனக்கோரி பெற்றுகொண்டார்

இதனால் உண்மையான மருத்துவருக்கு மிக அவமானமாக போய்விட்டது மனதிற்குள் அப்படியா செய்தி நீ ஒரு போலியான மருத்துவர் எனஅடுத்தமுறை நிரூபிக்கின்றேன என க்கருவிக்கொண்டு தன்னுடைய மருத்துவமனைக்கு வந்துசேர்ந்தார்

மீண்டும் ஒருவாரம் கழித்து அதேபுதிய மருத்துவமனைக்கு ஏற்கனவே மருத்துவராக இருப்பவர் வந்து சேர்ந்து ஐயா எனக்கு ஞாபகமறதி அதிகமாகிவிட்டது அதனால் என்னால் எந்தவொரு செய்தியையும் நினைவுகொள்ள முடியவில்லை என கூறினார்

உடன் புதிய மருத்துவமனையின் பொறியாளர் மருத்துவர் தன்னுடைய உதவியாளரிடம் அம்மா பெட்டிஎண் 12 இல் உள்ள மருந்தினை கொண்டுவந்து இந்த நோயாளியின் நாக்கில் மூன்று சொட்டு விடுக என உத்திரவிட்டார்

உடன் அவருடைய பெண் உதவியாளர் பெட்டிஎண் 12 இல் உள்ள மருந்தினை கொண்டுவந்து நோயாளியின் நாக்கில் மூன்று சொட்டு விட்டார் உடன் மருத்துவ நோயாளியானவர் ஐயா இது நாக்கு சுவை அறிவதற்கான மருந்து ஆயிற்றே இதனை என்னுடைய நாக்கில் மூன்று சொட்டு விடக்கூறுகின்றீர்களே என விவாதம் செய்யஆரம்பித்தார்

பொறியாளர் மருத்துவர் ரொம்ப நல்லது ஐயா உங்களுடைய நினைவு திரும்பிவிட்டது எங்களுடைய மருத்துவசிகிச்சையால் உங்களுடைய நோய் சரியாகிவிட்டது அதனால் நாங்கள் அறிவிப்பு செய்தவாறு மருத்துவ கட்டணமாகரூபாய் 300/- உடன் செலுத்துக எனக்கோரி பெற்றுகொண்டார்

ஏற்கனவே மருத்துவராக இருப்பவர் சே என்னடாஇது இந்தமுறையும் இந்த பொறியாளர் மருத்துவரை போலியானமருத்துவர் என நிரூபிக்கவும் முடியவில்லை ரூபாய் 1000/- வருமான மாக பெறவும்முடியவில்லை இருக்கட்டும் அடுத்தமுறை கண்டிப்பாக நிரூபித்துவிடலாம் என கருவிக்கொண்டு சென்றார்

ஒருவாரம் கழித்து அதேபுதிய மருத்துவமனைக்கு ஏற்கனவே மருத்துவராக இருப்பவர் வந்து சேர்ந்து ஐயா என்னுடைய கண்பார்வை மங்கியவாறு இருக்கின்றது நல்ல கண்பார்வை எனக்கு வருவதற்கான சிகிச்சை அளித்திடுங்கள் எனக்கூறினார் உடன் பொறியாளர் மருத்துவர் என்னை மன்னித்துவிடுங்கள் உங்களுடைய நோயை என்னால் சரிசெய்யமுடியவில்லை இந்தாருங்கள் நாங்கள் அறிவிப்பு செய்தவாறு ரூபாய் 1000/- பெற்றுக்கொள்க என பணத்தை வழங்கினார் உடன் மருத்துவ நோயாளியானவர் என்ன ஐயா ரூபாய் 500/-க்கான ரூபாய் தாளினைஐ கொடுத்து விட்டு ரூபாய் 1000/- பெற்றுக்கொள்க எனக்கூறுகின்றீர் என வினவினார்

உடன் பொறியாளர் மருத்துவர் ரொம்பநல்லது ஐயா உங்களுடைய பார்வைகுறைபாடு எனும் நோயானது எங்களுடைய மருத்துவசிகிச்சையால் சரியாகிவிட்டது அதனால் நாங்கள் அறிவிப்பு செய்தவாறு மருத்துவ கட்டணமாகரூபாய் 300/- உடன் செலுத்துக எனக்கோரி பெற்றுகொண்டார்

சேஎன்னடாஇது பொறியாளர் மருத்துவரை போலியான மருத்துவர் என நீரூபித்து விடலாம் நமக்கும் வருமானமாக ரூபாய் 1000/- பெற்றுக்கொள்ளலாம் என எத்தனைமுறை முயற்சிசெய்தாலும் முடியவில்லையே என ஏற்கனவே மருத்துவமனை நடத்தும் மருத்துவர் புதிய பொறியாளரின் மருத்துவமனை பக்கமே திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டார்

வெள்ளி, 24 ஜூன், 2016

பெற்றோர்கள் அழியக்கூடிய பெருஞ்செல்வத்தை நமக்காக சேர்த்து வைக்கவில்லை என அவர்களை மதிக்காமல் அவர்களுடைய வழ்க்கைமுறைகளே நமக்கு வழிகாட்டி என உறுதி கொண்டு வாழந்திடுக


தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஒருவர் தான் வாழ்வதாற்கான வீடுகூட மாடிவீடாக இல்லாமல் சாதாரன கூறைவீட்டில் தன்னுடைய இறுதிகாலத்தில் வாழ்ந்து வந்தார் தன்னுடை ய மகனுக்கு செல்வும் எதுவும் சம்பாதித்து வைத்திடாமல் நல்ல கல்வியைமட்டும் வழங்கிஇருந்தார் அவருடைய மகன் இன்னும் எந்தபணிக்கும் செல்லாமல் வேலைவெட்டியில்லாது இருந்தான்

அவர் தன்னுடைய வாழ்வின் கடைசி பயனத்தை துவங்கவிருந்தநிலையில் தன்னுடைய மகனை அருகில் அழைத்து தம்பி நீ உன்னுடைய வாழ்வில் என்னை போன்று நல்லவனாக வல்லவனாக நேர்மையானவனாக நான் வாழ்ந்தவாறு வாழ்ந்து வரவேண்டும்என அறிவுரைகூறினார்

உடன் அவருடைய மகன் போ அப்பா உங்களை மாதிரி வாழ்ந்தால் வாழ்க்கையை வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் அடுத்தவேளை உணவிற்கு என்னசெய்வது என்ற இக்கட்டான நிலையில் தான் வாழவேண்டியிருக்கும் என மறுத்து கூறினான்

சரி தம்பி உன்விருப்பம் எப்போதும் நான் கூறியதை மனதில் கொண்டு வாழ்ந்தால் போதும் எனக்கூறியபின்னர் அவருடைய உயிர் பிரிந்தது

அதன்பின்னர் அவருடைய மகன் மிக சிரமமபட்டு அவரை அடக்கம் செய்து இறுதிசடங்கெல்லாம் செய்து முடித்தான் பிறகு சிறிது நாள் கழித்து ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கிளைமேலாளர் பணியில் சேருவதற்கான நேர்முக தேர்வு கடிதம் கிடைக்கபெற்று அதில் கலந்து கொண்டான் ஆனால் அந்த நிறுவனமோ வேறு ஒருநபரை கிளைமேலாளராக பணிநியமனம் செய்வதற்கு ஏற்கனவே முடிவுசெய்து விட்டு ஒரு வழக்கமான நடைமுறைக்காக அவனுக்கும் சேர்த்து நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள கடிதம் அனுப்பியிருந்தது

நேர்முகத்தேர்வின்போது அந்த நேர்முகத்தேர்வு குழுவின் தலைவர் இவனுடைய பெயரையும் இவனுடைய தந்தையின் பெயரையும் கேட்டார் இவன் தன்னுடைய பெயரையும் தன்னுடைய தகப்பனாரின் பெயரையும் கூறியவுடன் அவருக்கு மிக ஆச்சரியமாகவிட்டது அதனால் அவனுடைய தந்தையின் பெயரை கூறி அவருடையு மகனா பரவாயில்லையே நல்லவனாகத்தான் இருப்பாய் இந்த பணிக்கு பொருத்தமானவன்தான் நீ

நான் இந்த நிலைக்கு வருவதற்கு காரணமே அவனுடைய அப்பாதான் காரணம்என்றும் அதற்காக எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் செய்தார் என்றும் அவருடைய முகவரி போன்ற விவரம் எதுவும் தனக்குதெரியாது என்றும் அவர் தனக்கு செய்த உதவிக்கு கைமாறாக உடன் அவனை இப்போதே கிளைமேலாளராக நியமனம் செய்யவிருப்பதாகவும் தற்போது அவனுடைய அப்பா எவ்வாறு இருக்கின்றார் என வினவியபோது அவன் கண்களில் கண்ணீர் கசிய ஆரம்பித்தது தொடர்ந்து அவனுடைய அப்பா இறந்து விட்டார் என க்கூறினான்

உடன் தேர்வு குழு உறுப்பினர்கள் அனைவரும் அவருடைய தந்தை இறந்ததற்காக ஓரிரு நிமிடம் மவுனஅஞ்சலி செலுத்தினர் அதனைதொடர்ந்து அவனுக்கு கிளைமேலாளர் பதவிக்கான பணிஆணையை உடன் வழங்கி அன்றே பணியில் சேருமாறு அறிவுறுத்தினர்

