ஞாயிறு, 27 டிசம்பர், 2015

எந்தவொரு செயலையும் செய்துமுடிப்பதற்கு முன் நம்முடைய மனதை ஒருமுகபடுத்தி அந்த குறிப்பிட்ட செயலை செய்துமுடிப்பதையை முதன்மையானதாக வைத்து செயல்படுவோம்


முந்தைய காலத்தில் இராணுவத்தில் போர்பயிற்சி என்பது வில்வித்தையே முதண்மையானதாகும் அதிலும் முதன்முதல் வில்வித்தை கற்க விரும்பும் போர்விரன் தன்னுடைய கையால் வில்லையும் அம்பையும் சேர்த்து பிடித்துதயாரானவுடன் எதிரே உள்ள ஒரு பொருளை அவனுக்கு காண்பித்து அவனுடைய குருவானவர் அவனிடம் கேட்கும் முதல் கேள்வி் நீ கண்களால் என்ன காண்கிறாய் என்பதுதான் உடன் அந்த போர்வீரண் அந்த பொருளிற்கு அருகேயுள்ள மரத்தை பார்க்கின்றேன் மேலே சூரியனை பார்க்கின்றேன் தூரத்தில் ஒடும் விளங்குகள் பார்க்கின்றேன் அவைகளின் கீழே உள்ள பசுமையான நிலங்களை பார்க்கின்றேன் என விவரி்க்க ஆரம்பித்தால் ரொம்ப சரிதம்பி நீசென்று நாளைவா என அனுப்பி விட்டு அடுத்தவனிடம் இதே போன்ற கேள்வியை கேட்க ஆரம்பித்துவிடுவார்

சரியான போர்விரன் இந்த கேள்விக்கு பதிலாக அவர்குறிப்பிடும் பொருள் மட்டும் தன்கண்களுக்க புலப்படுவதாகவும் மற்றவை எதுவும் கண்ணிற்கு தோன்றவில்லை எதுவும் தோன்றவில்லை என கூறுவான் உடன் குருவும் இவனே சரியான போர்வீரண் என தெரிவுசெய்வார்

இது அந்த காலத்திற்கு மட்டுமல்ல எந்த காலத்திற்கும் பொருந்தகூடிய கருத்தாகும் போர்விரணுக்கு மட்டுமல்லாது எந்த வொரு பணியைசெய்திடும் நம் அனைவருக்குமே இந்த கருத்து பொருந்துகின்றது எவ்வாறு எனில் நாம் எந்தவொரு செயலை செய்வதற்கு முடிவெடுத்தோமெனில் அதிலிருந்து நம்முடைய கவணத்தை திசை திருப்ப ஏராளமான நிகழ்வுகள் நம்மை சுற்றி நடந்துகொண்டே இருக்கின்றன நம்முடைய மனமும் நிலையற்ற தன்மைமையால் அலைபாய்ந்து மாறக்கூடியதாக இருப்பதால் நாமும் நம்முடைய செயலில் கவணத்தை செலுத்திடாமல் புறக்காரணிகளால் மற்ற நிகழ்வுகளை கவணிக்க ஆரம்பித்துவிடுவோம் அதனால் நம்முடைய செயல் துவங்கபடாமலே அப்படியே இருந்துவிடும் அதனை தொடர்ந்து நாமும் நம்முடைய செயலில் வெற்றிபெறமுடியாது நின்றுவிடுவோம்

அதனால்தான் நாம் அனைவரும் நாம் எடுத்துகொண்ட நம்முடைய எந்தவொரு செயலையும் செய்துமுடிப்பதற்கு நம்முடைய மனதை ஒருமுகபடுத்தி அந்த குறிப்பிட்ட செயலை செய்துமுடிப்பதையை முதன்மையானதாக வைத்து செயல்படுவோம் என உறுதி செய்துகொள்க என கோரப்படகின்றது அப்போதுதான் நாம் எடுத்துகொண்ட எந்தவொரு பணியும் முழுமையாக வெற்றிகரமாக முடிவடையும் நாம் எதிர்பார்த்த விளைவும் நமக்கு கிடைக்கும் என்ற செய்தியை எப்போதும் மனதில் கொள்க

சனி, 12 டிசம்பர், 2015

இதில் யார் பணக்காரன்? யார் ஏழை?


நடுத்தர குடும்பத்தாய் ஒருத்தி வியாபார பணித்தொடர்பாக சென்னைக்கு தன்னுடைய மகிழ்வுந்தில் வந்து ஐந்துநட்சத்திர தங்கும் விடுதியில் தங்கியிருந்தார்

தங்கும் விடுதிக்குள் நுழையும்போதே அவருடைய கைக்குழந்தை வயிற்றுப்பசியினால் அழஆரம்பித்தது உடன் தற்போதைய. நாகரிகத்தின்படி தாய்ப்பாலை அந்த கைக்குழந்தைக்கு புகட்டாமல் புட்டிபால் புகட்டுவதற்காக அந்தஐந்துநட்சத்திர தங்குவிடுதியில் பசும்பால் கோரினால் உடன் கால்லிட்டர் பால் ரூபாய் 50.00 என்ற விலையில் வழங்கியதை தன்னுடைய கைக்குழந்தைக்கு புகட்டினார்

அன்ற சாயுங்காலம் அந்தாய் பணி முடிவடைந்தபின் தன்னுடைய சொந்தஊருக்கு நெடுஞ்சாலைவழியாக மகிழ்வந்தில் திரும்பி சென்று கின்றிருந்தபோது மீண்டும் அந்தக் கைக்குழந்தை வயிற்றுப்பசியினால் அழஆரம்பித்தது

உடன் சாலையோர இருந்த தேநீர் கடை ஒன்றில் வண்டியை நிறுத்தம் செய்து அந்த கைக்குழந்தைக்கான கால்லிட்டர் பால் வழங்குமாறு கோரினார் அந்த தேநீர் கடையின் வயதான சொந்தக்காரர் உடன் தேவையான பாலை அந்த தாய்க்கு வழங்கியது மட்டுமல்லாது மேலும் கால்லிட்டர் பாலை வழியில் மீண்டும் அந்தக்கைக்குழந்தை அழுதால் புகட்டிடுமாறு வழங்கினார்

இந்த பாலிற்கான விலைஎவ்வளவுஎன அந்த தாய் வினவியபோது குழந்தைகளுக்கான பாலை விலையில்லாமல் தங்களுடைய தேநீர்கடையில் வழங்குவது வழக்கமென க்கூறி அந்த தாய் கொடுத்த பணத்தை ஏற்றுக்கொள்ளமறுத்துவிட்டார் அந்த கிராமத்து வயதான தேநீர்கடை முதலாளி.

இதில்யார் பணக்காரன் யார் ஏழை என நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள் மற்றவர்களுக்கு எதிர்பார்ப்பு இல்லாது உதவிசெய்வதே மனித்தன்மையாகும் என்ற நியதியை மனதில் கொள்க.

போதுமென்ற மனமே பொன்செயும் மருந்தாகும்


பெண்கள் தங்களுக்கு தேவையான கணவனை தேர்வுசெய்து கொள்முதல் செய்வதற்கான பெரிய கடைஒன்றை நியூயார்க் நகரில் துவங்கியிருந்தனர் அவ்வாறான கடையை தம்முடைய வாழ்நாளிலேயே கண்டதில்லையென பெண்களின் கூட்டம் அந்த கடையில் அலைகடலென குவிந்தனர் என்னதான் அந்த கடையில் இருக்கின்றதென காணலாமே என அந்த கடைக்கு ஒருபெண் சென்றார்

அந்தக்கடையின் ஒவ்வொரு மாடிக்கும் ஒருமுறை மட்டமே போகமுடியும் திருப்தியாக இல்லையெனில் அடுத்தமாடிக்கத்தான் செல்லவேண்டுமே தவிர மீண்டும் முந்தை தளத்திற்கு செல்லமுடியாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது

பரவாயில்லையே ஐந்துமாடி இருக்கின்றது எதிலாவது நமக்கு பொருத்தமான மாப்பிள்ளை கிடைக்காமலா போய்விடுவார் பார்க்கலாம் என முதல்மாடியில் முகப்பில் இந்த தளத்தில் இருக்கும் மாப்பிள்ளைகள் அனைவரும் வேலைவெட்டியில்லாதவர்கள் என அறிவிப்பு பலகையிருந்ததை கண்டு சீச்சீ இந்த தளம் வேண்டாம் என இரண்டாவது தளத்திற்கு சென்றார்

இரண்டாவதுதளத்தில் இங்கு உள்ள மாப்பிள்ளைகள் நல்லசம்பளத்துடன் கூடிய பணியில் உள்ளனர் என அறிவிப்பு பலகையிருந்ததை கண்டு பரவாயில்லை மேலும் கூடுதலான தகுதியிருந்தால் நன்றாகஇருக்கும் என எண்ணிக்கொண்டு அதற்கடுத்த தளத்தில் என்னஇருக்கின்றது என காண்போமென மூன்றாவது தளத்திற்கு சென்றார்

மூன்றாவது தளத்தில் இங்கு இருக்கும் மாப்பிள்ளைகள் அனைவரும் நல்லசம்பளத்துடன் கூடிய பணியோடு நல்ல அன்பாக பழகக்கூடியவர்கள் என்ற அறிவிப்பு பலகையிருந்ததை கண்டு அதைவிட இந்த தளத்தில் பரவாயில்லை சரி நான்காவது தளத்தில் என்னதான் இருக்கின்றது என காண்போம் என நான்காவதுதளத்திற்கு சென்றார்

அங்கு நான்காவது தளத்தில் இங்கு உள்ள மாப்பிள்ளைகள் நல்லசம்பளத்துடன் கூடிய பணியோடு நல்ல அன்பாக பழகுவதுடன் வீட்டுவேலைகள் அனைத்தையும் செய்பவர்கள் என அறிவிப்பு பலகையிருந்ததை கண்டு மிகமிக பரவாயில்லை இதைவிட கூடுதல் தகுதியிருந்தால் நன்றாக இருக்குமே என ஐந்தாவது தளத்திற்கு சென்றார்

அங்கு மிக்க நன்றி நான்கு தளத்திலும் உங்களுக்கு பிடித்தமானமாப்பிள்ளை இருந்தபோதிலும் உங்களுக்கு பொருத்தமான மாப்பிள்ளை கண்டிப்பாக கிடைப்பார் மின்தூக்கி வழியாக சென்றுவாருங்கள் என வெளியே அனுப்பிவிட்டனர் .

திங்கள், 16 நவம்பர், 2015

உண்மையான அன்பிற்கு எந்தவொரு எல்லையுமில்லை


பரபரப்பான காலைநேரத்தில் 8.30 மணிக்கு ஒருமருத்துவமனையின் ஒருஇளைஞன் அவசரமாக வந்துதன்னுடைய கட்டைவிரலில் அடிபட்டதற்கு தேவையான கட்டினை கட்டுமாறு கோரியதை தொடர்ந்து மருத்துவரும் காயத்திற்கு போதுமான கட்டினையும் மருந்து மாத்திரைகளையும் வழங்கி அவைகளை எவ்வாறு எவ்வெப்போது விழங்கவேண்டும் என ஆலோசனை கூறி அந்த இளைஞன் ஏன் பரபரப்பாக இருக்கின்றான் என்றும் உடனடியாக எங்கு செல்லவிரும்புகின்றான்என்றும் வினவினார்

அதற்கு அந்த இளைஞன் சரியாக 9 மணிக்கு கொஞ்ச தூரத்திலுள்ள மருத்துவமனையில் உள்நோயாளியாக இருக்கும் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து காலை சிற்றுண்டி அருந்துவதை வழக்கமாக செய்துவருவதாகவும் அதனால்தான் என பதிலிருத்தான் தொடர்ந்து மருத்துவர் அந்த இளைஞனின் மனைவிக்கு என்ன நோய் என வினவியபோது பயங்கர எனும் நோயால் பாதிக்கப்பட்டு உள்நோயாளியாக கடந்த ஒருவருடமாக அந்த மருத்தவமனையில் இருப்பதாகவும் தனக்கு எந்தபணி இருந்தாலும் காலையிலும் இரவிலும் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்த உணவு அருந்துவது வழக்கமான செயலாகும் என்றும் கூறினான் தொடர்ந்து உங்களுடைய மனைவிக்குதான் உங்களை அடையாளம் தெரியாதே என க்கூறியதை தொடர்ந்து

அவர் என்னுடைய மனைவி என்று எனக்கு தெரியுமல்லவா அதனால் தான் அவ்வாறு கடைபிடித்து வருகின்றேன் உண்மையான அன்பிற்கு எந்தவொரு எல்லையுமில்லையல்லவா எனக்கூறி விடைபெற்று அவசரமாக சென்றார் அந்த இளைஞன்.

நாம் அனைவரும் மற்றவர்களின் உண்மையான நிலையை அறிந்துகொள்ளாமல் அவர்களுக்கு மனதளவில் துன்பம் கொடுப்பதில் வல்லவர்களாக இருக்கின்றோம்


தொடர் வண்டி ஒன்று பெரிய நகரத்திலிருந்து தன்னுடைய பயனத்தை துவங்கியது அதில் ஏராளமான பயனிகள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகமுக்கியமாக தத்தமது பணிக்கு சென்று பணிமுடிந்து வீடுதிரும்புவோர்கள் அதிகஅளவு இருந்தனர் இளம் கணவன் மனைவிமார்களும் கல்லூரியில் பயிலும் இளைஞர்களும் அந்த பெட்டியில் கூட்டமாக பயனம் செய்தனர் அந்த பெட்டியில் ஒருவயதான மனிதனும் 30 வயதுடைய இளைஞனும் சாளரத்திற்கு அருகிலுள்ள இருக்கையில் அமர்ந்திருந்தனர் .

அந்த இளைஞன் அங்கே பாருங்கள் அப்பா அனைத்து மரங்களும் செடிகொடிகளும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன என்று தன்னுடைய தந்தையிடம் மிகவும் மகிழ்ச்சியோடு சத்தமிட்டு கூறிக்கொண்டிருந்தான் அதனை கண்ணுற்ற அருகிலிருந்தோர் அனைவரும் என்ன இந்த இளைஞன் பித்துபிடித்தவன் போலும் அதனால்தான் கூக்குரலிடுகின்றான் என தங்களுக்குள் முனுமுனுத்தனர் சிறிதுநேரம் கழித்து சாரல்மழை துவங்கியது அதனை கண்ணுற்ற அந்த இளைஞன் மேலும் அதிக மகிழ்ச்சியுடனும் சத்தத்துடனும் அப்பா அப்பா இப்போது பாருங்களேன் என்ன அருமையாக மழை பொழிகின்றது என மகிழ்ச்சி கூச்சிலிட்டான்

இதனை கண்ணுற்ற மற்ற பயனிகள் அந்த பெரியவரிடம் தே பெரிசு உங்களுடைய பித்தாங்குளி பையனை அடக்கிவையுங்கள் இந்த சாளரத்தை முதலில் மூடிவிடுங்கள் எங்களுக்கு எல்லாம் ஒரே தொந்தரவாக இருக்கின்றது வாயை மூடிக்கொண்டு இருக்கசொல்லுங்கள் என சன்டைபிடிக்க ஆரம்பித்தனர்

உடன் பெரியவரும் ஐயாமார்களே அம்மாமார்களே சிறிது மன்னித்துகொள்ளுங்கள் எனக்கூறினார் தொடர்ந்து அந்த இளைஞனுக்கு சிறுவயதிலிருந்து கண்பார்வை இல்லாமல் இருந்துவந்தது கடந்தவாரந்தான் அவர்களுடைய தாய் இறந்தபோது அவருடைய கண்களை அறுவைசிகிச்சை வாயிலாக இந்த இளைஞனுக்கு பொருத்தப்பட்ட பார்வை திரும்பியது தற்போதுதான்முதன்முதல் மருத்துவமனையிலிருந்து தங்களுடைய வீட்டிற்கு திரும்பி வருகின்றோம் எனக்கூறி தங்களுடைய இருக்கையிலிருந்து எழுந்து அடுத்த பெட்டிக்கு தன்னுடைய மகனை அழைத்துசென்றார்

நாம் அனைவரும் மற்றவர்களின் உண்மையான நிலையை அறிந்துகொள்ளாமல் அவர்களுக்கு மனதளவில் துன்பம் கொடுப்பதில் வல்லவர்களாக இருக்கின்றோம் என்பதே எதார்த்தமான உண்மைநிலவரமாகும்.

திங்கள், 9 நவம்பர், 2015

இவ்வுலகில் வாழும் நாம் அனைவரும் சமம்


முன்னொரு காலத்தில் முதிய துறவிஒருவர் பாலைவணத்தில் அமர்ந்து தவம்புரிந்து கொண்டிருந்தார். அந்நிலையில் அவர் சுற்றுசூழலையே மறந்திருப்பார் அதனால் எதுநடந்தாலும் அதில் அவருடைய கவணம் செல்லாது .

அப்போது அந்த நாட்டினுடைய அரசன் அந்த வழியே தன்னுடைய படையுடன் சென்றுகொண்டிருந்தார் . பொதுவாக அரசனை பார்த்தவுடன் நாட்டுமக்கள் அனைவரும் தாம் எந்த பணியை செய்து கொண்டிருந்தாலும் அதனை அப்படியே நிறுத்தம்செய்துவிட்டு எழுந்துநின்று தலைகுனிந்து அரசனுக்கு மரியாதை செய்வது வழக்கமான செயலாகும் .

ஆனால்அவ்வாறு எதுவும் செய்திடாமல் இந்த முதிய துறவி அமர்ந்திருந்ததை கண்ணுற்ற அரசன் தன்னுடைய மந்திரியை அழைத்து "இந்த துறவி ஏன் அவ்வாறு மரியாதை செய்யாமல் அமர்ந்துள்ளார் " என விசாரித்து வருமாறு உத்திரவிட்டார் .உடன் மந்திரியும் அரசன் உத்திர விட்டவாறு அந்ததுறவியிடம் சென்று "நம்முடைய நாட்டு அரசன் இந்த வழியே செல்லும்போது நம்முடையஅரசருக்கு எழுந்துநின்று ஏன் குனிந்து வணங்கவில்லை " என வினவினார்

அந்த துறவியானவர் "ஒருநாட்டின் அரசனுக்கு குடிமக்கள் அனைவரும் அடிமையன்று. அந்நாட்டின் குடிமக்களை சரியாக பாதுகாத்து அவர்களின் குறைநிரைகளை சரிசெய்வதே அரசனுடைய பணியாகும். இவ்வுலகில் அரசனும் சாதாரணகுடிமகனும் சரிசமமானவர்களே எவ்வாறு எனில் இறந்தபின்னர் அனைவரையும் மண்ணில் குழிதோண்டி புதைத்தபின் சிறிதுகாலம் கழித்து தோண்டிபார்த்தால் அனைவருடைய எலும்புகளும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும் அதனால் அரசன் உயிருடன் இருக்கும்வரை அவருக்கு கிடைத்த அரசபதவியை கொண்டு மற்றவர்களுக்கு தொந்திரவு கொடுத்திடாமல்பொதுமக்கள் அனைவருக்கும் நல்லசெயலைசெய்து வாழச்சொல்லுங்கள் !" என அந்த துறவி அறிவுரை கூறினார்.

நாம் எதையும் கொண்டுவரவில்லை அதனால் நாம் எதையும் கொண்டுசெல்லமுடியாது


உலகில் ஏராளமான நாடுகளை வெற்றிகொண்டு தன்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த மாபெரும் பேரரசன் அலெக்ஸான்டர் உடல்நிலைசரியில்லாமல் படுத்தபடுக்கையாகிவிட்டார் தன்னுடைய நாட்டிற்கே திரும்புவோமா என்ற சந்தேகம் அவருக்கு வந்து விட்டது . அந்தளவிற்கு அவருடைய உடல்நிலை மோசமாகவிட்டது

ஒருவழியாக அவருடைய நாட்டிற்கு வந்துசேர்ந்தவுடன் தன்னுடையஅமைச்சரை அருகில் அழைத்து தான் இனிஉயிருடன் இருக்கபோவதில்லை அதனால் தான் இறந்தவுடன் தன்னுடைய இருவிருப்பங்களைமட்டும் செயல்படுத்திடுமாறு வேண்டிக்கொண்டார் அவருடைய அமைச்சரும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தார்.