அவன் அப்பா உங்களுடைய பேரும் புகழையும் மதிக்காமல் பணம் மட்டுமே பெரியதாக எண்ணி அதை சேர்த்து வைக்காமல் விட்டதை மிகமரியாதை குறைவாக உங்களிடம் இறக்கும் தறுவாயில் நடந்துகொண்டேனே என அழுது புலம்பினான்

பின்னர் பதவியேற்று புதிய வீடுகட்டி குடிபுகுமுன் தன்னுடைய விட்டின் நுழைவு வாயிலில் அவருடைய உருவப்படத்தையும் அவருடையமுக்கியமா னஅறிவுரைகளையும் வைத்து வாழ்ந்துவந்தான்

நீதி பெற்றோர்கள் அழியக்கூடிய பெருஞ்செல்வத்தை நமக்காக சேர்த்து வைக்கவில்லை என அவர்களை மதிக்காமல் துச்சமாக எடுத்தெறிந்து பேசாமல் அவர்களுடைய வழ்க்கைமுறைகளே நமக்கு வழிகாட்டி என உறுதி கொண்டு நாமும் வாழ்ந்திடுவோம்

திங்கள், 20 ஜூன், 2016

அனைவரையும் சமமாக மதித்து நடத்துவதே சரியான செயலாகும்


. என்னுடைய நண்பர் ஒரு நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக இருந்தார் அவருடைய அலுவலகத்தில் வரவேற்பறையில் பணிபுரிபவர் அந்த நிறுவனத்தின் சாதாரன ஊழியர் ஆவார் ஒருசமயம் அந்த நண்பர் வரவேற்பு அறையை பார்வையிட்டு ஆய்வு செய்து கொண்டிருந்தார் அந்த ஊழியர் எழுந்து நின்று தேவையான ஆவணங்களை எடுத்து காண்பித்து கொண்டும் தேவையான விவரங்களையும் விளக்கங்களையும் கூறிக்கொண்டுமிருந்தார்

அப்போது வெளியிலிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது அந்த அழைப்பை அந்த வரவேற்பறை ஊழியர் ஏற்று பேசஆரம்பித்தார் உடன் எதிர்முனையில் இருப்பவர் இந்த நிறுவனத்திடமிருந்த பெறப்பட்ட பொருட்களில் குறைபாடு ஏதோ இருந்தது அதனால் இவர் சாதாரண ஊழியர் என்பதால் அவர்களுடைய நிறுவனத்தை பற்றியும் அவர்கள் உற்பத்தி செய்திடும் பொருட்களை பற்றியும் மிகவும் தரக்குறைவாகவும் அந்த ஊழியரையும் தரக்குறைவான சொற்களால் திட்டிகொண்டிருந்தார்

அதனை தொடர்ந்து நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் அந்த தொலை பேசியை வாங்கி தான் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் என்றும் எதிர்முனையில் இருப்பவரின் குறை என்னவென கூறினால் உடன் அதனை சரிசெய்வதாகவும் கூறியவுடன் எதிர்முனையில் இதுவரை கோபமாக திட்டிகொண்டிருந்தவர் அமைதியாக அதெல்லாம் ஒன்றுமில்லை ஐயா உங்கள் நிறுவனத்தில் இருந்து அனுப்பட்ட பொருளில் சிறிய குறைபாடு உள்ள து அதனை சரிசெய்து கொடுத்தால் போதும் என கூறினார் உடன் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரும் சரிசெய்துவிடுவதாக பதில் கூறி தொலைபேசியை வைத்தார்

நீதி நம்முடைய சமூக அமைப்பில் நாம் கீழ்நிலையில் உள்ளவர்கள் எனில் அவர்களை தரக்குறைவாக பேசவும் நடத்தவும் செய்கின்றோம் அதே உயர்நிலையில் இருப்பவர்கள் எனில் தவறு அவர்மீது இருந்தாலும் அதனை அப்படியே தவறே இல்லை என்றவாறு விட்டுவிடுகின்றோம் இது தவறான முன்னுதாரணமாகும் இந்த உலகில் பிறந்த நாம் அனைவரும் சமமே அதனால் நாம் அனைவரையும் சமமாக மதித்து நடத்துவதே சரியான செயலாகும்

புதன், 15 ஜூன், 2016

உடைமையை பொருத்தே நம்முடைய மனம் அந்த பொருளிற்கான பதில் செயல்களை உருவாக்குகின்றது


ஒரு ஊரில் வாழும் மனிதன் ஒருவன் சிறிதுகாலம் வெளியூர் சென்று வந்தான் அவனுடைய ஊரை நெருங்கும்போது வீடு ஒன்று பயங்கரமாக தீபிடித்து எரிவதை பார்த்தான் அந்த ஊர் மக்கள் அனைவரும் கும்பலாக அங்குவந்து தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்

அந்த மனிதன் எரியும் வீட்டின் அருகில் சென்று சேரும்போதுதான்அது தன்னுடைய வீடு என தெரியவந்தது. அதனால் பதைபதைப்புடன் அந்தவீட்டில் பிடித்திருந்த தீயை அணைக்கலாம் எனஓடினான் ஆயினும் யாரும் அருகிலேயே நெருங்கமுடியவில்லை அந்த அளவிற்கு தீயானது கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது அந்த வீட்டிலிருந்து ஒரு பொருள்கூட மீட்க முடியாத நிலையில் தீஎரிந்து கொண்டிருந்தது

அவனுடைய முன்னோர்கள் அந்த மனிதனுக்காக உருவாக்கிய அருமையான வீடாகும் அதனால் ஐயோ வீடு வீட்டில்உள்ள பொருள் அனைத்தும் வீணாகி போய்விட்டதே என அழுதுபுரண்டு தலையில் கைவைத்துகொண்டு தரையில் அப்படியே அமர்ந்து விட்டான்

அந்த நேரத்தில் அவனுடைய மகன்ஒருவன் ஒடிவந்து அப்பா கவலைபடாதீர்கள் நீங்கள் ஊருக்கு போனபோது உங்களை எதிர்பார்த்திடாமல் நாம் எதிர்பார்த்ததைவிட நான்கு மடங்கு விலைக்கு நம்முடைய வீட்டினை விற்றேன் என க்கூறினான் இந்த செய்தியை கேட்டவுடன் அந்த மனிதன் அழுது புலம்புவதை விட்டிட்டு யாருடைய வீடோ எரிகின்றது என சிரித்து கொண்டு வேடிக்கை பார்த்திட ஆரம்பித்தான்

சிறிதுநேரம் கழித்து அந்த மனிதனுடைய இரண்டாவது மகன் வந்து அப்பா அண்ணன் நம்முடைய வீட்டினை விற்பதற்கு ஒப்பந்தம் மட்டும் செய்துகொண்டு முன்பணம் பெற்று கொண்டிருந்தார் அதனை தொடர்ந்து நாம் விற்பனையை செய்தால் மட்டுமே வீடு பெறுபவருக்கு சொந்தமாகும் இந்த வீடு தற்போது நம்முடைய உடைமைதான் எனக்கூறினான்

இதைக்கேட்டவுடன் அந்த மனிதனுக்கு இதயவலி ஏற்பட்டுது அதனால் அப்படியே நின்றிருந்த வாரே கீழே சாய ஆரம்பித்தான் உடனிருந்தவர்களும் அந்த மனிதனுடைய மகன்களும் அவரை கைதாங்கலாக பிடித்து அமரவைத்து குடிப்பதற்கு சிறிது குடிநீர் அந்த மனிதனுக்கு கொடுத்து குடிக்கசெய்து சமநிலை படுத்திகொண்டிருந்தனர்

வீட்டின் தீ மிகவும் அதிகஅளவு கொழுந்து விட்டுதொடர்ந்து எரிந்து் கொண்டிருந்தது ஊர் பொதுமக்கள் யாருடைய வீடோ எரிகின்றது என தூரத்தில் இருந்தனர்

அதன்பின்னர் சிறிதுநேரம் கழித்து அந்த மனிதனுடைய மூன்றாவது மகன் வந்து அப்பா வீடு எரிந்த சாம்பல் ஆனாலும் பரவாயில்லை ஒப்பந்தம் செய்தவாறு முன்பணம் போக மிகுதி தொகையை கண்டிப்பாக வழங்குவதாக ஒப்பந்ததாரர் கூறுகின்றார் என க்கூறியதும் உடன் தெம்புடன் தரையில் அமர்ந்திருந்த நிலையிலிருந்து எழுந்து யாருடைய வீடோ யாருடைய பொருட்களோ முழுவதும் எரிந்து சாம்பலாகின்றன என சிரித்துகொண்டே பொதுமக்களோடு சேர்ந்து வீடு எரிந்து சாம்பலாவதை வேடிக்க பார்த்திட ஆரம்பித்தான்

நீதி.எந்த வொரு பொருளும் நம்முடைய உடைமை யெனில் அதனை நாம் மிகஅதிக அக்கறையோடு கவணிப்போம் மற்றர்களின் உடைமையெனில் அலட்சியமாக கவணிப்போம் ஆயினும் இரண்டு நிலையிலும் பொருளும் அதன் தன்மையும் மாறாதது ஆகும் அதன் உடைமையை பொருத்தே நம்முடைய மனம் அந்த பொருளிற்கான பதில் செயல்களை உருவாக்குகின்றது