"முதல் விருப்பமாக தான் இறந்தபின் தன்னுடைய உடலை சுடுகாடுநோக்கி எடுத்துசென்றிடும் வழிமுடிவுவரை தான் வெற்றிகொண்ட நாடுகளில் இருந்துகொண்டுவந்த அனைத்து பொன் வெள்ளி நாணயங்கள் ஒன்றைகூட கையிருப்பில் வைத்திடாமல் அனைத்தையும் கீழே கொட்டிகாலிசெய்துவிடவேண்டும் ஏனெனில் ஒரு ரூபாய்கூட என்னோடு நான் எடுத்து செல்லமுடியாது"

"இரண்டாவதாக என்னுடைய புதைகுழியில் என்னுடைய கைகளை திறந்துவைத்தவாறு வைத்திடவேண்டும் ஏனெனில் நான் பிறக்கும்போது கைகளில் எதையும் எடுத்துவரவில்லை அவ்வாறே நான் இறந்தபின்னரும எந்தவொருபொருளையும் கைகளில் எடுத்தசெல்லவில்லை என அனைவருக்கும் தெரியவேண்டும் " என்றவாறு அவருடைய விருப்பத்தினை கூறிமுடித்தவுடன் அவருடைய உயிரும் அவருடைய உடலைவிட்டு பிரிந்தது.

நீதி நாம் என்ன சம்பாதித்தாலும் வெற்றிகொண்டாலும் நம்மோடு ஒன்றுகூட கொண்டுசெல்லமுடியாது என்பதே உண்மைநிலையாகும்.

திங்கள், 2 நவம்பர், 2015

எந்தவொரு செயலையும் முழுமனதோடு ஈடுபாட்டுடன் செய்வதே சிறந்தது


ஒரு போக்கிரியும் ஒரு சாமியாரும் ஒரு கிராமத்தில் அருகருகே குடியிருந்தனர். சாமியார் எப்போதும் போக்கிரியை பற்றியே எண்ணிக்கொண்டு மந்திரத்தை உச்சரித்துகொண்டிருப்பார்.

போக்கிரியோ எப்போதும் சாமியாரைபோன்று தான் வாழ முடியவில்லையே என எப்போதும் அந்த சிந்தனையிலேயே இருந்துகொண்டு தன்னுடைய பணியை செய்துவருவது வழக்கமாகும்.

ஒருசமயம் அந்தகிராமத்தில் மிகக்கடுமையான புயல் இடியுடன் கூடிய பெரியஅளவு மழை பொழிந்தது. அதனால் அவ்விருவரும் குடியிருந்த கிராமப் பகுதிமுழுவதும் இரவோடு இரவாக வெள்ளத்தில் அடித்துச் செல்ல ஆரம்பித்தது. அதனால் அவர்கள் இருவரும் அந்த வெள்ளப் பெருக்கால் இறந்துவிட்டனர்

. தொடர்ந்து இருவருடைய உயிர்களும் இறப்பிற்கான கடவுளின் முன் கொண்டுசெல்லப்பட்டது. உடன் அவர் போக்கிரியின் உயிரை சொர்கத்திற்கும் ,சாமியாரின் உயிரை நரகத்திற்கும் செல்லுமாறு தீர்ப்புகூறினார்.

உடன் சாமியாரின் உயிரானது ஐயோ! ஐயய்யோ! இது அநீதி! என வாயிலும் வயிற்றிலும் அடித்துகொண்டது. உடன் இறப்பிற்கான கடவுளானவர் அந்த சாமியாரின் உயிரை அமைதியாக இருக்குமாறு கூறி உண்மை நிலவரம் என்னவென இறப்பிற்கான கடவுளின் கூறஆரம்பித்தார்.

சாமியாரின் வாயானது மந்திரச்சொற்களை கூறினாலும் அவருடைய எண்ணம் முழுவதும் போக்கிரியின் செயலையை நினைத்து கொண்டிருந்தது. அதனால் அவர்முழுஈடுபாட்டுடனும் மந்திரம் கூறவில்லை. ஆனால் போக்கிரியோ எப்போதும் சாமியார் கூறும் மந்திரத்தை காதில் கேட்டு மனதிற்குள் உச்சரித்துகொண்டேயிருப்பார் செயல்மட்டும் இயந்திரத்தனமாக செய்துகொண்டுஇருப்பார். அதனால் அவர் முழுமனதோடு மந்திரத்தை எப்போதும் உச்சரித்து கொண்டேயிருந்ததால் அவருக்கு சொர்க்கமும், சாமியாருக்கு நரகமும் கிடைத்தன என விவரங்களை கூறினார்.

நாம் அனைவரும் நம்முடைய செயல்கள் அனைத்தையும் முழுமனதோடு ஈடுபாட்டுடன் செய்வதே சிறந்ததுஎன இதன்மூலம் அறிந்துகொள்க.

தற்போதைய சமூதாய நிலை


பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் நீதி ஒழுக்கம் ஆகியவற்றை பின்பற்றுவதற்காக கண்டிப்பாக வாரம் ஒருநாள் நீதிபோதனை வகுப்பு நடைபெறும். அதில் பல்வேறு நீதிக்கதைகளை கூறி மாணவர்கள் அனைவரும் நல்லொழுக்கங்களை பின்பற்றிடுமாறு அறிவுறுத்தபடுவார்கள்.

அவ்வாறானதொரு நீதிபோதனை வகுப்பில் ஒருமாணவன் தன்னுடைய தகப்பனாரானவர் தன்னிடம் தன்னுடைய தாய் பற்றிய கதையொன்றை கூறியதாக கதைகூறஆரம்பித்தான்.

அவர்களுடைய தாய் கடற்படையில் சிறந்த விமானியாக இருந்தார் ஒருசமயம் அவர் பயனித்த கப்பற்படையின் போர்விமானம் போதுமான எரிபொருள் இல்லாததால் கடற்கரையோர மணலில் சென்று தரையிரங்கியது. அப்போது கைவசம் ஒருபாட்டில் விஸ்கி, கைத்துப்பாக்கி ,கூர்மையான கத்தி ஆகிய மூன்றுமட்டுமே இருந்தன. உடன் அவர் பாட்டில் விஸ்கி முழுவதும் குடித்துமுடித்தார். பின்னர் அருகில் இருந்த கிராமமக்களை தன்னுடைய கைத்துப்பாக்கியிலிருந்த குண்டுகள் முழுவதும் தீரும்வரை சூட்டுவீழ்த்தினார். அதற்கடுத்ததாக தன்னுடைய கையிலிருந்த கூர்மையான கத்தியின் இருமுனையும் மழுங்குமளவிற்கு அருகிலிருந்த கிராமமக்களை வெட்டி வீழ்த்தினார் இறுதியாக பசிமயக்கத்தில் கடற்கரையோரம் சாய்ந்துவிட்டார்

அந்நிலையில் அவர்பணிபுரிந்துவந்த கப்பற்படையின் சகவீரர்கள் உடன் பணிபுரிந்த படைவீரரையும் விமானத்தையும் நீண்டநேரமாகியும் கானோமே என அவரை தேடிபிடித்து அழைத்து சென்று அவருடைய உயிரை காத்தனர். அதனால் உங்களுடைய தாய் விஸ்கி குடித்திருக்கும்போது மட்டும் அவருடைய அருகே செல்லாதே என என்னுடைய தந்தை அடிக்கடி என்னிடம் கூறுவர் என அந்த மாணவன் கூறினான்.

நம்முடைய தமிழ்நாட்டு நிலைகூட அவ்வாறு தான் உள்ளது அனைவருக்கும் சாராயம் மட்டும் எளிதாக கிடைத்திடுகின்றது அதன்மூலம் தமிழ்நாட்டில் வாழும் அனைவரும் தத்தமது சம்பாதிப்பயையும் உடல்நலத்தையும் ஒருங்கே இழப்பதற்கானசூழலும் வளமாக உள்ளன.

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

இந்திய குடும்ப வாழ்க்கையின் நடைமுறை


இந்திய விமானப்படைத்தளத்திற்குள் விமானம் ஒன்று தவறுதலாக தரையிறங்கிவிட்டது உடன்அந்த தளத்தின் உயர்அதிகாரியிடம் அந்த விமானஓட்டியை அழைத்து சென்றனர்

அவரும் விமானப்படைத்தளத்திற்குள் அத்துமீறி அந்த விமானஓட்டி தான் ஒட்டிவந்த விமானத்தை தரையிறங்க செய்ததால் அவரை ஒருநாள்முழுக்க 24 மணிநேரத்திற்கு வேறுஎங்கும் தப்பிச்செல்லாமல் காவலில் வைத்திடுமாறு உத்திரவிட்டார் அவ்வாறு அவரை வீட்டுக்காவல் போன்று அவரை வைத்திருந்து 24 மணிநேரம் முடிந்ததும் அவரை மீண்டும் அந்த விமானப்படைத்தளத்திற்குள் அத்துமீறி விமானத்தை ஓட்டவேண்டாம் என எச்சரித்து அனுப்பினர்

.மறுநாள் அதே விமானம் அந்த விமான படைதளத்திற்குள் முன்பு போன்றே தரையிறங்கியது அதனை தொடர்ந்து அந்த விமான ஒட்டியுடன் ஒருபெண்ணும் இருந்ததை கண்டு இருவரையும் கைதுசெய்து தங்களுடைய தளத்தின் உயர்அதிகாரியிடம் அவ்விருவரையும் அழைத்து சென்றனர். அந்த விமானபடைதளத்தின் முதன்மை அதிகாரி மிகக்கோபமாக ஏற்கனவே எச்சரித்திருந்தும் மீண்டும் ஏன் அத்துமீறி விமானபடைதளத்தில் தரையிறங்க செய்தீர் என வினவியபோது

மன்னிக்கவேண்டும்ஐயா நான் நேற்று நாள்முழுக்க 24மணிநேரமும் இங்குதான் இருந்தேன் வேறு எங்கும் செல்லவில்லை வேறெஎந்த தவறும்செய்யவில்லை என என்னுடைய மனைவியிடம் என்னை பற்றிய உண்மைநிலையை நிரூபிப்பதற்காகவே இந்தமுறை விமான படைதளத்திற்குள் தரையிறங்கியதாகவும் அதனை என்னுடைய மனைவி நேரில் வந்து உறுதிபடுத்தவும் இவ்வாறு செய்ததாகவும் தன்னை இந்த ஒருமுறைமட்டும் போனமுறை செய்தவாறு கைதுசெய்து 24மணிநேரம் கழித்து விடுவித்தால் போதும் என்றும்அந்த விமானி கூறினார்

ஒரே நடைமுறையை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக புரிந்து பின்பற்றுகின்றனர்


ஐபிஎம் என்பது அமெரிக்க நாட்டின் கணினி உற்பத்தியில் மிகப்பெரிய மிகப்பிரபலமான நிறுவனமாகும் .அந்நிறுவனம் தங்களுடைய கணினி உற்பத்திக்கு தேவையான மிகமுக்கியமான உதிரிபாகங்களை வெளிநிறுவனங்களிடமிருந்து கொள்முதல்செய்வது வழக்கமான நடைமுறையாகும் .

அதன்படி அவ்வாறான கணினியின் உதிரி பாகங்களை கொள்முதல் செய்வதற்காக உலகமுழுவதும் உள்ள நிறுவனங்களிடமிருந்து விலைபுள்ளி கோரினர் .

அந்த விலைபுள்ளியில் பல்வேறு நிபந்தனைகளுடன் பொருளின் தரம்பற்றிய நிபந்தனைகளாக பத்தாயிரம் உதிரிபாகங்களில் மூன்று பழுதுடன் இருந்தால் ஏற்கப்படும் என்றும் அதற்குமேல்இருந்தால் பெறபட்ட உதிரிபாகங்கள் அனைத்தும் திருப்பிஅனுப்பிவிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது

. அதன்படி ஜப்பானை சேர்ந்த நிறுவனத்திற்கு இந்த கணினியின் உதிரிபாகங்களை வழங்குவதற்காக ஐபிஎம் நிறுவனம் கொள்முதல் ஆணையை வழங்கியது .

அதனை தொடர்ந்து ஜப்பான் நிறுவனத்திடமிருந்து ஐபிஎம் நிறுவனத்திற்கு அவர்கள் கோரியவாறு பத்தாயிரம் எண்ணிக்கை கொண்ட கணினியின் உதிரிபாகங்கள் தனியான கட்டுகளாகவும் பழுதடைந்த கணினியின் உதிரிபாகங்கள் மூன்றை மட்டும் தனிக்கட்டாகவும் கட்டப்பட்டு ஐபிஎம் நிறுவனத்திற்கு வந்துசேர்ந்தது

அவைகளுடன் தனியாக கடிதம் ஒன்றும் வந்துசேர்ந்தது

அந்த கடித்தத்தில் ஐபிஎம் நிறுவனம் உத்திரவு இட்டவாறு பத்தாயிரம் எண்ணிக்கை கொண்ட கணினியின் உதிரிபாகங்கள் தனியான கட்டுகளாகவும் பழுதடைந்த மூன்று கணினியின் உதிரிபாகங்கள் மட்டுிம் தனிகட்டாகவும் கட்டப்பட்டு அனுப்பப் பட்டுள்ளதாகவும் அந்த மூன்றுமட்டும் சரியாக செயல்படாது அதனால் அந்த மூன்ற உதிரிபாகங்களை மட்டும் கணினிஉற்பத்திக்கு பயன்படுத்தி கொள்ளமுடியாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒரே நடைமுறையை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக புரிந்து பின்பற்றுகின்றனர்

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

நம்மில் பலரும் கண்முன்உள்ள முன்தோற்றத்தை மட்டும் வைத்து தவறாக முடிவுசெய்துவிடுகின்றோம். அதன் பின்புற நிகழ்வுகளைக் கவனிக்க த்தவறிவிடுகின்றோம்


என்னுடைய தந்தைக்கு ஒருகண்மட்டும் இருந்தது. மற்றொருகண் குழிவிழுந்து பள்ளமாகப் பார்ப்பதற்கு மிகக் கோரமாக இருக்கும். இந்நிலையில் சிறுவயதில் நான் படிக்கும் பள்ளிக்கு என்னைக் கொண்டுவந்துவிட்டு செல்வதும்; பின்னர் மாலை என்னை அழைத்துவருவதுமாக இருந்தார். அவருடைய முகதோற்றத்தைப் பார்த்த எங்களுடைய பள்ளி ஆசிரியர்களும் , உடன்பயிலும் மாணவர்களும் ,கிண்டலும் கேளியுமாகப் பேசுவதை கேட்பதற்குச் சகிக்காமல் என்னுடைய தந்தையிடம் அவ்வாறான நிகழ்வை கூறி அவரிடம் முகம்கொடுத்துப் பேசத் தயங்கிவனாக வெறுத்து தூரவிலகிச் செல்ல ஆரம்பித்தேன்.

அதனால், என்னுடைய தந்தை என்னைத் தூரத்து நகரித்திலிருந்த விடுதியுடன் கூடிய பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தார் . நானும் படித்து நல்ல பணியில் அமர்ந்தேன். எனக்குத் திருமனமும் ஆகிவிட்டது. தனியாகப் புதிய வீடுஒன்றினை அருகிலிருந்த நகரத்தில் வாங்கி அதில் என்னுடைய தந்தை தவிர்த்த குடும்பமாகப் பிள்ளைகளுடன் வாழ ஆரம்பித்தேன்.

நீண்டநாட்களுக்குப் பிறகு என்னுடைய தந்தை பேரப்பிள்ளைகளைக் காண நாங்கள் வாழும் எங்களுடைய வீட்டிற்குவந்தார் . எங்களுடைய பிள்ளைகள் அவருடைய முகதோற்றத்தைக் கண்டு பயந்து வெறுத்துத் தூரமாக விலகிஓடியதைக் கண்ணுற்ற நான் அவரிடம், “ நீயார்? யாரைக் கோட்டுகொண்டு எங்களுடைய வீட்டிற்குள் வந்தீர்? உடன் வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள்!” என கோபமாகத் தீட்டினேன்.

அதற்கு அவரும் “தவறான முகவரிக்கு வந்துசேர்ந்துவிட்டேன்போலிருக்கின்றது! சரி தம்பி! நான் சென்று வருகின்றேன்.” என விடைபெற்று சென்றார்.

சிறிதுநாள்கழித்துத் தற்செயலாக என்னுடைய சொந்த ஊருக்கு சென்றேன். அப்போது எங்கள்வீட்டிற்கு அருகிலிருந்த வீட்டுகாரர் என்னுடைய தந்தை இறந்து போய்விட்டதாகவும் நான் வந்தால் அவர் எழுதிய கடிதம் ஒன்றினை என்னிடம் கொடுத்திடுமாறு கூறியதாகவும் கூறி என்னிடம் ஒருகடிதத்தினைக் கொடுத்தார் .

அந்த கடிதத்தில் “அன்பு மகனுக்கு நீ சிறுவயதாக இருந்தபோது நடந்த விபத்து ஒன்றில் உன்னுடைய ஒருகண்ணில் அடிபட்டு பார்வை இழந்து போய்விட்டது. அப்போது, “வேறொருவரின் கண் தானமாகக் கிடைத்தால் அதில் பொருத்தி பழையநிலைக்குக் கொண்டுவரலாம்,” என மருத்துவர் அறிவுரைகூறியதைத் தொடர்ந்து; நான் வயதானவன் என்னுடைய கண் உனக்குப் பயன் படட்டும்;எனத் தானமாக வழங்கி, அந்தக் கண் உனக்குப் பொருத்தபட்டு உன்னுடைய கண்ணின் பார்வை பழையநிலையை அடையசெய்தேன். அதனால் மற்றவர்களின் கின்டலுக்கும்கேலிக்கு ஆளானாலும் பரவாயில்லை நம்முடைய மகனின் கண்பார்வையும் முகமும் பழைய நிலைக்கு ஆனதைக் கண்டு மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக்கொண்டேன். தொடர்ந்து தற்போது என்னுடைய பெயரில் இருக்கும் இந்த வீடு நிலபுலன்கள் அனைத்தும் உன்னுடைய பெயருக்கு பட்டா மாற்றிவிட்டேன் அதற்கான ஆவணங்களையும் பக்கத்துவீட்டுகாரரிடம் ஒப்படைத்துள்ளேன் ;அதனையும் பெற்று குடும்பத்துடன் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியுடனும் வாழ்வாங்கு வாழ்வாயாக!” எனமுடிந்திருந்தது.

“அய்யோ !இவ்வாறு தியாகம் செய்து என்னைக் காத்திட்ட என்னுடைய தந்தையை நான் இவ்வளவு கோபமாகld திட்டி வெறுத்து ஒதுக்கிவிட்டேனே!” என அப்படியே மிகமனவருத்த்துடன் சிறிதுநேரம் அமர்ந்துவிட்டேன்.

இதேபோன்றே நம்மில் பலர் கண்முன்உள்ள முன்தோற்றத்தை மட்டும் வைத்து தவறாக முடிவுசெய்துவிடுகின்றோம். அதன் பின்புற நிகழ்வுகளைக் கவனிக்க த்தவறிவிடுகின்றோம் என்பதே நடப்பு நிலையாகும்

உதவிதேவைபடுவர்களுக்குக் கண்டிப்பாக கிடைக்கச்செய்வதே இயற்கையின் செயல் அல்லது தற்செயல் நிகழ்வாகும்


பிரபலமான மருத்துவர் ஒருவர் தூரத்தில் இருந்த நகரத்திற்கு அவசரமாகப் போகவேண்டிய நிலையில் ஆகாயவிமானத்தில் பயனம் செய்யலாம் எனமுடிவுசெய்து தன்னுடைய பணியை முடித்து விமான நிலையத்திற்கு வந்தபோது அன்று கடுமையான சூறாவளியான புயல்காற்றுவீசி அதிகமழை பொழிய ஆரம்பித்ததால் விமானப் போக்குவரத்து சேவையை நிறுத்தம் செய்துவிட்டனர். அதனால் ,மிகவருத்ததுடன் எப்படி அந்த நகருக்கு சென்று சேருவது என அவர் தவித்தபோது வரவேற்பு பணியாளர் “வாடகை மகிழ்வுந்து ஒன்றினை மாற்று ஏற்பாடாக அமர்த்தியுள்ளதாகவும்,அந்த வண்டி நான்கு அல்லது ஐந்துமணிநேரத்தில் அந்த நகரத்திற்குச் சென்று சேரலாம்”, என்றும் கூறினார் . div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அதனை ஏற்று அவரும் வாடகை மகிழ்வுந்தில் பயனத்தைத் தொடர்ந்தார். இரவுநேரமாக இருந்ததாலும் கடுமையான சூறாவளி,புயல்காற்றுவீசி அதிகமழை பொழிவாக இருந்ததாலும், ஒரே இருட்டாகச் செல்லும் பாதையே தெரியாத அளவிற்கு ஆகியதால் வழியில் மனிதர்கள் வாழும் வீடுகள் ஏதேனும் இருக்கின்றதா அங்குச் சிறிது ஒய்வெடுத்து செல்லலாம் எனத் தேடியபோது, தனியான வீடு ஒன்று தூரத்தில் தெரிந்தது. div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அந்தவீட்டிற்குச் சென்று கதவைதட்டியபோது நடுவயது பெண் கதவைதிறந்து இந்த மருத்துவரை உள்ளே அழைத்து க்குடிப்பதற்கு தேவையான சூடான பாணமும்,பசியைபோக்குவதற்கு த்தேவையான அளவு உணவும் அளி்த்தார். பின்னர் வீட்டின் மையத்தில் அமர்ந்து துதிப்பாடல்களை மனமுருக பாடி வேண்டிகொண்டிருந்தார். div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அந்த பிரார்த்தனை முடிந்தபின்னர் மருத்துவர் அந்தப் பெண்ணிடம் “எதற்காகத் துதிபாடல் பாடி வேண்டுதல் செய்கின்றார்”, என வினவினார் உடன் அந்தத் தாயானவள் “தன்னுடைய மகன் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதனை இந்த மருத்தவரின் பெயரை கூறி அவரால் மட்டுமே குணப்படுத்தமுடியும் என்றும் அந்தஅளவிற்குத் தனக்கு ப் பணவசதி இல்லாததால் தன்னுடைய மகனை நோயிலிருந்து மீண்டுஎழுவதற்காக பிரார்த்தனை செய்வதாகவும்”, கூறியதை கேட்டார். div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
‘இயற்கையானது அவர் செல்லும் விமானசேவையை இரத்துசெய்யவைத்து , வாடகைவண்டியில்அவரைப் பயனம்செய்வைத்து, அந்த பெண்மனியின் மகனை காப்பாற்றுவதற்கு ஏற்படுத்தியுள்ள தற்செயல் நிகழ்வுகளைகண்டு ‘ அந்த மருத்துவருக்கு மிக ஆச்சரியமாக ஆகிவிட்டது ! உடன் அந்தப் பெண்மனியின் மகன் எந்தஇடத்தில் படுக்கவைக்கபட்டுள்ளான் என அறிந்து அங்குச் சென்று அவனுக்குத் தேவையான மருத்துவசிகிச்சைசெய்து உயிரபிழைக்கசெய்தார்.

எப்போதும் இயற்கையின் செயலானது அல்லது தற்செயல் நிகழ்வானது உதவிதேவைபடுவர்களுக்குக் கண்டிப்பாக கிடைக்கச்செய்கின்றது என்பதே உண்மையான நிலையாகும்

செவ்வாய், 13 அக்டோபர், 2015

எப்போதும் எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கு தயாராக இருந்திடுக


ஒருஇருண்ட இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் இளைஞன் ஒருவன் தன்னுடைய தந்தையின் மகிழ்வுந்து வண்டியை தனியாக ஓட்டிவந்தான். அப்போது வழியில் நடுத்தர வயது கொண்ட பெண்ஒருவள் கையசைத்து கொண்டிருந்தாள். உடன் தன்னுடைய வண்டியை நிறுத்தி அப்பெண்மனியை வண்டியில் ஏற்றிகொண்டு சென்றான். அவர்விரும்பும் இடத்தில் கொண்டுசென்று விட்டுவிட்டு தன்னுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

ஒருவாரம் கழித்து ஒருபிரபலமானநிறுவனம் ஒன்றில் அவனுக்கு பணிபுரிவதற்கான நியமன கடிதமும் அதனோடு கூடவே ஒரு நன்றிகடிமும் அந்த இளைஞனுக்கு வந்தசேர்ந்தது. அதில் இருண்ட இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நிர்க்கதியாக நின்றிருந்தபோது தனக்கு உதவிசெய்து தன்னுடைய கணவனின் உயிர்போகவிருந்த ஆபத்தான நேரத்தில் அவரை காப்பாற்ற தனக்கு உதவிய அந்த இளைஞனுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அதற்கு கைமாறாக அந்த இளைஞன் தேடிடும் வேலைவாய்ப்பினை அவருடைய கணவனின் நிறுவனம் ஒன்றின் பணிசெய்வதற்கான நியமன உத்திரவை அனுப்பியுள்ளதாகவும் அதனை பெற்று உடன் பணியில் சேருமாறும் கோரியிருந்தது.

இதேபோன்று நாமும் நம்முடைய வாழ்வில் எப்போதும் எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கு தயாராக இருக்கவேண்டும்.

அதனை தொடர்ந்து அவ்வாறு உதவிசெய்வதற்கான நன்றியை தெரிவிப்பதோடு கைமாறு செய்வதற்கும் தயாராக இருக்கவேண்டும்என்ற அடிப்படை நியதியை பின்பற்றிடுக.

இந்தியாவில் இதுபோன்ற நீதிமன்றம் ஏழைக்கு உதவிடும் நிகழ்வு நடைபெறுமா


மார்சுகி எனும் பெயர் கொண்ட இந்தோனேசிய நீதிபதி ஒருவர் இருந்தார். அவர்பணிபுரிந்துவந்த நகரத்திலிருந்த ஒரு தோட்டத்திலிருந்து சில மரவள்ளிக்கிழங்குகளை வயதானகிழவி ஒருவர் திருடிவிட்டார் என்ற வழக்கு அவரிடம் வந்தது. அந்த வயதான கிழவியும் அந்த செயலை தன்னுடைய வறுமையான குடும்பு சூழலால் அதாவது அவருடைய பேத்தி பசியோடு இருந்ததாகவும் அவருடைய மகன் சுகவீனமுற்றிருந்த காரணத்தால் அவருடைய பேத்தியின் பசியினை போக்க அவ்வாறு திருடியாதாக ஒப்புக்கொண்டார்.

ஆனால் , தோட்ட மேலாளர் அந்த வயதான கிழவியினை போன்று மற்ற யாரும் அவருடைய தோட்டத்தில் திருடாமல் தடுப்பதற்காக அந்த வயதான கிழவியை மன்னித்தலுக்கு பதிலாக கண்டிப்பாக தண்டிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி வாதாடினார்.

நீதிபதியானவர் அந்த வயதான கிழவியை பார்த்து ஆவணங்கள் அனைத்தும் மிகச்சரியாக அந்த வயதான கிழவிக்கு ஏதிராகவே இருப்பதாகவும் தான் அந்த வயதான கிழவிக்காக இரக்கபடுவதை தவிர சட்டபடியும் ஆவணத்தின் படியும் தண்டிப்பதை தவிர வேறு வழியில்லை என கூறி அந்த வயதான கிழவியானவள் ஒரு மில்லியன் அமெரிக்கடாலர் அபராதம் செலுத்தவேண்டும் அல்லது 2 1/2 ஆண்டுகள் சிறையில் இருக்கவேண்டும் என சட்டம் கூறுவதால் ஒரு மில்லியன் அமெரிக்கடாலர் அபராதம் விதிப்பதாக தீர்பு கூறினார் .

உடன்அந்த வயதான கிழவி நான் எங்குசென்று அந்த பணத்தை கொண்டுவருவேன் அவ்வளவு தொகை இருந்தால் நான் ஏன் அந்த மரவள்ளிகிழங்கு தோட்டத்திற்கு திருடவந்தேன் என்னுடைய மகனை மருத்துவசிகிச்சை செய்து நன்றாக செயல்படும்படி செய்வேனே என அழுது புலம்பினாள்.

இதனை கண்ணுற்ற நீதிபதி உடன்தன்னுடைய தலையில்அணிந்திருந்த தொப்பியை கழற்றி தன்னுடைய பையிலிருந்து 1000 அமெரிக்க டாலரைஅதில் வைத்து தன்னுடைய உதவியாளரை அழைத்து அந்த நீதிமன்றத்திற்கு வந்துள்ள அனைவரிடமும் அந்த வயதானகிழவிநீதிமன்றத்திற்கு செலுத்தவேண்டிய அபராத தொகைக்கான நன்கொடையை வசூலிக்குமாறு கூறினார்.

உடன் அந்த நீதிபதியின் உதவியாளர் அந்த நீதிமன்றத்திற்கு வந்திருந்த அந்த தோட்டமேலாளரையும் சேர்த்து அனைவரிடமும் நன்கொடை வசூலித்தார். முடிவாக, அவர் அந்த வயதான கிழவி செலுத்தவேண்டிய அபராத தொகையான ஒருமில்லியன் அமெரிக்கடாலரை செலுத்தியபின் மிகுதி இரண்டரை மில்லியன் தொகை இருந்ததை அந்தவயதான கிழவியும் வழங்கி அவருடைய மகனின் மருத்துவசெலவிற்காக அதனை பயன்படுத்தி கொள்ளுமாறு அந்த நீதிபதி அறிவுரைகூறி அனுப்பிவைத்தார்.

நம்முடைய இந்தியாவில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறுமா என யோசித்துபாருங்கள் .

திங்கள், 5 அக்டோபர், 2015

நம்மால் முடிந்த அளவிற்கு மற்றவர்களை மகிழச்சியாக வைத்திட முயற்சி செய்திடுவோம்


ஒரு பத்துவயது சிறுவன் நகரத்தில் இருந்த சிறுவர்களுக்கான தின்பண்டங்கள விற்பணைசெய்திடும் கடை ஒன்றிற்குள் நுழைந்து அங்குவைக்கபட்டிருந்த தின்பண்டங்களுள் பெரியபொருள் ஒன்றின் விலையை விசாரித்தான்

இருபதுரூபாய் என கூறியதும் தன்னுடைய பையிலிருந்த பணத்தை எண்ணிக்கைசெய்தான் தன்னிடம் ரூபாய் இருபது மட்டும் இருப்பதை அறிந்துகொண்ட பின்னர் அதைவிட சிறிய தின்பண்ட பொருளின் விலையை விசாரித்தான்

அதனுடைய விலை பதினைந்து ரூபாய் எனக்கூறியதும் அந்த சிறிய பொருளையே தனக்கு வழங்குமாறு கூறினான் அதற்கான தொகையை வழங்கியபின் அந்த தின்பண்டபொருளை தின்று முடித்துவிட்டு தண்ணீர் குடித்துவிட்டு எழுந்தசென்றான்

உடன் அங்கு பணிசெய்யும் பணியாளர் ஒருவர் அந்த சிறுவன் அமர்ந்து சென்ற இருக்கையை சுத்தம் செய்திடும்போது அங்கு ஐந்துரூபாய் அன்பளிப்பாக வைத்திருப்பதை கண்டு பணியாளர் மிக மகிழ்ச்சியடைந்தார்

ஆம் நாமும் இந்த சிறுவனை போன்று நம்மால் முடிந்த அளவிற்கு மற்றவர்களை மகிழச்சியாக வைத்திட முயற்சி செய்திடுவோம்

நாம் எந்தவழியை பின்பற்றுகின்றோமோ அதற்கற்ப நம்முடைய வாழ்வு அமையும்


இருவேறு கிராமங்கள் அருகருகே இருந்துவந்தன அவற்றுள் கோபம்,பொறாமை , மற்றவர்களின் முதுகில் குத்துவது தந்திரமாக மற்றவர்களின் காலை வாரிவிடுவது , ஏதாவது சண்டை சச்சரவு அடிதடி நடத்துவது என எப்போதும் போர்க்களம் போன்றே முதலில் உள்ள கிராமத்து மக்களின் வாழ்க்கை சூழல் இருந்துவந்தது

அதற்குமாறாக இரண்டாவது கிராமத்தில் உண்மை,நேர்மை,அமைதி, மகிழ்ச்சி மற்றவர்களுக்கு உதவுவது ஒற்றுமையாக இருப்பது ஒருவருக்கொருவர்விட்டுகொடுத்து வாழ்வது என்றவாறான சூழலில் மக்கள் வாழ்ந்துவந்தனர் கால ஓட்டத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகுமுதலில் குறிப்பி்ட்ட கிராமமானது முழுவதும் அழிந்து மக்கள் இருந்ததற்கான அடிச்சுவடே இல்லாமல் போய்விட்டது ஆனால் இரண்டாவது கிராமமானது எப்போதும் போன்று வழக்கமாக சகோதர உணர்வுடன் நீண்டநாட்கள் இருந்து வந்தது

இந்த இருவேறு கிராம மக்களின் வாழ்க்கையின் தன்மைகளில் தனிமனிதனாகிய நாம் எந்தவகையான வாழ்வை தெரிவுசெய்து வாழுகின்றோமோ அதைபொருத்தே நம்முடைய வாழ்வின் இயக்கமும் முடிவும் அமையும் என்பதை மனதில் கொள்க.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

எந்தவொரு அவசரமாக இருந்தாலும் மிககவணமாக சரியான முடிவெடுத்து சரியானமருத்துவ சிகிச்சையை எடுப்பதே சிறந்தது


நன்பர் ஒருவர் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உறவினர் வீடுகளுக்கு செல்வது வழக்கமான செயலாகும் அவ்வாறு சென்றிட்டபோது இரவில் நன்பருடைய கண்களில் வலி அதிகமாக இருந்ததால் வலிநிவாரன சொட்டுமருந்து கோரியபோது குளிர்வூட்டும் பெட்டியில் இருப்பதை அறிந்து கண்வலியின் தாங்கமுடியாத நிலையில் அவசரசத்தில் ஏதோவொரு சொட்டுமருந்தினை கண்களில் பயன்படுத்தி கொண்டார்

உடன் கண்வலிபோய்விட்டது ஆனால் கண்களின் பார்வையானது தீரைமூடியவாறான தோற்றம் ஏற்பட்டுவிட்டது அதனால் நன்பரின் உறவினரின் உதவியுடன் அருகிலிருந்த மருத்தவமனைக்கு சென்று பார்த்தபோது நல்ல கண்மருத்துவரை அனுகி சரிசெய்துகொள்ளுமாறு அவர் வழிகாட்டிவிட்டார் அதனால்உறவினரின் உதவியுடன் சிறப்பு கண்மருமருத்துவரை அனுகினார் அந்த கண்மருத்துவரும் உடனடியாக அவரை பரிசோதித்து மிகச்சிரியான மாற்றுமருந்தினை கண்ணிற்கு இட்டு சிறிதுநேரம் ஓய்வெடுக்க செய்தார் அதன்பின்னர் நன்பருடைய கண்பார்வை பழைய வழக்கமான நிலைக்கும திரும்பியது

ஆம் பொதுவாக நாம் அனைவருமே அவசரத்தில் தவறான மருத்துவ சிகிச்சை எடுத்து அல்லல் உறுகின்றோம் எந்தவொரு அவசரமாக இருந்தாலும் மிககவணமாக சரியான முடிவெடுத்து சரியானமருத்துவ சிகிச்சையை எடுப்பதே சிறந்தது என பரிந்துரைக்கபடுகின்றது

வாழ்க்கையை நேர்மறையாக சிந்தித்து நல்லதே நடக்கும் என செயல்படுக


நம்முடைய நாட்டில் தற்போது சுதந்திரமான பொருளாதார கொள்கைகளை பின்பற்றுவதை தொடர்ந்து நன்பர் ஒருவர் அவர் பணிபுரிந்து வந்த நிறுவனமானது அந்நிறுவனத்திலிருந்து அவரை பணிநீக்கம் செய்துவிட்டது. அதனால் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்முதல்செய்து வாழ்வதற்கே மிககசிரமமான நிலைக்கு அவருடை குடும்பம் தள்ளபபட்டது. மேலும் அவருடைய பிள்ளைகளை தரமான பள்ளிகளில் கல்விகற்பதற்காக சேர்க்கமுடியாமல் அல்லாடும் நிலைக்கு அவர் ஆளாக்கபட்டார் அதுமட்டுமல்லாது அவர்குடியிருந்த வாடகை வீட்டின் சொந்தக்காரரர் உடன் அவரை வீட்டினை காலிசெய்திடுமாறு நிர்பந்த படுத்தினார் இந்நிலையில் அவருடைய மாமனார் இறந்துவிட்டதால் மனைவி மிக துக்கத்தில் அழுதுகொண்டிருந்தாள் மேலும் நன்பர் சாலைவழியேநடந்து செல்லும்போது அந்தவழியே சென்றுகொண்டிருந்த சுமையுந்துவண்டி ஒன்று அவர்மீது மோதி அவருடைய உடலில் ஏராளமான காயங்களை ஏற்படுத்திவிட்டு சென்றதால் உடன் அந்நன்பரை அரசுமருத்துவமனையில் கொண்டுசென்று சேர்த்திருந்தனர் ஆம் துன்பம் வரும்போது நமக்கு நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் துன்பம் தருபவையாகவே வந்து சேருகின்றன என்னசெய்வது என திகைத்து அல்லாடும் நிலைக்கு தள்ளபடுவதே இயற்கையாக உள்ளது

இந்நிலையில் பொதுவாக நம்முன் இருவேறு மாற்று வழிகளே நாம் தெரிவுசெய்து பின்பற்றுவதற்காக தயாராக இருக்கின்றன ஒன்று இவ்வாறான துன்ப சூழலில் சிக்கிமூழ்கி தன்னுடைய வாழ்க்கையை முடிந்துபோனதாக முடிவுசெய்து குடும்பத்துடன் அல்லது தான்மட்டும் வாழ்வை முடித்துகொள்வது இரண்டாவது வழியாக வாழ்வில் எத்தனை துன்பம் வந்தாலும் அவைகளை வெற்றிகொள்வோம் என இந்த துன்பநிகழ்வுகளுக்கு சரியான தீர்வினை கண்டு வெற்றிகொள்வது

நன்பர் இரண்டாவது வழிமுறையை பின்பற்றினார் அதாவது அவர்மிகவும் பொறுமையாக இந்த துன்பநிகழ்வுகளை எதிர்கொண்டு சரியான காலம்வரும்வரை காத்திருந்தார் தொடர்ந்து விபத்தினால் ஏற்பட்ட காயங்களும் ஆறிவிட்டதால் உடல்நிலையும் சரியாகிவிட்டது அதன்பின்னர் நல்லநிறுவனம் ஒன்று இவருடைய பணிஅனுபவத்தையும் கல்வித்தகுதியை கருத்தில்கொண்டு மிகப்பெரிய பதவியை போதுமான சம்பளத்தில் குடியிருப்பதற்கென ஒருகுடியிருப்புவீட்டுடன் வழங்கியது மேலும் தங்களுடையபிள்ளைகளையும் நல்ல தரமான பள்ளியில் சேர்த்தார் அவருடைய குடும்ப வாழ்க்கையும் பொருளாதார சிக்கலில்இருந்து மீண்டுநல்லைநிலைக்கு வந்தேசேர்ந்தது ஆம் துன்பத்தில் மூழ்கிடாமல் நல்லதை நினைத்து நல்லதையே செய்தால் நல்லநிகழ்வுகளை தொடர்ந்து வருவது இயற்கையாகும்

பெரும்பாலானவர்கள் முதல்முடிவையே தெரிவுசெய்வார்கள் அவ்வாறான நிகழ்வுகளின் செய்திகளையே நாம் நாளிதழ்களில் தினமும் ஏராளமான அளவில் பார்த்து வருகின்றோம் அவ்வாறான வழிமுறையை தெரிவுசெய்வது தவறாகும் எப்போதும் வாழ்க்கையை நேர்மறையாக சிந்தித்து நல்லதே நடக்கும் என நன்பரை போன்று இரண்டாவது வழிமுறையை தெரிவுசெய்வதே சரியான முடிவாகும்

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

எந்தவொரு சூழலையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னுடைய பணியை தொய்வின்றி செய்பவனக்கு வெற்றி கண்டிப்பாக கிடைக்கும்


ஒருவிவசாயி தன்னுடைய நிலத்தில் விதைவிதைத்துவந்தார் அப்போது இருவிதைகள்மட்டும் தவறி அவருடைய நிலத்தை தாண்டி அருகிலுள்ள பயிரபடாத நிலத்தில் விழுந்தன அவையிரண்டில் ஒருவிதைமட்டும் பரவாயில்லை என மனதை தேற்றிகொண்டு இந்த நிலத்திலும் நன்கு வேர்ஊன்றி வளர்ந்து வழக்கமான செயலை செய்வேன் என கிடைத்த ஈரப்பதத்தை கொண்டு முளைக்க ஆரம்பித்தது மற்றொரு விதையோ கட்டாந்தரைபோன்ற இந்த நிலத்தில் எவ்வாறு முளைப்பது வேரைஊன்றி வளருவது இந்த செயலிற்கு போதுமான தண்ணீர் நம்க்கு கிடைக்குமோ கிடைக்காதோ என மன குழப்பத்தில் அப்படியே கிடந்தது ஒருவாரம் கழித்தபோது முதல்விதை நன்குமுளைத்து ஒருசில இலைகளுடன் தரைக்குமேலை விரித்து வளருவதற்கான அறிகுறியை காண்பித்தது ஆனால் இரண்டாவது விதை முளைவிடாமல் அப்படியே இருந்ததால் அங்குவந்த பறவை ஒன்று அந்த விதையை இரையாக உட்கொண்டு சென்றுவிட்டது

ஆம் எந்தவொரு சூழலையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னுடைய பணியை தொய்வின்றி செய்பவனக்கு வெற்றி கண்டிப்பாக கிடைக்கும் சூழலைகண்டு சோர்வடைபவன் தோல்வியுறுவான் என்பது நிச்சயமாகும்

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

நாமனைவரும் ஒருகாலத்தில் முதியோர் இல்லம் நோக்கி செல்ல இருப்பவர்களே


நகரத்தில் வாழ்ந்து வந்த மனிதன் ஒருவனுடைய வயதான தந்தையும் தாயும் கிராமத்தில் வாழ்ந்துவந்தனர் குறிப்பிட்ட காலமுடிவில் அவனுடைய தந்தை இறந்துவிட்டதால் தாயை தனியாக கிராமத்தில் விட்டுவிட விருப்பம் இல்லாமலும் தன்னுடன் அழைத்து சென்று வைத்துகொள்ளவழியில்லாமலும் தவித்தபோது முதியோர் இல்லம் ஒன்று கிராமத்திற்கு அருகிலிருந்த நகரத்தில் இருந்ததை அறிந்து அங்கு தன்னுடைய தாயை மட்டும் கொண்டு சென்று சேர்த்தான்

பின்னர் அவ்வப்போது அந்த முதியோர் இல்லத்திற்கு சென்று தன்னுடைய தாயை பார்த்து நலம் விசாரித்து வந்தான் இந்நிலையில் திடீரென அவனுடைய தாயினுடைய உடல்நிலை சரியாக இல்லாததால் உடன்வருமாறு அவனுக்கு அழைப்பு வந்தது அவனும் பதறியடித்துகொண்டு அந்த முதியோர் இல்லத்திற்கு சென்று தாயின் அருகே அமர்ந்து அவருடைய உடல்நலனை பற்றி பேசிக்கொண்டிருந்தான்

அப்போது அந்ததாய் தன்னுடைய மகனிடம் தம்பி உடனே இந்த முதியோர் இல்லத்திற்கு காற்றோட்டமாக இருப்பதற்கு போதுமான எண்ணிக்கையில் காற்றாடிகள் வாங்கி வழங்கு அதன்பின்னர் பச்சை காய்கறிகள் உணவுபொருட்கள் போன்றவை காய்ந்து கெட்டுபோகாமல் இருப்பதற்கான குளிர்பதனபெட்டி ஒன்று வாங்கி கொடுத்திடு என படுக்கையில் இருந்தவாறு கட்டளையிட்டதை தொடர்ந்து இவ்வளவு நாள் இருந்தபோது குறையேதும் கூறாமல் இருந்துவிட்டு இப்போதுமட்டும் இந்தகுறைகளெல்லாம் உள்ளன உடன் தீர்வுசெய்திடுமாறு கூறுகின்றாயே என வினவியபோது

நான் அந்த கால மனஷி தம்பி எப்படியோ நான் இதுவரையில் சமாளித்துவிட்டேன் வருங்காலத்தில் உன்னுடைய பிள்ளைகள் உன்னை இங்குதானே கொண்டுவந்து சேர்ப்பார்கள் அப்போது அவை உனக்கு உதவியாக இருக்கமல்லவா என பதிலிறுத்தாள் அந்த தாய்.