சனி, 28 மே, 2016

புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் வாழ்வின் ஒருநாளின் நிகழ்வு


ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒருமுறை தான் பணிபுரிந்த நகரத்திலிருந்து புறப்பட்ட தொடர்வண்டிஒன்றில் பயனம் செய்துகொண்டிருந்தார் அப்போது அந்த தொடர்வண்டியின் பயனச்சீட்டு பரிசோதகர் ஒருவர் வந்து அனைவரிடமும் உள்ள பயனச்சீட்டுகளை சரிபார்த்து கொண்டு வந்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் அவருடைய மேல்சட்டைப்பையில் கைவிட்டுபார்த்தார்அவருடைய பயனச்சீட்டு கிடைக்கவில்லை பின்னர் அவருடைய முழுக்கால் சட்டைபையில் கைவிட்டு துழாவிபார்த்தார் அங்கும் அவருடைய பயனச்சீட்டு கிடைக்கவில்லை அதன்பின்னர் தான் கையில் எடுத்துவந்த கைபெட்டியை திறந்து முழுவதும் தேடிபார்த்தார் அதிலும் அவருடைய பயனச்சீட்டு கிடைக்கவில்லை அதனால் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பரபரப்பாக மீண்டும் மீண்டும் தன்னுடைய பயனச்சீட்டை தேடிக்கொண்டேயிருந்தார் அதனை தொடர்ந்து அவரிடம் வந்த பயனச்சீட்டு பரிசோதகர் “ஐயா தாங்கள் யார் தாங்கள் எவ்வளவு புகழ்பெற்ற அறிவியல் மேதை தாங்கள் பயனச்சீட்டு இல்லாமல் பயனம் செய்யமாட்டீர்கள் என எனக்கு மட்டுமல்லாது இங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும் அதனால் கவலைப்படாமல் வைத்த இடத்தில் பயனச்சீட்டு இல்லையே என பதட்டப்படாமல் பயனம் செய்யுங்கள் ஐயா” என கூறியபோது “அதற்காக நான் கவலைபடவில்லை தம்பி நான் எந்த ஊருக்கு பயனம் செய்கின்றேன் என்பதை அந்த பயனச்சீட்டை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம் என தேடுகின்றேன்” எனதேடிக்கொண்டிருந்தார்

பெரியோர்கள் கூறுகின்ற அனுபவங்களை பின்பற்றி பாதுகாப்பாக வாழ்க


ஒருகாட்டில் பல குட்டிகளைப் பெற்ற பெண்முயல் ஒன்று இருந்தது. அதுஒரு நல்ல தாயாக, நாள்முழுவதும் தன்னுடைய குட்டிகளிடம் எந்தெந்த மூலிகை செடிகளின் தழைகளை உண்ணவேண்டும் எந்தெந்த செடிகளின் தழைகளை தவிர்க்கவேண்டும் எவ்வெப்போது தங்களுடைய வாழும் வலையிலிருந்து வெளியில் செல்லவேண்டும் எவ்வெப்போது வெளியில் செல்லக்கூடாது அவைகளைவிட மிகமுக்கியமாக வேட்டைக்காரர்கள் நம்மை வேட்டையாட வரும் நாட்களில் கண்டிப்பாக அதனை அறிந்து நம்மை காத்துகொள்ளவேண்டும் என சிறந்த அறிவுரைகளை கூறிக்கொண்டே இருக்கும் அப்போது “மனிதர்கள்போன்று நமக்குத்தான் செய்திதாட்கள் எதுவும் கிடையாதே அதனால் வேட்டைக்காரர்கள் நம்மை வேட்டையாட வரும் நாட்கள் எவையென நமக்கு எப்போது தெரியவரும்” என அந்த தாயிடம் குட்டிஒன்று கேட்டது “ பொதுவாக வெடிச்சத்தம் கேட்கும் அதனை தொடர்ந்து வேட்டைநாய்கள் குரைத்து கொண்டு ஓடிவரும் சத்தம் கேட்கும் இவைகளை வெகுதூரத்தில் கேட்டவுடன் நம்முடைய வலைக்குள் நாம்பாதுகாப்பாக வந்து புகுந்து கொள்ளவேண்டும்” எனக்கூறியது தாய்முயல்.

இவ்வாறானஎச்சரிக்கை அறிவுரை கூறியதை கேட்டுகொண்டிருந்த குட்டிஒன்று ஒருநாள் வெளியில் இரைதேட சென்றது அப்போது வேட்டு சத்தம் டமால் டுமீல் எனக்கேட்டதும் பதறியடித்துகொண்டு ஓடிவந்து தங்களுடைய தாயிடம் “அம்மா வெகுதூரத்தில் வேட்டுசத்தம் கேட்கின்றது வேட்டைக்காரர்கள் நம்மை வேட்டையாட வருகின்றார்கள்” என மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குமாறு கூறியது

“அடடா குட்டிகளா அது வேட்டைக்காரர்களின் வேட்டைத்துப்பாக்கியின் சத்தமல்ல நம்முடைய காட்டிற்கு அருகில் வாழும் மக்கள் தங்களுடைய திருவிழாவிற்காக வெடித்துமகிழும் வெடிச்சத்தமாகும் அதனை தொடர்ந்து இனியப் பாடல்களின் இசைகளையும் இசைக்கருவிகளின் முழக்கத்தையும் கேட்கின்றது பாருங்கள்” என அமைதிபடுத்தியது

அதேபோன்று வேறொரு நாள் அந்த காட்டில் தாய்முயலும் அதனுடைய குட்டிகளும் சேர்ந்த குடும்ப உறப்பினர்கள் அனைவரும் இரை தேடிக் கொண்டிருந்தனர் அப்போது அருமையான இசைக்கருவிகளலான இனிய இசை முழக்கத்தை கேட்டன குட்டிகள் அதைபோன்ற இசையை நம்முடைய வாழ்நாளில் கேட்டதே இல்லை என மயங்கிகேட்டுக்கொண்டிருந்தன இருந்தபோதிலும் தாய்முயலானது “குட்டிகளே உடன் நாம் அனைவரும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் நம்முடைய வலைக்கு செல்வதுதான் நமக்கு பாதுகாப்பு வாருங்கள்” என கூறி குட்டிகளை பாதுகாப்பாக தாய்முயல் அழைத்து சென்றது அப்போது குட்டிமுயல்ஒன்று “அம்மா அம்மா இந்த இசை நன்றாகத்தானே இருக்கின்றது இதனால் நமக்கு ஆபத்து எப்படி வரும்” என கேள்விகேட்டது உடன் தாய்முயல் “குட்டிகளே பாம்பாட்டி போன்று இந்த வேட்டைக்காரர்கள் தங்களுடைய இசைகருவிகளில் அருமையான இசையை இசைத்து கொண்டு வருவார்கள் நாமும் மயங்கி இவர்களிடம் மாட்டிகொள்வோம்” என கூறியது. மற்றொருநாளில் ஒருசிலர் கைகளில் துப்பாக்கி ஏந்தி காட்டில் சுற்றிவந்துகொண்டிருந்தனர் “அம்மா அம்மா துப்பாக்கி ஏந்திய நபர்கள் நம்மை வேட்டையாட சென்று கொண்டிருக் கின்றார்கள் அதனால் நாம் நம்முடைய வலைக்கு செல்வோம்” என்றது ஒருகுட்டி. அதனை தொடர்ந்து“குட்டிகளே அவர்கள் காட்டின் பாதுகாவலர்கள் யாரும் காட்டில் அனுமதியின்றி காட்டிலுள்ள இயற்கை பொருட்களை திருடிசெல்லாமல் அவர்கள் பாதுகாப்பதற்காக அவ்வாறு சுற்றிவந்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் நம்மை ஒன்றும் செய்யமாட்டார்கள்” எனத்தாய் முயல்கூறியது

ஆம் இதேபோன்றே நாமும் நம்முடைய வாழ்க்கையின் ஓட்டத்தில் பாதுகாப்பான நிகழ்வுகள் எவை பாதுகாப்பற்ற நிகழ்வுகள் எவையென நம்முடைய பெரியோர்கள் கூறுகின்ற அனுபவங்களை நாமும் பின்பற்றி பாதுகாப்பாக வாழமுயலுவோம்