ஆம் நாமனைவரும் ஒருகாலத்தில் முதியோர் இல்லம் நோக்கி செல்ல இருப்பவர்களே என்ற உண்மைய உணர்ந்து செயல்படுக

அருஞ்சொற்பொருள் விளக்க கதைகள்


கடந்த வருடம் மழைசரியாக பொழியாததால் கிராமத்தின் வாழ்க்கை மிகசிரமமாக இருந்தது அதனால் அந்த கிராமக்கள் அனைவரும் கூடி அந்த கிராமத்தின் பிரபலமான கோவிலிற்கு மழைவேண்டி ஊருனிபொங்கல் வைக்கசென்றனர் அந்த விழாவிற்கு ஒரேயொருநபர் மட்டும் மழைவந்தால் நனையாமல் இருப்பதற்காக குடை ஒன்று எடுத்து சென்றார் அதுவே மழை கண்டிப்பாக வரும் என்ற உண்மையான நம்பிக்கை(FAITH )யாகும்

பெற்றோர்களில் சிலர் தங்களுடைய பிள்ளைகளை உயரேதூக்கி வீசி எறிந்து பிடித்திடுவார்கள் அந்த குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் சிரி்த்துகொண்டிருக்கும் அந்த பிள்ளைகளும் நாம் தவறி தரையில் விழமாட்டோம் அவ்வாறு விழாமல் நம்மை பெற்றோர்கள் பிடித்துகொள்வார்கள் என சிரித்தபடி இருக்கும் அதுவே பொறுப்புறுதி நம்பிக்கை(TRUST)யாகும்

ஒவ்வொருநாளும் மறுநாள்காலை நாம் எழுவது சந்தேகமே இருந்தாலும் நாமனைவரும் ஐந்துமணிக்கு எழுவதற்காக அலாரம் அடிக்குமாறு அமைத்துவிட்டு படுக்கசெல்வோம் அதுவே நம்முடைய வாழ்விற்கான நம்பிக்கை(HOPE)யாகும்

எதிர்காலத்தை பற்றி ஒன்றும் தெரியாமலேயே எதிர்காலத்தில் இந்திந்த செயலை சாதிக்கபோவதாக திட்டமிடுகின்றோம் இதுவே தன்னம்பிக்கை(CONFIDENCE )யாகும்

இவ்வுலகில் பலரும் நோய்நொடியால் அவதியுறுவதை பார்த்தபின்னரும் நாம் அனைவரும் திருமணம் செய்துகொண்டு மனைவி மக்கள் என வாழ எண்ணுகின்றோம் அதுவே மனித நேயம் அல்லதுஅன்பு (LOVE )ஆகும்

எண்பது வயது கிழவன் ஒருவன் அறுபத்திநான்கு வருடஅனுபவமுள்ள பதினாறு வயது வாலிபன் இவன் எனும் வாசகத்துடன் கூடிய ஒரு பதினாறு வயது வாலிபனினுடைய உடையை அணிந்துகொண்டு இருந்தான் அதுவே மனப்பாங்கு (ATTITUDE)ஆகும்

எந்தவொரு சூழ்நிலையிலும் எந்தவொரு பிரச்சினையையும் சாதுரியமாக கையாளதெரிந்திருந்தால் வாழ்வின் இயக்கம் தங்குதடையின்றி செல்லும்


ஆல்பர்ட ஐன்ஸ்டின் எனும் அறிவியல் அறிஞர் தன்னுடைய புகழ்பெற்ற சார்பியில் கொள்கை பற்றி பல்வேறு பல்கலைகழகங்களுக்கும் சென்று விளக்க சொற்பொழிவு ஆற்றிவருவது வழக்கமான செயலாகும்

அவ்வாறான சொற்பொழிவிற்கு சென்றுகொண்டிருக்கும்போது ஒருநாள் அவருடைய மகிழ்வுந்து வண்டியை ஒட்டும் செல்லும் ஓட்டுநர் ஐயா நான் உங்களுடைய புகழ்பெற்ற சார்பியில் கொள்கை பற்றிய விளக்க சொற்பொழிவை பலமுறை கண்டு கேட்டு வருவதால் எனக்கு மனப்பாடமாக ஆகிவிட்டது அதனால் நானே அதனை பற்றி விளக்க சொற்பொழிவு ஆற்றும் அளவிற்கு எனக்கு தன்னம்பிக்கை வந்துவிட்டது என கூறியவுடன் உனக்கு ஒருவாய்ப்பு தருகின்றேன் எனக்கு பதிலாக இன்று நீஅந்த விளக்க சொற்பொழிவு ஆற்றுக என ஆல்பர்ட ஐன்ஸ்டின் பதிலளித்ததும்

உடன் இருவரும் உருவத்தை மாற்றியமைத்துகொண்டு இடமாறி அமர்ந்து பல்கலைகழகத்திற்குள் சென்று மேடையில் அன்றைய சார்பியில் கொள்கை பற்றிய விளக்க சொற்பொழிவு பார்வையாளர்களிடம் அந்த மகிழ்வுந்து ஓட்டுநராலேயே வழங்கபட்டது

கூட்டமுடிவில் பார்வையாளர்களில் ஒருவர் தன்னுடைய சார்பியில் கொள்கை பற்றிய சிற சந்தேகத்தை நிவர்த்தி செய்திடுமாறு கோரியபோது அதுஎன்ன பிரமாதம் உங்களுடைய சந்தேகத்தை என்னுடை மகிழ்வுந்து ஓட்டுநரே நிவர்த்திசெய்வார் என ஐன்ஸ்டினை அழைத்து அவரிடம் அந்த சந்தேகத்தை கூறிடுமாறு திசைதிருப்பியபின்னர் ஐன்ஸ்டினும் பார்வையாளர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தார்

ஆம் எந்தவொரு சூழ்நிலையிலும் எந்தவொரு பிரச்சினையையும் சாதுரியமாக கையாளதெரிந்திருந்தால் வாழ்வின் இயக்கம் தங்குதடையின்றி செல்லும் என அறிந்து கொள்க

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

நல்ல நிகழ்வையும் திரும்பு திரும்ப கேட்கும்போது நம்முடைய மனமும் உடலும் அதற்கேற்ப தகவமைத்து புணரமைத்து கொள்கின்றன


ஒருமருத்துவமனையில் இருநோயாளிகள் அருகருகே இரு படுக்கைகளில் சேர்க்கபட்டு ஒருவர் சாளரத்திற்கு அருகேயும் மற்றவர் உள்பகுதியில் இருந்த படுக்கையிலும் அனுமதிக்கபட்டு மருத்துவசிகிச்சை அளிக்கபட்டுவந்தனர்

இருவரும் தங்களுடைய குடும்பவிவரங்களை தங்களுக்கு பகிர்ந்துகொண்டு சிறந்த நண்பர்களாக மாறிவிட்டனர் சாளரத்தின் ஓரம் இருந்தவர் தான் சாளரத்தின் ஓரம் உள்ள படுக்கையில் இருப்பதால் அருகே இருந்த அழகிய நீர்நிலையை பற்றியும் அதில் உள்ள நீர்வாழ் மரங்களை பற்றியும் நீந்திதிரியும் பறவைகளை பற்றியும் இயற்கைகாட்சிகளை அழகாக விவரித்துகொண்டு இருப்பார் உள்பகுதியில் உள்ள மற்றொருவர் அந்த இயற்கை காட்சிகளை பார்க்கஇயலாது ஆனாலும் தன்னுடைய கண்ணை மூடிக்கொண்டு மனக்கண்ணில் அந்த இயற்கை காட்சிகளை கண்டு மகிழ்வார்

இவ்வாறான நிகழ்வு தொடர்ந்து இருந்துவந்ததால் உள்பகுதியில் இருந்தவர் விரைவில் நன்கு குணமடைந்துவந்தார் ஒருநாள் சாளரத்தின் ஓரம் இருந்தவர் படுக்கையிலிருந்து எழாமல் இருப்பதை பணியிலிருந்த செவிலியர் உடன் பார்த்து மருத்துவரை அழைத்து காண்பித்தபோது அவர் இறந்துவிட்டார் என அறிவித்து உடன் அவருடைய உடல் எடுத்துசெல்லபட்டு அந்த சாளரத்தின் ஓர படுக்கைக்கு உள்பகுதியில் நன்கு தெளிவடைந்துவருபவரை மாற்றினர்

அவரும் தன்னுடயை படுக்கையிலிருந்து சாளரத்தின் வழியாக வெளியில் பார்த்தபோது தனக்கு விவரிக்கபட்டவாறு காட்சி எதுவும் தெரியாததை கண்டு ஆச்சரியம் அடைந்து பணியிலிருந்த செவிலியரை அழைத்து தனக்கு தினமும்இல்லாத இயற்கை காட்சிகளை தான் காண்பதாக எவ்வாறு விவரித்து வந்தார் என வினவியபோது

முதலில் சாளரத்தின் ஓரம் அனுமதிக்கபட்டவருக்கு இருகண்களும் விபத்தில் பறிபோய்விட்டது என்றும் உயிரோடு இருப்பது சிறிது காலம்தான் என அறிந்துகொண்டதால் அருகிலிருக்கும் உங்களுடைய உயிரையாவது சிறிதுகாலம் பிழைக்கவைக்கலாம் என தான் ஏற்கனவே கண்ட காட்சிகளை தினமும் கூறி உங்களை உற்சாக படுத்தினார் என பதிலிறுத்தார்

ஆம் எந்தவொரு நல்ல நிகழ்வையும் திரும்பு திரும்ப கேட்கும்போது நம்முடைய மனமும் உடலும் அதற்கேற்ப தகவமைத்து புணரமைத்து கொள்கின்றன என்பதே இயற்கையான நிகழ்வாகும்

எந்தவொரு உயிரும் தன்னுடைய உயிரை காத்துகொள்ளும் நிர்பந்தத்தில் தன்னுடைய இயல்பான செயலை செய்யமுற்படுவது இயற்கையான செயலாகும்


ஒரு அரசனுக்கு பக்கத்து நாட்டு அரசனொருவன் சிறந்த இரு புறாக்களை பரிசாக அளித்தான் அவைகளுள் ஒன்று மிகநன்றாக பறந்து சென்று திரும்பி அரசனின் மடியை வந்ததடைந்தது மற்றொரு புறாவோ பறக்காமல் சன்டித்தனம் செய்துவந்தது

அதனால் அந்த அரசனின் ஆளுமையின் கீழுள்ள நாடுமுழுவதும் இருந்த சிறந்த பறவை வல்லுனர்கள் அனைவரையும் அழைத்துவந்த அந்தபறக்காத புறாவை பறக்கவைப்பதற்கு எல்லாவகையிலும் எவ்வளவுமுயன்றும் அந்தபுறாவை பறக்கவைக்கமுடியவில்லை

இந்நிலையில் ஒருகிராமத்து விவசாயி இதுபோன்ற பறாக்காத பறவைகளை பறக்கவைப்பதாக செய்திஅறிந்த அரசன் அந்த விவசாயியை அழைத்து அந்த பறக்காத புறாவை மறுநாளைக்குள் எப்படியாவது பறக்கவைத்திடுமாறு கோரினார் உடன் மறுநாள் கண்டிப்பாக அந்த அந்தபறக்காத புறாவை பறக்க வைத்திடுவதாக அந்த விவசாயி உறுதிஅளித்து சென்றார்

மறுநாள் அந்த விவசாயி உறுதியளித்தவாறு அந்தபுறாவும் பறந்துசென்று திரும்பி அரசனின் மடியை வந்ததடைந்தது கண்டு அந்த அரசனுக்கு அதிகஆச்சரியமாகிவிட்டது

" எவ்வாறு சிறந்த பறவை வல்லுனர்களாலேயே பறக்கவைத்திடமுடியாத ஒருபுறாவை அந்தவிவசாயியால் பறக்கவைக்கமுடிந்தது" என வினவியபோது

"அதுஒன்றும் பெரியதொழில்நுனுக்கமான செயல் இல்லை ஐயா எந்தவொருஉயிரும் இக்கட்டான நிலையில் மாட்டிகொண்டால் தானாகவே தன்னுடைய இயல்பான செயலை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடும் அதனடிப்படையில் அந்தபுறாவை மரத்தின் நுனி கிளையில் அமர்ந்திடுமாறு செய்துவிட்டு அந்த கிளையின் அடிப்பாகத்தை வெட்டி கீழே சாய்த்தேன் கிளைஒடிந்துவிழுந்ததால் அந்தபுறாவானது கீழேவிழுவதிலிருந்து தப்பித்து தன்னுடைய உயிரை காத்து கொள்வதற்காக பறந்து சென்றது" என பதிலிறுத்தார்

ஆம் எந்தவொரு உயிரும் தன்னுடைய உயிரை காத்துகொள்ளும் நிர்பந்தத்தில் தன்னுடைய இயல்பான செயலை செய்யமுற்படுவது இயற்கையான செயலாகும்

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

இந்தியமக்கள் திருந்தும் நாள் எந்தநாளோ?


நண்பர் ஒருவர் இந்தியாவின் பிரபலமான நகரத்திலுள்ள உணவகத்திற்கு சென்றார் அவ்வுணவகத்தில் அனைவரும் சத்தமாக பேசிக்கொண்டும் சாப்பிடும் உணவுகளை கீழே சிந்திகொண்டும் சிறிதளவு மட்டும் சாப்பிட்டுவிட்டு மிகுதியை அப்படியே வீணாக தட்டில் வைத்து வீணாக்கிவிட்டு எழுந்து கொண்டும் இருந்தார்கள்

ஒருவரிடம் "ஐயா! உங்களுடைய தட்டில் சாப்பிடாமல் மிகுதி இவ்வளவு உணவை வீணாக வைத்திடுகின்றிர்களே! சரியா?" என கேள்வி கேட்டவுடன் "அந்த உணவிற்குதான் நான் பணம் கொடுத்துவிட்டேன் அதனால் அதனை நான் முழுவதும் சாப்பிட்டு காலியாக்குவதும் மிகுதி வீணாக வைத்துவிட்டு எழுவதும் என்னுடைய விருப்பம்" என சண்டையிட துவங்கிவிட்டார்.

இதே நிகழ்வு ஜெர்மனி நாட்டில் எவ்வாறு கையாளபடுகின்றது தெரியுமா அவ்வாறு வீணாக்குபவர்களை உடன் காவல் அதிகாரி வந்து "அந்த பொருட்களுக்கு நாம் பணம் கொடுத்தாலும் அதனை வீணாக்காமலிருந்தால் வேறுயாருக்காவது தேவைப்படுபவர்களுக்கு பயன்படுமல்லவா உணவில்லாமல் பட்டிணியால் வாடுபவர்கள் எத்தனை கோடிபேர்கள் அவர்களுக்கு இந்த வீணாக்கிய உணவு பயன்படுமல்லவா" என விவரம் கூறி தண்டத்தொகையை வசூலித்து செல்வார்கள்

ஆனால் இந்தியாவில் இதுபோன்று எண்ணற்ற வளங்களை வீணாக்குவதிலேயே அனைவரும் குறியாக இருக்கின்றனர் கேள்விகேட்டால் அதற்கான தொகையைதான் வழங்கிவிட்டோமே என வாதிடுவார்கள் இந்தியமக்கள் திருந்தும் நாள் எந்தநாளோ?

நிறுவனத்தின் திறமையற்ற மேலாளர்களின் பொதுவான பண்பியல்புகள்


திறனற்ற மேலாளர்கள் தமக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களைவிட மிக உயர்ந்த பதவியில் இருப்பதால் அவர்களிடமிருந்து மிக தூரத்தில் விலகியே இருப்பார்கள்

திறனற்ற மேலாளர்களுக்கும் அவர்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இடையே எப்போதும் இரும்புத்திரையொன்று பிரி்த்துவைத்திருக்கும்

தம்முடைய குழுவின் வெற்றிகரமான பணித்திறனை மற்றவர்களிடம் தான்ஒருவன்மட்டுமே அதை செய்ததாக திறனற்ற மேலாளர்கள் பறைசாற்றிகொள்வார்கள் \

திறனற்ற மேலாளர்கள் தமக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்கள் தவறுதலாக செய்துவிடும் சின்னஞ்சிறு குறைகளையும் அனைவருக்கும் தெரியுமாறு ஊதிபெருக்கி தம்பட்டம் அடித்துகூறியபடி அவர்களை மட்டம் தட்டிவிடுவார்கள்

திறனற்ற மேலாளர்களுக்கும் அவர்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இடையே எப்போதும் மிகச்சரியான செய்தி தொடர்பு இருக்கவே இருக்காது

அவ்வப்போதுமாறிக்கொண்டேஇருக்கும் நிலைக்கேற்ப புதிய புதிய உத்திகளை பின்பற்றாமல் பழைய உத்திகளையே தங்களுடைய பணிகளுக்கு திறனற்ற மேலாளர்கள் பயன்படுத்தி கொண்டிருப்பார்கள்

திறனற்ற மேலாளர்கள் குழுஉறுப்பினர்கள் செய்திடும் தவறை சுட்டிகாட் பலர் அறிய அவர்களை திட்டுவதும் அவர்கள் திறமையாக பணிபுரிந்தால் அதனை தான் செய்ததாக தட்டிபறிப்பதும் ஆகிய செயல்களை எப்போதும் செய்வார்கள்

குழுஉறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் அவரவர்களுடைய பகுதியில் சிறந்த தலைமையாளராக வருமாறுதட்டிகொடுத்து வளரசெய்வதற்கு பதிலாக அவ்வாறாக வளரும் தலைவர்கள் தமக்கு போட்டியாக உயர்ந்து விடுவார்களோ என பயந்து கொண்டு தம்மை மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திடுவார்கள்

திறனற்ற மேலாளர்கள் சிறிய குழு அளவிற்கு மட்டுமே நல்ல தலைமையாளராக இருப்பார்கள் பலகுழுக்களை ஒருங்கிணைத்து பேரளவு குழுவாக கொண்டுசெல்ல திறனற்றவர்களாக இருப்பார்கள்

திறனற்ற மேலாளர்களின் திட்டஇலக்கு எப்போதும் சரியானதாக இருக்காது

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

திறமையான மேலாளாராக இருப்பதற்கான வழிமுறைகள்


எந்தவொருசிறுசெயலையும் விட்டிடாமல் கவனத்துடன் அனைத்து செயல்களும் நன்றாக செயல்படுவதை கன்கானித்திடுக

குழுவான ஊழியர்களின் தனிநபரின் திறமையை பலரும் கூடியிருக்கும்போது புகழ்ந்து பேசுக தனியொருவரின் தவறுகளை தனிப்பட்டமுறையில் சுட்டிகாட்டி திருத்திசெயல்படசெய்க

ஊழியர்கள்ஒவ்வொருவருடனும் தனிப்பட்டமுறையில் உறவை பராமரித்திடுக அதாவது அவரவர்களின் தனிப்பட்ட குணநலன்களை அங்கீகரித்து அவருடைய குடும்ப நிகழ்வுகளில சொந்த சகோதரன் போன்று பங்கெடுத்து கொள்க

அனைத்து அதிகாரமும் தனக்குமட்டுமேஉண்டுஎன வைத்துகொள்ளாமல் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட அதிகாரத்தை பிரித்து வழங்கிடுக

ஒவ்வொருவரும் தத்தமது பணியை திறனுடன் எவ்வாறு செய்திடவேண்டும் என பயிற்சியளித்திடுக

ஊழியர்கள் செய்திடும்சிறுசிறு தவறுகளை ஆழ்ந்து பரிசீலிக்காமல் விட்டிட்டு அந்ததவறுகளை அவரவர்களே முயன்று திருத்தி சரியாக செய்துகொள்ளுமாறு ஊக்குவித்திடுக

ஊழியர் ஒவ்வொருவருக்கும் ஒருசில தனிப்பட்ட சிறந்த திறன்கள் இருக்கும் அவற்றை ஆதரித்து ஊக்குவித்திடுக

ஊழியர்கள் அனைவரையும் அவருவர்களுடைய குணநலன்களுக்கு ஏற்ப தனித்தனியாக நிருவகித்திடுக ஊழியர்கள் அவரவர்களும் தத்தமதுபணியை முடிப்பதற்கு உடனே முடிக்கவேண்டும் என துரிபடுத்தாமல் பணியை சிறப்பாக முடிப்பதற்கு சிறிது கால அவகாசம் வழங்கிடுக

இவ்வுலகில் முயன்றால் முடியாததில்லை


முன்னொரு காலத்தில் அரசனுக்கு ஒரேயொருமகள்மட்டும் பிறந்ததால் அந்தமகளை நன்கு கல்விகற்கவைத்து அறிவிற்சிறந்த இளவரசியாக உருவாக்கினார் அதன்பின் அந்த இளவரசியானவள் கல்விகற்ற அறிஞர்கள் அனைவரையும் அறிவுபூர்வ விவாததிறமையால் தோற்கடித்தாள் அதனாள் தன்னை யாரேனும் இந்த அறிவுபூர்வ விவாதபோட்டியில் வெல்பவர்களே தான் திருமணம் செய்துகொள்ளமுடியும் என நாடுமுழுவதும் அறிவிப்பை அந்த அரசனால் செய்யபட்டது அதனை தொடர்ந்து பலநாட்டு இளவரசர்களும் அந்த இளவரசியுடன் போட்டியிட்டு தோற்று சென்றனர்

தொடர்ந்த அந்த நாட்டின் இளவரசியுடன் போட்டியிட்டு தோல்வியுற்ற அறிஞர் ஒருவர் அந்த இளவரசியை எப்படியாவது தோற்கடிக்கத்திடவேண்டும் எனதிட்டமிட்டார் அதற்காக ஊரின் ஒதுக்குபுறமாக இருந்த மரத்தில் ஒருவன் நுனிக்கிளையில் அமர்ந்து கொண்டு அடிக்கிளையை வெட்டிகொண்டிருந்தான்

இவனை கொண்டு அந்த நாட்டின் இளவரசிநடத்தும் போட்டியில் அந்த இளவரசியை தோற்கடித்து இளவரசியை இவனுக்கு திருமணம் செய்து வைத்திட வேண்டும் என முடிசெய்து அவனை மரத்தை விட்டு கீழேஇறங்க செய்து தம்பி என்னோடு வா என அழைத்து சென்று அவனை நன்கு குளிப்பாட்டி புதுஆடைகள் அணியசெய்து தம்பி நீஇந்த நாட்டின் இளவரசி நடத்தும் அறிவுபோட்டியில் கலந்து கொள் அவள் கேட்கும் கேள்விக்கு வாய்திறந்து பதில் எதுவும் கூறாதே அதற்குபதில் உன்னுடைய கைகளைமட்டும் அசைத்து காட்டு போதும் பின்னர் நீவென்றதாக உனக்கும் இந்த நாட்டின் இளவரசிக்கும் திருமணம் நடக்கும் என கூறி தயார் படுத்தி மறுநாள் அந்த இளைஞனை அரசவைக்கு அழைத்து சென்றார்

அரசவையில் அனைவரும் கூடி இருந்தனர் இந்தஅறிஞர் அனைவரிடமும் இந்த இளைஞன் இளவரசியுடன் நடக்கும் அறிவுபோட்டியில் வாய்திறந்து பேசமாட்டான் அதற்குபதிலாக தன்னுடைய கைகளைமட்டும் அசைத்து காண்பிப்பான் அதற்கு ஒத்து கொண்டால் போட்டி நடத்தலாம் என அந்த இளைஞன் சார்பாக வேண்டினார் இளவரசியும் சரி என ஏற்றுகொண்டாள்

முதலில் இளவரசியானவள் தன்னுடைய ஆள்காட்டிவிரலை மட்டும் உயர்த்தி காண்பித்தாள் உடன் அந்த இளவரசி தன்னுடைய ஒரு கண்ணை குருடாக்கபோவதாக எண்ணிக்கொண்டு அந்த இளைஞனானவன் இளவரசியின் இருகண்களையும் குருடாக்கிவிடுவதாக இருவிரலை உயர்த்தி காண்பித்தான்

அதாவதுஇளவரசியானவள் இந்த உலகமுழுவதற்கும் ஒரேஒரு இறைவன்மட்டுமே என தன்னுடைய கையின் சைகைக்கு அர்த்தமாகும் என விவரித்தாள் இந்த உலகம் முழுவதும் இறைவன்மட்டுமல்லாது மக்களும்உள்ளனர் என்ற அர்த்தமாகும் என அந்த இளைஞனின் செய்கைக்கு அறிஞர் விளக்கமளித்தார்

அடுத்ததாக இளவரசியானவள் தன்னுடைய ஒரு கையிலுள்ள ஐந்துவிரலையும் உயர்த்தி காண்பித்தாள் உடன் இளைஞன் தன்னை தரைமட்டத்தில் தள்ள முயற்சிக்கின்றாள் என எண்ணி கைவிரல்களை அனைத்தையும் மடக்கி முஷ்டி போன்றுஉயர்த்தி உன்னை குத்திவிடுவேண் என காண்பித்தான்

அதாவது இளவரசியானவள் மனிதனுக்கு ஐந்து வகையான குணநலன்கள் உள்ளன என அர்த்தமாகும் என விவரி்த்தாள் அறிஞன் அந்த ஐந்து குணநலன்களையும் கட்டுபடுத்தி நடந்தால் மட்டுமே அறிஞனாக உயரமுடியும் என அர்த்தமாகும் என விவரித்தார்

இவ்வாறு இளவரசியின் பல்வேறுவகையான கைசைகைகளுக்கு ஏற்ப இளைஞனின் பதில் கைசைகைகளை காண்பிப்பதையும் அதற்கான அர்த்தமும் விவரிக்கபட்டன முடிவில் அந்த இளைஞன் தன்னை போட்டியில் வென்றுவிட்டதாகவும் போட்டியில் தான் ஒத்துக்கொண்டவாறு அந்த இளைஞனை திருமணம் செய்துகொள்ள சம்மதிப்பதாகவும் இளவரசி உறுதிகூறினாள் அதனை தொடர்ந்து அந்த முட்டாள் இளைஞனுக்கும் அந்த நாட்டு இளவரசிக்கும் திருமணம் நடைபெற்றது

திருமணத்திற்கு பின்னரே அந்த இளைஞன் முட்டாள் என அறிந்து மனவருத்ததுடன் அந்த இளைஞனை ஒதுக்கிவைத்துவாழ்ந்து வந்தாள்

இதனால் விரக்தியுற்ற அந்த இளைஞன் நல்ல ஆசிரியரை தேடிபிடித்து அவரிடம் கல்விகற்று சிறந்த கவிஞனாக தன்னை வளர்த்து கொண்டார் அதன்பின்னர் சாகுந்தளம் மேகதூதம் ஆகிய காவியங்களை படைத்து வெளியிட்டார்

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

மற்றவர்களை பற்றி அவர்களின் முதுகிற்குபின்புறம் குறைகூறுவதை விட்டிடுக


.பணியிடையே தொழிலாளர்களின் பணிமேம்பாட்டிற்கான பயிற்சியை அவ்வப்போது நிறுவனங்கள் நடத்துவது வழக்கமான செயலாகும்

அவ்வாறானதொரு பயிற்சிவகுப்பில்" தன்னுடன் பணிபுரியும் சகதொழிலாளர்களை பற்றி அவர்கள் இல்லாதபோது மற்றவர்களுடன் இல்லாத நபரை பற்றி அவதூறு செய்வதே ஒருதொழிலாளருடைய பழக்கம் என்றும் அதனால் அந்த தொழிலாளர் பணிபுரியும் இடத்தில் எப்போதும் சண்டையும் சச்சரவுமாக இருக்கின்றது என்றும் இதற்கான தீர்வை கூறுங்கள்" என பயிற்சி ஆசிரியரிடம் பயிற்சியில் கலந்துகொண்ட தொழிலாளர் ஒருவர் கோரினார்

"மிகநல்லது ஐயா உண்மையில் உங்களுடைய நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் குணநலன்களையும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் கூறி அதற்கான தீர்வுகூறிடுமாறு கோரியதற்கு நன்றி உங்களுடைய கையில் வைத்துள்ள இந்த செல்லிடத்து பேசியை அதோதெரிகின்றதே சேரும் சகதியுமான பகுதியில்வீசிஎறிந்துவிட்டுவாருங்கள் அந்த பிரச்சினைக்கான தீர்வினை கூறுகின்றேன்" என பயிற்சி ஆசிரியர் கூறினார்

ஆனால் அவ்வாறு பயிற்சி ஆசிரியர் கூறியவாறு தன்னுடைய கைபேசியை தூக்கி சேரும்சகதியுமான பகுதியில் வீசுவதற்கு தயங்கி நின்றார்

உடன் அந்த பயிற்சிஆசிரியர் "பார்த்தீர்களா ஐயா நமக்கு நெருக்கமான நம்முடைய உடைமையான பொருளை வீசிஎறிய மனம் துனிவதில்லை ஆனால் நம்முடையவாழ்வில் பணிபுரியும் சக தொழிலாளர்களை மட்டும் அவர்கள் இல்லாதுபோது முன்பின்யோசிக்காமல் அவர்களைபற்றிய அவதூறுகளை இலவசமாக பரப்புகின்றோம் இதுசரியா எனயோசியுங்கள்" என பதிலிறுத்ததை தொடர்ந்து

சிறிதுநேரம் சிந்தித்த அந்த தொழிலாளரும் "ஆம் ஐயா நாங்கள் அனைவரும் இன்றுமுதல் மற்றவர்களை பற்றிஅவர்களின் முதுகிற்கு பின்புறம் புறங்கூறும் செயலை விட்டிட்டு அனைவருடனும் சுமுகமாக நல்ல நட்புடன் பழகிடுமாறு உடன் பணிபுரிபவரிடம் உறுதிஎடுத்துகொள்ள செய்கின்றேன்" என்றார்

நாமும் அவ்வாறான உறுதிமொழியை பின்பற்றிடுவோமே

நாம் அனைவரும் நம்முடைய சமூகத்தில் உள்ளமற்றநபர்களுடன் நல்லுறவுடன் பழகுதல் செய்தால் அவ்வாறான நல்லுறவு நம்முடைய ஆபத்துகாலத்தில் நமக்கு பேருதவியாக இருக்கும்


தொழிலாளி ஒருவர் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார் அந்த தொழிலாளியானவர் உடன்பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டுமல்லாது சமூகத்தில் வாழும்அனைத்து நபர்களுடனும் மிகநெருக்கமான உறவினர்போன்று பழகிவந்தார்

ஒருநாள் பணிநேரம்முடிந்து அனைவரும் தத்தமது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர் இந்த தொழிலாளியும் அவ்வாறே தன்னுடைய அன்றைய இறுதி பணியை முடித்து வெளியே கிளம்ப ஆயத்தம் செய்து கொண்டிருக்கும்போது அந்த தொழிலாளி பணிபுரிந்துகொண்டிருந்த இடத்திற்கான வாயில் கதவு தானாகவேமூடிகொண்டது

அதனால் பயமுற்ற அந்த தொழிலாளியானவர் வாயில் கதவினை தட்டியும்வெளியிலிருக்கும் மற்றவர்களின் பெயரை அழைத்தும் அங்கு வெளியில் யாரும்இல்லாததால் மூடிய கதவை திறக்கவில்லை அவ்வளவுதான் இன்று இரவு முழுவதும் இந்த தொழிலகத்திற்குள்ளேயே இருந்து இறக்கவேண்டியதுதான் என பலமணிநேரம் போராடியும் யாருடைய கவணத்தையும் ஈர்த்து வாயில் கதவினை திறக்கமுடியவில்லையேயென சோர்வுற்று அமர்ந்துவிட்டார்

இரண்டுமணிநேரம் கழித்தபின்னர் அந்த தொழிலகத்தின் பாதுகாவலர் ஒருவர் வந்து அவர் இருந்த பகுதியின் கதவினை திறந்தார் அப்போதுதான் அவருக்கு உயிர்வந்தார் போன்று மகிழ்ச்சியுற்ற தொழிலகத்தை விட்டு வெளியேறினார் அப்போது அந்த பாதுகாவலரிடம் "நான் இவ்வளவுநேரம் தொண்டைவரள கத்தியும், கதவினை தட்டிபார்த்தும் திறக்காத வாயில் கதவினை நீங்கள் மட்டும் இவ்வளவுநேரம் கழித்து வந்து கதவினை திறந்து என்னை எவ்வாறு காத்திடமுடிந்தது" என வினவியபோது

"ஐயா! நீ்ங்கள் எப்போதும் பணிக்கு உள்வருகை செய்திடும்போதும் பணிமுடிந்து வெளியே செல்லும் போதும் மற்றவர்களிடம் நெருக்கமாக பழகுவதை போன்று என்னிடமும் பணிக்கு செல்கின்றேன் என்றும் பணிமுடிந்து திரும்பும்போது நாளை பார்க்கலாம் என்று கூறிவிட்டுதான் செல்வீர்கள் இன்று அவ்வாறு பணிக்கு உள்நுழைவு செய்திடும்போது என்னிடம் பணிக்கு செல்கின்றேன் என கூறினீர்கள் ஆனால் பணிமுடிந்து திரும்பும்போது நாளை பார்க்கலாம் என்று கூறுவதை காணவில்லை அதனால் ஏதோ நடந்துவிட்டது என எண்ணி ஒவ்வொரு பகுதியாக திறந்து பார்வையிட்டுவந்து கடைசியாக உங்களை இங்கு பார்த்தேன்" என பதிலிறுத்ததைதொடர்ந்து

" நன்றி பாதுகாவலரே மிகச்சரியான நேரத்தில் வந்த என்னுடைய உயிரை காத்தீர்" என பாதுகாவலருக்கும நன்றி செலுத்தினார்

அதுபோன்றே நாம் அனைவரும் நம்முடைய சமூகத்தில் உள்ளமற்றநபர்களுடன் நல்லுறவுடன் பழகுதல் செய்தால் அவ்வாறான நல்லுறவானது நம்முடைய ஆபத்துகாலத்தில் நமக்கு பேருதவியாக இருக்கும் என்பது திண்ணம்

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

எந்த நிலையிலும் எந்தவொரு நிகழ்விலும் மற்றநபர்களை கோபமூட்டுவதுபோன்றோ எரிச்சலூட்டுவதுபோன்று செய்திடாதீர்கள்


தமிழ்நாட்டின் கிராமத்தில் விவாசாயி ஒருவர்வாழ்ந்து வந்தார் அவருக்கு சொந்தமாக சிறிதளவு நிலம் இருந்துவந்தது அதனைகொண்டு அவர் வாய்க்கும் கைக்குமாக வாழ்ந்துவந்தார் அவருடைய நிலத்திற்கு அருகிலிருந்த நிலத்தை அருகிலிருந்த நகரத்தில் வாழும் வழக்குரைஞர் ஒருவர் விலைக்குவாங்கி பயன்படுத்தி வந்தார் அந்த வழக்குரைஞரும் வாரவிடுமுறை அன்று தன்னுடைய நிலத்திற்கு வந்து நாள்முழுவதும் இருப்பது வழக்கமாகும்

இந்நிலையில் வழக்கமாக வாரவிடுமுறையில் வந்தபோது அவருடைய நிலத்தின்மீது பறந்து சென்ற புறா ஒன்றினை வேட்டையாடினார் உடன் பறந்துகொண்டிருந்த அந்த புறாவானது அருகிலிருந்த கிராமத்து விவசாயியின் நிலத்தில் விழுந்தது அதனை தொடர்ந்து வழக்குரைஞர் ஆனவர் பக்கத்து நிலத்திற்குள் உள்நுழைவு செய்து தான் வேட்டையாடிய புறாவை எடுத்திட முனைந்தார்

உடன் அருகிலிருந்த நிலத்தின் சொந்தககார விவசாயியானவர் ஐயா என்னுடைய நிலத்தில் என்னுடைய அனுமதி இல்லாமல் அத்துமீறி உள்நுழைவு செய்துள்ளீர்கள் அதுமட்டுமல்லாது என்னுடைய நிலத்தின்மீது உள்ள பொருட்கள் அனைத்தும் எனக்குமட்டுமே சொந்தமாகும் அதனால்அந்த புறாவை நீங்கள் எடுத்து செல்லமுடியாது என தடுத்தார் அவ்வாறு அந்த விவசாயியானவர் தடுத்ததும் வழக்குரைஞருக்கு அளவிற்கு அதிகமான கோபம் உருவாகி நான் தெரியுமா அருகிலுள்ள நகரத்தில் பெரிய வழக்குரைஞராக நான் இருக்கின்றேன் உன்னை என்னசெய்கின்றேன் பார் நீதிமன்றத்திற்கு முன் மன்டியிட்டு மன்னிப்பு கேட்க வைக்கின்றேன் உன்னுடைய நிலம்முழுவதையும் விற்று அபராதமாக கட்டவைக்கின்றேன் பார் என கத்தினார்

எல்லாம் சரிஐயா உங்களுடைய சட்டம் நீதி எல்லாம் உங்களுடைய நீதிமன்றத்திலேயே வைத்துகொள்ளுங்கள் இங்கு கிராமத்தில் வழிவழியாக பின்பற்றிவரும் பழக்கவழக்கங்களை மட்டும் நீதிமன்றம் தலையிட்டு மாற்றிடமுடியாது எனவிவசாயிக்கூறியதை தொடர்ந்து ரொம்ப சரி இந்த நிகழ்விற்கான பழக்கவழக்கந்தான் என்ன என வழக்குரைஞர் வினவினார்

அதற்கு அந்த விவசாயி இங்கு கிராமத்தில் இவ்வாறான நிகழ்விற்கு மூன்றுஉதை எனும் விதியை பின்பற்றிவருகின்றோம் அதனை பின்பற்றி நீங்கள் கோரும் புறாவை எடுத்துசெல்லலாம் என அந்தவிவசாயி கூறியதை தொடர்ந்து அதுஎன்ன மூன்று உதை விதி விவரித்தால் நானும் அதனை பின்பற்றுவேன் என வழக்குறைஞர் கோபம் தனிந்து விவசாயியிடம் கேட்டார் முதலில் நான் உங்களுக்கு மூன்று உதைகொடுப்பேன் பதிலுக்கு நீங்கள் மூன்று உதை எனக்கு கொடுங்கள் அதன்பின்னர் நீங்கள் கோரியபடி அந்த புறாவை எடுத்து செல்லலாம் என பதிலிறுத்ததை வழக்குரைஞர் அமோதித்தார்