ஞாயிறு, 15 மே, 2016

பெற்றோர்கள் மீது பிள்ளைகளுக்கு ஏற்படும் குருட்டுத்தனமான கோபம்


ஒருநாள்என்னுடைய பெற்றோர்களான தந்தையின் மீதும் தாயின்மீதும் எனக்கு அளவற்ற கோபம் வந்தது அதனால் இந்த வீட்டில் இனிமேல் அவர்களுடன் வாழ்வது இல்லை என முடிவுசெய்து வீட்டைவிட்டு வெளியில் கிளம்பலாம் என முடிவுசெய்தேன் ஏனெனில் நான் பொறியியாளர் கல்வியை பயின்று முடித்துவிட்டேன் ஒரு பொறியாளர் எனில் பல இடங்களுக்கு சென்று பார்வையிடவேண்டாமா அவ்வாறு பலஇடங்களுக்கு செல்வதற்கு ஒரு இருசக்கர வாகணம் கோரினால் அதனை இதுவரையில் வாங்கி கொடுக்காமல் இருக்கின்றனரே தங்களுடைய மகன் கோரிய சிறு கோரிக்கையை கூட நிறைவேற்றாத பெற்றொருடன் இனி இருப்பது சரியன்று வெளியே சென்று மிகப்பெரிய பணக்காரணாக மாறி அப்போது இந்த பெற்றொரை என்னிடம் ஓடிவர செய்கின்றேன் பார் என கருவிக்கொண்டு கிளம்ப ஆயத்தமானேன் ஆடைகளை எடுத்து உடுத்தி கொண்டு தந்தையுடைய இடுப்பு பட்டையை எடுத்து மாட்டிகொண்டு அவருடைய காலணியையைும் மாட்டிகொண்டு வெகுவேகமாக அருகிலிருந்த பேருந்த நிலையத்திற்கு சென்றேன் ஆனால் அன்று அங்கு பேருந்து ஒன்று கூட இல்லை கோபம் அவனுக்கு மேலும் அதிகமானது இந்த அரசு சரியாக பேருந்தை கூட இயக்கமாட்டேன் என்கின்றது சே இந்த நாட்டில் வாழ்ந்து என்ன புன்னியம் என சட்டை பையில் கைவைத்தபோது ஏதோவொருசில சீட்டுகள் தென்பட்டன அவைகளை எடுத்து பார்த்தபோது அதில் ஒன்று என்னுடைய தந்தை பணிபுரிந்த அலுவலகத்திலிருக்கும் கூட்டறவு கடன் சங்கத்தில் அவனுக்கு மடிக்கணினி வாங்குவதற்கான கடன்பெறும் சீட்டாகும் மற்றொரு சீட்டு தந்தையின் இருவசக்கர வாகணத்தை ஒப்படைப்பு செய்து அதற்கு பதிலாக அவனுக்கென புதிய இருசக்கர வாகணத்தை வாங்குவதற்கான அத்தாட்சியாகும் அதனை கண்ணுற்றவுடன் ‘அடடா நம்முடைய தந்தை நாம் கோரியவாறு புதிய இருசக்கர வண்டியை வாங்குவதற்கு போதிய பணம் இல்லாததால் தான் அலுவலகத்திற்கு செல்ல பயன்படுத்திடும் இருவசக்கர வாகணத்தை விற்றுவிட்டு அதற்கு பதிலாக கூடுதலாக செலவிட்டு எனக்கு புதிய இருசக்கர வாகணத்தை வாங்கிதர போகின்றாரா ஐயையோ அவரை தவறாக எண்ணிவிட்டேனே’ என கண்ணீருடன் அழுதுகொண்டு இந்த செயலை தடுக்கவேண்டும்எனவேகமாக வீடுவந்து சேர்ந்தேன் அங்கு அவனுடைய தந்தையையும் காணோம் அவருடைய இருசக்கர வாகணத்தையும் காணோம் அதனால் மிகவேமாக அவனுடைய தந்தை இருசக்கர வாகணத்தை மாற்றி வாங்க சென்றிருந்த கடைக்கு சென்ற “அப்பா என்னை மன்னித்துவிடுங்கள் நான் உங்களை தவறாக என்னிவிட்டேன் எனக்காகஎவ்வளவோ தியாகம் செய்துள்ளீர்கள் உங்களுடைய இருசக்கரவாகணத்தை விற்றுவிட்டு எனக்கு புதிய இருசக்கர வாகணத்தை வாங்கவேண்டாம்” என தடுத்து அவரை மெதுவாக வீட்டிற்கு அவருடைய இருசக்கரவாகணத்தில் வீடு கொண்டு வந்த சேர்த்தான் ஆம் பிள்ளைகள் தத்தமது பெற்றோர்களின் தியாகத்தை புரிந்துகொண்டு அதனை அங்கீகரித்து அவர்களை மதிப்புடன் நடத்தவேண்டியது ஒவ்வொரு பிள்ளையின் பொறுப்பாகும் என்ற செய்தியை தெரிந்துகொள்க

ஒரு வங்கியின் முதுநிலை மேலாளருக்கும் கிளைமேலாளருக்கும் இடையேயான அவ்வங்கியின் ஆய்வுகூட்டத்தினுடைய உரையாடல்


முமே: முடிந்த காலாண்டின் உங்களுடைய கிளையின் இலாபம் குறைந்துவிட்டது தெரியுமா வங்கிகிளையின் இலாப உயர்விற்கு பாடுபடாமல் என்னதான் வேலை பார்க்கின்றீர் கிமே: ஐயா நான் இந்த கிளையின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டுகொண்டுதான் இருக்கின்றேன் முமே: அப்படியா ஆனால் உங்களுடைய கிளைக்கு நிர்ணயக்கபட்ட இலக்கைதான் உன்னால் அடையமுடியவில்லை கிமே: ஐயா நான் இந்த காலாண்டின் ஆரம்பத்தில் எனக்கு கொடுத்த இலக்கை அடைவதற்காக கடுமையாக முயற்சி செய்துகொண்டிருந்தேன் முமே: ரொம்ப சரி அவ்வளவு கடுமையாக முயற்சிசெய்தும் ஏன் உனக்கு கொடுத்த இலக்கை உன்னால் அடையமுடியவில்லை கிமே: ஐயா வாடிக்கையாளர்களின் கடன்களுக்கான பரிந்துரை விண்ணப்பங்கள் வட்டார அலுவலகத்தினால் மறுத்தலிக்கபட்டது மேலும் வேறுசில வாடிக்கையாளர் கடன்விண்ணப்பங்களுக்கு தேவையான ஆதாரங்களை காண்பிக்குமாறு கேரி திருப்பிவிட்டேன் அதனால் அவர்கள் தங்களுடைய கடன்கோரிக்கையையே திரும்ப பெற்றுகொண்டார்கள். முமே:நீஉனக்கு கொடுத்த இலக்கை அடைவதற்காக கருத்தூன்றி பாடுபட்டிருந்தால் கண்டிப்பாக இலக்கை எட்டியிருப்பாய் கிமே: ஐயா அவ்வாறு அதனை சரிசெய்வதற்காக நான் முயன்று கொண்டிருந்தபோது வட்டார அலுவலகத்திலிருந்து சிறுவணிக கடன் வழங்கும் பணியின் இலக்கானது மற்ற வட்டார அலுவலகத்தைவிட கூடுதலாக அடையவேண்டும்என எனக்கு உத்திரவிட்டிருந்தார்கள் முமே: அதனால் நீ ஏராளமானஅளவில் சிறுவணிக கடன் வழங்கி கொடுத்த இலக்கை அடைந்துவிட்டாய் அல்லவா கிமே: இல்லை ஐயா நம்முடைய நாடுமுழுவதற்குமான ஆயுள்காப்பீட்டு திட்டத்தை மக்களுக்கு கொண்டுசேர்க்கவேண்டும் என்ற குறியீட்டை அடைவதற்கான பணியை செய்திடுமாறு அறிவுறுத்தினார்கள் முமே: மிகவும் சரியானது நீ ஆயுள்காப்பீட்டிற்காக உனக்கு கொடுத்த இலக்கை அடைந்துவிட்டாய் அல்லவா கிமே: இல்லை ஐயா இந்த சமயத்தில் வட்டார அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்தது அதில் கிளையில் வாடிக்கையாளராக இருக்கும் அனைவரை பற்றிய விவரங்களையும் தயார்செய்து நம்முடைய வாடிக்கையாளரை பற்றிய அனைத்து விவரங்களையும் நாங்கள் தெரிந்திருக்க வேண்டும்என கேட்டுக்கொள்ளபட்டேன் முமே: மிகவும் நன்று உன்னுடைய கிளையின் வாடிக்கையாளர் அனைவரை பற்றிய விவரமும் தொகுத்து தயாராக வைத்துள்ளாய் அல்லவா கிமே: இல்லை ஐயா இந்த சமயத்தில் வட்டார அலுவலகத்தில் இருந்து உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான ஆரோக்கிய காப்பீடு செய்திடுமாறு அறிவிப்பு வந்தவிட்டது அதனால் வாடிக்கையாளரை சந்தித்து அனைவரையும் இந்த உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான ஆரோக்கிய காப்பீடு செய்திடுமாறான பணியை செய்ய ஆரம்பித்தேன் . முமே: பரவாயில்லையே நீ வட்டார அலுவலகம் கோரியவாறு போதுமான உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான ஆரோக்கிய காப்பீடு இலக்கை எய்திவிட்டாய் அல்லவா கிமே: இல்லை ஐயா அதன்பின்னர் வட்டார அலுவகத்தில் இருந்து வராக்க கடன் எவ்வளவு அவற்றுள் தள்ளுபடி செய்வது எவ்வளவு என சரிபார்த்து கடனை வசூலிக்குமாறு அறிவுறுத்தபட்டேன் முமே: மிகவும் சரி போதுமானஅளவு அனைத்து கடன்களையும் வசூல் செய்துவிட்டாய் அல்லவா கிமே: இல்லை ஐயா அதற்குள் இந்த காலாண்டு முடிந்தவிட்டது நீங்களும் எங்களுடைய கிளைஅலுவக செயல்பாட்டினை ஆய்வு செய்திட அழைத்துவிட்டீர்கள் தற்போது உங்கள்முன் வந்து இருக்கின்றேன் நிருவாக மானது தம்கீழ் பணிபுரிபவர்களின் பணிக்கான இலக்கை நிர்ணயத்தபின் அதனை அவ்வப்போது உடனுக்குடன் வெவ்வேறு பணிகளுக்கான இலக்காக மாற்றி கொண்டிருந்தால் அவர்கள் அனைவரும் ஒரு வேலையும்செய்யாது நிறுவனத்தின் பணி நடைபெறாமல் தடுமாறி கொண்டிருக்கும் என்பது திண்ணம் குறிப்பு இங்கு முமே= முதுநிலை மேலாளர் கிமே=கிளைமேலாளர்