உடன் விவசாயி தன்னுடைய காலால் முதலில் வழக்குரைஞரின் மூக்கு உடைபடுமாறு எட்டிஉதைத்தார் ஐயோ என வழக்குரைஞர் கைகளால் முகத்தை தடவிகொடுத்தார்

இரண்டாவதாக வழக்குரைஞரின் இடுப்பில் உதைவிட்டார் ஐயோஅம்மா என கத்திக்கொண்டு தரையில் உட்கார் ஆரம்பித்தார்

மூன்றாவதாக வழக்குரைஞரின் தொடைபகுதியில் எட்டிஉதைத்தர் ஐயய்யோ என கூவிக்கொண்டு விவசாயி கொடுத்த மூன்று உதையும் தாங்கமுடியாமல் அப்படியே தரையில் படுத்துவிட்டார்

சரி ஐயா வழக்குரைஞரே இப்போது உங்களுடைய முறை நீங்கள் மூன்று உதை எனக்கு கொடுத்துவிட்டு இந்தாருங்கள் நீங்கள் கோரிய இந்த புறாவை எடுத்து செல்லுங்கள் என புறாவை அந்த வழக்குரைஞரை நோக்கி வீசிஎறிந்தார்

அந்த வழக்குரைஞரும் எழுந்து நடமுடியாத நிலையில் இருந்ததால் பதில் செயலை செய்யாமல் படுத்தபடுக்கையாகிவிட்டார் அடடா அருகிலிருந்த விவசாயியின் நிலத்திற்குள் அத்துமீறி நுழைசெய்தது மட்டுமல்லாது அவரை நீதிமன்றத்தில்அபராதம் கட்டவைப்பேன் என மிரட்டியது தவறு என உணர்ந்து மெதுவாக நகரத்திற்கு வந்துசேர்ந்தார்

எந்த நிலையிலும் எந்தவொரு நிகழ்விலும் மற்றநபர்களை கோபமூட்டுவதுபோன்றோ எரிச்சலூட்டுவதுபோன்று செய்திடாதீர்கள்

நாம் வாழும் இந்த இயற்கையை வீணாக்காமல் பாதுகாத்தால் நாம் எதிர்பார்த்திடும் நன்மை நமக்கு கிடைத்திடும்


ஒரு பெற்றோருக்கு ஒரேயொரு குழந்தை பிறந்து அதுவும் பெண்பிள்ளையாக பிறந்ததால் அதனை அந்த பெற்றோர்கள் சீரும் சிறப்புமாக கொண்டாடி மகிழ்ச்சியுடனும் மிகசெல்லம் கொடுத்து சீராட்டி வளர்த்துவந்தனர் அவர்களுடைய மகள் எதுகேட்டாளும் உடன்வாங்கி வழங்கிவந்தனர் இந்நிலையில் அவர்களுடைய மகளுக்கு பிறந்தநாள் வந்தது அவர்களுடைய மகள் தனக்கு கையில் அணிவதற்கு தங்க மோதிரம் வேண்டும் என கோரியவுடன் அவ்வாறே மோதிரத்தை வாங்கி பரிசாக அளித்தனர்

தினமும் அந்த பெண்குழந்தையின் தந்தையானவர் இரவு படுக்கைக்கு செல்லும்போது தன்னுடைய பிள்ளைக்கு அறிவுரை கதைகளையும் நீதிக்கதைகளை யும்கூறி தூங்கவைப்பது வழக்கமாகும் அப்போது அந்த தந்தையானவர் அவருடைய மகளிடம் பரிசாக அளித்தசிறு மோதிரத்தை தனக்கு கழற்றி கொடுக்குமாறு வேண்டுவார் உடன் அவருடைய மகளும் ஐயோ அப்பா அதைமட்டும் நான் கழற்றிதர மாட்டேன் என மறுத்துவிடுவது வழக்கமான செயலாகும்

இந்நிலையில் ஒருநாள் அந்த பெண்ணின் தாய் கழுத்தில் நல்ல ஒளிவீசக்கூடிய முத்துகளால் செய்யபட்ட மாலை அணிந்ததை பார்த்து அதேபோன்ற நல்ல ஒளிவீசக்கூடிய முத்துகளால் செய்யபட்ட மாலை தனக்கும் வேண்டும் என மனவருத்ததுடன் முழங்காலை மடக்கி கட்டி கொண்டு படுக்கையில் உட்கார்ந்து இருந்தது .

அப்போது அந்த பெண்ணின்தந்தை வந்ததும் இந்தாருங்கள் அப்பா நீங்கள்கேட்ட மோதிரம் எனக்கு அம்மா அணிந்துள்ளவாறு நல்ல ஒளிவீசக்கூடிய முத்துகளால் செய்யபட்ட மாலை வேண்டும் என கோரினாள் உடன் அந்த தந்தையும் பெட்டியை திறந்து அவர்களுடைய மகள் கோரிய பரிசுபொருளை அவளுடைய கழுத்தில் அணியசெய்தார் உடன் அவர்களுடைய மகள் மிகமகழ்ச்சியுற்று பெற்றோர்களை கட்டிபிடித்து மகிழ்ச்சிகூச்சலிட்டால்

வா ஆம் நாமனைவரும் வாழும் இந்த இயற்கையை வீணாக்காமல் பாதுகாத்துவந்தால் நாம் எதிர்பார்த்திடும் நன்மையை நமக்கு இயற்கையானது தானாகவே கிடைத்திடச்செய்திடும் என்பதே உண்மைநிலவரமாகும்

சனி, 25 ஜூலை, 2015

நம்முடைய பிள்ளைகளை நேர்மறையான சிந்தனைகளுடனும் வளர்த்து வருவோம்


சுட்டி கிட்டி என்ற இரு சிறுவர்களும் அருகருகான வீட்டில் வாழ்ந்துவந்தனர் சுட்டியின் பெற்றோர்கள் எப்போதும் நேர்மறையான சொற்களுடனான அறிவுரைகளை கூறி நேர்மறையான சிந்தனைகளுடன் தங்களுடைய பிள்ளையான சுட்டியை வளர்த்து வந்தனர் அதாவது இந்திந்த செயலை இப்படி இப்படி செய்யவேண்டும் அப்போதுதான் சிறப்பாக இருக்கும் என அறிவுரை கூறுவதற்கேற்ப அவ்வாறே மிகச்சரியாக செய்து எந்தபிரச்சினையிலும் சிக்காமல் மட்டிகொள்ளாமல் சுட்டி இருப்பான்

ஆனால் கிட்டியின் பெற்றோர்கள் எப்போதும் எதிர்மறையான சொற்களுடனான அறிவுரைகளை கூறி எதிர்மறையான சிந்தனைகளுடன் தங்களுடைய பிள்ளையான கிட்டியை வளர்த்து வந்தனர் அதாவது எப்போதும் அதை செய்யாதே இதை செய்யாதே என்று கூறிவருவர் பொதுவாக எப்போதும் மனித மூளையானது அதிலும் சிறுவர்களின் வளர்ந்து வரும் மூளையானது புதியதாக எதையாவது கற்று தேர்ச்சி பெறவிரும்பும் அவ்வாறான நிலையில் நாம் ஒரு செயலை செய்யாதே என கூறினால் உடன் ஏன் அதனை செய்துபார்த்தால் என்னவென செய்யதுடிக்கும் அதனடிப்படையில் சுட்டியானவன் அவனுடைய பெற்றோர்கள் இந்த செயலை செய்யாதே என்றால் சுட்டியானவன் அந்த செயலை மட்டும் முயன்று செய்து இக்கட்டிலும் இன்னலிலும் மாட்டிகொள்வது வழக்கமாகும் இதேபோன்ற நடைமுறையின் போது சிறு குழந்தைகள் என்பதால் மரங்களில் ஏறி காய்கணிகளை பறிப்பது வழக்கமாகும் அவ்வாறு நடைமுறையில் சுட்டியும் கிட்டியும் அருகிலிருந்த மரத்தில் விளையாட்டாக ஏறிவிட்டனர் சுட்டியானவன் மரத்தின் உச்சிக்கு சென்றுவிட்டான்

ஆனால் கிட்டியானவன் மரத்தின் பாதிதூரம் இருந்த கிளையில் இருந்தான் இந்நிலையில் பயங்கரமான சூறைகாற்று வீசியது அப்போது சுட்டியின் பெற்றோர் சுட்டியை அழைத்து "தம்பி! மரக்கிளையை நன்கு கெட்டியாக பிடித்து கொள் காற்றுவீசுவது நின்றவுடன் கீழே பத்திரமாக இறங்கிவிடலாம்" என நேர்மறையாக கூறியதை தொடர்ந்து சுட்டி மரத்தின் கிளையை நன்கு கெட்டியாக அனைத்து பிடித்துகொண்டான்

ஆனால் கிட்டியின் பெற்றோர்கள் "டேய் தம்பி! சூறை காற்று வேகமாக வீசுகின்றது நீ கீழே விழுந்துவிடாதே!” என எதிர்மாறையாக அறிவுரைகூறினார்கள் அதனை தொடர்ந்து கிட்டியானவன் மரக்கிளையை சரியாக பிடித்து கொள்ளாததால் காற்று வீசுகின்ற வேகத்தில் தடுமாறி கீழேவிழுந்து அவனுக்கு கால்முறிவும் கைமுறிவும் ஏற்பட்டது

பொதுவாக பெற்றோர்கள் அனைவரும் தத்தமது பிள்ளைகளிடம் நேர்மறையான சொற்களுடனான அறிவுரைகளை கூறி அவர்களை நேர்மறையான சிந்தனைகளுடன் வளர்த்திடவேண்டும் மாறாக எதிர்மறையான சொற்களுடனான அறிவுரைகளை கூறி அவர்களை எதிர்மறையான சிந்தனைகளுடன் வளர்த்தால் அதனுடைய பாதிப்பை உடன் நாம் சந்திக்கவேண்டியிருக்கும் ஏனெனில் நம்முடைய மூளையானது எப்போதும் நாம் என்ன கூறுகின்றோமோ அதனை அப்படியே செயல்படுத்துகின்றது அதனால் நாமனைவரும் எப்போதும் நேர்மறையான சொற்களுடனான விவாதங்களை செய்திடுவோம் தொடர்ந்து நேர்மறையான சிந்தனைகளுடன் வாழ்ந்து வருவோம் நம்முடைய பிள்ளைகளையும் நேர்மறையான சொற்களின் அறிவுரைகளுடனும் நேர்மறையான சிந்தனைகளுடனும் வளர்த்து வருவோம்

சனி, 18 ஜூலை, 2015

நாம் என்ன செய்கின்றோமே அதுவே நமக்கு திரும்ப கிடைக்கும்


ஒருஊரில் நடுவயது பெண்ஒருவள் வாழ்ந்தவந்தாள் அவள் தன்னுடைய உணவுக்கு தேவையான கோதுமை ரொட்டியை செய்து உண்ணுவாள் மிகுதியாக ஒன்று தேவைப்படாது மிகுந்துவிடும் அப்போது அவருடைய மகன்வெளியூருக்கு பணிசெய்வதற்காக சென்றவன் நல்லபடியாக திரும்பிவரவேண்டுமென பிரார்த்தனை செய்துகொண்டு அந்தமிகுதியான ரொட்டியை அந்தவழியே செல்லும் பிச்சைகாரர்களுக்கு உதவட்டும் என அருகிலிருந்த தின்னையில் வைத்துசென்றிடுவார்

அதனை தொடர்ந்து அங்கு உலவி கொண்டிருந்த பிச்சைகாரனைபோன்ற தோற்றமுடைய பெரியவர் ஒருவர் " நாம் மற்றவர்களுக்கு நல்லது செய்தால் நமக்கு நன்மையே திரும்பகிடைக்கும் தீமை செய்தால் நமக்கு தீமையே திரும்ப கிடைக்கும்" என கூறிக்கொண்டு அந்த ரொட்டியை எடுத்துகொண்டு சென்றார்

இவ்வாறே தினமும் ஒரு ரொட்டி மிகுதியாவதும் அந்தபெண் தன்னுடைய மகனுக்காக பிரார்த்தனை செய்துகொண்டு அந்த மிகுதியான ரொட்டியை தின்னையில்வைத்திடுவதும் பிச்சைகாரனைபோன்ற தோற்றமுடைய பெரியவர் " நாம் மற்றவர்களுக்கு நல்லது செய்தால் நமக்கு நன்மையே திரும்பகிடைக்கும் தீமை செய்தால் நமக்கு தீமையே திரும்ப கிடைக்கும்"என கூறிக்கொண்டு அந்த ரொட்டியை எடுத்துகொண்டு செல்வதும் வழக்கமான நடைமுறையாகிவிட்டது

.இந்நிலையில் தினமும் நாம் வைத்திடும் ஒருரொட்டியை அந்த பெரியவர் எடுத்துசென்று சாப்பிடுகின்றார் அதனால் அதில் ஆட்களைகொல்லும் நஞ்சை ஏன் சேர்த்து செய்துவைக்ககூடாது என தவறான என்னம் அந்த பெண்ணின் மனதில் தோன்றியது அதனை தொடர்ந்து அன்று ஒருநாள் பிச்சைக்காக வைத்திடும்ரொட்டியில் மட்டும் ஆட்களைகொல்லும் நஞ்சை சேர்த்து உருவாக்கி தின்னையில் வைத்துசென்றாள்

.வழக்கம்போல பிச்சைகாரனைபோன்ற தோற்றமுடைய பெரியவர்" நாம் மற்றவர்களுக்கு நல்லது செய்தால் நமக்கு நன்மையே திரும்பகிடைக்கும் தீமை செய்தால் நமக்கு தீமையே திரும்ப கிடைக்கும்" என கூறிக்கொண்டு அந்த ரொட்டியை எடுத்துகொண்டு சென்றார்

அன்று சாயுங்காலம் அவளுடைய மகன் திரும்பி வந்தான் ஆளைபார்த்தால் உணவு கிடைக்காத பஞ்சத்தில் இருப்பவன் போன்று மிகஒல்லியாக நடக்கவே தெம்பில்லாதவனை போன்றிருந்தான் அவளுடைய மகன் அம்மா நான் இங்கு வந்து சேருவதே மிகசிரமமாகிவிட்டது உண்பது உணவே கிடைக்கவில்லை கையில் பணமெதுவுமில்லை அந்நிலையில் நம்முடைய ஊருக்கு அருகில் நடக்கமுடியாமல் தவித்து கொண்டிருந்தபோது பெரியவர் ஒருவர் ஒரு ரொட்டியை தனக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை நீசாப்பிடு தம்பி " நாம் மற்றவர்களுக்கு நல்லது செய்தால் நமக்கு நன்மையே திரும்பகிடைக்கும் தீமை செய்தால் நமக்கு தீமையே திரும்ப கிடைக்கும்" என கூறிக்கொண்டு கொடுத்தார்

அதனை சாப்பிட்டபின் கிடைத்த தெம்பில் நம்முடைய வீடுவந்தசேர்ந்தேன் என கூறியதை தொடர்ந்தஅந்த பெண் வீட்டு தின்னையை பார்த்தாள் அன்று அவள் நஞ்சு வைத்து செய்திருந்த ரொட்டி காணவில்லை " ஐயையோ என்னுடைய மகனுக்கு நானே நஞ்சு வைத்து ரொட்டிசெய்துகொடுத்து சாகடித்து விட்டேனே" என ஒப்பாரியிட ஆரம்பித்தாள் உடன் அவளுடைய மகனும் உடல் நீலமாக மாறி இறந்துவிட்டிருந்தான் .

ஆம் தினை விதைத்தவன் தினையை அறுவடை செய்வான். வினை விதைத்தவன் வினையை அறுவடை செய்வான் .அதபோன்று நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்தால் நன்மையே நமக்கு திரும்ப கிடைக்கும் அவ்வாறே மற்றவர்களுக்கு தீமை செய்தால் நமக்கு தீமையே திரும்பகிடைக்கும் என்பதே உலகநியதி ஆகும்

படித்த மேதையும் படிக்காத படகோட்டியும்


படித்த மேதை ஒருவர் அருகிலிருந்த மற்றொரு ஊருக்கு செல்லவிரும்பினார். ஆயினும் அந்த ஊருக்கும் செல்லும் வழியில் குறுக்கே எப்போதும் தண்ணீர் வற்றாத பெரிய அகலமான ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. படகு வாயிலாக மட்டுமே அந்த ஆற்றை கடந்து செல்லமுடியும் என்றநிலை இருந்ததால் அங்கிருந்த படகொன்றில் ஏறி அந்த கரைக்கு சென்றுகொண்டிருந்தார்

அப்போது அந்த படகோட்டியிடம்அவர் " என்ன தம்பி உனக்கு எழுத படிக்க தெரியுமா" என வினவினார் உடன் படகோட்டி"எனக்கு எழுத படிக்கவெல்லாம் தெரியாது ஐயா எனக்கு தெரிந்தது எல்லாம் இந்த ஆற்றின் நீரோட்டம் ,படகு ஓட்டுதல்,இந்த ஆற்றில் நீச்சலிடுதல் ஆகியவை மட்டுமே" எனக்கூறினான். உடன் படித்தமேதை "என்ன கொடுமை தம்பி நீ வாழ்க்கையில் பாதியை வீனடித்துவிட்டாயே" என பரிதாப பட்டார். அதனால் அந்த படகோட்டி அதிக வருத்தப்டடான் இருந்தாலும் வாயை திறந்து பதில் எதுவும் பேசவில்லை

.இந்தநிலையில் ஆற்று நீரோட்டம் வேகமாகமாகவும் சுழன்றோடுவது போன்றும் மாறியது அதனைதொடர்ந்து அந்த படகோட்டியினால் படகை சரியாக ஓட்டமுடியவில்லை அதனால் அந்த படகோட்டி படித்த மேதையிடம் "ஐயா உங்களுக்கு இந்த ஆற்றை கடந்து செல்வதற்கான நீச்சல் தெரியுமா" என வினவினான் உடன் படித்த மேதை "எனக்கு நீச்சல் தெரியாதே" என பதிலிறுத்தார் "அடடா அப்படியெனில் உங்களுடைய வாழ்க்கையே முடியபோகின்றது இந்தபடகு இதற்குமேல் நகர்ந்து போகாது அதற்குபதிலாக இது இப்போது கவிழபோகின்றது முடிந்தால் நீச்சல் அடித்து உங்கள் உயிரை காப்பாற்றி கொள்ளுங்கள் " எனக்கூறிவிட்டு அற்றோட்டத்தில் தாவிகுதித்து நீந்திசெல்லஆரம்பித்தான் .படித்தமேதையோ ஆற்றோட்டத்தில் மூழ்கி இறந்தார்

அதனால் குறிப்பிட்ட துறையில் மட்டும் நிபுணராக இருப்பதும் அதனால் மற்றவர்களை மிககேவலமான கண்ணோட்டத்தில் பார்த்து கேலிபேசுவதும் பெருமையன்று ஆபத்துகாலத்தில் தன்னை காத்து கொள்வதற்கு தேவையான கலைகளையும் கற்றிருந்தால் மட்டுமே நம்முடைய உயிரை நாம் காத்துகொள்ள முடியும்.