திங்கள், 9 மே, 2016

எந்தவொரு நிகழ்வையும் தீர விசாரித்து அறிவதே நல்லது


ஆறு,ஓடை ,கினறு போன்றவைகளில் காணப்படும் தவளையை பிடித்து எடுத்துவந்து ஒரு பாத்திரத்தில் இட்டு தண்ணீர் ஊற்றி அந்த பாத்திரத்தினை சூடேற்றிடுக அதனை தொடர்ந்து பாத்திரத்தில் உள்ள தண்ணீரின் வெப்பநிலை உயர உயர அதற்கேற்றவாறு அதில் நாம் கொண்டு வந்த இட்ட தவளையும் தன்னுடைய உடல் வெப்பநிலையை சரிசெய்து கொண்டு சமாளித்து நீந்திகொண்டிருக்கும் பாத்திரத்தில் உள்ள தண்ணீரின் வெப்பநிலையானது கொதிநிலைய அடையும்போது அதற்குமேல் அந்த தவளையால் தன்னுடைய உடல் வெப்பநிலையை சரிசெய்து வாழமுடியாத நிலை ஏற்படும் அதனால் அந்த தவளையானது பாத்திரத்தில் சூடான தண்ணீரில் இருந்து தப்பிக்கலாம் என தாவிகுதிக்க முயற்சிசெய்திடும் ஆனால் அந்த தவளையால் தாவிகுதித்து தப்பிக்கமுடியாது ஏனெனில் தவளையானது தன்னுடைய சக்தி முழுவதையும் பாத்திரத்தில் இருந்த தண்ணீரின் வெப்பநிலைக்கு ஏற்ப தன்னுடைய உடலின் வெப்பநிலை சரிசெய்து கொள்வதற்காகவே செலவிட்டுவிட்டது அதனால் அந்த தவளையால் பாத்திரத்திலிருந்து வெளியே தாவி குதித்து செல்வதற்கான சக்தி அதனிடம் காலியாகி விட்டதால் அப்படியே அந்தவளையானது கொதிக்கும் நீரில் இறந்து மிதக்கும்

உடன் நம்மில் பெரும்பாலானோர் சூடாக கொதிக்கும் தண்ணீர்தான் அந்த தவளையை கொன்றுவிட்டது எனமுடிவுசெய்திடுவோம் உண்மை அதுவன்று அந்தவளையானது தான் இருக்கும் சூழல் மாறுகின்றதே உடனே இந்த சூழலிலிருந்து தப்பித்துவிடுவோம் என ஆரம்பத்திலேயே முயற்சிசெய்திருந்தால் தப்பித்திருக்கலாம் ஆனால் அதற்கு பதிலாக சூழலிற்கு தக்கவாறு தன்னுடைய உடல்நிலையை தகவமைத்து கொள்வதற்காகவே தன்னுடைய சக்திமுழுவதும் செலவிட்டபின் சக்தியே இல்லாதுபோது அதற்கு மேலும் உடலை தகவமைத்து கொள்ளமுடியாத நிலையில் வெளியே தப்பிசெல்லவேண்டும் எனஅதற்காக முயலும்போது அந்ததவளையால் இயலவில்லை என்பதே எதார்த்தமான உண்மைநிலையாகும்

இவ்வாறே நாம் வாழும் இந்த சமூக சூழலில் எந்தவொரு நிகழ்விற்கு ஏற்பவும் நம்மை சரிசெய்து தகவமைத்து கொண்டு வாழத்தலைப்படு-வதற்காக நம்முடைய சக்தி, அறிவாற்றல் ஆகிய அனைத்தையும் செலவிட்டு அவைமுழுவதையும இழந்துவிடுகின்றோம் குறிப்பிட்ட நிலைக்குமேல் நம்மால் தகவமைத்து வாழ இயலாத சூழலில் தப்பிக்கமுடியாமல் நாம் வாழும் இந்த சமூக சூழலை குறைகூறி நம்முடைய வாழ்வை முடித்து கொள்கின்றோம் ஆயினும் மிகச்சரியாக நன்றாக நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ நினைப்பவன் எந்தெந்த சூழலில் சரிசெய்து தகவமைத்து வாழ்வது எந்தெந்த சூழலை தவிர்த்து தப்பித்து செல்வது என முடிவுசெய்தால் நிம்மதியாக மகிழ்ச்சியுடன் வாழமுடியும் என்ற செய்தியை மனதில் கொள்க

குழுவான நபர்கள் ஏன் சிரித்து பேசிக்கொண்டிருப்பார்கள் தெரியுமா


நான் ஒரு நகர்புறத்தில் இயந்திரமயமான வாழ்க்கையில் இருந்து வருவதால் அதிலிருந்து சிறிது உடலிற்கும் மனதிற்கும் ஒய்வு கொடுப்பதற்காக ஒவ்வொருவார இறுதியாக வரும் விடுமுறை நாளில் அந்த நகரத்தின் ஒரு ஓரத்தில் இருந்த பூங்காவிற்கு சென்று இயற்கை காற்றில் யோகா நடை,பயிற்சி போன்றவைகளோடு பொழுது போக்குவது வழக்கமாகும் அப்போது குழுவான நான்கைந்து பென்களும் அதே பூங்காவில் இருந்த உட்காரும் மேடையில் அமர்ந்துகொண்டு சிரித்து பேசி கொண்டு இருப்பது வழக்கமாகும்

இவ்வாறான சூழலில் அன்றுஒருநாள் நான் வழக்கமாக செல்லும் அந்த பூங்காவிற்கு சென்று என்னுடைய பயிற்சியில் ஈடுபட்டுவந்தேன் அதே பூங்காவில் அதே உட்காரும் மேடையில் வழக்கம்போன்று அதே நான்கைந்து பெண்கள் அமர்ந்திருந்தனர் ஆனால் மகிழ்ச்சியுடன் சிரித்து பேசிடாமல் மெளனமாக இருந்ததை கண்ணுற்ற என்னுடைய மனம் பொறுக்கமுடியாமல் அவர்களிடம் சென்று மன்னிக்கவும் ஒவ்வொரு வார இறுதிநாட்களில் நான் இந்த பூங்காவிற்கு வந்து யோகா நடைபயிற்சி போன்றவைகளை செய்துவருகின்றேன் அப்போதெல்லாம் நீங்கள்அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் சிரித்து பேசுவதை கண்டு வருவேன் ஆனால் இன்று நீங்கள் அனைவரும் அவ்வாறு ஏன் மகிழ்ச்சியாக சிரித்து பேசிடாமல் மெளனமாக அமர்ந்திருக்கின்றீர்கள் என தெரிந்துகொள்ளலாமா என வினவியவுடன் யாரும் பதில் பேசவில்லை மீண்டும் வற்புறுல்த்தியபின் ஒருநபர் மட்டும் எழுந்து கொஞ்சதூரம் தள்ளிவந்து மிகமெதுவான குரலில் அதுவா வழக்கமாக நாங்கள் நால்வர்மட்டுமே ஒவ்வொரு வாரமும் வருவோம் அதனால் மிகுதி வராத நபரைபற்றி கேலியும் கிண்டலுமாக பேசி மகிழ்வோம் ஆனால் இன்று ஐந்து பேரும் வந்துவிட்டோம் அதனால் யாரைபற்றி கேலியும் கிண்டலுமாக பேசிமகிழமுடியும் அதனால் தான் அமைதியாக உட்கார்ந்திருக்கின்றோம் என கூறி சென்றார்

திங்கள், 2 மே, 2016

பால் பண்ணை விவசாயிக்கும் ரொட்டி கடைகாரருக்கும் இடையே எழுந்த தகராறு


ஒருகிராமத்தில் வாழ்ந்துவந்த விவசாயி ஒருவர் தன்னுடைய பண்ணையில் இருந்து தினமும் அருகிலிருந்த நகரத்து ரொட்டி கடைகாரர் ஒருவருக்கு பசும்பாலினை விற்று வந்தார்

ஒருசமயம் அவர் அளந்து கொடுத்த பால் குறைந்து விட்டது என நகரத்தில் இருந்த நீதி மன்றத்தில் அந்த விவசாயிக்கு எதிராக வழக்கு ஒன்றினை தொடுத்தார்

அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் அந்த விவசாயியை அழைத்து ஏன்குறைவாக பசும் பாலினை ரொட்டிகடைக்காரருக்கு அளந்து கொடுத்தீர்கள் என நீதிபதி வினவியபோது

ஐயா நான் தனியாக பால் அளப்பதற்கு என பாத்திரம் எதுவும் வைத்துகொள்வதில்லை அதனால் நான் தினமும் இந்த ரொட்டிகடைக்காரர் ரொட்டிகளை எடுத்துவருவார் அந்த ரொட்டிகளை ஒருஎடைதட்டிலும் எங்களுடைய பண்ணையில் கறந்த பாலினை மற்றொரு எடைதட்டிலும் வைத்து எடையிட்டு வழங்குவதுதான் வழக்கம்

அதேபோன்று அன்றும் ரொட்டிகடைக்காரர் கொண்டுவந்த ரொட்டிகளை எடைத்தட்டில் வைத்து எங்களுடைய பண்ணையில் கறந்த பாலினை மற்றொரு எடைதட்டிலும் வைத்து எடையிட்டு வழங்கினேன் இதில் என்னுடை தவறு எதுவுமில்லை ஐயா தவறு ரொட்டிக் கடைக்காரருடையதாகும் ஐயா அவர் கொண்டுவந்த ரொட்டி எடையின் அளவிற்கே படும் பாலினை வழங்கினேன் எனக்கூறியதை தொடர்ந்து நீதிபதி அந்த வழக்கினை தள்ளுபடிசெய்தார்

நாம் என்ன செய்கின்றோமோ அதற்கேற்ற பலன்தான் நமக்கு கிடைக்கும் என்ற செய்தியை அறிந்துகொள்க

சனி, 23 ஏப்ரல், 2016

நாம் வாழும் இந்த சமூதாய மக்களின் மனப்பாங்குகளின் வகைகள்


டைட்டானிக்கப்பல் மூழ்கி அதில் ஏராளமான பயனிகள் இறந்த செய்தி நாம் அனைவரும் அறிந்ததே. அந்த கப்பல் மூழ்கி கொண்டிருக்கும்போது 7 கிமீ தூரத்தில் சாம்ஸன் என்றொரு கப்பல் பயனித்துகொண்டிருந்தது அந்த கப்பலில் உள்ளவர்கள் அனுமதியில்லாமல் விதிகளுக்கு மாறாக சீல் எனும் மீன்களை பிடித்து கொண்டிருந்தனர் டைட்டானிக்கப்பலின் வெள்ளைக்கொடியையும் அதிலிருந்த பயனிகள் தாங்கள் ஆபத்தில் சிக்கிகொண்டிருப்பதால் தங்களுடைய உயிரை காத்திடுமாறு கூவிக்கொண்டிருந்த்தையும் கண்ணுற்ற சாம்ஸன் கப்பலில் இருந்தவர்கள் டைட்டானிக் கப்பலில் இருப்பவர்கள் நம்மை போன்று விதிகளுக்கு மாறாக மீன் பிடித்து மாட்டிகொண்டார்கள் அதனால் நாம் அந்த பக்கம் சென்றால் நாமும் விதிகளுக்கு மாறாக மீன் பிடித்து கொண்டிருப்பதால் நாமும் மாட்டிகொள்வோம் அதனால் நீங்களும் இங்கு வந்து எங்களை போன்று மாட்டிகொள்ளவேண்டாம் என எச்சரிக்கை செய்தியை நமக்கு கூறுகின்றனர் நாம் வேறுபக்கம் சென்று மீன்பிடிக்கலாம் என தங்களுடைய கப்பலைவேறுபக்கத்திற்கு திருப்பி சென்றனர்

இரண்டாவதாக 14 கிமீ தூரத்தில் கலிபோர்னியோ எனும் கப்பல் பயனித்துகொண்டிருந்தது ஆயினும் அவர்களுடைய கப்பலைசுற்றி பனிக்கட்டியானது மலைபோன்று இருந்ததால் டைட்டானிக்கப்பலின் வெள்ளைக்கொடியையும் அதிலிருந்த பயனிகள் தாங்கள் ஆபத்தில் சிக்கிகொண்டிருப்பதால் தங்களுடைய உயிரை காத்திடுமாறு கூவிக்கொண்டிருந்த்தையும் கண்ணுற்ற கலிபோர்னியோ எனும் கப்பலில் பயனித்தவர்கள் நம்மைவிட மிகமோசமாக பணிக்கட்டியால் அவர்களுடைய கப்பல் சூழ்ந்துள்ளது போலும் நம்முடைய கப்பலையே நகர்த்துவதற்கு சிரமபடுகின்றோம் ஒரே இருட்டாகவேறு உள்ளது அதனால் இன்று இரவு தூங்கி காலையில் எழுந்தால் பகல் வெளிச்சத்தில் ஏதாவது வழிகிடைக்கின்றதாவென தேடிப்பிடித்திடலாம் என முடிவுசெய்து அவ்வாறே அனைவரும் தூங்க சென்றனர்

கார்பாத்தியா எனும் மூன்றாவது கப்பல் 50 கிமீ அப்பால் பயனித்துகொண்டிருந்தாலும் டைட்டானிக்கப்பல் மூழ்கி கொண்டிருப்பதையும் அதில்பயனித்தவர்கள் உயிரைகாப்பாற்றும்படியுமான வானொலி வாயிலான செய்தி கிடைக்கபெற்றவுடன் அவர்கள் டைட்டானிக்கப்பலை நோக்கி விரைவாக பயனித்து 700 க்கும் மேற்பட்ட பயனிகளின் உயிர்களை காப்பாற்றினர்

இந்த மூன்று கப்பல்களில் முதல்கப்பலில் பயனித்தவர்கள் போன்று நாம் வாழும் சமூகத்தில் யார் எப்படியிருந்தாலும் அதனைபற்றி கவலைப்படாமல் தங்களுடைய பணியை மட்டும் செய்பவர்கள் ஒருசாரர் இருக்கின்றனர்

இரண்டாவது கப்பலில் உள்ளவர்கள்போன்று தங்களுடைய பாதுகாப்பினை மட்டும் கவணித்தகொண்டு மற்றவர்களை பற்றி கவலைபடாமல் இருந்திடும் மற்றோரு சாரரும் உள்ளனர்

மூன்றாவது கப்பலில் உள்ளவர்கள் போன்று நம்முடைய சமூகத்தில் எங்கு எப்போது ஆபத்து ஏற்பட்டாலும் உடனடியாக அங்கு சென்று ஆபத்தில் சிக்கிகொண்டவர்களை காத்திடும் தன்னலமில்லாதவர்கள் ஒருசிலர் இந்த சமூகத்தில் இருப்பதால்தான் இந்த சமூதாயம் ஓரளவு நன்றாக இருக்கின்றது

வயதான பெற்றோர்களின் விரும்புவதை செய்திடுக


எங்களுடைய வயதான பெற்றோர்கள் வடஇந்தியாவில் உள்ள மற்றோரு சகோதரனுடைய வீட்டிற்கு செல்லவிரும்பினர் அதற்காக வழக்கமாக தொடர்வண்டியில் பயனிப்பதற்கு பதிலாக விமானத்தின் மூலம் பயனம் செய்யலாமே என விரும்பினர் அதனால் அதிக செலவாகுமே அவ்வாறெல்லாம் முடியாது என மறுத்ததுடன் இல்லாமல் இதுதொடர்பாக நீண்டவிவாதத்திற்கு பிறகு விமானத்தின் மூலம் அவர்கள் செல்வதற்காக பயனச்சீட்டு உறுதிபடுத்தபட்டது

விமான பயனம் துவங்கும் அன்று காலையிலேயே சிறுபிள்ளைகள் போன்று வயதான எங்களுடைய பெற்றோர்கள் பயனத்திற்கு தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தையும் மிக மகிழ்ச்சியாகவும் குதூகூலத்துடனும் தயார்செய்தனர் அதுமட்டுமல்லாது விமானத்திற்குள் ஏறுவதற்காக பாதுகப்பு பரிசோதனை போன்றவைகளை துவங்கிடும்போது அவ்விருவரும் சிறுகுழந்தைகள் போன்று எங்களுடைய வாழ்நாளில் ஒருநாளாவது விமானத்தில் பயனம் செய்வோமா என்று கனவு கண்டுகொண்டிருந்ததை தம்பி நீ நிறைவேற்றி விட்டாய் என என்னுடைய கையை பிடித்துகொண்டு கண்ணீர் விட்டு மகிழ்ச்சியுடன் அழுதனர் வயதான பெற்றோர்களும் குழந்தை போன்றவர்களே

நாம் சிறுவயதாக இருக்கும்போது நாம் கோரிய அனைத்தையும் தன்னுடைய சக்திக்கு ஏற்ப தங்களை தியாகம் செய்து செயல்படுத்தியதைபோன்று நாமும் நம்முடைய பெற்றோர்களுக்கு அவர்கள் வரும்புவதை செய்வதே நம்முடைய முதல் கடமைஎன உறுதிகொள்க.