ஞாயிறு, 5 ஜூலை, 2015

எந்தவொரு நல்ல செயலையும் முதலில் நாம் செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்திடுக


கடற்கரையோரம் ஒரு மனிதன் காலாற நடந்துசென்று உடல்பயிற்சியையும் மனதிற்கு புத்துணர்ச்சியையும் அளித்திட செய்துகொண்டிருந்தான் அவ்வாறு காலாற நடந்து செல்லும்போது வேறுஒரு மனிதன் குனிந்து தரையிலிருந்து அவனுடைய கைகளால் எதையோ எடுத்து கடலுக்குள் வீசியெறிவதை பார்த்தான் அந்த மனிதனின் அருகில் சென்று வணக்கம் நன்பா குனிந்து தரையிலிருந்து எதையோ எடுத்து கடலுக்குள் வீசிஎறிகின்றாயே அது என்ன வென முதலாவது மனிதன் வினவியபோது இரண்டாவது மனிதன் பார்த்தால் தெரியவில்லை கடற்கரையில் ஒதுங்கிடும் மீன் ஆனாது கரையிலேயே இருந்தால் தண்ணீர் இல்லாமல் காய்ந்து இறந்துவிடும் தற்போதைய பருவத்தில் அதிகசூரை காற்று வீசுவதால் கடலலைகளானது கடலில் இருந்து மீன்கள் அனைத்தையும் கரைகளில் தூக்கிவீசி ஒதுக்கி சென்றுவிடும் அவ்வாறு ஒதுக்கி சென்று மீன்கள் காய்ந்து இறந்துவிட்டால் அடுத்தபருவத்திற்கு நாம் கடலிற்கு சென்று நம்முடைய பிழைப்பிற்காக பிடிப்பதற்கான மீன் அதிகமாக கிடைக்காது அதனால் நாம் வயிற்றுக்கு உணவில்லாமல் பட்டினி கிடக்கநேரிடும் என பதிலிறுத்தான் .அப்போது தனியொருவன் சிறிதளவு மீன்களை மட்டும் பிடித்து மீண்டும் கடலில் விட்டுவிட்டால் மிகுதி மீன்கள்என்ன ஆவது என முதலாவது மனிதன் வினவியபோது அனைவருக்கும் நாம் வித்தியாசமாக முன்மாதிரியாக இருந்து செயல்பட்டால் நம்முடைய செயலை பார்ப்பவர்கள் நம்மை பின்தொடர்ந்து செயல்படஏதுவாகும் யாராவது ஒருவர் நல்லதொரு பணியை செய்யதொடங்கினால்தானே அனைவரும் அவரை பின்பற்றுவார்கள் யாருமே தொடங்கவில்லையெனில் அந்த பணிசெய்யபடாமலேய போய்விடும் ஐயா அதனால் நான் என்னுடைய கடமையை செய்ய தொடங்கி செய்துவருகின்றேன் என கூறியதை தொடர்ந்த முதலாமவது மனிதனும் அந்த பணியை செய்யதொடங்கினான் அவர்கள் செய்திடும் பணியை பார்த்த அந்த கிராமத்து மக்கள் அனைவரும் அந்த பணியை செய்யதொடங்கினார்கள் ஆம் சிறிய தீக்குச்சியிலிருக்கும் நெருப்புதான் நமக்கு தேவையான சமையல் பணியை செய்ய காரணமாக அமைகின்றது

தம் கீழ் பணிபுரியும் பணியாளர்களின் உழைப்பை அவ்வப்போது அங்கீகரித்து பாராட்டி உற்சாக படுத்துக


ஒரு நிருவாக அலுவகத்தில் அலுவலக மேலாளர் பதவிக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது அதில் கலந்து கொண்ட இறுதியாக தேர்வு செய்யபடவுள்ள ஒரு இளைஞனை அதன் நிருவாக இயக்கநர் அந்த இளைஞனுடைய கல்வித்தகுதியை பார்த்து பரவாயில்லையே மிக நன்றாக படித்திருக்கின்றானே என மனதிற்குள் எண்ணியபடி "தம்பி ! நீ கல்லூரியில் படிப்பதற்காக அரசின் உதவித்தொகை ஏதேனும் பெற்றாயா?” என வினவினார் .உடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட இளைஞன் "இல்லை ஐயா! நான் கல்லூரியில் படிப்பதற்காக உதவித்தொகை எதுவும் பெறவில்லை.” என பதிலிறுத்தான் . "பரவாயில்லை; உன்னுடைய தந்தையே உன்னுடைய கல்விக்கான கட்டணத்தை செலுத்தினாரா ?” என நிருவாக இயக்கநர் வினவியபோது "இல்லை ஐயா! என்னுடைய தந்தை நான் சிறிய வயதாக இருக்கும் போதே இறந்துவி்ட்டார்; அதன் பின்னர் என்னுடைய தாய்தான் என்னை வளர்த்து வருகின்றார் தொடர்ந்து பள்ளியிலும் கல்லூரிகளிலும் நான் படிப்பதற்கான கல்வி கட்டணங்கள் அனைத்தும் செலுத்திவருகின்றார்." என அந்த இளைஞன் பதிலிறுத்தார்

அதன்பின்னர் நிருவாக இயக்கநர் " நிரம்ப மகிழ்ச்சி தம்பி உன்னுடைய தாய் எங்கு பணிசெய்கின்றார் ?” என வினவினார். உடன் அவ்விளைஞன் "என்னுடைய தாய் எந்த நிறுவனத்திலும் பணிசெய்யவில்லை ஆயினும் கிராமங்களில் விவசாய கூலிவேலையை செய்துவருகின்றார்" என கூறினான் அதனை தொடர்ந்து நிருவாக இயக்கநர் "உன்னுடைய கையை விரித்து காட்டு தம்பி!” என கோரியபோது உடன் இளைஞன் தன்னுடைய கைகளை திறந்து காண்பித்தான் அவனுடைய உள்ளங்கைகளும் கைவிரல்களும் நன்றாக மழமழவென இருந்தன அதன்பின்னர் நிருவாக இயக்கநர் "சரி தம்பி! உன்னுடைய தாய் செய்திடும் விவசாய வேலைக்கு நீஏதாவது உதவி செய்திருக்கின்றாயா?” என வினவியபோது உடன் "இல்லை ஐயா~ நான் என்னுடைய தாய்க்கு உதவிசெய்திட எப்போதும் அவர் அனுமதிக்கமாட்டார் அதற்கு பதிலாக நான் நன்றாக படிக்கவேண்டும் என்றே விரும்பினார்" என அந்த இளைஞன் பதிலிறுத்தான். பின்னர் நிருவாக இயக்கநர் "சரி தம்பி! இன்று வீட்டிற்கு சென்று உன்னுடைய தாயின் கைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்துவிட்டு நாளை என்னை வந்து பார் " என விடைகூறி அனுப்பினார்.

அன்று இரவு அவ்விளைஞன் வீட்டிற்கு வந்தவுடன் தன்னுடைய தாயை அழைத்து சென்று அவருடைய கைகளை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்திடமுனைந்தான் அப்போது அவனுடைய தாயின் உள்ளங்கைகளும் விரல்களும் மேடுபள்ளமாக கரடுமுரடாக காய்ந்து இருந்ததை கண்ணுற்றதும் "அம்மா எனக்காக எவ்வளவு கடினமாக உழைத்துள்ளீர்கள்"” என கண்ணீர்விட்டு அழுதான்.அதன்பின்னர் தன்னுடைய தாயை விவசாய கூலிவேலைக்கு அனுப்புவதில்லை என முடிவுசெய்துகொண்டுஇரவு உறங்க சென்றான் மறுநாள் அவ்விளைஞன் அந்த நிருவாக இயக்கநரை சந்தித்தபோது அவர் "நேற்றிரவு வீட்டிற்கு சென்று நான் கூறிய செயலை செய்தபோது என்ன உணர்ந்தாய்" என வினவினார் உடன் அவ்விளஞன் "1என்னுடைய தாயின் கடினமான தன்னலமற்ற உழைப்பு இல்லையென்றால் நான் இந்தஅளவிற்கு படித்து இருக்கமுடியாது 2 வாழ்வில்எந்தவொரு பணியும் கடினமான செயலே 3 அவ்வாறு கடினமான பணிசெய்பவர்களின் பணியை உடனுக்குடன் பராட்டினால் சகபணியாளர் அல்லது சகமனிதற்களுடனான உறவு மேம்படும்" ஆகிவற்றை தான் அறிந்துகொண்டதாக கூறினான்

"ஆம் தம்பி இந்த உணர்வையே உன்னிடம் உருவாக வேண்டும் நான் எதிர்பார்த்தேன் பொதுவாக ஒருநிருவனத்தின் நிருவாகியாக பணிசெய்பவர் தனக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களின் பணிமுடிந்தவுடன் உடனுக்குடன் அவர்களை பராட்டி உற்சாக படுத்தினால் அடுத்தடுத்து அவர்களுக்கு வழங்கிடும் பணியை மேலும் உற்சாகத்துடன் பணிபுரிந்து வெற்றிகரமாக பணியை முடிப்பார்கள் மேலும் நிருவாகிக்கும் பணியாளர்களுக்கும் இடையேயான உறவும் வலுப்படும்" என அறிவுரைகூறியபின் அந்த இளைஞனுக்கு அவருடைய நிறுவனத்தில் பணிபுரிவதற்கான பணிஆணையை உடன் வழங்கினார்.

சனி, 27 ஜூன், 2015

நம்கீழ் பணிபுரியும் ஊழியர்களின் சிறுதவறுகளை மன்னித்து தவற்றினை திருத்தி இனிஇவ்வாறான தவறுவராமல் கவணமாக செயல்படுமாறு எச்சரிக்கை செய்துவிடுக


முன்னொரு காலத்தில் அரசனொருவன் இருந்தான் அவனிடம் வெவ்வேறுதுறைகளுக்கும் என தனித்தனியான ஏராளமான அளவில் அமைச்சர்கள் இருந்தனர் அவர்கள் அனைவரையும் கட்டுபடுத்துவதற்காக ஒற்றர்களை வைத்து அவரவர்களுடைய அன்றாட நடவடிக்கைகளை அந்தந்த அமைச்சர்களுக்கு தெரியாலேயே கண்கானித்து வந்தார் யாராவது ஒருவர் தவறுஇழைத்து விட்டால் உடன் அந்த அமைச்சருக்கு தண்டனையாக அவர் வளர்த்துவந்த மிககொடூரமான நாய்களுக்கு உணவாக நாய்களுடைய கூண்டில் தள்ளிவிடஉத்திரவிட்டுவிடுவார் அதனால் அமைச்சர்களும் மிகச்சரியாக நேர்மையாக நடந்துகொண்டனர் சிறிய தவறுகளுக்குகூட இதைபோன்ற கொடுமையான தண்டனையை அந்த அரசன் வழங்கிவந்ததால் அமைச்சர்கள் அனைவரும் பயந்து நடுங்கி கொண்டு வாழ்ந்துவந்தனர்

இந்நிலையில் ஒரு அமைச்சர் தவறு இழைத்துவிட்டதாக அந்த அரசனுக்கு தகவல்வந்ததும் உடன் அந்த அமைச்சரை நேரில் அழைத்து விசாரித்து இறுதிதீர்ப்பாக வழக்கமான நடைமுறையான நாய்களுக்கு அந்த அமைச்சரை உணவாகதள்ளிவிடுமாறு உத்திரவிட்டார்

உடன் அந்த அமைச்சர் அந்த அரசனின் கால்களில் விழுந்து வணங்கி நான் ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கமேல் தங்களின்கீழ் பணிபுரிந்துவந்தேன் ஏதோ என்னை அறியாமல் என்னையுமீறி இந்த தவறு நடவிட்டது அதனால் தண்டவழங்குவதில் ஒரு பத்துநாட்கள் மட்டும் அவகாசம் வழங்குங்கள் என கெஞ்சியபோது சரி பத்துநாட்கள்கழித்து அந்த அமைச்சருக்கான தண்டனை வழங்கினால் போதுமென அவகாசம் வழங்கினான்

அதன்பின்னர் அந்த தண்டனைக்குள்ளாகவேண்டிய அமைச்சர் அரசன் வளர்த்திடும் அந்த நாய்களைபராமரிக்கும் பணியாளரிடம் தான் அந்தநாய்களை அந்த பணியாளரிடம் கோரியபோது அவருக்கு அந்தபணியை செய்திடுமாறு அனுமதிவழங்கபட்டது

அதனை தொடர்ந்த அந்த அமைச்சன் அந்த நாய்கள் தண்ணீரல் நன்கு குளிப்பாட்டி அவைகளுக்கு ஒவ்வொரு வேளைக்கும் தேவையான உணவை அந்த அமைச்சரே பரிமாறுதல் செய்து அவைகளை காலாற நடைபயிற்சிக்காக அழைத்து சென்று நன்கு கவணித்துவந்தார்

பத்தநாள் அவகாசம் முடிந்தவுடன் அரசன் அந்த அமைச்சரை தண்டனை வழங்குவதற்காக நேரில் அழைத்து நாய்களின்முன்பு அந்த அமைச்சரை உணவாக வழங்கவதற்கா நாய்களை அந்த அமைச்சர்மீது ஏவினார்

ஆனால் என்ன ஆச்சரியம் நாய்களானது அந்த அமைச்சரை கடித்துகுதறுவதற்கு பதிலாக அந்த அமைச்சரின் காலடியில் வந்து அமர்ந்துகொண்டு அவரை பாசமுடன் வாலைகுழைத்துகொண்டு முகர்ந்து பார்த்தது

உடன் அமைச்சரும் அரசரிடம் ஐயா பத்துநாட்கள்மட்டும் இந்தநாய்களுக்காக பணிசெய்ததும் அவைகள் நன்றியுடன் எனக்குவழங்கிய தண்டனையை நிறைவேற்ற தயங்குகின்றது

ஆனால் தாங்கள் தங்களின் கீழ் பத்தாண்டுகளுக்குமேல் பணிபுரிந்திருந்தும் சிறுதவறுகளை மன்னித்து தவற்றினை திருத்தி இனிஇவ்வாறான தவறுவராமல் கவணமாக செயல்படுமாறு எச்சரிக்கை செய்துவிடமறுக்கின்றீர் என கூறியதை தொடர்ந்து அந்தஅரசன் அந்த அமைச்சர் செய்த சிறு தவறினை மன்னித்து விட்டுவிட்டார்

வித்தியாசமான நேர்முகதேர்விற்கான கேள்வியும்அதற்கான பதிலும்


நேர்முகத்தேர்விற்கான கேள்வி 1.ஒரு ஆளரவமற்ற காட்டில் அதிக மழைபொழிந்து கொண்டிருக்கின்ற இருண்ட இரவுவேளையில் தன்னந்தனியாக நெடுஞ்சாலை ஒன்றில் மகிழ்வுந்தை ஓட்டிசெல்கின்றீர் அப்போது பேருந்து நிறுத்தம் ஒன்றில் இப்போதே இறக்கபோகின்ற தோற்றத்தில் உள்ள ஒருவயதான பாட்டி, முன்பு ஒருநாள் ஆபத்தில் உங்களின் உயிர்காத்த நன்பன்ஒருவன் , உங்களுடைய வருங்கால மனைவி ஆகிய மூன்றுநபர்களும் பேருந்து ஏதேனும் அந்தவழியாக வருமாவென காத்திருப்பதை பார்க்கின்றீர் ஒரேயொருநபரை மட்டுமே உங்களுடைய மகிழ்வுந்தில் ஏற்றிசெல்லமுடியும் என்றநிலையில் இந்த மூவரில யாரை உங்களுடைய மகிழ்வுந்தில் ஏற்றிசெல்ல முடிவு செய்வீர்?

எனநீங்கள் கலந்துகொண்ட நேர்முக தேர்வில் உங்களிடம் கேள்வியை தேர்வாளர் எழுப்பினால் என்னமாதிரியான பதிலை இந்த கேள்விக்கு அளிப்பது பதில்1. உடன் இப்போதே இறக்கபோகின்ற தோற்றத்தில் உள்ள வயதான பாட்டியையே முதலில் என்னுடைய மகிழ்வுந்தில் ஏற்றிசெல்வேன்

பதில்2.ஆபத்தில் உங்களின் உயிர்காத்த நன்பனை என்னுடைய மகிழ்வுந்தில் ஏற்றிசெல்வேன் ஏனெனில் ஆபத்தான நேரத்தில் என்னை காத்ததை போன்று கைமாறு செய்வதே நம்முடைய முதல் கடமையாகும்

பதில3.இதுபோன்ற பெண்ஒருத்தி வருங்காலத்தில் எனக்கு மீண்டும் கிடைப்பது அரிது என்பதால் வருங்கால மணைவியையே முதலில் என்னுடைய மகிழ்வுந்தில் ஏற்றிசெல்வேன்

ஆகிய மூன்று பதில்களில் ஒன்றினை நாமனைவரும் அளித்திடுவோம் ஆனால் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டநபர் நேர்முகத்தேர்வாளரிடம் பின்வரும் வித்தியாசமான பதிலை அளித்தார்

மகிழ்வுந்திலிருந்து கீழே இறங்கி அதனை இயக்குவதற்கான சாவியை உயிர்காத்த நண்பனிடம் வழங்கி உடன் அந்த நண்பனையே மகிழ்வுந்தை ஓட்டிசெல்லும்படியும் கூடவே இப்போதே இறக்கபோகின்ற தோற்றத்தில் உள்ள வயதான பாட்டியை மகிழ்வுந்தில் ஏற்றி செல்லுமாறும் கூறுவேண் மேலும் நான் என்னுடைய வருங்கால மனைவியுடன் அடுத்த பேருந்து ஏதும் வருமா என மகிழ்ச்சியாக காத்திருப்பேன் .

அடுத்ததாக கேள்வி2 நேர்முகதேர்வில் கலந்து கொண்டநபர்முன்பு குடிப்பதற்கான காஃபி டம்ளர் ஒன்று வைக்கபட்டது பின்னர் அந்த நபரிடம் உங்கள்முன்பு உள்ளதுஎன்னவென ஆங்கிலத்தில் what is before you?என்றவாறு நேர்முகத்தேர்வாளர் கேள்வியொன்றை எழுப்பினார்

உடன் நேர்முகத்தேர்வில் கலந்து கலந்துகொண்ட நபர் Tea என பதிலிறுத்தார் உடன் அவர்கூறிய பதில் சரியென நேர்முக்ததேர்வாளரால் ஏற்றுகொள்ளபட்டது ஏனெனில் ஆங்கில அகரவரிசை எழுத்துகளில் u எனும் எழுத்திற்கு முன்பாக வருவது T எனும் எழுத்து ஆகும் அதற்கடுத்ததாக நேர்முக்ததேர்வின் கடைசி கேள்வியாகதேர்வாளர்

கேள்வி3.நம்முன் உள்ள இந்த மேஜையின் சரியான மையபகுதிஎதுவென What is the exact position of the center of this table ? என்றவாறு ஆங்கிலத்தில் வினவினார் அதற்கு தேர்வில் கலந்து கொண்டவர் 'b' என பதிலிறுத்தார் உடன் நேர்முகத்தேர்வாளர் நீங்கள் இந்த பணிக்காக தெரிவுசெய்யபட்டுவிட்டீர் வாழ்த்துகள் என பராட்டினார் ஏனெனில் table எனும் சொல்லில் மையத்தில் 'b' எனும் எழுத்தே உள்ளது .

ஞாயிறு, 21 ஜூன், 2015

எந்தவொரு செயல் நடைபெற்றாலும் அதில் உள்ள நல்லதை மட்டும் பார்க்கும் மனப்பான்மை நமக்கு வரவேண்டும்


ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளில் அரசன் ஒருவன் இருந்தான் அந்த அந்த அரசனுக்கு மிகநெருங்கிய நண்பன் ஒருவன் இருந்தான் அந்த நண்பன் எந்தவொரு நிகழ்வு ஏற்பட்டாலும் எல்லாம் நன்மைக்கே என நேர்மறையாகவே சிந்தித்து அவ்வாறே செயல்படுவார் ,சொற்களையும் கூறுவார் .

ஒருநாள் அந்த அரசன் தன்னுடைய நண்பனுடன் நாட்டிற்கு அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாட சென்றார் அப்போது துப்பாக்கியானது தவறுதலாக அழுத்தியதால் அவருடைய இடதுகையின் கட்டைவிரல் துண்டித்துவிட்டது அந்நிலையில் அவருடைய நண்பன் எல்லாம் நன்மைக்கே பரவாயில்லை கட்டைவிரல் மட்டும்தான் துண்டிக்கபட்டது என கூறினார் உடன் அந்த அரசனுக்கு அதிபயங்கர கோபம் வந்து நான் என்னுடைய கையிலுள்ள கட்டைவிரல் போய்விட்டது என வலியால் துடித்து கொண்டிருக்கின்றேன் நீ அதை பொருட்படுத்தாமல் எல்லாம் நன்மைக்கே என்று கூறுகின்றாயா என கூறி அந்த நண்பரை சிறையில் அடைக்க செய்தார்

அதன்பின்னர் ஓராண்டு கழித்து அந்த அரசன்தூரத்திலிருந்த வேறொரு காட்டிற்கு தனியாக வேட்டையாட சென்றார் அப்போது அந்த காட்டில் வாழும் பழங்குடியின மக்கள் தங்கள் குலதெய்வத்திற்கு பலியிடுவதற்காக நாட்டில் வாழும் மனிதன் ஒருவனை தேடிக்கொண்டிருந்தனர் இந்த அரசன் கிடைத்ததும் அனைவரும் ஒன்றுகூடி இந்தஅசசனை பிடித்து வலுவான கயிற்றால் கட்டி இழுத்து சென்றனர் பின்னர் தங்களுடைய குலதெய்வத்தை கும்பிடுவதற்கான பூஜைகள் செய்யஆரம்பித்தனர்

அதன்பின்னர் இந்த அரசனை பலியிடுவதற்காக பிடித்து இழுத்துசென்று தண்ணீரை கொட்டி குளிப்பாட்டினர் இறுதியாக அவரை பலியிடுவதற்காக கத்தியை ஓங்கி வெட்டமுனையும் போது பூசாரி இவருடைய இடதுபுற கையில் கட்டைவிரல் இல்லாமல் இருப்பதை பார்த்து நிறுத்துங்கள் நாம் நம்முடைய குலதெய்வத்திற்கு முழுமையான மனிதனையே பலியிடவேண்டும் இவன் கைவிரல் துண்டிக்கபட்டு குறையுள்ள மனிதனாக இருக்கின்றான் அதனால் இவனை பலியிடகூடாது ஆகையினால் இவனுடைய கட்டினை அவிழ்த்து இவனை காட்டின் ஓரம் கொண்டுசென்றுவிட்டிடுங்கள் என கூறியதை தொடர்ந்து அவ்வாறே இந்த அரசனை உயிருடன் காட்டின் ஓரம் விட்டுசென்றனர்.