சனி, 16 ஏப்ரல், 2016

உதவிதேவைப்படு்ம் மற்றவர்களுக்கு உதவிசெய்து வாழ்வதே உண்மையான மகிழ்ச்சியும் நிம்மதியுமான வாழ்க்கையாகும்


ஏராளமானஅளவில் வீடு ,நிலம்,பணம் என அனைத்தும் இருந்தும் வாழ்க்கையில் மகிழ்ச்சியில்லாமல் இருந்த ஒருவன் மனநல மருத்துவரிடம் சென்று "ஐயா எனக்கு போதுமான அளவில் அனைத்து செல்வங்களும் உள்ளன ஆனால் மகிழ்ச்சிமட்டும் இல்லை அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என கோரினான்

உடன் அம்மருத்துவர் "அப்படியா தம்பி "என அங்கு தரையை பெருக்கி சுத்தம் செய்துகொரண்டிருந்த வயதானபெண்ணை அழைத்து "நீ எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றாய் எனக்கூறு" என்றார்

உடன் அந்த பெண்மனி தான் செய்து கொண்டிருந்த பணியை அப்படியே நிறுத்திவிட்டு "என்னுடைய கணவர் நோய்வாய்பட்டு இறந்தார் அதன்பின்னர் எங்களுடைய ஒரேமகனும் பயனத்தின்போது அடிபட்டு இறந்து விட்டான் அதனைதொடர்ந்து என்னுடைய வாழக்கைக்கு துனையாரும் இல்லை அதனால் நான்வயிறார சாப்பிடவும் நன்றாக தூங்கவும் முடியவில்லை மகிழ்ச்சி யென்பது என்னுடைய வாழ்வில் இல்லை என்ற நிலையாகிவிட்டது

அந்நிலையில் ஒருநாள் சிறியபூனைகுட்டி ஒன்று நான் வெளியில் சென்று வீடுதிரும்பிவரும்போது என்னை பின்தொடர்ந்து வந்தது வெளியே ஒரே குளிராக இருந்ததால் அந்த பூனை குட்டியை வீட்டிற்குள் அனுமதித்து அதற்கு ஒரு தட்டில் பாலினை ஊற்றினேன் உடன் அந்த பூனைகுட்டி தட்டில்ஊற்றிய பாலை குடித்தபின்னர் என்னுடைய பாதத்தினை நக்கி தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டது அதனை தொடர்ந்து முதன்முதல் என்னுடைய முகத்தில் அப்போதுதான் புன்னகை தோன்றியது மனதிலும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

”சாதாரனமாக ஒரு சிறிய பூனைகுட்டிக்கு உதவிசெய்ததற்கே நம்முடைய மனதில் மகிழ்ச்சி ஏற்படுகின்றது எனில் உதவிதேவைப்படும் மற்றவர்களுக்கு நம்மாலான உதவிசெய்தால் இன்னும் அதிகமான மகிழ்ச்சியும் வாழ்க்கையின் அர்த்தமும் கிடைக்கும் என முடிவுசெய்தேன் அதனால் தினமும் உதவிதேவைப்படும் எந்தவொரு நபருக்கும் என்னால் முடிந்த உதவியை செய்து மகிழ்ச்சியுடன் இருக்கின்றேன் அதனை தொடர்ந்து தற்போது நான் வயிறார சாப்பிட்டு நிம்மதியாக உறங்குகின்றேன் மற்றவர்களுக்கு என்னாலான உதவியை செய்து அதன்மூலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவருகின்றேன் என்றார்

"அய்யய்யோ நான் இந்த உலகில் மகிழ்ச்சியையும் சேர்த்து அனைத்தையும் பணத்தின்மூலம் வாங்கிவிடலாம் என தவறாக எண்ணியிருந்தேனே" என அழுதுபுலம்பினார் அதன்பின்னர் "இன்றுமுதல் நானும் உதவிதேவைப்படு்ம் மற்றவர்களுக்கு உதவிசெய்து மகிழ்ச்சியும் நிம்மதியும் பெற முயற்சிசெய்வேன்" என உறுதிகூறி சென்றார்

வியாழன், 14 ஏப்ரல், 2016

நம்முடைய வாழ்வில் ஏற்படும் எதிர்ப்புகளை கண்டு சோர்வுறாமல் அவைகளை எதிர்த்து போராடி வெற்றி பெறுக


எட்டுவயது உள்ள ஒருசிறுவன் தன்னுடைய தாத்தாவிடம் வந்து “தாத்தா நான் மிகச்சிறந்த வெற்றியாளனாக வளரவிரும்புகின்றேன் அதற்கான தங்களுடைய அறிவுரைகளையும் ஆலோசனைகளும் கூறங்கள்,” என கோரினான்.உடன் அவரும்அந்த சிறுவன் கோரியவாறு அவனுக்கான ஆலோசனைகள் எதையும் கூறாமல் அவனுடைய கையை பிடித்து அழைத்துகொண்டு அருகிலிருந்த நாற்றங்காளிற்கு சென்றார். அங்கு மரங்களுக்கான இரு நாற்றுகளை வாங்கிகொண்டுவந்து ஒன்றினை வீட்டிற்குள் ஒருமண்தொட்டியிலும் மற்றொன்றினை வீட்டிற்கு வெளியே தோட்டத்திலும் நட்டுவைத்து தண்ணீர் ஊற்றினா.ர் பின்னர் தங்களுடைய பேரபிள்ளையிடம் “இவ்விரண்டில் எது மிகப்பெரிய மரமாக வளரும்?” என வினவினார். உடன் அந்த சிறவன்“அதில் என்ன சந்தேகம் தாத்தா! வீட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளதுதான் வளர்ந்து மரமாகும்”, என பதிலிறுத்தான். “அப்படியா! சரிபார்க்கலாம்,”என பதில்கூறினார் .கல்லூரி செல்லும் இளங்காளையாக வளர்ந்தபின்னர் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தான் அப்போது தன்னுடைய தாத்தாவிடம் வந்து “தாத்தா! நான் எட்டுவயது சிறுவனாக இருந்தபோது மிகச்சிறந்த வெற்றியாளனாக வளருவதற்கான தங்களுடைய அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கோரினேன் இதுவரையில் தாங்கள் எனக்கு எதையும் கூறவில்லை.” என வினவியபோது, “அப்படியா! சரி வா, நாமிருவரும் நட்டுவைத்த மரக்கன்றுகளை பார்த்திடுவோம் அதன்பின்னர் நீகோரியவாறு ஆலோசனைகளை உனக்கு கூறுகின்றேன்.” என பதிலிருத்தவாறு இருவரும் வீட்டிற்குள் மண்தொட்டியில் வைத்த மரக்கன்றினையும் வீட்டிற்கு வெளியே தோட்டத்தில் வைத்த மரக்கன்றினையும் பார்வையிட்டனர். என்னஆச்சரியம்! வீட்டிற்குள் பாதுகாப்பான இடத்தில் வைத்த மரக்கன்று குட்டையாக வளர்ச்சியெதுவுமில்லாமல் இருந்தது.ஆனால், வீட்டிற்கு வெளியே தோட்டத்தில் வைத்திருந்த மரக்கன்றானது மிகப்பெரியமரமாக வளர்ந்து பூவும் காயுமாக பூத்து குலுங்கியது. “பார்த்தாயா தம்பி! பாதுகாப்பான சூழலில் வைத்த மரக்கன்று பெரியமரமாக வளராமல் இருந்ததையும் வெளியே பாதுகாப்பற்ற சூழலில் வைத்த மரக்கன்று நல்ல மரமாக வளர்ந்துள்ளதையும்; இதேபோன்று நம்முடைய வாழ்விலும் ஏராளமான எதிர்ப்புகளும் மேடுபள்ளங்களும்குறுக்கிடும் நாமும் அவைகளை கண்டு சோர்வுற்று ஒதுங்கிவிடாமல் நாம்ம அவைகளுடன் போராடி வெற்றிபெறவேண்டும் என போராடுவோம் அதனை தொடர்ந்து நம்முடைய வாழ்க்ககையானது வெற்றிகரமாக அமையும். அவ்வாறில்லாமல் பாதுகாப்பான சூழலில் வாழ்க்கையானது வெற்றிகரமாக அமையாது என்பதை தெரிந்து கொள்: நீயும் அவ்வாறே நாம் வாழும் இந்த சமூகசூழலில் எதிர்ப்படும் எந்தவொரு இக்கட்டிற்கும் மிகச்சரியான தீர்வினை கண்டு வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துகொள்!” என்று அறிவுரை கூறினார்.

நல்லமனமும் நல்ல செயலும் நல்லதையே நாடும்


ஒரு ஊரில் இரு சகோதரர்கள் இருந்தனர் அவர்களுள் ஒருவன் குடிகாரனாகவும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை எப்போதும் அடித்து உதைத்துகொண்டே இருப்பவனாகவும் வாழ்ந்துவந்தான். மற்றொருவன் அவனுடைய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமன்று அனைவராலும் விரும்பும் நல்ல குடும்பத்தலைவனாகவும் சமூகத்தில் அனைவராலும் விரும்பப்படும் மிகப்பெரிய வியாபாரியாகவும் மதிக்கதக்க நல்லதலைவனாகவும் விளங்கினான்.

அதனால் அந்த ஊரில் இருந்த ஒருசிலருக்கு ஒரே தாய்தகப்பனுக்கு பிறந்து ஒரேகுடும்ப சூழலில் வளர்ந்த இருசகோதரர்களும்எவ்வாறு வெவ்வேறு தன்மையுடன் மாறி யமைந்துவிட்டனர் என்ற மிகப்பெரிய சந்தேகம் வந்தது அதனை தீர்வு செய்வதற்காக முதல் சகோதரனிடம் “தம்பி!நீஏன் இவ்வாறு மகாகுடிகாரனாக மாறி உன்னுடைய வீட்டில் உள்ளவர்களை அடித்து உதைக்கின்றவனாக இருக்கின்றாய்?” என வினவியபோது, “எங்களுடைய தந்தை மகாகுடிகாரனாக இருந்தார் எப்போதும் வீட்டிற்கு வந்துவீட்டில் உள்ளவர்களை அடித்து உதைப்பவராக வாழ்ந்துவந்ததை நான் சிறுவயதாக இருக்கும்போதிலிருந்து பார்த்து வளர்ந்து வந்தேன் அதனால் நாமும் அவ்வாறே இருக்கலாம் எனமுடிவுசெய்து அவ்வாறே தற்போது இருந்துவருகின்றேன்.” என்றான்.

இரண்டாம் சகோதரனிடம் அவ்வாறே “தம்பி! ஒரே தாய்தகப்பனுக்கு பிறந்து ஒரேகுடும்ப சூழலில் வளர்ந்த உங்கள் இருவரில் நீமட்டும் எப்படி அனைவராலும் மதிக்கதக்க நலலதலைவனாகவும் மற்றொருவன் குடிகாரனாகவும் மாறிவிட்டீர்கள்?” என வினவியபோது, “ எங்களுடைய தந்தை மகாகுடிகாரனாக இருந்தார். எப்போதும் வீட்டிற்கு வந்துவீட்டில் உள்ளவர்களை அடித்து உதைப்பவராக வாழ்ந்துவந்ததை நான் சிறுவயதாக இருக்கும்போதிலிருந்து பார்த்து வளர்ந்து வந்தேன். அதனால், நாம் அவ்வாறில்லாமல் அனைவராலும் மதிக்கதக்க நல்லதலைவனாக வாழவேண்டும் என முடிவுசெய்து அதன்படி வாழ்ந்துவருகின்றேன்.” எனக்கூறினான்.

நாம் வாழும் சூழல் ஒன்றாக இருந்தாலும் அதனை அவரவர்கள் எவ்வாறு தங்களுக்கு முன்மாதிரியாக அதாவது அதற்கு எதிர்மறையாகவோ அல்லது நேராகவோ எடுத்து கொள்வதற்கேற்ப நல்லமனம் நல்லதையே நாடும் என்ற அடிப்படையில் அவரவர்களுடைய வாழ்க்கையும் மாறியமையும்.

சனி, 26 மார்ச், 2016

தவறான நம்பிக்கையை விடுத்துமுயற்சி செய்தால் கண்டிப்பாக வெற்றிபெறலாம்


நெடுஞ்சாலையோரம் இருந்த கிராமப்பகுதியில் யானை ஒன்று சிறு கயிற்றினால் கட்டப்பட்டிருந்தது அந்த யானையும் நின்ற இடத்தில் இருந்தவாறு அசைந்து கொண்டேயிருந்தது அந்த வழியாக சென்ற வழிபோக்கன் ஒருவன் . இந்த யானையை பார்த்து மிக ஆச்சரியத்துடன் "என்னடா இது இவ்வளவு பெரிய யானையை மிகச்சிறிய கயிற்றினால் அதனுடைய ஒரேயொரு காலை மட்டும் கட்டியுள்ளனர் அந்த யானையும் அதனை கட்டிய சிறு கயிற்றினை அறுத்துகொண்டு செல்லாமல் அப்படியே நின்ற இடத்தில் இருந்தவாறு அசைந்து கொண்டேயிருக்கின்றது" என்ற சந்தேகம் வந்துவிட்டது. அதனை நிவர்த்தி செய்து கொள்வதற்காக அவ்விடத்தில் இருந்த யானைப்பாகனிடம் "ஐயா இவ்வளவு பெரிய யானையை மிகவும் சிறிய கயிற்றினால் ஒரேயொரு காலை மட்டும் கட்டியுள்ளீர் இந்த யானையும் அந்த சிறிய கயிற்றினை அறுத்து கொண்டு செல்லாமல் அப்படியே நின்றுஅசைந்துகொண்டுமட்டும் உள்ளதே ஏன்?” என வினவினார் . " ஐயா இந்த யானை சிறிய குட்டியாக இருக்கும் போது இந்த சிறிய கயிற்றால் கட்டி பிடித்து அழைத்து கொண்டு செல்வதும் பின்னர் இந்த கட்டுத்தறியில் கொண்டுவந்த கட்டிவிடுவதும் வழக்கம் குட்டியானையால் அந்த கயிற்றினை அறுத்து செல்லமுடியாது அதே பழக்கத்தில் தற்போது யானை பெரியதாக வளர்ந்துவிட்டாலும் தன்னால் இந்த கயிற்றினை அறுத்து கொண்டு செல்லமுடியாது என நம்பிகொண்டுஅப்படியே நின்றஇடத்தில் அசைந்து கொண்டுமட்டும் உள்ளது"

அதேபோன்றே நாமும் நம்முடைய வாழ்வில் நாம் செய்திடும் செயலில் ஏதேனும் தோல்வி ஏற்பட்டால் அதனை தொடர்ந்து நம்மால் அந்த குறிப்பிட்ட செயலை செய்யமுடியாது செய்து வெற்றி கொள்ள முடியாது என நம்முடைய மனத்தில் தவறான நம்பிக்கை ஆழபதிந்துவிடும் அதன்பின்னர் நாமும் அந்த தவறான நம்பிக்கையிலிருந்து விடுபட்டு குறிப்பிட்ட செயலை செய்து வெற்றி கொள்வதற்காக மீண்டும் முயற்சி செய்யாமல் நம்மால் வெற்றிபெறமுடியாது என தவறாக நம்பிக்கொண்டு செயலை செய்திடாமல் விட்டுவிடுவோம் .

புறச்சூழல் என்னவாக இருந்தாலும் நம்முடைய முயற்சியில்,நம்முடைய செயலில் மட்டும் மிககவணமாக கருத்தூன்றி வெற்றிபெற முயற்சி செய்க


யானை ஒன்று ஆறு ஒன்றில் கட்டப்பட்டிருந்த ஒருபாளத்தின் வழியாக ஆற்றின் அடுத்த கரைக்கு செல்லவிரும்பி அந்த பாளத்தின் முகப்பில் நடக்க ஆரம்பித்தது. கொசுஒன்று அவ்வாறே ஆற்றின் அடுத்த கரைக்கு செல்ல விரும்பியது. ஆனால் அந்த கொசுவினால் அவ்வளவு தூரம் பறந்த செல்ல இயலவில்லை. அதனால் இந்த யானையின் முதுகில் கொசுவானது உட்கார்ந்து கொண்டு "யானையாரே நாமிருவரும் மிக அதிக எடையுடையவர்கள் அதனால் நாம் நடந்து செல்லும் போது இந்த ஆற்றின் பாளம் உடைந்துவிடப்போகின்றது அதனால் கவணமாக பார்த்து மெதுவாக நடந்து போங்கள்" என உத்திரவு இட்டது. யானை ஒன்றும் கண்டு கொள்ளாமல் நடந்துகொண்டிருந்தது.

யானையானது அந்த ஆற்றப்பாளத்தி நடுவில் நடந்து கொண்டிருந்தது. "ஐயோ இந்த ஆற்றில் எவ்வளவு வேகமாக வெள்ளம் சுழன்றோடு கின்றது யானையாரே பார்த்து மெதுவாக செல்லுங்கள்" என அந்த கொசுவானது உயிர்பயத்துடன் கத்தி உத்திரவிட்டது. அப்போதும் யானை எதையும் சட்டை செய்யாமல் நடந்துகொண்டிருந்தது.

ஒருவழியாக ஆற்றின் அடுத்த கரையை யானை சென்றடடைந்தது. உடன் கொசுவானது "யானையாரே பார்த்தாயா இவ்வளவு வேகமாக வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கும் இந்த ஆற்றின் அந்த கரையிலிருந்து இந்த கரைக்கு பாளத்தின் வழியாக பத்திரமாக நாமிருவரும் வந்து சேருவதற்காக நான் மிகச்சரியாக வழிகாட்டிவந்ததால் பிரச்சினை ஏதுமில்லாமல் நாமும் பாதுகாப்பாக வந்த சேர்ந்தோம். என்னை உன்னுடைய முதுகில் ஏற்றி வந்ததற்கு மிக்க நன்றி" எனக்கூறி விடைபெற்றது. அப்போதும் அந்த யானையானது அந்த ஆற்றின் மறுகரையில் எதனையும் சட்டை செய்திடாமல் தன்னுடைய இரையை தேட சென்றுகொண்டிருந்தது .

இதே போன்று நம்முடைய வாழ்வில் நாம் வாழும் இந்த சமூகத்தில் நம்முடைய செயலைபற்றியும் நம்முடைய பணியை பற்றியும் பலரும் பல்வேறுவிதமாக அவர்வர்கள் மனதில் தோன்றியவாறு தவறாக மதிப்பீடு செய்து தாங்கள்தான் நம்மை மிகச்சரியாக வழிநடத்தி செல்வதாகவும் நம்முடைய வெற்றிக்கு தங்களுடைய அறிவுரையே காரணம் என்றும் வெட்டிபந்தா காட்டிகொள்வார்கள். இவ்வாறான நிலையில் நாமும் அவ்வாறான எதனையும் கவணத்தில் கொள்ளாமல் நம்முடைய முயற்சியில்,நம்முடைய செயலில் மட்டும் மிககவணமாக கருத்தூன்றி வெற்றிபெற முயற்சி செய்க.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...