உயிர்தப்பித்தால் போதுமென ஓடோடி வந்த அந்த அரசன் அன்று வேட்டையாடும்போது நம்முடைய இடதுகை கட்டைவிரல் தவறுதலாக துண்டித்ததை நம்முடைய நன்பன் எல்லாம் நன்மைக்கே என கூறியதை தவறுதலாக எண்ணி சிறையில் அடைத்துவிட்டோமே என மனம் வருந்தி உடன் நேரடியாக சிறைக்கு சென்று நன்பனை விடுதலை செய்து நன்பா என்னை மன்னித்துவிடு உன்னை தவறாக நினைத்துவிட்டேன் என கூறினார்

இப்போது ம் அந்த நன்பன் எல்லாம் நன்மைக்கே என கூறினான் இப்போதும் ஏன் அவ்வாறு கூறுகின்றாய் என வினவியபோது அவ்வாறு நான் சிறையில் அடைக்கபடாமல் இருந்திருந்தால் உனக்கு பதிலாக என்னை அந்த பழங்குடியின மக்கள் பலியிட்டிருப்பார்கள் அல்லவா அதிலிருந்து நான் உன்னுடைய சிறை தண்டனையால் தப்பினேன் என கூறினான்

ஆம் எந்தவொரு செயல் நடைபெற்றாலும் அதில் உள்ள நல்லதை மட்டும் பார்க்கும் மனப்பான்மை நமக்கு வரவேண்டும்

பொருட்களை கட்டிடும் கட்டுகளின் மீது உள்ள பார்கோடு எவ்வாறு உருவாக்கபட்டது?


தற்போது பெரும்பாலான கடைகளில் பொருட்களை வாங்க சென்றால் இறுதியில் அந்த பொருட்களை கட்டபட்ட கட்டின்மீது கோடுகள் நிரைந்த பகுதியை வருடி இயந்திரத்தால் வருடபட்டு உடன் அந்த பொருளின் பெயர் விலைஆகியவை பட்டியலாக இடுமாறு செய்யபடுகின்றன பொருட்களை கட்டபட்ட கட்டின்மீது உள்ள கோடுகளை பார்கோடு என அழைக்கின்றனர் இந்த பார்கோடு எவ்வாறு உருவானது என உங்களுக்கு தெரியுமா?

பெரிய நிறுவனம் ஒன்று தங்களின் கடைகளில் விற்கப்படும் ஆயிரக்கணக்கான பொருட்களை வாங்கி செல்ல வருபவர்கள் ஒவ்வொருவருக்கும் பட்டியல் எழுதி பணத்தை பெற்றுகொண்டு அவர்கள் எடுத்துசெல்லும் பொருட்கள் சரியாக உள்ளதாவென சரிபார்ப்பது மிகசிரமமான பணியாக இருந்ததை தீர்வுசெய்வதற்கான கருவியொன்று கண்டுபிடித்திடுமாறு பொறியியலார்களை கேட்டுகொண்டனர்

பொறியியலார்களும் குழுவாக ஆற்றின் மனலில் உட்கார்ந்து இதுகுறித்து விவாதித்து கொண்டிருந்தபோது ஒருவர் தன்னுடைய கையை மணலில் ஊண்றி எழ ஆரம்பித்தார் அப்போது அவருடைய கைவிரல்கள் ஐந்தும் வெவ்வேறு அளவான கோடுகளாக உருவானதை தொடர்ந்து அவர் மற்ற நண்பர்களிடம் பார்த்தீர்களா நண்பர்களே நம்முடைய கையில் உள்ள ஐந்துவிரல்களும் ஒவ்வொரு அளவான கோடுகளை உருவாக்குகின்றன ஒவ்வொரு கோடும் ஒவ்வொன்றை குறிப்பிடுமாறு செய்து நாம் விற்பணைசெய்திடும் பொருட்களைில் ஒரு கோடு பொருளின் பெயரையும் மற்றொரு கோடு பொருளிற்கான விலையையும் பிரிதொருகோடு பொருளின் வேறு விவரங்களையும் அறிந்துகொள்ளுமாறு செய்திடலாம் என கூறியதை தொடர்ந்து அனைவரும் விவாதித்து அவ்வாறே செய்வது எனவும் அந்த கோடுகளை உருவாக்குவதற்கான இயந்திரத்தையும் அந்தகோடுகளை படித்தறிவதற்கான இயந்திரத்தையும் கண்டுபிடித்தனர் இவ்வாறே பொருட்களை கட்டபட்ட கட்டின்மீது பார்கோடு உருவாக்கபட்டது

சனி, 13 ஜூன், 2015

அனைவரும் முன்பின் யோசிக்காமல் மற்ற அனைவரையும் நம்முடைய போட்டியாளராக தவறாக எண்ணிக்கொண்டு நம்முடைய வாழ்வை வீணாக்கி கொள்கின்றோம்


தற்போது நம்மில் பெரும்பாலானவர்கள் தினமும் வேகநடை பயிற்சி செய்து வருகின்றனர் அவ்வாறு வேகநடை பயிற்சியை செய்துவரும் நான் ஒருநாள் எனக்கு முன்பு சிறிது தூரத்தில் ஒருவர் என்னை போன்றே வேகநடைபயிற்சி செல்வதை கண்ணுற்றதும் அவரை எப்படியாவது முந்தி செல்லவேண்டும் என கூடுதலான வேகத்தில்சென்றேன்

அவருடைய அருகில் செல்ல செல்ல என்னுடைய நடையின் வேகத்தையும் கூட்டிகொண்டே சென்று ஒருசமயத்தில் ஓட்டபந்தயவீரன்போன்று ஓடிக்கொண்டிருந்தான் அவரை தாண்டும் சமயத்தில் மின்னல் போன்று தலைதெறிக்கும் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தேன் அவரை கடந்து கொஞ்சதூரம் சென்றபோது திரும்பி அவரை பார்த்தேன் அவர் வெகுதூரத்தில் வருவது தெரிந்தது

இனி அவரால் என்னை தாண்டி செல்லமுடியாது என இறுமாப்புடன் பழையபடி தலைமுன்புறம் திருப்பிடும்போது பாதையில் இருந்த சிறுகல் ஒன்று என்னுடைய காலை தடுத்து தலைகுப்புற விழ செய்தது வேகமாக ஓடிவந்ததால் சமாளித்து நிற்கவும் முடியவில்லை எழுந்திடவும் முடியவில்லை அந்த போட்டியாளராக என்னிய அந்த நபர் நான் விழுந்திருக்கும் இடத்திற்கு வந்து அண்ணே ஏன் இவ்வாறு தலைதெறிக்க ஓடிவந்தீர் என கூறி என்னை கைதூக்கி எழுந்துநிற்க உதவிசெய்தது மட்டுமல்லாது உடன் எங்களுடைய வீடுவரை என்னை கொண்டுவந்த விட்டு சென்றார் அதன்பின்னர் பலநாட்கள் நடைபயிற்சிக்கே செல்லமுடியாத நிலைஏற்பட்டது

ஆம் நாம் அனைவரும் முன்பின் யோசிக்காமல் கல்வி வேலைவாய்ப்பு தொழில் ஆகிய அனைத்திலும் மற்ற அனைவரையும் நம்முடைய போட்டியாளராக தவறாக எண்ணிக்கொண்டு நம்முடைய திறனைவிடஅதிகமுயற்சிசெய்து நம்முடைய அமைதியாக சென்றது கொண்டிருக்கும் நம்முடைய வாழ்வை வீணாக்கி கொள்கின்றோம்

நாம் அனைவரும் மனிதாபிமானஅடிப்படையில் மற்றவர்களுக்கு உதவிசெய்திடகூட முடியாத அவசரஉலகில் நாம் வாழ்ந்துவருகின்றோம்


இளம்வயதுபுதிய தொழில் அதிபர் ஒருவர் மிகமுக்கியமான பணியை உடனடியாக முடிப்பதற்காக தன்னுடைய மகிழ்வுந்தில் மிகவேகமாக சென்றுகொண்டிருந்தார் அந்த மகிழ்வுந்தை அவருடைய நிறுவனத்தின் ஓட்டுனர் ஓட்டிகொண்டிருந்தார் இந்நிலையில் திடீரென மகிழ்வுந்தின் பக்கவாட்டில் டப் எனும் மோதிடும் சப்தம் ஏற்பட்டது உடன் மகிழ்வுந்து ஓட்டுனர் வண்டியை நிறுத்தி பார்த்தபோது சிறுகல்ஒன்று வண்டியில் சிறியஅளவிற்கு கீரல் ஒன்று விழுமாறு வந்து மோதியுள்ளது தெரியவந்தது.

அருகில் சிறுவன்ஒருவன் இருந்ததை பார்த்ததும் மகிழ்வுந்து ஓட்டுனருக்கு அளவிற்கு அதிகமான கோபம் வந்து “அடேய் எப்படியடா எங்களுடைய புதிய மகிழ்வுந்தை கல்லால் அடித்திடமுடியும் இந்த மகிழ்வுந்தின் விலையென்ன தெரியுமா அடிபட்டதை சரிசெய்வதற்கான பணத்தை உன்னால் கொடுக்கமுடியுமா?” என திட்டஆரம்பித்தார்

அப்போது அந்த சிறுவன் “ஐயா அவ்வாறு சிறுகல்லால் உங்களுடைய மகிழ்வுந்தினை அடித்ததை மன்னித்திடுங்கள் ஐயா நடமாடமுடியாத என்னுடைய சகோதரன் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியில் இருந்து வீழ்ந்துவிட்டான் அவனை என்னால் தூக்கி நிமிர்த்தி பழையபடி அந்த சக்கர நாற்காலியில் உட்காரவைக்கமுடியவில்லை துனைக்கு ஆட்கள் யாரும் இல்லை இந்த வழியே போகின்றவர்கள் அனைவரும் தலைதெறிக்கும் வேகத்தில் செல்கின்றனரேயொழிய எங்களின் நிலையை பார்த்து எங்களுக்கு உதவமுன்வரவில்லை அதனால்தான் யாருடைய கவணத்தையாவது கவரவேண்டுமென்பதற்காக அவ்வாறு சிறு கல்லை தூக்கிஎறிந்தேன்” என கெஞ்சி அழுதபோது

நான்மனமிறங்கி “ஒட்டுனரே அந்த சிறுவன் கோரும் உதவியை உடன் செய்திடுங்கள்” என கூறியதும் மகிழ்வுந்து ஓட்டுனரும் உடன் அந்த சிறுவன் கூறிய உதவியை செய்தபின எங்களுடைய பயனத்தை தொடர்ந்தோம்

ஆம் தற்போது நாம் அனைவரும் மனிதாபிமானஅடிப்படையில் மற்றவர்களுக்கு உதவிசெய்திடகூட முடியாத அவசரஉலகில் நாம் வாழ்ந்துவருகின்றோம்

ஞாயிறு, 7 ஜூன், 2015

எந்தவொரு நிகழ்வையும் நமக்கு சாதகமாக மாற்றி பயனுள்ளதாக ஆக்கிகொள்வதே சிறந்த வழிமுறையாகும்


இந்திய கிராமம் ஒன்றில் ஒரு பணக்கார வீட்டில் வேலைசெய்திடும் வேலைக்காரன் தன்னுடைய முதலாளியின் வீட்டில் பயன்படுத்துவதற்கான தண்ணீரை தூரத்திலிருந்த ஒரு ஓடையிலிருந்து இரண்டு மண்பாணைகளில் நிரப்பி அவைகளை ஒரு நீண்ட தடியின் இருபுறமும் கட்டிதொங்கவிட்டு தோளில் தூக்கி கொண்டு வந்து சேர்ப்பது வழக்கமாகும்.

அவ்வாறு இரு பாணைகளில் தண்ணீரை தோளில் சுமந்துவரும்போது ஒரு பக்கத்திலிருந்த பாணையில் ஏதோவொரு காரணத்தால் கீரல்ஆகிவிட்டது அதனால் அந்த கீரலின்வழியாக பாணையிலிருந்த தண்ணீரானது வழிநெடுக தரையில் ஒழுகி வீணாகி கொண்டே வந்து கடைசியில் முதலாளியின் வீட்டிற்கு வரும்போது அரை பாணை அளவிற்கு மட்டுமே மிஞ்சியிருக்கும்.

மற்றொரு பாணையின் தண்ணீர் வீணாகமல் முழுவதுமாக கொண்டுசென்று சேர்ந்துவிடும் இவ்வாறான வழக்கமான நடைமுறையால் ஓட்டையாகத பாணையானது ஓட்டையான பாணையை பார்த்து “நான் உண்மையாக இந்த முதலாளிக்காக உழைத்து முழுமையாக தண்ணீரை கொண்டுவந்துசேர்க்கின்றேன். நீயோ கீரல்விழுந்து பாதிதண்ணீரை கொண்டுவரும் வழியிலேயே காலிசெய்துவிடுகின்றாய் பார்த்தாயா” என நக்கலாக கேலிசெய்து பேசியது அவ்வாறான கேலியான பேச்சினை கேட்டதும் கீரல் விழந்த பாணைக்கு மிகவும் வெட்கமாக போய்விட்டது. அதனால் அந்த கீரல் விழந்த பாணையாநது பணியாளரிடம் “ஐயா! என்னுடைய உடலில் கீரல் ஆகிவிட்டது அதனால்

நீங்கள் சுமந்து செல்லும் தண்ணீரில் பாதியை வழிநெடுக கீழே வீணாக சிந்திகொண்டேவந்து வீணாக்கிவிடுகின்றேன் அதனை தொடர்ந்து நம்முடைய முதலாளியிடம் என்னுடைய திறமை யின்மையால் உங்களுக்கு கெட்டபெயர் வாங்குமாறு ஆகிவிட்டது அதனால் முதலில் என்னை மன்னித்து கொள்ளுங்கள் ஐயா!” என கூறியது

உடன் “அடடா ஏன் நீ என்னிடம் மன்னிப்பு கோருகின்ராய் நீ வழிநெடுக தண்ணீரை சிந்துவதை பார்த்து அந்த பக்கத்தில் அழகிய பூவிதைகளை தூவி தற்போது அழகழகான பூக்கள் பூத்து குலுங்குகின்றன அந்த பூக்களை பறித்து நம்முடைய முதலாளி வீட்டம்மா தலையில் வைத்துகொள்ளவும் படங்களில் மாலை கட்டி அணிவிக்கவும் பயன்படுத்திகொள்ளபடுகின்றது தெரியுமா? எந்தவொரு நிகழ்வையும் நமக்கு சாதகமாக மாற்றி பயனுள்ளதாக ஆக்கிகொள்வதே சிறந்த வழிமுறையாகும். இதற்காக வருத்தபடாதே!” என ஆறுதல் கூறினான் அந்த வேலைக்காரன்

ஆம் நாமும் நம்முடைய வாழ்வில் நடைபெறும் எந்தவொரு நிகழ்வையும் நமக்கு பயனுள்ளதாக மாற்றியமைத்து பயன்பெறுவோம் என உறுதிகூறுவோம்

ஞாயிறு, 31 மே, 2015

எவரையும் தற்போதைய நிலையைவைத்து எடைபோடகூடாது


ஒருஊரில் ஒருவன் தன்னுடைய அன்றாட செலவிற்கு போதுமானஅளவிற்கு மட்டுமான நிலையில் பொருள்ஈட்டும் பணியை செய்துவந்தான் இந்நிலையில் அவ்வூரில் இருந்த மிகபணக்கார குடும்பத்தின் பெண்ணை அவன் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தபோது அந்த மணப்பெண்ணின் குடும்பத்தினர் அப்பெண்ணின் ஒருநாளைய செலவிற்கு அவனுடைய வருடமுழுவதுமான வருமானம் போதுமானதாக இல்லை அதனால் அவனுக்கு பொருத்தமான வேறொரு மணப்பெண்ணை பார்த்துகொள்ளுமாறு அறிவுறுத்தினர்

அதன்பின் அவன் மிககடினமாக முயன்று படித்து சொந்தமாக நிறுவனங்களின் கணக்குகளை தணிக்கை செய்திடும் நிறுவனத்தினை ஆரம்பித்து அதில் பத்துநபர்களுக்கு பணிவழங்கி நல்லதொரு தணிக்கை நிறுவனமாக நடத்திவந்தான் இந்நிலையில் ஒருநாள் அவன்முதலில் திருமணம் செய்வதற்காக விரும்பிய பெண்ணை பெரிய வியாபார கடை ஒன்றில் கண்டான் உடன் அந்த பெண் "என்னை தெரிகின்றதா ! என்னுடைய கணவர் மாதம் ஒன்றிற்கு ஒருஇலட்சம் சம்பாதிக்கின்றார் நான் இப்போதுமிக மகிழ்வோடு இருக்கின்றேன் " என கூறினாள்

அப்போது அந்த பெண்ணின் கணவன் அங்கு வந்துசேர்ந்தான் "வணக்கம்! இவள்தான என்னுடைய மனைவி " என அறிமுகபடுத்திகொண்டு தன்னுடைய மனைவியிடம் "இவர்தான் நான் பணிசெய்திடும் தணிக்கை நிறுவனத்தின் முதலாளி அதிகஅளவு நிறுவனங்களின் தணிக்கை பணியை நான் பணிசெய்யும் நிறுவனம் விரைவாக முடித்துதருவதால் ஏராளமான அளவு வருமானம் நிறுவனத்திற்கு வந்துகொண்டிருக்கின்றது .ஆயினும் ,இவர் ஆரம்பத்தில் பெண்ஒருத்தியை திருமணம் செய்துகொள்ள கோரியபோது இவருடைய அன்றைய வருமானத்தை கணக்கிட்டு மறுத்துவிட்டாள் அதனால் இப்போதும் இவர் திருமணம் செய்துகொள்ளாமலேயே உள்ளார்" என கூறியதை தொடர்ந்து அவருடைய மனைவிக்கு மிகவெட்கமாகிவிட்டது ஒன்றும் பேசாமல் பிரிந்து சென்றுவிட்டனர்

பொதுவாக எவரையும் தற்போதைய நிலையைவைத்து எடைபோடகூடாது அவருடைய திறமையையும் இதரகாரணிகளையம் வைத்து மட்டுமே அளவிடவேண்டும் என அறிந்துகொள்க

நாம் நம்முடைய மனதில் என்ன எண்ணுகின்றோமோ அவ்வாறு அவ்வாறே நம்மைசுற்றியும் உள்ள காட்சிகளும் தோன்றியமையும்


மகிழ்ச்சியான மனிதன் ஒருவன் அவ்வூரில் இருந்த கண்ணாடியாலான பெரிய மாளிகை ஒன்றை அடைந்தான் அங்கு அவன் என்ன செய்தானோ அதேபோன்று கண்ணாடியில் தெரிந்த ஆயிரகணக்கான உருவமும் செய்தது ஆஹா என்னவொரு அருமையான இடம் இதனை இவ்வளவு நாட்களாக பார்க்கமால் விட்டுவிட்டோமே இனிமேல் தினமும் இந்த மளிகையை வந்தபார்த்தபிறகுதான் நம்முடைய மற்ற பணிகளை செய்திடவேண்டும் என உறுதிமொழிஎடுத்து கொண்டு தன்னுடைய வீட்டிற்கு திரும்பினான்

அதே கண்ணாடியாலான பெரிய மாளிகைக்கு அவ்வூரில் வசித்து வந்தவாழ்வில் அடிபட்டு துயருற்ற மனிதன் வந்துசேர்ந்தான் அங்கு அவனைபோன்று ஆயிரகணக்கான உருவங்கள் துயரத்துடன் இருப்பதை கண்ணுற்றதும் அவனுடைய மனம் மேலும் வருத்தமுற்றது உடன் அந்த மாளிகையை விட்டு வெளியில் வந்தான் அப்போது அந்த மாளிகைக்கு எப்போதும் செல்வதே இல்லை என முடிவுசெய்தான்

ஆம் நாம் நம்முடைய மனதில் என்ன எண்ணுகின்றோமோ அவ்வாறு அவ்வாறே நம்மைசுற்றியும் உள்ள காட்சிகளும் தோன்றியமையும் அதனால் எப்போதும் நாம் நல்லதையே நினைத்து நல்ல மனநிலையை பராமரிப்போம்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...